Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வரம் வேண்டி

Featured Replies

வழமையை விட இந்தமுறை கூட நாட்கள் எடுத்துவிட்டது.

எல்லாம் அந்த தர்மகத்தாவால வந்தது நானும் கொஞ்சம் உணர்சிவசப்படாமல் மற்றவர்களைபோல காலை கீலை பிடிச்சிருக்கலாமொ? இவ்வளவு காசையும்,சொத்துப்பத்தையும் வைத்துக்கொண்டு ஒரு புறம்போக்கு நிலத்தில அதுவும் தற்காலிகமாக ஒரு 20 குடிசைகளை போடுவமென்றால் குடிசை போட நட்டுவைத்த அத்தனை மரங்களையும் வெட்டி வைத்திருக்கின்றாங்கள் பாவிகள்.வந்த கோபத்தில தர்மகத்தாவின்ர தலையை போட்டிருக்க வேண்டும்.ஏதோ அவன் செய்த புண்ணியம் வாய்ப்பேச்சோட நிப்பாட்டியது.பாவம் எங்கட அகதிகள் தான் சரியாக பயந்து போச்சுதுகள்.இவன் வந்து உள்ளதையும் குழப்பிவிட்டு போகப்போறான் என்று.நாளைக்கு வேலைக்கும் அந்த தர்மகத்தாவை தேடித்தானே அவர்கள் போகவேண்டும்.எதோ கடைசியில் ஒரு பிரச்சனையுமில்லாமல் அந்த குடிசைகள் கட்டி முடிச்சாச்சு. அந்த குடிசைகளை கூட்டி மெழுகி தங்கட புதுவீடு குடி போவதுபோல்முகத்தில் அவ்வளவு சந்தோசம். சிலருக்கு உள்ளுக்க கொஞ்ச மனவருத்தம் தங்களுக்கு புது குடிசைகள் கிடைக்கவில்லை என்று.கூப்பன்களைபார்த்து ஆகக் கூடிய அங்கத்தவர்கள் படிதானெ குடுத்தனான். ஊராட்சி சேர்மன் கடிதம் தந்திராவிட்டால் ஒண்டும் செய்திருக்கேலாது.மரக்காணத்தில் பஸ்சை நிறுத்தி ட்ரைவர் தேனீர் குடிக்க போக எனது நினைவும் அறுந்தது.

இனி சென்னைக்கு போக என்னென்ன புதுப்பிரச்சனைகள் தலைவிரிச்சாடுதோ.நாட்டுகென்று போரடவந்திட்டு தங்களுக்குளேயே குழம்பியடிச்சுக் கொண்டு 7,8 வயசுப் பெடியங்கள் போல் கோள் மூட்டுவதும்,பந்தம் பிடிப்பதும் கொஞ்சம் பொறுப்பிற்கு வந்து விட்டால், தான் வச்சதுதான் சட்டம் என்று பெடியங்களை படாத பாடு படுத்துவதும், கடவுளே என்று இந்த அகதிவேலையோட வாயை மூடிக்கொண்டிருப்பம்.திருப்பியும் முகாமுக்கு செல்வதை நினைக்கவே என்னவோ செய்தது.

சென்னையில் வீட்டை வந்தடய 11 மணியாகிவிட்டது.மெரீனா பீச் குளிர்காற்று மெல்ல முகத்திலடித்தது.வீட்டின் கதவு திறந்தபடியே இருந்தது.ஒருவரையும் காணோம் மெதுவாக மாடிப்படியேறுகின்றேன்.உருண்டு திரண்ட மரவள்ளிகிழங்கள் அடிக்கிவிட்டது போல படுத்திருக்கின்றார்கள்.யார் பெத்த பிள்ளைகளோ? எங்கேயோ பிறந்து,எங்கேயோ வளர்ந்து நாட்டுக்காக போராட எல்லாவற்றையும் விட்டுவிட்டு இங்கு வந்து,முழு பாரத்தையும் தலைவனிடம் விட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்குகின்றார்கள்.

எனது காலடிச் சத்தம் கேட்டு திரும்பிய பீற்றர்'அண்ணை என்ன இந்தமுறை 2 கிழமையாக காணோம்.யாரோ உங்களை காரில் வந்து தேடினார்கள்.நீங்கள் இப்ப சென்னயில் இல்லை. எப்ப வருவீங்களென்றும் தெரியாது என்று சொன்னேன். ஒரு கடிதத்தை தந்துவிட்டு போனார்கள்.மொட்டமாடிச் சுவரில் ஏறி இருந்து கொண்டு கடிதத்தை பிரிக்கின்றேன்.

