Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனவரி 26 யாருக்கு வாக்களிப்பது?--தினக்குரல்

Featured Replies

ஜனவரி 26 யாருக்கு வாக்களிப்பது?

ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே இருக்கின்றன. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. தேர்தல் வன்செயல்களும் அதிகரித்திருக்கின்றன. ஆளும் கட்சிக் கூட்டணியும் பொது வேட்பாளரை ஆதரிக்கும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிற்கொன்று சளைக்காத விதத்தில் தேர்தல் பிரசாரங்களின் போது வாக்குறுதிகளை முன்வைக்கின்றன. இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் பொதுமக்கள் தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் நாட்கள் நெருங்கிவிட்டன. குறிப்பாகத் தமிழரும் தமிழ் பேசும் முஸ்லிம்களும் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமையுடையவர்கள் என்பதால் அவர்களது முடிவு ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டும்.

பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தலைப் போலல்லாது ஜனாதிபதி என்கிற தனி (நிர்வாகி ) மனிதனைத் தெரிவு செய்யும் தேர்தல் இதுவென்பதால் கட்சியின் கொள்கை என்ன என்பதை விடப் போட்டியிடும் தனிமனிதனின் நேர்மை, நம்பகத்தன்மை, திறமை என்பவற்றுக்கே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ஏனெனில், இந்தத் தனிமனிதன் ஜனாதிபதியானவுடன் இன்றைய அரசியலமைப்பின்படி அவருக்கு அளவிலடங்காத அதிகாரம் கிடைத்துவிடும். அவரின் கையில் எல்லையற்ற அதிகாரங்கள் இருப்பதால் பாராளுமன்றம் , அரசியலமைப்பு, உயர்நீதிமன்றம் உட்பட நீதித்துறை, மனித உரிமைகள் யாவற்றையும் தனது காலடியில் வைத்து மிதித்துவிடும் அதிகாரத்தை 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அவருக்கு வழங்கியிருப்பதால் என்ன அநியாயம் செய்தாலும் அவருக்கெதிராக வழக்கிட முடியாது. அவரின் பதவிக்காலத்தில் அவரை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது என்ற சட்டப்பாதுகாப்பு இருப்பதால் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் இலங்கை மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். குறிப்பாகத் தமிழ் பேசும் மக்கள் அதிஉச்சக் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு ஜனநாயக நாட்டில் வாக்குரிமையும் வாக்களிக்கும் உரிமையும் மிகவும் அடிப்படையானவை. வாக்குரிமையையும் வாக்களிக்கும் உரிமையையும் மறுக்கும் எந்தநாடும் எந்த அமைப்பும் சர்வாதிகார நாடாகவும் அமைப்பாகவுமே கருதப்படும். எடுத்துக்காட்டாக சில மாதங்களுக்கு முன்பு நம் நாட்டு ஆட்சியாளர்களால் செங்கம்பளம் விரித்து வரவேற்கப்பட்ட மியான்மரி (பர்மா)ன் அரசுத் தலைவர் ஒரு அப்பட்டமான சர்வாதிகாரி. உலகமே வெறுக்கும் அவரை இலங்கை செங்கம்பளம் விரித்து வரவேற்றது. நம் ஜனாதிபதியும் அங்கு (மியான்மர்) சென்று வந்தது எல்லாம் சர்வாதிகாரம் பற்றிய "டியூசன்%27 எடுப்பதற்குத்தானோ என்று தோன்றுகின்றது.

அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 2 1/2 இலட்சம் வாக்களிக்கும் உரிமையைத் தடுத்ததும் மிக அப்பட்டமான சர்வாதிகாரமே. அதன் பலனை தமிழ் மக்களும் அனுபவித்தார்கள். அப்படித் தடுத்தவர்களும் அனுபவித்தார்கள். அந்த அமைப்பினர் அடியோடு இலங்கையில் அழிந்ததும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னித் தமிழ் மக்களின் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டதும் அந்த வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாததன் விளைவுதான்.

