Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் நாடுகளில் நடந்துவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு தாயகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் - உங்கள் கருத்துக்கள் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் நடந்துவரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான மீள் வாக்கெடுப்பு தாயகத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் - உங்கள் கருத்துக்கள் தேவை

அனைவருக்கும் வனக்கம்,

இப்போது பரவலாக புலம் பெயர் தேசமெங்கும் மிகவும் எழுச்சி பூர்வமாக நடைபெற்றுவரும் சரித்திரப் பெருமை வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான் மீள் வாக்கெடுப்புப் பற்றிப் பல வாதப் பிரதி வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பெரும்பாலான தமிழர்கள் இந்த மீள் வாக்கெடுப்புப் பற்றி சாதகமான நிலைப்பாட்டை எடுத்து வந்தாலும், ஆங்காங்கே இதற்கெதிரான குரல்கள் ஒலிப்பதையும் மறுப்பதற்கில்லை. இவ்வெதிர்ப்புக் குரல்களில்ச் சில எப்போதும் போலவே தமிழ்த்தேசியத்திற்கெதிராகவும், சிங்கள அடக்குமுறைக்கு ஆதரவாகவும் ஒலித்துவருவதால் அவை பற்றி நாம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.ஆனால் தமிழ்த்தேசியத்தை ஆதரித்து வந்த ஒரு சிலரும் தற்போது இதற்கெதிரான நிலைப்பாட்டை எடுப்பது கவலையளிக்கிறது.

பொதுவாகவே இந்த எதிர்ப்புக் குரல்களில் முன்வைக்கப்படும் தர்க்கம், " புலத்தில் நாம் எடுக்கும் இப்படியான அரசியல் நகர்வுகள், தாயகத்தில் எமது உறவுகளின் நிம்மதியான வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கின்றன" என்பதுதான்.

இது என்னைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு தர்க்கம். ஏனென்றால் தமிழரைப் பொறுத்தவரை சிங்களப் பேரினவாதம் ஒருபோதுமே எம்மை மனிதர்களாக நடத்தியத்தில்லை. இன்றுவரை சிங்கலத்திடமிருந்து நாம் பெற்றுக்கொண்டதெல்லாம் அழிவுகளும் துன்புறுத்தல்களும்தான். ஆகவே இப்போது எடுக்கும் அரசியல் நகர்வுகள் தமிழரைப் பொறுத்தவரை மேலதிகக் கொடுமைகளை ஏற்படுத்தப் போவதில்லை. நாம் இங்கே போராடினாலும் இல்லாவிட்டாலும் அங்கே இனக்கொலை தொடரத்தான் போகிறது. ஆனால், இங்கே போராடாமல் விட்டோமென்றால் எவருக்குமே அங்கு நடப்பவை தெரியாமல் போகலாம்.

தாயகத்தில் உள்ள உறவுகளின் குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், எமது விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேன்டுமென்றால் அது நிச்சயமாக புலம்பெயர் நாட்டில்தாம் முடியும். ஆகவெதான் நாம் எமது நடவடிக்கைகலைத் தொடர வேண்டும் என்று நினைக்கிறேன்.

அதேபோல இன்னொரு கேள்வியும் சிலரால் முன்வைக்கப்படுகிறது, அதாவது, தாயகத்தில் இருக்கும் மக்களின் தலைவிதியை புலம்பெயர் தமிழர் தீர்மானிக்க முடியுமா என்பது. இதற்கான பதிலும் நான் மேலே சொன்ன கருத்தில்தான் இருக்கிறது. தாயகத்திலுள்ள தமிழரின் அபிலாஷைகள் என்னவென்பதை அறிந்துகொள்வதற்கு அங்கே சுதந்திரமான வாக்கெடுப்போ அல்லது கருத்துக்கணிப்போ நடத்த முடியாத சூழ்நிலைதான் நிலவுகிறது. ஆகவே புலம்பெயர் தமிழரைத்தவிர அதைச் செய்யக்கூடியவர்கள் வேறு எவருமில்லை.

நண்பர்களே உங்களின் கருத்துக்கலையும் நான் எதிர்பார்க்கிறேன். தயவுசெய்து பதியுங்கள்.

நன்றி

ரகுனாதன்.

கேள்வி 01: வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976ஐ மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உலகில் உள்ள புலம்பெயர் தமிழர்கட்கு அவசியமா?

பதில் 01: வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் 14 திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது ‘ 1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மக்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீழ உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

கேள்வி 02: இதுவும் ஒருவகையில் போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியுமா?

