Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க அறிக்கையும் இந்திய பயணங்களும் --இதயச்சந்திரன்

Featured Replies

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் றொபேட் ஓ பிளேக் வவுனியா முகாம்களுக்குச் சென்று அங்குள்ள வன்னி

மக்களை பார்வையிட்டுள்ளார்.அதனையடுத்து இந்தியாவிற்கு தனது உத்தியோகப் பயணத்தை மேற்கொண்ட றொபர்ட் பிளேக், போர்க் குற்ற விசாரணைகள் நடைபெறாதென்ற தமது நாட்டின் தற்போதைய நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கோத்தõபய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க போன்றோரின் இந்திய பயணங்களைத் தொடர்ந்து அமெரிக்க அரசின் பிரதிநிதி றொபர்ட் ஓ பிளேக்கும் அங்கு சென்றிருப்பது இலங்கை போர்க் களத்திலும் அரசியல் களத்திலும் இந்தியாவின் வகிபாகத்தை உணர்த்துகிறது.

இந்தியாவின் அழைப்பின் பேரில் புதுடில்லி சென்ற இலங்கை அரசின் உயர்பீட பிரதிநிதிகள், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

நாராயணன் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமாராவ் ஆகியோரை சந்தித்து இனப்பிரச்சினை தீர்வு குறித்து சில வாக்குறுதிகளை வழங்கியதாகத் தெரிய வருகிறது.

தேர்தலின் பின்னர் தீர்வு முன் வைக்கப்படுமென்பதே அந்த வாக்குறுதியாகும்.

ஆனாலும் இந்த பல தரப்பினர் மேற்கொள்ளும் பயணங்கள் விரைவுபடுத்தப்படும் இவ்வேளையில் பூகோள அரசியலில் இலங்கையின் வகிபாகம் குறித்த தமது அறிக்கையினை அமெரிக்க செனட் சபையின் விசேட குழுவொன்று வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கையின் சாராம்சம் அமெரிக்காவின் இலங்கை குறித்த புதிய அணுகு முறைகளையும் கடற்பாதையின் முக்கியத்துவத்தை யும் தெளிவாக முன் வைக்கிறது.

போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மீள் குடியேற்ற நிவாரணப் பணிகள் மற்றும் கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கைகள் குறித்து வட மாகாணத்தை மையப்படுத்திப் பேசிக் கொண்டிருந்தால், தென்னிலங்கையானது சீனாவின் பொருளாதார ஆதிக்கத்திற்குள் விழுந்து விடுமென்கிற அச்சம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது.

விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதம் தாங்கிய தேசிய இன விடுதலைப் போராட்டமானது, பர்மா, சீனா, ஈரான் மற்றும் லிபியாவுடனான இலங்கையின் உறவினை, வலுப்படுத்தி விட்டதென்கிற ஆதங்கமும் அவ்வறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்

டுள்ளது.

ஐரோப்பிய, மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தனது பொருளாதார நண்பனான ஜப்பான் நிலை கொண்டுள்ள கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கும் இடையில் வர்த்தகப் பரிமாற்றங்களுக்கு இணைப்புப் பாதையாகவிருக்கும் கடல் பாதையில், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மையத் தரிப்பிடம் அமெரிக்காவுக்கு அவசியமானதென்று அவ்வறிக்கை கூறுகிறது.

இடம்பெயர்ந்தோரின் இயல்பு வாழ்வு மற்றும் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை தென்னிலங்கை வாழ் சிங்கள மக்களும் ஆட்சியாளர்களும் அண்மைக் காலமாக தம் மீது செலுத்திவரும் வெறுப்புணர்வை நீக்க,

பொருளாதார, வர்த்தக மற்றும்

பாதுகாப்பு துறைகளிலும் தமது பங்களிப்பை வழங்க வேண்டுமென அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியாவென குறிப்பிடும் அமெரிக்க அறிக்கை, இலங்கை விவகாரத்தில் இந்தியாவோடு இணைந்து செயற்படுதல் என்கிற புதிய இராஜதந்திர நகர்வினை

கோடிட்டுக் காட்டுகிறது.

இவை தவிர பயங்கரவாதம், கடற்கொள்ளை, நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் என்பன இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கும் மிகப் பெரிய மூன்று முக்கிய அச்சுறுத்தல்களாக அமெரிக்காவால் பார்க்கப்படு

கிறது.