எனவே, வாக்களிக்கும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் தனிமனிதனுக்குரிய மறுக்கப்பட முடியாத மிகவுயரிய அடிப்படை உரிமை. அதைப்பயன்படுத்த வேண்டியது அவனது தலையாய கடமை. பகிஷ்கரிப்பு என்ற போர்வையில் அதைத்தடுப்பது சர்வாதிகாரத்தின் ஜனநாயக முகமூடி. இன்னும் ஒரு சில தமிழ்த் தலைவர்கள் (என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கின்றவர்கள்) வாக்களிக்காமல் பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டுமென்று கூறிக்கொண்டிருக்கிறார்.

இனி இந்த ஜனாதிபதித் தேர்தலில் எப்படியானவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பார்ப்போம். இன்றைய தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களில் ஒருவர் ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஜனாதிபதியாக இருக்கின்றவர். மற்றவர் முதன்முறையாக அரசியல் பதவியொன்றுக்குப் போட்டியிடுகின்றார். எனவே, ஏற்கனவே, ஜனாதிபதி பதவி வகித்தவர் தனது ஆட்சிக் காலத்தின் சாதனைகளையும் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட முன்னேற்றத்தையும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன செய்வேன் என்பதையும் மக்கள் முன்வைத்து வாக்கு கேட்க வேண்டும். புதிதாகப் போட்டியிடுகின்றவர் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் என்னென்ன செய்வேன் , எப்படிச் செய்வேன் என்பதைக் கூறியே வாக்குக் கேட்க வேண்டும்.

இந்தத் தேர்தல் ஜனாதிபதி என்கிற தனிமனிதனைத் தெரிவு செய்யும் தேர்தல் என்பதால் போட்டியிடுபவரின் நேர்மை, நம்பகத்தன்மை, திறமை என்பவற்றைப் பார்க்க வேண்டும். ஜனாதிபதி பதவிவகித்துக்கொண்டே இரண்டாவது தடவைக்கும் போட்டியிடும் மகிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தளவில் அவர் அரசியல் பின்னணியோடு அரசியலுக்கு வந்தவர். 40 ஆண்டுகால அரசியல் அனுபவமிக்கவர். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவை 20 ஆம் நூற்றாண்டின் நரி (கூதீஞுணtடிஞுtட இஞுணtதணூதூ ஊணிது) என்பார்கள். மகிந்த ராஜபக்ஷவை 21 ஆம் நூற்றாண்டு நரி எனலாம். அவர் சர்வாதிகாரத்தை ஜனநாயக முறையில் கொண்டு சென்றார். எதனையும் சட்டவரம்பிற்குட்பட்டே செய்தார். இவர் மகிந்தவோ ஜனநாயகத்தை சர்வாதிகார முறையில் நடத்திச் செல்கின்றார். எனவே, இவரது செயல்களில் சட்டத்துக்கு முக்கியத்துவம் இல்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு நாட்டில் யாவரும் தலைவணங்க வேண்டும். இவர் அதன் தீர்ப்புகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

தனது சுயநலத்திற்காக தனது சர்வாதிகாரப் போக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அரசியலமைப்பை மீறிச் செயற்படுகின்றார். அரசியலமைப்பைப் பாதுகாப்பதாக உறுதிகூறி சத்தியம் செய்து ஜனாதிபதி பதவியேற்ற இவர் அந்த அரசியலமைப்பை மீறிச் செயல்படுகின்றார். அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தாமல் தடுத்துவைத்திருக்கின்றார். இதனால், அரசியலமைப்புச்சபை இயங்கவில்லை. அரசியலமைப்புச்சபை இயங்காததினால் தேர்தல் ஆணைக்குழு , பொதுச்சேவை ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்சம் மற்றும் ஊழல் முறைப்பாடுகளைப் புலனாய்வு செய்யும் நிரந்தர ஆணைக்குழு, நிதி ஆணைக்குழு மற்றும் தொகுதி நிர்ணய ஆணைக்குழு ஆகியவற்றை நியமிக்க முடியவில்லை. இதனால், எந்தவித முறையும் ஒழுக்கமும் நியதியும் இல்லாமல் தம்மனம்போன போக்கில் (அரச) நியமனங்கள் வழங்கப்படுகின்றன. தகுதியும் தராதரமும் உள்ளவர்கள் பின் தள்ளப்படுகின்றனர். அவையற்றோருக்கு பதவியும் பதவியுயர்வும் வழங்கப்படுகின்றன.