பதில் 02: இராஜதந்திர முறையிலான போராட்டம் ;( Diplomatic War)

இதை எமது மூனறாவது கட்டப்போராட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். இதில் பலவிதமான போராட்ட முறைகள் இருக்கலாம். அதன் ஒரு கட்டமான போராட்ட நடவடிக்கைதான் புலம்பெயர்நாடுகளில் உள்ள தமிழ்Nசும் மக்களால் நடாத்தப்படவுள்ள 1976 மே மாதம் 14ம் திகதி முடிவெடுக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்படி வடக்கு கிழக்கு இணைந்த(ஈழம்) தமிழ்பேசும் மக்களுக்கான அரசு ஒன்றை நிறுவுவதற்கான ஆணையை தாம் மீண்டும் ஜனநாயக முறையில் பெற்றுக்கொள்ள அறைகூவல் விடுவதாகவே இந்த கருத்துக்கணிப்பு.

கேள்வி 03: இது ஏன் இப்போது?

பதில் 03: உலக நாடுகள் சிறிலங்கா ஓர் இறைமை உள்ள நாடு அங்கு நடப்பது ‘உள்நாட்டுப்பிரச்சினை’ அதோடு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறி மௌனமாக பார்துக் கொண்டிருந்தது மாத்திரமல்ல, தமிழர்களை அழிக்கவும் அவர்களது சுயநிர்ணய உரிமைக்கான போரை நசுக்கவும் உதவிகளையும் செய்துள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையும் இது உள்நாட்டு பிரச்சனை எனக்கூறி தமிழ் பேசும் மக்களைப் பாதுகாக்கத்தவறிவிட்டது. அதோடு அவர்களது சுயநிர்ணய உரிமைப்போரை அங்கீகரிக்கத் தவறிவிட்டது. இவற்றை உலகுக்கு உணர்தத இக்கருத்து கணிப்பு வாக்கெடுப்பபு உதவவேண்டும்.

ஈழரவர்களான புலம்பெயர் தமிழர்கட்கு ஈழத்தில் வாழும் ஈழவர்கட்காக குரல்; கொடுக்கும் எல்லாத் தகைமையும் உண்டு. இதை ஜனநாயக முறையில் செய்வது எமது உரிமையும் கடமையும் கூட.

இந் நிலையில், இந்த வெளிநாட்டு அரசாங்கங்கட்கு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைச் சுட்டிக்காட்டும் எமது போர் பயங்கரவாதப் போர் அல்ல. எமது சுயநிர்ணய உரிமைக்கான போர். மக்கள் அதற்காக பலதடவை வாக்களித்துள்ளனர். அதை திரும்பவும் நினைவூட்ட முனைவதுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கை என்று கூறிவைக்கவேண்டும்.

இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய வழி எதுவுமே இல்லை. அங்கே 1948ம் ஆண்டில் இருந்து ஓர் அராஜக ஆட்சியே நடை பெறுகின்றது. இதை மாற்றவேண்டுமானால் புலம் பெயர் தமிழர்களால் தொடர்ந்து தொடர்பாக பலவிதமான போராட்டங்களும் நடாத்தப்படவேண்டும். அதில் முக்கியமானதொன்றுதான் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு. இதன் மூலம் எமது இழந்த உரிமைகளைப் பெறும் உரிமைப்போராட்டத்தை தொடர முடியும்.

ஒடுக்குமுறை அடக்குமுறை பாரபட்சம் இன்றி எமது தேசியம், தாயகம் சுயநிர்ணயம் என்பவற்றைப் பெற்று வாழ இக்கருத்துக் கணிப்பு உதவமுடியும். அது மட்டுமல்ல உலகின் மௌனத்தை இக்கருத்துகணிப்பு உடைத்தெறிந்து எமது சுயநிர்ணய உரிமையை உலக ஆதரிக்கும் நிலைமையை உருவாக்கவேண்டும்.

கேள்வி 04: ஒன்றுபட்டு போராடுவதின் அவசியம்?

பதில் 04:உலகில் பொது மக்கள் வாக்குக்கணிப்பு மூலம் பல இனங்கள் தமது சுயநிர்ணய உரிமையை நிர்ணயிக்க முடியுமானால் தமிழ்பேசும் மக்களால் ஏன் முடியாது??

இன்று இலங்கையில் தமிழ்பேசும் மக்கட்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பதை உலகம் உணரத்தொடங்கியுள்ளது. ஆதை மேலும் வலுப்படுத்தவே புலம்பெயர் தமிழர்களால் எடுக்கப்படும் நடவடிக்கையே இப்பொதுமக்கள் வாக்குக்கணிப்பாகும்.