"டேய் உன்னைத்தான் தேடிவந்தனாங்கள்,நீ இப்ப பெரிய ஆளாகிவிட்டாய் போலிருக்கு,முடிந்தால் இந்த நம்பருக்கு போன் பண்ணவும்" இப்படிக்கு ரகு,பஞ்சு,சாள்ஸ்,கதிர்.

(தொடரும்)

Edited by arjun

  • தொடங்கியவர்

இதுதான் எனது முதலாவது கதை.

எழுதும் விதத்தில் முன்னேற யாரவது உதவி செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சு நடையில் எழுத தொடங்கி விட்டீர்கள். தொடருங்கள்.பேச்சு நடையில் எழுதும் போது உண்மையான அனுபவங்களை அப்படியே எழுதலாம்.குறிப்பிட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கோர்வையாக எழுதினீர்கள் என்றால் பின்பு சம்பவங்கள் கோர்வைகளாக வாசிப்போர் மனதில் பதியும் என்பது இச்சிறியேனின் அபிப்பிராயம்.

அதாவது நீங்கள் ஒரு தொடராக எழுத முயல்கிறீர்கள். எனவே ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு அதை சுற்றியுள்ளவர்கள், பங்கு கொண்டவர்கள் பற்றி எழுதுங்கள்.அடுத்த தொடரை முதற்கூறிய சம்பவத்தோடு தொடர்பு படுத்தி எழுதலாம் அல்லது தொடர்பு பட்ட ஆளின் தொடராக கூட இருக்கலாம். :wub::(

  • தொடங்கியவர்

அட இவங்கள் நாலுபேரும் எப்படி ஒன்றாக இங்கு வந்தார்கள். வெவ்வேறு நாடுகளில் இருக்கின்றவங்களல்லோ? யாரோ ஒருவன் மாத்திரம் வந்துவிட்டு நாலு பெயரையும் எழுதி என்னை சுத்துறானா? லேட் என்றாலும் பரவாயில்லை நண்பர்கள் தானே என்று இறங்கிப் போய் சரவணபவனில் இருந்து நம்பரை சுழட்டுகின்றேன்.

கதிர்தான் போனை எடுத்தான் "டேய் நாங்கள் இந்தியா வந்து ஒரு கிழமையாகுது. முதலில் உன்னை பார்த்துவிட்டு பிறகு எங்கட ட்ரிப்பை தொடங்குவமென்றால் உன்னை கண்டு பிடிப்பதே பெரிய வேலையாகிவிட்டது.இப்ப எங்க நிற்கின்றாய் உடன வெளிக்கிட்டு வர ஏலுமா? சாள்ஸ் கதைக்க போகின்றானாம்" டேய் குரங்கா என்னடா செய்கின்றாய் உடன வெளிக்கிட்டு வா.நாங்கள் லண்டனிலயிருந்து வந்ததே உன்னை பார்க்கத்தான்.பயந்தே போனோம் பார்க்காமலே போய் விடுவோமோ என்று,உடன வாடா"

லைட்டாக அடிச்சிட்டாங்கள் போலிருக்கு.மோட்டர் சைக்கிளையெடுத்தால் ஒருக்கா போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம்.இரண்டு பேர் லண்டன் ஒருவன் பரிஸ் ஒருவன் அம்ஸ்டராம் சேர்ந்து வந்திருக்கின்றாங்கள்.

