Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாடகர்களின் கன்னிப்பாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘மழலைக்குரல் பாடகி’ எம்.எஸ்.ராஜேஸ்வரி

Naam Iruvar - Tamil Movie

Star Cast:T.R.Mahalingam ,T.A.Jayalakshmi,Kumari Kamala,B.Ramakrishna Panthalu,V.K.Ramasamy,T.R.Ramachandran

1947-இல் வெளிவந்த ஏவி.எம்.மின் ‘நாம் இருவர்’ படத்தில் ‘மஹான் காந்தி மஹான்’ என்ற பாடலே இவரது முதல் பாடல். இப்பாடல் அக்காலத்தில் மிகப் பிரபலமானது. ஆனால் இவரது பெயர் இசைத்தட்டில் இடம்பெற்றிருக்காது.

விஜயலட்சுமி என்ற ஒரு படத்தில் மட்டும் இவர் நடித்துமிருக்கிறார். நடிப்பதில் ஆர்வமில்லாததாலும், பாடகியாக மட்டுமே இருக்கவேண்டுமெனவும் நினைத்தபடியால் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

  • Replies 121
  • Views 36.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
சசிரேகா

இசை ஞானியால் அறிமுகப்படுத்தப்பட்ட இவரின் முதல் பாடல் காயத்ரி படத்தில் இடம் பெற்ற வாழ்வே மாயமா..?என்ற பாடலாகும். வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அரணாச்சலம் ஆகும்.
 

வாழ்வே மாயமா
வெறும் கதையா
கடும் புயலா
வெறும் கனவா நிஜமா

 

மலரில் நாகம்
மறைந்திருக்கும்
மனதுக்குள் மிருகம்
ஒளிந்திருக்கும்
திரைப்போட்டு நீ…..
மறைத்தால் என்ன
தெரியாமல் போகுமா….

  • கருத்துக்கள உறவுகள்

எல் ஆர் ஈஸ்வரியின் முதல் கன்னிப்பாடல்

படம் : நல்ல இடத்து சமந்தம்

இசை : K.V.மஹாதேவன்

பாடியவர் : L.R.ஈஸ்வரி

வரிகள் : A.மருதகாசி

 

இவரே தான் அவரு அவரே தான் இவரு

புகை நுழையாத இடத்திலும் கூட

நடு ராத்திரியில் புகுந்து புது முறையாலே

பொருளை தேடி நமக்கே கொடுக்கும் சீமான் இவரு

 

 

திரையுலகில்

 

மனோகரா (1954) படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் “இன்ப நாளிலே இதயம் பாடுதே” என்ற பாடலை ஜிக்கி குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜானகி முதல் கன்னிப்பாடல்

விதியின் விளையாட்டு

பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.

 

 

 

 

ஜானகி தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி - சத்யவதி தம்பதிகளுக்கு பிறந்தார். சிறு வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார். நாதசுர மேதை பைடிசாமி என்பவரிடம் முறையாக இசைப் பயிற்சியைப் பெற்றார். சென்னைக்கு இடம்பெயர்ந்த ஜானகி ஏவிஎம் ஸ்டூடியோவில் இணைந்து திரைப்படத்துறையில் நுழைந்தார். 1957 ஆம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் பாடல் ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜமுனா ராணி ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் வரதலாஜுலு, திரௌபதி ஆகிய இணையருக்கு 1938 மே 17 அன்று பிறந்தார். இவரது தாயார் ஒரு வீணை இசைக்கலைஞராவார். இவர் பெண்களைக் கொண்ட ஒரு இசைக்குழுவை நடத்திவந்தார். ஜமுனா ராணி தன் ஏழுவயதில் தியாகய்யா என்ற தெலுங்குத் திரைப்படத்தில் முதன்முதலில் பாடினார். தமிழில் கல்யாணி திரைப்படத்தில் சக்சஸ் சக்சஸ், ஒன் டூ திரீ என இருபாடல்களைப் பாடி பின்னணிப் பாடகியாக அறிமுகமானா

 

