Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரின் போராட்டத்தை பிரித்தானியாவிற்கு உணரவைத்த தலைவிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழரின் போராட்டத்தை பிரித்தானியாவிற்கு உணரவைத்த தலைவிகள்

தொழிற்கட்சி மாநாட்டின் மைய மண்டபத்தில் நின்று ” இலங்கையின் பொருட்களை புறக்கணியுங்கள் ” என்று முழங்கிய சிவோன் மக்டொனா அம்மையாரை தமிழர்கள் மறந்துவிட மாட்டார்கள்.

போராட்டத்திற்கு பயங்கரவாத முத்திரை குத்திய அதே அரசில் அங்கம் வகிக்கும் ஒரு பெண் சிறிலங்கா அரசை தூற்றும், அறைகூவலை விடுக்கும் அளவிற்கு , அதனை கண்டிக்கும் பிரேரணையை அக்கட்சியில் நிறைவேற்றும் அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது தமிழர்களுக்கு உற்சாகத்தை தருகின்றது.

தொழிற்கட்சியில் இவ்வாறான‌ மாற்றத்திற்கு வழியமைத்ததில் ஜோன் ரயன் அம்மையார் பெரும் பங்கு வகித்துள்ளார். தமிழர்கள் பயங்கரவாதிகள் அவர்களை அணுகாதீர்கள் என அம்மையாருக்கு பலரும் கூறிய பொழுது, தமிழர்களின் நியாயங்களை அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களின் மனங்களை வெல்வதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

அதேவேளை தமிழர்களின் நியாயங்களை கென்சவேட்டிவ் கட்சிக்குள் எடுத்துச்சென்று அக்கட்சியோடு தமிழர்கள் உறவைப் பலப்படுத்த உறவுப்பாலமாக செயற்படுபவர் டாக்டர் ரேச்சல் ஜொய்ஸ் அம்மையாராவார். ஆளும் கட்சியாக தொழிற்கட்சி இருந்தமையால் தமிழர்களும் அக் கட்சியோடு கூட நெருங்கி வேலை செய்துள்ளார்கள்.

தற்போது ஆட்சி மாறும் என்ற நிலையில் கென்சவேட்விவ் கட்சியினுள்ளும் எமது நண்பர்கள் பெருக வேண்டும் . அதனை செய்யக்கூடிய வல்லமை ரேச்சல் அம்மையாருக்கு உண்டு என்பதை ஒரு குறுகிய காலத்திற்குள் அவர் நிருபித்துள்ளார்.

பிரித்தானிய வெளியுறவுச் செயலர் திரு. டேவிட் மிலிபான்ட் இலங்கை செல்வதற்கு கட்சிக்குள் பிரசாரத்தை மேற்கொண்டதில் சிவோன் மக்டொனால் அம்மையாரும், ஜோன் ரையன் அம்மையாரும் பெரும் பங்கு வகித்துள்ளனர். அதேபோல உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் திரு.டேவிட் மிலிபாண்ட்தோன்றியமைக்கும், பிரதமர் திரு கோர்டண் பிரவுண் பேரவையினரை அழைத்து பேசியமைக்கும் ஜோன் ரையன் அம்மையாரின் பங்கும் பெருமளவில் இருப்பது தமிழர்களால் போற்றப்படுகின்றது.

அவ்வாறான ஒரு பணியை கென்சவேட்டிவ் கட்சிக்குள் செய்து முடித்தவர் ரீச்சல் அமையாராவார். தற்போதைய நிலையில் கென்சவேட்டிவ் கட்சி தலைவர்களுக்கு தமிழர்கள் தேசியத்தை ஆதரிக்கும் மேடை பொதுவாக புதியது. ஆனாலும் அம்மேடையில் அக் கசட்சியின் சக்திவாய்ந்த தலைவரான நிழல் வெளியுறவு அமைச்சர் திரு. வில்லியம் கேக் அவர்களை தோன்றச் செய்தமை, ரேச்சல் அம்மையார் தமிழரின் போராட்டத்தை அக் கட்சிக்குள் பலமாக கொண்டு செல்லக்கூடியவர் என்பதை உணர்த்துகின்றது.

