Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலவர்ணம் தமிழரானதால் ஏற்பட்ட மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாலவர்ணம் தமிழரானதால் ஏற்பட்ட மாற்றம் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய

11 November 09 10:15 pm (BST)

பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

பாலவர்ணம் சிவகுமார் கொழும்பு இரத்மலான பிரதேசத்தில் வாழ்ந்துவந்தார். ஊவாவில் பிறந்த அவரை பாதுகாப்புத் தரப்பினர் ஒருபோதும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர் என சந்தேகிக்கவில்லை. கொழும்பில் வாழும் தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் யுத்தம் நடைபெற்ற போது அடிக்கடி சோதனைகளைச் சந்தித்த போதிலும், அவர் எவ்வித இடையூறுகளும் இன்றி வாழ்ந்துவந்தார்.

பாலவர்ணம் சிவகுமார் மனநோயினால் பாதிக்கப்பட்டவர், இதனால் அவர் அடிக்கடி, மனநோய் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற நேர்ந்தது. 2006ம் ஆண்டு ஏற்பட்ட காதல் முறிவே இந்த மனநோய்க்கான காரணம் என அவரின் சகோதரர் தெரிவித்திருந்தார். அன்பு முறியும் அல்லது அன்பை இழக்க நேரிடும் நம்மில் பெரும்பாலானோர் இவ்வாறான மனநிலைப் பாதிப்பை எதிர்நோக்கியிருப்போம். இவ்வாறான மனநிலையிலிருந்து முழுமையாக சுகமடையக் கூடிய சூழல் பாலவர்ணம் சிவகுமாருக்கு இல்லாமையானது மற்றுமொரு காரணமாகும். கடந்த இரண்டு வருட காலங்களுக்குள் இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கிய சமூக பாதிப்புக்கள் காரணமாக இருக்கக் கூடும். அவர் சுகமடைந்த அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுவந்தார். கடந்த ஒக்டோபர் 26ம் திகதி அவரது சுகவீனம் மீண்டும் அதிகரித்ததுடன், குழப்பம் விளைவிக்கக் கூடிய அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது. 27ம் திகதி தனது அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இதன்பின்னர் கடந்த 28ம் திகதி அவரது சடலம் கொழும்பு கொள்ளுப்பிட்டி கடற்கரையோரத்தில் ஒதுக்கியிருந்த போதே நாம் அவரை கண்டோம் என அவரது சகோதரர் தெரிவித்தார்.

அவர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பிய ரி.என்.எல், சிரச தொலைக்காட்சிகளுக்கு நன்றி பாராட்டும் வகையில் அந்தக் காட்சியை முழு நாடும் கண்டது. இரண்டு கைகளையும் கூப்பி வணங்கி உயிர்ப் பிச்சைக் கேட்டபோதும், அவர் பொல்லுகளால் தாக்கப்பட்டு பம்பலப்பிட்டி கடலில் மூழ்கடித்து கொலை செய்தவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் காவல்துறையினரே.

டெய்லி மிரர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், பாலவர்ணம் சிவகுமார் அன்றைய தினம் அதிகாலையிலிருந்தே பம்பலப்பிட்டி தொடரூந்து வீதிக்கருகிலிருந்து வாகனங்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டிருந்துள்ளார். இந்தத் தாக்குதல் காரணமாக தொடரூந்து ஓட்டுநர் ஒருவரும் படைச் சிப்பாய் ஒருவரும் காயமடைந்துள்ளனர். அப்போது இவர் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது. பல மணித்தியாலங்களுக்குப் பின்னரே அவரது செயற்பாடுகளைத் தடுப்பதற்காக காவல்துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். அதுவரை அவரின் இந்த செயற்பாடுகளை பயங்கரமான செயற்பாடுகள் என எவரும் கருதவில்லை. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் அல்லது தமிழ் இளைஞர் என அருகிலுள்ள மக்கள் அறிந்துகொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காவல்துறையினர் சென்றதும் அவர் கடலில் குதித்தார். அதன் பின்னர் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கடலில் குதித்தனர். கூடியிருந்த மக்கள் நீண்ட இரண்டு பொல்லுகளை காவல்துறையினரிடம் கொடுத்தனர். துப்பாக்கியினால் சுடுமாறும் சத்தமிட்டனர். (பெரஹரவில் மதம் பிடிக்கும் யானையை சுட்டுக் கொல்லுமாறு மக்கள் கூச்சலிடுவதில்லை.)