அவர் தனது திறமையை எதிர்க்கட்சிகளை உடைத்துத் துவசம் செய்வதற்கு மிகச் சாதுரியமாகப் பயன்படுத்தியிருக்கிறார். இவரால் உடைக்கப்படாத எதிர்க்கட்சிகளே இல்லை எனலாம். ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் உடைத்திருக்கின்றார். உடைக்கப்பட்ட அத்தனை எதிர்க்கட்சிகளிலிருந்து வந்த அத்தனை எம்.பி.மாருக்கும் அமைச்சர் பதவிகள் கொடுத்துள்ளார். இதனால், 120 வரையிலான அமைச்சர்களும் அவர்களின் பரிவாரங்களும் சம்பளம் மற்றும் அலவன்ஸ் என்ற முறையில் கோடிக்கணக்கான ரூபா மக்களின் வரிப்பணத்தை மாதாமாதம் சூறையாடி வருகின்றனர்.

அலரிமாளிகை பிரதமரின் உத்தியோகபூர்வ இருப்பிடம். சந்திரிகா குமாரதுங்கவைப் பின்பற்றி மகிந்தவும் அதை தனது இருப்பிடமாக்கிக் கொண்டார். ஜனாதிபதியைச் சந்திப்பதற்கென்று பலதரப்பட்ட மக்கள் நாளாந்தம் வருவதுண்டு. அவர்களுக்கு சிற்றுண்டி வழங்க வேண்டிய பொறுப்பு அலரிமாளிகை நிர்வாகத்தினரின் பொறுப்பு. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட நவம்பர் 23 ஆம் திகதிக்குப் பின்னர் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அலரிமாளிகைக்கு அழைத்துக் கொண்டு அல்லது இழுத்துக்கொண்டு வரப்படுகின்றனர். இவர்களுக்கு உணவு, சிற்றுண்டி மற்றும் மேல் தட்டு வர்க்கத்தினருக்கு சூடான பானம் மற்றும் இதர செலவுகளுக்கு தினமும் மில்லியன் கணக்கான ரூபா மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவு செய்யப்படுகின்றது. இந்தப் பணம் ஜனாதிபதியின் சொந்தப்பணத்திலிருந்து கட்சிப் பணத்திலிருந்து அல்லது ஆதரவாளர்களின் நன்கொடையிலிருந்து பெறப்பட்டவையல்ல என்பதை அங்கு சென்று உண்டு, குடித்து வந்தவர்கள் மட்டுமல்லாது நாட்டுமக்கள் எல்லோரும் நன்கறிவார்கள்.

மகிந்த ராஜபக்ஷ 40 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ளவர் என்றும் அரசியல் ஞானி என்றும் பெருமையாகக் கூறுகிறார்கள். ஆனால், அவருக்கு 40 க்கும் மேற்பட்ட ஆலோசகர்களும் 120 வரையிலான அமைச்சர்களும் இருக்கின்றார்கள். இந்த அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பல ஆலோசகர்கள். இவர்களுக்கெல்லாம் கோடிக்கணக்கான ரூபா மாதாந்தம் சம்பளத்துக்காகவும் இதர செலவுகளுக்காகவும் மக்களின் வரிப் பணத்திலிருந்து செலவு செய்யப்படுகின்றது. 40 ஆண்டுகால அரசியல் அனுபவமுள்ளவருக்கு 40 க்கும் மேற்பட்ட ஆலோசகர்கள் எதற்கு?

