Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாமிகளும் மனிதர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாமிகளும் மனிதர்களும்

அரசியலாளர்களின் சுத்து மாத்து பயங்கரவாதத்தால் மனிதர்கள் வாழடியாத நிலை. எல்லாம் பணம், புகழ் ஆசை தான். உலகத்தில் மூலதனம் ஒன்று இல்லாமல் ஆரம்பித்து விரைவில் பணக்காரர் ஆகக்கூடிய தொழில் கோவில் கட்டுவதும் சாமியாராவதும் தான். சின்னச்சின்ன சாகசங்கள் புரியக் கற்றுக்கொள்ளவும் நன்றாகப்பேசவும் தெரியவேண்டும். அவ்வளவுதான். யாரும் கோடீஸ்வரன் ஆகலாம். அரசியல் என்றால் முதலில் கொத்தை விற்றாவது முதலிடவேண்டும். இதற்கு அதுவும் தேவையில்லை. ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவன் இருப்பான்.

கடவுளே வந்தாலும் எந்த ஒரு சடப்பொருளையும் கை அசைப்பதால் உருவாக்கிவிடமுடியாது. அப்படி என்றால் உலகத்தில் உள்ள பஞ்சத்தை உணவை எடுத்துக்கொடுத்தே போக்கிவிடலாமே. எத்தனைபேர் உணவில்லாமல் தவிக்கின்றார்கள். கையசைத்து ஒரு வீட்டைக்கட்டிக்கொடுக்கலாம். இப்படி பல பிரச்சனைகளைத்தீர்த்துவிடலாம் இல்லையா?

ஒருவர் நல்லபடி போதிக்கலாம். ஆனால் அவர் அதன்படி நடந்து கொள்ளுகின்றாரா என்பது தான முக்கியம். மனிதர்களுககுள் அறிவு விடயமாக ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். என்னிடம் இ;லலாத ஒரு அறிவு இன்னொருவரிடம் இருக்கலாம். ஒரு சடப்பொருளை எடுப்பதென்பது முடியாத காரியம். மறைத்து வைத்து மாத்திரம் எடுக்கமுடியும். கண்கட்டி வித்தை என்று பொருள்படும். இப்படி எடுப்பவர்களிடம் உணவு எடுத்துக்கொடுங்கள் என்று கேளுங்கள் தருகின்றாரா என்று பார்ப்போம். படித்த அறிவு உள்ளவர்கள் கூட இதை நம்புகின்றார்கள் என்றால் கிராமவாசிகளைக் குறைசொல்லத்தேவையில்லை.

அதைவிட பாலியல் பிரச்சனை. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பாலுணர்வு இருக்கின்றது. இது இயற்கையில் இறைவன் எல்லோருக்கும் கொடுத்தது. அந்த பாலுணர்வு இல்லாதவனை என்னவோ எல்லாம் சொல்லிப்பேசுகின்றோம். மிருகங்கள், தாவரங்கள், மனிதர்கள் எல்லோருமே புணருகின்றோம். அப்படி புணராவிட்டால் உலகஇயக்கம் நின்றுவிடும்.

எனவே இதை யாரும் அனுபவிப்பதைத் தடுத்துவிட யாருக்கும் உரிமை இல்லை. ஆணும் பெண்ணும் சேரும்போது தான் அடுத்த தலைமுறை மனிதர்களில் மட்டுமல்ல மிருகங்கள் தாவரங்களிலும் உருவாகின்றது. எனவே பாலுறவு தவறானதல்ல. ஆனால் எப்படி நடந்தது என்பதில் தான் தவறு உண்டாகின்றது.

சாமியார் என்பவர் தன்னுடைய ஆசைகள் எல்லாவற்றையும் துறந்து மற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்தல் என்பது பொருள். அதனால் தர்ன சாமியாரை எல்லோரும் வணங்குகின்றனர். இப்படித் துறவறம் ப+ண்ட சாமிகள் பாலியலில் பெண் சம்மதத்தோடும் ஈடுபாடு nடைவது குற்றம் என்றே கருதப்படும். ஆனாலும் இதற்காக அவரைத்தண்டிக்கமுடியாது. ஆனால் ஒதுக்கிவிமுடியும்.

