Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்து சுகாதார சேவையில் வசூல் ராஜாக்கள்!

Featured Replies

யாழ்ப்பாணத்து சுகாதார சேவையில் வசூல் ராஜாக்கள்!

பாணன்

இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – பாணன்' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள்

கலை கலாசார கட்டுக்கோப்பான யாழ்ப்பாணத்தில் அது கைநழுவத் தொடங்கிவிட்டது என்பது பழைய கதை. 1995 ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை மீட்டாயிற்று என்று சொல்லி ஆக்கிரமித்தபோது அங்கு விரல் விட்டு எண்ணத் தகுந்தவர்களே ஒவ்வொரு கிராமங்களிலும் இருந்தனர். ஆனால் 1996 இல் மீள இடம்பெயர நேர்ந்தபோது யாழ்ப்பாணத்தவர் மீண்டும் யாழ் மண்ணிற்கே செல்ல முற்பட்டனர். பின்னர் பாதை திறப்பு அது இது என்று நடந்தபோது யாழ்ப்பாணம் கொஞ்சம் நிமிர தொடங்கியது.

வசதி வாய்ப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெருக தொடங்க கலாசாரம் அழிகிறது என்ற குரல் கேட்டது. போர்க்காலத்திலே களியாட்ட தடையுடன் சினிமாத் தடையும் இருந்ததால் ஏறத்தாழ எல்லோருமே ஒழுக்கமானவர்களாக இருந்தார்கள் என்றால் அது பொய்யில்லை. ஆனாலும் இந்த ஒழுக்கம் மனத்தில் பதிந்த கொள்கையுடன் கூடிய ஒழுக்கமா அல்லது கட்டுப்பாடுகளின் நிமித்தம் வந்த ஒழுக்கமா என்ற கேள்விக்கு விடை 1996 களிலேயே கிடைத்து விட்டது.

குடியிருக்காத வீடுகளில் அவர்களின் அயலவர்களே கூரையை பிடுங்கும் மற்றும் கதவைப் பெயர்க்கும் கைங்கரியங்களை செய்யத்தொடங்கினர். ஆனால் அப்போதெல்லாம் கல்விமான்கள் பத்திரிகையாளர்கள் என்று பலரும் தவறுகளை சுட்டிக் காட்டி வந்ததால் நிலைமை ஒருவித கட்டுக்குள் இருந்தது.

ஆனால் தற்போது நிலைமையோ தலைகீழ். கல்விமான்கள் பெரியோர்கள் என கணிக்கப்பட்டிருந்த பலரும் சுயநலவாதிகளாக அல்லது சமூகப் பொறுப்பு அல்லாதவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வகையில் கடைசியாக சேர்ந்தவர்கள் மருத்துவ ஆளணியினர். யாழ் மக்களின் தெய்வங்களாக போற்றப்பட்ட மருத்துவர்களின் தற்போதைய நிலையை யாழ்ப்பாணத்தில் கண்டவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். உயிரையும் துச்சமென மதித்து சேவைசெய்த மருத்துவர்கள் கூட தற்போது பணத்திற்காக ஆசைப்பட்டு தனியார் வைத்தியத்தில் குறியாக நிற்கின்றனர்.

தவிர யாழ் போதனா வைத்திய சாலையின் நிலைமையோ மிக மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாண வைத்தியசாலையின் அம்புலன்சு கடந்த வருடங்களில் மிகவும் கஸ்ட நிலைமைகளில் மக்கள் இருந்தபோது (மற்றைய வாகனங்கள் தெருவில் இறங்க அனுமதி இல்லாத காலத்தில்) பெரிய சத்திர சிகிச்சை நிபுணர்களின் தேவையை பூர்த்தி செய்ய மதுக்கடைக்கு சென்று வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆனால் இதனை வெளிச்சத்துக்கு கொண்டுவந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியுயர்வு என்ற போர்வையில் இடமாற்றம் பெற்றுள்ளார். ஆனால் தவறு செய்த நிபுணர்களோ ஒன்றும் அறியாதவர்கள் போல இன்றும் கடமையில் உள்ளார்கள்.

