Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் திருமேனியை மல்லவியில் வீதிகளில் கொட்டுகிறது மகிந்த அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் திருமேனியில் வீதி புனரமைக்கும் மகிந்த அரசின் இராணுவம். – வ.ஐ.ச.ஜெயபாலன்

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை புல்டோசரால் இடித்து குவித்துள்ளனர் என்ற செய்தியை முன்னரே அறிந்திருந்தோம். .மேற்படி இடிபாடுகளை மாவீரர் திருமேனியின் எச்சங்களோடு வீதி அமைக்க மகிந்த அரசின் இராணுவ அதிகாரிகள் பயன் படுத்திய சேதி பேரதிற்ச்சி தருகிறது. ஈழத் தமிழர்கள் மீதான தங்கள் வெற்றிப் பிரகடனமாகவும் தமிழரை இழிவு படுத்தி அச்சுறுத்தும் மகிந்த அரசின் தேர்தல் உத்திகளில் ஒன்றாகவும் இப் பாதகச் செயல் நிகழ்த்தப் பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் உச்சமாக நிறைவேறிய பாதகம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாததாக உள்ளது. வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்ல இடிபாடுகளை மாவீரர்களின் தலை மயிர் மற்றும் எலும்புத் துகள்களுடன் அள்ளிச் சென்று கல்லுக்குப் பதிலாக மல்லாவி நகர சந்தியின் இரு மருங்கும் புனரமைக்கப் படும் வீதியில் கொட்டியிருக்கிறார்கள்.. மக்கள் நடமாட்டம் மிக உயர்ந்துள்ள அனிஞ்சயன் குள பள்ளிக்கூடத்தில் இருந்து மல்லாவிச் சிவன் கோவில் வரைக்கும் இந்த இடிபாடுகளின் பெரும்பகுதி கொட்டப் பட்டுள்ளது. தோற்க்கடிக்கப் பட்ட தமிழ் மக்களைக் கொண்டே அவர்களது பிள்ளைகளான போராளிகளின் ஈமத்தை மிதிக்க வைக்கும் ராஜபக்ச அரசின் கொடுரத்துக்கு முன் உதராணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. போராளிகளின் உடலை இத்தனை கொரூரமாக அவமதிக்கிற மகிந்த அரசினதும் மல்லாவிப் பிரதேச இராணுவ தளபதியினதும் படு பாதகச் செயலை நிறுத்தும்படியும் ஈமத்துடன் வீதிகளில் கொட்டப் பட்ட கல்லறை இடிபாடுகளை அகற்றும் படியும் உலகம் முழுவதிலும் தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்ப வேண்டும்.

இந்த செயல் யுத்தக் குற்றம் என்றே தெரிகிறது. தமது பிள்ளைகளின் திருமேனி வீதியில் சிந்தப் பட்டதைக் கண்டு அதிர்ந்து போன மல்லாவி மக்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த தமிழர் கூட்டமைப்பு வேட்ப்பாளர்களிடமும் அமைசார் திரு டக்ளஸ் தேவானந்தாவிடமும் முறையிட்டிருக்கிறார்கள். அதன்பின் இந்த கொடூ நடவடிக்கைகள் தொடரப் படாமல் இடை நிறுத்தம் செய்யப் பட்டுள்ளது. எனினிம் வீதிகளின் கொட்டிய நமது பிள்ளைகளின் இடுகாட்டு எச்சங்கள் இன்னமும் அகற்றப் படவில்லை. அவை வீதிக் கட்டுமானப் பொருளாக பயன் படுத்தப் பட்டுள்ளது. இனியும் தாமதிக்காமல் சர்வதேச சமுகமும் சர்வதேச பத்திரிகையாளர்களும் தடைய வியலாலர்களது ஆதரவுடன் இப்பகுதி வீதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இந்த படுபாதகத்தில் சம்பந்தப் பட்ட இராணுவ சிவில் அதிகாரிகள் போர்க் குற்றவாழிகலாகத் தண்டிக்கப் படவேண்டும். இதற்காக ஈழ உலகத் தமிழர்களது சர்வதேச அமைப்புகள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்.

இன்று தங்களை துட்ட கெமுனுவின் வாரிசுகள் என சொந்தம் கொண்டாடும் மகிந்த வாரிசுகள் மகா வம்சத்தை மீண்டும் ஒருமுறை வாசிக்க வேண்டும். எனக் கேட்டுக் கொள்கிறேன். துட்ட கெமுனு தன்னோடு போரிட்டு மடிந்த சோழவம்சத்து தமிழ் மன்னன் எல்லாளனுக்கு தானே சமாதி அமைத்தான்.. அது மட்டுமன்றி அவழியே செல்கிறவர்கள் எல்லாளனின் சமாதியை வணங்க வேண்டும் என்றும் விதித்தான். மகிந்த குடும்பத்தினர் மேற்படி வரலாற்றை இனியாவது படிக்க வேண்டும்.

மேற்படி பாதகச் செயல் பற்றிய தகவல்கள் யாவும் மல்லவிச் சந்திக்கு அண்மையில் வசிப்பவர்கள் பலருடன் தொடர்பு கொண்டும் சிலரை அயல் நாடு ஒன்றில் நேரடியாகச் சந்தித்தும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது..

இந்த போர்க்குற்றக் கொடுமையை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சர்வதேச சமூகத்தை உலகத் தமிழர்கள் நெருக்க வேண்டும். இது தொடர்பாக புலம் பெயர்ந்த தமிழர்களது அமைப்புகள் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களுக்கு ஈழ தமிழர்களையும் ஐரோப்பியரை மட்டுமன்றி புலம் பெயர்ந்த முஸ்லிம்களையும் மலையக தமிழர்களையும் மேலும் நமக்கு ஆதரவான சிங்கள தோழர்களையும் அணிதிரட்டுவது புலம் பெயர்ந்த தமிழர்களது அரசியல் கடமையாகும்..

-வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Please kindly Reproduce this news in other web sides

மகிந்த அரசா? மகிந்தவுக்கு மல்லாவி எண்டு ஒரு ஊர் இருக்கிறது தெரியுமோ தெரியா...

மோட்டு கூட்டங்கள்.... :D

நண்றி Poet ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.