Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான ஐனநாயகத் தேர்தல் வெற்றிகரமாக நடந்தேறியது.

Featured Replies

நோர்வே ஈழத் தமிழர் அவைக்கான தேர்தல் நாடளாவிய ரீதியில் நடை பெற்றது. இலங்கைதீவில் இருந்து புலம் பெயர்ந்தாலும் தமிழீழ தனியரசுக்கான தேடலுடன் நோர்வேயில் வாழம் ஈழத் தமிழ் மக்கள் தமது உரிமைப் போராட்ட இலட்சியப் பணயத்தினை ஐனநாயக வழியில் மக்களின் பரந்த பங்களிப்புடன் உறுதியாக முன்னெடுத்தும் செல்லும் நோக்கில் இந்த மக்களவையானது உருவாக்கம் பெற்றுள்ளது.

மேற்குறித்த கொள்கையுடன் ஈழத் தமிழரின் வரலாற்றில் பரந்தளவான மக்கள் பங்களிப்புடன் தமக்காகத் தாமே தயாரித்த ஓர் அரசியல் யாப்பின் அடிப்படையில் தேர்தல் ஒன்றினை நடாத்தி அதன் மூலம் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் சிறந்த சிறந்த ஐனநாயகப் பண்புகளை கொண்ட இது அமைகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் உச்சக் கட்டத்தில் இடம் பெற்றுக் கொண்டிருந்த மே மாத காலப்பகுதியில் இடம் பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய அடிப்படையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்ற கொள்கை மீதான மீள்வாக்கெடுப்பின் போது மொத்த வாக்காளர்களில் 80 வீதமானோர் (5574 பேர்) வாக்களித்திருந்தனர். எனினும் இன்று போராட்டம் பாரிய அழிவைச் சந்தித்து மக்களின் எதிர்பார்ப்புக்களில் பேரிடி விழுந்த கவலையோடும் விரக்தியோடும் வாழும் நிலையில் இடம் பெற்ற மக்களவை தேர்தலானது நம்பிக்கை இழந்திருந்த மக்கள் மத்தியில் தமது தமிழ் தேசிய கனவுகளை நனவாக்க முடியும் என்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இந்த மக்களவையின் உருவாக்கம் அமைந்துள்ளது.

தமிழீழ தனியரசு கோட்பாட்டை உறுதியாகவும் வெளிப்படையாகவும் வலியுறுத்தி தமிழ மக்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வகையில் நோர்வே முழுவதிலும் 16 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டு நடைபெற்ற தேர்தலில் 2767 பேர் வாக்களித்துள்ளனர். ஏற்கனவே தமிழீழ தனியரசுக்காக வாக்களித்தவர்களில் 50 வீதமானோர் இந்த மக்களைவை உருவாக்கும் தேர்தலில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ரீதியாக போட்டியிட்ட 9 வேட்பாளர்களில் 5 வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களன் பெயர் விபரங்கள் வருமாறு

1. பியோனார் மொக்ஸ்நெஸ்

2. பஞ்சகுலசிங்கம் கந்தையா

3. ஜெயசிறீ பாலசுப்பிரமணியம்

4. ஆதித்தன் குமாரசாமி

5. தர்மசீலன் தர்மலிங்கம்

தேசிய ரீதியாக போட்டியிட்டவர்களில் பியோனர் மொக்ஸ்நெஸ் என்ற நோர்வேயிய இனத்தைச் சேர்ந்தவர் அதி கூடிய (1864)வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் தமிழீழ தனியரசு உருவாக்கத்திற்கு தன்னை முழுமையாக அற்பணித்து உழைக்க முன்வந்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிராந்திய ரீதியாக போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள் வருமாறு

