Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு அழிப்பு – GTN செய்தியாளருக்கு சிவாஜிலிங்கம் அறிவிப்பு

Featured Replies

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு அழிப்பு – GTN செய்தியாளருக்கு சிவாஜிலிங்கம் அறிவிப்பு‐

03 May 10 07:14 pm (BST)

வடமராட்சி எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இன்று இரவு படையினரால் இடித்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக வாகணங்களின் உதவியுடன் இந்த அழிப்பு இடம்பெற்றதாக அயலவர்கள் தனக்கு அறிவித்துள்ளனர் என முன்னாள் நாடாளுமண்;ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

1980களின் பிற்பகுதியில் புலிகளால் உருவாக்கப்பட்ட இந்த மாவீரர் துயிலும் இல்லம் 1996ஆம் ஆண்டு படையினரால் முற்றாக இடித்தழிக்கப்பட்டது. 2002 ஆம் அண்டில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையுடன் மக்களின் பங்களிப்புடன் முன்பிருந்தவாறே மீண்டும் உருவாக்கப்பட்டது.

எனினும் 2006 மோதல் ஆரம்பமான வேளை மீண்டும் மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு கனரன வாகணங்களுடன் சென்ற படையினர் முற்றுமுழுதாக இந்த மாவீரர் துயிலும் இல்லத்தை தரைமட்டமாக்கியதாக எம் சிவாஜிலிங்கம் குளோபல் தமிழ்ச் செய்திகளின் செய்தியாளருக்கு இன்று இரவு தெரிவித்துள்ளார்.

யாழ் குடாநாட்டில் தீவகத்திற்கு வேலனை சாட்டியிலும், தென்மராட்சிக்கு கொடிகாமத்திலும், வலிகாமத்திற்கு கோப்பாயிலும், வடமராட்சிக்கு உடுப்பிட்டி எள்ளங்குளத்திலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இவற்றில் வேலனை சாட்டி மற்றும் தற்போது உள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்கள் அழித்தொழிக்கப்பட்டுள்ளன. கோப்பாய், கொடிகாமம் பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பாரிய அளவில் சேதமாக்கப்பட்ட நிலையில் எச்சசொச்சங்கள் காணப்படுவதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் யாழ் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை ஏற்கனவே விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீடு படையினரால் அழிக்கப்பட்ட நிலையில் திலீபனின் சிலையும் உடைக்கப்பட்டு இருந்தது. எனினும் திலீபனின் சிலையை தாம் உடைக்கவில்லை என படைத்தரப்பு தெரிவித்திருந்த நிலையில் கனரக வாகணங்களின் உதவியுடன் இன்று உள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் உடைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=23885&cat=1

  • கருத்துக்கள உறவுகள்

"ஒன்றிய இலங்கைக்குள் வாழ்வோம்" என்று யாரோ சொன்ன ஞாபகம். விளக்கம் அவர்களிடம் இருந்து தேவை. :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமராட்சி எள்ளங்குளம் துயிலும் இல்லம் சிங்கள இராணுவத்தினரால் அழிப்பு

சிங்கள இராணுவத்தினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் அழிக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக சிங்கள இனவெறி கூட்டத்தினால் தமிழர்களினுடைய உணர்வுச் சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது.

அண்மையில் தீவுப்பகுதியில் சாட்டிப் பிரதேசத்தில் அமைந்துள்ள துயிலும் இல்லமும், தென்மராட்சியில் உள்ள கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லமும் அழிக்கப்பட்டு இராணுவ முகாமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தமிழ் தேசியத் தலைவரின் இல்லம் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதேபோல நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத் தூபியும் அழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

வெளிநாட்டவர்களின் போர்வீரர்களின் கல்லறைகளை அழிக்கக்கூடாது என்ற மரபை மீறி ஸ்ரீலங்கா படையினர் மிலேச்சத்தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஈழத்தமிழர்கள் மத்தியில் வேதனையையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையால் ஈழத்தமிழர்கள் வேற்றுநாட்டவர்கள் என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்ட விரும்புகிறார்கள் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Source: click here

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.