ஆனாலும் இலங்கையோடு நெருக்கமான உறவினைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைக்கப்படாமல் மிகச் சாதுரியமாக தவிர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ஈடுபடும் பாகிஸ்தானுடனோ அல்லது இலங்கையில் சீன ஆதிக்கத்தை முறியடிக்க காய்களை நகர்த்தும் இந்தியாவுடனோ, தற்போதைய நிலைமையில் முரண்பட்டுக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை போல் தெரிகிறது.

நண்பர்கள் தேவையில்லை, பங்காளிகளே போதுமென்கிற அதிபர் பராக் ஒபாமாவின் பிரகடனத்தின் அடிப்படையிலிருந்தே அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் இராஜதந்திர மூலோபாய நகர்வுகளைப் பார்க்க வேண்டும்.

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை, அனைத்துலக நாணய நிதியத்தின் 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி போன்றவற்றால் மேற்குலகிற்கும் இலங்கைக்குமிடையே பல்வேறு தளங்களில் உரசல் நிலை தோன்றியதை அமெரிக்கா கவனத்தில் கொள்கிறது.

மனித உரிமை மீறல் விவகாரத்தை தொடர்ந்தும் உயர் த்திப் பிடிப்பதால் தனது வல்லாதிக்க ஆளுமை இலங்கையில் தளர்ந்து விடுமெனக் கணிப்பிடும் அமெரிக்கா, சில விட்டுக் கொடுப்புகளைச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாக் கப்படுகிறது.

இவை தவிர பிராந்திய ஆதிக்கப் போட்டியில் இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக காட்டும் அதேவேளை தென்னிலங்கையிலும் சில நகர்வுகளை சமாந்தரமாக மேற்கொள்ளும் உத்தியை அமெரிக்கா கடைப்பிடிக்கிறது.

2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தவறவிட்ட விடயத்தை 2010 இலாவது நிறைவேற்றிவிட்டால் இந்தியாவில் முழுமையாகத் தங்கி நிற்கும் அவசியம் அமெரிக்காவுக்கு ஏற்படாது.

வருகிற அதிபர் தேர்தலிலும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையேயான நிழல் யுத்தமொன்று கடலடி நீரோட்டம் போல் சலனமில்லாமல் நடைபெறுவதை அவதானிக்கலாம்.

சர்வதேச அரங்கில், தன்னோடு பல தளங்களில் மோதிக் கொண்டிருக்கும் நாடுகளுடன் நெருங்கிய உறவினைப் பேணிக் கொண்டிருக்கும் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியினை விட மேற்குலகச் சிந்தனையோடு ஒத்துப் போகும் ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டமைப்பு ஆட்சிப்பீடமேறுவதையே தனக்குப் பொருத்தமான தெரிவாக அமெரிக்கா கருதக்கூடும். இந்தியாவின் நிலைப்பாடு இதிலிருந்து முற்றாக வேறுபடும். குறுகிய காலப் பார்வையில் சீனாவும் நீண்ட கால நோக்கில் அமெரிக்காவும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்துவதைக் குறைக் கும் வகையிலான ஆட்சி அமைவதையே இந்தியா விரும்பும்.

ஆனாலும் அம்பாந்தோட்டை வாசல் வழியாக பொருளாதார பலத்தோடு உள் நுழைந்திருக்கும் சீனாவை அகற்றுவது அவ்வளவு இலகுவான காரியமாக இருக்கப் போவதில்லை.

இவர்களின் நகர்வுகளை சிங்கள தேசமும் மிகத் தெளிவாகப் புரிந்திருக்கும். சீனா, இந்தியா, அமெரிக்கா என்கிற உலகின் மிகப் பெரிய பொருளாதார, இராணுவ வல்லரசாளர்களை போர்க் காலத்தில் கையாண்டது போன்று அவர்களுக்கிடையே நிலவும் பிராந்திய சந்தை ஆதிக்கப் போட்டிகளை உன்னிப்பாக அவதானித்து தமது புதிய நகர்வுகளை சிங்களம் மேற்கொள்ளுமென எதிர்பார்க்கலாம்.

முழு இலங்கையும் பௌத்த சிங்கள இறையாண்மைக்கு உட்பட்டது என்கிற கருத்தினை மறுதலிப்பவர்களோடு முரண் நிலைப் போக்கினைக் கடைப்பிடிக்கும் நிலைப்பாடு மாற்றமடையப் போவதில்லை.

