Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறுவது விசமத்தனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறுவது விசமத்தனம் பூகோள, கலை, கலாசார ரீதியில் அந்நாடு எம்முடன் ஒன்றுபட்டுள்ளது

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்த லில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுகின்ற வேட்பா ளர் எஸ்.எக்ஸ். குலநாயகம் "உதய னுக்கு'' வழங்கிய செவ்வியை இங்கு தொகுத்துத் தருகின்றோம்.

கேள்வி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதன் நோக்கம் பற்றி..?

பதில்: என்னைப் பொறுத்த வரை நான் இன்று நேற்று அரசியலில் ஈடுபட்டவன் அல்ல. 47 வருடங்களாக அரசியல் பணிகளில் ஈடுபட்டு வரு கின்றேன். 1962 ஆம் ஆண்டு காலத்திலிருந்து இடம்பெற்ற சத்தியாக்கிரகத்தில் மாணவனாக இருக்கின்றபோது கலந்து கொண்டேன். அதாவது இன்னும் சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் இலங்கை தமிழரசுக் கட்சியின் தீவிரமான நீண்டகால ஆதரவாளர். அதற்காக என்னை முழுமையாகவே அர்ப்பணித்தவன்.

நான் கOஃஐகூஉஇ (தற்போதைய தொழில்நுட்பக் கல்லூரி) கல்லூரியில் அமைப்பு பொறியியலாளர் கற்கை நெறியினை தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டேன்.

அந்தக் காலத்தில் தான் இலங்கை அரசியலில் 1971ஆம் ஆண்டில் தரப்படுத்தலைக் கொண்டு வந்தார்கள். அப்போது "மாணவர் பேரவை' என்ற அமைப்பினை உருவாக்கி அதன் ஊடாக தரப்படுத்தலுக்கு எதிராக தீவிரமாகச் செயற்பட்டோம்.

பொன்.சத்தியசீலன், முத்துக்குமாரசுவாமி போன்றவர்கள் இதற்கு தீவிரமாகச் செயற்பட்டனர். பின்னர் தியாகி பொன்.சிவகுமாரனும் இந்த அமைப்பில் தனது பங்களிப்பினை மேற்கொண்டார்.

1972ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை ஞானமூர்த்தி, வேற்பிள்ளை, அருட்சபாரத்தினம் போன்றவர்கள் ஒரு சேர்ந்து சகல தமிழ்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து அரசிற்கு எதிராகச் செயற்பட்டனர்.

1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் முதலாவது கூட்டம் கூட்டப்பட்டது. அதில் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன்.

பயங்கரவாதத் தடைச்சட்டம்

1979ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பயங்கரவாதத்தடைச் சட்டம் உருவாக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச்சட்டம் உருவாக்கப்பட்டவுடன் அந்தத் தடைச்சட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக கைது செய்யப்பட்டேன்.

சுமார் ஒரு மாத காலமாக யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டேன். இத்தகைய இடரினைச் சந்தித்தபோதும் அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. எனது செயற்பாடுகள் மேலும் தீவிரமாகியது. 1983ஆம் ஆண்டு மன்னார் மாநாட்டில் மத்தியகுழு செயற்குழு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டேன்.

தொடர்ந்து ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றிருந்தது.இந்தக் காலகட்டத்தில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அரசியலில் இருந்து சிலகாலம் ஒதுங்கியிருந்தேன்.

மீண்டும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தேன்.

இந்தக் காலகட்டத்தில் தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. அதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளராகவும் பணிபுரிந்து வருகிறேன்.

இத்தகைய அரசியல் பின்னணியினைக் கொண்டுள்ள நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமிழர்களின் உரிமையை வென்றெடுக்கின்ற சக்திகளாக உள்ளன. அதனால் அந்தக் கட்சியின் சார்பாக நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்.

கேள்வி: நீண்டதொரு அரசியல் பின்னணியில் பின்னிப் பிணைந்துள்ள நீங்கள், இதுவரை காலமும் தேர்தலில் போட்டியிடாமல் இம்முறை முதன்முதலாக போட்டியிடுவது ஏன்?

பதில்: என்னுடைய அரசியல் பயணம் மாணவப் பருவத்திலே தொடங்கிவிட்டது. அன்று முதல் அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டுமென்று நினைத்தேனே தவிர தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் எழவில்லை.

இருப்பினும் கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவோம் என்ற எண்ணம் உதித்தது.

இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பல கட்சிகளைச் சார்ந்தவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதால் நான் அதில் இருந்து விலகி விட்டுக் கொடுப்புக்களைச் செய்து தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டேன்.

இம்முறை பலருடைய வேண்டுகோளை ஏற்றுத் தேர்தல் களத்தில் குதித்துள்ளேன். நிச்சயமாக வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

கேள்வி: தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என் ஸ்ரீகாந்தா குறிப்பிடுகிறாரே, அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஸ்ரீகாந்தாவைப் பொறுத்தவரை அவர் இவ்வாறு பல்வேறு விதமான விஷமத்தனமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றார். நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் அல்லர். அவ்வாறு கூறுவது விஷமத்தனம்.