வடக்கு பிராந்தியம்

1. றூபன் ஐயாத்துரை

தெற்கு தென்மேற்கு

1. றெஐி டேவிட்ராஐ்

மேற்கு பிராந்திரயம்

1. விஐயசங்கர் அசோகன்

மத்திய பிராந்தியம்

1. இராசகுமார் குமாரசாமி

கிழக்கு பிராந்தியம்

1. சிவகணேஸ் வடிவேலு

2. இராசேந்திரம் பொன்னுத்துரை

3. சிவராஐா வல்லிபுரம்

4. கண்ணன் நாகேந்திரம்

5. மேரி புளோரிடா யூடின் பிரான்சிஸ்

6. ராஐரட்ணம் வேலுப்பிள்ளை

மேற்படி தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகள் அனைவரும் நோர்வே ஈழத் தமிழர் அவையின் இரண்டு அவைகளில் ஒன்றான நோர்வே ஈழத் தமிழ் மக்கள் அவை(House of Eelam Tamils in Norway-HETN) என்ற அவையில் அங்கம் வகிப்பர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் புலம் பெயர்ந்த மக்கள் வாழும் தேசங்களில் அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக முழு வீச்சுடன் முன்னெடுத்துச் செல்லப்படல் வேண்டும் என்ற தேசியத் தலைவரின் வேண்டுதலுக்கு இந்த அவை முழு அளவில் செயல் வடிவம் கொடுக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு நோர்வே வாழ் ஈழத் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.

இந்த அவையின் உருவாக்கமானது பல்வேறு இடர்கள் தடைகள் சவால்களை தாண்டியே உருவாக்கம் பெற்றுள்ளது. மக்கள் செறிந்து வாழும் ஒஸ்லோ மற்றும் பேர்கன் ஆகிய நகரங்களில் வேட்பாளர்களை மிரட்டி போட்டியில் இருந்து விலகச் செய்யும் நோக்கிலும் மக்களை தேர்தலில் வாக்களிக்கச் செல்லாமல் தடுக்கும் நோக்கிலும் அனாமதேய தொலைபேசி மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதுடன், மின்னஞ்சல்களும் அனுப்பப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மை காணப்படுவதாகவும் ஒற்றுமை வேண்டும் என்றும் கூறிதிருந்தவர்களாலேயே இத்தகைய அநாகரீகமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவற்றையும் தாண்டி மக்களவை உருவாக்கம் என்பது வெற்றிகரமாக இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilseithekal.blogspot.com/2009/11/blog-post_2554.html

Edited by இணையவன்
செய்தி முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.

குமுதன் இந்த மாதம் நடந்த தேர்தல் புலுடா பற்றி அவிட்டு விட, நீங்கள் ஏன் அதற்குள் மே மாத தேர்தல் புலுடாவை புகுத்துகின்றீர்கள்??

Edited by Vasampu

தற்போதைய தேர்தலில் நோர்வேயில் வாக்களித்தவர்களே 2767 பேர். இது நோர்வேயில் வாழும் தமிழர்களின் வாக்களிக்க தகுதியானவர்களின் 1/9 பகுதியினரை விடக் குறைவு. இதில் பின்பு எப்படி வெற்றிகரமாக நடந்தது தேர்தல்?? தேர்தலில் விழுந்த வாக்குகளின் விகிதாசாரமென்பதே மொத்த வாக்களிக்கத் தகுதியான வேட்பாளர்களின் மொத்தத்துடன் பார்ப்பதேயன்றி, வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து சாதகமாக விழுந்த வாக்குகளை பார்ப்தல்ல. மொத்தத்தில் தோற்றாலும் வெற்றி வென்றாலும் வெற்றி என்ற வெற்றுக் கோசத்தை மட்டும் பார்க்கலாம்.

Pressemelding

Fra valgkomité for Landsrådet for Eelam Tamiler i Norge

13. november 2009

Norsktamiler skal avgjøre framtiden gjennom demokratisk valg

Tamiler bosatt i Norge skal den 15.november velge sine representanter til Landsrådet for Eelam tamiler i Norge. For første gang skal en landsdekkende organisasjon etableres og rådsmedlemmer skal velges ved direkte valg.

- Jeg vil karakterisere dette som et paradigmeskifte i det tamilske miljøet. Tamiler på Sri Lanka med støtte fra diasporaen har kjempet en militær kamp som har vart i mer enn 20 år. Og nå setter tamiler i Norge premissene for videre organisering globalt med å være først ute med etableringen av landsrådet, forklarer Prof. Ilango Balasingam, representant for valgkomiteen.

Landsrådet for Eelam Tamiler i Norge er basert på demokratisk folkelig deltakelse blant Eelam tamiler i Norge. Målet er å tale tamilenes anliggender i Norge, på den internasjonale arenaen og hjemlandet.

Det betyr at ca 10 000 stemmeberettigde tamiler vil få muligheten til gi sin stemme til sine ønskede kandidater. På 15 valglokaler i ulike regioner i Norge kan tamiltalende over 16 år avgi sin stemme. Alle over 18 år kan stille til valg enten på en nasjonalliste eller på en lokalliste. Valgkomiteen har offentliggjort informasjon om kandidatene på deres nettside www.tamilvalg.com.

