Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியரசு அதிபர் தேர்தல் 2010: ஈழத்தில் தமிழர் அளித்த வாக்குகள் புலம்பெயர்ந்த தமிழருக்கு தந்த செய்தி

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளனான தீர்வையே தமிழரின் இனப் பிரச்சினைக்கான பரிகாரமாக வெளிப்படுத்தியுள்ள கால கட்டத்தில் நடந்துள்ள 2010 ஆம் ஆண்டின் குடியரசு அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று.

ஈழம் வாழ் தமிழ் மக்களோடு மக்களாக இருந்து உயிரைப் பணயம் வைத்து இது நாள் வரையும், இப்போதும் அரசியல் நடத்தும் இக் கட்சிகளே அங்கேயுள்ள மக்களின் குரலாக இருக்கின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன மகிந்தவிற்கு ஆதரவளிக்க பெரிய எதிர்பார்ப்போடு நடந்த தேர்தல் 'சப்' என்ற முடிவைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது.

எதிர்பார்ப்பை மீறி மகிந்த வெற்றி பெற்றிருப்பது இனி தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

முக்கியமாக சிங்கள மயமாக்கல் என்பதை முதன்மைப்படுத்திவரும் மகிந்தவின் அரசுடன் நட்புறவு ரீதியற்ற நிலையிலிருந்து பேரம் பேச வேண்டிய இக்கட்டுக்குத் தள்ளி விட்டிருப்பதோடு, இதுவரை நாளும் உதிரிக் குழுக்கள் என்ற போர்வையில் பார்க்கப்பட்ட டக்ளஸ், கருணா, சித்தார்த்தன், பிள்ளையான் போன்றோரை இனி அவ்வாறு பார்க்க முடியாத நிலையை, அரச தரப்பாக ஏற்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி நிற்கிறது.

தமிழர்கள் சம தரப்பாக ஒப்பாரும் மிக்காரும் இல்லாதிருந்த அன்றைய நிலையில் இன்றைய தமிழ்க்கட்சிகள் எதுவுமே இல்லை.

எங்குமே உட்கட்சி மோதல்களும், தலைமைக்குக் கட்டுப்படாத நிலையும் தோன்றப் பெற்று ஒரு அவல நிலை அரசியலைச் செய்யும் நிலைக்கு இந்தக் கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.

அவர்களிற்கு இது தவிர வேறு வழியேதுமில்லை என்ற வகையிலும் அவர்களை “ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வு” என்ற ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து மக்களின் விடிவிற்கு வழி வகுக்க எண்ண வைத்திருக்கலாம்.

இருந்த போதும் மகிந்த தனது பதவிக் காலத்தில் உதாசீனப்படுத்த முடியாத அளவிற்கு, தமிழ்த் தேசியக் கூட்டணிக்குப் பலமுள்ளது என்பதை இந்தத் தேர்தல் காட்டி நிற்கிறது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம், அதன் செல்வாக்கு மக்களிடம் அதிகம் உள்ளது என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த மகிந்த தரப்பு அதற்காக தேர்தல் தினத்தன்று காலை பயன்படுத்திய அடக்குமுறை மற்றும் பயமூட்டல் நடவடிக்கைகள் இதற்குச் சான்று பகரும்.

வடக்குக் கிழக்குப் பகுதியெங்கும் இந்நடவடிக்கை பரவலாக நடைபெற்றாலும் யாழ் குடாவை எடுத்துக் கொண்டால், 21 கையெறி குண்டுகள் காலையிலேயே வீசப்பட்டு குடாநாட்டை முடங்க வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட, உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட, விடுதலைப் புலிகள் என்ற பெயரில் புறக்கணிக்க கோரி சுவரொட்டிகள் ஒட்டப்படவென அரசே இத்தைகய நடவடிக்கையில் ஈடுபடக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமே மக்கள் இருக்கிறார்கள் என்பதால் தான்.