வெளிநாடுகளில் உள்ள அமைப்புக்கள் யாவும் தாம்பெரிது நீ சிறிது என்று பாகுபாடு காட்டாது இவ்வட்டுக்கோட்டடைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்வீர்களாக.

தமிழ்மக்கள் கைநே;திப்பிழைப்பவர்கள் அல்லர். அவர்கள் தன்மானத்தோடு தமது தாயகத்தில் ஓர் தேசிய இனமாக சுயநிர்ணய உரிமையோடு வாழவிரும்புகின்றார்கள். அவர்களது எண்ணம் ஈடேற இப்பொது மக்கள் வாக்குக்கணிப்பு ஓர் பங்கை வகிக்க வேண்டும்.

கேள்வி 05: புலம்பெயர் நாடுகளில் கருத்துக்கணிப்பால் ஏற்படக்கூடிய நன்மைகள் யாவை?

பதில் 05:

1. எமது கடந்தகால அகிம்சை முறைப்போராட்டங்களும் ஆயுதப்போராட்டங்களும் ஜனநாயகமுறையானது என்பதை திரும்பவும் உலகுக்கு உணர்த்தும்.

2. நடந்துமுடிந்த அகிம்சா முறை ஆயுதப்போராட்டங்களில் களைத்துப்போயுள்ள மக்கட்கு இது ஓர் உந்துதலையளிக்கும்.

3. இது எமது இறைமைக்கான நடவடிக்கை என்பதையும் எங்களை ஆளும் இறைமையோ உரிமையோ சிறிலங்காவிற்கு இல்லை என்பதை உலகிற்கு உணர்த்துதல்.

4. சிறிலங்காவின் அரசியலமைப்பை மாற்றியமைக்க அழுத்தம் கொடுத்தல்.

5. சிறிலங்காவின் அராஜக ஆட்சியை உலகிற்கு உணர்த்துதல்.

6. எமது மூன்றாவது கட்டப்போராட்டத்தில் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடவடிக்கையை ஓர் ஜனநாயகக் ‘கருத்து-வாக்கு’ ஆயுதமாக்குதல்.

7. 13வது திருத்தத்தை ஏற்க்கச் சொல்வோரின் போலித்தன்மையை வெளிக்கொணர்தல்.

8. அனைத்து தமிழர்களையும் உலகளாவிய ரீதியில் ஒன்றிணைத்தல்.

9. புலம் பெயர் நாடுகளில் உள்ள இரண்டாவது சந்ததியினர்க்கு இது ஓர் ஈழஅரசியல் போராட்டம் என்ற படிப்பினையாக்குதல.

10.புலம் பெயர் தமிழர்களின் ஏனைய ஜனநாயக போராட்டங்களுக்கு வலுச்சேர்த்தல்.

11. இதனால் ஈழவர்களின் உரிமைகளை திரும்பப் பெறச்செய்தல்.

12. தமிழர்களின் அபிலாஷைகளை அடையும் தீர்வை இவ் வாக்குக்கணிப்பின் மூலம் கொண்டுவர முடியும்.

13. இவ் வாக்குக்கணிப்பின் மூலம் பல நாடுகள் தமது இறைமையை மீண்டும் பெற்று சுதந்திர நாடுகளாக உள்ளன. உ-ம் ஸ்லோவேனியா.குரோசியா.மசடோனியா.உக்கிரைன்.ஜோர்ஜியா. பொஸ்னியா.மால்- டோவா.கிழக்குதீமோர்.மொன்ரநீகிரோ.போன்றன.

14. இவ் வாக்குக்கணிப்பை நடத்துவதை சிறிலங்கா அரசாங்கம் எதிர்க்கும் பட்சத்தில் இலங்கைக்கு சார்பான ஜனநாயக நாடுகள் இலங்கையை எதிர்க்கும் வாய்ப்புண்டு.

15. சிறிலங்கா அரசுக்கு சார்பாக இருந்து அண்டிப்பிழைப்பவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மக்களிடமிருந்து பிரித்துவைக்கும்.

16. உலகநாடுகள் ஜனநாயகத்திற்காக வாக்குக்கணிப்பை பயன்படுத்துவதால் நாம் ஈழவர்களின் ஜனநாயகத்தீர்வுக்காக இலங்கையின் வடக்கு கிழக்கில் வாக்குக்கணிப்பை நடாத்த நிர்பந்திக்க வேண்டும். இதை மேலத்தேய நாடுகள் எதிர்க்க முடியாது.

17. இந்தியா இந்த இக்கட்டான நிலைக்கு தமது மக்களைப் போகவிடாமல் பார்கவேண்டுமானால் இக்கருத்து-வாக்குக்கணிப்பின்றியே ஈழவர் பிரச்சினையை தீர்க்கவேண்டும்.

