Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன் பாலராஜன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொன் பாலராஜன்

Name: Pon Balarajan

Email: ponbalarajan@gmail.com

Area: Candidate for District 1

bala.jpg

TamilCanadian: இலங்கையின் வட - கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் பொறுத்தவரை நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் வகிக்கும் பங்கு என்ன?

Pon Balarajan: உரிமை பறிபோன ஈழத் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களால் மக்களாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மேற்படி அரசாங்கம் ஒரே மேடையில் சரிநிகராக ஒருங்கிணைக்கும். வட - கீழ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும், குடிசார் அமைப்புகளுடனும் வலுப்பட ஒருங்கிணைந்து, ஈழத் தமிழரின் உரிமைகள், சுதந்திரம், பொருண்மிய நலன்கள் என்பவற்றை மெய்மைத் தெளிவுடன் உலக அரங்கில் அது எழுப்பும்

TamilCanadian: நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டால், மக்களின் பிரதிநிதியாக விளங்குவதற்கு ஏதுவாக, கனடாவிலும் வேறிடங்களிலும் தமிழர் சமூக விருத்திக்கு நீங்கள் ஆற்றிய தொண்டு என்ன?

Pon Balarajan: _________________________

TamilCanadian: இலங்கையில் நிலவும் பிணக்கிற்கு ஒரு சுதந்திரமான, இறைமைவாய்ந்த தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும். இதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா, முரண்படுகிறீர்களா? நீங்கள் உடன்பட்டாலும், முரண்பட்டாலும், உங்கள் விடைக்கான காரணங்களை விரித்துரைக்கவும்.

Pon Balarajan: சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை எமக்கு ஏற்பட்ட பட்டறிவு, சுதந்திர ஈழமே நடைமுறைத் தீர்வு என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துகிறது. எனினும், ஈழக் கட்டுமானத்தை நாம் உடனடியாக எய்த முடியாது என்பதை எங்கள் போராட்ட வரலாறு எமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. அதற்கு, இன்றைய புவியரசியல் நலன்களும், எஞ்சிய உலகினால் ஏற்கப்பட்ட இலங்கையின் வலுப்பட்ட இறைமையுமே காரணங்கள். ஆனால், சர்வதேயத் தரப்பினரை அவர்தம் சொந்த நெறிமுறைகளுக்கு ஊடாகத் தூண்டி, பிராந்தியத் தரப்பினரைக் கவனமாகவும், இடைவிடாதும் ஈடுபடுத்தி, அவர்களுடன் சரிவர ஆதரவு பூண்டு செயற்பட்டால், ஈழம் காலகதியில் கைகூடும்.

TamilCanadian: தமிழர் உலகவாரியாக எதிர்நோக்கும் உச்ச முதன்மைவாய்ந்த ஐந்து விடயங்கள் எவை?

Pon Balarajan: 1. பிரிவுபடாது, கூறுபடாது தொடர்ந்தும் ஒருங்குற்ற வல்லினமாய் விருத்தியுறல்

2. தகுந்த வழிகாட்டுதலுடன் தலைமை வகிக்க இளந் தலைமுறையை அனுமதித்தல்

3. ஈழத்தில் சிறைப்பட்ட விடுதலை வீரர்களையும், பொதுமக்களையும் விடுவிப்பதற்கும், சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கும் உடனடியாகப் பாடுபடல்.

4. வட-கீழ் மாகாணங்களில் முதலீடு செய்வதற்கு, சட்டப்பேறுடன் அமைக்கப்பட்ட தாபனங்களின் ஊடாக நிதி-வளம் திரட்டல்.

5. வட-கீழ் மாகாணங்களில் கூட்டுப் பொருண்மிய முயற்சிகள் ஊடாக நெடுங்கால மறுவாழ்வுப் பணி மேற்கொள்ளல்.

TamilCanadian: எங்கள் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு என்ன? எதிர்காலத்தில் ஆண்-பெண் சமத்துவம் ஏற்படும் வண்ணம் அது விருத்தியுறும் விதத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?

