Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு தமிழ் ஈன தலைவரின் மரியாதை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு தமிழ் ஈன தலைவரின் மரியாதை..

7Karunanidhi1.jpg

செங்கல்பட்டில் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் நேற்று முன் தினம் இரவு 150க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உட்புகுந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று வெளியான செய்தி ‘உண்மைக்கு புறம்பானது’ என்று கூறி தமிழ்நாடு காவல் துறையின் தலைமை இயக்குனர் லத்திகா சரண் அறிக்கை விடுத்துள்ளார்.

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக முதன் முதலாக பொறுப்பேற்ற ஒரு பெண் காவல் அதிகாரி என்ற பெருமை பெற்ற லத்திகா சரண் விடுத்துள்ள அறிக்கையின் கடைசி பத்தி இதுதான்: “காவல் துறையினர் இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. இச்சம்பவத்தில் இலங்கைத் தமிழர்கள் எவரும் கடுமையான காயம் அடைவில்லை”

இலங்கைத் தமிழர்கள் மீது காவல் துறையினர்தான் தாக்குதல் ஏதும் நடத்தவில்லை என்று கூறும் லத்திகா சரணின் அறிக்கை, அடுத்த வாக்கியத்திலேயே “எவரும் கடுமையான காயம் அடைவில்லை” என்று கூறி முடிக்கிறார். இதுதான் பொய் செல்வதில் உள்ள நெருக்கடியே!

அங்கு நடந்ததாக ஒரு கதையை கூறி, காவல் துறையினர் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதாக கதையைக் கொண்டுவந்து, அவர்களைத் தாக்கியவர்கள் முகாமில் அடைப்பட்டுக்கிடக்கும் அகதிகளே என்று கூறிவிட்டு, அதற்காக அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றெல்லாம் தனது அறிக்கையில் கூறும் காவல் துறை தலைமை இயக்குனர், ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு, நடவடிக்கை எடுக்க வந்த 150 காவலர்களைத் தாக்குவதற்கு எங்கிருந்து பலம் வந்தது என்பதையும் கூறியிருக்க வேண்டும்.

தமிழக காவல் துறையின் கியூ பிரிவின் கண்காணிப்பில் இருக்கும் அந்த ‘சிறப்பு முகாமில்’ எங்கிருந்து ஆயுதங்கள் வந்தன என்பதையும், அப்படி ஆயுதங்கள் இருந்தால் அதற்கு யார் பொறுப்பு என்பதையும் காவல் தலைவர் கூற வேண்டும்.

02.02.2010 அன்று காலை முதல் ஈழத் தமிழ் அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். அவர்களில் பலர் உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள். தாங்கள் எதற்காக போராடுகிறோம் என்பதை வெளியில் நின்ற ஊடகவியலாளர்களுக்கு தெரிவிப்பதற்காக, அவர்களின் பலர் மரத்தின் மீது ஏறி நின்று ஊடகவியலாளர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் தங்கள் கோரிக்கைகளை முழங்கியுள்ளனர். அது வீடியோவில் பதிவாகி உள்ளது.

காவல் தலைமை இயக்குனர் லத்திகா சரண் தனது அறிக்கையில் கூறியிருப்பதுபோல, உள்ளே சென்ற காவலர்கள் மீது தாக்குதல் நடந்தது என்றால் அது அங்கு கூடி நின்ற ஊடகவியலாளர்களுக்கு தெரியாமல் எவ்வாறு நடந்திருக்க முடியும்?

மாலை வரை ஊடகவியலாளர்கள் அங்கே இருந்திருக்கிறார்கள்.

ஆனால் தாக்குதல் - திட்டமிட்டத் தாக்குதல் - இரவு 9 மணிக்குத்தான் தொடங்கியுள்ளது. உள்ளே பூட்டிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்த நிலையில், 150க்கும் அதிகமான காவலர்கள் முகாம் சுவரேறி உள்ளே குதித்துச் சென்றுத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் பல மணி நேரங்கள் நடந்துள்ளது. அப்பட்டமான, ஈவுரக்கமற்ற காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்!

அவர்கள் அறையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து துவம்சம் செய்துள்ளது காவல் துறை. துணிமணிகளை கிழத்தெறிந்துள்ளது. இதெல்லாம் வெளியே தெரியாமல் இருக்கத்தானே 9 மணிக்கு மேல் திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது? கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு, அந்த உண்மை வெளியே வந்துவிட்டப் பிறகு, தாக்கப்பட்டவர்களே தாக்கினார்கள் என்று அறிக்கை விட்டு மறைக்கிறார் காவல் துறைத் தலைவர். கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்து அவர்களை வேலூர் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.