எனவே வடக்குக் கிழக்கு மக்கள் இவ்வாறு பயப்படுத்தப்பட்டாலும், முடங்க வைக்கப்பட அரசே நடவடிக்கை எடுத்திருந்தாலும், இவ்வளவிற்கு மத்தியிலும் மக்கள் பிற்பகல் பொழுதில் வாக்களிக்கச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

அதாவது இவ்வாறான பயமுறுத்தல்கள் இல்லாதிருந்தால் நிச்சயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலம் இந்தத் தேர்தலில் பகிரங்கப்படுத்தப்பட்டிருக்கும்.

“ஒன்றுபட்ட இலங்கைக்குள்” தீர்வு என்பதை ஏற்ற பின்பு கூட அரசாங்கம் அதற்கு பயப்படுவதற்கான காரணம் யாதெனில் மக்கள் பலமே.

இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து தமிழீழத்திற்கான வாக்குகளிற்கான தேர்தலில் நின்ற சிவாஜிலிங்கம் வெறும் 9,000 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது மக்களின் மாற்றத்தையேற்கும் மனப்பான்மையைக் காட்டி நிற்கிறது.

ஏனென்றால் சிவாஜிலிங்கம் தன்னைத் தமிழ்த் தேசியவாதி என்பதிலும் மேலான ஒருவராக இந்தத் தேர்தலின் போது காட்டியிருந்தார்.

அவர் துணிவோடு தமிழ் மக்களிற்கான ஒரு மிகப்பெரும் காரியமாக அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் உடலத்தைப் பொறுப்பேற்று மரணச் சடங்கை நடத்தியது எந்த வகையிலும் களங்கம் கற்பிக்க முடியாத ஒரு மிகவும் அளப்பரிய செயல்.

அதே போல போர்க் காலத்தில் தமிழகத்தில் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய குரலாக அவர் அங்கேயே நின்று பலமாத காலமாக தமிழக அரசியல்வாதிகளிடையே உணர்ச்சியூட்டல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு தன்னாலான பங்களிப்பை இந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் வழங்கினார்.

அதற்கும் மேலாக திரு. பழ நெடுமாறனால் கூட்டப்பட்ட தமிழர் மாநாட்டிற்குக் கலந்து கொள்ளச் சென்ற சமயம் இந்தியாவே அவரை திருப்பி அனுப்பும் அளவிற்கு அவரது தமிழீழம் சார்ந்த செயற்பாடுகள் அமைந்திருந்தன.

அவ்வாறான ஒருவர் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்து, தனது தலைமையுடன் முரண்பட்டு போட்டியிட்ட இந்தத் தேர்தலில் இலங்கை வாழ் தமிழர்களிடமிருந்து பெற்ற வாக்குகள் 9,000 என்பது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைப் படம் போட்டுக் காட்டுகிறது.

குறிப்பாக புலம்பெயர்ந்த மண்ணிலே இருந்து கொண்டு நாங்கள் நினைப்பதற்கும், அங்கேயுள்ள சமகால நிலைமைக்கும் இடையே ஒரு பாரிய இடைவெளி நிரந்தரமாக விழுந்துள்ளதையே இந்த வாக்கு வீதம் காட்டுகிறது.

அது எமக்கு இன்னுமொரு பாடத்தையும் கற்பிக்கிறது என்று கூடச் சொல்லலாம்.

அதாவது இரு இனங்களும் இலங்கையில் பிரிந்து வாழுதல் என்ற நிலைக்கான புற யதார்த்தம் அற்ற நிலமாக வடக்கு கிழக்கு மாறி விட்டது என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஏற்க வேண்டிய கட்டாயத்தை அது ஏற்படுத்தி நிற்கிறது.

தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்று தேவை. அது அவர்களின் அபிலாசைகளான - தாயகம், தன்னாட்சி உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை.