Pon Balarajan: விடுதலைப் போராட்டம் இடம்பெற்ற கடந்த 3 தசாப்தங்களிலும் பெண்கள் வகிக்கும் பங்கு பெரிதும் மேம்படுத்தப்பட்டது. பெண்களுக்கு சரிநிகரான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வண்ணம் இந்த அனுகூலமான போக்கு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் வட-கீழ் மாகாணங்களில் மேற்கொள்ளும் பணிகள், திட்டங்கள் அனைத்துக்கும் ஊடாக, எந்தச் சமூகத்திலும் பெண்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட வேண்டும். திட்டப்பணிகள் மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோரது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆண்-பேண் சமத்துவத்தின் அனுகூலங்களை அறிவுறுத்தி, உள்ளூர்க் குழுக்கள், கிராமங்கள் என்பவற்றைப் படிப்படியாக மறுசீரமைக்க வேண்டும். அத்தகைய பணி தொடர்வதை உறுதிப்படுத்தும்படி மேற்படி அரசாங்கம் வெளிநாட்டுக் கொடைவழங்கு நாடுகளை வேண்டிக்கொள்ள வேண்டும்.

TamilCanadian: தமிழர் தமது அடிப்படை உரிமைகள நிலைநிறுத்துவதற்கு சர்வதேயவாரியாக விழிப்புணர்வு, தோழமை என்பவற்றை வளர்த்தெடுப்புவது எவ்வாறு?

Pon Balarajan: புலம்பெயர்ந்தோர் அடிப்படையில் முழு உரிமைகள் படைத்த சர்வதேயக் குடிமக்களுள் ஒரு பகுதியினர் ஆவர். ஆதலால் தமது ஈழத்து உடன்பிறப்புகளுக்கு நீதியும், சுதந்திரமும் கிடைக்கும் வண்ணம், நிலைபெற்ற அடிப்படை உரிமகளை அவர்கள் கோருவது, அத்தகைய அடிப்படை உரிமைகளை அவர்கள் கையாள்வதாகவே அமைகிறது. புலம்பெயர்ந்தோர் தத்தம் நாடுகளில் எவ்வளவு தூரம் குடிசார் பணிகளில் முன்னின்று பங்கு பற்றுகிறார்களோ, அவ்வளவு தூரம் அவர்கள் வலுப்பெற்று, வட-கீழ் மாகாணங்களில் வேரறுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணமும், உரிமையும் வழங்கும்படி சர்வதேய சமூகத்தையும், மக்களாட்சி அரசுகளையும் தூண்ட முடியும்.

TamilCanadian: மக்களாட்சி என்றால் என்ன?

Pon Balarajan: குடிசார் அமைப்புகளையும், பலதிறப்பட்ட நிறுவனங்களையும் நிர்வகிப்பதில் பங்குபற்றுவதற்கான சரிநிகர் உரிமைகள், வாய்ப்புகள். இக்கருதுபொருளை ‘தலைக்கொரு வாக்கு’ என்று சுருக்கி உரைக்கலாம். ஆனால், உரிமைகளும் பொறுப்புகளும் சரிநிகராக வழங்கப்பட வேண்டும். பெரும்பான்மையோரின் அடாவடித்தனத்தை தடுத்து, ஒதுக்கப்பட்டோருக்கும் பின்தள்ளப்பட்டோருக்கும் தனிவாய்ப்பளித்துப் பராமரிக்க வேண்டும்.

TamilCanadian: நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், மேற்படி அரசாங்க உறுப்பினர்களுக்கும், தமிழ் அமைப்புகளுக்கும், தமிழ் மக்களுக்கும் இடையே நீங்கள் எவ்வாறு கருத்தொருமிப்பை ஊட்டிவளர்ப்பீர்கள்?

