Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தாயகத் தேர்தலும் தமிழ்த் தேசிய பிரதிநிதித்துவமும் சம்பந்தரின் இறுமாப்பும்

Featured Replies

இலங்கையின் தேர்தல் களம் இப்போது கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. அடுத்து வரப்போகின்ற மூன்று வாரங்களில் மேலும் வேகம் கொள்ள இடமுண்டு. சிறிலங்கா, தமிழீழம் என்ற நிலப்பரப்பு அடிப்படையில, 2010 ஏப்ரல் 8ம் திகதிய நாடாளுமன்றத் தேர்தலின் பரப்புரைகள் நடைபெறவதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளைவிட, சுயேட்சைக் குழுக்களே அதிகளவில் களத்தில் இறங்கியிருப்பதை இந்தத் நேரத்தில் பார்க்கலாம். வாக்காளர்களைவிட வேட்பாளர்களே அரசியலில் அக்கறை கொண்டிருப்பதை இதனூடாக அவதானிக்கலாம்.

ஆனாலும், சுயேட்சைக் குழு ஒனறு கூட, எந்தத் தேர்தல் மாவட்டத்திலும் அதிகூடிய வாக்குகளைப் பெற்று முதலிடத்தக்கு வரக்கூடிய சாத்தியமில்லை.

அல்லது, எந்தவொரு சுயேட்சை வேட்பாளராவது வெற்றிபெற்றால், அவர் ஆட்சியமைக்கும் அணியுடன் பேரம் பேசும் சக்தியாக விளங்கக்கூடிய சாத்தியமும் இருக்கப்போவதில்லை.

சிறிலங்கா எனும் சிங்கள தேசமானது, ஏழு மாகாணங்களை உள்ளடக்கியது. இதற்குள் பதினேழு தேர்தல் மாவட்டங்கள் அடங்குகின்றன.

தமிழீழம் என்னும் தமிழர் தாயகம், ஐந்து தேர்தல் மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு-கிழக்கு என்னும் இரண்டு மாகாணங்களைக் கொண்டது.

சிங்கள தேசத்தில் மும்முனைப் போட்டி

சிங்கள தேசத் தேர்தல் மூன்ற பிரதான அணிகளுக்கிடையில் மோதலை நடத்துகின்றது. மகிந்த ராஜபக்ச தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, சரத் பொன்சேகா தலைமையிலான ஜே.வி.பி.யின் அரசியல் அணி ஆகியவை இம்மூன்றுமாகும்.

குடும்ப ஆட்சியைத் தொடருவதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவென்ற காரணத்தைக் கூறி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மகிந்த ராஜபக்ச முன்னணி மக்களிடம் கோருகின்றது,

“ஆட்சிமாற்றம் அவசியம்” என்றே பொதுவாகக் கூறினாலும், வேறு இரண்டு இலக்குகளுடன் ரணில் விக்கிரமசிங்கவின் முன்னணி களத்தில் இறங்கியுள்ளது. முதலாவது இலக்கு – மகிந்த ராஜபக்சவின் முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காமல் தடுப்பது. இரண்டாவது இலக்கு – சரத் பொன்சேகா தலைமையிலான ஜே.வி.பி. அணி மேலெழும்பாது தடுப்பது.

இந்த வகையில், ரணில் விக்கிரமசிங்க தரப்பு பணபலம், ஆட்சிபலம், பரப்புரைப் பலம் ஆகியவைகளை அதியுச்சத்தில் பயன்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவின் ஜே.வி.பி. அணியின் இலக்கு, இப்போதைக்கு முப்பது ஆசனங்களில் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியாக தங்களை அமர்த்தக்கொள்வது.

மேற்சொன்ன மூன்று அணிகளில் ஒன்றுக்குக் கூட, தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவது பற்றியோ, யுத்தத்தால் ஏதிலிகளாக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றியோ, கைதாகியுள்ள தமிழ் இளைஞர் – யுவதிகளின் எதிர்காலம் பற்றியோ சிறிதளவும் அக்கறையில்லை.