இருப்பினும் - அது ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளே சாத்தியமாக்கப்பட வேண்டிய தேவையே இப்போது அவசரமாக எழுந்திருக்கிறது.

போரின் பின்னான இக் கால கட்டத்தில் இனி நடைபெறப் போகும் அடுத்த நிகழ்வொன்றை நாங்கள் எங்களின் வசதிக்காக மறந்து போய் இருக்கிறோம்.

தற்போது சிறிலங்காவின் படைகளில் உள்ள 200,000 பேரும் இனிவரும் காலங்களில் எவ்வாறு பயன்படுத்தப்படப் போகிறார்கள் என்பதே அது.

இன்றைய பொழுது வரை படை முகாம்களில் இருந்து கொண்டு விடுமுறைக்கு வீடு சென்று திரும்பும் இந்த படையினர் இனி போரற்ற சூழலில் அவ்வாறு பேணப்பட முடியாத நிலை உருவாகும்.

அதை விட இப் படையினர் இனி கட்டுமான, அபிவிருத்திப் பணிகளிற்கு ஈடுபடுத்தப்பட்டாலே அவர்களிற்கு தொடர்ந்தும் ஊதியம் கொடுக்கக்கூடிய வருவாயை சிறிலங்கா பேண முடியும்.

போரின் போதான வரவு-செலவுத் திட்டத்தை அது இனி கொண்டு செல்ல முடியாது. அதற்கு வேறு மாற்று வழி இல்லை.

எனவே இந்த இராணுவத்தினர் இனி முகாம்கள், தளங்கள் என்றில்லாமல்; இராணுவ நகரங்களிற்குள் குடும்பத்துடன் குடியமர்த்தப்படப் போகிறார்கள்.

அவர்கள் முகாம்களில் தங்குவற்குப் பதிலாக இனிக் குடும்பங்களுடன் வீடுகளில் தங்குவதற்கு ஏதுவாக இந்த இராணுவ நகரங்கள் வெளியார் செல்ல முடியாத வகையில் அமையும்.

அவற்றிற்குள் அவர்களிற்கான பாடசாலை, விகாரை, கடை என சகல இத்தியாதிகளுமே அமையப் பெறும்.

கிளிநொச்சி, மாங்குளம், புளியங்குளம், பலாலி, மன்னார், பூநகரி, முல்லைத்தீவு, பளை, காங்கேசன்துறை, ஊர்காவற்துறை என இவ்வாறான இராணுவ நகரங்கள் தோற்றம் பெறப் போவதும், இதுவரை சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட படையினர் இனி துறைமுக செப்பனிடுதல், புகையிரதப் பாதை அமைத்தல், வீதி திருத்துதல் முதல் சகல கட்டுமானப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவர்.

இவ்வாறு அபிவிருத்திக்கெனக் கிடைக்கப் பெறும் நிதியிலேயே அவர்களின் வாழ்க்கை இனியொரு பத்தாண்டுகளிற்கு கொண்டு செல்லப்படும் என்பதையே தற்போது அங்கிருந்து வரும் செய்திகள் காட்டுகின்றன.

இப்படி இந்த இராணுவ நகரங்கள் அமையப் பெற்ற பின்பு அந்த இடங்களில் தமிழரின் மீள்குடியேற்றம், தமிழர் தாயகத்தை விட்டு இராணுவத்தை விரட்டல் போன்ற செயற்பாடுகளிற்கான வேலைத் திட்டம் கனவில் மாத்திரமே நடக்கக்கூடிய ஒன்றாகும்.

இனிவரும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளிற்குள்ளாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த ஒரு தீர்வுக்கான நிர்ப்பந்தத்தை அந்த மண்ணில் கொடுக்க, அதற்கான குரலாக நாங்கள் பன்னாட்டு சமூகத்திற்கு அழுத்தம் கொடுத்து, இராஜதந்திர ரீதியில், ஏற்கப்படக் கூடிய வகையில் எங்கள் குரலை இங்கே ஒலித்தால் மாத்திரமே நல்லதொரு தீர்வு சாத்தியம்.

