Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டசபை தேர்தல் - இந்திய கங்காணி கட்சிகளின் நிலையும் தமிழ் தேசிய தோழர்கள் கடமையும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சட்டசபை தேர்தல் - இந்திய கங்காணி கட்சிகளின் நிலையும் தமிழ் தேசிய தோழர்கள் கடமையும்..

1zp6qde.jpg

வரும் சட்டசபை தேர்தலுக்கான ஒத்திரிகை வேலைகள் வழக்கம் போல் தமிழகத்தில் ஆரம்பித்துவிட்டன. அதாவது குரங்குங்கு சவால் விடுதல்..டில்லி ஏகாதிபத்தியத்திற்கு மாமாவேலை பார்த்தல் ஆகியவை.

நடிகர் கம் பிழைப்புவாதி விசயகாந்து இனி கூட்டணி இல்லாமல் காலந்தள்ள முடியாது என்று உணர்ந்து 'மற்ற கங்காணிகளுடன் கூட்டு கொள்ளை அடிக்க நாங்கள் தயார்..ஆர்வம் கொண்டோர் எங்களை அணுகலாம் அதை பரிசீலித்து கூட்டணி வைப்போம்' என்று அறிவிப்பு கொடுத்துவிட்டார்.மற்றுமொரு மாமா இதுவரை காமராசருக்கு இதுவரை செங்கலை கூட கொடுக்கவில்லை.. தேர்தல் வருகிறது என்றவுடன் மணிமண்டபம் மாநாடு என்று பவுடர் பூசிகொண்டு கிளம்பிவிட்டார்.

ஜெயலலிதாவும் தில்லி சென்று வருகிறார். ’அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி உறுதி’ என ஊடகங்கள் சிலர் ஆரூடம் சொல்கின்றனர். ஜெயலலிதாவும் சோனியாவும் பேசிக் கொண்டது பெரிய செய்தியாகிறது. அவரும் அடுத்த நிலை என்ன என்பதை ஆழ்ந்து தீர்மானிக்க வழக்கம் போல் கொடநாடு சென்றுவிட்டார்.

அதிர்ச்சியுற்ற தமிழ் ஈன தலைவரும் வழக்கம் போல் சுயாட்சி கோசத்தை கிளப்பிவிடுகிறார்.இதுவரை சுயாட்சி கோசம் எங்கிருந்தது என்பதை இந்தியன் படத்தில் வரும் கமல் -கவுண்டமணி காமெடி போல் "சந்துரு என்ற மானஸதன் இங்கு கொஞ்ச நேரம் முன்பு இருந்தான் அவனத்தான் தேடுகிறேன்" என்பது போல மனதை தேற்றி கொள்ளவேண்டியதுதான

இத்தோடு நம்மவர்களை ஏமாற்றினால் பரவாயில்லை.. இன்னும் நாம் ஈழ தமிழர்களுக்காக போராடுகிறோம் என்று அறிக்கை விட்டு அட்டகாசம் செய்து இன்னமும் அவர்களை ஏமாற்றுவதுதான் அயோக்கியதனமானது.

போலி மார்கசிய.. கம்யுசுட்டுகளின்.. நிலையோ எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு சென்றுள்ளது. அண்டைமாநில கேரளாவின் சதிக்கு தங்களின் மறைமுக ஆதரவை மனமுவந்த் அளிப்பார்கள்.. தமிழருக்கான தன்னுரிமை என்றால் போலி வேடமிட்டு கர்புர் என்று கிளம்பிவிடுவார்கள்.. தற்போது இவர்கள் நிலை யாராவது அழைப்பார்களா என்று தெவுடி காக்கும் நிலையே..

இவர்களின் நிலை கண்டு தமிழினத்தின் முதன்மை எதிரியான தேசிய கங்காணி காங்கிரசு நிலை மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. தமிழ்தேசிய தோழர்களின் மீது பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் என்று சேறடிப்பது வழக்கம் போல ஜோராக சென்று கொண்டுள்ளது .. பேசாமல் இரண்டு திராவிட கங்காணிகளும் இவர்களை தங்களுக்குள் ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டு அன்ன போஸ்டாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்வு செய்து.. தங்களுக்குள் தேர்தலுக்கான காட்டகுஸ்தி போட்டு முடிந்த பிறகு அதிக எண்ணிக்கையில் தேர்வு பெறும் கட்சிக்கு ஆட்சி அமைக்க காங்கிரசு கட்சியின் ஆதரவு தேவை என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் காங்கிரசு ஆதரவை கோரலாம்.. காமராஜர் ஆட்சி அது இது என்று ஒப்பாரி வைத்தாலும் கட்டாயம் மனமுவந்து ஆதரவு அளிப்பார்கள் என்பது 100% உறுதி..

