Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் ஊடகவியலாளாகளுக்கு ஈ-மெயில் ஊடாக அச்சுறுத்தல்!

Featured Replies

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள்

இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள்

தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல்

தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள்

அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம்

என்ற மொட்டைக் கடிதப் பாணியிலான எச்சரிக்கை டென்மார்க்கிலிருந்து குகன் தம்பிப்பிள்ளை எனபவரால் தயாரிக்கப்பட்டு, சுவிசிலிருந்து துரைரட்ணம் இராமசாமி என்பவரால் தமிழ்த் தேசிய சார்பு ஊடகங்களுக்கு மின் அஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டு வருகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக இவர்கள் மேற்கொண்டுவரும் எச்சரிக்கை அச்சுறுத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களை இலங்கை அரசின் சதித் திட்டத்திற்குத் துணை போபவர்களாகச் சித்தரிக்கும் நோக்கத்தைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் கூட்டமைப்பின் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான நிலை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு திருப்திகரமான எந்தப் பதிகல்ளையும் கொடுக்காமல், ஒற்றுமை என்ற பெயரில் எங்களை ஒட்டுமொத்தமாக சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள் கூட்டமைப்பினர் கூட்டங்கள் போட்டுக் கூறித் திரிவதும், அதற்காக அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் அச்சுறுத்தல் விடுப்பதும் அரசியல் சார்ந்த, ஊடகம் சார்ந்த தர்மமாக இருக்காது என்பதே எனது தாழ்மையான கருத்து.

ஒற்றுமையாக முன்பு ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சிங்கள நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த அனுபவம் ஈழத் தமிழர்களுக்கு இருக்கிறது. தமிழீழ ஆணையுடன் கூட்டமாக சிங்கள நாடாளுமன்றம் சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணி எதையெல்லாம் தமக்காகப் பெற்றுக் கொண்டது. அந்தத் தமிழாகளுக்கு எதைப் பெற்றுக் கொடுத்தது என்பதைத் தமிழ் மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், கூட்டமைப்பு தன் சுயத்தை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தினுள் தள்ளப்பட்டுள்ளது.

எல்லோரும் ஒன்றாகப் போவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உவப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அதில் தமிழ் மக்களுக்கு என்ன கிடைக்கும், அதற்கான கால எல்லை எது? அது முடியாவிட்டால், செய்யக் கூடிய பரிகாரம் என்ன? என்பதெல்லாம் தமிழ் மக்களுக்குத் தெரிந்தே ஆக வேண்டும் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர்களது விருப்பம் யாராலும் நிராகரிக்கப்பட முடியாதது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும்.

மிதவாதத் தமிழ்த் தலைமைகளின் முப்பதாண்டு கால தகிடுதத்தங்களும், வாய் வீரமும்தான் தமிழீழ மக்களை இந்தியக் கரங்களில் சேர்த்து முள்ளிவாய்க்காலில் அழிய வைத்தது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது. அதே போன்றே சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு மீண்டும் தமிழீழ மக்களை இந்தியக் கொடுங் கரங்களில் சிக்க வைப்பதற்கு நாங்கள் உடந்தையாவதற்கும் நாங்கள் தயாராக இல்லை.

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் கிடைத்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ்த் தேசியத் தலைமையைக் கைப்பற்ற ஓடித் திரிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த மக்களுக்காகப் போராடிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைப் புறக்கணித்ததன் காரணத்தை எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்தியா அதை விரும்பவில்லை. அதற்கு அனுமதிக்கவில்லை. இந்தியாவின் கட்டளைப்படியே கூட்டமைப்பில் எஞ்சியிருந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களான கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரகுமார் ஆகியோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்தியாவில் அலுவலகம் அமைத்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகின்றது என்பது எமக்கு நன்றாகவே புரிந்துவிட்டது.

இந்தியாவால் ஈழத் தமிழர்களுக்கு விமோசனம் கிடையாது. இந்தியாவிடமிருந்துதான் ஈழத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆகையால், மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படாமல் ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், அவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எம்மைப் போன்ற ஒவ்வொருவரது கடமையாகவே உள்ளது.

இந்தியா எங்களிடம் வந்தபோது நாங்கள் இழந்தது கொஞ்சமாக இருந்தது.

இப்போது எங்களிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை, ஆனாலும்

இந்தியா வருகின்றது... ஏனென்றால் எங்களிடம் இன்னமும் உயிர்கள் மிச்சமிருக்கின்றது

சிங்கள தேசத்தை மிரட்டுவதற்கு எங்கள் இரத்தம் இன்னமும் அதற்குத் தேவைப்படுகின்றது!

நாங்கள் அழிந்தது போதும்! இந்தியாவிடம் எங்களை அடகு வைப்பதை நிறுத்திவிடுங்கள்!

பதிவு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20 நாள்தான் இருக்கு! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்டமைப்புக்கெதிரான பிரச்சாரத்தை உடன் நிறுத்துங்கள்

இலங்கை அரசின் சதித்திட்டத்திற்கு துணைபோகாதீர்கள்

தனிநபர்களின் விருப்புவெறுப்புகளுக்கு இடமளியாமல்

தமிழ்மக்களின் பொதுநலனில் கவனம் செலுத்துங்கள்

அழிந்தது இழந்தது போதும். இனியும் இடமளிக்க வேண்டாம்

ம்ம்ம்ம்... நல்லா கண்ணுக்குள் எண்ணெய் விட்டுப் பார்த்தும், இதில் அச்சுறுத்தும் ஒரு வாக்கியத்தைத் தானும் காணமுடியவில்லை. கஜேந்திர விசுவாகளுக்கு இருண்டதெல்லாம் பேய் போல் (அண்ணை ஒரு கேள்வி, தமிழர்களை படுகொலை செய்த சரத்துக்கு த.தே.கூ ஆதரிக்கும்போது இந்த கஜேந்திரன் கூத்தணியும் பாரளுமன்ற சீட்டுக் கிடைக்கும் என்ற கனவோடு ஒட்டிக்கொண்டு இருந்தவை தானே?)