பாலவர்ணம் சிவகுமார் கைகூப்பி வணங்கி தன்னைத் தாக்க வேண்டாம் எனக் கூறும்போது மக்கள் கொடுத்த பொல்லுகளினால் காவல்துறையினர் தொடர்ந்தும் தாக்கினர். கூடியிருந்த மக்கள் சண்டைக் காட்சி அடங்கிய சினிமாவைப் பார்ப்பது போன்று கண்சிமிட்டாது இந்த வீர நிகழ்வைக் கண்டுகளித்தனர். பாலவர்ணம் சிவகுமார் நீரில் மூழ்கி இறுதி மூச்சை விட்ட பின்னர் கருணையுள்ளம் கொண்ட கடல் அலைகள் குடும்பத்தினருக்கு இறுதிக் கிரியைகளை நடத்துவதற்காக பாலவர்ணம் என்ற தமிழரின் சடலத்தை மறுநாள் கரையொதுக்கியது.

26 வயதான பாலவர்ணம் சிவகுமார் 1983 அல்லது 1984 ஆண்டு பிறந்திருப்பார். அவர் 1983ம் ஆண்டு பிறந்திருப்பாரானால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களைக் கண்டிருக்கமாட்டார். காரணம் தமிழ் மக்கள் கொரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது 1983ம் ஆண்டாகும். கறுப்பு வெள்ளியென பிற்காலத்தில் கூறப்பட்ட 1983ம் ஆண்டு ஜூலை 29ம் திகதி நாம் இருவர் கால் நடையாக கோட்டையிலிருந்து பொரல்லை நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். கொழும்பிற்கு புலிகள் வந்திருப்பதாக கதைகள் பரவியதை அடுத்து ஏற்பட்ட அச்சத்தில் வாகனங்கள் ஒன்றேனும் கிடைக்காத நிலையிலேயே நாங்கள் நடந்துசென்று கொண்டிருந்தோம். இந்தக் கதையின் பாதகமான முடிவாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொடூரமான முறையில் வெட்டிக்கொல்லப்பட்டனர். புஞ்சி பொரல்லைப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிருடன் எரிக்கப்பட்டதுடன் சிலர் கைகட்டி, சிலர் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாது அமைதியாக இருந்தனர்.

பொல்லுகளினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சிவகுமாரைப் பார்த்த போது அந்த புஞ்சி பொரல்லைச் சந்தியில் இடம்பெற்ற சம்பவமே எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி கடலோரத்தில் இடம்பெற்ற இந்த துரஸ்திடவசமான தலைவிதி, பாலவர்ணம் சிவகுமார் சிங்களவராக இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா? அப்படி இருந்திருக்கவும் கூடும் அல்லது அவ்வாறு இல்லாதிருந்திருக்கவும் கூடும். காவல்துறையினருக்கு கொலைகளைச் செய்யும் போது இனம் என்பது ஒரு பிரச்சினையல்ல. அதேபோல், விடுதலைப் புலிகள் தமது சமூகத்தின் மீது ஏற்படுத்திய படுகொலைகளால் ஏற்படுத்தப்பட்ட அச்சம் இன்னும் நினைவில் கொண்டிருக்கும் சிங்களப் பொது மக்கள் தமிழ் இளைஞரின் உயிரைப் பாதுகாக்க முன்வருவதைவிட, அவரை சுட்டுக் கொல்லுங்கள் எனக் கூறவே வாய்ப்பிருக்கிறது. அவ்வாறின்றி இந்த இளைஞர் சிங்களவராக இருந்து சிங்கள மொழியில் உயிர்ப் பிச்சைக் கேட்டிருந்தால் இந்தக் கொலையாளிகளுக்கு எதிராக கடலோரத்திலேயே எதிர்ப்புகள் கிளம்புவதற்கு வாய்ப்பிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 12ம் திகதி இரவில் இரத்மலான அங்குலான காவல்துறையினரால் தினேஷ் தரங்க, தனுஷ்க உதய என்ற சிங்கள இளைஞர்கள் இருவர் சித்திரவதை செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி, இதற்கு ஈடான மனித படுகொலைகளாகும். தமக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக கரையோரப் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டை அடுத்தே அந்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரையோரத்தில் பந்து விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்களின் பந்து இந்தப் பெண்ணின் வீட்டிற்குள் விழுந்ததே இந்தச் சிக்கலுக்கான அடிப்படையெனக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து இளைஞர்களைத் தேடுவதற்காக சாதாரண உடையில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற காவல்துறை அதிகாரிகள் இந்த இளைஞர்களைக் கைதுசெய்திருந்தனர்.