இவ்வாறான நிலையில் இன ஒடுக்கு முறைக்கு நீண்ட காலமாகவே முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழினம், ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என்பவற்றிற்கும் அப்பால் தமது பூரண சுய நிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கப் போகிறது என்கிற கேள்வி எழுகிறது.

சமஷ்டிக்காகப் போராடப் போவதாக கூறும் பல கட்சிகள் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வல்லரசாளர்களின் காய் நகர்த்தல்களுக்கூடாகப் புரிந்து கொள்ளும் சர்வதேச அரசியலை, எவ்வாறு தமிழ் மக்களின் விடுதலைக்காகப் பயன்படுத்தப் போகிறது?

ஆனாலும் போரை முன்னெடுத்த இருவரில் ஒருவரே அதிபராகும் வாய்ப்பு இருக்கிறது. இதில் யாரை ஆதரிப்பது அல்லது சுயேட்சையாகப் போட்டியிடும் ஒருவரை ஆதரிப்பதா அல்லது இத் தேர்தல் தமிழ் மக்களுக்குச் சம்பந்தமற்ற விடயமென்று ஒதுங்கி இருப்பதா என்பதனை சரியான தருணத்தில் வெளிப்படுத்த விருப்பதாக கூட்டமைப்பு கூறுகிறது.

ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அரசியல் நலனை பிரதிபலிக்கும் கட்சி, எதிர்ப்பு அரசியல் என்கிற தளத்தில் இருந்து விலகி, ஒடுக்குவோருடன் சமரச அரசியலை மேற்கொள்வதை, அம்மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பதை புள்ளடி ஜனநாயகம் மட்டும் தீர்மானிப்பதில்லை.

http://tamilskynews.org/index.php?option=com_content&view=article&id=129:2009-12-13-03-58-22&catid=35:2009-11-28-06-27-57&Itemid=101

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் இதயச் சந்திரனுக்கு. நாங்கள் மாறிவரும் சர்வதேச சதுரங்கப் பலகை பற்றி தொடர்ந்து விவாதிக்கிறோம். ஆனாலும் ஏன் எங்களால் ஒருபோதும் வெற்றிகரமாக சர்வதேச சதுரங்கத்தை ஆட முடியவில்லை என்பதுபற்றி விவாதிப்பது காலத்தின் தேவையாக உள்ளது. தொடர்ந்து வழிதவறியபடிக்கும் நாங்கள் சரி உலகின் பாதைகள்தான் பிழை என்றபடிக்கும் என்றென்றைக்குமாக அரசியல் விவாதங்கள் முடிவிக்கு விடுகிறது. உலகத்தின் எல்லா பாதைகளும் பிழையாக இருக்காது நாங்கள் பாதை தவறியிருக்கலாம் எங்கு பாதை தவறினோம் என்பதை கண்டு திருத்துவது அவசியம் என்று சொன்னால் தேடலைத் தொடங்கினால் வழிகாட்டியவர்கள் தரப்பில் இருந்து துரோகிப் பட்டம் வந்து விழுகிறது. நாம் சர்வதேச அNiகளின் குறைந்த பட்ச்சக் கோரிக்கைகலைக்கூட அனுசரிக்கவில்லையென்றும் மேல்நாட்டு ஆய்வாலர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் எங்களால் எப்பவும் எந்த ஒரு அணியுடனும் அனுசரணையாக இருக்க முடியவில்லை என்கிறார்கள். நாம் ஏன் தடைப்பட்டோம் நாம் என் ஆதரவைப் பெறவில்லையென்றால் உலகம் நமக்கு எதிர் என்று முடித்து விடுகிறார்கள். .. இந்த நச்சு வட்டத்தை விமர்சனம் சுய விமர்ச்சனம் மூலமாக உடைக்காமல் நான் எதனை எழுதினாலும் எதிர்காலத்திலும் நாம் போகுமிடத்தைச் சென்றடையப்போவதில்லை. இது பற்றி உங்கள் கருத்தென்ன

அன்புடன்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சர்வதேச அNiகளின் குறைந்த பட்ச்சக் கோரிக்கைகலைக்கூட அனுசரிக்கவில்லையென்றும் மேல்நாட்டு ஆய்வாலர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் எங்களால் எப்பவும் எந்த ஒரு அணியுடனும் அனுசரணையாக இருக்க முடியவில்லை என்கிறார்கள்.