18. புலம்பெயர் தமிழ்மக்கள் உலக ஜனநாயகமுறைகளை எமது மக்களின் ஈழக்கோரிக்கையை அவர்களது எண்ணப்படி தீர்க்க பயன்படுத்தமுடியும்.

உங்கள் மேலதிக கேள்விகளை ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்க: info@govtamileelam.org

Edited by akootha

(1) கேள்வி – வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு இப்போது வாக்களிப்பு நடத்த வேண்டிய தேவை என்ன?

(1) பதில் - வட்டுக்கோட்டைத் தீர்மானம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் 1976 ஆம் ஆண்டு மே 14 இல் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை முன்னிறுத்தி 1977 ஆம் ஆண்டு யூலை 21 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அய்க்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனியரசே ஒரே தீர்வு என்கிற அரசியல் பிறப்புரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் (மொத்த இருக்கைகள 168) வெற்றி பெற்றது. வட மாகாணத்தில் மட்டும் 14 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இந்தத் தேர்தலில் இன்று 40 அகவைக்கு குறைந்தவர்கள் வாக்களித்திருக்க முடியாது. எங்களது இளம் தலைமுறை நிச்சயம் வாக்களித்திருக்க முடியாது. மேலும் இன்று சிங்கள அரசு சரி, இந்தியா சரி எல்லோரும் இனச் சிக்கலுக்கு 13 ஆவது சட்ட திருத்தத்தின் அடிப்படையில்தான் தீர்வு எனச் சொல்கின்றன. எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீள உறுதிசெய்வதன் மூலம் தமிழ்மக்கள் 13 ஆவது திருத்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்ற செய்தியைச் சொல்ல முடியும்.

(2) கேள்வி - இந்தத் தீர்மானத்தின் மீது நிலத்தில் உள்ளவர்கள்தான் வாக்களிக்க வேண்டும். புலத்தில் இருக்கும் தமிழர்கள் வாக்களிப்பதில் என்ன பலன்?

(2) பதில் - நிலத்திலுள்ள எங்கள் மக்கள் சிங்கள – பவுத்த ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வாயைத் திறக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளார்கள். வன்னியில் இன்றும் 120,000 பொது மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களது நடமாடும் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. 11,000 க்கும் அதிகமான போராளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

வன்னி தமிழ்நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கனகரத்தினம் சிறை வைக்கப்பட்டுள்ளார். அமைதிக் காலத்தில் இரண்டு கட்டுரை எழுதிய ஊடகவியலாளர் திரு. திசநாயகத்துக்கு சிங்கள நீதிபதி 20 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளார். கொலையாளிளுக்கும் கொள்ளைக்காரர்ளுக்கும் 6 – 10 ஆண்டு தண்டனைதான் விதிக்கப்படுகிறது.

சிங்களக் குடியேற்றம் முடுக்கி விடப்பட்டுள்ளது. குறிப்பாக திருகோணமலையில் தமிழர்களது நிலங்கள் பறிக்கப்படுகிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் காவலாக துப்பாக்கி ஏந்திய 40,000 சிங்கள இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கும் சிங்கள இராணுவத்தின் பிடிக்குள் இருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர்கள் ஓய்வு பெற்ற சிங்கள இராணுவ தளபதிகள். கிழக்கு மாகாண அரச அதிபரும் சிங்களவரே.

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் ஒரு கூலித் தொழிலாளியைக் கூட நியமனம் செய்யும் அதிகாரம் அற்ற பொம்மையாகவே இருக்கிறார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.

சுருக்கமாகச் சொன்னால் தமிழ்மக்கள் தங்கள் அரசியல் வேட்கையைச் சுதந்திரமாகத் தெரிவிப்பதற்கும் அதற்காகக் குரலெழுப்பிப் போராடுவதற்கும் இலங்கைத் தீவின் உள்ளக நிலைமைகள் மிகப்பெரும் தடையாகவும் பாரிய அச்சுறுத்தலாகவும் உள்ளன. எனவே அவர்களுக்கு நாம்தான் குரல் கொடுக்க வேண்டியுள்ளது. அதன் ஒரு செயற்பாடே இந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்குக் கணிப்பு.

(3) கேள்வி – வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்குக் கணிப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு நடைபெற இருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிப்பவர்களில் சிலர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடைபெற இருக்கும் வாக்குக் கணிப்பை எதிர்க்கிறார்களே?

