Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசின் விளக்க கோவை வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் விளக்க கோவை வெளியீடு: ஜெனீவாவில் செயலகம்; புதிய இணையத் தளம்; ஏப்ரலில் தேர்தல்

......புதினப்பலகை....

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான 135 பிரதிநிதிகள், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்:

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளோம் என்பதனை ஏற்கனவே தங்களுக்கு அறியத் தந்திருந்தோம்.

இதற்கமைய இவ் அறிக்கையினைத் தங்கள் கவனத்திற்காகவும் கருத்துக்களுக்காகவும் 2010 ஆம் ஆண்டு ஆரம்பமாகியுள்ள இப் புதிய தசாப்தத்தின் முதல் பொங்கல் திருநாளாகிய இன்றைய தினம் தங்கள் முன் வைக்கிறோம்.

இவ் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இந் நாடு கடந்த அரசாங்கத்திற்கான வழிகாட்டிக் கோட்பாடுகளில் சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை வென்றெடுப்பதில் நாடுகடந்த அரசாங்கம் விசுவாசமான உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதியுரைக்குழுவினால் வழங்கப்பட்ட பரிந்துரைகளின்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்காக 135 பிரதிநிதிகள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இவர்களில் முதற்கட்டமாக 115 மக்கள் பிரதிநிதிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களின் போது மக்களின் நேரடி வாக்களிப்பின் மூலம் பின்வரும் நாடுகளிலிருந்து பின்வரும் எண்ணிக்கையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

கனடா - 25

பிரித்தானியா - 20

அமெரிக்கா- 10

அவுஸ்திரேலியா-10

பிரான்ஸ்- 10

யேர்மனி - 10

சுவிஸ்- 10

தென் ஆபிரிக்கா- 3

நோர்வே - 3

டென்மார்க் - 3

நெதர்லாந்து - பெல்ஜியம் - லக்சம்பேர்க் - 3

இத்தாலி - 3

நியுசிலாந்து – 2

சுவீடன் - 1

பின்லாந்து - 1

அயர்லாந்து - 1

ஏனைய 20 பிரதிநிதிகள் உலகின் ஏனைய இடங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வகையில் தெரிந்தெடுக்கப்படுவர்.

இவை குறித்த விபரங்கள் எல்லாம் இவ் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள்; ஒழுங்கமைக்கப்படவுள்ள நடைமுறைகள், வாக்காளர் வேட்பாளர் தகமைகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புக்குழு பின்பற்ற வேண்டிய வழிகாட்டிக் கோட்பாடுகள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கக்கூடிய செயற்திட்டங்கள், நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள், தேர்தல் ஆணையம், தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோரின் பணிகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பாக மதியுரைக்குழுவின் பரிந்துரைகள் இவ் அறிக்கையில் உள்ளடங்குகின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்பாடுகளுக்கு நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்கள் பொறுப்பாக இயங்கும். ஏற்கனவே கனடா, பிரித்தானியா, அமெரிக்கா, தென் ஆபிரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளுக்கு நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களுக்கான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏனைய நாடுகளுக்கான விபரங்களை இத் தை மாதம் முடிவடைவதற்கு முன்னர் வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான செயற்பாடுகளை ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்தும் பணியினை ஜெனிவாவில் அமைக்கப்பட்டுள்ள நமது அனைத்துலகச் செயலகம் மேற்கொள்ளும்.

செயற்பாடுகளை விரைவுபடுத்தவும் விரிவுபடுத்தவும் ஒவ்வொரு நாடுகளுக்கும் செயலகப்பிரதிநிதிகளைத் தேவை கருதி நியமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்றைய பொங்கல் தினத்திலிருந்து எமது உத்தியோகபூர்வமான இணையத்தளத்தையும் தங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்வடைகிறோம்.

www.govtamileelam.org என்ற இணையத்தள முகவரியில் அமைக்கப்பட்டுள்ள இவ் இணையத்தளம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணையத்தளமாக தற்போது இயங்கும். மதியுரைக்குழுவின் அறிக்கையினையும் இவ் இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

16.06.2009 அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைக்கும் திட்டத்தினை முதலில் அறிமுகம் செய்த போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழு 31.12.2009 வரை இயங்கி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கும் எனத் தெரிவித்திருந்தோம்.