உங்களிடம் இந்தக் கேள்விக்குப் பதில் இருக்கிறதா? அல்லது அந்த மேற்குலக ஆய்வாளரிடம் நீங்கள் என்ன சொன்னீர்கள்?

நோர்வேயின் அனுசரனையுடனான பேச்சுவார்த்தைகளில் புலிகள் அடம்பிடித்ததுதான் காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ தெரியவில்லை.அதாவது சமரசம் பேசிப் பேசியே இன்னும் பேச்சுவார்த்தையை நீட்டியிருக்கலாம் என்கிற கருத்தாகக்கூட இருக்கலாம். இது பலரும் அவ்வப்போது சொல்லிவரும் கருத்துத்தான்.

ஆனால் அந்த மேற்குலக ஆய்வாளரிடம் பேச்சுவார்த்தைக் காலாத்தில் செய்வதாக உறுதியளிக்கப்பட்ட விடயங்கள் எதுவுமே செய்யப்படவில்லை என்று சொன்னீர்களா?? சிங்களத்து சனாதிபதியே பேச்சுவார்த்தைக்கு முதலாவது முட்டுக்கட்டையாக இருந்தார் என்று சொன்னீர்களா?? புலிகளும் ரணிலின் அரசாங்கமும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தமே செல்லுபடியற்றது என்று வழக்குகள் போடப்பட்டு வெல்லப்பட்டதையும் சொன்னீர்களா?? பேச்சுவார்த்தைக்கால உயர் பாதுகாப்பு வலயங்கள் பற்றியும், மக்கள் மீதான ராணுவ அடக்குமுறை பற்றியும் சொன்னீர்களா?? இவை எல்லாவற்றிற்கும் மேலாக ரணிலின் சர்வதேசப் பொறிக்குள் புலிகளை வீழ்த்துவது என்கிற புத்திசாலித்தனமான நாடகம் பற்றியும் சொன்னீர்களா??

சரி, பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறதென்றே வைத்துக்கொள்வோமே, இறுதியில் என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?? 1993 ஆம் ஆண்டு இதே நோர்வேயின் அனுசரனையுடன் பாலஸ்த்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடந்த சமாதான ஒப்பந்தத்தை நினைத்துப் பாருங்கள். இன்றுவரை நோர்வேயோ அல்லது அமெரிக்காவோ எப்படியான தீர்வை பாலஸ்த்தீனர்களுக்கு எடுத்துக் கொடுத்திருக்கின்றன??

ஐய்யா, இதில் எமது அரசியல் நகர்வுகளுக்காப்பால் சர்வதேச பிராந்திய நோக்கங்களும் விருப்பு வெறுப்புக்களும் நிறைந்திருக்கின்றன.சிறியதொரு இனமான எம்மால் அந்த வல்லரசு நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட முடியவில்லை.எமது போராட்டம் இடைநடுவே வலுக்குறைந்து போனதற்கு அதுதான் காரனம்.சுய விமர்சனம் என்பது குற்றசாட்டுக்களாக மட்டுமே வெளிவருமென்றால் நாம் அடையப் போவது எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் ரகுநந்தனுக்கு,

1. நான் விவாதிக்கவல்ல உங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்து சிந்திக்கவே விரும்புகிறேன். அது நமது இனம் மீண்டு உயிர்தெழும் காலத்தின் தேவையாகவும் சேவையாகவும் இருக்கிறது. நிச்சயமான தவறுகளை கண்டு செம்மைப் படுத்தும் வகையிலான சுயவிமர்சனமும் அப்படித்தான்.