Pon Balarajan: மேற்படி பணியை நிறைவேற்ற முற்படும் ஒருவருக்கு இருக்கவேண்டிய சிறப்பியல்புகளை இங்கு நான் திட்டவட்டமாக வலியுறுத்த வேண்டியுள்ளது. இச்சிறப்பியல்புகளுள் பெரும்பாலானவை எங்கள் உணர்வுகளின் ஊடாகவும், எங்கள் வாழ்நாளில் நாங்கள் வகிக்கும் பங்குகளின் ஊடாகவும் விருத்தியுறுபவை. எனவே வேட்பாளர்களாகப் போட்டியிடுவோருக்கு அத்தகைய சிறப்பியல்புகள் மிகமுக்கியமானவை. அத்தகைய திறமையும், ஆற்றலும் இல்லாவிட்டால், அதிகாரத் தரப்புகளின் பரந்துவிரிந்த நலன்களை உள்ளடக்கி கருத்தொருமிப்பை ஊட்டிவளர்க்கும் பணிக்கும், மேற்படி அரசாங்கப் படிமுறையில் நிர்ணயிக்கப்பட்ட கருதுபொருளுக்கும், இலக்குகளுக்கும் கேடு விளையும். என் வாழ்நாளின் பெரும் பகுதியில் உள்ளுணர்வுடனும், மெய்யுணர்வுடனும் விருத்தியுற்ற எனது வல்லமை, திறமை பற்றி எல்லாம் எனது தகைமத்திரட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Edited by nunavilan

  • 3 weeks later...

கனேடியப் பிரதிநிதி பொன் பாலராஜனின் உரை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அமர்வில் கனேடியப் பிரதிநிதி திரு. பொன் பாலராஜன் ஆற்றிய உரை இது.

எமது மண்மீட்புப் போரில் மிகவும் பரிதாபமான முறையில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நெஞ்சில் நிறுத்திகொள்கிறேன்.

எமது மக்களுக்காகவும் எமது மண்ணிற்காகவும் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மறவர்களின் திருப்பாதங்களை தொட்டு வணங்குகிறேன்

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தைக் கூட்டிய பெரியோர்களே! இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்த பெரியோர்களே, தமிழர் தேசத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சக பிரதிநிதிகளே! நியமனப் பிரதிநிதிகளே! வணக்கம்!

இன்று நாங்கள் பிலடெல்பியா மாநகரத்தில் கூடியிருக்கிறோம். 1776ம் ஆண்டு இதே மாநகரத்தில் கொடுங்கோன்மைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒரு பிரகடனம் விடுக்கப்பட்டது. அந்த வரலாற்றுக்கும், எங்கள் வரலாற்றுக்கும் இடையே காணப்படும் ஒப்புமையை மட்டும் இந்தக் கூட்டம் குறித்து நிற்கவில்லை. எமக்கு வசதியான ஓர் அரசியல் யாப்பினைப் பறைசாற்றுவதற்கான ஓர் அடையாளக் கூட்டமாக மட்டும் இது அமையப் போவதில்லை. எங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒன்றாகவே இது அமையப் போகிறது – எங்கள் மாபெரும் வரலாற்றுப் பொறுப்பாகவே இது அமையப் போகிறது.

எங்கள் மக்களின் வருங்காலத்துக்கு உகந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காகவே நாங்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளோம் – இலங்கைத் தீவில் நாடாளுமன்றப் பெரும்பான்மை என்னும் காட்டுத் தர்பாரில் தோற்றுப்போன வழிவகைகளையும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும் தேர்ந்து தெளிந்து, இதுவரை நாங்கள் பயணிக்காத புதிய பாதையில் அடியெடுத்து வைப்பதற்காகவே நாங்கள் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளோம். எங்கள் உள்ளத்து முடிபுகளின்படி எங்களுக்குச் சரியெனப்பட்டதை நாடும் பழைய வழிவகைகளை விடுத்து, உலக ஒழுங்குமுறைகளுக்கிணங்க, காலத்துக்கேற்றவாறு, ஆக்கபூர்வமான முறையில் சிந்திக்கும்படி எங்களிடம் கேட்கப்பட்டுள்ளது.