சுகாதார திணைக்கள வைத்தியர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றப்படவேண்டும். இதனால் ஒரே தவறுகள் திரும்ப திரும்ப நடைபெறுவதும் வைத்தியர்கள் குறிப்பிட்ட வாட்டை அல்லது பிரிவை துஷ்பிரயோகம் செய்வதும் தடுக்கப்படும். இந்த இடமாற்றங்கள் சகல அரச ஊழியர்களுக்கும் பொருந்தும். ஆனால் வைத்தியர் பற்றாக்குறையை காரணம் காட்டி பல வைத்தியர்கள் பல ஆண்டுகளாக தங்களது பிரிவில் தனிக்காட்டு இராசாக்களாக கோலோச்சி வருகிறார்கள்.

இது உண்மையில் வைத்திய பற்றாக்குறையை அதிகரிக்கும் செயல்தான் என்றார் ஒரு திட்டமிடல் அதிகாரி. அதாவது போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சுற்றயல் வைத்தியசாலைகளான தெல்லிப்பளை மற்றும் சாவகச்சேரி சங்கானை வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றால் அந்த சுற்றயல் வைத்தியசாலையின் தட்டுப்பாடு நீங்கும். அதேவேளை வெற்றிடமாகும் போதனா வைத்தியசாலையின் வெற்றிடத்துக்கு இளநிலை வைத்தியர்களை வைத்து நிரப்பமுடியும். (முதல் நியமனம் பெற்று வரும் இளநிலை வைத்தியர்கள் சுற்றயல் வைத்தியசாலையைவிட போதனா வைத்தியசாலையை விரும்புவார்கள்)

இவ்வாறு இளநிலை வைத்தியர்கள் நான்கு வருடம் நிறைவடைந்ததும் சுற்றயல் வைத்தியசாலைக்கு மாற்றப்படலாம். இந்தப் பொறிமுறை இடம்பெற முடியாமல் அதிகாரிகள் தடையாக யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் என்பது உள்ளிருந்து கசிந்த தகவல்.

யாழ்ப்பாணத்தில் சிங்கள மொழிபேசும் வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவ்வாறே சிங்கள மொழி பெரும்பான்மையாக பேசப்படும் இடங்களில் தமிழ் வைத்தியர்கள் இருக்கிறார்கள். (அளவில் குறைந்தளவில்) ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையில் சிங்கள மொழிபேசும் தாதியர் இருக்கிறார்கள். ஆனால் கொழும்பில் அல்லது வேறு இடங்களில் தமிழ் மொழி பேசும் தாதியர்கள் இருக்கிறார்களா என்றால் மிகவும் புறக்கணிக்கத்தக்க எண்ணிக்கையில் இருக்கிறார்கள் (அதாவது ஒன்று இரண்டு).

சிங்கள தாதியரை யாழ்ப்பாணத்திற்கு நியமித்தது போல் ஏன் தமிழ்த் தாதியரை கொழும்பு போன்ற இடங்களில் நியமிக்கவில்லை என்ற கேள்வியை கேட்க யாருக்கும் துணிவில்லை. எங்கேனும் இடமாற்றம் பெற்றுப்போன ஓரிரு தமிழ் தாதியரை தவிர தலைநகர் மற்றும் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் தமிழ் மொழி பேசும் தாதியர் இல்லாததால் தமிழர் அரச வைத்தியசாலைக்கு போக பின்னடிக்கிறார்கள்.

இது தவிர தாதியர்கள் நோயாளியை நன்கு கவனிக்வேண்டுமாயின் நோயாளி பேசும் மொழியை தெரிந்திருக்கவேண்டும். அப்படியாயின் சிங்கள தாதியிடம் பராமரிப்பு பெறும் எங்கள் அப்பாவி தமிழ் மட்டுமே தெரிந்த பொதுமகனின் நிலையை எண்ணிப்பாருங்கள். இந்த நிலை முன்பு மலையகத்தில் இருந்தது. தற்போது யழ்ப்பாணத்திற்கும் வந்துவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் சிகிச்சை பெறவேண்டுமாயின் சிங்களம் தெரிந்திருக்கவேண்டும் (கொழும்பு போல) என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படியான பிரச்சனைகளை அரசியல்வாதிகள் தமிழரை காப்பவர்கள் என்று சொல்லுவோரும் கவனிப்பது இல்லை.