அரசாங்கத்தின் நிர்வாக சேவை உயர்பதவிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை (குஃஅகு) யைச் சேர்ந்தவர்கள்தான் நியமிக்கப்படல் வேண்டும். அவர்கள் அரசியலில் ஈடுபடமுடியாது. ஆனால், மகிந்த தனது நிறைவேற்று அதிகார சர்வாதிகார பலத்தினைப் பயன்படுத்தி ஓர் அமெரிக்கரை மிகவும் பொறுப்பும் இரகசியத் தன்மையும் நிறைந்த இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் அமர்த்தியிருக்கிறார். இவர் அரச ஊழியராகவன்றி அரசியல்வாதியாகவே செயல்படுகின்றார். தாராளமாக ஜனாதிபதியின் தேர்தல் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார். மற்றொரு அமெரிக்கருக்கு தனது சிரேஷ்ட ஆலோசகர் பதவியும் அக்கரைப்பற்று முஸ்லிம்களுக்குரிய தேசிய பட்டியல் எம்.பி.(அன்வர் இஸ்மாயிலின் காலியான இடத்திற்கு) பதவியையும் கொடுத்திருக்கின்றார். இன்னொரு அமெரிக்கருக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியைக் கொடுத்துள்ளார். மகிந்த கோஷ்டியினர் தம்மை நாட்டை நேசிப்போர் என்று பறையடித்துக் கொள்வார்கள். ஆனால், நாட்டை நேசிக்கும் அவர்கள் அமெரிக்கர்களுக்கு அரச பதவிகளைக் கொடுத்து நாட்டைக் காட்டிக்கொடுத்திருப்பதை பொதுமக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

மகிந்த ஜனாதிபதி பதவிக்கு 2005 இல் வந்ததைத் தொடர்ந்து அரசின் செலவில் தனது பெயரில் மிகின் எயார் என்ற ஒரு விமான சேவையை ஆரம்பித்து நூற்றுக்கணக்கான தனது பரிவாரங்களுடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு அந்த விமான சேவையை நட்டத்தில் மூழ்கடித்து, அதை மூடி மீண்டும் அதனை இயங்க வைப்பதற்கு பில்லியன் கணக்கான ரூபா அரச நிதியை நாசமாக்கிச் சாதனை புரிந்துள்ளார்.

முதல் முறை போட்டியிட்ட போது வெளியிட்ட அவரது தேர்தல் அறிக்கையான மகிந்த சிந்தனையில் குறிப்பிட்டவற்றில் 94% வீதத்தை நிறைவேற்றிவிட்டதாகவும், இன்னும் 6 வீதமே நிறைவேற்ற வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றார். ஆனால், எதுவுமே நடைபெற்றதாகவும் தெரியவில்லை. நாட்டு மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகள் 2005 ஆம் ஆண்டை விட மோசமான நிலையிலேயே இன்று இருக்கிறது. அவர் உண்மையில் 94% வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், மகிந்த சிந்தனையை மறுபதிப்பு செய்து இப்போது வெளியிட வேண்டியதில்லை. புதிய வாக்குறுதிகளையும், வேலைத் திட்டங்களையும் கொண்ட புதிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆனால், முதலாம் தரத்தில் சித்தியடையாத பிள்ளை அடுத்த வருடமும் முதலாம் தரத்தில் அதே பாடநூலை படிப்பது போல் மகிந்த சிந்தனை மீண்டும் புதிய பதிப்பாக வெளிவந்திருக்கின்றது. மேலும் நான்கு வருடத்தில் 94% வாக்குறுதிகளையும், வேலைத் திட்டத்தையும் நிறைவேற்றிய மகிந்த எஞ்சிய 06 வீதத்தை நிறைவேற்ற புதிய தேர்தலுக்குச் செல்ல வேண்டியதில்லை. எஞ்சியுள்ள இரண்டு வருட காலத்தில் அந்த எஞ்சிய 06% தையும் நிறைவேற்றிவிட்டு 2011 இல் தேர்தலுக்குச் சென்றிருக்கலாம். இந்த தேர்தலுக்காக இவ்வாண்டு செலவிடப்படும் 200 கோடி ரூபாவுக்கு மேற்பட்ட மக்களின் வரிப்பணத்தை 2011 நவம்பர் வரை சேமித்திருக்கலாம்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் பிரபாகரனுடன் பேசி மூன்று மாதங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பேன் என்று கூறினார் அன்று. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று கூறினார். போர் தொடர்ந்து நடத்தப்படும் என்று கூறவில்லை. ஆனால், ஆட்சிக்கு வந்தபின் அவர் செய்தது கடமைக்காக இரண்டொரு முறை புலிகளோடு பேச்சுவார்த்தை நடத்துவதாகப் பாவனை காட்டியது மட்டுமே. அதனைத் தொடர்ந்து போரைத் தீவிரப்படுத்தி புலிகளை அழித்தொழித்தார். இலட்சக் கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் மூன்று இலட்சம் தமிழர்களை வன்னியில் அகதிகளாகச் சிறையில் அடைத்தார். திறந்த வெளிச் சிறைகளில் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி பல மாதங்கள் அவர்கள் சொல்லொணாத கஷ்டங்களை அனுபவித்தனர்.

