Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே? போயினர் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

Featured Replies

தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது, தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சோனியாவின் தலைமையிலான இந்திய அரசிற்கும், கருணாநிதியின் தலைமையிலான மாநில அரசிற்கும் எதிரான போராட்டங்களை இன, மான, உணர்வோடு நடத்திக்கொண்டு இருக்க, மறுபுறத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக இருந்தவர்கள் கூட எம் தாயை திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மனித நேயத்துடன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்!

ஆனால் நாம்தான் தமிழர்களின், தலைமைகள் நாம்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள்,என்று கொக்கரித்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சிங்கள இனவெறியர்களின் அடக்குமுறையில் சிக்கி அழிந்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தமிழினத்தையும் மறுபிறவி எடுக்கவைத்து தமிழர்களை தரணியெங்கும் தலை நிமிரவைத்த தமிழ் இனத்தின் தேசியத் தாய்க்கு,தமிழக இந்திய அரசுகளால் இழைக்கப்பட்ட இந்த வக்கிரமான கொடுமையை கண்டிக்கத்தவறியது ஏன்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவர்களுடைய பொறுப்பில் இருந்துகொண்டு இந்தியத் தூதரகங்கள் முன் இதற்க்கான எதிர்ப்புக்களைக் காட்டத் தவறியது ஏன்?

இலங்கையில் இருக்கும் இந்தியத் தூதரகம் முன்கூட இவர்கள் எதிர்ப்புக்களைக் காட்டி ஒரு கண்டனம் கூடத் தெரிவிக்கத் தவறியதன் காரணம் என்ன?

சரி திருகோணமலையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கூட இந்திய மத்திய அரசிற்கோ தமிழ் நாட்டு அரசிற்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்கத் தவறியது ஏன் தமிழீழத் தேசியத் தாய்க்கு நடந்த கொடுமைக்கு கூட ஒரு கண்டனம் தெரிவிக்க துப்பில்லாத நீங்கள் தமிழ் இனத்தின் ஏகப்பிரதிநிதிகளா நீங்கள் தமிழ் இனத்தின் தலைமைகளா?

இவற்றுக்கும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டப்போகிறீர்களா?

அல்லது இதுவும் இராஜதந்திரம் என்று எம் இனத்தின் காதுகளில் சந்தணம் பூசப் போகிறீர்களா? இந்த ஏகப்பிரதிநிதிகள் சொல்வதை கேட்பவர்கள் கேனயனாக இருந்தால் சம்பந்தரின் தலையில் சண் தொலைக்காட்சி தெரியுமாம், கிணத்துத் தவளைபோல பதவி மோகத்துக்குள் மூழ்கிக் கிடக்கும் இவர்கள் குறுகிய வட்டத்துக்குள் மட்டும் நின்றுகொண்டு சிங்கள இனவெறி அரசையும் இந்தியப் பாதக அரசையும் இராஜதந்திரமான முறையில் அணுகுவதாகக் கூறி எம் மக்களை ஏமாற்றிக்கொண்டு, இனவெறி பிடித்த அரசுகளிடம் அடிபணிந்து தன்மானத்தை விற்று, இதுவரை காலமும் எந்த உரிமைகளுக்காக, எமது சந்ததி அகிம்சை வழியிலும் ஆயுதம் ஏந்தியும் உயிராயுதங்களாகவும் களத்திலே போராடி வெடியாக வெடித்துக் களப்பலியாகி, எம் தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப் போனார்களோ! அந்த வித்துக்களை பிடுங்கி எறிந்து, அந்த மான மாவீரர்களின் இலட்சியங்களை எல்லாம் தூக்கி எறிந்து, அவர்களின் தாயகக் கனவுகளையெல்லாம் கலைத்து, தாய்மண்ணின்காவல்த் தெய்வங்களுக்கும், எம்தேசியத்தலைமைக்கும்,ஏன்ஒட்டுமொத்த தமிழ் இனத்திர்க்குமே நம்பிக்கைத் துரோகம் செய்து, தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட இவர்களா?