1952ல் வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸின் கல்யாணி திரைப்படத்தில் K.ஜமுனாராணி பாடிய பாடல் 'success'. G.ராமநாதன்-S.தக்ஷிணாமூர்த்தி இணைந்து இசையமைத்த

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளர் தேவாவிற்கு ‌பிறகு, கானா பாடல்களால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர்  கானா பாலா என்னும் பால முருகன். 2007 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான ’பிறகு’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கானா பாலா. அந்தப் படத்துல் ‘பதினோரு பேரு ஆட்டம்’, ‘உன்னைப் போல பெண்ணை’  ஆகிய  பாடல்களை பாடியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏ.எம்.ராஜா

‘சம்சாரம் சம்சாரம், சகல தர்ம் சாரம்‘

        ராஜாவின் தமிழ் உச்சரிப்பிள் எந்த இடைஞ்சலும் இல்லை என்று ஜெமினியில் உறுதி செய்து கொண்டார்கள். படப்பாடல் பதிவானது. இசை அமைப்பாளர் ஈமனி சங்கர சாஸ்திரி. ‘சாம்சாரம், சம்சாரம், சகல தர்மசாரம்‘ என்ற பாடல். 1951 – ல் வந்த சம்சாரம் பெண்களின் கண்ணீரைக் கசக்கிப் பிழிந்த படம். ராஜாவின் முதல் பாடல் இன்றும் அவ்வப்போது நம் காதில் விழுந்துகொண்டு தான் இருக்கிறது. நல்ல வேளை பாட்டில் அதிகமான ஒப்பாரி இல்லை. சில பின்னணிப் பாடகர்கள் அழுது தீர்ப்பார்கள். ராஜாவிடம் அது கிடையாது. அவர் இன்றும் விரும்பப்படுவதற்கு அவர் பாட்டில் உள்ள ஒரு சௌக்கியம்மதான் காரணம். ஏ.எம்.ராஜா பின்னணி பாடி, வெளிவந்த முதல் படம் சம்சாரம். ஆனால், அவர் ஒப்பந்தமான முதல் படம் குமாரி (1952) என்கிறது, துர்காராவ என்பவரை ஆசிரியராகக் கொண்டு 1956 – ல் வெளியான ஒரு தென்னிந்திய திரைப்பட டைரக்டரி.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஏ. எல். இராகவன் 1947 ஆம் ஆண்டு கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகுசுதர்ஸன் படத்தில் கண்ணனாக நடித்தார். 1950 ஆம் ஆண்டு வெளியான விஜயகுமாரி திரைப்படத்தில்  பெண் குரலில் பாடி பாடகராக அறிமுகமானார்.

 

Name: Vijaya Kumari
Language: Tamil
Director: A. S. A. Samy
Music Director: G. Ramanathan
Production: Jupiter
Release Date: 01-01-1950 (India)
 
 
விஜயகுமாரி படத்தில் இருந்து வேறு ஒரு பாடல்
 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

வானொலி, தொலைகாட்சி தொகுப்பாளர், நடிகர் என்ற பல பரிமாணங்களை கொண்ட மா.கா.பா ஆனந்தின் கன்னிப்பாடல்


வரிகள்: ஸ்ரீபன்
இசை: வல்லவன்

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சி.வி.ராமன் இயக்கத்தில் 1940-ல் வெளியான ‘விக்ரம ஊர்வசி அல்லது ஊர்வசியின் காதல்’ என்ற படத்தில் பெரியநாயகியின் அக்காள் பி.ஏ.ராஜாமணிக்கு நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதே படத்தில் காந்தர்வக் கன்னியாகச் சிறு வேடத்தில் பாடி நடிக்கும் வாய்ப்பு பி.ஏ.பெரியநாயகிக்கு அமைந்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘என்னைப்போலே பாக்கியவதி யார்?’ என்ற பாடல்தான் திரைப்படத்துக்காக பெரியநாயகி பாடிய முதல் பாடல்.

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகி ஜென்சியின் கன்னிப்பாடல் 1978-ம் வருஷம் திரிபுரசுந்தரி படத்துல பாடின 'வானத்துப் பூக்கள்ஜானகி அம்மாவுடன் இணைந்து பாடியுள்ளார்.