தற்போது ஜனாதிபதித் தேர்தல் அண்மிப்பதால் ஆடு, மாடுகளை அவிழ்த்துவிடுவது போல் அத் திறந்த வெளிச் சிறைச்சாலையிலிருந்து அவர்களில் பாதிக்கு மேற்பட்டோரை வெளியில் விட்டுள்ளார். 2500 ஆண்டுகளுக்கு மேலான இலங்கைத் தமிழரின் வரலாற்றில் மகிந்தவின் இந்த ஆட்சியில்தான் தமிழன் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தான். உண்மையில்நாடு முழுதும் தமிழனின் பாதுகாப்பையும், நடமாடும் சுதந்திரத்தையும் கட்டுப்படுத்தி அவனது உயிர்வாழும் உரிமையைக் கேள்விக்குட்படுத்தினார். முதலாவது பதவிக்காலத்திலேயே நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் என்று மகிந்த சிந்தனையில் வாக்குறுதியளித்தார். ஆனால், அதைச் செய்யாமல் அதே நிறைவேற்று ஜனாதிபதி பதவிக்காக வாக்கு கேட்கின்றார். இனப் பிரச்சினையை மூன்று மாதங்களுக்குள் முடிப்பேன் என்றவர்,ஐந்து ஆண்டுகள் ஆகியும் அதற்காக எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. புலிகள்தான் இனப்பிரச்சினை, புலிகள் அழிந்ததால் இனப்பிரச்சினையும் ஒழிந்துவிட்டது என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது.

ஜனநாயக ஆட்சிமுறை நடைபெறும் நாடுகளில் பல கட்சிகள் காணப்படும்.ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இருக்கும். அவைகள் யாவுமே தம்மனதில் தேச பக்த கட்சிகள். தேச விரோத கட்சிகள் ஜனநாயக நாடுகளில் இருப்பதில்லை. ஆனால், இலங்கையில் மட்டும் ஆளும் கட்சியும் அதனை ஆதரிப்பவர்களும் தேச பக்தர்கள் என்றும், எதிர்க்கட்சிகளும், அவற்றைச் சார்ந்தவர்களும் சேர்ந்தவர்களும் தேச விரோதிகள் என்றும் மகிந்தவின் ஆளுங் கட்சியினர் கூறிக்கொண்டு திரிகின்றனர்.

தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய ஆகியன தீவிர சிங்கள பௌத்த இனவாத கட்சிகள். இவற்றை அரவணைத்துக் கொண்டு இவர்களின் தயவில் ஆட்சிபுரிந்து கொண்டிருக்கின்றார் இவர். தமிழுக்கும்,தமிழ் மொழி பேசுவோருக்கும் இந்து, இஸ்லாமிய,கிறிஸ்தவ மக்களுக்கும் எதிராக மிகப் பெரியளவிலான இனவாத கருத்துக்களிலும் செயல்களிலும் ஈடுபட்டிருக்கும் ஹெல உறுமயவை மடியில் வைத்துத் தாலாட்டிக் கொண்டிருக்கும் மகிந்த, தமிழ் பேசுவோரினதும் சிறுபான்மைச் சமயத்தினரதும் பிரச்சினையைத் தீர்பார் என்று நம்ப முடியாது.

ஜே.ஆர்.ஜயவர்தன தமது ஆட்சிக் காலத்தில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் திகதியிடப்படாத இராஜினாமா கடிதங்களை வாங்கி வைத்துக் கொண்டார். தமக்குச் சற்று ஏறு மாறாகச் சென்றால் உடனடியாக அவர்களுக்கு பதவி விலக்கு. இவரும் அதேமாதிரி தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கைகள், ஊழல், மோசடி, குற்றச் செயல் போன்ற யாவும் அடங்கிய கோப்புகளை ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியாகப் பேணி வருகின்றார். அவர்களில் யாராவது தமக்கு எதிராக கிளம்பினால் கோப்பை முன்வைத்து விடுவார். இதனாலேயே யாவரும் மௌனியாக இருக்கின்றனர்.