- Vi kaller dette ekte demokrati. Tradisjonelt er det medlemmer i en organisasjon som velger representanter til styre eller råd. Men her skal en hel folkegruppe være med å bestemme sine representanter, sier Balasingam.

I følge Balasingam er dette et pionerprosjekt som vil danne presedens for gjennomføring av liknende valg i andre land.

Rådets mål, fordeling av mandater og regler for valg kan finne i vedtektene.

Oversikt over kandidater kan du finne på List over kandidater ved valget 15.11.2009: Nasjonalliste

Her kan du se hvordan valglisten ser ut:

http://www.tamilvalg.com/ncet09/eksampel_valglister.html

Det er organisert valglokaler i Asker og Bærum, Drammen, Oslo, Lørenskog, Stavanger, Bergen, Hareide, Molde, Spjelkavik, Trondheim, Bodø, Narvik og Tromsø. Åpningstider og adresser finner du her: www.tamilvalg.com/ncet09/ballotbox.html

Pressekontakter:

Prof. Ilango Balasingam

Valgkomité

+47 93 45 90 22

Suthahar Kumarasamy

Representant for House of Eelam Institutions in Norway

+47 90 53 56 71

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நடைபெற்ற மக்களவைக்கான தேர்தல் முடிவுகள்.

இதற்குமுன் வட்டுக்கோட்டைக்கு வாக்களித்த விபரமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.வாக்குகளின் அடிப்படையை வைத்துப்பார்த்தால் நோர்வே மக்களவையை நோர்வே வாழ் தமிழர்கள் நிராகரித்துள்ளனர்.

Norway Election Results(2).pdf

நோர்வேயில் நடைபெற்ற மக்களவைக்கான தேர்தல் முடிவுகள்.

இதற்குமுன் வட்டுக்கோட்டைக்கு வாக்களித்த விபரமும் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.வாக்குகளின் அடிப்படையை வைத்துப்பார்த்தால் நோர்வே மக்களவையை நோர்வே வாழ் தமிழர்கள் நிராகரித்துள்ளனர்.

ஏன் மக்கள நிராகரித்தவர்கள்?

நாடுகடந்த அரசு நிறுவுவதற்கு வேலை செய்பவர்கள் வெருட்டினவையாம்.

எதிராக மின் அஞ்சல், பிரச்சாரம் செய்தவையாம்.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் மக்கள நிராகரித்தவர்கள்?

நாடுகடந்த அரசு நிறுவுவதற்கு வேலை செய்பவர்கள் வெருட்டினவையாம்.

எதிராக மின் அஞ்சல், பிரச்சாரம் செய்தவையாம்.

நோர்வே நாடு என்பது நாடு கடந்த தமிழீழ அரசு நிருவாகத்திலையா இயங்குகின்றது. நோர்வேயின் சட்டம் ஒழுங்கு அவர்கள் கட்டுப்பாட்டிலா இயங்குகிறது..??வெருட்டுவதற்கு.சின்னப்புள்ளைத்தனமாயிருக்கு...மற்றும்படி பிரச்சாரம் என்பது யாரும் செய்யலாம்...அதனை தமிழர் அவை பிரதிநிதிகளும் ஒழுங்காக செய்திருந்தால் வாக்குகளும் விழுந்திருக்கும்...ஆனால் ஆண்டான் அடிமை ஆட்சிபோல நான் நிக்கிறன் மறு கேள்வி கேக்காமல் ஓட்டு போடு என்றால் இப்படித்தான்..இருபது வீத வாக்கை வைத்து மாபெரும் வெற்றி என்று அறிக்கை விடவேண்டி வரும்..இனியாவது அரசியல் செய்யப் பழகி திருந்தினால்சரி..

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய தேர்தலில் நோர்வேயில் வாக்களித்தவர்களே 2767 பேர். இது நோர்வேயில் வாழும் தமிழர்களின் வாக்களிக்க தகுதியானவர்களின் 1/9 பகுதியினரை விடக் குறைவு. இதில் பின்பு எப்படி வெற்றிகரமாக நடந்தது தேர்தல்?? தேர்தலில் விழுந்த வாக்குகளின் விகிதாசாரமென்பதே மொத்த வாக்களிக்கத் தகுதியான வேட்பாளர்களின் மொத்தத்துடன் பார்ப்பதேயன்றி, வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை வைத்து சாதகமாக விழுந்த வாக்குகளை பார்ப்தல்ல. மொத்தத்தில் தோற்றாலும் வெற்றி வென்றாலும் வெற்றி என்ற வெற்றுக் கோசத்தை மட்டும் பார்க்கலாம்.