எங்கள் ஒவ்வொருவரின் மதிநுட்பமும் இணைந்து பயன்படும் வண்ணம் எங்களிடையே நாங்கள் கூடும்பொழுது, எங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளையும், வேட்கைகளையும், தப்பெண்ணங்களையும் நாங்கள் முதன்மைப்படுத்துவது இயல்புதான். ஆனால், என் உடன் பிறந்த பெருமைக்குரிய நாட்டவர்களே! எங்கள் மக்கள்மீது, தாயகத்தின்மீது, பாசமும் கரிசனையும் கொண்ட ஒரே காரணத்துக்காகவே இந்த அவையத்தில் நாங்கள் மனமுவந்து அமர்ந்துள்ளோம் என்பதை நினைவில் வைத்திருக்கவும். எந்த வகையிலும் எங்களை நாங்களே பொம்மலாட்டிகளின் பொம்மைகளாகத் தாழ்த்துவதை விடுத்து, என்றென்றும் எங்கள் மக்களின் நலனைச் சிரமேற்கொண்டு, பல்வேறு எண்ணங்களையும் கருத்துகளையும் விவாதித்து, கலந்துசாவி, ஆழ்ந்து தேர்ந்து புரிந்து, ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுப்பதற்காகவே இங்கு நாங்கள் கூடியுள்ளோம்.

எங்கள் நகர்வு ஒவ்வொன்றுக்கும், எங்கள் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும், எங்கள் தாயகத்தில் நெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு, தகர்க்கப்பட்ட உள்ளங்களின் உரிமைக்கும், பொருளாதார சுதந்திரத்துக்கும் நாங்கள் முற்றிலும் பொறுப்பேற்க வேண்டும். அதற்குக் குறைவான எதுவும், எங்களை நாங்களே ஏய்ப்பதாகவே அமையும். அத்துடன், முழு உலகிற்கும் அது ஒரு வேடிக்கையாகவே அமையும். இங்கு குழுமியிருக்கும் எங்கள் ஒவ்வொருவரது பற்றுறுதியிலும், கடின உழைப்பிலுமே, இந்த மக்களாட்சி நெறிசார்ந்த பரிசோதனயின் வெற்றி முழுக்க முழுக்கத் தங்கியுள்ளது. எங்கள் கிராமங்களையும், நகரங்களையும் கவ்விய பேரழிவை, மானுடரால் எதிர்கொள்ளமுடியாத பேரழிவைப் பொருட்படுத்தாமல் கடந்துசெல்வதற்கு உலகத்தை இனியும் நாம் அனுமதிக்க முடியாது.

என் உடன்பிறந்த நாட்டவர்களே! எங்கள் எல்லோருக்கும் தென்படுவது போலவே, என் அகக் கண்ணுக்கும் ஒரு காட்சி தென்படுகிறது.

நெல் வயல்களுக்கு மேலே எழும் கதிரவன் விரைவில் எங்கள் மக்களுக்குப் புதிய விடுதலை ஒளி பாய்ச்சுவான் என்றே இன்னமும் நான் எண்ணுகிறேன். பசும் புற்றரையில் நடமாடும் எங்கள் பசுக் கன்றுகளின், ஆட்டுக் குட்டிகளின் கழுத்துமணி ஓசை எனக்குக் கேட்கிறது. கோயில்மணி ஓசை ஊடாக, தேவாலய மணியோசை ஊடாக ஒலிக்கும் தன்னாட்சி என்னும் நல்மணி ஓசை எங்கள் கன்று, குட்டிகளின் கழுத்துமணி ஓசையில் மீள எதிரொலிக்கும் நாள் எனக்குத் தென்படுகிறது. கடத்தப்படுவோம் அல்லது கொல்லப்படுவோம் என்ற அச்சமின்றி, எங்கள் மக்கள் தங்கள் ஊர்களிலும் நகரங்களிலும் நடமாடக்கூடிய நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். தமிழருக்கு எதிரான கொடிய சட்டங்களுக்கும், பெரும்பான்மை இனத்தவரைக் கொண்ட படையினரின் ஈவிரக்கமற்ற வன்முறைக்கும் அவர்கள் உட்படக் கூடாது.