எதிரணியின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை எடுத்துக் கொண்டால் அவரது திறமை, நேர்மை, நம்பகத்தன்மை என்பவற்றை அவரது அரசியல் வாழ்வு 40 நாட்கள் மட்டுமே என்பதால் அதிலிருந்து ஒரு முடிவுக்கு வர முடியாது.ஆனால், அவர் 40 ஆண்டுகள் அரச சேவையில், அதுவும் இராணுவ சேவையில் பணியாற்றி மிகுந்த உயரிய பதவி வகித்து இளைப்பாறியவராவார். அவர் இளைப்பாறும் வரை அவரது திறமை,நேர்மை,நம்பகத்தன்மை என்பன கேள்விக்குட்படுத்தப்படவில்லை. எனவே, அவரது அரசியல் எப்படியிருக்கும் என்பதை அவரது அரச சேவையின் குணாதிசயங்களைக் கொண்டு தான் முடிவெடுக்க வேண்டும்.

அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் தனக்குத் தேவையான அரசியல் ஆலோசகர்களை நியமித்துக் கொள்ளலாம். ஏனெனில், 40 ஆண்டுகள் அரசியல் அநுபவம் கொண்ட மகிந்த ராஜபக்ஷ 40 அரசியல் ஆலோசகர்களை நியமித்துக் கொண்டிருக்கும் போது 120 அமைச்சர்களைக் கொண்டிருக்கும் போது, ஜெனரல் சரத் பொன்சேகா தமது ஆலோசகர்களாக வேண்டியளவு அறிவாளிகளை நியமித்துக் கொள்ளலாம். திறமையிலான அமைச்சரவையை அமைத்துக் கொள்ளலாம்.

ஜெனரல் பொன்சேகா அரசியல் செய்யாவிட்டாலும் அரசியல் மணத்தை நுகர்ந்திருக்க மாட்டார் என்று சொல்லமுடியாது. ஒவ்வொருவரும் சொந்த அனுபவம் மூலமே குறிப்பிட்ட துறையில் தேர்ச்சியடையலாம் என்று கூறமுடியாது. மற்றவர்களின் அனுபவங்களிலிருந்தும் பாடம் படிக்கலாம். அவர் அரசியலுக்குப் புதியவர் என்பதால் கறைபடியாத அரசியல் வாதியாக தென்படுகின்றார்.

சொன்னதைச் செய்பவர், செய்வதைச் சொல்பவர் என்பதை நடைமுறையில் நிரூபித்திருக்கின்றார். அவர்தான் யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தவர் என்பதற்கு யுத்தம் முடிவுக்குப் பின்னரான நாட்களில் அவருக்கு மகிந்தவும் அவரது அரசாங்கமும்,தெற்கு மக்களும் கொடுத்த வரவேற்பும்,பாராட்டுகளும்,புகழுரைகளும் சான்று பகரும்.

கனேடிய பத்திரிகைக்கு தான் இராணுவத் தளபதியாக இருந்தபோது கொடுத்த ஒரு பேட்டியை வைத்துக் கொண்டு,ஜெனரல் பொன்சேகா தமிழருக்கு விரோதமானவர் என்று காட்ட அரசும் அதனைச் சார்ந்தவர்களும் முனைகின்றனர். ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்றவற்றின் தமிழ்த் துவேசத்தோடு ஒப்பிடுகையில் அவரின் கூற்று பொருட்படுத்தக் கூடியதல்ல. அப்படியே அவர் கொடுத்த பேட்டி தவறானதென்றால், தமிழர் துவேசம் நிறைந்ததென்றால்,ஜனாதிபதியும்,அவரது அரசும் அப்போதே ஏன் அவரைக் கண்டிக்கவில்லை, தண்டிக்கவில்லை. அவரின் கருத்தை அப்போது ஏற்றுக் கொண்டிருந்தார்கள் என்றுதானே கொள்ள வேண்டும்.

