Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தந்திரோபாயக் கூட்டிற்கு தயாராகிறதா இந்தியா? --இதயச்சந்திரன்

Featured Replies

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிறது. மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்வது குறித்து அரச தரப்பினர் பாரிய வியூகங்களை அமைத்து வருகின்றனர். 13ஆவது, 17ஆவது திருத்தச் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களைக் கொண்டு வருவது உட்பட பல நிகழ்ச்சி நிரல்கள் மூன்றில் இரண்டில் உள்ளடக்கப்படுகின்றது.

அதேவேளை, மேற்குலகின் ஊடாக பிறிதொரு நெருக்கடிக்களமொன்று அரசை நோக்கி திறந்து விடப்பட்டுள்ளதையும் அவதானிக்கலாம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் போது, மந்த கதியில் செயற்பட்ட ஐ.நா. தற்போது சிறப்பு நிபுணர் குழு அமைக்கும் பணியில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.

சிங்கள தேசத்தினால் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமாக கிழித்தெறியப்பட்ட பின்னர் மேற்குலக கண்காணிப்புக் குழுவினர் வெளியேற்றப்பட்டனர்.

அந்த இடைவெளியை நிரப்பிட ஐ.நா. சபையின் மனித உரிமைக் கண்காணிப்பகமொன்று இலங்கையில் நிறுவப்பட வேண்டுமென்று ஜோன் ஹோம்ஸ் அன்று அறிவித்திருந்தார்.

அதனை தென்னிலங்கையில் எல்லோரும் கூட்டிணைந்து எதிர்த்தார்கள். அவ்வாறான கண்காணிப்புக்குழுவொன்றினை தமது அரசு அமைக்குமென்றும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் அனுசரணையும், புலமை சார் அறிவுரைகளும் இருந்தாலே போதும் என்கிற எதிர்வாதமும் முன்வைக்கப்பட்டது.

காலப்போக்கில் ஐ.நா. கண்காணிப்பகக் கதைகளும் மௌனித்து விட்டன. போரின் இறுதி நாட்களில் நடைபெற்ற கொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளிற்கான நிபுணர் குழுவொன்றை அமைக்க வேண்டுமென்பதன் ஊடாக இவ் விவகாரம் மறுபடியும் ஐ.நா. சபையில் முன்னெடுக்கப்படுகிறது.

மனித உரிமை பேரவையின் தலைவர் நவநீதம்பிள்ளை அம்மையாரின் அழுத்தங்களின் காரணமாக இக்குழு அமைக்கும் விவகாரம் மேலோங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும் இறைமையுள்ள தேசங்களின் ஒன்றுகூடும் மையான ஐ.நா. சபைக்கு இது குறித்து குழு அமைப்பதற்கும் விசாரணை மேற்கொள்வதற்கு உரிமை உண்டென பொதுச் செயலாளர் பான் கீ மூன் வாதிடுகிறார்.

இங்கு "இறைமை' என்கிற பதத்தின் வரையறை குறித்து சிங்கள தேசமும், பான் கீ மூனும் பனிப்போர் நிகழ்த்துவதை அவதானிக்க வேண்டும்.

பூர்வீக தேசிய இனமொன்றிற்கு இறைமை, சுயநிர்ணய உரிமை உண்டு என்கிற ஐ.நா. சபை சாசன விதிகளை தவிர்த்தவாறு சிங்கள தேச இறைமை குறித்து பொதுச் செயலாளர் பேச முற்படுவதையும் கவனத்தில் கொள்ளலாம்.

ஆயினும் இப்புதிய நகர்வில், வழமைபோல் நழுவல் போக்கினை ஐ.நா. கடைப்பிடிக்குமா அல்லது உறுதியாகவிருக்குமாவென்பதை உலக வல்லாதிக்க நாடுகளே தீர்மானிக்க வேண்டும் என்று கணிப்பிடலாம்.

ஜி.எஸ்.பி. வரிச் சலுகையை இரத்துச் செய்யும் அச்சுறுத்தல்கள், உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் பிரித்தானிய உயர்மட்ட அமைச்சர்களின் பிரசன்னம், மூன்றாம் கட்ட நிதி வழங்கலில் சர்வதேச நாணய நிதியம் போடும் நிபந்தனைகள் போன்றவற்றோடு, நிபுணர்குழு அமைக்கும் விவகாரத்தையும் பொருத்திப் பார்த்தால் மேற்குலகின் இராஜதந்திர நகர்வினை புரிந்து கொள்ளலாம்.