சந்நியாசம் என்பது சமயநூல்களில் கூட பிரம்மசரியம், இல்லறம், வானப்பிரஸ்தம் சந்நியாசம் என்றே சொல்லப்படுகின்றது. வரிசைக்கிரமமாக அடையவேண்டும். முதற்கூறப்பட்ட 3iயும் அனுபவிக்காதவர்கள் சந்நியாசம் போக அருகதை அற்றவர்கள். சந்நியாசம் கொள்பவன் மக்கள் கேட்கும் கேள்விகளுக்குத்தகுந்த பதில் அளிக்க அனுபவம் வேண்டும்.

சந்நியாசம் என்ற போர்வையைப்போர்த்தி சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடுகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை மக்;களே தண்டிக்கவேண்டும்.

சாமியானவனுக்கு கார், பங்களா, கம்பியூட்டர் எல்லாம் தேவைதானா? இளமையை முறைப்படி கடந்து திருமணம் செய்து காமஇச்சைகள் அற்றுப்போக பின் உற்றார், உறவினர், பிள்ளைகளுடன் பழகி பாசமற்றுப்போக சந்நியாசி ஆனவன்தான் உண்மையான சந்நியாசி. இறைவன் கூட அர்த்நாரீஸ்வரராகத்தான் இருக்கின்றார். எல்லோரும் சாமியானால் இடுத்த தலைமுறை உருவாகுமா? உலகம் இயங்குமா? பாலுணர்வைப் படைத்தவன் கொடுத்தது உலக இயக்கத்துக்காகத்தான்.

நான் சாமி என்று ஏமாற்றுபவர்களை நம்பி ஏமாந்தவர்கள் தான் தப்புச் செய்கின்றார்கள். சாமியார்கள் உங்களை ஒட்டாண்டி ஆக்கினார்களே தவிர நீங்கள் கேட்கும் செல்வமும் புகழும் உங்களுக்குக்கிடைத்ததா? சாமிதான் எடுத்துக்கொண்hடார். இது அவருக்குத் தேவைதானா. சாமிக்கும், குருக்களுக்கும் சான்றிதழ் பொடுக்கின்றார்கள் அவர்கள் வாங்குகின்றார்கள். சாமி என்று உயர்நிலையில் இருப்பவருக்கு இவருக்குக் கீழ் இருப்பவர்களுக்கு என்ன தகுதி?

கனடாவிலும் கோவில்கள் என்று பல உருவாகி பணம் பறிக்கும் சித்துவிளையாட்டுக்கள் அரங்கேறுகின்றன. பக்தர்களாகப்பார்த்துத் திருந்தாவிட்டால் போலிசாமியார்களை ஒழிக்முடியாது. உன்னை நீ நம் அதுவே என் பக்தி. இறைவன் உனக்குள் இருக்கின்றான் இதைத்தான் (கட உள்) கடவுள் ஆனது. உன் மனதை உள்ளார்ந்து அறிந்தால் நீ கடவுளாகிவிடலாம். போலிச்சாமியார்கள் உங்களை உள்கடக்க விடமாட்டார்கள். கனடாவிலும் எத்தனையோ ஐயர்கள் மாமிசமும் தண்ணியும் அடிக்கின்றார்கள். கிளப்புகளுக்கும் போகின்றார்கள். கோவிலும் நடத்துகின்றார்கள். இவையெல்லாம் சமுதாயத்தின் தவறே தவிர அவர்களது தவறல்ல. சமுதாயம் தன்னைத்திருத்திக்கொள்ள வேண்டும். அப்போது இந்தப்போலிக்ள் எல்லாம் தானாக மறைந்துவிடும். கனடாவில் கோவிலுக்குச் செல்லும் இளம் சமுதாயம் ஏதேனும் குருக்கள் அறிவுரை மூலம் கற்றுக்கொண்டதா? அஙிவு சொல்ல குருக்களுக்கு ஏதேனும் இருந்தால் தானே. கடவுள் நம்பிக்கையால் மக்கள் கொடையை அபகரிக்க எழுந்தது தான் கனடாவில் கோவில்கள்.

இறைவன் தீர்ப்பில் இருந்து யாரும் தப்பிவிடமுடியாது. குறைகள் களைந்து வாழ்க வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

.

எமது பெரும்பாலான கோவில்கள் தமக்கு பணம் சம்பாதிக்கும் ஒரு வேலைத்தலம் போன்ற கொள்கையுடனேயே கொவில்களை நடத்துகின்றனர்.