அல்லது இந்தத் தேர்தல் ஈழ மண்ணிற்கும் புலம்பெயர்ந்த மண்ணிற்குமான இடைவெளி நிரந்தரமாக விழுந்த தேர்தலாக வரலாற்றில் எழுதப்பட்டுவிடும்.

- புதினப்பலகைக்காக வண்ணன் குகேந்திரா

www.puthinappalakai.com

புலம்பெயந்தவர்களின் உட்பட வந்த செய்திகள் எல்லாம் மகிந்த தோத்து போய் விடுவான் என்பதில் மகிந்தவுக்கே நம்பிக்கை வந்துவிடும் அளவுக்கு இருந்து இருக்கிறது...

மகிந்தவின் வெற்றியின் வித்தியாசம் 18 லட்ச்சம் வாக்குகள்... கிட்டத்தட்ட தமிழர்கள் சிலர் வாக்களித்த பின்னரும் கூட முழுமையான தமிழர்கள் வாக்களித்து இருந்தாலும் சரத்தை வெற்றி பெற வைத்து இருக்க முடியாது எனும் வித்தியாசத்தில் இருந்து இருக்கிறது...

இதில் மகிந்த தனது வெற்றியில் நம்பிக்கை இல்லாது தமிழர்களை வாக்களிக்க விடாது தடுக்க முயன்றான் என்பதையும் ஒத்துக்கொள்ள முடியும்... அதன் காரணம் என்ன...?? வடக்கு கிழக்கில் தனது ஆதரவு தமிழ் குழுக்களுக்கு இல்லை என்பதா..?? அல்லது தமிழர்களின் எதிர்ப்பு தன்மீது இருக்கிறது என்பதாலா...?? அல்லது இந்தக்கட்டுரை சொல்லும் காரணமான தமிழ் தேசிய கூட்டமைப்பு கையைக்காட்டும் இடத்தில் தமிழர்கள் வாக்கு போடுவார்கள் எண்று நம்பியதாலா...?? அப்படியான நிலையிலா மக்கள் இருக்கிறார்கள்...??

Edited by தயா

  • தொடங்கியவர்

வண்ணன் குகேந்திராவின் அரசியல் கட்டுரை ஒரே நேரத்தில் விவாதத்துக்கு பல களங்களை திறந்து விட்டாலும், அவரது கட்டுரையின் மையப்புள்ளி கீழுள்ள வரிகளுக்குள்தான் இருப்புக்கொள்கிறது.

`` .. (கூட்டமைபினருக்கு) அவர்களிற்கு இது தவிர வேறு வழியேதுமில்லை என்ற வகையிலும் அவர்களை “ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வு” என்ற ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து மக்களின் விடிவிற்கு வழி வகுக்க எண்ண வைத்திருக்கலாம்``

அதாவது, தமிழீழம் எனும் தனிநாடு தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம் அற்றது என்பதை கட்டுரையாளர் துணிந்து முன்வைத்துள்ளார்.

ஆக, நோய் இனங்காணப்பட்டு விட்டது.