இந்த தலைவிகள் தேர்தலில் வெல்ல வேண்டும். எமது நண்பர்களின் வெற்றி எமது வெற்றிசெவோன் மக்டொனா (‍ மிச்சம் & மோடன் தொகுதி ) ‍தொழிற்க‌ட்சி, ஜோன் றயன் ( என்பீல்ட் வடக்கு தொகுதி ) ‍ ‍தொழிற்க‌ட்சி, ரீச்ச‌ல் ஜாய்ஸ் ( ஹ‌ரோ மேற்கு ) கென்ச‌வேட்சிவ் க‌ட்சி.

http://meenakam.com/?p=15443

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் போராட்டங்களை ஆதரிக்கும் மற்றைய தலைவர்களையும் அவர்களின் தொகுதிகளையும் எழுதினால் யார் தமிழர் பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் கொடுத்துப் பேசுகிறார்களோ தமிழரின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களோ அவர்களை ஆதரிக்க உதவியாக இருக்கும்.கட்சி நலனை விட தமிழர் நலனை உத்தேசித்து முடிவெடுப்பதே தமிழருக்கு நன்மை பயக்கும்.

Conservative கட்சி சார்பாக ஹரோ மேற்கில் போட்டியிடும் Dr.Rachel Joyce அவர்களுடனான ஒரு நேர்காணல்

நாளை பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2010 இல் ஹரோ மேற்குத் தொகுதிக்கான புழமைவாதக்கட்சி(Conservative Party) சார்பாக போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் றெச்சல் யொயிஸ் அவர்களுடனான ஒரு நேர்காணல்.

ஹரோ மேற்குத்(Harrow West) தொகுதிக்கான புழமைவாதக்கட்சி(Conservative Party) சார்பாக போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர் றெச்சல் யொயிஸ்(Dr. Rachel Joyce) அவர்களின் நேர்காணலை லங்காசிறி வானொலிக்காக ஹரோ வாழ் குகா அவர்களால் கேட்கப்பட்ட கேட்விகளுக்கு வேட்பாளர் தகுந்த பதில்களை அளித்துள்ளார். இவ் நேர்காணலின் ஒலி வடிவம் மற்றும் எழுத்து வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

எழுத்து வடிவம்

கேள்வி: டாக்டர் யொயிஸ் அவர்களே, இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாக தங்களிடம் கேட்க சில கேள்விகள் உள்ளன. டாக்டர்! உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் நாடுகடந்த தமிழீழ அரசிற்கான தேர்தலை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ்மக்கள் தங்கள் இலக்கை நோக்கி ஜனநாயக முறையில் எடுக்கும் இம் முயற்சியை நீங்கள் எப்படிப்பார்க்கிறீர்கள்?

பதில்: நன்றி குகா. நான் இந்தத் தேர்தலுக்கு ஆதரவாக இருக்கிறேன் இதிலே முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழ்மக்கள் தங்கள் இலக்கை அடைய ஜனநாயகவழியில் முயற்சிசெய்ய விரும்புகிறார்கள் என்பதுதான். தங்கள் இறுதி இலக்கையடைய தீர்மானத்துடன் செயல்படுகிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு, வரும் காலத்தில் அனேகமாதத் தமிழ் ஈழமாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன. தமிழ்மக்கள் ஜனநாயக வழியில் தாம் விரும்பியதை அடைய முயற்சியை முன்னெடுப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

கேள்வி: டாக்டர் றெச்சல், தாங்கள் முன்னொரு நிகழ்ச்சியில் ஸ்ரீ லங்காவில் ஒற்றை ஆட்சிமுறை ஒரு தவறு குறிப்பிட்டு இருந்தீர்கள். தங்களின் இதுபோன்ற கூற்றானது தாங்கள் பிரிவினையை ஆதரிப்பவர் என்று அந்நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தினரால் நோக்கப்படலாம்;. இதற்குத் தங்களுடைய விடை என்ன டாக்டர்?

பதில்: நான் ஒற்றைஆட்சி என்று குறிப்பிட்டிருந்தது, பிரித்தானிய அரசாங்கம் அங்கே ஒருங்கிணைந்த ஆட்சியை விட்டுவிட்டு வந்தது. முன்னர் தனித்தனி இராச்சியங்கள் - தமிழ் ராச்சியம் சிங்கள ராச்சியம் - என்றிருந்தன. நிர்வாகக் காரணங்களுக்காக மாத்திரமே அவை ஒன்றிணைக்கப்பட்டன. அப்படி இணைத்த நாளில் இருந்தே அங்கே சிறுபான்மைச் சமூகத்தினர்க்கு பாகுபாடு காட்டப்பட்டு மனித உரிமைகள் மீறப்பட்டு அநீதிகள் நடைபெறத்தொடங்கின எனப் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறர்கள். இப்படியான நீண்ட நாள் பிரச்சனை களுக்குத் ஒரு அரசியல் தீர்வு காண வேண்டும். அப்படியான நீண்டகால அரசியல் தீர்வானது அங்கே உள்ள எல்லாச் சமூகத்தினரையும் முக்கியமாகத் தமிழ்ச் சமூகத்கையும் உள்ளடக்கிய யாவருக்கும் திருப்தியை உறுதிப் படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதில் நான் முனைப்பாக இருக்கிறேன். என்னுடைய பார்வையில் அப்படியான ஒரு நீண்டகாலத் தீர்வு இரு நாடு என்ற முடிவிலேயே சரிப்பட்டு வரும் என நினைக்கிறேன்.