20 நாள்தான் இருக்கு! :wub:

அத்துடன் பிச்சை காசு நின்றுவிடுமோ????????????????

ம்ம்ம்ம்... நல்லா கண்ணுக்குள் எண்ணெய் விட்டுப் பார்த்தும், இதில் அச்சுறுத்தும் ஒரு வாக்கியத்தைத் தானும் காணமுடியவில்லை. கஜேந்திர விசுவாகளுக்கு இருண்டதெல்லாம் பேய் போல் (அண்ணை ஒரு கேள்வி, தமிழர்களை படுகொலை செய்த சரத்துக்கு த.தே.கூ ஆதரிக்கும்போது இந்த கஜேந்திரன் கூத்தணியும் பாரளுமன்ற சீட்டுக் கிடைக்கும் என்ற கனவோடு ஒட்டிக்கொண்டு இருந்தவை தானே?)

சம்பந்தர் குழுவோ, கஜேந்திரன் குழுவோ எதுவாகிலும் பா உ கிடைத்த பிறகு வாக்கு போட்ட மக்களுக்கு எதிராக ஏதாவது செய்தால் அஞ்ஞாதவாசம் அனுபவிப்பதை தவிர வேறு வழியில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப பொய்கையா வரமாட்டியள்! :wub:

Edited by Mathivathanang

அப்ப பொய்கையா வரமாட்டியள்! :wub:

அட பொய்கையிலை காதலோ. ?

பொய்கை ஆம்பிளையோய். சிலிப்பர் கட்டைக்கும் சீலையை சுத்திவிட்டால் கூட அதுக்கும் மேலை பாயுற கூட்டம் தானே நீங்கள். :lol:

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நேரத்துக்க ஒரு வேசம்...... சிலிப்பர் கட்டையோ..... :wub:

குகன் தம்பிப் பிள்ளை என்கிற பெயரில் டென்மார்க் பஞ்சன் என்பவர்தான் மொட்டைக் கடிhங்கள் அனுப்புவதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.பஞ்சன் என்பவர் பற்றிய மேலதிக விபரங்கள் தேவைப்படின் இங்கு இணைக்கிறேன்

நானும் ஏதோ ஆயுத அச்சுருத்தலாக்கும் என்று நினைத்தேன்..

இதுவே வெருட்டலா படுதா? நல்லாது.

எனக்கென்னமோ எல்லாப்பக்கத்தாலும் சூழ்ச்சி சூளுவதாகத்தான் படுகிறது.

தமிழர்கள் தமக்குள்ளே அடிபட்டு தங்களது இலக்கை இழப்பார்கள் போலுள்ளது.

இபபோது இவர்கள் எல்லாம் செய்யும் தவறுக்கு இன்னொரு தலைமுறை சிலுவை சுமக்கவேண்டி வரலாம்.

ஆனால் ஒன்று அடுத்த தலைமுறை தாம் தமிழராக தம்மை அடையாளப்படுத்த கூச்சப்படும் அளவுக்கு தற்போது காரியங்கள் ஆர்ரப்படுகின்றது.

இன்னும் சில நாட்களில் தேர்தல் திருவிழா முடிந்து விடும். அதுக்குப்பிறகு சந்தோசமா ஊருக்குப் போறவர்கள் போய் பாருங்கோ. போகமுடியாதவர்கள் திரும்பவும் வந்து மேலும் பிரிவினையை வாருங்கோ. உங்களின் பங்களிப்புகள் தமிழ் சமூகத்துக்கு தேவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேச பத்திரிகையாளர் சங்க செயளாளர் குகன் தம்பிப்பிள்ளை மற்றும் உப தலைவர் இரா துரைரட்ணம்

Mr. Ira Thurairatnam, former president of the Sri Lanka Tamil Media Alliance (SLTMA), a reputed journalist exiled from Batticaloa, was elected vice-president. Denmark based Jouranlist Mr. Kugan Thambipillai was elected Secretary and Mr. Ratnam Kandasamy from France was elected treasurer.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=17826

Edited by Vasan

  • கருத்துக்கள உறவுகள்

அட பொய்கையிலை காதலோ. ?

பொய்கை ஆம்பிளையோய். சிலிப்பர் கட்டைக்கும் சீலையை சுத்திவிட்டால் கூட அதுக்கும் மேலை பாயுற கூட்டம் தானே நீங்கள். :wub:

இந்தியன் ஆமி இநதியாவில இருந்து மீண்டும் 1987ம் ஆண்டு சொறிகடிகளோடு இறக்கினான். இந்த நேரத்தில எங்கள் பக்கத்து ஊரிலை இரந்த சிலிப்பர் கட்டைகள் கொஞ்சம் கொஞ்சமாக காணமல் போச்சுது. சனம் சொல்லிச்சுது அவர்கள் புலிளுக்கு எதிரா நிக்க கவலரன் கட்டிகினம் எண்டு. அப்பவே நான் யோசிச்சன் இந்தியன்ர கக்குசுக்க இருக்கிற இவைக்கு என்னத்திற்கு காவல்அரண் என்டு?

ஆ.... ஆஆ சங்கதி அதுவோ? அந்த சனம் பாவம் நல்ல வெயில்பிடிக்குது எண்டெல்லோ ரயில்றோட்டில சீலைகளை காயப்போட்டதுகள்..... அடப்பாவிகளா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.