 

 

வாய்ப்பு கேட்கத் தெரியலை... அதனால ஆசிரியர் வேலைக்குப் போயிட்டேன்!'' - பாடகி ஜென்ஸி
தமிழ் திரை இசையுலகில் மறக்க முடியாத பாடகி, ஜென்ஸி. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர். தன் மென்மையான குரலால் நம் மனதை கொள்ளை கொண்டவர். பிரபலமாக இருந்த நேரத்தில் மியூசிக் டீச்சராக தன் வாழ்வை மாற்றிக்கொண்டவர்.
"பிறந்து வளர்ந்தது, தற்போது வசிப்பது எல்லாமே கேரளாவுலதான். சாதாரண நடுத்தரக் குடும்பம்தான். பத்தாவது வரைக்கும் படிச்சுட்டு, மியூசிக்ல லோயர், ஹையர் கோர்ஸ் முடிச்சேன். என்னோட 13 வயசுல இருந்து மேடைகள்ல பாடிட்டு இருக்கேன். ஜேசுதாஸ் அண்ணாகூட கேரளாவுல நிறைய கச்சேரிகள்ல பாடியிருக்கேன். தாஸ் அண்ணாதான், 'நீ நல்லா பாடுறே'ன்னு சொல்லி, 16 வயசுல என்னை ராஜாசார்கிட்ட கூட்டிட்டுப்போனாரு. அப்போ ராஜா சார் தன்னோட மெல்லிசையால பல ஹிட் கொடுத்துட்டு இருந்த காலம். அவரைப் பார்க்கப் போகும்போது கொஞ்சம் பயமாகத்தான் இருந்துச்சு. நான் போனது காலையில. ராஜா சார் என்கிட்ட இயல்பா பேசினார். மூணு பாட்டு பாட சொன்னார். பாடி காட்டினதும் 'வாய்ஸ் ஓகே'னு மதியமே ரிக்கார்டிங்ல பாட வைச்சார். அப்படி 1978-ம் வருஷம் திரிபுரசுந்தரி படத்துல பாடின 'வானத்துப் பூக்கள்'தான் என்னோட முதல் பாடல். அடுத்தடுத்து 'அடிப் பெண்ணே, என்னுயிர் நீதானே, ஆயிரம் மலர்களே'னு நிறைய பாடல்களை பாட வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார்.
அவர் பீக்ல இருந்தப்ப சுசிலா அம்மா, ஜானகி அம்மாவும் அவரோட இசையில அதிகமான பாடல்களை பாடிட்டு இருந்தாங்க. அவங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறப்ப எனக்கும் வாய்ப்புக் கொடுத்தார் ராஜா சார். ஒவ்வொரு முறையும் ரெக்கார்டிங்ல எப்படி பாடணும்னு சொல்லிக்கொடுத்திடுவார். பாடி முடிச்சதும், பெருசா பாராட்டமாட்டார். 'டேக் ஓகே'ன்னு மட்டும்தான் சொல்லுவார். ஏதாச்சும் தப்பு பண்ணியிருந்தா மட்டும் சரிசெய்துக்க சொல்லுவார். பாலசுப்ரமணியம் அண்ணா, ஜேசுதாஸ் அண்ணா, ஜானகி அம்மானு எல்லாரும் எப்படி பாடல்களை பாடணும்னு எனக்கு டிப்ஸ் கொடுத்தாங்க. ரெண்டு வருஷம் பாடகியா என் கிராஃப் உயர்ந்துச்சு" என்றவர் தான் டீச்சர் வேலைக்குச் சென்ற சூழலையும் விவரித்தார்.