கேள்வி: நன்றி டாக்டர். மேலும் இந்தச் ஸ்ரீ லங்கா அரசு – தற்போதய ஜனாதிபதி ராஜபக்சவின் ஆட்சி - தமிழர்களுடைய நிலங்களை சுவீகரித்துக்கொள்வதைக் குறை கூறுகிறீர்களா? அரசாங்கத்துக்கு தன் அதிகாரத்தின் கீழ் உள்ள நிலங்களை அபிவிருத்தி வேலைகளுக்காகச் சுவீகரிக்கும் உரிமை இல்லையா?

பதில்: எந்தவொரு சுதந்திரமான ஜனநாயகமும் தனது குடிமக்கள் தங்களுடைய நிலம்; சுவீகரிக்கப்படப்போகிறது என்ற பயமில்லாமல் வாழும் உரிமையை மதிக்கிறது. மக்களை அவர்கள் வசிக்கும் இடங்களில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயரச்செய்யவும் வேறு இடங்களில் இருந்து தமது பகுதிக்கு வந்திருக்கச் சொல்லவும் ஸ்ரீ லங்கா அரசுக்கு உரிமை கிடையாது. இன விகி தாசாரத்தை மாற்றும் நோக்குடனும் மக்களைக் குடிபெயர வைக்கும் உரிமையும் ஸ்ரீ லங்கா அரசுக்குக் கிடையாது. ஸ்ரீலங்கா அரசின் தற்போதய செயல்பாடுகள் நீண்ட ஒரு சமாதானத்துக்கு உதவும் என நான் நம்பவில்லை. அநேகமாக எல்லா உலக மனிதஉரிமை அமைப்புகளும் ஐக்கிய நாட்டுச் சபை உட்பட ஸ்ரீலங்காவில் மனித உரிமைகள் கட்டுப்பாடுகள் இன்றி மீறப்படுகின்றன என்று குற்றம் சாட்டுகின்றன. ஊடகச் சுதந்திரத்தைக் மோசமாகக் கட்டுப்படுத்தும் நாடுகளில் ஸ்ரீலங்காவும் ஒன்றாக இருக்கிறது.

கேள்வி: மிகவும் நன்றி டாக்டர் யொயிஸ். இரண்டாவதாக தாங்கள் தனிப்பட்ட முறையிலே தமிழர் பிரச்சனைகளில் மிகுந்த ஈடுபாடு காட்டி வரும்போதிலும் பழமைவாதக் கட்சியிலே நீங்கள் ஒரு தனிக்குரலாக ஒலிக்கிறீர்கள் என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

பதில்: நான் ஒரு தனிக்குரலாக ஒலிக்கவில்லை. ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறும் கவனம் செலுத்துமாறும் எனது கட்சியின் கவனத்துக்குக் கொண்டுவந்திருக்கிறேன். எனது கட்சியில் பல அங்கத்தவர்கள் தமிழர் பிரச்சனைகளுக்கான அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக ஓரு பாராளுமன்ற உறுப்பினர் தமிழர் பிரச்சனைகளில் மிகவும் அக்கறைகாட்டி வருகிறார் ஆகவே நான் தனியாகக் குரல்கொடுக்கிறேன் என்றில்லை. கட்சியைச் சேர்ந்த பலபேர் ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களுக்கும் ஊடகஅடக்கு முறைகளுக்காகவும் குரல்கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். நான் இவர்கள் எல்லோருடனும் நெருங்கிச் செயல்படுகிறேன்.

கேள்வி: நன்றி டாக்டர் யொயிஸ். ஸ்ரீ லங்கா அரசின் போர்க்குற்றம் சம்பந்தமாக ஐ.நா. சபை விசாரணை நடாத்த வேண்டும் என்ற விஷயத்துக்கு ஆதரவாகப் பழமைவாதக் கட்சியின் உத்தியோகபூர்வமான நிலைப்பாடு என்ன?