இந்தியாவைப் பொறுத்தவரை பூகோளரீதியிலும், கலை, கலாசார ரீதியிலும் இலங்கையுடன் ஒற்றுமைப்படுகிறது. அதனால் தான் எமது அரசியல் தீர்வுகளுக்காக இந்தியாவுடன் தொடர்புகளை வைத்திருக்கிறோம்.

அறவே இந்தியாவை ஒதுக்கி நாம் எந்தத் தீர்வு வழிகளுக்கும் செல்ல முடியாது. அதற்காக இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கமைய நாங்கள் செயற்பட வேண்டியவர்கள் அல்லர் அதற்கான தேவையும் எமக்கு இல்லை.

அந்த வகையில் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருப்பதென்பது விலைபோய் விட்டோம் என்ற அர்த்தமல்ல. அவ்வாறு எவராவது சொல்வார்களானால் அவர்கள் அறிவற்றவர்களாகத்தான் இருக்கமுடியும்.

தமிழர்கள் ஒரு தேசிய இனம். அந்த மக்களுக்கு ஒரு தீர்க்கமான திடமான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்ந்து பாடுபடும்.

இரண்டு அணிகளே இங்கு போட்டி

கேள்வி: அரசியல் பின்புலத்தைக் கொண்டுள்ள நீங்கள் இம்முறை புதிதாக வேட்பாளராக அறிமுகமாகியுள்ளீர்கள். யாழ்.மாவட்டத் தேர்தல் நிலைமைகள் தற்போது எப்படி?

பதில்: இம்முறை தேர்தலில் அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இரண்டு அணிகள் தான் இங்கு போட்டியிடுகின்றன. ஒன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. மற்றது கூட்டமைப்புக்கு எதிரானகட்சிகள், சுயேட்சைக் குழுக்கள்.

அதாவது தேர்தலில் போட்டியிடுகின்ற சுயேச்சைக் குழுக்களாயினும் சரி கட்சிகளாயினும் சரி அவை அனைத்தும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு எதிராகவே தேர்தலில் போட்டியிடுகின்றன.

என்ன தான் சதித்திட்டங்களை வகுத்தாலும் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து தமிழ் மக்கள் தமது ஆதரவினை ஆணையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்குவார்கள் என்ற தீர்க்கமான நம்பிக்கை உள்ளது.

சுயேச்சைக் குழுக்களாப் போட்டியிடுபவர்கள் விலை போனவர்கள், தமிழ்த் தேசியத்தின் ஒற்றுமையைக் குலைப்பதற்கு துணை போனவர்கள்.

இதில் என்ன மனக்கவலை என்றால் புத்திஜீவிகள், இலக்கியவாதிகள் என கல்விமான்களும் இந்தச் சுயேச்சைக் குழுக்களில் உள்ளடங்குகிறார்கள். இவர்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும்?

பதில்: வன்னிப் பெரு நிலப்பரப்பில் எமது மக்கள் எத்தனையோ இடர்களைச்சந்தித்து உறவுகளை இழந்து, தமது உடலின் அவயங்களை பறிகொடுத்து துயரத்தின் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். மீள்குடியேற்றம் செய்துள்ளோம் என்று அரசு பொய்ப்பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பெருந்தொகையான உதவிகளில் சிறியளவிலான சலுகைகளை மட்டும் தமிழ் மக்களுக்குச் செய்துவிட்டு ஏனையவற்றை அரசு தென்னிலங்கையின் அபிவிருத்திக்கு செலவு செய்து வருகின்றது.

அரசின் இத்தகைய கபடத்தனங்களைக் களைந்தெறிவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன். அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கொள்கைகளுடன் ஒன்றித்து எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உண்மையாகவும் நேர்மையாகவும் பாடுபடுவேன்.

உதயன் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறுவது விசமத்தனம் பூகோள, கலை, கலாசார ரீதியில் அந்நாடு எம்முடன் ஒன்றுபட்டுள்ளது

கேள்வி: நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெற்றால் எதிர்கால அரசியல் நகர்வுகள் எவ்வாறு இருக்கும்?

பதில்: வன்னிப் பெரு நிலப்பரப்பில் எமது மக்கள் எத்தனையோ இடர்களைச்சந்தித்து உறவுகளை இழந்து, தமது உடலின் அவயங்களை பறிகொடுத்து துயரத்தின் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். மீள்குடியேற்றம் செய்துள்ளோம் என்று அரசு பொய்ப்பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது.

வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பெருந்தொகையான உதவிகளில் சிறியளவிலான சலுகைகளை மட்டும் தமிழ் மக்களுக்குச் செய்துவிட்டு ஏனையவற்றை அரசு தென்னிலங்கையின் அபிவிருத்திக்கு செலவு செய்து வருகின்றது.