2. ஒரு இராஜதந்திரியின் பணி பாடம் நடத்துவதோ பிரசாரம் செய்வதோ இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நமது இராஜதந்திரி சூனியத்தில் இருந்து ஆரம்பித்தார்கள். இல்லாத சாதகமான சூழலை உருவாக்கிச் செயல்படுகிற வெளிகளை உருவாக்க வேண்டியவனாக இருந்தான். அதற்க்கான அடிப்படைத் தகமை யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள வன்னி கிழக்குமாகாணம் பற்றிய அறிவும் அனுபவமுமாக இருந்தது. எமது விவகாரத்தைக் கையாளும் பெரும்பாலான நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய முக்கியஸ்த்தவர்கள் இலங்கைக்கு பலதடவை சென்றுவந்தவர்கள். சிலர் சில வருடங்களாவது இஅலங்கையின் வடகிழக்கு மாகானங்களில் வாழ்ந்து ஆய்வு அல்லது வளற்ச்சிப் பணிகளில் ஈடுபட்டவர்கள். எல்லோருமே அவ்வப்போது தமது ஆட்க்கள் மற்றும் சர்வதேச , தேசிய என்.ஜி ஓக்கள் மூலமாக தகவல்கள் பெற்று வந்தார்கள். பெரும்பாலானவர்கள் இராணுவ சேவைக்குப் போனவர்கள். அதனால் அவர்களைச் சந்திக்கும் எம்மில் பலருக்கு வன்னி கிழக்குமாகானம் பற்றிய அறிவும் அனுபவமும் இல்லாதிருந்தது என்று அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். வெள்ளையர்கள் ஆசிய குடும்ப பிரச்சினையில் எப்போதும் தவறு ஆண்கள் பக்கம் என்று கருதுகிறவர்கள் அல்லவா?

தமிழ் சிங்கம் தங்களைச் சந்திக்கிறவர்கள் தமிழ்நெற்றில் வந்தவற்றை ஒப்புவிக்கிறவர்களாகவோ தங்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க அல்லது பிரசாரம் செய்ய வந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்ற பார்வை அவர்களிடம் இருந்தது கள பிரச்சினைகல் நிலமை தொடர்பாக குறிப்பாக யாழ்ப்பானக் குடாநாட்டுக்கு வெளியில் முக்கியமாக கிழக்கில் உள்ள நிலை நிலவரங்கள் பற்றி தங்களைவிட அதிகம் அறிந்திராதவர்கள் அவகளை ஈர்க்கவில்லை. வன்னியுடன் இருவழித் தொடர்பு இல்லாதவர்களையும் அவர்கள் முக்கியமாகக் கருதவில்லை. அமைப்பு ரீதியாகச் சந்திக்கிறவர்களுக்குள் அமரர் அன்ரன் பாலசிங்கம் மட்டுமே மேற்படி இரண்டு தகமைகளுடன் இருந்ததாகச் சொன்னார்கள். பேச்சுவார்த்தைகளின் இடையில் பாலாசிங்கம் அவர்களின் பங்குபற்றுதல் இல்லாமல் போனதுமே அவர்கள் நம்பிக்கை இழந்து போனார்கள். பாலசிங்கதை அவர்கள் 1. தங்களைப் புரிந்து கொண்டு கலந்துரையாடி முடிவுகளுக்கு வரக்கூடிய ஆற்றல் உள்ளவர் 2. பிரபாகரனுடன் நேருக்கு நேர் பேசி விடயங்களின் தாற்பரியத்தையும் முன்னுரிமைகளையும்யும் புரிய வைக்கக்கூடியவர் என்றே சொன்னார்கள். துரதிஸ்ட வசமாக தங்கலைச் சந்தித்த சிலரை அவர்கள் பாசிஸ்ட்டுகள் பயங்கரவாதிகள் என்று அடையாளப் படுத்தியதுதான். ஏனையவர்கள் பாலா அண்ணன் பெற்றிருந்த மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. பெற்றிட முனையவும் இல்லை. எமது இராஜதந்திரம் இராஜதந்திரிகளும் தந்திரமும் தலைமையுடன் இருவழித்தொடர்பும் இல்லாததாக இருந்தது. இனியேனும் இத்தகைய நிலமைகள் இது நிவர்த்தியாக வேணும். அதற்கான அடித்தளம் இல்லாமல் புலம்பெயர்ந்த நாடுகலை முன்னே வைத்து போராட முடியாது.