பதில்: பழமைவாதக்கட்சி இறுதிப்போரில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி இரு பகுதியிடத்தும் சுதந்திரமான விசாரணை நடாத்த வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படியான ஒரு விசாரணை இரு இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அதுவம் விரைவிலே மிகவும் அவசியமானதொன்று.

கேள்வி: நல்லது டாக்டர். நாம் இப்போது ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு வருவோம். ஸ்ரீ லங்கா அரசுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை திரும்பவும் கிடைப்பதற்கு ஸ்ரீலங்கா அரசு என்னென்ன மனித உரிமை மீறல் விஷயங்களில் முன்னேற்றம் காணவேண்டும் எனப் பழமைவாதக்கட்சி கருது கிறது?

பதில்: பழமைவாதக்கட்சியின் உத்தியோகபூர்வமான கொள்கையானது நாம் ஐரோப்பிய கமிஷனுடைய நீதிமன்ற விசாரணையையும் ஸ்ரீலங்காவினுடனுமான வர்த்தக ஒப்பந்தையும் அதை நிறுத்தி வைத்திருப்பதையும் முழுமையாக ஆதரிப்பதே. சர்வதேச நிலைப்பாடுகளுக்கேற்ப மனிதஉரிமை விஷயங்களில் ஸ்ரீ லங்கா முன்னேற்றம் காணவேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகிறோம்.

கேள்வி: பழமைவாதக்கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஸ்ரீலங்கா விற்கான ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிற்பாட்டியதைக் கடுமையாக விமர்சித்ததாகவும் அது ஒரு கடுமையான நடவடிக்கை எனக்கூறியதாகவும் செய்தி நிலவுகிறது. இதைப்பற்றித் தங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்: இதிலே என்னுடைய நிலைப்பாடு எனது கட்சியின்கொள்கை நிலைப் பாடுதான். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நிறுத்திவைக்கப்படவேண்டும். ஸ்ரீலங்காவில் மனிதஉரிமைமீறல் விஷயங்களில் ஐ.நாவும் ஏனைய உலகமனிதஉரிமை அமைப்புக்களும் திருப்திப்படும்போதே திரும்பவும் இச் சலுகை மீண்டும் வழங்க வேண்டும்.

கேள்வி: மிக நன்றி டாக்டர் யோயிஸ். இறுதியாக மே மாதம் 6ம் திகதி தேர்தல் நெருங்கிவரும் இந்த வேளையில் ஹரோ மேற்கு மக்களுக்கு இறுதியாக நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: நான் எப்போதும் உங்களுடன் எல்லாப் பிரச்சனைகளிலும் கூட இருந்திருக்கிறேன். பாராளுமன்ற சதுக்கத்தில் உங்களுடன் நின்றிருக்கிறேன். பல தமிழ் இறுதிச்சடங்குகளில் பங்கு பற்றியிருக்கிறேன். பல கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறேன். பல பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் தமிழ் மக்களுக்கு மிடையில் சந்திப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறேன். தமிழ்மக்களின் பலத்த குரலாக பாராளுமன்றத்திலும் என் கட்சிக்குள்ளேயும் ஒலிப்பேன் என உறுதி வழங்குகிறேன். வருகிற பாராளுமன்னத்தில் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுப்பேன்.

இறுதியில் குகா: மிகமிக நன்றி டாக்டர். ஹரோவாழ் தமிழ் மக்களுக்காக இந்தப் பேட்டியைத்தர நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி. நடக்கவிருக்கும் தேர்தலில் தீர்க்மான வெற்றிபெற ஹரோவாழ் தமிழ்மக்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நன்றி

http://www.tamilwin.org/view.php?2a26QVl4b43j98ie4b46IP5ce2bf1GU2cd3YipD3e0dBZLuQce03g2FP0cd3tjoCd0

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டு கட்டா வாக்கு தள்ள விடுவினமெண்டா நாடு கடந்த வித்துவான்கள அனுப்புங்கோ! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கட்டு கட்டா வாக்கு தள்ள விடுவினமெண்டா நாடு கடந்த வித்துவான்கள அனுப்புங்கோ! :rolleyes:

என்ன இந்த முறை தாங்கள் வாக்கு போடவில்லையோ? அடுத்த முறை காதிலை பிடித்து கொண்டு போய் போட வைக்கவோ? :wub::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.