தமிழர்களின் ஏகப்பிரதி நிதிகள்! இவர்கள்தான் தமிழினத்தின் உரிமைகளை வென்று தரப்போகிறவர்களா? ஒட்டுமொத்த தமிழ் மக்களுடன் இணைந்து ஒற்றுமையாக சிந்தித்து செயற்பட்ட தவறிய இவர்கள் கடந்த காலங்களில் இந்திய இலங்கை அரசுகளுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் பணத்திற்காக கொடுத்த வாக்குறுதிகள் காரணமாக தற்போது சுயமாக எந்த முடிவுகளும் எடுக்க இயலாத இவர்கள்! இனி வரும் காலங்களில் என்ன செய்யப் போகிறார்கள்?

சில நாட்களுக்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர,சம்மந்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பத்திரிகை அறிக்கையும்,வானொலிக்கு வழங்கிய பேட்டியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மிகவும் தெளிவாகக் காட்டியுள்ளது அவர்களின் கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம், சுரேஷ் பிரேமச்சந்திரனின் கருத்து?

பி,பி,சீ,தமிழ் சேவைக்கு வழங்கிய பேட்டியில் இருந்து சில,இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் தமிழ் ஈழக்கோரிக்கையை கைவிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கி எமக்கு வாக்களித்துள்ளனர் அவர்களின் ஆணையை நிறைவேற்ற இனி வரும் காலங்களில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட விரும்புகிறோம்! இரா சம்மந்தரின் பத்திரிக்கை அறிக்கை?

தமிழ் மக்கள் எமக்கு வழங்கியுள்ள ஆணையை நிறைவேற்ற அரசாங்கத்துடன் இணைந்து செயற்ப்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆர்வமாக இருக்கிறது,பிளவு படாத இலங்கைக்குள்,(தமிழீழக் கோரிக்கையை கைவிட்ட)தமிழ் மக்களுக்கென ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராகவுள்ளதாகவும்,அவ்வாறான செயற்ப்பாடு தமிழ் மக்களின் நலனை மட்டுமல்ல முழுநாட்டின் நலன்களைப் பேணுவதாகவும் அமையும் என்று திருமலையில் நடந்த மாநாட்டின் பின்னர் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார், இந்த அறிக்கைகளில் இருந்து ஒவ்வெரு தமிழனும் தெரிந்துகொள்ள வேண்டியது,

இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்ப்பாடுகளில் எமக்கு ஏமாற்றங்கள் மட்டுமே கிடைக்கும், இவர்கள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் உரிமைகளை விற்று விற்றுப் பிழைப்பு நடத்தப் பிறப்பெடுத்தவர்கள் , இவர்கள் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்களையும் குறிவைக்கத் தொடங்கியுள்ளனர், வன்னி யுத்தத்தின் பின்னர் முகாம்களில் வாழுகின்ற எம் மக்களின் மீள் குடியேற்றத்தை காரணம் காட்டி, அவர்களுக்கு உதயுவதற்கு என்ற போர்வையில் புலம் பெயர்ந்த மக்களிடமிருந்து பெருமளவான பணத்தினைப் பெற்று, அந்தப்பணத்தில் கூட்டமைப்பின் முக்கியமானவர்கள் ஒருசிலர் ஏப்பம் விடத் துணிந்துவிட்டனர் அவர்களை இனம்கண்டு அவர்களிடத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்!

தமிழன் என்று சொல்லடா தலைவன் வழி நில்லடா தன்மானமுள்ள தமிழனாக வாழடா!

இன்று தமிழர் பிரதேசம் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் தமிழ் மக்களின் சுதந்திரமான நிம்மதியான சுயகவுரவத்துடன் தமிழ் ஈழத்தில் வாழவேண்டும் என்ற இலச்சியத்தை நெஞ்சில் நிறுத்தி அந்த மண்ணிலே மக்களுக்காக செத்து மடிந்து வித்தாகிப்போன மாவீரர்களின்,

வீரமறவர்களின் துயிலும் இல்லங்கள் நினைவுச் சின்னங்கள் தூபிகள் அனைத்தும் சிங்கள இனவெறி காடையர்களால் அடித்து உடைத்து தரைமட்டமாக்கிக் கொண்டிருக்க அந்தப்பிரதேசத்தில் வாழும் மக்களும் அரசியல்த் தலைவர்களும் தமக்கும் அந்தக் கல்லறைகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லாதது போன்று வாய்பொத்தி கண்மூடி கைகட்டி சூடுசொரணை அற்ற தன்மானமற்ற நன்றிமறந்த மானங்கெட்ட சுயநல வாழ்வில் என்னசந்தோசம் காண்கிறார்களோ தெரியவில்லை தமிழன் தமிழனாக மட்டும் வாழ வேண்டும் பச்சோந்திகளாக அல்ல !

தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்! நன்றி!

தமிழரசன்!

http://tamilviduthalai.blogspot.com/2010/04/blog-post_195.html

  • கருத்துக்கள உறவுகள்

கட்டைசம்பல், கருவாட்டுப்பொரியல், குழக்கறி, குக்குள்மஸ், பருப்புக்கறி இவைகள் அடங்கிய சிங்கள சாப்பாட்டை பிறீமியம் விலையில் பாராளுமன்றக் கதிரைகளில் இருந்த களைப்புக்கு அங்கிருக்கும் கன்ரீனில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். கொசுறூக வட்டிலாப்பம் ரெசேட்டாக சாப்பாட்டின்பின்பு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய தாயை! தமிழ் நாட்டிற்குள் செல்வதற்கு அனுமதி மறுத்து அங்கிருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பியதைத் தொடர்ந்து தமிழகம் மீண்டும் ஒரு எழிச்சியோடு புரட்ச்சி செய்யப் புறப்பட்டிருக்கிறது,

விடியக் காலைல தெரியாத்தனமா வாசிச்சுப் போட்டன்...சிரிப்பை அடக்க முடியல... தமிழகம் எழுச்சியோடு புரட்சி செய்யப்போகின்றது மாதிரியான மெகா ஜோக்கெல்லாம் அடிகாதையுங்கோ குரலு... தச்சுத்தவறி சனம் புரையேறிற மாதிரிச் சிரிச்சு செத்து கித்து போகப் போகினம்

அது சரி, கனடாவில் இருந்து கொண்டு நீங்களும், வேறு புலம் பெயர் நாடுகளிலுள்ள எம் அமைப்புகளும் என்ன பண்ணினவையள் இதற்கு?????

:lol: :lol: :lol:

முதலில அவர்களைபோய் இலங்கையில எலக்சன வெல்ல சொல்லுங்கோ? பிறகு உந்த அறிக்கைகளை விடச்சொல்லுங்கோ.

உங்கட அரசியலுக்கு அந்த வயசுபோன அம்மா தான் கிடைத்தார்களா?

கேடுகெட்டவன் வேறு எவனுமில்லை.நாங்கள்தான்.

15ம% தான் வாக்களித்தது

அதனால் இவர்களை தமிழர்களின் பிரதிநிதிகள் இல்லை என்று முன்னம் சொன்னாங்களே

இப்ப எப்படி தமிழர்களின் ஏகப் பிரதி நிதிகள் என்று விளிக்கிறாங்கள்?

இது ஒன்றுமில்லை இப்ப கொஞ்ச நாளாகவே ஆளுக்கு ஒருத்தனை வித்து அறிக்கை வருது அதில இதுவும் ஒன்று.

hவவி:ஃஃறறற.வயஅடைஉயயெனயைn.உழஅஃநெறளஃவயஅடைஃiனெநஒ.pரி?யஉவழைnஸ்ரீகரடட_நெறளரூனைஸ்ரீ5685 இப்பிடிப் பலமாக் இருக்கு மகிந்த (சிங்களப் பக்கம்) அதுக்கு முன்னம் எங்கட பிரதி நிதிகள் கோமணத்தை இறுக்கி கட்டேல்ல என்றால் என்ன செய்ய. சம்பந்தர் உங்களுக்கு பிரதி நிதி இல்லைத்தானே பின்ன ஏன் மிதிப்பான்?

சரி எங்கே கஜேந்திரன் அணி விட்ட அறிக்கை? அதையும் கொணந்து போடுங்கோ இஞ்ச அலசுவம்.

Edited by Sooravali

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.