இந்நகர்விற்கு எதிராக சிங்கள தேசத்தின் பக்கமாக நிலை எடுத்துள்ள செயலற்றுக் கிடந்த அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பும் போர்க் கொடி தூக்கியுள்ளது.

இலங்கை விவகாரத்தில் அனைத்துலக மட்டத்தில் இரண்டு முகாம்கள் தோற்றம் பெறுவதனை இச் செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

ஆனாலும் இங்கு அவதானிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், ஒரு ரில்லியன் பொருளாதாரத்தை கொண்ட இந்திய தேசமானது எவ்வகையான தந்திரோபாயக் கூட்டினை முன்னெடுக்கப் போகிறது என்பதாகும்.

உலக வளங்களைப் பங்கிடுதலில் ஏற்பட்டுள்ள போட்டி சீனாவின் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்தில் தாக்கங்களை உருவாக்குமென்று இந்தியா உணர்கிறது.

முரண்பாடுகள் தணிவடைவதற்கு ஆசியாவின் இரண்டாம் நிலையிலுள்ள அணு ஆயுத பொருண்மிய பலம் கொண்ட இந்தியாவின் அனுசரணையும் தற்காலிக கூட்டு உறவும் தேவை என்பதை சீனா புரிந்து கொள்ளும்.

இத்தகைய பிராந்திய நலன் சார்ந்த தந்திரோபாய இணைவு, சிங்கள தேசத்தை பலப்படுத்த உதவும் என்பதை மறக்க முடியாது.

தற்போது சீன மக்கள் பேரவையின் மாநாட்டில் பொருளாதார இராணுவ விரிவாக்கம் குறித்து பேசப்படும் விடயங்கள் பற்றியே இந்தியாவும் மேற்குலகும் அதிக கரிசனை கொள்கின்றன.

இந்தியாவை சுற்றி முத்துமாலை போன்று கோக்கப்பட்டும், குவாடர், அம்பாந்தோட்டை, சிட்டகோங், சிட்வே துறைமுகங்கள் பற்றியே அதிகம் பேசப்படுகிறது.

ஆனாலும், தென்சீனக் கடலிலுள்ள சன்யா அணு ஆயுத ஏவுகணைகளைத் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் தளம் போன்று இன்னுமொரு கடற்படைத் தளத்தினை இந்து சமுத்திரம் பிராந்தியத்தில் சீனா நிர்மாணிக்க முற்படலாமென்கிற பேரச்சமே இந்திய மேற்குலகை வாட்டி வதைக்கிறது.

அண்மையில் வெளியிட்ட கட்டுரையொன்றில் இந்திய ஆய்வாளர் பாஸ்கர் ரோய் சீனாவின் இராணுவ தொழில்நுட்ப விரிவாக்கம் குறித்து விரிவான பல தகவல்களை வழங்கியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு, சீனா ஒதுக்கிய நிதி 78.25 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

இது ஏறத்தாழ 7.5 சதவீத நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பாகும். சீனாவின் தேசிய மொத்த உற்பத்தியில் (கூஈக) 1.4 சதவீதமும் தேசிய பாதீட்டில் 6.3 சதவீதமும், பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

1978ஆம் ஆண்டளவில் சந்தைப் பொருளாதார முறைமையை ஏற்றுக்கொண்ட சீனா, மக்கள் விடுதலை இராணுவத்தை (கஃஅ) வர்த்தகமயமாக்கி விட்டதென்கிற பார்வை, பல இராணுவ, அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படுவதை உணரலாம்.

இதன் எதிர்விளைவுகள், இராணுவக் கட்டமைப்பில் ஊழல்களை உருவாக்குவதால் படைத்துறை விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்படும் நிதி, சரியாகக் கையாளப்படுமாவென்கிற அச்சம் சீன அரச உயர்மட்டத்தினர் மத்தியில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

80களில் முன்னெடுக்கப்பட்ட, அணுஆயுதம் தாங்கிய 093, 094 வகை ஏவுகணைகளை கொண்டு செல்லும் நீர்மூழ்கி கப்பல்களை வடிவமைக்கும் திட்டம் 2004 2006 ஆண்டளவில் பூர்த்தியாகி இயங்கு நிலையை அடைந்துள்ளது.