மருந்தைத் தேடுவது இனி இலகுவான விடயமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் உட்கருத்து மக்கள் தாமாகத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.குண்டுகளை வீசியதாலும் தவறான துண்டுப்பிரசுர விநியோகங்களாலும் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லையே ஒழிய மக்கள் தாங்களாகத் தேர்தலைப் பறக்கணிக்கவில்லை என நிறுவதலாகும்.அதைவிட மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிவாஜிலிங்கத்தை உச்சநிலையில் வைத்துப் புகழ்வதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. இறுதியில் தமிழீழம் கனவென்றும் அந்தக் கருத்தியலை மக்கள் மறந்து விட வேண்டும் என்று சொல்கிறார்.இப்படிச் சொல்வதை விட டக்ளசின் கட்சிக்கு நேரடியாக ஆதரவளியுங்கள் என்றும் கூறலாம்.சிங்களக் குடியேற்றங்கள் எவ்வாறு உருவாகும் என்பதைக் காரணம் காட்டிப் பயமுறுத்துகிறார்.இணக்க அரசியலைச் செய்தால் எமது அனுமதியுடனே சிங்கள ஆதிக்கம் ஏற்பட வழிவகுத்தவர்களாவோம் என்பதைக் கூற மறுக்கிறார். சிறிலங்கா இந்தியா போன்ற நாடுகள் பயப்படுவது தமிழீழம் என்ற கருத்தியலுக்கே ஒழிய வேறு எதற்கும் அல்ல.அந்தக் கருத்தியலில் தாயக மக்களக்கும் புலம்பெயர்மக்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அந்தக் கருத்தியலை வெளிப்படையாகச் செய்ய முடியாதபடிக்கு தாயக மக்களின் வாய்கள் கொடிய அடக்கு முறை மூலம் மூடப்பட்டிருக்கிறதே ஒழிய அந்த வேட்கை அழியவில்லை. ஆனால் அந்தக் கருத்தியலை சிறிலங்காவின் அதிகார வரம்புக்கு வெளியில் உள்ள மக்கள் சுமந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.தாயகத் தமிழ்மக்களுக்கு ஒரு துன்பம் எனில் உதவிக்கரம் நீட்ட முதலில் துடிப்பவர்கள் புலம்பெயர் தமிழ்மக்களே ஒழிய இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ அல்ல.இதனை சுனாமியின் போதும் வன்னிமக்களின் இக்கட்டான நிலையின் போதும் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லும்.தமிழக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் பொருளாதார பலமோ அரசியல் பலமோ இல்லை.அப்படி தாயக மக்களின் ஒரே பற்றுக்கோட்டை ஓரே நம்பிக்கையை தூரவிலகி நிற்கும்படி சொல்வதற்கு நீங்கள் யார்.நாங்கள் அந்த மண்ணின் குழந்தைகள்.அந்த மக்களின் இரத்தங்கள்.அவர்களின் சுகதுக்கங்களில் இருந்து எங்களைப் புறந்தள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.பேர் மாறினாலும் ஆள் மாறினாலும் புதினப்பலகையின் கருத்து மாறவில்லை என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையாளரின் சிந்திப்புதிறனின் அதேவகையாக் பார்த்தால் இப்படியும் தீர்வு சொல்லப் படலாம் அல்லவா?

"மூகாமில் இருந்தான தமது விடுதலைதான் மக்களால் தமிழீழத்திற்கு நிகராக நோக்கப் படுகின்றது" என்று.