‘சிங்கள மக்களின் வாக்குகள் தமிழருக்கு எதிரானது’ என்ற கொள்கை அடிப்படையில் மூன்று அணிகளும் வாக்குகளை எதிர்நோக்குகின்றன என்பதை இது நன்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

இந்தப் பின்னணியில் இந்தத் தேர்தலை நோக்கும் போது, 1976ன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கமையவே 2010ம் ஆண்டுத் தேர்தல் இடம்பெறவதைக் காணலாம்.

உலகளாவிய தமிழரின் ஒருமித்த குரல்

உலகளாவிய ரீதியில் புகலிடத் தமிழர்கள் ஒருமித்த கருத்துடன் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு வழங்கி வருகின்ற ஆணையை, தாயகத் தமிழர்களும் அவர்கள் சார்ந்த அணிகளும் இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டிய வரலாற்றுக் காலமாக இன்றைய நாட்கள் அமைந்தள்ளன.

தமிழர் தாயகத்திலிருந்து முப்பத்தியொரு உறுப்பினர்கள் நாடாளுமன்றததிற்கு தெரிவாவதற்கு தேர்தல் வழியமைத்துள்ளது.

இதற்காகப் போட்டியிடுபவர்கள் மூவாயிரத்துக்கும் அதிகம். ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு ஒரு வேட்பாளர் என்றவாறும,; ஒரு முழத்துக்கு ஒரு சுவரொட்டி என்றவாறும் தமிழர் தாயகம் இன்று காட்சி தருகின்றது.

சில சுயேட்சைக் குழு வேட்பாளர்களுக்கு, தங்களின் குழுவைச் சார்ந்த மற்றைய உறுப்பினர்கள் யார், யார் என்பது கூடத் தெரியாதிருப்பதையும் களத்தில் காணலாம்.

இங்கு ஒட்டப்படும் சில அணிகளின் சுவரொட்டிகள் தலா ஆயிரம் ரூபாவரை பெறுமதியானவையாக உள்ளன. இவ்வளவு தொகைப் பணம் எங்கிருந்து இவர்களுக்குக் கிடைககின்றது என்ற கேள்வி சாதாரண மக்களிடம் எழுவது வியப்பில்லை.

இப்படியான ஒரு கண்ணாமூச்சி விளையாட்டுக் கோலத்தில், தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அவர்களின் அரசியல் தீர்வைத் தீர்மானிக்கும் தேர்தலை சந்திக்கும் நிலைக்கு தமிழீழம் தள்ளப்பட்டுள்ளது.

தமிழீழத் தேசியத்தலைவரின் சிந்தனையில் கருவாகி, தமிழீழத் தேசியத்தை நேசிக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்திசை நோக்கி இன்று பயணிக்கின்றது என்பது புரியாத நிலைமைக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பு உருவானது ஏன்?

தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். (சுரே~; அணி) ஆகிய நான்கு கடசிகளுடன், தமிழ் மக்களினது பொதுஅமைப்பகளின் பிரதிநிதிகளையும் சேர்த்தே தமிழ்; தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

2004ம் அண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பத்தியிரண்டு பிரதிநிதித்துவங்கள் கிடைத்தன. இதில் பத்துப்பேர் மட்டுமே மேற்குறிப்பிட்ட நான்கு அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள்.

மிகுதி பன்னிரண்டுபேரும் தமிர்களின் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். சிலர் தனியாட்கள். இவர்கள் அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பதையும் மனதில் இருத்த வேண்டியது அவசியம்.

இந்தப் பின்புலத்தில் நின்றவாறு, தமிழர் தாயகத் தேர்தலின அகச் சூழலையும், புறச் சூழலையும், நோக்கின் சில உண்மைகளை அறியமுடியும்.

2004 ம் ஆண்டுத் தேர்தல் கள நிலைக்கும், இன்றைய கள நிலைக்கும் நிரம்பிய வேறுபாடு உண்டு.

