Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஐபக்சே ஒரு பொழுதும் கூட்டமைப்பை தடை செய்யப் போவதில்லை. - கஐந்திரன்

Featured Replies

நேற்று வடமராட்சிப் பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஐந்திரன் அவர்கள்

தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் தாம் உறுதியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்

முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசிய அரசியலை உறுதியோடு முன்னெடுத்துச் செல்லுவதற்கான கொள்கைப் பற்றுக் கொண்ட, சலுகைகளுக்கு விலைபோகாத, அழுத்தங்களுக்கு அடிபணியாத, நேர்மையான, உண்மையான அமைப்பாக த.தே.ம.முன்னணியை உருவாக்கியுள்ளோம். நம்பிக்கையிழந்து, சோர்வடைந்து, துயரத்தில் துவண்டுபோயிருந்த மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பி, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இலட்சியத்தினை நோக்கி மக்களை நேர்மையாக வழிநடத்திச் செல்லும் பொறுப்பை தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி ஏற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் பேரழிவை தொடர்ந்து தமிழ் மக்களை தோல்வி மனப்பான்மைக்குள் தள்ளி, சரணாகதி அரசியல் பாதைக்கு கொண்டு செல்ல முயன்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சதி முயற்சிகளை முறியடித்துள்ளோம். விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் விடுதலைப் புலிகளுக்குத் துதிபாடி தாம் தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று காட்டிக் மக்களை ஏமாற்றி வந்த சில ஊடகங்கள் இன்று சிங்கள பௌத்த பேரினவாதமும் இந்திய ஏகாதிபத்தியமும் விரும்புவது போன்று தமிழ்த் தேசியத்தை சிதைத்து தமிழர்களை நிரந்த அரசியல் அனாதைகளாக்கி சிங்களத்தையும், இந்திய ஏகாதிபத்தியத்தினையும் திருப்திப்படுத்தி தமது சுய இலாபங்களை அடைந்து கொள்ள கங்கணம் கட்டி நிற்கின்றன.

அந்த நோக்கத்திற்காகவே தமிழத் தேசியக் கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டுள்ளது என்பதனை நன்கு தெரிந்து கொண்ட பின்னரும் அதன் தலைமையை ஏதோ பெருந்தேசியத் தலைவர் என்பது போலவும், தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நிலை கொண்டுள்ள தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகனை கொச்சைப்படுத்தும் வகையிலும் செய்திகளை எழுதி மக்களை குழப்பி வருகின்றன. இவ்வாறான எழுத்துக்கள் மூலம் கூட்டமைப்புத் தலைமையில் துரோகத்தனங்களை மூடி மறைத்து மக்களை ஏமாற்றி தவறாக வழிநடத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க வைக்கும் பாதகச் செயலை குறிப்பிட்ட ஓருசில ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை அழிக்க ராஐபக்சே விரும்புவதாகவும், அதற்காக கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களை ராஐபக்சே பயன்படுத்துவதாக கட்டுக்கதைகளை சில ஊடகங்கள் எழுதிவருகின்றன. ராஐபக்சே கூட்டமைப்பு தலைமையை அழிக்க முற்படுவதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யானது. கூட்டமைப்புத் தலைமையை பாதுகாக்க வேண்டிய கட்டாய தேவை ராஐபக்சேக்கு உண்டு.

முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்ற பொழுது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பொழுதெல்லாம் கூட்டமைப்புத் தலைமைகள் அமைதியாக இருந்ததன் மூலம் பொது மக்கள் படுகொலை செய்யப்படவில்லை என்பது போலவும் புலிகளுக்கு எதிராகவே ராஐபக்சே யுத்தம் செய்கின்றார் எனவும் உலகுக்கு காட்டிக் கொள்ள கூட்டமைப்புத் தலைமைகள் உதவினர்.