அத்தோடு ஜனவரி 2007இல் பாதுகாப்புச் செயற்கைக்கோள் ஒன்று நிலத்திலிருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை மூலம் வீழ்த்தப்பட்ட நிகழ்வு, விண்வெளி யுத்த களத்திற்கு, சீனா தன்னை தயார்ப்படுத்தி வருவதை உணர்த்தியது.

இதைத்தவிர சைபர் தாக்குதல்கள் கதிரியக்க யுத்த உபகரணங்கள் மற்றும் லேசர் ஆயுதங்கள் என்பவற்றிலும் தனது ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றினை உருவாக்கும் பலத்தையும் சீனா பெற்றுள்ளது.

இவற்றோடு ஒப்பிடும் போது, இந்தியாவின் அதியுயர் ஆயுதமாக 3500 கி.மீற்றர் வீச்செல்லை கொண்ட அணு ஆயுதம் தாங்கிய அக்னி ஐஐஐ ஏவுகணையினை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஆகவே, தனது பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு பொருளாதாரக் கட்டுமானங்களை விரிவாக்குவதற்கும் அணு விரிவாக்க தொழில்நுட்பங்களுக்கும் மேற்குலகில் தங்கியிருக்கும் அவசியம் இந்தியாவிற்கு ஏற்படுவதை அவதானிக்கலாம்.

உலக உணவுத் திட்டத் தகவலின்படி பட்டினியால் வாடும் உலக மக்களின் 50 சதவீதமானோர் இந்தியாவில் வாழ்கின்றார்கள்.

இந்நிலையில் 6.7 சதவீத பொருளாதார வளர்ச்சி அத்தோடு உலகின் முதல் பத்து நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது என்கிற விவகாரங்களெல்லாம் மக்களின் வாழ்வாதார உயர்வு இல்லாதவிடத்து வெறும் பேச்சுப் பல்லக்கு கதையாகவே அமைந்து விடும்.

சீனாவுடன் ஏற்படும் ஆதிக்கப் பனிப்போர், தேசிய மொத்த உற்பத்தியின் பெரும் பகுதியை ஆயுத உற்பத்திக்குள் முடக்கி விடும்.

இந்நிலையில், இலங்கையில் சீனாவின் பொருண்மிய முதலீட்டு ஆதிக்கத்தை முறியடிக்க தொடர்ச்சியாக பல கடனுதவிகளை இலங்கைக்கு இந்தியா வழங்கி வருவதைக் காணலாம்.

தென்பகுதி புகையிரத சேவை அபிவிருத்திக்கு மேலதிக கடனுதவியாக 100 மில்லியன் டொலர்களை வழங்கிய இந்தியா இரண்டாம் கட்டமாக 67.4 மில்லியன்களை வழங்கவிருக்கிறது.

ஏட்டிக்குப் போட்டியாக அதே புகையிரத சேவை விரிவாக்கத்திற்கும், மாத்தறை விமான நிலைய கட்டுமானங்களிற்குமாக 290 மில்லியன் அமெரிக்க டொலர்களை தனது எக்சிம் (உஙீஐM) வங்கியூடாக சீனா உதவுகிறது.

2009ஆம் ஆண்டிற்கான சீனாவின் நிதியுதவி 1.2பில்லியன் டொலர்களை தாண்டி விட்டதாக கூறப்படும் செய்தி அனைத்துலக நாணயச் சபைக்கு அதிர்ச்சியைத் தந்திருக்கலாம். தன் பங்கிற்கு 42.4 மில்லியன் டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, மேற்குலகின் அழுத்தங்களுக்கு சிங்கள தேசம் அதிர்ந்து போகாது என்பதனை உணர மேற்குறிப்பிட்ட முதலீட்டுத் தரவுகள் போதுமானது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தவுடன் இந்திய சீன நிகழ்ச்சி நிரல்கள் எவ்வாறு அமையுமென்பதை மேற்குலகும் கூர்ந்து கவனிக்கும்.

ஆளும் கட்சிக் கூட்டமைப்பினர் நாடாளுமன்றக் கதிரைகளை அதிகமாக நிரப்பும் வாய்ப்பு இத்தேர்தல் மூலம் உருவாகுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஆயினும் தமிழர் தாயக அரசியல் நிலைமை மிகவும் சிக்கலானதொரு நிலை நோக்கி நகர்கின்றது.