இது ஒருபுறம் இருக்க தமிழ் தமிழ் என்று இதுவரை ஊளையிட்டும் ..குரங்குக்கு சவால் விட்டும் வந்து இப்போது வன்னியர்களை மட்டும் குறிவைத்து கிளம்பும் ராமதாசு ஒருபுறம்.. இந்திய ஆட்சியாளர்களிடம் கைகோர்த்து ஈழதமிழர்களுக்கு பாலூற்றிவிட்டு ஈழ அதிபரின் தம்பியான "தமிழ்தேசிய போராளியான" திருமா ஒருபுறம்.. இனம் இனத்தை சேரும் என்ற பழமொழிக்கேற்ப வழக்கம் போல அதிமுகாவிற்கு மறைமுக ஆதரவு நல்கும் தேசிய கங்காணி பி.ஜே.பி ஒருபுறம்.. எச்சில் தெறிக்க மைக் முன்பு மட்டுமே இந்தியா துண்டாகும் அது ஆகும் இது ஆகும் என்று பேசி இந்திய தேர்தலிகளில் பங்கேற்கும் வைகோ ஒருபுறம்..

"அகில இந்திய நாடாளும்" என்று காமெடி செய்யும் வெத்தலை பாக்கு புகழ் நடிகர் ஒருபுறம்.. என்று இருக்க...மற்றொரு புறமோ.. குறிஞ்சி மலர் போன்று தேர்தல் காலத்தில் மட்டுமே மாநாடு நடத்தும் சாதி சங்கங்கள் ஒருபுறம் சொந்தங்களே! உறவுகளே! அழைக்கிறோம் அலை கடலென் கடுகடுக்க திடுதிடுக்க திரண்டு வாரீர்.. என்று அழைப்பிதழ் கொடுக்க ஆரம்பித்துவிட்டன..எங்கே அதிகமாகப் பீறாய்ந்துகொள்ள முடியுமோ அங்கே குரங்கு போல தாவுவதற்காகக் தனது சாதி சனத்திற்கு கால்களுக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. தேர்தல் என்றாலே, வெட்கம், மானம், சூடு.சொரணை ஆகிய மனிதத் தன்மைகளுக்குப் புறம்பாக நடந்துகொள்வதுதான் என்ற ‘விதி’ கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் சிக்கல்கள்..

m7c5g5.jpg

தமிழகத்தின் சிக்கல்கள் என்று தனியாக பல திரிகளில் விவாதித்துள்ள போதிலும்.. மேலோட்டமாக சில..

காவிரி உரிமை பறிபோய் விட்டது. போனது போனதுதான் என நம்மை தேற்றி கொள்ள வைப்பதுதான் ஆட்சியாளர்களின் முயற்சி. அது தற்போது கன ஜோராக சென்று கொண்டுள்ளது காவிரித் தீர்ப்பாயம் தீர்ப்புச் சொல்லி மூன்றாண்டு ஆகிறது. அது நமக்கு நிறைவு தரும் தீர்ப்பல்ல. ஆனால் அதையும் கூட கிடப்பில் போட்டு விட்டார்கள். முல்லைப் பெரியாற்றில் நமக்குச் சாதகமான தீர்ப்பு கிடைத்தும் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியாளர்களுக்குத் துப்பில்லை. இப்போது பழையபடி உச்சநீதி மன்றக் கிணற்றில் போட்ட கல்லாகி விட்டது. தமிழக நீர் வளங்கள் முறையாகப் பாதுகாக்கப்படவில்லை. புதிய நீர் வளங்கள் உருவாக்கப்படவில்லை. ஆற்றுவளங்கள் பாதுகாக்கப்படவில்லை.பாலாறு, பவானி, அமராவதி என்று தமிழினத்திற்கு எதிராக புதுப் புதுச் சிக்கல்கள் முளைத்த வண்ணமுள்ளன.