வன்னியில் உள்ள மக்களின் எண்ணிக்கையை குறைத்து அரசு கூறியதுடன் உணவுத் தடை மருந்துத் தடை என்பவற்றை விதித்த பொழுது அரசு கூறும் புள்ளி விபரங்கள் சரியானவை என்ற அடிப்படையில் அமைதியாக இருந்து அரசுக்கு ஒத்துழைத்தனர். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும் என எரிக்சூல்கெய்ம் என்ற மனிதன் இந்தியாவில் இருந்து அறிக்கை விட்ட பொழுது அமைதியாக இருந்து புலிகளின் அழிவை மகிழ்வுடனும் ஆவலுடனும் எதிர்பார்த்திருந்தனர்.

இறுதிப் போரின் பொழுது ஐநா மேற்கொள்ள முயன்ற சில நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தி ராஐபக்சேவை காப்பாற்ற இந்தியா மேற்கொண்ட அத்தனை முயற்சிகளுக்கும் கூட்டமைப்புத் தலைமைகள் பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தன. இவ்வாறான கூட்டமைப்புத் தலைமைக்கு ராஐபக்சே என்றும் கடமைப்பட்டவர். அவர் ஒரு பொழுதும் கூட்டமைப்பை தடை செய்யப் போவதில்லை.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக அழித்த பின்னர் அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கோரிக்கையை இல்லாதொழிக்க ராஐபக்சே கங்கணம் கட்டி நிற்கின்றார். இந் நிலையில் ராஐபக்சேயின் கொலைப் பட்டாளத்துக்கு எந்த வேலையும் வைக்காமல் தமிழ்த் தேசியத்தை தமிழ் மக்கள் விரும்பி தாமாகவே கைவிடும் நிலையை ஏற்படுத்த கூட்டமைப்புத் தலைமைகள் செயற்படத் தொடங்கியுள்ளனர். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் தமிழ் மக்கள் மத்தியில் எஞ்சியுள்ள தேசிய உணர்வை திட்டமிட்டு அழிக்கும் பொறுப்பை கூட்டமைப்பு தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்காகவே தமிழ்த் தேசியக் கொள்கைகளை கைவிட்டு தீர்வுத்திட்டம் ஒன்றினைக் கூட்டமைப்புத் தலைமை தயாரித்து வைத்திருக்கின்றது.

அத்துடன் கடந்த தேர்தலின் பொழுது விடுதலைப் பலிகளால் கூட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டு புலிகளது அழிவுக்குப் பின்னரும் கொள்கையில் உறுதியாக உள்ளவர்களை வெளியேற்றியதன் மூலம் தனது விசுவாசத்தை கூட்டமைப்பு ராஐபக்சேக்கு வெளிப்படுத்தியுள்ளது. இவ்வளவையும் செய்துள்ள கூட்டமைப்புத் தலைமையை ராஐபக்சே பாதுகாக்க விரும்புவாரே அன்றி அழிக்க விரும்பமாட்டார். உண்மை இவ்வாறு இருக்க ராஐபக்சே கூட்டமைப்புத் தலைமையை அழிக்க முற்படுவதாக கூறுவது மக்களை ஏமாற்றி வாக்குகளை கவருவதற்கான முயற்சியே அன்றி வேறில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் என்று அரசுத்தரப்பில் கூறப்படுவதாக செய்திகள் வருகின்றது. அதற்கான காரணமாக கூட்டமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூறிவருவதாக சொல்லப்படுகின்றது. கூட்டமைப்புக்குள் இருந்து நாட்டைப் பிளவுபடுத்துவது பற்றி கருத்துக் கூறக் கூடியவர்களை கூட்டமைப்புத் தலைமை வெளியேற்றியுள்ளது. இப்போது கூட்டமைப்பில் உள்ள அதன் தலைமைகள் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு வாழ்வது பற்றியே தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது நாட்டைப் பிளவுபடுத்தும் கருத்துக்களை கூட்டமைப்பு முன்வைப்பதாக அரசு கூறுவது கூட்டமைப்பினர் மீது அரசுக்கு ஆத்திரம் உள்ளது போன்ற பொய்யான தோற்றப்பாட்டை ஏற்படுத்தி, அதன் மூலம் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் உரிமைக்காக உண்மையாக குரல் கொடுக்கும் கட்சி என்று தமிழ் மக்களை நம்பவைத்து கூட்டமைப்புக்கு தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொடுத்து தமக்கு விருப்பமான கூட்டமைப்பை தேர்தலில் வெல்ல வைக்க இந்தியாவும், சிங்கள அரசும் கூட்டிணைந்து நாடகம் ஆடுகின்றன. இதனை தமிழ் மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பு நீண்டகாலத்திற்கு மக்களை ஏமாற்ற முடியாது. இந்தியாவின் எண்ணப்படி தமிழ்த் தேசியத்தை அழிக்க துணை புரியும் ஊடகங்களும் நீண்டகாலம் மக்களை முட்டாள்களாக்கும் முயற்சியை தொடரவும் முடியாது.

போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்படல் வேண்டும் என அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தரப்புக்கள் வலியுறுத்திவரும் இவ்வேளையில் ராஐபக்சேயின் குடும்பத்தை தூக்குமேடைக்கு கொண்டு செல்ல மேற்படி அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் முயற்சி செய்யும் பொழுது ராஐபக்சேவை காப்பாற்றும் முயற்சியில் கூட்டமைப்பு தலைமை ஈடுபடுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொங்குதமிழ் என்ற இணையத் தளத்திற்காக செவ்வி தருமாறு கேட்டுவந்த ஒருவருக்கு கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். கNஐந்திரகுமார் பொன்னம்பலத்திடம் செவ்விகண்ட அந்த செய்தியாளர் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு காண்பதே தமது விரும்பம் என்று கNஐந்திரகுமார் கூறியதாக உண்மையை திட்டமிட்டு திரிபுபடுத்தி நேர்காணலை வெளியிட்டுள்ளார். ஆனால் கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை எப்பொழுதும் நிராகரித்து வருபவர்.

அத்துடன் தமிழ் மக்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்ற கொள்கைகள் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலேயே தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். ஆனால் பொது மக்களை குழப்பி கூட்டமைப்பை வெற்றிபெற வைக்கும் உள்நோக்கிலேயே மேற்படி நேர்காணல் திட்டமிட்டு திரிபுபடுத்தப்பட்டுள்ளது. எங்களது உயிர் உள்ளவரை இந்தக் கொள்கைகளை நாம் விட்டுக் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.pathivu.com/index.php/news/6211/54//d,view/

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பொங்குதமிழ் என்ற இணையத் தளத்திற்காக செவ்வி தருமாறு கேட்டுவந்த ஒருவருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் செவ்விகண்ட அந்த செய்தியாளர் உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு காண்பதே தமது விரும்பம் என்று கஜேந்திரகுமார் கூறியதாக உண்மையை திட்டமிட்டு திரிபுபடுத்தி நேர்காணலை வெளியிட்டுள்ளார். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளக சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டை எப்பொழுதும் நிராகரித்து வருபவர்.

அப்படியென்றால் தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் இந்த உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து சந்திரிகா ஆட்சியின்போது சிலாகித்துள்ளாரே. அப்போதும் கஜேந்திரகுமார் இதனை நிராகரித்திருந்தாரா?

  • தொடங்கியவர்

அப்படியென்றால் தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் இந்த உள்ளக சுயநிர்ணய உரிமை குறித்து சந்திரிகா ஆட்சியின்போது சிலாகித்துள்ளாரே. அப்போதும் கஜேந்திரகுமார் இதனை நிராகரித்திருந்தாரா?

அப்போது கயேந்திரகுமார் அரசியலில் இருந்தாரா ?? அவரின் தந்தை இருந்தாரா ?