நண்பரே எல்லைகளற்ற அரசை state within state போல் சித்தரிக்கும் கட்டுரைகள் சில வருகிறதே என்ன நினைக்கிறீர்கள். இறமையுள்ளது எல்லா அமைப்புகலையும்விட அதிகாரம் உள்லது அதைமிஞ்சி எதுவும் இல்லை என்று கட்டுரைகள் வருகிறதே பார்த்தீர்களா? இப்படி பயங்கரவாதியின் பாசிஸ்டின் மொழி என்று அடையாளப் படுத்தப் பட்ட மொழியில் பேசுகிறவர்களை சுயவிமர்சனம் மூலம் தித்ருதாமல் என்னத்தை சாதிக்கப் போகிறோம்? புலம் பெயர்ந்த நாடுகளிலும் துயரத்தையா? தயவு செய்து கோபப் படாமல் பதில் எழுதுங்கள். உண்மையில் நேரம் சிக்கல். உங்களுக்கு பதில் எழுதாமல் விடுவது தப்பாகிவிடும் என்பதால் தான் எழுதினேன். எனக்கு தெரிந்தவற்றை எழுதிவிட்டேன். இனி மற்றவர்களுக்கு இடம் விட்டு ஒதுங்குகிறேன்.

தமிழினத்தின் தலைவிதியை யார் நிர்ணயிற்பதென்பதில் இப்போது பெரும் போட்டி இன்று உலகம் முழுக்க நடைபெறுகின்றது.

1.இலங்கையில் தமிழர் தேசியக்கூட்டமைப்பு தொடக்கம்(அது உண்மையான கூட்டமைப்பு இல்லை என்பது வேறு விடயம்)தொடக்கம் அரசுடன் சார்ந்த்திருப்பவர்கள் வரையிலும்,

2.தமிழ்நாட்டிலில் கஸ்பர் தொடக்கம் திருமா,சீமான் வரையிலும்,

3.புலம் பெயர்ந்தவர்களில் புலிகளின் ஆதரவாளர்கள் தொடக்கம் (பிரிவுகள் இருந்தாலும் தலைவர் கடைசி மாவீரர் உரையில் அப்படித்தான் சொன்னவராம்) 30 வருடங்களாக முடங்கியிருந்த பலரும்,இப்போது அரசுடன் சேர்ந்திருப்பவர்களின் ஏஜண்டுகள் வரை,இது உண்மையில் ஒரு தமிழனின் விடிவிற்கான போட்டியாக இருந்தால் நாங்களும் பார்த்து அல்லது பங்காற்றி ரசிக்கலாம் ஆனால் நடைபெறுவதோ கடந்த காலங்களில் தாங்கள் விட்ட பிழைகளை திரும்பவும் நியாயப் படுத்துவற்கான போட்டி,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை எவருக்கும் இல்லை.மற்றவர்களை கடித்து குதறுவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.

நொந்து போயிருக்கும் மக்களை ஒரு முறை நினைத்து சில விட்டுக்கொடுப்புக்களுடன் நாம் இனியும் நடக்கவில்லை யென்றால் உலகமெ உதவி செய்யவந்தாலும் எமக்கு விடுதலை இல்லை.

வணக்கம்.

கவிஞர் அவர்களே.

சர்வதேசம் புலிகளை வெல்ல விடுவதில்லை என்பதில் ஒன்று பட்டு நின்றுள்ளது.

புலிகளை முற்றாக அழிப்பது, புலிகளின் தலைமையை அழித்து மாற்றுத்தலைமையை உருவாக்குவது,

புலிகளின் சமபலத்தை அழிப்பது எனத் தமது நலனுக்கு ஏற்றாற்போல தமது நிலைப்பாடுகளை வகுத்து சிங்கள தேசம் தமிழர் தேசத்தை ஆக்கிரமிப்பதற்கு உதவி செய்துள்ளது.

சிங்கள தேசத்திற்கு உதவிய பல நாடுகள், தமது நலன்களை இழந்துள்ளன. (இவர்களும் தமது நலன்சார்ந்து சர்வதேச அரசியல் செய்ததில் தோல்வி கண்டுள்ளார்கள்) எனவே புலிகள் தமது கொள்கையில் உறுதியாக இருந்து இந்த நிலை எற்பட்டதால் இவர்களின் நலனுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதென்ற அடிப்படையிலும், இப்போதும் மே15 இற்கு முன்பிருந்த புலிகளின் மீது கடும் கோபத்திலும் உங்கள் நோர்வேஜிய நண்பர்கள் கருத்து தெரிவித்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்.

கவிஞர் அவர்களே.

சர்வதேசம் புலிகளை வெல்ல விடுவதில்லை என்பதில் ஒன்று பட்டு நின்றுள்ளது.

இப்போதும் மே15 இற்கு முன்பிருந்த புலிகளின் மீது கடும் கோபத்திலும் உங்கள் நோர்வேஜிய நண்பர்கள் கருத்து தெரிவித்து இருக்கலாம்.