தற்போது முன்வைக்கப்படடுள்ள அறிக்கையின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படும் வரை இச் செயற்குழு தனது செயற்பாட்டைத் தொடரவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இச் செயற்குழு தனது பணியை நிறைவுக்குக் கொண்டு வரும்.

இத்தருணத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான பணியில் இணைந்து கொள்ள முன்வருமாறு உங்கள் அனைவரையும் அன்புக் கரம் நீட்டி அழைக்கிறோம்.

இப் பணியில் இணைந்து செயற்பட விரும்புவோர் நாடுவாரியான செயற்பாட்டுக்குழுக்களுடன் தொடர்பு கொண்டோ அல்லது எமது இணையத்தளத்தில் தொடுக்கப்பட்டுள்ள தொண்டர் பதிவுப் படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலமோ தம்மை இணைத்துக் கொள்ளலாம்.

இவ் அறிக்கை மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின்னரே இறுதியானதாக்கப்படவுள்ளதால் இக் கருத்துப் பரிமாற்றத்திற்கென 3 வாரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கென சில நிகழ்வுகளும் எம்மால் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன. இவ் அறிக்கை தொடர்பான தங்கள் கருத்துக்கனை எமக்கு அனுப்பி வைக்குமாறும் வேண்டிக் கொள்கிறோம்.

தங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: info@govtamileelam.org

தமிழீழ அரசியலும்இ நாடு கடந்த அரசாங்கமும் (வுபுவுநு)

பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் எடுத்த விடாமுயற்சியின் பயனாக இன்று தமிழ் மக்களின் அரசியல் உலக அரசியல் அரங்கில் சிறிதுசிறிதாக முக்கியத்துவம் பெறத் தொடங்கிவிட்டது. ஆனால் அதற்காக எமக்கு எதிரான சக்திகள் "போனால் போகட்டும் போடா!" எனத் தமது நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவார்களா? என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மேற்குலக நாடுகளும் இந்தியாவும் இன்னும் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற அடிப்படையிலேயே சூட்சுமமாக தொழிற்படுகிறார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. அவர்களின் பிடியில் அகப்பட்டுக் கொண்ட தமிழ்மக்களை வழிநடாத்த முன்வரும் பிரமுகர்கள் எப்படி தமது நடவடிக்கைகளைத் திருப்புவார்கள் என்பது மிகப்பெரிய சந்தேகத்திற்குரிய கேள்வியாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் இன்றைய அரசியல்வாதிகள் யாராயினும் (வுNயுஇ வுடுவுநுஇ புவுகுஇ தமிழ்ப்பேரவை) தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஐயம் திரிபு இல்லாது தமிழ் மக்களின் முன் சமர்பித்தே ஆக வேண்டும். தமிழீழ கோரிக்கைக்கு குறைந்த எதையும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்கும் நிலையில் தமிழ் மக்கள் இனிமேலும் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

சில வெளிநாட்டுச் சக்திகள் தமிழீழ கோரிக்கையை இழுத்தடிக்கும் நோக்குடன்இ வேறு அரைகுறை தீர்மானங்களைத் திணித்து தமிழ் மக்களின் நிலைமையை "சமாளிப்பதற்கு" (ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட காரணத்தால்) இது ஏற்ற தருணம் என்று எண்ணலாம்.

நாடு கடந்த அரசாங்கத்தை (வுபுவுநு) அமைக்க முற்படும் குழுவினர் மேல்மட்டத்தில் நிச்சயமாக பல நல்லவிடயங்களை நிறைவேற்ற முயற்சிக்கின்றனர் என்பதனை ஒரளவிற்கு ஏற்க வேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கீழ் தமிழீழக் கொள்கையை ஆதரிப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு படியாகும்.

நாடு கடந்த அரசாங்கம் வெளியிட்ட 2010 ஜனவரி 14-ம் தேதி அறிக்கையில் 6.3.1-ஐ நோக்கின் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் பற்றி மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது போன்று அமைந்தது. "தமிழீழம் என்ற ஒரு கொள்கையில் தமிழரது எல்லா அரசியல் அபிலாசைகளும் அடங்கும்போதுஇ வெவ்வேறு சொற்பதங்களின் மூலம் வுபுவுநு தமிழ் மக்களை திசை திருப்ப முயல்கின்றதோ என ஓர் ஐயப்பாடு நிலவலாம்.