தமிழக உழவர்களின் விளைபொருட்கள் ஆன்லைன் வணிகம் என்ற பெயரில் வட இந்தியச் களவாணிகளால் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுகின்றன. தமிழகத்தின் பாரம்பரிய கால்நடை செல்வங்களான நாட்டு மாடுகள் கேரளாவுக்குக் கறிக்காக லாரி லாரியாக அனுப்பப்படுகின்றன. தமிழக உழவர்களின் நிலங்கள் அரசியல்வாதிகள் - அடியாட்கள் - முதலாளிகள் ஆகியோரின் முக்கூட்டால் கூவி கூவி ஏலம் விற்கபடுகிறது.. பன்னாட்டுப் மாமா நிறுவனங்களுக்குத் தமிழக மண்ணைத் தாரை வார்த்துப் பெரும் கொள்ளை அடிப்பது இந்த இந்திய கைத்தடிகளின் தொடர் கொள்கையாக உள்ளது.மலைகளும் காடுகளும் அன்றாடம் அழிக்கப்படுகின்றன. மலைவாழ் மூத்த தமிழர் அனைவரும் நகரங்களை நோக்கி கூழுக்கும் கஞ்சிக்கும் மறைமுகமாக விரட்டி அடிக்கப்படுகின்றனர். தில்லி ஏகாதிபத்தியம் நம் மீது தொடுத்துக்கொண்டிருக்கும் ஒடுக்கு முறையின் விளைவுகள் இவை.

இதே நிலை நீடித்தால், தமிழத்திலேயே தமிழன் தனது உணவுத் தேவைக்காக தெருத்தெருவாக பிச்சை எடுக்க வேண்டி வரும்.புதிய மீன்பிடி சட்டம் .. சிங்களவர் அட்டூழியம் என்று தமிழக மீனவரின் துயர நிலையும் சொல்லில் அடங்கா..

இன்றளவும் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழி ஆவதும் பயிற்று மொழி ஆவதும் நீதி மன்ற மொழி ஆவதும் முழுமை பெறவில்லை. இந்தித் திணிப்புக்கு சட்டம் 17ஆவது பிரிவை எதிர்த்துப் போராடியவர்கள்தான் இப்போது தமிழகத்தில் ஆட்சி புரிகின்றனர். இந்தி அரசிலும் பங்கு வகிக்கிறார்கள். ஆனால் 17ஆவது பிரிவில் ஒரு வாக்கியம், ஒரு வார்த்தை, ஒரு எழுத்தைக் கூட தமிழில் எழுத இவர்களுக்கு துப்பில்லை . இத்தனைக்கும் முதலமைச்சரின் மகன் அழகிரி நடுவண் அரசில் அமைச்சராக இருக்கிறார். நாடாளுமன்ற மக்களவையில் தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்குத் தமிழில் பதில் சொல்ல அவருக்கு உரிமை இல்லை.அது பற்றி இவர்களுக்கும் கவலை இல்லை. பதவி பணம் என்பதுதானே இவர்களது குறிக்கோள்.

தமிழ் நாட்டில் தமிழைக் கல்வி மொழியாக்க வேண்டும் என்பதைக் கொள்கையளவில் கூட தமிழக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. சமச்சீர் கல்வி என்ற ஒன்றை அரசு இப்போது அறிமுகப்படுத்தவுள்ளது. ஆனால், ஆங்கிலம், தமிழ் இரண்டில் எது வேண்டுமானாலும் பயிற்று மொழியாக இருக்கலாமாம். ஆங்கிலத்தை எந்த வகுப்புக்குப் பின் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதில் முதலில் இவர்களுக்கு தெளிவு இல்லை. கல்வி மொழி பள்ளிக்குப் பள்ளி மாறுபடும் என்று தெரிகிறது.அத்தோடு பகத்சிங்கு முதல் அனைத்து 'இந்தி'ய விடுதலைக்கு போராடியவர்களும் வழக்கம் போல போற்றபடுவார்கள் ..அப்ப நம்மவர்களுக்கு? எல்லாம் முதாலாம் வேலூர் புரட்சி என்று அரசல் புரசலாக நம்முடைய குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.இது எப்படி சமச்சீர் கல்வி ஆகும்? மேலும் சிலருக்கு இலவச கல்வி, சிலருக்குக் கட்டணக் கல்வி... இது எப்படி சமச்சீர் கல்வி ஆகும்? சிலருக்கு மாநிலக் கல்வித் திட்டம்(stateboard), சிலருக்கு மத்தியக் கல்வித் திட்டம்(cbse)... இது எந்த ஊர் நியாயம்?