தமிழ் தேசிய கூட்டமைப்பை முன்னின்று உருவாக்கிய தமிழர்களின் தேசியத் தலைமை இன்று அரூப நிலைக்குச் சென்றுள்ளது. இவர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளன. இப்படிச் சொல்கையில் அந்தத் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது என்ற அர்த்தம் கொள்ளக்கூடாது.

ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள், “அந்தத் தலைமை இன்றில்லை, இனியும் இருக்காது” என்று நினைத்து தம்மி~;டப்படி சில செயற்பாடுகளை மேற்கொள்வதால் உருவானதே இன்றைய பிரிவும், பிளவும் என்ற கூற்றுக்கு மறுப்புச்சொல்ல முடியாது.

1980 களின் ஆரம்பத்திலிருந்து ஈழத்தமிழர்களின் முதுகெலும்பை முறித்து, ஈழவிடுதலைப்போராட்டத்தை அழித்தொழிக்க இந்தியா எடுத்துவந்த நடவடிக்கைகளில் முக்கியமானது, தமிழர் மத்தியிலிருந்த ஆயுதக் குழுக்களை ஒன்றுடனொன்று மோதவிட்டுப் பிளவு பண்ணியதாகும்.

ஆனால், 1990ம் ஆண்டு மார்ச் மாதம் அடையாளம் காணப்பட்டு தமிழர் தாயகத்திலிருந்து இந்தியா அப்புறப்படுத்தப்பட்டது.

தேசியத்தை துறக்கும் சந்தர்ப்பவாதம்

இப்போது, மீண்டும் அதே காரியத்தை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூவரை இந்தியா பயன்படுத்துகின்றது. இந்த மூவரையும் ஆங்கில ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் எஸ்.எம்.எஸ். ஆணி (ளுஆளு புசழரி) என்று அழைத்து வருகின்றன.

சில இந்திய ஊடகங்கள் ஆநேகமாக தினசரி ‘எஸ்.எம்.எஸ்’ என்று குறிப்பிட்டு அந்த மூவர் தொடர்பான செயற்பாடுகளை விபரித்து வருகின்றன. ஏஸ்.எம்.எஸ். என்பது சம்பந்தர் – மாவை சேனாதிராசா – சுரே~; பிரேமச்சந்திரன் என்ற மூவரையும் குறிக்கும் அவர்களது பெயரில் ஆங்கில முதல் எழுத்துக்களைக் கொண்டது.

தமிழரின் உயிர் மூச்சான தாயக – தேசிய – தன்னாட்சிக் கொள்கைகளை வீச்சாகக் கொண்டு செயற்பட்டுவருபவர்களுக்கு இம்முறை தேர்தலில் இடமளிக்கக் கூடாது என்பது இந்தியாவின் உத்தரவு.

அNது சமயம், இந்த முடிவு ஏற்கனவே எஸ்.எம்.எஸ் அணியின் மறைத்துவைக்கபட்டடிருந்த நிகழ்ச்சி நிரலிலும் இருந்தது.

இந்தியாவினாலும் எஸ்.எம்.எஸ். அணியினாலும் இவ்வாறு குறிவைக்கப்பட்டவர்கள் மூவர்.

யுhழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து தெரிவான செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவான எஸ். ஜேயானந்தமூர்த்தி ஆகியோரே இந்த மூவர்.

கஜேந்திரன் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத் தலைவர். புத்மினி மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதி. ஜேயானந்தமூர்த்தி மூத்த ஊடகவியலாளர்.

இவர்கள் மூவரும் தேசியத் தலைவரின் பாதையை அடியொற்றிய செயற்பாட்டாளர்கள்.

கொள்கையை மறக்காத தேசியவாதிகள்

இதே கொள்ளைக்காக உள்ளிருந்து இறுதிவரை போராடிக்கொண்டிருந்தவர் கஜேந்திரக்குமார் பொன்னம்பலம். தமிழீழ விடுதலைப் புலிகளின் உலகளாவிய தூதுவராக இயங்கிவந்த மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஏக புதல்வர்.