லண்டனில் இருந்து காரில் கொலன்ட் போய் ரகுவையும் ஏற்றிக் கொண்டுஅப்படியே பிரான்ஸ் போய் வந்தது இன்னமும் நினைவில் நிற்கின்றது.அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.திரும்பி வரேக்க ரகுவை கொலன்டில் இறக்கி விட்டு கூவர்கிராப்டில் கீழுக்கு காரை விட்டுவிட்டு வந்தால் புட்போல் மட்ச் முடித்து லிவர்பூல் Fபான்ஸ் குடிபோதையில் அவர்களின் ரீம் பாட்டையும் பாடிக் கொண்டு அந்த தளமே ஒரு ஆட்டம் கண்டது.சுற்றவர ஒரே வெள்ளைக் கூட்டம் ஒரே ஒரு பாக்கி நான் மாத்திரம்.சிறிது பயம் பிடித்துவிட்டது,போதையில் பகிடி பகிடியாக என்னை தூக்கி கடலில் போட்டால் மெள்ளப் போய் ஒரு மூலைக்குள் முகத்தை மூடிக்கொண்டுபடுத்து "டோவர்" வர எழும்பிய ஞாபகம்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டர்சைக்கிள் பறக்குது.கோல்டன் பீச்சிற்கு சற்று ஒதுக்குப்புறமாக "புளூ லகூன்"போட் தெரிகின்றது. மூதேவிகள் ஏன் வந்து இந்த மூலைக்க இடம் எடுத்து நிக்குதுகளோ.மோட்டார் சைக்கிளை விட்டிறங்கி அவர்களின் றூமை நோக்கி நடக்கின்றேன்.ஒதுக்குப் புறமானாலும் சுற்றவர அழகாக பூ மரங்களால் நிரம்பிய படி,ஸ்விமிங் பூல் நடுவில், ஆங்காங்கே இருக்கைகள்.ரூம் பெல்லை அமத்துகின்றேன்.கதவு திறக்கின்றது.நாலு பேரும் சிரித்தபடிஎன்னை கட்டிப் பிடிக்கின்றார்கள். இன்னுமொரு நாலு பேர் அந்த பிரமாண்டமான சிற்றிங் ரூமில் இருந்தபடியே என்னைப் பார்த்து சிரிக்கின்றார்கள்.

(THஓDஆறூM)

  • தொடங்கியவர்

என்னடா தாடியும் ஆளும் நல்லா மெலிஞ்சு போயிட்டாய்? இது உனக்கு தேவையோ?உண்மையில இப்ப சந்தோசமாகத்தான் இருக்கின்றாயா?

சிரித்தபடியே உள்ளே போகின்றேன்.வெளிநாடுகளில் இருப்பது போல் fபயர் பிளேஸுடன் கூடிய அந்த ரூம்.பெரிய டீ.வீயில் "தென்றல் வந்து என்னத்தொடும் என்று" மோகன் பாடிக்கொண்டிருக்கின்றார்.மேசை முழுக்க விதம்விதமான மதுவகைகள்.நான் லண்டனில் வேலை செய்த கொட்டேலை ஞாபகப்படுத்துகின்றது.எத்தனை விதம் விதமான தண்ணி அடித்தேன்

நான் சந்தோசமாக இருக்கின்றேனா? இல்லையா என்று நீங்கள் அறிய வேண்டுமென்றால் ஒருநாளை மாத்திரம் எனக்காக ஒதுக்கி என்னோடு வாருங்கள், அது இருக்கட்டும் நீங்களெல்லாம் எப்பேடா கலியாணம் கட்டினீர்கள்.

ஆளை ஆள் பார்த்து சிரித்தபடியே ஒவ்வொருவரும் தம் தம் மனைவிமாரை போய் கட்டிப் பிடிக்கின்றார்கள்.ஒரே மாதிரி இந்தியன் லுக்கும் அவர்கள் போட்டிருக்கும் உடுப்புகளும் என்னை ஒரு முறை "இல்லை இல்லை" எனச் சொல்ல சொல்லுது.அந்த பெண்கள் எல்லோரும் மிக அழகாக இருந்தார்கள் முகத்தில் உண்மையில்லை.

நான் குழம்பும் முதலே பீற்றர் கேட்டான் ஏதாவது சாப்பிடுகின்றாயா? தண்ணி? நீ இயக்ககாரன் குடிக்க மாட்டாய் என்று தெரியும் சாப்பாடு ஏதும்.மற்றது நான் பிறகு சொல்கின்றேன்.கடைசி அவர்களுக்கு முன்னால் கேவலமாக எதுவும் சொல்லாமல் விட்டானே என்பது போலாச்சு.

ரகு சிகரட்டுடன் "வா நடந்து போய் கதைக்கலாம் "என்றான்

இந்தியாவிற்கு வர முதலே ஒரு இந்திய நண்பனால் ஏற்பாடு செய்யப்பட்ட துணைநடிகைகள் இவர்களென்றும், இங்கு வந்து ஒரு போலி தாலிக்கொடியை போலிஸுக்காக கட்டினதென்றான்.பிழையோ சரியோ எங்களுக்கு தெரியாது வந்த நாள் முதல் சமையல் முதல் கொண்டு உடுப்பு தோய்க்கிறதும் அனைத்துமே அவர்கள்தான்.நினைத்தால் பாவமாக இருக்கின்றது இருக்கின்றவரை விசுவாசமாக இருந்திட்டு போவம் என்றான். மனசாட்சி கதைப்பது போலிருந்தது.

