Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டம் : ஈழத் தமிழர்களுக்கும் அழைப்பு

Featured Replies

NDSNoShadow2.jpg

முற்போக்கு நேபாள சமூகம் (Progressive Nepalese Society) என்ற அமைப்பு தெற்காசியாவில் இந்திய ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், நேபாளத்தில் இந்தியத் தலையீட்டிற்கு எதிராகவும், பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசபடைகளின் தாக்குதலுக்கு எதிராகவும் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் திங்கள் பன்னிரண்டு மணிக்கு லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளது.

இந்த எதிர்ப்பு நிகழ்வானது, Second Wave Publication, Democracy and Class Struggle, World People’s Resistance Movement (Britain) ஆகியவற்றின் ஆதரவுடன் நிகழ்கிறது.

முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு எதிரான சுலோகங்களையும் எதிர்ப்பு நிகழ்வில் முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இலண்டன் ரவல்கர் ஸ்குரில் ஆரம்பமாகி இந்தியத் தூதரகம் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இந்திய ஆக்கிரமிபிற்குகும் இனப்படுகொலைக்கும் எதிரான சுலோகங்களுடன் புலம் பெயர் ஈழத் தமிழர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு புதிய திசைகள் அமைப்பினரும், முற்போக்கு நேபாள சமூகமும் அழைப்பு விடுக்கின்றனர்.

Date & Time: Monday, 15th February 2010 at 12:00 PM

Venue: The rally will start from Trafalgar Square, North Terrace and march towards the Indian Embassy.

முற்போக்கு நேபாள சமூகத்தின் தொடர்பாளரான கே.சி.ரணா, இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலில், தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய மேலாதிக்கமானது அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறையாக விரிவடைந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இலங்கை இனப்படுகொலையின் பின்புலத்தில் இந்தியாவே செயற்பட்டுள்ளது என்றும், இலங்கை அரசின் பாசிசத்தை இந்தியாவே ஊக்குவிக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இது தவிர சென்னையில் 20/02/2010 அன்று ம.க.இ.க வினால் நடத்தப்படும் எதிர்ப்பு நிகழ்விற்கு தமது அமைப்பும் நேபாள மாவோயிஸ்டுக்களும் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் மக்கள் மீதான தாக்குதல் இந்திய எல்லையைக் கடந்து இலங்கை நேபாளம் என்று விரிர்ந்து செல்வதன் ஒரு பகுதியாகவே நேபாள மக்கள் மீதான தாக்குதலும் நோக்கப்பட வேண்டும். இந்திய அதிகாரவர்க்கம் நேபாளத்தை ஒரு காலனி போலவே நடத்தி வருகின்றது. 60 வருடங்களுக்கு மேலாக சிறுகச் சிறுக அழிக்கப்படும் நேபாளத்தில் இந்தியா எதை வேண்டுமானாலும் நிகழ்த்தி முடிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

http://kuralweb.com/20100213/demo.aspx

Edited by Alternative

முற்போக்கு நேபாள சமூகம் என்ற அமைப்பிற்கும் புதிய திசைகள் அமைப்பிற்கும் இடையே நிகழ்ந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய இனப்படுகொலைக்கு எதிரான சுலோகங்களையும் எதிர்ப்பு நிகழ்வில் முன்வைப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கள் மதியம் பன்னிரண்டு மணிக்கு ஆரம்பிக்கும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இலண்டன் ரவல்கர் ஸ்குரில் ஆரம்பமாகி இந்தியத் தூதரகம் வரை செல்லும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இந்திய ஆக்கிரமிபிற்குகும் இனப்படுகொலைக்கும் எதிரான சுலோகங்களுடன் புலம் பெயர் ஈழத் தமிழர்களை இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு புதிய திசைகள் அமைப்பினரும், முற்போக்கு நேபாள சமூகமும் அழைப்பு விடுக்கின்றனர்.

Date & Time: Monday, 15th February 2010 at 12:00 PM

Venue: The rally will start from Trafalgar Square, North Terrace and march towards the Indian Embassy.

நண்பர்களே

பொதுவான எதிரிக்கெதிராக ஒடுக்கப்படும் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய காலகாட்டமிது. கடந்த காலங்களில் நாம் ஏனைய மக்களின் உரிமைப் போராட்டங்களில் கலந்து கொள்ளத் தவறி விட்டோம். இலங்கையில் இந்திய இலங்கை அரசுகள் நடாத்திய இனப் படுகொலைக்கெதிரான சுலோகங்களைத் தாங்கி வந்து இப்போராட்டத்திற்கு வலுச் சேர்ப்போம்.