(3)பதில் - இரண்டும் வெவ்வேறானவை அல்ல. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இறைமை பொருந்திய சமய சார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டளிப்பதும் மீள் உருவாக்குவாக்குவதும் (This Convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Thamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Thamil Nation in this Country) இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் தனது இருப்பைக் காப்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Thamil Eelam) தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாகத் தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசின் சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலைகள் ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.

இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்குச் செயலுருவம் கொடுப்பதற்காகப் பாடுபடும் அதியுயர் அரசியல் நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படும். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசில் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும். (நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கக்கோவை)

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழர்களது சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனியரசு என்பது ஒரு இலக்கு ஆகும். அந்த இலக்கை அடைவதற்குக் கொடுக்கப்படும் செயல் வடிவம் அல்லது கட்டுமானவே நாடுகடந்த தமிழீழ அரசாகும்.

அதே சமயம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும் வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு கை கொடுக்கும் முகமாக மக்கள் அவை உருவாக்கப்படும். அதற்கான தேர்தல் மக்களாட்சி முறைமைக்கு அமைய மிக விரைவில் நோர்வேயில் நடந்தது போல் கனடாவிலும் நடைபெறும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும். காரணம் இவை ஒன்றுக்கொன்று இசைவானவை. பாதுகாப்புத் தரக்கூடியவை. மாவீரர்களதும் உலகளாவிய தமிழ் மக்களதும் தாகமான தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி அகூதா,

உங்களின் பதில் நிச்சயம் பலருக்கு தெளிவை அளித்திருக்கும். முக்கியமாக எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 01: வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976ஐ மீண்டும் வலியுறுத்தும் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உலகில் உள்ள புலம்பெயர் தமிழர்கட்கு அவசியமா?

பதில் 01: வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பது 1976 மே மாதம் 14 திகதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாக கைக்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். அதாவது ‘ 1976 மே மாதம் 14ம் திகதியன்று வட்டுக்கோட்டையில் உள்ள பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு இலங்கைத் தமிழர்கள் மக்களின் தொன்மை வாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம் பாரம்பரியம் ஆகியவற்றாலும் ஐரோப்பிய படையெடுப்பாளர்களின் ஆயுதப்பலத்தால் அவர்கள் வெற்றி கொள்ளப்படும்வரை பல நூற்றாண்டுகளாக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தம்மைத்தாமே ஆண்டுகொண்டு தனித்துவமாகத் தொடர்ந்திருக்கும் விருப்பம் காரணமாகவும் சிங்களவர்களில் இருந்து வேறுபட்ட தனித்தேசிய இனமாகவுள்ளாரென இத்தால் பிரகடனப்படுத்துகின்றது.

மேலும் 1972 இன் குடியரசு அரசியலமைப்பு தமிழ்மக்களைப் புதிய காலனித்துவ எசமானர்களான சிங்களவர்களால் ஆளப்படும் ஓர் அடிமைத்தேசிய இனமாக ஆக்கியுள்ளதென்றும் தமிழ்த்தேசிய இனத்தின் ஆட்சிப்பிரதேசம் மொழி வாழ்வுடமை பொருளாதார வாழ்க்கை தொழில் மற்றும் கல்வி வாய்ப்புக்கள் ஆகியவற்றை இழக்கச் செய்வதற்கு சிங்களவர்கள் தாம் முறைகேடாகப் பறித்துக்கொண்ட அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றனரென்றும் அதன் மூலம் தமிழ் மக்களின் தேசியத்துக்கான இயற்பண்புகள் யாவும் அழிக்கப்படுகின்றனவென்றும் இம்மாநாடு உலகுக்கு அறிவிக்கின்றது.

ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உள்ளியல்பான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திரமான இறைமைபொருந்திய சமயசார்பற்ற சமதர்ம தமிழீழ அரசை மீழ உருவாக்குதலும் இந்நாட்டில் தமிழ்தேசிய இனம் உளதாயிருத்தலைப் பாதுகாக்கும் பொருட்டு இவ்வறிவித்தல் தவிர்க்க முடியாததாகியுள்ளதென இம்மாநாடு தீர்மானிக்கின்றது.

கேள்வி இந்த வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தும் வாக்கெடுப்பு அவசியமா? என்பதே. இந்த பதில் வட்டுக்கோட்டை தீர்மானம் என்றால் என்ன? என்ற கேள்விக்கான பதிலாகும். இந்த வாக்கெடுப்பும், அதன் முடிவும் கனேடிய ஊடகங்கள் சிலவற்றில் முன்பக்கத்தில் இடம்பிடித்திருந்தன. ஆனால் இது, இன்று அவசியமானதா? என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளிப்பதானால் அதற்கான காரணங்களை குறிப்பிட வேண்டும். இன்று இந்த வாக்களிப்பின் முடிவு அங்கே வாழும் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு எந்த வகையில் பங்களித்தது? என்று பார்ப்பது இந்த காரணங்களை எமக்கு விளக்க கூடும்.