இரவு முழுவதும் சித்திரவதை செய்யப்பட்டு அவர்கள் கொலை செய்யப்பட்டனர். இதன்பின்னர், ஆத்திரமடைந்த அங்குலான பிரதேச மக்கள் காவல்துறை நிலையத்தைச் சுற்றிவளைத்துத் தாக்கினர். இந்தக் காட்சிகள் ஒளிப்படங்களாக பிரசாரப்படுத்தப்பட்டது.

பாரியளவில் மரணச் சடங்குகள் இடம்பெற்றன. பத்திரிகைகள் ஆசிரியர் தலையங்கங்களை எழுதின. காவல்துறையினர் கைதுசெய்யப்பட்டதுடன் முழு காவல்துறை அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேற்குறிப்பிட்ட பெண் மற்றுமொரு குற்றச்செயலுக்காக கைதுசெய்யப்பட்டார்.

இந்த இளைஞர்களின் மரணத்தில் கவலையடைந்த அதிமேதகு ஜனாதிபதி அந்த இளைஞர்களின் பெற்றோர்களைத் தேற்றுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து அதனை முழு நாட்டிற்கும் வெளிக்காட்டினார். கொல்லப்பட்ட பிள்ளைகளுக்காக பெற்றோருக்குத் தலா 5 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கினார்.

எனினும், பாலவர்ணம் சிவகுமார் தொடர்பாக எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. ஆத்திரமும் ஏற்படவில்லை. அவரது மரணம் அமைதியான மரணமாகியது. இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் சிலரது சிரிப்பு முகக்குறிகளும் நக்கல் நையாண்டிகளும் இடம்பெறாது என்பதைத் தாழ்மையுடனும், வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு,

இந்த படுகொலை புலிகளின் ஏவலினால்த்தான் நடந்தேறியது என்று கூட ஒருவர் கருத்தெழுதினார். ஏனென்றால் படப்பிடிப்புக் கருவியை தயார்படுத்திக்கொண்டே இந்த வாலிபரை கல்லெறியும்படி புலிகள் கேட்டனராம். பின்னர் அவர் அடித்துக் கொல்லப்படுவதைப் படமெடுத்து அரசாங்கத்திற்கெதிராக பிரச்சாரம் செய்கிறார்களாம் என்று கவலைப்பட்டு எழுதியிருந்தார். உப்பிடித்தான் முன்னரும் புலிகள் கூட்டிக்கொண்டுபோய் மக்களை கொல்லக் குடுத்தனராம், அதுபோல இவரைக் கொல்லக்குடுத்து அரசுக்கெதிரான அபகீர்த்தியை உண்டுபண்ணவே புலிகள் முயன்றதாக அவர் எழுதியிருந்தார். உங்களுக்கும் அவரை யார் என்று தெரிந்திருக்கும்தானே?!