தமிழ் தேசிய தோழர்களின் கடமை

che-guevara.jpg

தமிழக மக்கள் தங்கள் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராடித்தான் ஆக வேண்டும். இதைத் தவிர்ப்பதற்குக் குறுக்கு வழி ஏதுமில்லை.சிலர் தமிழகத்திலும் பெரிய தீமையை எதிர்த்துச் சின்னத் தீமையை ஆதரிப்பது(dmk X admk) என்ற முறையில் வாதிடுவோர் உண்டு. ஏன் இக்களத்திலும் உண்டு .தீமைக்கு தீமை மருந்தாகா என்பதை தோழர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்

தமிழ்த் தேசியர்களும் சில எல்லைகளைத் தாண்டவே இல்லை என்பதை ஒப்புகொள்ள வேண்டும்.. மார்கசியம் மண்ணாங்கட்டி இசம் ரசம் என்று இவர்கள் தமக்குள் அடித்துகொள்வதும் அக்கபோர் செய்யும் நிலையிலேயே காலத்தை செலவிடுகின்றனர்.. ஆனால் பொது எதிரியை மறந்து விடுகின்றனர். தேர்தல் கட்சிகளின் புளுகு மூட்டைகளை மக்களுக்கு இனங்காட்டி, உண்மையான இன விடுதலை என்பது என்ன என்று விளங்க செய்வது நாம் மேற்கொள்ள வேண்டிய அவசரப் பணியாகும். இனி வழக்கம் போல் தேர்தல் சிலுப்பு வேலைகளை இந்திய மாமாக்கள் ஆரம்பிக்கலாம்.

‘ஈழத் தமிழர்களின் மறு வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றால், இந்தக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்’ என்று சில கட்சிகள் சால்சாப்பு பேசி வாக்குக் கேட்கலாம். ஈழச் சிக்கலைத் தமிழகச் சட்டமன்றத்தால் தீர்க்க முடியாது என்பது மெய்ப்பிக்கப்பட்ட உண்மை. ஒருவேளை, காங்கிரஸ் கட்சி, தி.மு.கவை கை கழுவினால், ’நான் ஈழத் தமிழரைக் காப்பதற்காகத் துடித்தேன். மவுனமாக அழுதேன்..சோனியாவின் இரக்கமற்ற இதயம் என் துடிப்பை உணரவே இல்லை’ என்று கலைஞர் கருநாகம் கதை-வசனம் எழுதி நீலிகண்ணீர் வடிக்க கூடும். இதோ தமிழீழம்.. தமிழக பிரச்சனைகளுக்கு தீர்வு என்று செயலலிதா வாக்கு கேட்க கூடும்..

இது போல பல இலவச அறிவிப்புகள், பணம், குவாட்டர், கோழி பிரியாணி.. போன்றவற்றால் ஏமாந்துகொண்டிருக்கும் நமது சொந்தங்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டுமே தவிர, அவர்களை நொந்துகொண்டு ஒதுக்கிவிடக் கூடாது.விரல் அழுக்காக உள்ளது என்று வெட்டிவிட முடியாது அல்லவா? 60 ஆண்டுகளாக ஊற வைக்கபட்ட மக்களை திடீரென மாற்றுவது இயலாது.. மக்களை நாடிச் செல்வதும், .அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதும், அவர்களை அணி திரட்டிப் போராடுவதும்.. பணிவாக மக்களிடம் எடுத்து சொல்வதே புரட்சிகர நடவடிக்கைகள்தாம்! தமிழ்த் தேசப் புரட்சி இலக்கை நோக்கிய இந்தப் பணிகளில் ஈடுபட, ’தேர்தல் அரசியலை ஒழித்தல், தமிழ்தேசிய மாற்று அரசியலை அமைத்தல்’ ஆகியவற்றை நிறைவேற்றுவோம்! அனைத்து தமிழின சிக்கல்களுக்கும் இதுவே சரியான தீர்வு!!