நூற்றுக்கணக்கான சுயேட்சைக் குழுக்களும் ஓரணிக்குள் ஏற்பட்ட பல பிரிவுகளும் ஆளும் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்புக்களும் தமிழ்த் தேசிய அரசியலின் பலமிக்க தளமொன்றை சிதைத்து விடலாம்.

அதேவேளை, சிங்களதேசத்தின் அடுத்த தேர்தல் அறிவித்தல், தமிழர் அரசியல் தளத்தினை மேலும் பலவீனமடையச் செய்யும் விடயமாக அமையப் போகிறது. அதுதான் வடமாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு.

வடக்கின் வசந்தம், மாகாண சபை மாளிகையாக நிர்மாணிக்கப்படப் போகிறது. இங்கு தான் சிக்கல் ஆரம்பமாகிறது.

வடமாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கு கொள்ளுமா என்கிற கேள்வியும் எழுகிறது.

வட மாகாண சபைத் தேர்தலைப் புறக்கணித்தால் அரச சார்ப்புக் கட்சி ஆட்சியில் அமர்ந்து விடுமென இப்போதே சிலர் வாதம் புரிகிறார்கள்.

அதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்து கொண்டால் இணைந்த தாயகக் கோட்பாட்டை கைவிட்டது போலாகி விடுமென வேறு சிலர் எச்சரிக்கிறார்கள்.

ஆகவே, தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்கிற கோட்பாடுகளை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த கூட்டமைப்பு, பிரிக்கப்பட்ட வடமாகாணத்திற்கான சபைத் தேர்தலில் பங்குகொள்ளுமா, இல்லையா என்பதை இப்போதே தெரிவிக்கலாம். வேளைவரும் போது சிந்திக்கலாம் என்கிற விடயமல்ல இது.

அதேவேளை நாடாளுமன்ற தேர்தலில் வடக்குகிழக்கு தமிழர் பிரதிநிதித்துவம் குறைவடைந்து எந்தவொரு தமிழ் தேசிய அணிக்கும் பேரம் பேசும் அரசியல் வலு அற்றுப் போனால் சிங்கள தேசத்துடனான இந்தியாவின் தந்திரோபாயக் கூட்டு புதிய பரிமாணமெடுக்கும்.

அதாவது கூட்டமைப்பின் வேண்டுகோள்களை செவிமடுக்கும் அவசியமும் இந்தியாவிற்கு இருக்காது.

கிழக்கு மாகாண சபை மற்றும் புதிதாக உருவாகும் வட மாகாண சபை ஊடாக அபிவிருத்தி, மீள்கட்டமைப்பு புனர்வாழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் அதேவேளை, தாயக மக்களின் இனப் பிரச்சினை, மாகாண சபை மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்திற்கு இந்தியா அறிவிக்கும்.

இந்த நிலை நோக்கியே இந்திய இலங்கை தந்திரோபாயக் கூட்டு நகரப் போகிறது.

http://www.tamilarkal.com/

இலங்கை தன்னை எந்தத் தாக்குதலிலும் இருந்து பாதுகாத்துக் கொள்ளும். அது தனக்கு இரண்டு பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிட்டது. இந்தியா, சீனா என்பவைதான். இந்தியா இலங்கையை மிரட்டும் நண்பன். சீனா கைவிடாத நண்பன். இந்த இருவரும் இலங்கையை விட்டு இனிமேல் விலகமாடார்கள்.

மேற்குலகம் திறந்திருக்கும் நெருக்கடிகளையெல்லாம் சீனாவும் இந்தியாவும் இணைந்து செயற்படாமலே முறியடித்துவிடும்.

இலங்கை தன்னை எந்தத் தாக்குதலிலும் இருந்து பாதுகாத்துக் கொள்ளும். அது தனக்கு இரண்டு பாதுகாப்பு வளையங்களை அமைத்துவிட்டது. இந்தியா, சீனா என்பவைதான். இந்தியா இலங்கையை மிரட்டும் நண்பன். சீனா கைவிடாத நண்பன். இந்த இருவரும் இலங்கையை விட்டு இனிமேல் விலகமாடார்கள்.

மேற்குலகம் திறந்திருக்கும் நெருக்கடிகளையெல்லாம் சீனாவும் இந்தியாவும் இணைந்து செயற்படாமலே முறியடித்துவிடும்.