  1. வட்டுக்கோட்டை தீர்மானம் தமிழ்மக்களுக்கு சுயநிர்ணய உரிமையையும், அதன் அடிப்படையில் தனியான நாட்டை பெற்றுக்கொள்ளும் உரிமையையும் வலியுறுத்துகிறது. ஆனால் நடைமுறையில், இந்த தீர்மானம் இவ்வாறான நியாயத்தை வலியுறுத்தும் அதே வேளை மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்ள ஆக்கபூர்வமாக எதும் செய்யக்கூடிய வலுவற்ற ஒன்றாகும்.
  2. இன்றைய கணணிவலை தொழில்நுட்ப காலத்தில் வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள வாக்களித்துத்தான் ஏனைய நாட்டு அரசுகளுக்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளையும், பாதிக்கப்பட்ட நிலையையும் அறிய வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தெரியவில்லை. இவை எல்லாம் ஏனைய நாட்டு அரசுகளும், ஐ.நா. போன்ற சர்வதேச அமைப்புகளும் அறிந்தவையே. இன்றைய நிலைக்கு முக்கியமான காரணம், வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையிலான தமிழ் தேசியத்துக்கு இந்தியா காட்டிவரும் எதிர்ப்பு. இந்த எதிர்ப்பை கையாள இந்த மீள்வாக்கெடுப்பு எந்தவகையில் உதவும் என்று விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

(3) கேள்வி – வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்குக் கணிப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கு நடைபெற இருக்கும் தேர்தலுக்கும் என்ன தொடர்பு? நாடுகடந்த தமிழீழ அரசை ஆதரிப்பவர்களில் சிலர் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது நடைபெற இருக்கும் வாக்குக் கணிப்பை எதிர்க்கிறார்களே?

(3)பதில் - இரண்டும் வெவ்வேறானவை அல்ல. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் இறைமை பொருந்திய சமய சார்பற்ற, சமவுடமைத் தமிழீழ அரசை மீட்டளிப்பதும் மீள் உருவாக்குவாக்குவதும் (This Convention resolves that restoration and reconstitution of the Free, Sovereign, Secular, Socialist State of Thamil Eelam, based on the right of self determination inherent to every nation, has become inevitable in order to safeguard the very existence of the Thamil Nation in this Country) இந்நாட்டில் தமிழ்த் தேசிய இனம் தனது இருப்பைக் காப்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது என இம் மாநாடு தீர்மானிக்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு (Transnational Government of Thamil Eelam) தமிழ் மக்களது அரசியல் வேட்கையை உயிர்ப்போடு பேணித் தமிழர் தேசியம், தாயகம், தன்னாட்சி எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாகத் தமிழீழ மக்களின் விடுதலையினை வென்றெடுப்பதற்கான ஓர் அரசியல் அமைப்பாகும். இது ஒரு புதுமையான எண்ணக் கருவாகும்.

தாயகத்தில் தமிழ் மக்கள் தமது அரசியல் வேட்கைகளையும் உரிமைககளையும் வெளிப்படுத்துவதற்கும் அதற்காகச் செயற்படுவதற்கும் இப்பொழுது எவ்வித வாய்ப்புகளும் இல்லை. ஸ்ரீலங்கா அரசின் சட்ட அடிப்படையான தடைகள், இராணுவ ஆக்கிரமிப்பு, படுகொலைகள் ஆகிவற்றின் ஊடாகத் தமிழ் மக்களது விடுதலை வேட்கையையும் உரிமைகளையும் ஒடுக்கி வருகின்றது.

இந்நிலையில் தமிழீழ நாட்டின் உறுப்பாகிய புலம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு உள்ள மக்களாட்சி வாய்ப்புக்களைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்குச் செயலுருவம் கொடுப்பதற்காகப் பாடுபடும் அதியுயர் அரசியல் நடுவமாக இந்த நாடுகடந்த அரசு அமைக்கப்படும். தாயகத்தில் வாழும் அரசியல் தலைவர்களும் மக்களும் இந்த அரசில் பங்கு பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே இந்த அரசில் உறுப்புரிமை வகிக்கும் சார்பாளர்கள் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களிடையே இருந்து மக்களாட்சி முறையில் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த அரசு இலங்கைத் தீவில் இருக்கும் நட்பு சக்திகளுடன் கைகோர்த்துப் பயணிக்கும். (நாடு கடந்த தமிழீழ அரசு விளக்கக்கோவை)

எனவே வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள தமிழர்களது சுதந்திர இறைமையுள்ள தமிழீழ தனியரசு என்பது ஒரு இலக்கு ஆகும். அந்த இலக்கை அடைவதற்குக் கொடுக்கப்படும் செயல் வடிவம் அல்லது கட்டுமானவே நாடுகடந்த தமிழீழ அரசாகும்.