அரசின் இத்தகைய கபடத்தனங்களைக் களைந்தெறிவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன். அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கொள்கைகளுடன் ஒன்றித்து எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உண்மையாகவும் நேர்மையாகவும் பாடுபடுவேன்.

உதயன் இணையம்

இதை சொல்லுவதற்கு ஏன் தேர்தலில் வெல்ல வேண்டும்.

இத்தனையும் செய்த கொடுர சிங்களவர்களை ஐநாவில் வைத்து இந்தியாவே காப்பாற்றியது.......... இந்தியாவே எமது முதன்மை எதிரி என்ற உண்மையை சொல்வதற்கு ஏன் தேர்தலில் வெல்ல வேண்டும்?

இந்த இராஜதந்திர அரசியல்தான் புரிய மாட்டேன் என்கின்றது.

பதில்: வன்னிப் பெரு நிலப்பரப்பில் எமது மக்கள் எத்தனையோ இடர்களைச்சந்தித்து உறவுகளை இழந்து, தமது உடலின் அவயங்களை பறிகொடுத்து துயரத்தின் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அந்த மக்களுக்கு உதவிகளை வழங்கியுள்ளோம். மீள்குடியேற்றம் செய்துள்ளோம் என்று அரசு பொய்ப்பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றது. வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பெருந்தொகையான உதவிகளில் சிறியளவிலான சலுகைகளை மட்டும் தமிழ் மக்களுக்குச் செய்துவிட்டு ஏனையவற்றை அரசு தென்னிலங்கையின் அபிவிருத்திக்கு செலவு செய்து வருகின்றது.

அரசின் இத்தகைய கபடத்தனங்களைக் களைந்தெறிவதற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நான் போட்டியிடுகின்றேன். அவ்வாறு தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், கொள்கைகளுடன் ஒன்றித்து எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்க உண்மையாகவும் நேர்மையாகவும் பாடுபடுவேன்

இதுகளை கடந்த ஒரு வருசமாக பா உ க்களாக இருந்தவர்களுக்கும் அதன் தலைமைக்கும் ஞாபகம் வரவில்லையோ.... அப்ப எல்லாம் அடக்கி கொண்டு இருந்த வீரம் இனிமேல் வெளியிலை வருமா...??

நாம் இந்தியாவின் கைப்பொம்மைகள் என்று கூறுவது விசமத்தனம் பூகோள, கலை, கலாசார ரீதியில் அந்நாடு எம்முடன் ஒன்றுபட்டுள்ளது

தலைபிலேயே இந்திய அடிவருடி தனம் தான் இருக்கிறது... இந்தியா எப்போதும் ஈழத்தமிழர்களுடன் ஒண்று பட்டு இல்லை... குறைந்தது நெருக்கமாக எதிர்காலத்தில் வரும் சாத்தியங்கள் கூட இல்லை...

கலையையும் கலாச்சாரங்களையும் எங்களின் மக்கள் தமிழ் நாட்டில் இருந்து கடன் வாங்கி இருக்கிறார்கள் என்பதுக்காக ஒட்டு மொத்த இந்தியாவின் அனுசரனையை தமிழர்கள் பெற்று இருக்கிறார்கள் என்பது போல காட்ட முனைவது பம்மாத்து தனமானது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்......குடுமிச்சண்டை ஒண்டுதான் இண்டைக்கு செய்தி. இந்த வார விடுமுறை எப்பிடிதான் கழியபோகுதொ!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: வார விடுமுறை நாட்களில் எசமானர்கள் வீட்டில் சாப்படு இல்லையா?? பழைய எலும்புத்துண்டுகளாவது??

:blink: இந்தியக் கைப்பொம்மைகள் என்று கூறுவது கஷ்ட்டமாக இருக்குதெண்டால், இந்தியா எமது எசமானர்கள் என்று சொல்லிப்பாருங்கள், எல்லாமே ஒன்றுதான்.

சம்பந்தன், மாவை, சுரேஷ் - மூவரும் தாம் "பல தசாப்த காலமாக இந்தியாவின் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் துரோகத்தனத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், இந்திய பெயரளவில் மட்டும் ஜனநாயக நாடாகவும் - செயலில் பயங்கரவாத நாடாகவும் இருப்பது நல்லதல்ல என்றும்" பகிரங்கமாக அறிக்கை விடுவதுடன், சீன, பாகிஸ்தான் உட்பட ஏனைய தூதரக அதிகாரிகளையும் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்துவார்களா.

  • கருத்துக்கள உறவுகள்
:lol::blink: இந்தியக் காதலன் என்டு சொல்லுங்கோவன், இப்ப ஆர் வேணாம் எண்டது??!! சம்பந்தர் ஐய்யா கிருஷ்ணாவின்ர கைய்யப் பிடிச்ச மாதிரியைப் பாத்தால் காதலன் மாதிரித்தான் கிடந்தது??!!!! வயசு போகப் போக விபரீதமான ஆசையெல்லாம் மனுசருக்கு வருமெண்டதை இப்பத்தான் புரிஞ்சுகொண்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.