காரணம்இ வுபுவுநு இதயசுத்தியுடன் இவ்விடயத்தில் ஈடுபட்டாலும்இ வருங்கால அங்கத்தினர்கள் இத்தகைய சொற்பதங்களை திரிவுபடுத்துவதற்கு வாய்ப்பு உண்டு. அடுத்தப்படியாகஇ சர்வதேச நாடுகள் எமது தமிழீழம் பற்றிய கொள்கைகளை எம்மிடம் இருந்து பின்பற்ற வேண்டுமே ஒழிய அதற்கு எதிராகஇ அவர்களைத் திருப்தி படுத்தும் நோக்கத்துடன் நாம் ஒரு அமைப்பை உண்டாக்குவது உகந்தது அல்ல.

இதே போலஇ 6.4-ல் கூறியபடி வட-கிழக்குப் பகுதிகளில் நடைபெறும் விடயங்களில் (சுயாட்சியையும் இறைமையையும் தவிர்த்து) அங்கிருக்கும் தலைமைக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனக்கூறப்பட்டது. எனினும்இ அங்கிருக்கும் தமிழர்களின் தலைமை - தமிழீழ அரசு அமைக்கப்படாத இடத்துஇ இலங்கை அரசின் அடிவருடிகளாகவே செயற்பட நேரிடும்.

"சுயாட்சி" என சொல்லளவில் எது அமைக்கப்பட்டாலும்இ சிங்கள பௌத்த மத்திய அரசின் ஆதிக்கம் இருக்கும்வரை வடகிழக்கு மாகாணங்களில் தமிழரின் தலைமையால் தமிழர்க்குச் சாதகமான எதையும் சுயேட்சையாக செய்யும் வாய்ப்பு இருக்கமுடியாது என்பது சரித்திரரீதியாக நாம் கண்ட அனுபவமாகும்.

6.5-ல் "தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டால்......." என மொழியப்படுகிறது. இக்கூற்றுஇ தமிழீழம் அமைக்கப்படுமா? இல்லையா? என்ற ஐயப்பாட்டை தமிழ் மக்களிடையே கொண்டுவரலாம். தமிழீழமே குறிக்கோள் என இயங்கப்போகும் ஒரு அமைப்பு இத்தகைய ஐயப்பாட்டுடன் அணுகுவதுஇ தமிழரின் அரசியல் நம்பிக்கையையும்இ அவர்கள் இத்தனை காலமும் நடத்திய போராட்டத்தையும் கொச்சைபடுத்தலாம்.

6.6-ல் வெளிநாட்டுக் கொள்கை அழகாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழம் அமைத்தாலன்றி அவர்களுக்கு மற்றைய அரசாங்கங்களின் வெளிநாட்டுக் கொள்கைகளில் பங்குபற்றும் திராணி இருக்கமுடியாது. எனவேஇ தமிழீழம் மலரும் முன் இதைப்பற்றிக் குறிப்பிடுவதுஇ பொரிமாத் தோண்டி பானை உடைத்த கதை ஆகிவிடலாம்.

வுபுவுநு அரசாங்கத்தின் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்டும் முன்னரே அவர்கள் என்ன அடிப்படையில் தெரியப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். தமிழீழக் கொள்கையிலிருந்துஇ எள்ளளவும் விலகும்போதுஇ அவர்களின் அங்கத்துவ பதவி வெற்றிடமாகும் என யாப்பில் நிறுவப்பட வேண்டும்.

இன்றைய அரசியல் இலக்கணத்தில் ஈழம் என்னும் சொல்லைப்போல துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சொல்லைக் காண்பதரிது. உதாரணமாக வுநுடுழு - தமிழீழ விடுதலை இயக்கம்இ Pடுழுவு - தமிழீழ மக்களின் விடுதலை இயக்கம்இ நுPசுடுகு - ஈழமக்களின் விடுதலை முன்னனிஇ நுPனுP - ஈழமக்களின் ஜனநாயக கட்சி. மேற்கூறியவற்றுடன் (வுபுவுநு) தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் எனும் சொற்பதத்தை ஒப்பிட்டு நோக்கின் இந்த அமைப்பும் மேற்கூறியவற்றைப்போல் ஒரு துரோகக் கும்பலாகுமோ என்று சிலர் பயப்படலாம்.