கிரேக்க, இஸ்லாமிய வழிபாட்டு இடங்களில்.......

தமது சமயத்தை வளர்ப்பது ஒரு புறம் இருக்க,

இளம் சிறார்களுக்கு சமயக் கல்வியும், தாய் மொழியும், நாட்டுப்பற்றும் போதிக்கப் படுகின்றது ,

முதியோருக்கு, பெண்களுக்கு, இளைஞர்களுக்கு என்ன என்ன துறைகளில் ஆர்வம் உள்ளதோ..... அதே துறைகளில் உள்ளவர்களை குழுமங்களாக பிரித்து வகுப்புகள், ஆலோசனைகள் கூறப்படுகின்றதால் அங்கு எப்போதும் மக்கள் வயது வேறுபாடின்றி ஆர்வத்துடன் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.

நமது கோவில்களில் வருசத்துக்கு நடக்கும் திருவிழாவில் , மக்கள் பெருமளவாக கலந்து கொண்டு, வெள்ளைக்காரன் வடிவாக கட்டி வைத்த றோட்டிலை தேங்காயை போட்டு உடைச்சுப் போட்டு...... கனநாள் காணாதவர்களை கண்டு நீர் என்ன கார் வைச்சிருக்கிறீர், எங்கை வேலை செய்யுறீர், வீடு வாங்கிப்போட்டீரோ...? எண்டு நாத்தம் பிடிச்ச கதையளை கதைக்கிற இடமாக கோவிலை மாற்றாமல், ஆவன செய்ய கோவிலை நடத்தும் புண்ணியவான்கள் முன் வரவேண்டும். தாய் மொழியில் பூசை பண்ணத்தடை என்று ஆரம்பித்து எல்லாவற்றுக்கும் முட்டுக்கட்டை போடுவதால் அந்த சமூகத்துக்கே கேடு விளைவிக்காமல் இருக்க வேண்டும்.

.

பாலியல் உறவுகளில் தாராள போக்குடையவர்களாக கருதப்படும் அமெரிக்கர்கள் கூட, தமது நாட்டு தலைவர் ஒழுக்கமுடையவராக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் (கிளிண்டன் விவகாரம்).

பாலியல் சொர்க்கபுரியாக கருதப்படும் ரோம் மக்கள் ஒரு விலைமாதுவுடன் தமது பிரதமரின் பாலியல் தொடர்பை அவரது தனிப்பட்ட விவகாரமாக கருதவில்லை!

மேற்குலக கிறிஸ்தவர்கள் தமது போப்பாண்டவர், ஏன் சேர்ச் father / sister, பாலியல் உறவு வைத்திருப்பதை விரும்பப் போவதில்லை.

இருவர் விரும்பி பாலியல் தொடர்பு வைத்திருப்பதை எந்த சட்டமும் கண்டிக்கவில்லை என்றாலும், மேற்குலகிலேயே சட்டத்துக்கு அப்பற்பட்ட ஒன்றை மக்கள் மனதில் வைத்துள்ளார்கள். அதைத்தான், சமூக நியதி, தனிமனித நியதி அல்லது விழுமியங்கள் என்று அழைப்பார்கள்.

இது இப்பிடியிருக்க எம்மவர் சிலர், போலிச்சாமி நித்தியானந்த செய்தது தவறில்லை என்று வாதிடுவது, வாதிடுபவர்கள் மீது கீழ்த்தரமான தமிழ் சினிமாவின் ஆதிக்கத்தை காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

நித்தியானந்த செய்தது தவறில்லை என்றால் காவி கட்டாத கருணா செய்தது மட்டும் எப்படித் தவறாகும்?

எம்மவர் கீழ்த்தரமான தமிழ் சினிமா (சின்னத்திரை தொடர்கள்) உலகில் இருந்து விடுபடும்வரை, எமது விடிவு வெகு தூரத்தில் தான்.

காவி உடை தரித்த போலிச் சாமியார் நித்தியானந்தாவின் செயல்கள் வன்மையாக கண்டிக்கப்படல் வேண்டும். அவரைப் போன்ற ஏமாற்று பேர்வழிகள் சமூகத்திலிருந்து தூக்கி வீசப்படவேண்டியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.