ஈழத்தமிழனின் இழப்பில் சிங்கள் சிறிலங்காவும் இந்தியாவும் தேனிலவு ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நாங்கள் தலையில் துண்டைபோத்துக்கொண்டு .......ஜனநாயக அரசியல் செய்ய வேண்டியதுதான்

  • தொடங்கியவர்

இந்த தேனிலவு பிரியும்..மிக விரைவில் இந்தியாவில் பல பிரச்சனைகள்.....

இந்தியாவின் பலவீனங்கள் என்ன?

* சமாளிக்க முடியாத சனத் தொகை. இந்தியா தொடர்ந்து பொருளாதார வளர்ச்சிகளைக் கண்டாலும் அங்கிருந்து வறுமையை சமூக வேறுபாடுகளை ஒழிக்க முடியவில்லை.

* மாற்ற முடியாத பழமை வாதம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவான இந்திய இந்துப் பழமைவாதத்தில் இருந்து இன்னும் இந்தியா விடுபடவில்லை. இன்றும் சாதிகள் என்று சொல்லி அடிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்திய முட்டாள்கள்.

* சூழ்பகை. இந்தியாவைச் சுற்றிவர உள்ள நாடுகள் எல்லாம் இந்தியாவைத் தமது எதிரிகளாகவே பார்கின்றன.

* தளராத அமெரிக்க பாக்கிஸ்தானிய உறவு. இந்தியாவுடன் நட்பு வளர்ககப் படும் பாக்கிஸ்தான் மீது போர் தொடுக்கப் படும் என்று கூவி அமெரிக்கா வாழ்இந்தியர்களின் வாக்குக்களை பெற்ற பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்ததும் கடந்த ஒரு தசாப்தமாக வளர்ந்த அமெரிக்க இந்திய உறவை ஒருவருடத்தில் பின்தள்ளிவிட்டார். அமெரிக்கா தொடர்ந்து பாக்கிஸ்த்தானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கிவருகிறது.

* அடங்காத் தீவிரவாதம். இந்திய தனது நாட்டில் தீவிரவாதத்தை அடக்க முடியாமல் திணறுகிறது. 2007இல் ஜேன்ஸ் வீக்லி இப்படிச் செய்தி வெளியிட்டது: Terrorists struck India again with multiple bombs in Hyderabad on 25 August. Islamic extremists are the prime suspects, although the bombs were poorly targeted if they were intended to incite communal violence between Muslims and Hindus. At the same time, the bombings highlighted the complex nature of the jihadist threat to India and the country's poor record in bringing to justice the people responsible for a growing number of mass-casualty attacks.

* அதிக முதியோர். இப்போது மேற்குலகை திணறடிக்கும் பிரச்சனையான அதிக முதியோர் குறைந்த இளையோர் பிரச்சானக்கு இந்தியா விரைவில் முகம் கொடுக்க வேண்டிவரும். இந்தியா செய்துவரும் குடும்பக் கட்டுப்பாடு விரைவில் இந்தியாவில் அதிக முதியோர் குறைந்த இளையோர் என்ற பிரச்சனையை உருவாக்கும்.

* மத்தியில் குவிந்திருக்கும் அதிகாரம். இந்தியப் பேரினவாதிகள் இந்திய அரசின் அதிகாரங்களை பரவலாக்கத் தயாராக இல்லை. இது பெரும் நிர்வாகச் சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

மேற்குலகு இந்தியாவை மேற்கூறப்பட்ட சிக்களில் இருந்து காப்பாற்றும்....ஜனநாயகம் என்ற போர்வையில் .இந்தியர்களை அதிகளவில் அவுஸ்ரெலியாவுக்குள் அனுமதித்தமை ,இந்திய சினிமாக்களுக்கு ஆஸ்கார் விருதுகள் ,

இந்தியர்கள் ஜனநாயகவாதிகள் என்று பிரச்சாரங்கள்

//அதாவது கூட்டமைப்பின் வேண்டுகோள்களை செவிமடுக்கும் அவசியமும் இந்தியாவிற்கு இருக்காது.//