தராக்கி

ஒஸ்லோ பிரகடனத்தை பாலசிங்கம் ஏற்றவர் ஆனால் தலைவரோடு இருந்தவர்கள் கெடுத்துவிட்டார்கள்

என்று சொன்னதைப்போல் நீங்கள் சொல்லாமல் விட்டால் சரி

இவற்றை நிர்வாகம் நீக்கியது அது அவர்களின் சுயரூபங்களை மூடிமறைக்கவே உதவி செய்கின்றார்கள் இப்படியான கருத்துக்கு பதிலளிக்கும் கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது

நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும் இதற்கு பல விளக்கங்கள் பல இடங்களில் இருக்கின்றது

இதற்கு மேலும் நான் போதுவாக நடுநிலையாக எழுதுகின்றேன் என்று சொல்லி பாடம் எடுக்காதீர்கள்

உங்கள் சம்பந்த வாதம் மெய்சிலிர்க்கின்றது

கயேந்திரன் பிளவு என்பது எமக்கு பல புலிஎதிர்ப்பு ,பிரதேச,சம்பந்த, பிழைப்பு வாதிகளை இனம் காண வைத்திருக்கின்றது

Edited by tamilsvoice

இருக்கும் இருக்கும்.... மகிந்தவை உவர் சந்திக்கைக சொல்லியிருப்பார்.... தம்பி சொன்னால் சரியாத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தராக்கி

ஒஸ்லோ பிரகடனத்தை பாலசிங்கம் ஏற்றவர் ஆனால் தலைவரோடு இருந்தவர்கள் கெடுத்துவிட்டார்கள்

It is against this backdrop that the TNA enters its crucial third phase. Though this phase should properly begin after the April 8th 2010 elections some recent developments could also be attributed to this phase.

In a sense the TNA has undergone a transfiguration after the events of May 2009 where the LTTE was defeated and virtually destroyed in the Karaithuraipatru AGA division of Mullaitheevu district.

Realising perhaps that the LTTE was on the verge of military defeat and suffering perhaps pangs of conscience for the tragic state of the Tamil people the TNA leadership tried in early 2008 to draft a political blueprint for a negotiated settlement.

There was encouragement in this regard from influential sections of the international community and India as well as thinking sections of the Tamil Diaspora.

A panel of Tamil lawyers was assigned the task of drafting a scheme outlining the contours of a political settlement. The idea was to base it on the Oslo accord of 2002 where the Govt of the day and the LTTE agreed to explore a federal solution. Representatives of 56 Countries and International organizations were witnesses to that historic agreement.

But when Senathirajah went to the Wanni to attend Sivanesan’s funeral and met with Prabhakaran the tiger supremo was not pleased with the project.

Apparently Prabhakaran wanted to distance himself from the Oslo agreement signed by Anton Balasingham. Thereafter the TNA project of drafting political proposals was put in cold storage.

http://dbsjeyaraj.com/dbsj/archives/1429

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியினரை வீழ்த்தி அவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்துகிறார் கஜேந்திரன் என்றால் தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு உட்பட்ட அனைத்து இடங்களிலும் ஏன் போட்டியிடவில்லை?. மக்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள் என்று அப்போதானே பார்க்கலாம்.

இவர்கள் கூட்டணியில் இருந்த போது தான் சம்பந்தர் இவ்வளவு பிழைகள் விட்டிருக்கிறார். அப்போதே அதனை சுட்டி காட்டாமல் கட்சியை விட்டு வெளியேறிய(வெளியேற்றப்பட்ட) பின்னர் குறை கூறுவது ஏன்?