எவரும் கடுமையான காயம் அடையவில்லை என்று கூறுகிறார். ஊடகவியலாளர்களான நாங்கள் முழுமையான விசாரணைக்குப் பிறகே விவரங்களை வெளியிடுகிறோம். முகாம்வாசிகளை எப்படியெல்லாம் தாக்கினார்கள், அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் எப்படிப்பட்டவை என்பதெல்லாம் விரைவில் நீதிமன்றத்தின் வாயிலாக நிச்சயம் வெளிவரும்.

அமலன் என்பவரின் இடது கைது இந்தக் கொடூரத் தாக்குதலில் முறிந்துள்ளது. இது நமது காவல் தலைமை இயக்குனருக்கு கடுமையான காயம் இல்லை! ரமணன் என்பவரின் ஆண் குறியை நோக்கி ஒரு காவல் அதிகாரி இரண்டு முறை காலால் எத்தியுள்ளார். இதுவும் சாதாரணமானதே என்று லத்திகா சரண் கூறக்கூடும்!

கடுமையாகத் தாக்கப்பட்டு, பிறகு அவர்கள் மீதே வழக்கும் தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அனைவரின் உடல்களிலும் பல காயங்கள் (Multiple Injuries) உள்ளது. இவையனைத்தும் சட்ட மீறல், மனித உரிமை மீறல்.

தனது அறிக்கையில் கூறியதை நிரூபிக்க லத்திகா சரண் ஒப்புக் கொள்வாரேயானால், தாக்கப்பட்டதாக அவர் கூறும் காவலர்களையும், தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகளையும் ஊடகவியலாளர்கள் முன் நிறுத்தட்டும். அப்போது தெரியும் உண்மை எதுவென்று.

அவர்கள் ஏன் தங்களை விடுவிக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள்? வழக்கு இருக்கும்போது விடுவிக்கக் கூடிய அதிகாரம் காவல் துறையினருக்கு இல்லை என்பது அந்த முகாம்வாசிகளுக்குத் தெரியாதா? பிறகு அவர்கள் உண்ணாவிரதம் இருக்கக் காரணம் என்ன?

காரணம் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் போலியானவை என்பதே! உள்ளீடற்றவை. ஆதாரமில்லா கற்பனைக் குற்றச்சாற்றுகளின் மேல் போடப்பட்ட வழக்குகள். அவர்களின் தனி மனித உரிமைகள் அனைத்திற்கும் எதிராக, அவர்கள் எந்த சட்ட நிவாரணம் எதையும் பெற முடியாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதுவே உண்மை.

இவையாவும் ஊடகவியலாளர்களான எங்களுக்குத் தெரிந்த உண்மைகள். உணமையை வெளிக்கொணரும் ஊடகத் தருமத்தை கடைபிடிப்பதால் நாங்கள் அவர்களின் துயரை வெளிக்கொணர்கிறோம். “உண்மைக்கு புறம்பானவை” என்று கூறதக்க செய்தி என்று ஏதுமில்லை. செய்திகள் என்றாலே அதில் நேரடியாகவோ உள்ளீடாகவோ உண்மை இருக்கும். அறிக்கைகளில்தான் அதனைத் தேட வேண்டும்.

செங்கற்பட்டு சிறப்பு முகாமில் ‘தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள்’ என்று கூறுகிறார். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதற்கு சிறப்பு முகாம் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறீர்கள்? அவர்கள் மீது வழக்குகள் உள்ளது என்றால், அவர்களை சட்ட முறைப்படி எங்கு வைத்திருக்க வேண்டும்? சிறையில்தானே? எதற்கு முகாமில், அதுவும் சிறப்பு முகாமில் வைத்திருக்கிறீர்கள்? இதையெல்லாம் காவல் துறைத் தலைவர் விளக்குவாரா?

தங்களின் பூர்வீக மண்ணில் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, அடித்து துரத்தப்பட்டு, அனைத்தையும் இழந்து அகதியாய் தமிழ்நாட்டிற்கு வந்த ஈழத் தமிழர்களை தமிழக காவல் துறை எவ்வாறு நடத்துகிறது என்பது விவரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும். உலக நாடுகளால் ஒப்புக் கொண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படையில் நடத்தப்படாத அகதிகளாகவே தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்கள் உள்ளனர். இந்த அநீதியை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிற காரணத்தினால்தான், நேற்று முன் தினம் செங்கற்பட்டு ‘சிறப்பு முகாமில்’ அந்த காட்டுமிராண்டித்தனம் அரங்கேறியுள்ளது. இதற்குப் பிறகாவது தமிழக அரசு கண் விழித்து தன் கடமையை செய்யட்டும்.