இதைத் தானே நாங்கள் இங்கே சொல்லி வருகிறோம்.தற்போதைய நிலமைகளில் இன்று தமிழருக்கு இருக்கும் ஒரே பலம் புலம் பெயர் தமிழர்கள்.மேற்குலகின் நலங்களும் தமிழரின் நலங்கலும் ஒரே புள்ளியில் சந்திக்கும் போது புலம் பெயர் தமிழர்களின் தாயகம் தன்னாட்ச்சி சுயனிர்ணயம் என்னும் கோட்பாடு பலம் பெறும்.அதனைப் பிரயோசனம் செய்வதாயின் எங்களுக்கு இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து களத்தில் வேலை செய்யக் கூடிய ஒரு அரசியற் சக்தி அவசியம்.ஆனால் அரசியல் அறிவற்ற மறி வரும் சர்வதேச நலன் சார் ஒழுங்க்கைக் கவனிக்க வல்லமை அற்ற சம்பந்தன் தலமையிலான குழு நினைக்கிறது இந்தியா இவர்களுக்கு ஒரு தீர்வைத் தரும் என்று.அதனாலையே அவர்கள் மேற்குலகின் அனுசரணையுடன் இயங்க முனையும் புலத் தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற தாயாராக இல்லை.

மேற்குலகக் கூட்டணியுடன் இந்தியா சிறிலங்காவைப் பொறுத்தவரை இணைந்து பணியாற்ற மாட்டாது.ஏனெனில் அதன் அதிகார வர்க்கம் இந்தியாவின் நீண்டகால புவியியல் நலன் சார் அடிப்படிஅயில் அன்றி, தேசிய இனங்களின் சுய நிர்ணய அடிப்படைகளுக்கு முற்றிலும் எதிரான நிலையிலையே இயங்குகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

//அதாவது கூட்டமைப்பின் வேண்டுகோள்களை செவிமடுக்கும் அவசியமும் இந்தியாவிற்கு இருக்காது.//

இதைத் தானே நாங்கள் இங்கே சொல்லி வருகிறோம்.தற்போதைய நிலமைகளில் இன்று தமிழருக்கு இருக்கும் ஒரே பலம் புலம் பெயர் தமிழர்கள்.மேற்குலகின் நலங்களும் தமிழரின் நலங்கலும் ஒரே புள்ளியில் சந்திக்கும் போது புலம் பெயர் தமிழர்களின் தாயகம் தன்னாட்ச்சி சுயனிர்ணயம் என்னும் கோட்பாடு பலம் பெறும்.அதனைப் பிரயோசனம் செய்வதாயின் எங்களுக்கு இந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைந்து களத்தில் வேலை செய்யக் கூடிய ஒரு அரசியற் சக்தி அவசியம்.ஆனால் அரசியல் அறிவற்ற மறி வரும் சர்வதேச நலன் சார் ஒழுங்க்கைக் கவனிக்க வல்லமை அற்ற சம்பந்தன் தலமையிலான குழு நினைக்கிறது இந்தியா இவர்களுக்கு ஒரு தீர்வைத் தரும் என்று.அதனாலையே அவர்கள் மேற்குலகின் அனுசரணையுடன் இயங்க முனையும் புலத் தமிழர்களுடன் இணைந்து பணியாற்ற தாயாராக இல்லை.

மேற்குலகக் கூட்டணியுடன் இந்தியா சிறிலங்காவைப் பொறுத்தவரை இணைந்து பணியாற்ற மாட்டாது.ஏனெனில் அதன் அதிகார வர்க்கம் இந்தியாவின் நீண்டகால புவியியல் நலன் சார் அடிப்படிஅயில் அன்றி, தேசிய இனங்களின் சுய நிர்ணய அடிப்படைகளுக்கு முற்றிலும் எதிரான நிலையிலையே இயங்குகிறது.

பொருளாதாரப்பலம் ஒன்று தான் இதைச்செய்யும்.மற்றும் படி வேறு எதுவும் அவர்களுக்கு எங்களிடம் எதுவம் தேவைப்படாது.இலங்கையை மேற்குலகின் நெருக்கடிகளில் இருந்து சீனா பாதுகாக்கும்.ஏற்கனவே பாதுகாத்தும் இருக்குது.இப்ப சீனாவும் இந்தியாவும் இலங்கையை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க பாவிக்கும் ஆயுதம் முதலீடுகள்தான்.