இந்திய வல்லாதிக்கத்தின் விஸ்தரிப்பு ஏராளமான திட்டங்களை வைத்துள்ளது. இது இல்லாவிட்டால் அது என்று சளைக்காமல் தனது செயலில் ஆர்வமுடையதாயிருக்கிறது. மற்றைய சமூகப் போராட்டங்களிலும் தமிழர் தமது ஆதரவைக் கொடுத்து, எமது தேவையையும் வெளிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டன் வாழ் தமிழ் மக்களே! தயவு செய்து இதனை அலட்சியப் படுத்தாதீர்கள். போக முடிந்தவர்கள் தயவு செய்து செல்லுங்கள். பலன் இருக்கின்றதோ இல்லையோ என்று பாராமல் இந்தியப் பயங்கரவாதிகளுக்தெரிரான குரலை நாம் எப்போதும் கொடுக்க முன்வரவேண்டும்.

நேபாள மாவோயிஸ்டுக்களும் முழு ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

இந்த ஊர்வலத்தில முடிந்தால் சீனாவுக்கு எதிராகவும் சில சுலோகங்களை டமிழர்கள் எடுத்து சென்றால் மிகவும் நல்லம்,

சீனாவின் தூண்டலால் உந்த நேபாளமாவோயிஸ்ட்கள் ஊர்வலம் நடத்தினம் அதற்கு நாங்கள் போகவேண்டும் ,முள்ளிவாய்க்கால் அவலத்திற்க்கு உந்த சிவப்பு சட்டைகாரருக்கும் முக்கிய பங்குண்டு.

மாவோவின் சிந்தனையால் வளர்ந்த சீனா பிராந்திய வல்லரசே எமது போராட்டத்தை வேரோடு அழிப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது இந்த நிலையில் நேபாள மாவோயிஸ்ட்களால் என்னத்தை பெரிதாக எமக்காக பண்ணமுடியும்.

மேற்குலகில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக (போலி ஜனநாயகவாதிகள் என்பது எமக்கு தெரியும்)மவொயிஸ்ட் குழுக்களுக்கு நாம் ஆதரவு அழிப்பது என்பது ,எந்த வகையில் புத்திசாலித்தனமானது ?

பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது போல, டமிழர்கள் மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தத்தான் வழிவகுக்கும்

இலங்கைக்கும் இதே நிலை உருவாகிவிட்டது. என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அந்த நிலை உருவாகாமல் பார்த்து கொள்ளவேண்டியது சிங்கள இனவாதிகளின் பொறுப்பு...சிறிலங்கா இந்தியாவின் ஆக்கிரமிப்பிக்குள் போவதால் தமிழனுக்கு என்ன பாதிப்பு ,அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சிங்களவன் சிறுபான்மையாகி விடுவான் தமிழன் பெரும்பான்மையாகிவிடுவான் .பிறகு சீமான்,வைகோ போன்றோரின் துனையுடன் சிங்களவனை ஒரு பதம்பாக்கவேண்டியதுதானே,அனுராதபுரத்தில ஒரு முள்ளிவாய்காலை உருவாக்கவேண்டியது .

இந்த நிலை உருவாகமல் இருக்க சிங்களவன் ஊர்வலத்தில பங்கு பற்ற வேண்டும் ,டமிழர்கள் அல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நேபாள மக்களுக்கு நாம் கை கொடுக்கவேண்டும். இந்தியாவே சில பார்சி காந்தி, டாட்டா, ஷர்மா, லால் குடும்பங்களின் கையில் இருந்து கெட்டு குட்டிச்சுவர் ஆகுது. எப்படி இந்திய அதிகார வர்க்கம் தமது மக்களையே நிலத்தை சூறையாடுவதட்காக கொல்லுகிறது என்பது பற்றிய செய்தி.

The heart of India is under attackTo justify enforcing a corporate land grab, the state needs an enemy – and it has chosen the Maoists

The low, flat-topped hills of south Orissa have been home to the Dongria Kondh long before there was a country called India or a state called Orissa. The hills watched over the Kondh. The Kondh watched over the hills and worshipped them as living deities. Now these hills have been sold for the bauxite they contain. For the Kondh it's as though god had been sold. They ask how much god would go for if the god were Ram or Allah or Jesus Christ.