இன்னும் தமிழீழம் தான் தீர்வு என்று கஜேந்திரன் குழு கூறுகிறது. சம்பந்தர் தமிழிழ கொள்கையை கைவிட்டு ஏதோ சமஸ்டி என பேசுகிறார்? அப்போ மகிந்த கஜேந்திரன் குழுவை தானே தடை செய்ய வேண்டும்??.ஆனால் மகிந்த கூட்டமைப்பை தான் தடைசெய்ய வேண்டும் என கூறுகிறார். எங்கோ உதைக்கிறதே!!!

சம்பந்தரால் தமிழினத்துக்கு செய்யமுடியாது என்பது கடந்தகால வரலாறு.

கஜேந்திரன் கூட்டமைப்பை குறைகூறி வாழ்வதை நிறுத்திவிட்டு, தமது கொள்கைகளை வலுப்படுத்திக்கொண்டு போவதே நாகரிக அரசியல் என்பது எனது கருத்து. சேத்துக்குள் கல்லை எறிந்து தன்மேல் சேறு விழாமல் கஜேந்திரன் பார்த்துக் கொள்ளவேண்டும்.

அப்போது கயேந்திரகுமார் அரசியலில் இருந்தாரா ?? அவரின் தந்தை இருந்தாரா ?

என்று சொன்னதைப்போல் நீங்கள் சொல்லாமல் விட்டால் சரி

இவற்றை நிர்வாகம் நீக்கியது அது அவர்களின் சுயரூபங்களை மூடிமறைக்கவே உதவி செய்கின்றார்கள் இப்படியான கருத்துக்கு பதிலளிக்கும் கடப்பாடும் அவர்களுக்கு இருக்கின்றது

நீங்கள் முதலைக் கண்ணீர் வடித்தது போதும் இதற்கு பல விளக்கங்கள் பல இடங்களில் இருக்கின்றது

இதற்கு மேலும் நான் போதுவாக நடுநிலையாக எழுதுகின்றேன் என்று சொல்லி பாடம் எடுக்காதீர்கள்

உங்கள் சம்பந்த வாதம் மெய்சிலிர்க்கின்றது

கயேந்திரன் பிளவு என்பது எமக்கு பல புலிஎதிர்ப்பு ,பிரதேச,சம்பந்த, பிழைப்பு வாதிகளை இனம் காண வைத்திருக்கின்றது

War and Peace என்ற தனது புத்தகத்தில் 4ம் அத்தியாயத்தில் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்கள் சந்திரிக்கா நீட்டிய கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப்பிடித்ததை புலிகள் மேற்கொண்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 1994ம் ஆண்டுத் தேர்தலில் சந்திரிக்கா வெற்றிபெறுவதை ஒரு இராஜதந்திர நோக்கத்திற்காக விடுதலைப் புலிகள் விரும்பினார்கள் என்பதையும் சில விட்டுக்கொடுப்புக்களையும் அந்த நேரத்தில் புலிகளின் தலைமை மேற்கொண்டது

  • தொடங்கியவர்

War and Peace என்ற தனது புத்தகத்தில் 4ம் அத்தியாயத்தில் கலாநிதி அன்டன் பாலசிங்கம் அவர்கள் சந்திரிக்கா நீட்டிய கரத்தை விடுதலைப் புலிகள் பற்றிப்பிடித்ததை புலிகள் மேற்கொண்ட ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு 1994ம் ஆண்டுத் தேர்தலில் சந்திரிக்கா வெற்றிபெறுவதை ஒரு இராஜதந்திர நோக்கத்திற்காக விடுதலைப் புலிகள் விரும்பினார்கள் என்பதையும் சில விட்டுக்கொடுப்புக்களையும் அந்த நேரத்தில் புலிகளின் தலைமை மேற்கொண்டது

நன்றி

ஆகப் புலிகள் ஒஸ்லோவை முழுமனதாக ஏற்கவில்லை ஒரு தந்திரோபாய நடவடிக்கைக்கு பாவித்தார்கள் என்று ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்