இப்பயத்தைப் போக்குதல் வுபுவுநுன் தலையாய கடமையாகும். தமிழர்கள்இ "தமிழீழம்" என்ற சொல்லின் கீழ் அடைந்த ஏமாற்றமும் துரோகத்தனமும் எல்லோரும் அறிந்ததே. எனவே இத்தகைய பயங்களைப் போக்கி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறலாம் எனும் கனவு எவருக்கும் இருக்குமானால்இ தமிழீழம் ஒன்று மட்டும்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என ஆணித்தரமாக வெளிக்கொணர வேண்டும்.

வுபுவுநுஇ வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு கொடுக்கும் ஆதரவுடன் நின்றுவிடாமல் இன்னும் நம்பிக்கையூட்டும் வகையில் இத்திசையில் நகர வேண்டும். சுயாட்சியை தற்போதைய சூழ்நிலையில் ஏற்றுஇ அதன்பின் படிப்படியாக தமிழீழத்தை அடையலாம் என்ற தோரனையில் வுபுவுநு முன்வரக்கூடும். ஆனால் அப்படியொரு சூதாட்டத்தின் விளைவுகளுக்கு தமிழ் மக்கள் ஆயத்தமா? காரணம்இ சிங்கள பௌத்த ஆதிக்க வெறிப் பிடித்த எந்த இலங்கை அரசாங்கமும் மகாவம்சத்தின் போதனையை பின்பற்றுவதே ஒழிய வுபுவுநுன் போதனைகளை கேட்கும் நிலமையில் இல்லை!

மகாபாரதத்தில் துரியோதனன் கூறியதுபோல் "ஈ இருக்கும் இடமெனினும் அவர்க்கு அரசினிக் கொடேன்!" எனும் கூற்றை நாம் மறந்துவிடக்கூடாது. தற்போதைய அரசியல் வீச்சை உலக அளவிலோ அல்லது தமிழ் மக்களின் கண்ணோட்டத்திலோ நாம் தவறவிடின்இ காலம் செல்லச் செல்ல இவ்வீச்சு மழுங்கலாம். "ஆறின கஞ்சி பழங்கஞ்சி" என ஒரு பழமொழி உண்டு.

எனவே காலங் கடந்த பின் தமிழீழம் என்பது வெறும் கானல்நீர் ஆக மாறலாம். வுபுவுநு தமது கொள்கைகளை அரசியல் உலகிற்கு எடுத்துக் கூறுவதற்கேற்ற உலகிலேயே மிகப்பெரிய பலம் நிறைந்த ஒரு அமைப்பு என (தொடங்குவதற்கு முதலே!) கூறுகிறது. இத்தகைய அபார நம்பிக்கையை நாம் வரவேற்றாலும்இ தற்புகழ்ச்சியிலும் பார்க்க இத்தகைய கோட்பாட்டை வேறு யாரும் கூறினால் கூடிய மகிழ்ச்சியை தந்திருக்கும்.

வுபுவுநுன் அங்கத்தவர்கள் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்படுவது வரவேற்கப்படுவது ஒன்று. ஆனால்இ அதைவிட "குழசஅயவழைn ஊழஅஅiவைவநந" என இன்னொரு செயற்குழு (மக்களின் பங்களிப்பின்றி) அமைக்கப்படும் என அறிகிறோம். ஜனநாயக முறையில் இயங்கும் ஓரு இயக்கத்திற்கு வேறு வகையாக செயற்குழு அங்கத்தினர்களை நியமிப்பதை மக்கள் ஐயத்துடன் நோக்கலாம்.

தொடரும்.