ஏஸ்.எம்.எஸ். அணியினர் நெருக்குவாரத்தினால் அரசியலிலிருந்து ஒதுங்கிப்போகும் மனநிலைக்கு கஜேந்திரகுமார் தள்ளப்பட்டவரும் கூட. (இதனையே அவருக்கு எதிரான பரப்புரைக்குச் சிலர் பயன்படுத்தி வருவது நகைப்புக்கிடமானது)

ஜனவரி 26ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிதக்க எஸ்.எம்.எஸ். ஆணி முயன்ற போது, கஜேந்திரன் – பத்மினி – கஜேந்திரக்குமார் – ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் வன்மையாக எதிர்த்தவாகள் என்பதையும் ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது.

சட்டப்பிரச்சினையை எதிர்கொள்ளும் நெருக்கடியால் ஜெயானந்தமூர்த்தி நாடுதிரும்பவில்லை. மற்றைய மூவரும் எஸ்.எம்.எஸ். ஆணியின் போக்கை விமர்சித்து, மக்கள் முன் அவர்களை அம்பலப்படுத்த முயன்றதால், அவர்களைக் கூட்டமைப்பிலிருந்து ‘மௌனமாக’ ஓரங்கட்ட முடிவெடுக்கபட்டது.

கூட்டமைப்பிறுள்ள சிலருக்கு இந்தமுடிவு விருப்பமில்லாததாயினும், அவர்கள் மௌனமாகவே இருக்க நேர்ந்தது. சிலசமயம், தேர்தல் முடிவுகளி;ன் பின் அவர்கள் ‘நி~;டை’ கலைந்து மனச்சாட்சிப் பக்கத்துக்குச் செல்லக்கூடும்.

‘தட்டிக்கேட்க ‘தம்பி’ இல்லையென்றால்…’ என்ற நிலைமையில், தாயக – தேசிய தன்னாட்சிக் கொட்பாட்டை வரிந்து கட்டிக் கொண்டவர்களை கூட்டமைப்பு வெளியேற்றியதால், அவர்கள் ஓரணியாக இணைந்து தேர்தலில் குதிக்க நேர்ந்தது.

பிளவுபடுத்திய பிரமுகாகள் யார்?

கூட்டமைப்பு பிளவுபடவும், தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி உருவாகவும் பிதாமகர்களாக அமைந்தவாகள் சம்பந்தர் – மாவை சேனாதிராஜா – சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே என்பதில் நிலத்திலும் புலத்திலும் வாழும் உறவுகள் மத்தியில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை.

இன்னொரு சாரார் மத்தியில் மற்றொரு கருத்தும் சொல்லப்படுகின்றது. அது என்னவெனில், மாவை சேனாதிராஜாவினதும், சுரே~; பிரேமச்சந்திரனதும் பாட்டுக்கு ஆட்டம் போடுபவராக மாறியதால் வந்த வினையை, சம்பந்தரே இன்று அறுவடை செய்ய வேண்டிய நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டு விட்டார் என்பதாகும்.

2004ம் ஆண்டுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தின் ஒன்பது இடங்களில் எட்டினைக் கூட்டமைப்பு பெற்றது. ஓன்பதாவது ஆசனத்தை ஈ.பி.டி.பி. கைப்பற்றியது.

கூட்டமைப்பு வென்ற எட்டு இடங்களில், விருப்பு வாக்குகளின் அடிப்படையில் முதல் மூன்ற இடங்களையும் முறையே கஜேந்திரன், பத்மினி, கஜேந்திரக்குமார் ஆகியோர் பெற்றிருந்தனர். இது இவர்களுக்கு மக்கள் மதிதியிலுள்ள அபரிமித செல்வாக்கைக் காட்டுகின்றது.