அரசியற்பலம் இன்றி பொருளாதரத்தால் ஒன்றையும் செய்துவிட முடியாது.மேற்குல்கம் இன்று கையில் எடுதிருக்கும் ஆயுதம் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றம் என்பன.இவை தமிழர்கள் மீதே பிரயோகிக்கப்பட்டன.மில்லி பான்ட்டும் ஒரு நாட்டின் பிரதமரான கோடன் பிரவுணும் தமிழர்களால் நடாத்தப்பட்ட ஒரு நிகழ்வுக்கு வருகிரார்கள் என்றால் அவர்களுக்கு நாம் வேண்டும்.இதனையே நாங்கள் சாதகமாகப் பாவிக்க வேண்டும்.அவர்களின் நலங்களுக்கு அவர்கள் எங்களைப் பாவிப்பது போல் எமது நலங்களுக்கு நாம் அவர்களைப்பாவிக்க வேண்டும்.அதற்க்கு நாம் கொள்கை ரீதியாக ஒன்று பட்டு இருக்க வேண்டும்.களத்தில் நிற்க்கும் அரசியற் சக்தி ஒரு கொள்கையையும் புலத்தில் இருக்கும் நாங்கள் இன்னொன்றையும் சொல்லிக் கொண்டு செயற்பட முடியாது.களத்தில் இருக்கும் கஜேந்திரக் குமார் அணி இதனைத் தான் சொல்லிக் கொண்டிருகிரார்கள்.ஆனால் சம்பந்தர் தலமையிலான குழுவோ இன்னும் இந்தியாவை நம்பிக் கொண்டிருகிறார்கள்.அவர்கள் தமிழர்களின் தயவில் அன்றி இந்தியாவின் தயவில் நின்று அரசியல் செய்ய நினைகிரார்கள்.அது எவ்வளவு தூரம் தமிழர்கலுக்குப் பாதிப்பை உண்டு பண்ணும் என்பதை நாங்கள் வரலாற்றில் எதினை தடவைகள் பார்த்து விட்டோம்.இந்தியாவால் நாம் இழந்த உயிர்கள் சொதுக்கள் எல்லாம் இவர்களுக்கு இன்னும் காணாதா?இனியும் இழக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நாரதா.நீங்கள் சொல்வது சரி.அப்படியே பாத்தாலும் எங்கள் நிலைப்பாட்டை ஏற்று செயல் படக்கூடிய கட்சியை நாங்கள் பணம் மூலம் உருவாக்க முடியாது.அப்படி ஒரு கட்ச்சி இருந்து அதுக்கு வாக்கு போடுங்கோ என்று சொன்னால் அங்குள்ள மக்கள் எமது சொல்லை கேட்ப்பார்களா? ஆனால் வாக்காளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் வாக்குகளை பெறலாம்.அந்தக்கட்ச்சி வந்தால் இப்படி நடக்கும் இந்தக்கட்சி வந்தால் இப்படி நடக்கும் என்று சொன்னால் மக்கள் கேக்கிற நிலமையில் இப்ப இல்லை.நாங்கள் இப்படியே புடுங்குப்பட்டுக்கொன்டிருக்க மக்கள் அரசாங்காத்துக்கு பின்னால போயிடும் போல இருக்கு. :lol:

நீங்கள் சொல்வது உண்மைதான் சிலர் இவை பற்றி அதிகம் சிந்திக்காமால் அன்றாடம் கிடைக்கக்கூடிய சலுகைகளுக்காக சிறிலங்கா அரசிடம் போவார்கள் இன்னும் சிலர் இந்திய அரசின் பின்னால் போவார்கள்.அவர்கள் அற்ப சலுகைகளுக்காகப் பொகிறார்கள் என்பதற்காக நாங்கள் பேசாமலிருக்க முடியாது.அற்ப சலுகைகளுக்காக மக்கள் தங்கள் வாக்குகளை வழங்க முடியும்.அது சில நூறு ரூபாய்கள் முதல் சில உறுதி மொழிகள் என வேறு படும்.புகைப்பது கெடுதல் என்று தெரிந்தும் புகை இன்பத்திற்க்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு நாங்கள் தான் சொல்ல வேண்டும் புகை பிடிப்பதன் நீண்டகால கெடுதல்கள் பற்றி.அரசியல் ரீதியாக புவிசார் நலன் ரீதியாககச் சிந்திக்கக்கூடியவர்கள் காரணகாரியங்களை விளக்கிச் சொன்னால் மக்கள் இதில் இருக்கும் கெடுதல்களை அறிந்து கொண்டு சலுகைகளைப் பெற்றுக் கொண்டு மாற்றி வாக்களிக்க முடியும்.அதற்குத் தான் மக்கள் அரசியல் ரீதியாகத் தெளிவாக இருக்க நாங்கள் ஊடகங்கள் வாயிலாக,அங்கிருப்பவர்களுடந்தொலைபேசியில் கதைப்பதன் வாயிலாக என பல வழிகளிலும் செயற்பட வேண்டும்.