"சினிமாவுல என்னைத் தேடி வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்க தெரிஞ்ச எனக்கு தானா போய் வாய்ப்பு கேட்கிற நுணுக்கம் தெரியல. எனக்கு உதவவும் யாரும் இல்லை. நானும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டுப் போகல. அதே சமயம் கொச்சியில இருக்கும் ஓர் அரசு உதவி பெறும் பள்ளியில டீச்சரா வேலை கிடைச்சது. 'ஒரு பாடகி டீச்சர் வேலைக்குப் போறாங்களே'ன்னு அப்போ பரபரப்பா பேசினாங்க. டீச்சரா வொர்க் பண்ணிகிட்டு இருந்தாலும், தொடர்ந்து ராஜா சார் பாடுற வாய்ப்புகளும் கொடுத்தார். அந்த சமயங்கள்ல மட்டும் சென்னைக்கு அப்பாவோட வந்து பாடிட்டுப் போவேன்.
அப்படித்தான் ஜானி படத்துல 'என் வானிலே', 'தெய்வீக ராகம்', 'காதல் ஓவியம்' மாதிரியான பெரிய ஹிட் பாடல்களைப் பாடினேன். தமிழ் அளவுக்கு இல்லாட்டியும், மலையாளத்துலயும் கொஞ்சம் பாடல்கள்ல பாடியிருந்த சமயத்துல கச்சேரிகள்ல பாடுறதையும் நிறுத்திட்டேன். 1982-ம் வருஷத்தோடு சினிமாவுல பாடும் வாய்ப்புகளும் நின்னுடுச்சு.
நானும் டீச்சர் வேலையில என் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பிச்சுட்டேன். சினிமாத்துறைக்கு வந்த அஞ்சு வருஷத்துல 50 பாடல்கள் மட்டுமே பாடியிருக்கேன். ஆனா, 39 வருஷமா ரசிகர்கள் என்னை மறக்காம இருக்காங்க. இதுதான் என்னோட வாழ்நாள் சாதனையா நினைக்கிறேன். எனக்கான அடையாளம் இப்ப வரைக்கும் ரசிகர்கள் மத்தியில தொடருது. ஒரு மியூசிக் டீச்சரா ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு இசையை கற்றுக்கொடுத்தேன்ங்கிற மன திருப்திதான் என் வாழ்நாள் திருப்தியா நினைக்கிறேன்" என்றவர் தன் குடும்பத்தைப் பற்றிக் கூறுகிறார்.
ஜென்ஸியின் குரலில் ஒலிக்கும் 'தெய்வீக ராகம்' பாடலைக் கேட்க, கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்:
ஜென்ஸி குரலில் ஒலிக்கும், 'ஜானி' படத்தில் இடம்பெற்ற 'என் வானிலே... ஒரே வெண்ணிலா' பாடலைக் கேட்க கீழே இருக்கும் வீடியோவை கிளிக் செய்யவும்:
"கணவர் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார். பொண்ணு ஆஸ்திரேலியாவுல குடும்பத்தோடு வசிக்கிறாங்க. பையன் அமெரிக்காவுல எம்.எஸ் படிச்சுகிட்டு இருக்காரு. இப்பவும் 5 - 7-ம் வகுப்பு வரைக்கும் படிக்கிற குழந்தைகளுக்கான மியூசிக் டீச்சரா தொடர்ந்து வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குறிப்பா நல்ல நல்ல பாட்டெல்லாம் கொடுத்து எனக்கு தனி அடையாளம் தந்தது இளையராஜா சார்தான். அதனால என்னோட வாழ்க்கை முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன்" என்கிறார் நெகிழ்ச்சியாக.
Courtesy vikatan
May be an image of 1 person
 