இலங்கை ஆட்சியாளர், எங்கள் தாயகப் பிள்ளைகளின் சிறகுகளை ஒட்ட ஒடிக்காத நாள், எங்கள் பிள்ளைகள் ஆசைதீர, தமது வல்லமையைப் பயன்படுத்தும் நாள் எனக்குத் தென்படுகிறது. எங்கள் இளையோர் தங்கள் பிறவிச் சுதந்திரத்தை நாடியதற்காக, சிறையில் அடைத்து வைக்கப்படாத நாளை, வளமும் திறனும் மிகுந்த புதிய ஊழி ஒன்றை அவர்கள் படைக்கும் நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன். தாய்க்குலம் தலையாய பங்கு வகிக்கும் வண்ணம் போற்றிப்புகழப்படும் எங்கள் வீடுகளில் பாசமும் நேசமும் கமழும் நாளை நான் எதிர்நோக்கியுள்ளேன். தங்கள் தந்தையருக்கும், சகோதரர்களுக்கும், குடும்பங்களுக்கும் கைகொடுத்ததற்காக, அவர்கள் சித்திர வதைக்கோ, வன்புணர்ச்சிக்கோ உட்படக் கூடாது.

உலகளாவிய பாரம்பரியத்தை வளங்கொழிக்க வைக்கும் எங்கள் தொன்மை வாய்ந்த மொழியும், பண்பாடும், கலை-இலக்கியங்களும் ஓங்கிய எங்கள் மூதாதையரின் புலத்துக்கு, எங்கள் பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் நாங்கள் கொண்டுசெல்லக்கூடிய நாளை நான் எதிர்நோக்கியுள்ளேன். நெடுங்காலமாக வருந்தி, ஈற்றில் தன்மானத்துடன் கூடிய ஒரு நீடித்த அமைதியை எட்டிய எங்கள் மக்களின் அகமகிழ்ச்சியைக் கண்டுகளிப்பதற்கு என் இதயம் சிறகடித்துப் பறக்கும்.

என்னருமை நண்பர்களே, சக பிரதிநிதிகளே!

எங்கள் அனைவரதும் கூட்டு மதிநுட்பமின்றி, எனது கனவுகளும், அகக்காட்சிகளும் வீணாகிப் போகும். மேற்படி சாதனைகளை நிகழ்த்துவதற்கு, உலகத்தில் நிலைபெற்ற, உலகத்தால் ஏற்கப்பட்ட வழிமுறைகளே எமக்குப் பற்றுக்கொடியாய் அமையும். எங்கள் மதிநுட்பத்தை நாங்கள் பயன்படுத்தத் தவறினால், நாட்பட்டு வலுவிழந்த உணர்ச்சிகளையும்,ஆதாரமற்ற பசப்புரைகளையும் நாங்கள் நாடினால், எனது கனவுகள், அகக்காட்சிகள் அனைத்தும் இந்த அவைக்கூடத்தின் உள்ளேயே கலைந்துவிடும்.

என்னருமை நண்பர்களே, சக பிரதிநிதிகளே!

வாய்ப்பின் கதவுகள் என்றென்றும் திறந்திருப்பதில்லை. வலிமை வாய்ந்த மேல்நாடுகளின் குடிமக்கள் என்ற வகையில், மேலோங்கும் நாடுகளின் குடிமக்கள் என்ற வகையில், உலக அரசுகளையும் அமைப்புகளையும், தமது சட்டபூர்வமான கடப்பாடுகளுக்கும், சர்வதேய ஒப்பந்தங்களுக்கும் உட்பட்டு, எங்கள் மக்களுக்கு நியாயம் வழங்கும்படி நாங்கள் தூண்டவேண்டிய தருணம் இது. மக்களாட்சி நெறிசார்ந்த இப்புத்தம்புதிய பரிசோதனையின் வெற்றி,எங்கள் ஒற்றுமையிலும், முற்போக்கான சிந்தனையிலும், தளரா முயற்சிகளிலுமே பெரிதும் தங்கியுள்ளது. நாங்கள் குருதி சிந்தியோ, சிந்தாமலோ சாதிக்கமுடியாததை, இங்கு அமர்ந்திருப்பவர்களால் சாதிக்க முடிந்தால் மாத்திரமே எனது கனவுகளும், அகக்காட்சிகளும் நனவாகும். எனது கனவுகளும், அகக்காட்சிகளும் பொருள்படும்.