கலைவாணி அதிகம் எழுத நேரமில்லை. இதை வன்னியிலும் வலியுறுதியே வந்தேன்.

நான் நோர்வீஜிய நண்பர்களின் கருத்தை எழுதவில்லை. ஐரோப்பிய நாடுகள் கனடா அமரிக்கா அறிஞர்கள் அதிகாரிகள் சிலருடனும் அரசியல்வாதிகள் சிலருடனும் இலங்கையிலும் ஈழத்திலும் சர்வதேச நிறுவனக்களில் பணியாற்றிய மேல்நாட்டவர்களோடும் கலந்துரையாடிய அனுபவத்தில் இருந்தே எழுதினேன்.

ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்று அம்மா அடிக்கடி சொல்லுவாள். உலகில் சில நாடுகள் எதிர்த்தால் அதை அவர்களின் பிழையெனலாம் எல்லா நாடுகளும் எதிர்த்தால் நாம் நமது நிலைபாடுகலை மீழாய்வு செய்ய வேணும். இஹைத்தான் நான் வன்னியிலும் வலியுறுத்தினேன். என்னுடைய புத்தகத்தில் இவற்றை கொஞ்சம் விரிவாக அணுகியுள்ளேன்

வணக்கம்

நன்றி

நேர்வேஜிய நண்பர்கள் என ஒரு குறியீடாக பாவித்தேன்.

நாம் ஊருடன் பகைத்ததாக, நான் கருதவில்லை, புலிகளின் தலைமை எதிரிகளை எதிர்கொண்ட முறை, தமிழரின் பலமும் பலயீனமும்தான் எம்மை (தமிழரை) வெல்லவிடுவதில்லை என்பதற்கான காரணம் என நான்கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

நன்றி க்

நேர்வேஜிய நண்பர்கள் என ஒரு குறியீடாக பாவித்தேன்.

நாம் ஊருடன் பகைத்ததாக, நான் கருதவில்லை, புலிகளின் தலைமை எதிரிகளை எதிர்கொண்ட முறை, தமிழரின் பலமும் பலயீனமும்தான் எம்மை (தமிழரை) வெல்லவிடுவதில்லை என்பதற்கான காரணம் என நான்கருதுகின்றேன்.

கவிதாயினி கலைவாணிக்கு நன்றி, நாம் ஒரேமாதிரி சிந்திப்பது ஆர்வம் தருகிறது. 1.நாம் ஊருடன் பகைத்தாலும் அல்லது நீங்கள் சொல்லுவதுபோல ஊர் எம்முடன் பகைத்தாலும் நிலமையைச் செம்மைப் படுத்தாவிட்டால் வேருடன் கெடும் என்பதுதானே பழமொழியின் மெய்ப்பொருள். 2. மேலும் நீங்கள் சொல்வதுபோல 2.1.புலிகளின் தலைமை எதிரிகளை எதிர்கொண்ட முறை,2.2 .தமிழரின் பலமும் பலயீனமும்தான் எம்மை (தமிழரை) வெல்லவிடுவதில்லை என்றால் நீங்களும் நான் சொல்கிறதைத்தானே வேறு வடிவத்தில் சொல்கிறீர்கள்.இதன் அர்த்தம் நாம் சர்வதேச உறவுகளைக் கையாண்ட முறை 2.புலிகளின் தலமை எதிரிகளைக் கையாண்ட முறை 2.3. தமிழரின் அணுகுமுறை என்பவை தீவிர சுய விமர்சனத்துக்கும் மீழ் பரிசீலனைக்கும் உட்பட வேணுமென்றுதானே நீங்களும் சொல்கிறீர்கள். நன்றி. கலைவாணியையும் என்னையும்போல ஏனைய தோழ தோழியர்களும் எதிர்கால சந்ததியாவது வெற்றி பெறவேண்டுமென்ற அடிப்படையில் சுயவிமர்சனம் மீழாய்வு செம்மைப்படுத்தல் தோழதோழியரை களத்தில் இருந்தும் வாழ் புலத்தில் இருந்தும் தெரிவுசெய்து கல்வி பயிற்ச்சி மூலம் தயார்செய்தல் அமூலாகும் அமைப்பு வேலைகள் போன்ற நடவடிக்கைகளின் அவசியங்களை உணர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