 
  • கருத்துக்கள உறவுகள்

“ வானத்துப்பூங்கிளி”யும் இப்பொழுது எனது  listல் சேர்ந்துவிட்டது.. இசை, பாடல்வரிகள், பாடியவர்களின் குரல் எல்லாமே அருமை!!!

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனந்தாவின் முதல் தமிழ் பாடல்  காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்

 

 

 

பூவே செம்பூவே 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடகி சுஜாதாவின் கன்னிப்பாடல் கவிக்குயில் படத்தில் இருந்து காதல் ஓவியம் கண்டேன் என்ற பாடல்

 

அவரின் சில பிரபல்யமான பாடல்கள்

ஒரு இனிய மனது

 

 


 காலை பனியில் ஆடும் மலர்கள்

 

காலை பனியில் 
ஆடும் மலர்கள்
காதல் நினைவில் 
வாடும் இதழ்கள்

காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம் 

காலை பனியில் 
ஆடும் மலர்கள்
காதல் நினைவில் 
வாடும் இதழ்கள்

காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம் 

பார்வையோடு 
பார்வை சேரும் 
பாவம் முதலில்
சிறு நாணம் மனதில்

பாவை மேனி 
தோளில் ஆட 
ராகம் பிறக்கும்
அதில் தாளம் இருக்கும்

கலைகள் ஆயிரம் 
அதில் வளரும் காவியம்
சுவை குவியும் நாடகம்...

காலை பனியில் 
ஆடும் மலர்கள்
காதல் நினைவில் 
வாடும் இதழ்கள்

காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம் 

காதலாகி 
கனியும் போது 
மோகம் வளரும்
என் தேகம் குளிரும்

காலை தூக்கம் 
கலையும் போது 
தேகம் தணியும்
அதில் நாலும் புரியும்

உறவில் ஆடினேன் 
புது உலகில் ஆடினேன்
இன்பக் கடலில் ஆடினேன்...

காலை பனியில் 
ஆடும் மலர்கள்
காதல் நினைவில் 
வாடும் இதழ்கள்

காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம்
காயம் பட்ட மாயம் 
கன்னி எந்தன் யோகம்" 

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின்  கன்னிப்பாடல்

 

மற்றுமொரு மிக பிரபல்யமான பாடல்  சிவந்தமண்ணில் இருந்து பட்டத்து ராணி
 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பாடகர் ஹரிசரணின் கன்னிப்பாடல் காதல் திரைப்படத்தில் இடம்பெற்றது.

மற்றுமொரு இனிமையான பாடல்


 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

பாடகி எஸ் ராஜேஸ்வரி பாடிய இசையரசி எந்நாளும் நானே" (படம்: தாய் மூகாம்பிகை) 

 

 


மற்றுமொரு பாடல் ஒரு ஓடை நதியாகிறது படத்தில் இருந்து தலையை குனியும் தாமரையே

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நடிகர் பாக்கியராஜ் முதன் முதலாக இது நம்ம ஆளு படத்தில் இசையமைத்து பாடிய பச்சை மலை சாமி ஒண்னு

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

எஸ்.பி சைலஜாவின் கன்னிப்பாடல் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் இருந்து "சோலைக்குயிலே" எனும் பாடல் இசைஞானியில் இசையில்....

 

  • கருத்துக்கள உறவுகள்

சிலவறறை பார்க்க முடியாதவாறு சத்தம்மும் வர்ணக் கீறல்கள் மட்டுமே காணக் கூடியதாக இருக்கிறது நுணா👋.இங்கு மட்டுமல்ல வேறு பகுதிகளிலும் இணைக்கும் யூடியூப் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் இருக்கிறது.✍️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, யாயினி said:

சிலவறறை பார்க்க முடியாதவாறு சத்தம்மும் வர்ணக் கீறல்கள் மட்டுமே காணக் கூடியதாக இருக்கிறது நுணா👋.இங்கு மட்டுமல்ல வேறு பகுதிகளிலும் இணைக்கும் யூடியூப் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் இருக்கிறது.✍️

எனக்கு இனிமையாக கேட்கக்கூடியதாக உள்ளது. பழைய பாடலுக்கான காணொளி தரம் பறவாயில்லாமல் உள்ளதே யாயினி.

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் இசையமைப்பாளர் பிரதீப்குமாரின் கன்னிப்பாடல் எந்திரனில் இடம்  பெற்ற பாடல் ரகுமானின் இசையில் 

 

 

அவரின் அடுத்த பாடல் சந்தோஸ் நாரயணின் இசையில் ஆசை ஒரு புல்வெளி
இப்பாடலை அவரின் மனைவி கல்யாணி நாயருடன் சேர்ந்து பாடி இருப்பார்.

மேயாத மான் படத்திற்கு  என்ன நான் செய்வேன் எனும் பாடலை எழுதி இசையமைத்து கிற்றாரும் இசைத்துள்ளார் பிரதீப்குமார்.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.