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறு பணியாளர்கள் வெற்றிடங்கள் நீண்டகாலமாக நிலவுகிறது. ஆனாலும் வைத்தியசாலை சீராக இயங்கவைக்கப்பட அங்கு தொண்டராக பணியாற்றும் சென் ஜோன்ஸ் முதலுதவிப் படையினரும் காரணம். அவர்களின் உதவியால் நோயாளரை மாற்றுதல் மற்றும் பரிசோதனை மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு எடுத்துச் செல்லல் தவிர சத்திர சிகிச்சை கூடத்தில் உதவியாளர்களாக கூட தொண்டர்கள் இருந்தார்கள். இந்த தொண்டர்கள் சிறு சம்பளமான ஒரு ஊக்குவிப்பு படியுடன் நீண்ட காலமாக சேவையில் உள்ளார்கள்.

ஆனால தற்போது சிங்கள சிறு பணியாளர்கள் யாழ் வைத்தியசாலைக்கு நியமிக்கப் படுகிறார்கள். சிறு பணியாளர்கள் நோயாளிகளின் மொழியை பேசத் தெரிந்தவர்களாக உள்ளுர் பணியாளர்களாக இருப்பின் அது சேவையை மேம்படுத்தும். தற்காலிகமாக நீண்ட காலமாக வேலை செய்த தொண்டர்களை புறந்தள்ளிவிட்டு சிங்கள பணியாளர்களை வரவேற்கும் அதிகாரிகளை என்ன என்பது!

வைத்தியர்களிடமும் பண ஆசை தொற்றிவிட்டது. வைத்தியசாலையில் என்றால் எனது கீழ் வேலை செய்யும் சிறு வைத்தியர்களே சிகிச்சை( முக்கியமாக சத்திர சிகிச்சை மற்றும் சிசேரியன் சிகிச்சை) செய்வார்கள். அத்துடன் அங்கே காத்திருந்து சிகிச்சை பெறுவதற்குள் உங்கள் வியாதி முற்றிவிடும் என்று பயமுறுத்தி வெளியே தனியார் வைத்தியசாலை உழைப்பை அதிகரித்துக் கொள்கிறார்கள். தவிர வைத்தியர்களுக்கிடையிலான போட்டியும் அநாகரிகமாக வெளிப்படும் தன்மையையும் காணக்கூடியதாக இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் முன்னேற்றத்தில் பல ஆண்டுகள் பின்தங்கி நிற்கிறது. யாழ் வைத்தியசாலையில் செய்யப்படும் புதுப்பிப்புகள் கூட பெரும்பாலும் அரச சார்பற்ற நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுவனவானவே தெரிகின்றன. அரச மானிய ஒதுக்கத்தை கேட்டு பெற அதிகாரிகளும் பின்னடிக்கிறார்கள் அரசியல்வாதிகளும் பின்னடிக்கிறார்கள். யாழ்ப்பாண மக்களை யார் காப்பாற்றப் போகிறார்கள்?

Jaffna Hospital -current problems

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு விளையாட்டு முக்கியம் ....அதை எந்த எந்த வழியில போய் எப்பிடி முன்னேற்றுறது அதுக்கான தூரநோக்கோடு செயல்படுற வேலைத்திட்டங்கள் நிறைய இருக்கு. அதன்முலம் சர்வதேச நாடுகளின்ட கவனத்த ஈர்த்து இலக்கை அடைவதற்கான செயல்திட்டங்களெல்லாம் இருக்கெண்டு கூடி கதைச்சவை.

உதெல்லாம் ரைம் வேஸ்ட்.... விட்டிடுங்கப்பா.