Right now in central India, the Maoists' guerrilla army is made up almost entirely of desperately poor tribal people living in conditions of such chronic hunger that it verges on famine of the kind we only associate with sub-Saharan Africa. They are people who, even after 60 years of India's so-called independence, have not had access to education, healthcare or legal redress. They are people who have been mercilessly exploited for decades, consistently cheated by small businessmen and moneylenders, the women raped as a matter of right by police and forest department personnel. Their journey back to a semblance of dignity is due in large part to the Maoist cadre who have lived and worked and fought by their side for decades.

http://www.guardian.co.uk/commentisfree/2009/oct/30/mining-india-maoists-green-hunt

லண்டன் வாழ் தமிழ் மக்களே! தயவு செய்து இதனை அலட்சியப் படுத்தாதீர்கள். போக முடிந்தவர்கள் தயவு செய்து செல்லுங்கள். பலன் இருக்கின்றதோ இல்லையோ என்று பாராமல் இந்தியப் பயங்கரவாதிகளுக்தெரிரான குரலை நாம் எப்போதும் கொடுக்க முன்வரவேண்டும்.

என்னுடைய கருத்தும் அதுதான்.

===

நேபாளத்துக்கு கடல் எல்லை இல்லை. எனவே இலாபகரமான கப்பல் போக்குவரத்துக்கு இந்திய துறைமுகம் ஒன்றையும், இந்திய வீதிகளையும் பயன்படுத்தவேண்டிய அத்தியாவசிய தேவை நேபாளத்திற்கு இருந்தது. இந்தியாவுடன் ஒப்பந்தமும் செய்து கொண்டது.

ஆனால் இதை சாக்காக வைத்து, காலப்போக்கில் வட இந்திய ஹிந்தி பயங்கரவாதிகள் ஹிந்தி திணிப்பை நேபாளத்தில் மேற்கொண்டு, அவர்கள் அரசியலில் தலையிட்டு - யாருடன் தொடர்பு வைக்கவேண்டும், யாருடன் வைக்ககூடாது - என்றெல்லாம் நேபாள விவகாரத்தில் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டனர். உறுதியான நாட்டு, மொழிப் பற்றுடன் இருந்த மன்னர் பரம்பரையை அழித்ததிலும் வட இந்திய ஹிந்தி பயங்கரவாதிகள் பங்கு இருந்தது.

சில வருடங்களின் முன்னர் இலங்கையில் செயலமர்வு ஒன்றுக்கு வந்து, நண்பராகிய நேபாள அறிஞர் ஒருவர் சொன்ன விடயங்கள் இவை.

இலங்கை பிரச்சனைகளை கேட்டறிந்த அவர், தெற்காசியாவின் ஸ்திரத்திட்கு பிரதான அச்சுறுத்தலாக இருப்பது இந்தியாவே என குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஊர்வலத்தில முடிந்தால் சீனாவுக்கு எதிராகவும் சில சுலோகங்களை டமிழர்கள் எடுத்து சென்றால் மிகவும் நல்லம்,

சீனாவின் தூண்டலால் உந்த நேபாளமாவோயிஸ்ட்கள் ஊர்வலம் நடத்தினம் அதற்கு நாங்கள் போகவேண்டும் ,முள்ளிவாய்க்கால் அவலத்திற்க்கு உந்த சிவப்பு சட்டைகாரருக்கும் முக்கிய பங்குண்டு.

மாவோவின் சிந்தனையால் வளர்ந்த சீனா பிராந்திய வல்லரசே எமது போராட்டத்தை வேரோடு அழிப்பதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது இந்த நிலையில் நேபாள மாவோயிஸ்ட்களால் என்னத்தை பெரிதாக எமக்காக பண்ணமுடியும்.

மேற்குலகில் இருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக (போலி ஜனநாயகவாதிகள் என்பது எமக்கு தெரியும்)மவொயிஸ்ட் குழுக்களுக்கு நாம் ஆதரவு அழிப்பது என்பது ,எந்த வகையில் புத்திசாலித்தனமானது ?

பயங்கரவாதம் என்று முத்திரை குத்தியது போல, டமிழர்கள் மாவோயிஸ்ட்கள் என்று முத்திரை குத்தத்தான் வழிவகுக்கும்

இனப் படுகொலைக்கெதிரான எல்லா பதாதைகளையும் எடுத்து வாருங்கள். அது இந்தியாவிற்கெதிராக இருந்தாலென்ன சீனாவிற்கெதிராக இருந்தாலென்ன. எமது பொது எதிரிகளுக்கெதிராக எம்மோடு கரங்கோர்க்கக் கூடியவர்களோடு தோள் சேர்ந்து நிற்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.