அவர் மருமகனோடு சேர்ந்து முறையற்ற ஆயுதக் கொள்வனவு செய்தார் என்றால் அப்போதே அவர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.அது இப்போது தான் அரசுக்கு தெரிய வந்தது என்றால், அரசின் பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வுப் பிரிவு என்ன செய்து கொண்டிருந்தது.பாதுகாப்புச் செயலாளர் அமெரிக்கர் என்பதால் தேசப்பற்று அற்று இருந்தார்கள் என்று கொள்ளலாமா?

ஜெனரல் பொன்சேகா அரசியலுக்குப் புதியவர் என்றாலும், என்றுமே இணைய முடியாதிருந்த ஐ.தே.மு., ம.வி.மு., த.தே.கூ. போன்ற பெரிய கட்சிகளை ஓரணியில் கொண்டு வந்திருக்கிறாரே.அதுவே அவரின் பெரிய அரசியல் வெற்றியல்லவா? தமிழ் வாக்காளர்களே குறிப்பாக மலையகத் தமிழ் வாக்காளர்களே சிந்தித்து முடிவெடுங்கள்.

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=762

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனவரி 26 யாருக்கு வாக்களிப்பது?

அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 2 1/2 இலட்சம் வாக்களிக்கும் உரிமையைத் தடுத்ததும் மிக அப்பட்டமான சர்வாதிகாரமே. அதன் பலனை தமிழ் மக்களும் அனுபவித்தார்கள். அப்படித் தடுத்தவர்களும் அனுபவித்தார்கள். அந்த அமைப்பினர் அடியோடு இலங்கையில் அழிந்ததும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன்னித் தமிழ் மக்களின் உயிர்கள் பலிகொடுக்கப்பட்டதும் அந்த வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்தாததன் விளைவுதான்.

எனவே, வாக்களிக்கும் உரிமை ஒரு ஜனநாயக நாட்டில் தனிமனிதனுக்குரிய மறுக்கப்பட முடியாத மிகவுயரிய அடிப்படை உரிமை. அதைப்பயன்படுத்த வேண்டியது அவனது தலையாய கடமை. பகிஷ்கரிப்பு என்ற போர்வையில் அதைத்தடுப்பது சர்வாதிகாரத்தின் ஜனநாயக முகமூடி. இன்னும் ஒரு சில தமிழ்த் தலைவர்கள் (என்று தம்மைத்தாமே அழைத்துக்கொள்கின்றவர்கள்) வாக்களிக்காமல் பகிஷ்கரிப்புச் செய்ய வேண்டுமென்று கூறிக்கொண்டிருக்கிறார்.

http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=762

இதுபோல ஒரு தமிழ் பத்திரிகை - தாயகம், தன்னாட்சி , தேசியம் பேசுகிற அதற்கு சார்பாய்யிருக்கிற பத்திரிகை - சொல்லியதை பார்த்ததில்லை.

நாங்கள் எங்கே அவர்கள் எங்கே...எங்களின் விவாதங்கள் எங்கே...எங்கேயோ தவறு நிகழ்கிறது...மாதவன் நளதமயந்தியில சொன்னமாதிரி 6000 மைல் தூரம் 100 (?) வருட காலச்சார வித்தியாசம்...

கீறல் விழுந்த தட்டுமாதிரி சிங்களவனின் பிரச்சாரம் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று சொல்லாமல்...உண்மையான காரணங்களை தேடிப்பார்ப்போம்...யாரையும் குறை சொல்லவல்ல மனதில பட்டத்தை சொன்னேன்.

எனக்கு ஒரு சந்தேகம்...

தமிழர்களுக்கு இயல்பாகவே குடை ஆலவட்டம் பிடிக்கும் குணம் இருந்ததா...? அல்லது இடையில் வந்ததா?

இடையில் வந்ததென்றால் எப்போது? முள்ளிய வாய்க்காளுக்குப்பிறகா?

சூறாவளி !

தமிழனின் பரம்பரைக் குணத்தை இப்படி முள்ளிவாய்க்காலில் இருந்து ஆரம்பிக்கக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.