முதல்ல எந்த தீர்வுக்கும் இடம் குடுக்காமல் தமிழ் ஈழ கோரிக்கையை முன்வைப்பம்

ஈழம் கிடைச்சா பிறகு உதுகளைப் பார்ப்பம்.

Edited by Sooravali

இந்திய அடிவருடிகளில் ஊடாக இந்திய வருத்தம் ஈழத்தில் படர்வது தடுக்க முடியாதது.... இந்தியா எப்படி தமிழகத்தையும் மற்றய மாநிலங்களையும் தன் கட்டுக்குள் வைத்து இருக்க எப்படி மக்களை சுயநலவாதிகளாக மாற்றினார்கள் எனும் வரலாற்றை பார்த்தால் புரியும் ஈழமும் அப்படி மாற்றப்படும் போது அது புரியும்...

  • தொடங்கியவர்

என்ன செய்வது தமிழர்களின் விதி

ஒருபுறம் வெளி நாடு ஓடும் தமிழ் வைத்தியர்கள்

மறு புறம் ஊரில் வேலை செய்யும் தமிழ் வைத்தியர்கள்

இடையில் சில கண்றாவிகள் தமது கைங்கர்யத்தை நடாத்துகிறார்கள்

புலம் பெயர் தேசங்களில் நாம் கல்கி ......., சாமியார்கள், சிறி சிறீ,......, என்று ஏகபட்ட மன்னிகவும் சன் டி வி கலைஞர் டி வி என்று டொலரை அள்ளி வீச முடியுமாயின், அவர்கள் ஒரு சில டொலர்களை தான் வாங்குகிறார்கள். அது நியாயம்மாகவும் தெரிகிறது. நாம் முன்னர் ஒரு மாணவனின் சிகிச்சைக்கு காசு சேர்த்து அனுப்பியிருந்தோம் . அரச வைத்தியாசாலிகளில் வசதியிருந்து அவர்கள் சிங்களவர்கள் தமிழர்களை தனியார் வைத்தியசாலைகளில் தான் சிகிச்சை வழங்குவார்கள்.

இப்படி பலவித கருத்துக்கள் உண்டு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னவோ இதையும் எதையும் அரைகுறை அரசியல் ஆக்குவது போல் எனக்கு தெரிகிறது.

இலங்கையில், அதுவும் தமிழ் பிரதேசத்தில் வைத்தியர் எனப்படுவர் ஒரு தொண்டனாக இருக்கவேண்டும், சமூக சேகவனாக இருக்கவேண்டும் என்பது ஒரு எழுதாத விதி. ஆனால் துரசிஸ்ரவசகாமாக தங்களது மேலதிக உழைப்பினால் தனியார் துறையில் வேலை செய்பவர்கள் வாங்கும் விமர்சனங்கள் பலவகை. ஒன்று அவர்களும் அந்த மண்ணில் இருந்து தான் வந்தவர்கள் என்ற உணர்வோடு பாருங்கள், எங்களுக்கு உள்ள எல்லா விதமான போட்டி பொறாமை , காழ்புணர்வுகள் உள்ள மனிதர்கள் என்று பாருங்கள். அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்லவில்லை, ஆனால் விமர்சனம் அவர்களை வழிப்படுத்துவதாக இருந்தால் நல்லம்.

1 . தனியார் வைத்தியசாலையில் வேலை செய்வது பற்றி , அல்லது அங்கு சிகிச்சைக்கு வர கூறுவது பற்றி,