Edited by poet

கலைவாணிக்கு நன்றி, நாம் ஒரேமாதிரி சிந்திப்பது ஆர்வம் தருகிறது. 1.நாம் ஊருடன் பகைத்தாலும் அல்லது நீங்கள் சொல்லுவதுபோல ஊர் எம்முடன் பகைத்தாலும் நிலமையைச் செம்மைப் படுத்தாவிட்டால் வேருடன் கெடும் என்பதுதானே பழமொழியின் மெய்ப்பொருள். 2. மேலும் நீங்கள் சொல்வதுபோல 2.1.புலிகளின் தலைமை எதிரிகளை எதிர்கொண்ட முறை,2.2 .தமிழரின் பலமும் பலயீனமும்தான் எம்மை (தமிழரை) வெல்லவிடுவதில்லை என்றால் நீங்களும் நான் சொல்கிறதைத்தானே வேறு வடிவத்தில் சொல்கிறீர்கள்.இதன் அர்த்தம் நாம் சர்வதேச உறவுகளைக் கையாண்ட முறை 2.புலிகளின் தலமை எதிரிகளைக் கையாண்ட முறை 2.3. தமிழரின் அணுகுமுறை என்பவை தீவிர சுய விமர்சனத்துக்கும் மீழ் பரிசீலனைக்கும் உட்பட வேணுமென்றுதானே நீங்களும் சொல்கிறீர்கள்.

நன்றி

நாம் ஒரே மாதிரிச் சிந்திக்கின்றோம் என்ற உங்கள் கருத்து, எனக்கு ஏற்புடையதாக இல்லை.

நாமும் ஊருடன் பகைக்கவில்லை, ஊரும் எம்முடன் பகைக்கவில்லை.

சிங்கள தேசத்திற்கு உதவியவர்களுடைய நலனுக்கு எமது தலைமையின் உறுதி ஒவ்வாமையாக இருந்துள்ளது.

எனவே புலிகள் தமிழ் இனத்தின், எதிரிகளை எதிர்கொண்ட முறையைக் காரணம் காட்டி, பெயர்கள் சூட்டினார்கள், தடைசெய்தார்கள். வெல்ல விடுவதில்லை என்ற உள்நோக்கத்துடன் செயற்பட்டார்கள். சமாதானம் பேசிப் பேசியே சாதிக்கலாம் என்று நம்பிச் செயற்பட்டார்கள். அதற்கு புலிகள் இடம் கொடுக்காத காரணத்தால் எல்லோரும் சேர்ந்தே எமது விடுதலைப்போராட்டத்தை இப்போது சிதைத்துள்ளார்கள்.

ஆயுதம் தாங்கிய விடுதலைப்போர் ஆரம்பிக்கும் போது இருந்த உலக ஒழுங்கு இன்றில்லை. எமக்கு இந்த நிலை ஏற்பட்டதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. வெறுமனே அன்னியர் புலிகளைப் பார்ப்பது போல், தமிழர் என்று தன்னைக் கருதுபவர்கள், தன்னை அன்னியப் படுத்தி நின்று கொண்டு ஒட்டுமொத்தமாக புலிகளின் தலைமையைக் குற்றஞ்சாட்டுவதிலேயே மீதம் இருக்கும் வாழ் நாளை நிறைவு செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

சுயவிமர்சனம் தேவை. ஒவ்வொருவரும் தன்னில் இருந்து ஆரம்பிப்பது நல்லது.

தமிழரிடையே இருந்த பலவீனந்தான் புலிகள் எதிரிகளை எதிர் கொண்ட வழிமுறையையும் தீர்மானித்துள்ளது.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

கலைவாணி உங்கள் நம்பிக்கைகளை மதிக்கிறேன். நல் வாழ்த்துக்கள். விடைபெறுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுயவிமர்சனம் தேவை. ஒவ்வொருவரும் தன்னில் இருந்து ஆரம்பிப்பது நல்லது.

அது!!!

உலகெல்லாம் பரந்து வாழும் ஈழத்தமிழினத்தில் எத்தனை பேரால் மனசாட்சியோடு சொல்லமுடியும் நான் என்னாலான முற்றுமுழுதான பங்களிப்பையும் இந்தப் போராட்டத்துக்கு வழங்கியுள்ளேன் என்று? ஒரு 5% வீதம்...?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.