ஒரு தரப்பின் பலம் என்ற ஒன்று துடைத்தழிக்கப் பட்டால் எதிர்த்தரப்பால் அந்தத்தரப்பின் தலமை எப்படியும் கூறுபோடப்படலாம், இது ஒன்றும் இந்த இனத்தின் சாபம் கிடையாது. இதுதான் கீழைத்தேய ஜனனாயகத்தின் இயல்பு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையின் உட்கருத்து மக்கள் தாமாகத் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.குண்டுகளை வீசியதாலும் தவறான துண்டுப்பிரசுர விநியோகங்களாலும் மக்கள் வாக்களிக்கச் செல்லவில்லையே ஒழிய மக்கள் தாங்களாகத் தேர்தலைப் பறக்கணிக்கவில்லை என நிறுவதலாகும்.அதைவிட மக்களால் புறக்கணிக்கப்பட்ட சிவாஜிலிங்கத்தை உச்சநிலையில் வைத்துப் புகழ்வதும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது. இறுதியில் தமிழீழம் கனவென்றும் அந்தக் கருத்தியலை மக்கள் மறந்து விட வேண்டும் என்று சொல்கிறார்.இப்படிச் சொல்வதை விட டக்ளசின் கட்சிக்கு நேரடியாக ஆதரவளியுங்கள் என்றும் கூறலாம்.சிங்களக் குடியேற்றங்கள் எவ்வாறு உருவாகும் என்பதைக் காரணம் காட்டிப் பயமுறுத்துகிறார்.இணக்க அரசியலைச் செய்தால் எமது அனுமதியுடனே சிங்கள ஆதிக்கம் ஏற்பட வழிவகுத்தவர்களாவோம் என்பதைக் கூற மறுக்கிறார். சிறிலங்கா இந்தியா போன்ற நாடுகள் பயப்படுவது தமிழீழம் என்ற கருத்தியலுக்கே ஒழிய வேறு எதற்கும் அல்ல.அந்தக் கருத்தியலில் தாயக மக்களக்கும் புலம்பெயர்மக்களுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. அந்தக் கருத்தியலை வெளிப்படையாகச் செய்ய முடியாதபடிக்கு தாயக மக்களின் வாய்கள் கொடிய அடக்கு முறை மூலம் மூடப்பட்டிருக்கிறதே ஒழிய அந்த வேட்கை அழியவில்லை. ஆனால் அந்தக் கருத்தியலை சிறிலங்காவின் அதிகார வரம்புக்கு வெளியில் உள்ள மக்கள் சுமந்து நிற்கிறார்கள் என்பதே உண்மை.தாயகத் தமிழ்மக்களுக்கு ஒரு துன்பம் எனில் உதவிக்கரம் நீட்ட முதலில் துடிப்பவர்கள் புலம்பெயர் தமிழ்மக்களே ஒழிய இந்தியாவோ அல்லது சர்வதேச நாடுகளோ அல்ல.இதனை சுனாமியின் போதும் வன்னிமக்களின் இக்கட்டான நிலையின் போதும் நடைபெற்ற நிகழ்வுகள் சொல்லும்.தமிழக மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினாலும் பொருளாதார பலமோ அரசியல் பலமோ இல்லை.அப்படி தாயக மக்களின் ஒரே பற்றுக்கோட்டை ஓரே நம்பிக்கையை தூரவிலகி நிற்கும்படி சொல்வதற்கு நீங்கள் யார்.நாங்கள் அந்த மண்ணின் குழந்தைகள்.அந்த மக்களின் இரத்தங்கள்.அவர்களின் சுகதுக்கங்களில் இருந்து எங்களைப் புறந்தள்ள எந்தச் சக்தியாலும் முடியாது.பேர் மாறினாலும் ஆள் மாறினாலும் புதினப்பலகையின் கருத்து மாறவில்லை என்பதே உண்மை.

புலிதவிர்ந்த முன்னாள் போராட்ட அனைத்துக் குழுக்களும் சிங்களத்தை விட தமிழினத்திற்கு மிக ஆபத்தான பீடைகள்,

இவை சிங்கள மேய்பனால் இதுவரை பேணி வளர்க்கப் பட்டது எம்மைக் காக்கவா? அழிக்கவா? இதை விளங்குதல் என்பது அத்துணை கடினமான விடயம் இல்லையே!

மே 19 இன் பின் புதிய தலைமையை முன் நிறுத்தி முன்னெடுக்க இருந்த கொள்கை, வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டமைப்பிற்குள் சிலரின் கொள்கையும் இதுதான், புலத்திலும் அரசியற் தலைமையைக் கைப்பற்றி, களத்திலும் புலத்திலும் ஒன்றிணைவை வெளிப்படையாக ஏற்படுத்தி ஒற்றையாட்சிக்குள் இந்தியாவின் விருப்பிற்கு சிங்களவருடன் குடித்தனம் நடத்துவதற்கான வழிகாட்டி.

இந்தியாவின் விருப்பம்தான் என்ன?