  • கருத்துக்கள உறவுகள்

வாசிச்சு தெரிஞ்சு வைத்திருக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தில் நடக்க கூடிய அனைத்தும் இதில் இருக்கின்றது.

நாம் ஒரு தமிழர் தேசிய இயக்கம் தொடங்கி தமிழில் பேசுவோரை போட்டுதள்ள வேண்டும். காரணம் யாராவது ஒரு அப்பாவி மீண்டும் தமிழனுக்காக போராட வெளிக்கிட்டு சாக கூடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாசிச்சு தெரிஞ்சு வைத்திருக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தில் நடக்க கூடிய அனைத்தும் இதில் இருக்கின்றது.

நாம் ஒரு தமிழர் தேசிய இயக்கம் தொடங்கி தமிழில் பேசுவோரை போட்டுதள்ள வேண்டும். காரணம் யாராவது ஒரு அப்பாவி மீண்டும் தமிழனுக்காக போராட வெளிக்கிட்டு சாக கூடும்.

நன்றி ஈழ தோழர் மருதங்கேணி தங்களின் கருத்துகளுக்கு.....போட்டு தள்ளவேண்டாம்... தங்களின் ஆக்கபூர்வ ஆலோசனைகளை கூறுங்கள் தோழர் மருந்தங்கேணி...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

நீங்கள் ஏற்கனவே எழுதிய கட்டுரையின் பதிலும் இதில் சேர்ந்தே என் பதிலில் உள்ளது .

1 . வாரம் ஒரு எம் எல் ஏ சாக வேண்டும் அல்லது கட்சி மாற வேண்டும் என பிரார்த்தனை செய்து இடைதேர்தல் வரவழைத்து உங்களின் ஒரு கருத்தான பேரம் பேசும் தகுதியை வளர்த்துக்கொள்ளலாம் என இருக்கிறேன்

தோழரே நீங்கள் சொல்லும் கருத்துக்களை நான் குறை கூற விரும்பவில்லை . எனினும் சாத்திய கூறுகள் தான் மிகவும் குறைவாக உள்ளது.

1 . முதலில் செய்ய வேண்டியது அரசியல் வாதிகளுக்கு மக்கள் மேல் பயம் மற்றும் மரியாதை வர செய்ய வேண்டும்.

இப்போது நடப்பதை பார்த்தால் எதுவும் நடப்பது போல தெரியவில்லை . நான் பதில் எழுதும் இப்போது பென்னாகரம் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டது .

2 . நீங்கள் சொல்லும் அனைத்து குறிக்கோள்களும் தன்னிறைவு பெற்ற குடிமக்களால் மட்டுமே சாத்தியமாகும் . அல்லது ஒன்றுமே இல்லாதவர்களால் சாத்தியம் ஆகும் . நடுத்தர மக்களால் ம்ம்ம்ம்ம்ம்ம்ம் .

3 . அனைத்து கட்சிகளிலுமே குறை இருக்கிறது . அதற்காக இன்னொரு கட்சியா ஆரம்பிக்க முடியும் ???

4 . எதிரிக்கு எதிரி என்ற முறை தற்போது அதிகம் ஒத்து வரக்கூடிய முறை . ஆனால் இதிலும் ஒரு மிகப்பெரிய தவறை நாம் செய்ய வாய்ப்புகள் உள்ளது .

இன்னும் நிறைய எழுத வேண்டும் . ஆனால் உங்கள் கருத்தை கேட்டபின் தொடருகிறேன்

வாசிச்சு தெரிஞ்சு வைத்திருக்க வேண்டிய விடயங்கள் நிறையவே உண்டு. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஈழத்தில் நடக்க கூடிய அனைத்தும் இதில் இருக்கின்றது.

நாம் ஒரு தமிழர் தேசிய இயக்கம் தொடங்கி தமிழில் பேசுவோரை போட்டுதள்ள வேண்டும். காரணம் யாராவது ஒரு அப்பாவி மீண்டும் தமிழனுக்காக போராட வெளிக்கிட்டு சாக கூடும்.

ஏன் அடுத்தடுத்தாண்டுகளுக்குப் போவான்.. இப்பவே ஆரம்பிச்சாச்சே.

ஓ.. ஒருவேளை விளைவுகளை காணப் பொறுத்திருக்க வேண்டுமோ என்னவோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.