என்னருமை நண்பர்களே! நாங்கள் சரியான பாதையில்தான் அடியெடுத்து வைத்துள்ளோம் என்று நான் திடமாக நம்புகிறேன் – நாங்கள் சரியான பாதையில் தொடர்ந்து நடந்தால், எத்தகைய தீமையும் எமக்கு விளையும் என்று நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை – அடிமைத்தளையிலிருந்தும், ஒடுக்குமுறையிலிருந்தும் எங்கள் மக்களை விரைவில் நாங்கள் விடுவிப்போம். எனது கனவுகளும், அகக்காட்சிகளும் நனவாகட்டும்! நெடுங்காலமாக எங்கள் மக்களின் வாழ்வில் துலங்காத பொருள் துலங்கட்டும்!

நன்றி!

http://www.eelamweb.com/index.php/component/content/article/46-top-news/1832-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88.html?Itemid=107

  • கருத்துக்கள உறவுகள்

பொன் பாலராஜன்

TamilCanadian: தமிழர் உலகவாரியாக எதிர்நோக்கும் உச்ச முதன்மைவாய்ந்த ஐந்து விடயங்கள் எவை?

Pon Balarajan: 1. பிரிவுபடாது, கூறுபடாது தொடர்ந்தும் ஒருங்குற்ற வல்லினமாய் விருத்தியுறல்

2. தகுந்த வழிகாட்டுதலுடன் தலைமை வகிக்க இளந் தலைமுறையை அனுமதித்தல்

3. ஈழத்தில் சிறைப்பட்ட விடுதலை வீரர்களையும், பொதுமக்களையும் விடுவிப்பதற்கும், சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கும் உடனடியாகப் பாடுபடல்.

4. வட-கீழ் மாகாணங்களில் முதலீடு செய்வதற்கு, சட்டப்பேறுடன் அமைக்கப்பட்ட தாபனங்களின் ஊடாக நிதி-வளம் திரட்டல்.

5. வட-கீழ் மாகாணங்களில் கூட்டுப் பொருண்மிய முயற்சிகள் ஊடாக நெடுங்கால மறுவாழ்வுப் பணி மேற்கொள்ளல்.

முதல் இரண்டு விடயங்களையும் அடைய வேண்டுமெனில் எமது, தேசியத்தலைமையால் 2007 - 2008 ம் ஆண்டுகளில் மாவீரர் தின உரையூடாக முன்மொழியப்பட்ட விடயங்களை தமிழர்கள் நிறைவேற்ற முன்வந்தாலே போதுமானது. அதாவது முறையே அறிவின் செயற்பாட்டுக்காலமெனவும்...... இளையோரது செயற்பாடுகளை " இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப்பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளையசமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும்தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பாராட்டினூடாக அடையாளப்படுத்தியிருந்தததையும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் மனங்கொண்டாலே போதுமானது. முதல் இரண்டு விடயங்களும் நிறைவேறுமாயின் முன்றாவது விடயமானது இலகுவாகும். நான்காவது விடயத்தைப் பற்றி முன்பே ஒரு திரியிலே பேசப்பட்டது அதாவது " தமிழருக்கான அனைத்துலக வைப்பகம்" இதனை நாம் உருவாக்குவோமாயின் ஐந்தாவது விடயம் தானாகாவே நிகழ வாய்ப்புள்ளது. நடக்குமா? என்ற வினா நியாயமானது. ஆனால் நடக்க வேண்டும் என்பதே யதார்த்தமான எதிர்பார்ப்பு.

இது தொடர்பாக யாழ்களமூடாக வைக்கப்பட கருத்தினை இன்றைய தேவைகருதி இதனோடு இணைத்துள்ளேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67441&st=0&p=558310&fromsearch=1&#entry558310

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.