அதே சமயம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும் வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும் நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும் இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு கை கொடுக்கும் முகமாக மக்கள் அவை உருவாக்கப்படும். அதற்கான தேர்தல் மக்களாட்சி முறைமைக்கு அமைய மிக விரைவில் நோர்வேயில் நடந்தது போல் கனடாவிலும் நடைபெறும்.

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும். காரணம் இவை ஒன்றுக்கொன்று இசைவானவை. பாதுகாப்புத் தரக்கூடியவை. மாவீரர்களதும் உலகளாவிய தமிழ் மக்களதும் தாகமான தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும்.

நாடு கடந்த அரசு, வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய இந்த விளக்கங்கள் அடிப்படையில், இவை:

  1. இலங்கையில் இன்று வாழும் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு நடைமுறை சாத்தியமான தீர்வை முன்வைக்கவில்லை.

  2. இந்தியாவினதும், உலக வல்லரசுகளினதும் தொடர்ச்சியான எதிர்ப்புக்கு மத்தியிலும் தமிழ் மக்களுக்கு தனியான தேசிய அரசையே வலியுறுத்துகின்றன.

  3. இது திபெத் போல வரலாறாக போகும் ஒரு கனவை நீண்ட காலத்துக்கு பேணும் நோக்கத்தை கொண்டதாக காணப்படுகிறது. யூதர்கள் தாம் இவ்வாறாக கண்ட கனவை நனவாக்கி கொண்டது உண்மை, ஆனால் அவர்கள் அதற்காக அமெரிக்காவுக்கு அணுகுண்டை செய்து கொடுத்து விட்டு அமெரிக்காவின் ஆதரவை கேட்டார்கள். 2000 வருடம் கனவு கண்டு, இறுதியில் நாடு கண்டார்கள். இந்த வழியிலேதான் ஈழத்தமிழருக்கு நாடு கடந்த அரசு தீர்வு தரவுள்ளதென்றால், ஈபிடிபி அமைப்பினர் முன்வைக்கும் செயற்திட்டங்கள் இதனிலும் பார்க்க அங்கு வாழும் மக்களுக்கு பயனுள்ளவையாக தோன்றுகின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வட்டுக்கோட்டையைப்பற்றி சொல்ல என்ன இருக்கு? அதுக்குப் பிறகுதானே புலிகளின் தீர்மானங்கள் வந்தது. அதுகளைத்தான் முன்நிறுத்தவேணும். புலிகளுக்கு இறுதியில் வெற்றி கிடைத்துள்ளது.

புலிகளினால் 2006 ம் ஆண்டு இறுதிப்பேச்சுவார்த்தைமேசையில் வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருக்குதாம்.

ஏ9 பாதை திக்கப்பட்டுவிட்டதாம். :o

இடம் பெயர்ந்தவரின் எதிர்வினைத் தேசியம் :

அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த அல்பேனியரில் ஓரளவு வளமான வாழ்வை அடைந்த சிலர் கோசவோவை முழுவதும் அல்பேனியரின் கைவசப்படுத்தத் திட்டமிட்டு, கோசவோ விடுதலைப் படை என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதற்கு ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்கள் ஆகியன வாங்குவதற்கு அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் இருந்த அல்பேனியரிடம் நிதி திரட்டி, கோசவோவில் இருந்த செர்பிய மக்கள் மீது கொரில்லா நடவடிக்கைகள் மூலமாகத் தாக்குதல் நடத்தினர். அவர்களது திட்டம் என்னவென்றால், செர்பிய இன அரசியல் நடத்தும் மிலாசவிச் இந்த இயக்கத்தை அடக்க கடுமையாக எதிர்த் தாக்குதல் நடத்துவார், இதை சாக்காக வைத்துக் கொண்டு செர்பியரை இன வெறியர் எனப் பழி சாட்டி கோசவோ அல்பேனியரை அபலைகளாகக் காட்டி பன்னாட்டு அரசுகளிடம் இருந்து ஆதரவு பெற்று, செர்பியாவிடமிருந்து கோசவோவை விடுவிப்பது என்பது.