img1100204048_1_1.jpg

காவல் துறையின் காட்டுமிராண்டித் தாக்குதலில் காயமுற்றவர்கள் பட்டியல்

செ‌ங்க‌ல்ப‌ட்டு ‌சிற‌ப்பு முகா‌மி‌ல் அடை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ஈழ‌த் த‌மி‌ழ் அக‌திக‌ள் ‌மீது காவல் துறையினர் தாக்கியதில் படுகாயமடைந்தவர்களின் பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், காவல் துறையினரின் மொழியில் கூறுவதென்றால், லாடம் கட்டுதல் (குப்புற படுக்க வைத்து உள்ளங்கால், உடலின் மற்ற இடங்களில் தொடர்ந்து நீண்ட நேரம் தடியால் அடிப்பது) உட்படுத்தப்பட்டுள்ளனர்.

1) ரமணன் (வயது 33),

கால், தலை, முதுகு, கை, புட்டம் ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.3,500

2) பத்மராஜா (வயது 28),

கால், புட்டம், கை, பாதம், தொடை ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.5000

3) ஜெயமோகன் (வயது 28),

கழுத்து, புட்டம், கால் ஆகிய இடங்களில் காயம்.

4) மிதுரன் (வயது 30)

வலது கை, புட்டம், முதுகு, இடது தொடை ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.3,700

5) பிரதீபன் (வயது 33)

கை, முதுகு, புட்டம் ஆகிய இடங்களில் காயம்.

6) அருள் (வயது 25)

புட்டம், இடது தோள் ஆகிய இடங்களில் காயம்.

7) கிரிதாஸ் (வயது 35)

புட்டம், முதுகு, இடது கை ஆகிய இடங்களில் காயம்.

8) பரமேஸ்வரன் (வயது 35)

தோள்பட்டை, புட்டம், முழங்கால் ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.800

9) அமலன் (வயது 33)

புட்டம், முதுகு ஆகிய இடங்களில் காயம். கை முறிவு. பறிக்கப்பட்ட பணம் ரூ.3.700

10) கிருஷ்ணநீதன் (வயது 26)

புட்டம், கை, கால் ஆகிய இடங்களில் காயம்.

11) கெங்காதரன் (வயது 43)

தலை, முகம், தோள்பட்டை, புட்டம், முதுகு, வலது கால் ஆகிய இடங்களில் காயம்.

12) பிரதிதாசன் (வயது 24)

புட்டம், கை, முதுகு, கால் ஆகிய இடங்களில் காயம்.

13) ருக்ஸான் (வயது 26)

புட்டம், தலை, இடுப்பு, முதுகு ஆகிய இடங்களில் காயம்.

14) சேகர் (வயது 30)

தலை, கை, கால், புட்டம் ஆகிய இடங்களில் காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.700

15) செல்லக்குமார் (வயது 33)

ஏற்கனவே கால் இல்லாதவர். கால், கை, தலை, புட்டத்தில் பலத்த காயம். பறிக்கப்பட்ட பணம் ரூ.3000

குறிப்பு : ரமணன் என்பவ‌ரி‌ன் ஆண் குறியை ஷூ காலால் மிதித்துள்ளார்கள்.

வழக்கு விபரம்

கிரைம் எண்: 58/2007 D1 டவுன் காவல் நிலையம் ,செங்கல்பட்டு

வழக்கு பிரிவுகள்:

147 கலகம் விளைவித்தல்

148, அபாயகரமான ஆயுதத்தை தாங்கி கலகம் விளை வித்தல்

324, அபாயகரமான ஆயுதங்கள் அல்லது பொருட்கள் மூலம்தம்மிச்சையாக காயம் விளைவித்தல்

294, ஆபாச செயல்களும் பாடல்களும்

506, மிரட்டுதல்

332, பொது ஊழியரை அவரதுகடமையிலிருந்து தடுத்தல்

307, கொலை முயற்சி

-----------------------------------------------

1. இந்த பொய்வழக்குகளை போட்டுள்ளனர் சிறையில் இருக்கும் ஒருவர் இதனை செய்யமுடியுமா?

2. சிறையில் எப்படி அபாயகரமான ஆயுதங்கள் வரும்?

3. 2 பேருக்கு ஒரு அறை யில் எப்படி கலகம் செய்யமுடியும்?

4. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 96ன் படி தற்காப்புக்காக செய்யப்படும் போது செய்யப்படும் எதுவும் குற்றம் இல்லை

5. சிறை கம்பிக்குள் இருக்கும் ஒரு சிறை கைதி எப்படி பொது ஊழியரை கடைமையை தடுக்க முடியும்?

நன்றி:தமிழ்வெப்துனியா

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.