ஈழத்தை ஒரு எலியாகவும், சிங்களத்தை ஒரு பூனையாகவும் வைத்துக் கொண்டால். அந்தப் பூனையின் எலியின் மீதான எந்தக் கொடுமைகளையும் கண்டு ஏன் என்று கேட்கும் அக்கறையோ, வலியோ இல்லாததுதான் இந்தியா? ஆனால் அந்தப் பூனையால் எலியிடம் தானாக வளங்கப் படும் சலுகைகளை தனால் வந்ததாக சொல்லிக் கொள்ளுவது! இது ஒன்று தான் ஈழம் சார்பாக இந்திய்வாவிடம் இருக்கின்ற விருப்பம்!

இந்தியாவின் விருப்பம்தான் என்ன?

இந்திய ஒற்றை ஆட்சியின் இருப்பை உறுதி செய்வதே.

Edited by kalaivani

இதில் இன்னொரு விடயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். வடக்குஇகிழக்கு தமிழர்கள் மட்டுமல்லாமல் கொழும்பு மற்றும் மலையக தமிழர்களும் முற்றாக மகிந்தவை புறக்கணித்து இருக்கிறார்கள். அதுவும் அவர்களுடைய தலைவர்களின் (இ.தொ.கா.மற்றும் சந்திரசேகரனின் மலையக மக்கள்முன்னனி) பிரச்சாரத்தையும் மீறி மகிந்தவை எதிர்த்து வாக்களித்து இருக்கிறார்கள். இதன் மூலம் இவர்கள் மகிந்தவுக்கு சொல்ல வருவதுஎன்ன???

வண்ணன் குகேந்திராவின் அரசியல் கட்டுரை ஒரே நேரத்தில் விவாதத்துக்கு பல களங்களை திறந்து விட்டாலும், அவரது கட்டுரையின் மையப்புள்ளி கீழுள்ள வரிகளுக்குள்தான் இருப்புக்கொள்கிறது.

`` .. (கூட்டமைபினருக்கு) அவர்களிற்கு இது தவிர வேறு வழியேதுமில்லை என்ற வகையிலும் அவர்களை “ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளான தீர்வு” என்ற ஒரு நிலைப்பாட்டிற்கு வந்து மக்களின் விடிவிற்கு வழி வகுக்க எண்ண வைத்திருக்கலாம்``

அதாவது, தமிழீழம் எனும் தனிநாடு தற்போதைய அரசியல் சூழலில் சாத்தியம் அற்றது என்பதை கட்டுரையாளர் துணிந்து முன்வைத்துள்ளார்.

ஆக, நோய் இனங்காணப்பட்டு விட்டது.

மருந்தைத் தேடுவது இனி இலகுவான விடயமாகும்.

அதாவது இந்த தேர்தலில் தமிழர் ஆதரவு கொடுத்த சரத் பென்சேகாவை சிங்களவர்கள் புறக்கணித்து விட்டு சிங்களவர் மத்தியில் இனவாதம் பேசிய மகிந்தவை வெல்ல வைத்த சிங்களவர்களோடு தமிழர்கள் சேர்ந்து வாழ முடியும் என்பதை கட்டுரையாளர் ஒத்து கொள்கிறார் என்கிறீர்கள்...

சிங்களவர்கள் தெளிவாக 50 -60 வருடமாக சொல்லும் செய்தியை கூட எம்மவர்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியவில்லை... சிங்களவர்கள் தமிழர்களை இலங்கையில் சம தரப்பாக(சகோதரர்களாக கூட) ஏற்றுக்கொள்ள இல்லை.... தமிழர்கள் இலங்கையின் அடிமைகள் தான்...

சிங்களவரின் வளர்ச்சிக்கு உதவும் கருவிகளாக தமிழர்கள் இருந்தால் நண்றாக பராமரிப்பார்கள்... தூர விலகி நிண்று சகோதரர் எண்றால் அடித்து அடிமைகள் தான் என்பதை உணர்த்துவார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.