நான்கு கட்சிகளின் வேட்பாளர்களில் முதலிடத்தில் வென்றவர் கஜேந்திகுமார் (தமிழ் காங்கிரஸ்) மற்றைய மூன்று கட்சி வேட்பாளர்களும் இவரிலும் குறைவான விருப்பு வாக்குகளையெ பெற்றனர். தமிழரசுக் கட்சியின் செயலாளராகவும், பிரபலமான அரசியல் வாதியாகவும் பரப்புரை செய்யப்பட்ட மாவை சேனாதிராஜா கடந்த தேர்தலில் ஆகக் குறைந்த விருப்பு வாக்குகளைப் பெற்று, எட்டாவது இடத்துக்கு (கடைசி இடம்) வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தத் தரவுகளை இங்கே பார்ப்பது இன்று அவசியமாகின்றது.

தங்களால் தூக்கிவீசப்படுபவாகள் அரசியலில் அநாதைகளாகி விடுவார்கள் என்று எண்ணிய எஸ்.எம்.எஸ். ஆணி இன்று கதிகலங்கி நிற்பதைப் பார்க்க முடிகின்றது.

குருவிக் கூட்டை உடைத்தது நியாயமா?

ஓற்றுமையாக இருந்த கூட்டமைப்பு என்பது, தேசியத் தலைமையால் குருவிக் கூடொன்று கட்டுவது போன்று உருவாக்கப்பட்டது. ஓவ்வொரு சுள்ளித்தடிகளை ஒவ்வொன்றாக காவிவரும் குருவி எத்தனை க~;டப்பட்டு அந்தக் கூட்டைக் கட்டியது என்பது அதற்கு மட்டுமே தெரியும். அந்தக் கூட்டை உடைப்பவர்களுக்கு அது புரியாது.

தமிழர் தேசிய தலைமை மௌனித்து அரூபமாகியுள்ள இந்தக் காலத்தை, தனிப்பட்ட பழுவாங்கலுக்கு சாதகமாக்கிய எஸ்.எம்.எஸ். ஆணி, செய்வதறியாத நிலையில் அவலக்குரல் எழுப்புகின்றது.

கஜேந்திரன் – பத்மின p- கஜேந்திரக்குமார் ஆகியோருக்குப் பாடம் புகட்ட முனைந்த சம்பந்தர் (ஏவற்பிராணிபோல) அது தமக்கே வேட்டுவைக்குமென்று ஒரு போதும் எண்ணியிருக்காததால், ‘தமிழர் தாயகம் பறிபோகின்றது’ என்று அலறத் தொடங்கியிருப்பதைக் கேட்கமுடிகின்றது.

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த ஆண்டிகளாக எஸ்.எம்.எஸ். ஆணியை தமிழ் மக்கள் பார்க்கும் காலத்தை உருவாக்கியவர்களே இவர்கள் தான். ஒருவர் தமது முகத்தில் தாமே காறி உமிழ்வதை எவரால் தடுக்க முடியும்.

தமிழர் பிரதிநிதித்துவம் பறிபோகின்றதா?

“சம்பந்தர் தோற்றால் திருமலையில் தமிழ பிரதிநிதித்துவம் பறிபோகும்” என்றொரு புதக்குரல் எழுப்பப்படுகின்றது.

வேறொரு தமிழர் திருமலையில் வெற்றிபெற்றால், அது தமிழர் பிரதிநிதித்துவம் இல்லையா?

“திருமலைதான் சம்பந்தர், சம்பந்தர் தான் திருமலை” என்பவர்கள் “இந்தியாதான் இந்திரா, இந்திரா தான் இந்தியா” என்று கோ~மெழுந்ததையடுத்து அன்று இந்தியாவுக்கு நேர்ந்ததை எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஓர் இனத்தை அழிக்க முனைபவர் ஜனநாயக மரபுக்கிணங்க தோற்கடிக்கப்படின், அது இனத்துக்கு நன்மையை விளைவிக்குமே தவிர, எந்தத் தீமையையும் ஏற்படுத்தாது எனபது தமிழ் மக்களின் கருத்து.

இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தைப் பார்க்கலாம்.

கடந்த வாரம் மூதூரில் தேர்தல் கூட்டமொன்றில் சம்பந்தர் உரையாற்றினார். “இந்தத் தேர்தலிலும் நான் தோல்வியுற்றாலும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவேன்” என்று ஆவேசத்துடன் முழங்கினார்.