- தமிழ்மாறன்.செ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரிந்த தமிழ் மாறன்..அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதனை தெளிவாக சொன்னால் எங்களிற்கும் புரியும்.. கட்டுரையையே தொடரும் என்று முடித்திருக்கிறாரே ..இவர் என்ன தொடர் கதை எழுதுகிறாரா??? கட்டுரை எழுதுகிறாரா???..பல இயக்கங்களை மேற் கோள் காட்டியவர் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய கடசியின் பெயரையும்..அதே நேரம்..த.வி.பு..என்கிற பெயரையும் மறந்து போனதேன்..தமிழீழம்" என்ற சொல்லின் கீழ் அடைந்த ஏமாற்றமும் துரோகத்தனமும் எல்லோரும் அறிந்ததே. எனவே இத்தகைய பயங்களைப் போக்கி தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெறலாம் எனும் கனவு எவருக்கும் இருக்குமானால்இ தமிழீழம் ஒன்று மட்டும்தான் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு என ஆணித்தரமாக வெளிக்கொணர வேண்டும். என்கிறார்..இது புலிகள் அமைப்பை குறி வைத்து எழுதுகிறாரா??புரிய வைக்கவும்..நன்றி..

Edited by sathiri

புரியாதவிடயங்கள் எங்கும் நிறைந்திருக்கின்றது. ஒருவரையும் நம்ப முடியாத காலமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழ் மக்களுக்கு மட்டும் தானே???

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழ் மக்களுக்கு மட்டும் தானே???

இப்படி அடித்து சொல்வது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை சாமியார். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடு கடந்த தமிழீழ அரசு நாடு கடந்த தமிழ் மக்களுக்கு மட்டும் தானே???

உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவை கல்லால் அடிந்த உலகம் அய்யா இது. :):D:icon_idea:

உலகம் உருண்டை என்று சொன்ன கலிலியோவை கல்லால் அடிந்த உலகம் அய்யா இது.

ஒப்பீடு உயர்வாக இருக்கின்றது.

இது வரை யாரும் கல்லால் அடிக்கவில்லை.

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்க! மேலே குறிப்பிட்ட 115 உறுப்பினர்களில் இந்தியாவில் இருந்து ஒரு உறுப்பினரையும் உள்வாங்க வில்லை, ஆதாவது அரசியல் நகர்வாக இருக்குமோ???

ஏனைய 20 உறுப்பினர்கள் இதர நாடுகளுக்காக செயல் படுவார்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது சற்று விளக்கம் தருவீங்களா???

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்க! மேலே குறிப்பிட்ட 115 உறுப்பினர்களில் இந்தியாவில் இருந்து ஒரு உறுப்பினரையும் உள்வாங்க வில்லை, ஆதாவது அரசியல் நகர்வாக இருக்குமோ???

ஏனைய 20 உறுப்பினர்கள் இதர நாடுகளுக்காக செயல் படுவார்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது சற்று விளக்கம் தருவீங்களா???

வல்வை அண்ணா,

இந்தியாவில இருந்து உறுப்பினர்களை உள்வாங்கினால், தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி, அன்பழகன், ஆற்காட்டார், வீரபாண்டி ஆறுமுகம் என்று நிறையப் பேர் தமிழீழ அவையை அலங்கரிப்பார்கள். பரவாயில்லையா? :)

ஆமாங்க! மேலே குறிப்பிட்ட 115 உறுப்பினர்களில் இந்தியாவில் இருந்து ஒரு உறுப்பினரையும் உள்வாங்க வில்லைஇ ஆதாவது அரசியல் நகர்வாக இருக்குமோ???

ஏனைய 20 உறுப்பினர்கள் இதர நாடுகளுக்காக செயல் படுவார்கள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாராவது சற்று விளக்கம் தருவீங்களா???

இவர்களுக்கெல்லாம் மேலேயும் ஒரு ஜந்து பேர் இருப்பினமாம்.

நியமனங்கள் இருபது, 115, மக்----- ல் தெரிவு செய்த பொம்மைகளா?

Edited by kalaivani

மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு: விடுதலைப் புலிகள் விளக்கம்;

http://tamilthesiyam.blogspot.com/2009/11/blog-post_08.html

பாடல்: வட்டுக்கோட்டைத் தீர்மானம் தமிழர் வாழ்வில் வெகுமானம்:

http://video.yahoo.com/watch/6351082

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.