எங்கள் பழைய வெளிநாட்டு நினைவுகளும் என் இயக்க அனுபவங்களும் அதிகாலை 4 மணிவரை சாலையோரம் ஊர்வலம் போனது.திரும்பி வரும் போது நான் கேட்டதற்கிணங்க ஒரு நாள் என்னுடன் என முடிவானது.

எனது வேண்டுகளுக்கிணங்க மனைவிமாரை? விட்டுவிட்டு கொட்டைகாடு அகதிகள் முகாமிற்கு கூட்டிச் செல்லுகின்றேன். காலை 10 மணியிருக்கும் என்னை கண்டதும் முகாமிற்கு முன் அனைவரும் கூடிவிட்டார்கள்.எனது நண்பர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றேன்

நண்பர்களுக்கு வியப்பு மன்னார்,திருகோணமலையில் இருந்து வந்தவர்கள் தான் பெரும்பாலானவர்கள்.எமது மக்களா இவர்கள்.ஒரு சிறிய குடிசைக்குள் ஒரு குடும்பம் மாதம் 110 இந்திய ரூபாவுடனும் 4 படி அரிசியுடனும்.உயிர் தப்புவதற்காகத்தானே இவ்வளவு கஸ்டமும்.

அதற்குள் யாருடைய வீட்டில் நண்பர்களுக்கு சாப்பாடு கொடுப்பதென்பதில் நான் தான் நான் தான் என்று அவர்களுக்குள் சண்டை.நண்பர்களுக்கு நம்பவே முடியாதிருந்தது.சாப்பாடு தயாராகும் வரை நண்பர்களை அருகில் இருந்த பண்ணையார் வீட்டிற்கு கள்ளடிக்கவென்று கூட்டிக்கொண்டு போகின்றேன்.பண்ணயார் வீட்டிற்கு முன்னால் காரை நிப்பாட்டி விட்டு கதைவை தட்டினால் ஒரு தேவதை யன்னலை திறந்து அப்பா வீட்டிலில்லை வெளியிலிருங்கோ வந்திடுவார் என்றது.

புதிய வார்ப்புகள் படம் இப்ப நீங்கள் பார்க்கலாம் என நான் சொல்லவும் ரதி குடத்துடன் வெளியேவரவும் சரியாக இருந்தது.புகைத்துக் கொண்டிருந்த நண்பர்கள் ரதியிடம் தண்ணி வாங்கி குடித்து விட்டு கள் குடிக்காமல் திரும்பியது பெரும் பகிடி.

முகாமுக்கு திரும்ப அலுமீனியம் பிளேட்டில் மீன் குழம்பு,மீன் பொரியல்,சொதி என சாப்பாடு பிரமாதம் ஒரு 150 பேர் சுற்றவர நிற்க நண்பர்கள் சாப்பிட்டார்கள்.சாப்பிட்டு முடிய நண்பர்களின் கண்களில் கண்ணீர்.நான் சொன்னேன் இப்ப கண்ணீர் விடவேண்டாம் திரும்ப போய் உண்மையில் இயலுமானதை ஏதும் செய்யுங்கோ என்று.

அப்படியே போய் "புளூ லகூனில்" அவர்களை இறக்கியதுதான் மீண்டும் இன்றுதான் அவர்களை திரும்பவும் காண்கின்றேன்.18 வருடங்களுக்கு பிறகு.

அவர்களுடான சந்திப்பு தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

தங்களது கதையை நான் இன்னும் வாசிக்கவில்லை

ஆனால் கருத்து எழுதவேண்டும்போல் உள்ளது

பேனாவும் ஒரு ஆயுதம்தான்

அது எல்லாவற்றையும் விட வலிமையான ஆயுதம்

எனவே அது எம்மையே அழித்துவிடக்கூடும்

அதனால்தான் தங்களது சுய அடையாளம் முதலில் அவசியம்

இல்லாது விட்டால் கருத்து எழுத பலர் தயங்கக்கூடும்

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ளக்கூடாது அல்லவா...

இது இச்சிறியேனின் வேண்டுகோள் மட்டுமே.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.