http://tamilnet.com/art.html?catid=13&artid=30616

:)அப்படியே சாத்திரி தமிழில் இணைதத்த விபரங்களையும் ஒருக்கால் பார்க்கலாமே?? :):)

  • கருத்துக்கள உறவுகள்

:)அப்படியே சாத்திரி தமிழில் இணைதத்த விபரங்களையும் ஒருக்கால் பார்க்கலாமே?? :wub::)

சாத்திரி இணைத்ததையும் பார்த்தேன். தமிழ்நெற் செய்தியே பறவாயில்லை போல உள்ளது. :)

நவீன சனநாயகத்தில் வாக்களிக்க பட்டவர்கள் தான் கணக்கெடுக்கபடுகிறார்கள்.நாங்கள் வாக்களிக்காதவர்களை புறக்கணிக்கணிததாக(தேர்த்தலை) எடுக்கலாம் அல்லது விரும்பவில்லை என்று எடுக்கலாம்.நான் நோர்வே தேர்த்தலை மட்டும் எடுக்காமல் உலகளாவிய ரீதியில் நடைமுறையில் நடை பெறுவதை வைத்து கூறுகிறேன். :wub:

நோர்வே நாடு என்பது நாடு கடந்த தமிழீழ அரசு நிருவாகத்திலையா இயங்குகின்றது. நோர்வேயின் சட்டம் ஒழுங்கு அவர்கள் கட்டுப்பாட்டிலா இயங்குகிறது..??வெருட்டுவதற்கு.சின்னப்புள்ளைத்தனமாயிருக்கு...மற்றும்படி பிரச்சாரம் என்பது யாரும் செய்யலாம்...அதனை தமிழர் அவை பிரதிநிதிகளும் ஒழுங்காக செய்திருந்தால் வாக்குகளும் விழுந்திருக்கும்...ஆனால் ஆண்டான் அடிமை ஆட்சிபோல நான் நிக்கிறன் மறு கேள்வி கேக்காமல் ஓட்டு போடு என்றால் இப்படித்தான்..இருபது வீத வாக்கை வைத்து மாபெரும் வெற்றி என்று அறிக்கை விடவேண்டி வரும்..இனியாவது அரசியல் செய்யப் பழகி திருந்தினால்சரி..

எமது விடுதலை அமைப்பின் வீழ்ச்சி, விடுதலைக்குப் பங்களித்த தமிழ் மக்கள், எல்லோருக்கும் பெரும் மன அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் இன்றைய நிலையில், புலத்து அமைப்புகளில் இருக்கும் பிரச்சனை, இந்த அமைப்புகளை வெறுக்கும் நிலை, இந்த அமைப்புகளிடமிருந்து ஒதுங்கியிருக்கும் மன நிலையைத்தான் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

கருணாநிதி பற்றியும், இந்தியாவைப்பற்றியும் விமர்சிக்கின்றோம், மிகவும் இலகுவாக எங்களுக்கு அருகில் இருக்கும் முன்னாள், இன்னாட் செயற்பாட்டாளர்கள், புத்திசீவிகள், தேசப்பற்றாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பல தரப்பட்ட குழு நிலைவாதிகள் தேசியத்தலைவரை கருத்து நிலையிலும் பழிவாங்கத்துடிக்கின்றனர், இவர்களை இச்சமூகம் அடையாளம் காணாதவரை ஒட்டு மொத்த தமிழச் சமூகம் முன்பு இருந்த ஒன்று திரண்ட எழுச்சி நிலைக்கு வராது.

விடுதலைக்குப் போராடிய அமைப்பு, களத்தில் செயல் இழந்த நிலையில், புலத்தில் இருந்த அமைப்புகளை செயல் இழக்கச் செய்தது யார்

புலத்து தமிழ் மக்கள், இரு குழு நிலை வாதத்தில் சிக்குப்பட்டு இருப்பதாகப் பார்ப்பது தவறு.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

புலத்து தமிழ் மக்கள், இரு குழு நிலை வாதத்தில் சிக்குப்பட்டு இருப்பதாகப் பார்ப்பது தவறு.

உண்மை இரு குழு இல்லை பலகுழுக்கள் என்பதுதான் சரியான பதம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.