இதே போலப் புலம் பெயர்ந்து மேலை நாடுகளில் வாழும் பல இன மக்கள், தமது சிறுபான்மை அடையாளத்துடன் வெற்றிகரமாக இணைந்து வாழ முடியாமலோ அல்லது தாம் தம் தாய்நாட்டில் நல்ல நிலையில் வாழ முடியாமல் வேறு நாட்டில் வாழ வேண்டி வருவதையே ஓர் அவலம் எனவும், வரலாற்றில் தம் மக்கள் ஓரம் கட்டப்பட்டு விட்டதன் அறிகுறி எனவும் கருதி அதை ஏற்க முடியாமலோ அல்லது மேற்கில் தனி நபர்களுக்குக் கொடுக்கப்படும் உரிமைகள் தமது தாயகத்திலும் தம் இனக் குழுவுக்கும் கிட்ட வேண்டும் என்ற கருத்தாலோ, இது தவிர வேறு சில ஆதர்சங்களாலோ மேலை நாடுகளில் தம்மால் நடத்த முடியாத சுய நிர்ணயக் கோரிக்கை, உள் நாட்டுப் போர், மேலும் அடையாள அரசியல் ஆகியவற்றைத் தம் தாய்நாடுகளில் நடத்த முற்படுகிறார்கள். சமூக ஆய்வாளர்கள் இதை 'இடம் பெயர்ந்தவரின் எதிர்வினைத் தேசியம் ' என்று அடையாளம் காணத் துவங்கி இருக்கிறார்கள்.

" ஈபிடிபி அமைப்பினர் முன்வைக்கும் செயற்திட்டங்கள் இதனிலும் பார்க்க அங்கு வாழும் மக்களுக்கு பயனுள்ளவையாக தோன்றுகின்றன" :

வழக்கமான சிறு குழு அடக்கு முறை ஆட்சி, ஓரளவு மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து விட்டு அவர்களை வாயடைத்து, கை கட்டி மந்தையாக இருக்க வைக்கும் ஓர் ஆட்சி முறை என்றுதான் அறிய வேண்டும்.

இந்த 30 வருடமும் விடுதலைப்புலிகளுக்கு புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் கொடுத்த ஆதரவிலிருந்தும், அதன்வழி இடம்பெற்ற ஆயுதப்போராட்டத்திலிருந்தும் இது எந்த வகையில் வேறுபட்ட திட்டம்? இந்த திட்டம் 30 வருட ஆயுதப்போராட்டத்தின் அதே போக்கிலான தொடர்ச்சி என்றால், இன்றுவரை வெற்றி பெறாத, இனிமேல் பெற்றிபெறும் என்ற நம்பிக்கையை பெருமளவிலான மக்களிடமும், நாடுகளிடமும் இழந்துவிட்ட இந்த ஆயுதப்போராட்டம் எப்படி வெற்றிபெறும் என்று யாராவது விளக்க முடியுமா?

" ஈபிடிபி அமைப்பினர் முன்வைக்கும் செயற்திட்டங்கள் இதனிலும் பார்க்க அங்கு வாழும் மக்களுக்கு பயனுள்ளவையாக தோன்றுகின்றன" :

வழக்கமான சிறு குழு அடக்கு முறை ஆட்சி, ஓரளவு மக்களுக்கு அடிப்படை வசதிகளை அளித்து விட்டு அவர்களை வாயடைத்து, கை கட்டி மந்தையாக இருக்க வைக்கும் ஓர் ஆட்சி முறை என்றுதான் அறிய வேண்டும்.

இன்று தமிழர் பகுதி மிகமோசமாக பொருளாதார வளர்ச்சியிலும், வாழ்க்கைதரத்திலும், கல்வி, மருத்துவ வசதிகளிலும் பின்தங்கியிருப்பதற்கு ஒரு காரணம், சிறியளவிலான நன்மைகள் வேண்டாம், தனிநாடு வரும்வரை இவை ஒன்றும் வேண்டாம் என்று இருப்பதும் ஆகும். 30 வருடங்கள், ஒரு தலைமுறையே பின்தங்கி இருக்கிறது. விடுதலைப்போராட்டமும் வெற்றிபெறும் என்று தெரியவில்லை. யூதர்கள் போல 2000 வருடங்கள் ஆனாலும் ஆகலாம், அதுவரை பின்தங்கி கொண்டே போவது நியாயமானதா? மக்கள் நோய்களால் மடிந்து போக மாட்டார்களா? அறிவுவளம் அழிந்துவிடாதா? பொருளாதாரம் முற்றும் சிதைந்து தமிழர் கூலிகளாக மட்டும் வாழும் நிலை உருவாகாதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.