தாயகம் தனாட்ச்சி சுய நிர்ணயம் என்னும் அடிப்படையில் இயங்கும் ஒரு கட்சியாக த தே ம கூ இருக்கும் போது, புதிதாக நாங்கள் ஒன்றையும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை.அவர்களுக்கு ஆதரவு வழங்கினால் போதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய இந்தியாவின் நிலை ஆப்பிழுத்த குரங்கு தான். பெருகிவரும் சனத்தொகை, பஞ்சம், மாநிலப்பிரச்சனைகள் மட்டுமல்லாது அகலக்கால்; வைத்து அண்டைநாடுகளில் கொடூரக்கொலைகள் புரிந்தமை, இறுகி வரும் எல்லைப்பிரச்சனைகள் எல்லாம் தொங்குநிலையில் இருக்க, இலங்கை அரசைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் எண்ண ஆதிக்கத்தில் இவர்கள் விரைவில் எல்லாவற்றையும் கோட்டைவிடுவார்கள்.

சிங்கள அரசு முள்ளை முள்ளால் எப்படி எடுப்பது என்ற விதத்தில் இந்தியாவை தன் கட்டுக்குள் முறையாகக் கொண்டுவந்துள்ளார் என்பதே யதார்ர்த்தம். இந்தியத வளர்த்த தமிழர் போராட்டத்தை இந்தியாவைக்கொண்டே அழித்து அதன்பின் ஏற்படப்போகும் இந்தியாவின் இலங்கைமீதான தலையீட்டைத்தடுக்க சீனாவை இருத்திவிட்டது மிகப்பெரிய இராஜதந்திரமாகும்.

எனவே இந்தியாவின் இலங்கைமீதான ஆதிக்கம் நிலைக்கவேண்டுமானால் சீனாவுடன் போரிடுவது தவிர்hமுடியாதது.

இன்றைய இந்தியாவின் நிலை ஆப்பிழுத்த குரங்கு தான். பெருகிவரும் சனத்தொகை, பஞ்சம், மாநிலப்பிரச்சனைகள் மட்டுமல்லாது அகலக்கால்; வைத்து அண்டைநாடுகளில் கொடூரக்கொலைகள் புரிந்தமை, இறுகி வரும் எல்லைப்பிரச்சனைகள் எல்லாம் தொங்குநிலையில் இருக்க, இலங்கை அரசைத் தங்கள் கைக்குள் வைத்திருக்கும் எண்ண ஆதிக்கத்தில் இவர்கள் விரைவில் எல்லாவற்றையும் கோட்டைவிடுவார்கள்.

சிங்கள அரசு முள்ளை முள்ளால் எப்படி எடுப்பது என்ற விதத்தில் இந்தியாவை தன் கட்டுக்குள் முறையாகக் கொண்டுவந்துள்ளார் என்பதே யதார்ர்த்தம். இந்தியத வளர்த்த தமிழர் போராட்டத்தை இந்தியாவைக்கொண்டே அழித்து அதன்பின் ஏற்படப்போகும் இந்தியாவின் இலங்கைமீதான தலையீட்டைத்தடுக்க சீனாவை இருத்திவிட்டது மிகப்பெரிய இராஜதந்திரமாகும்.

எனவே இந்தியாவின் இலங்கைமீதான ஆதிக்கம் நிலைக்கவேண்டுமானால் சீனாவுடன் போரிடுவது தவிர்hமுடியாதது.

நான் உங்களை குறை சொல்லவோ நையாண்டி பண்ணவோ இதை சொல்ல வரவில்லை.

இதைப் பாத்ததும் எனக்கு ஏனோ சிரிப்பு வந்திட்டுது. :lol:

இந்தியா சீனாவோடு சண்டை பிடிக்குமா? பகிச்தாநோடோ அல்லது இலங்கையோடோ கூட சண்டை பிடிக்கிற நிலைமையில் இன்று இந்தியா இல்லை. அதுக்குள்ளே அவர்கள் சீனாவோட எங்க சண்டை பிடிக்கப் போறார்கள்?

வேணுமென்றால் நொந்தவர்கள் தம்மை விட பலவீனமானவர்களை வேண்டுமென்றால் இந்தியா அளிக்க நினைக்கும்.

தலிபானோடு கூட நழுவல் போக்குத்தானாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.