Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைகழக மாணவனுக்கு இருதய சத்திர சிகிச்சை செய்ய உதவ முடியுமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பார்ந்த மக்களே ,

கடந்த பலவருடங்களாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கவிராஜன் என்ற யாழ் பல்கலைகழக மாணவனுக்கு சத்திர சிகிச்சை செய்வதற்கு உடனடியாக 550,000 ரூபாய் தேவைப்படுகின்றது . இவரது ஒரு வால்பு ஏற்கனவே செயலிழந்த நிலையில் இருப்பதினால் உடனடியாக இருதய சிகிச்சை செய்யும்படி மருத்துவர்களினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனினும் இவரின் பெற்றோர்கள் இன்னமும் நலன்புரி முகாமிலேயே வசிப்பதினால் இந்த மாணவனுக்கு எம்மை விட்டால் உதவி செய்ய வேறு யாரும் இல்லை .

தற்போது இந்த மாணவன் மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுகிறார் . ஒருநாளைக்கு பலதடவைகள் மயங்கிவிழும் நிலையிலும் காணப்படுகிறார் . இந்த அறுவைசிகிச்சை உடனடியாக செய்யப்பட்டால் மாத்திரமே இந்த மாணவனால் தொடர்ந்து உயிர் வாழ முடியும் . இவரின் தற்போதைய உடல் நிலையை கருத்தில் கொண்டும் இந்த பல்கலைகழக மாணவனின் எதிர்கால கல்வியினை கருத்தில் கொண்டும் உடனடியாக இந்த மாணவனுக்கு உதவும் படி எம் உறவுகளை அன்பாக வேண்டி நிற்கின்றோம்

இவரின் நோயினை உறுதிப்படுத்தும் அத்தனை ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம் . எத்தனையாயிரம் எம் உறவுகளை யுத்தத்தில் பலிகொடுத்த நாம் இனியும் ஒரு பல்கலைக்கழக மாணவனை இழக்க முயுமா ?

மேலதிக ஆவணங்களை காண இந்த இணைப்பை அழுத்தவும் . My link

http://helpthetamilstudent.blogspot.com/

உதவி செய்ய விரும்புவோர் கீழ் காணும் எண்ணுக்கு உடனடியாகத் தொடர்புகொள்ளவும் : 0044 7551449606

post-7186-12602173238991_thumb.jpg

post-7186-12602173545303_thumb.jpg

post-7186-1260217395123_thumb.jpg

post-7186-12602174194613_thumb.jpg

Edited by சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு

உதவ முடியும் என்ற மனிதாபிமாந்த்தை விட பல ஒளிந்திருக்கும் விடயங்கள் பலவுண்டு.

இந்த மாணவனுக்கு மட்டு மல்ல பலருக்கும் நாம் உதவ வேண்டும்.

...................................................

இந்த அப்பலோ வைத்தியசாலை எமது அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான திருவாளர் கோத்தபாய அவர்களின் சொத்து.

தற்போது மக்கள் அங்கு சிகிச்சைக்கு செல்வது குறைந்து விட்டது. வருமானம் குறைவு. மற்றும் சாதாரணமாக தமிழ் மக்களே தனியார் வைத்தியாசாலைகளில் சிகிச்சைக்கு செல்வது உண்டு. இந்த மாணவனுக்கு அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை வழங்க வேண்டும் ஆனால் சில வைத்திய வியாபார வைத்தியர்களின் உதவியுடன் இந்த மகிந்த குறூப் பணம் பிடுங்க முயற்சிக்கிறது. 550000 ரூபாய் கொடுக்கும் போது ஏன் நாம் நல்ல ஒரு வைத்தியசாலையை நாட முடியாது. தமிழ் நாட்டில் இதே வைத்தியசலை உண்டு,

பலவித நன்மைகள் இந்த மாணவனுக்கு கொழும்பு வைத்தியம் செய்வதை விட தமிழ் நாட்டில் செய்ய்வதால் உண்டு.

மீதி உங்கள் கைகளில்

சட்டபடி இலங்கையில் அப்பொலொ வைத்தியசாலை இல்லை.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள்.

Edited by சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

பலவித நன்மைகள் இந்த மாணவனுக்கு கொழும்பு வைத்தியம் செய்வதை விட தமிழ் நாட்டில் செய்ய்வதால் உண்டு.

வடபகுதி இளைஞர்கள் தமிழ் நாட்டுக்கு செல்வதற்கு இந்தியா அரசிடமிருந்து விசா கிடைப்பது மிகவும் கடினம்.

கேரளமாநிலம் கொச்சின் நகரில் உள்ள உலக தரம்வாய்ந்த மத் அமிர்தானந்தம்யி (அம்மா) வைத்தியசாலையில் (Amritha Institute of Medical Sciences) ஏழைகளுக்கு இலவசமாகவும், வசதிபடைத்தவர்களுக்கு அரைக்கட்டணத்திலும் வைத்தியம் செய்கிறார்கள். 1200 கட்டில்கள், 25 ஆபரேட்டிங் தியேட்டர்கள், இணைந்த பயிற்ச்சி கல்லூரிகள் என ஒரே பிரமாண்டம். உடனடியாக இணைய மூலம் தொடர்பு கொண்டு ஒரு appointment வையுங்கள். மாணவனின் பெற்றோர் நிலையை தெளிவு படுத்துங்கள். இலவச சிகிச்சை கிடைக்கலாம்.

இதோ வெப்தள முகவரி http://www.aimshospital.org/hospital/hospital.html

International Health care Service :

Kerala is a fast emerging global healthcare destination. Amrita institute of medical science Located in one of the world’s most beautiful travel destinations. AIMS welcome international patients from all over the world. Offering treatment and medical solutions for even the most complex health problems, our team of internationally acclaimed doctors and healthcare specialists give hope to millions across the world. Providing St

வைத்திய தேவைக்காக இந்திய விசா பெறுவதில் கஷ்டமேதுமிருக்காது

Edited by Nepolean

உண்மை தான் அதுவும் யாழ் பல்கலைக்கழக மாணவன்... வெளிநாடொன்றிற்க்கு சிகிச்சைக்கு செல்லவோ கலியாணவீட்டிற்க்கு செல்லவோ... அல்லது வேறு அலுவல்களாகச் செல்லவோ வெளிக்கிட்டால் பெரிய அலுவல்தான்...

ஆனால் யாழ் வைத்தியசாலை நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் அடுத்தநாள் கொழும்பில் நிற்க்கலாம்... அதற்க்கடுத்த நாள் இந்தியாவில் நிற்க்கலாம்..

அதைவிட முக்கியம் எமது அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமான "அமைச்சர்" பார்வைபட வேண்டும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.