ஆனால் நீங்கள் எழுதியது

ஒஸ்லோ பிரகடனத்தை பாலசிங்கம் ஏற்றவர் ஆனால் தலைவரோடு இருந்தவர்கள்,,,,,,,,[ கெடுத்துவிட்டார்கள்]

பாலசிங்கம் முழுமனதாக ஏற்றவர் போலவும் தலைவரோடு இருந்தவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்பது போலவும் தான் நீங்கள் அப்போது எழுதியிருந்தீர்கள்

இதற்கு அர்த்தம் நீங்கள் கொடுத்த பதிலுக்கு முரணானது தராக்கி

Edited by tamilsvoice

கஜேந்திரனின் போலியான வரட்டு பிடிவாதம்(முன்னர் நடந்த சம்பவம் ஒன்றை சொல்றன் ;இவர் முன்னர் வட்டுக்கோட்டை தீர்மான வாக்கெடுப்புகளை கூட நிராகரித்து ஒரு ஊடகவியலாளரிடம் பேசியவர்) ஒன்றையும் தரப்போவதல்லை......

ஒரு உதாரணம் இங்கே லண்டனில் தமிழரின் வாக்குப்பலம் ஓரளவு சிறிய பலமானதுதான்;இதை வைத்து நாம் ஒரு சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டிருக்கலாம்; ஆனால் சில முட்டாள்கள் லண்டனில் தேர்தல் வரும் நிலையில் விடுதலைப்புலிகள் போன மாதம் மக்கள் முன்னணி எனும் கட்சியை தொடங்கினார்கள்.. ஆனால் இன்று அக்கட்சி தடைசெய்யப்பட்டுள்ளது..இதனால் நாம் லண்டன் தேர்தலில் பெரிதாக எமது பலத்தை காட்ட முடியாமல் போயுள்ளது...

ஏன் இவர்கள் விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி எனும் பெயரில் கட்சியை தொடங்க வேண்டும்(தற்போது சர்வதேச சூழ்நிலைக்கேற்ப அடக்கி வாசிப்ப்பது நல்லது),தமிழர் முன்னணி என்டு வைத்திருக்கலாம் தானே(இது புலியெதிர்பு அல்ல) ஆகவே சில விடயங்களை நாம் ராஜதந்திர நோக்கோடுதான் செயற்படவேண்டும்......இதே நிலைமைதான் இன்று கஜேந்திரனின் முட்டாள்தனம்....இதை சொன்னால் தராக்கி துரோகியா...

நன்றி

ஆகப் புலிகள் ஒஸ்லோவை முழுமனதாக ஏற்கவில்லை ஒரு தந்திரோபாய நடவடிக்கைக்கு பாவித்தார்கள் என்று ஒப்புக்கொள்ளுகின்றீர்கள்

ஆனால் நீங்கள் எழுதியது

இதற்கு அர்த்தம் நீங்கள் கொடுத்த பதிலுக்கு முரணானது தராக்கி

இல்லை தமிழர் குரல் நாம் ஒஸ்லோ திர்மானத்தை ஏற்பது போல் ஏற்று பின் அதனூடாக சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்டு...நோர்வே ,சுவீடனில் இருந்து பிரிந்தது போல் நாசுக்காக பிரிந்திரிக்கலாம்....

  • தொடங்கியவர்

தராக்கி

கயேந்திரன் செய்ததையோ புலிகள் செய்திருக்கக் கூடியதையோ நான் கேட்கவில்லை

பாலசிங்கம் முழுமனதாக ஏற்றவர் போலவும் தலைவரோடு இருந்தவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்பது போலவும் தான் நீங்கள் அப்போது எழுதியிருந்தீர்கள்

இது பாலசிங்கத்தின் புத்தகத்தில் இருக்கின்றதா ? இல்லையா ?

இதை எந்த ஆதாரத்தை வைத்து தலைவருடன் இருந்தவர்கள் கெடுத்து விட்டார்கள் என்று பழி சுமத்தினீர்கள் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.