இது எதனை உணர்த்துகின்றது?

“திருமலையில் தமிழருக்கான ஒரு பிரதிநிதித்துவம் போனாலும், பரவாயில்லை, நான் நாடாளுமன்ற உறுப்பினராவேன்” என்பது நாடாளுமன்றக் கதிரை மோகத்தையே முன்னிறுத்திக் காட்டுகின்றது.

திருமலையில் இன்று என்ன நடைபெறுகின்றது. கடந்த காலத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமைந்திருந்தன போன்ற விபரங்களை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

- தமிழ்த்தேசியன்

நன்றி: ‘கனடா உலகத்தமிழர்’ பத்திரிகை

Edited by tamilsvoice

ஏன் குழப்புகிறீர்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னனி,, தமிழ்கூட்டமைப்பு இரண்டும் வெற்றி பெற்றால் போதும்

இனவாத சிங்கள அரசியல் கட்சிகளை தமிழர் புறக்கணித்தால் அதுவே மக்களின் மனநிலையாக கொள்ளப்படும்.

புலம் பெயர் ஊடகங்கள்  அந்த பணியை செய்ய வேண்டும்.

சிங்கள கட்சிகளுடன் சேர்ந்து வேட்பாளர்களாக நிற்கும் தமிழர்களை ஒதுக்குவதற்கு நாங்கள் உதவி செய்ய வேண்டும்.

அங்கே யாழ்ப்பாணத்தில் சிங்கள கட்சிகளின் கூலிப்படை வேட்பாளர்களின் விளம்பரம் தான் அதிகமாக உள்ளது.

ஜக்கிய தேசிய கட்சி முழு அளவில் பணம் இறைத்து செயற்படுகிறது. அவர்களது விளம்பரம் அதிகசெலவில் வெளியிட படுகிறது.

உதயன் பத்திரிகைகூட அவர்களது விளம்பரத்தை எத்தனையோ இலச்சம் ரூபா பணம் வாங்கி வெளியிடுவதாக தெரிய வந்துள்ளது.

இவர்களை ஒதுக்குவதற்கு முதலில் புலம்பெயர் தமிழர் நாம் முன்வர வேண்டும்.

பணம் கூட சேகரித்து இரு கட்சிக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்து உதவ முன்வரவேண்டும்.

பண பலமில்லாமல் பிரச்சார யுக்தி அடி பட்டு பொகும் நிலை உள்ளது.

யார் வென்றாலும் பராவாயில்லை நாம் தமிழர் என்ற வெற்றியில் வந்தால் போதும்

சிங்கள கட்சிகளை புறக்கணித்தாலே அது மிக பெரிய வெற்றி.

Edited by நேசன்

  • தொடங்கியவர்

தமிழ் தேசிய மக்கள் முன்னனி,, தமிழ்கூட்டமைப்பு இரண்டும் வெற்றி பெற்றால் போதும்

இவர்களை ஒதுக்குவதற்கு முதலில் புலம்பெயர் தமிழர் நாம் முன்வர வேண்டும்.

பணம் கூட சேகரித்து இரு கட்சிக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்து உதவ முன்வரவேண்டும்.

பண பலமில்லாமல் பிரச்சார யுக்தி அடி பட்டு பொகும் நிலை உள்ளது.

இதைச் செய்யவேண்டியவர்கள் தாங்கள் தான் என்று படைப்பாளிகள் குழுமம் சம்பந்தருக்கு கூட்டம் போட்டு பணம் வசூலிக்கின்றது அதுமட்டுமல்லாமல் அவரே பேட்டியும் கொடுத்திருக்கின்றார்

புலம்பெயர்ந்த சமூகம் தான் கயேந்திரன் அணிக்கு தலைப்பாகை கட்டி இறக்கியிருக்கின்றார்கள் என்று

இவர் நாடு கடந்த அரசிலும் மக்களவையிலும் அங்கத்துவர் பாருங்கள் எல்லாம் குடும்ப சொத்துகள் போல் போகின்றது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.