ஒன்று எந்தவழியில்ஆவது சிகிச்சியினால் பலன் பெறுவது அந்த இடத்து மக்களே. இதனுடைய நல்ல பக்கம், ஒரு தொகுதி மக்கள் தனியார் பகுதியில் சிகிச்சை செய்வதால் ..அரச வைத்தியசாலையில் உள்ள இட நெருக்கடி குறைகிறது. தனியார் வைத்திய சாலைகளில் மக்கள் விரும்பும் சில வசதிகளும் செய்யக்கூடிய வசதிகளும் உண்டு. உதாரணத்துக்கு விரைவாக சிகிச்சையை பெறமுடியும், உறவினர்கள் கூட இருக்க முடியும்..வசதியுள்ளவர்கள்/ வாய்ப்புள்ளவர்கள் அவற்றை பயன்படுத்துகிறார்கள்..இங்கே கனடாவிலும் இருக்கு, மற்ற இடங்களிலும் இருக்கும்..இங்கே எனது காப்புறுத்தி, சிகிச்சையின் போது "தனி ரூம்" இருக்க வசதி செய்துள்ளது, ஆனால் சிலருக்கு/பலருக்கு அது கிடைப்பதில்லை . நான் இருக்கிருக்கிற மாகாணத்தில் (ஒன்ட்டாரியோ ) எல்லாம் அரச சிகிச்சையே (எனக்கு தெரிந்த வரையில்) ஆனால் குபெக் என்னும் மாகாணத்தில் MRI ஸ்கேன் 600 டொலருக்கு செய்ய முடியும், இப்ப காசு இருந்தால் உடனே செய்ய முடியும். எனவே தனியார் வைத்தியும் தனியே காசு பறிப்பது தான் என்று எண்ணத்தேவையில்லை.

2 . அம்புலன்சில் மது வாங்கியது ...அதற்காக ஒருவரை மாற்றல் கொடுப்பது...ஒரு பிழைக்கு இன்னுமொரு பிழை..எல்லாம் பிழையே..

3 . Transfer (மாற்றல்) பற்றி கதைப்பதற்கு இது பொருத்தமான வழியோ என தெரியவில்லை, ஆனால் யாழில் வேலை செய்யும் பலரும் பல காலம் கஷ்டமான வாழ்வுகளை கடந்தவர்கள்..அவர்களும் எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட வேண்டுமா எனவும் கேட்க விரும்புகிறேன்? இதிலே ஒரு கருத்து எழுதியிருந்தது , புதிதாக வருபவர்கள் , "போதனா வைத்திய சாலையை விரும்புவதாக" அவர்கள் சுர்றயல்லுக்கு ஏன் விரும்பி செல்ல கூடாது? அவற்றை அபிவிருத்தி செய்யவும் கூடாது?

4 . சிங்கள இடங்களில் தமிழ் தாதி நியமிப்பது பற்றி, அதிகம் தெரியாவிடினும், அங்கு வெற்றிடம் இருக்கோ தெரியாது? மற்றது அவற்றின் தெரிவில் கூடுதலான பங்கு அங்குள்ள வைத்தியசாலை நிருவாகங்கள் தலையிடுமோ தெரியாது. இதை அங்குள்ள வைத்தியர்கள் எவ்வாறு செய்யமுடியும் , அங்குள்ள தாதியர் சங்கள் தான் முயல வேண்டும்

5 . உழியர் நியமிப்பு பற்றி, நான் நினைக்கிறேன், அதை செய்யகூடிய வலிமை இங்குள்ள நிருவகங்க்ளுக்கு உட்பட்டதோ என தெரியாது, உதாரணத்துக்கு, தொண்டர் ஆசியரை நியமிப்பதில் அந்த அந்த பாடசாலை அதிபர்களுக்கு எது வித அதிகாரம் இல்லாதது போல..நான் நினைக்கிறேன் சரியோ தெரியாது

6 .வைத்தியசாலை புனரமைப்பு பற்றி, இந்த நிலை எல்லா இடத்திலும் உள்ளது மருத்துவத்தில் மட்டுமல்ல . யாழ்பாணம் பல காலமும், அரச நிதியினாலே பயன் பெற்ற ஊர, அது பெரியளவில் அரசியல்வாதிகளிடம் இருந்து உதவி பெற்றது அல்ல, அப்படி பெறுவது ஒரு விதமாக குற்றமாகவே பல காலமும் பார்க்கப் பட்டது , எனவே இதில் கூறப்பட்டது போல் இனி கிடைக்க கூடிய எல்லா வளங்களையும் பயன்படுத்தி யாழ் வைத்தியசாலை மட்டுமல்ல எல்லா வைத்திய சாலைகளையும் முன்னேற்ற முயல வேண்டும்

Edited by Volcano

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.