  • கருத்துக்கள உறவுகள்

பாலவர்ணம் தமிழரானதால் ஏற்பட்ட மாற்றம் ‐ GTN ற்காக சுனந்த தேசப்பிரிய

பாலவர்ணம் சிவகுமார் தற்போது எம்மிடையே இல்லை. இனரீதியாக முரண்பாடுகளைக் கொண்டுள்ள எமது சமுகத்தில் பலர் இவர் மற்றுமொரு தமிழர் என்றே கணக்கில் கொள்வர். எனினும், அவரின் குடும்ப உறுப்பினர்களும் தமிழ் சமூகமும், அவர் கொலை செய்யப்பட்ட மற்றுமொரு தமிழ் இனத்தவர் எனக் கொள்வர் என்பதில் சந்தேகமில்லை.

-----

-----

எனினும், பாலவர்ணம் சிவகுமார் தொடர்பாக எவ்வித கருணையும் காட்டப்படவில்லை. ஆத்திரமும் ஏற்படவில்லை. அவரது மரணம் அமைதியான மரணமாகியது. இலங்கையில் தமிழர்களாக இருப்பது பாவத்திற்குரிய விடயமா?

தன்னுடைய மனச்சாட்சியை தெளிவாக காட்டிய , தமிழனாக பிறந்திருக்க வேண்டிய சிங்களவர் சுனந்த தேசப்பிரிய.

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய மனச்சாட்சியை தெளிவாக காட்டிய , தமிழனாக பிறந்திருக்க வேண்டிய சிங்களவர் சுனந்த தேசப்பிரிய.

தமிழனாக பிறந்திருந்தால்

இப்படி எழுத தைரியமிருக்குமா???

அப்படி தைரியம் இருக்கும் தமிழராக இருந்தால்

இன்று இதை எழுத இருந்திருப்பாரா???

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனாக பிறந்திருந்தால்

இப்படி எழுத தைரியமிருக்குமா???

அப்படி தைரியம் இருக்கும் தமிழராக இருந்தால்

இன்று இதை எழுத இருந்திருப்பாரா???

யதார்த்தமாக சொல்லியுள்ளீர்கள் விசுகு .

சிலவேளை தமிழனாக பிறந்திருந்தால் எங்களிடம் இருக்கும் மதிகழண்டதுகள் போல் கதைத்திருப்பாரோ என்னவோ ......

வேண்டாம் ..... சுனந்த தேசப்பிரிய சிங்களவராகவே இருக்கட்டும்.

சுனந்த தேசப்பிரிய ஒரு நேர்மையான பத்திரிகையாளர். தமிழர்கள் மறந்துவிடக்கூடாத ஒரு மதிப்புக்குரிய சிங்கள சகோதரர்.

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு,

இந்த படுகொலை புலிகளின் ஏவலினால்த்தான் நடந்தேறியது என்று கூட ஒருவர் கருத்தெழுதினார். ஏனென்றால் படப்பிடிப்புக் கருவியை தயார்படுத்திக்கொண்டே இந்த வாலிபரை கல்லெறியும்படி புலிகள் கேட்டனராம். பின்னர் அவர் அடித்துக் கொல்லப்படுவதைப் படமெடுத்து அரசாங்கத்திற்கெதிராக பிரச்சாரம் செய்கிறார்களாம் என்று கவலைப்பட்டு எழுதியிருந்தார். உப்பிடித்தான் முன்னரும் புலிகள் கூட்டிக்கொண்டுபோய் மக்களை கொல்லக் குடுத்தனராம், அதுபோல இவரைக் கொல்லக்குடுத்து அரசுக்கெதிரான அபகீர்த்தியை உண்டுபண்ணவே புலிகள் முயன்றதாக அவர் எழுதியிருந்தார். உங்களுக்கும் அவரை யார் என்று தெரிந்திருக்கும்தானே?!

ஓஓ.. இப்பிடி ஏற்கனவே சொல்லிட்டினமா? அடடா.. நான் தான் கவனிக்கெல்ல.. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனாக பிறந்திருந்தால்

இப்படி எழுத தைரியமிருக்குமா???

அப்படி தைரியம் இருக்கும் தமிழராக இருந்தால்

இன்று இதை எழுத இருந்திருப்பாரா???

'விரும்பிக் கேட்டுக் கொல்லும்' அரச அதிபரும், கட்டுமீறும் காவற்துறையும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.