Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீளத் தொடங்குகிறது கிளிநொச்சி நகரத்திற்கான முன்மொழியப்பட்டுள்ள சந்தை ‐ குளோபல் செய்திகளுக்காக சிறப்பு விவரணம் அனுபவம் நவராஜா பார்த்தீபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி நகரத்தின் புற நகர்ப் பக்கமாக உள்ள அம்பாள்குளம் என்ற இடத்தில் கிளிநொச்சியின் முன்மொழியப்பட்ட சந்தை களை கட்டிக் கொண்டிருக்கிறது. அப்பொழுது மதியநேரம் நலிவடைந்த அந்தக் குரல்கள் பொருட்களை விற்பனை செய்ய கூவிக் கொண்டிருக்கின்றன. அந்த வியாபாரிகளில் அநேகம் பேரை முன்பு பழைய சந்தையில் பார்த்திருக்கிறேன். பல புதிய முக்களும் குரல்களும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

கிளிநொச்சியின் பழைய சந்தை டிப்போ சந்தியில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த முறிப்பு வீதியில் தொடக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது களை கட்டிய சந்தைதைதான் எனக்கு ஞாபகங்களாக வந்து கொண்டிருக்கின்றன. கிளிநொச்சியிலும் அண்டிய பிரதேசங்களிலும் மக்கள் அண்மைக்காலமாக குடியேற்றப்பட்டு வருகிற சூழலில் அங்காங்கே மக்கள் சந்தைகளுக்குரிய கடைகளை அமைத்து சிறிய வியாபாரங்களை தொடக்கியிருந்தார்கள். இப்பொழுது அவர்கள் அனைவரும் அம்பாள்குளம் பகுதியில் ஒன்றினைக்கப்பட்டு புதிய சந்தைக்கான கட்டிடங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பழைய முகங்கள் பலவற்றை பார்த்த பொழுது எனக்கு ஏமாற்றமும் வலியும்தான் மிஞ்சியது. அவர்களிடம் இப்பொழுது கடைகள் இல்லை. முதல் இல்லை. துணைகள் இல்லை. தர்சன் என்ற வியபாரி மரக்கறிக் கடை ஒன்றை பெரியளவில் நடத்தி வந்திருந்தார். இப்பொழுது அவர் ஒரு கடையில் கூலியாக நிற்பதாக குறிப்பிட்டார். கூட்டாக வியாபாரத்தில் ஈடுபட்ட பல பழைய முகங்கள் கடையில் இருந்த துணைகளை இழந்து போயிருக்கிறார்கள். இங்கு வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஒரு அம்மா யுத்தத்தில் தன் கணவரை இழந்து போயிருக்கிறார்.

அவர்கள் இவரும் பழங்களை வியாபாரம் செய்து வந்து கொண்டிருந்தார்கள். அந்த வயது முதிர்ந்த ஐய்யாவின் புன்னகையாலும் சத்தத்தாலும் அவர்களது கடை எப்பொழுதும் கலகலப்பாக இருந்திருக்கிறது. அவர்களின் பழக்கடைக்கு என்றே தனிக்கூட்டம் வந்து போய்க்கொண்டிருக்கும். நோய்வாய்ப்பட்டவர்களுக்குரிய பழங்கள் என்று பழங்கள் வாங்குவதற்கு நம்பிக்கை மிக்க கடையாக பலரது மனதை அந்தக் கடை வென்றிருந்தது. இப்பொழுது அந்த அம்மா வார்த்தைகள் உதிர்க்க முடியாத துயரத்துடன் பழங்களை கூவி விற்க முடியாத நிலையில் கொஞ்ச பழங்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.

படம் GTN

இந்த சந்தையில் பல புதிய முகங்களையும் பார்;த்தேன். அவர்கள் யுத்தத்தின் முன்பு பொரும் கடைகளை நடத்தியவர்களாகவும் வயல் முதலிய விவசாயங்களை பாரிய அளவில் செய்தவர்களாகவும் காணப்படுகிறார்கள். இப்பொழுது மிக சிறியளவில் தொடங்கியிருக்கும் வியாபாரத்தை நம்பி இந்த வெறும் காணியில் அமர்ந்திருக்கிறார்கள். இந்த சந்தை தொடங்கி இன்றுடன் முன்று நாள்கள் மட்டுமே ஆகின்றன. ஆனால் பல கடைகள் வேகமாக எழும்பிக் கொண்டிருக்கின்றன. பலர் பாதியாய் கட்டப்பட்ட கடைகளில் மண் திட்டுக்களில் மரங்களின் கீழாக என்று பொருட்களை விற்பனை செய்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

யுத்தத்தின் பொழுது தனது கணவரை இழந்த ஒரு இளம்பெண் சில பொருட்களை வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் அவரின் கடைசி மகள் இருக்கிறாள். நகரத்தின் மையத்தில் வீழ்த்தப்பட்ட தண்ணீர் டாங்கி அமைந்திருக்கும் இடத்தில்தான் தனது வியாபாரத்தை தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து தனது வார்த்தைகளை என்னுடன் அந்தப் பெண் இப்படி பகிருகிறார்.

“நாங்கள் ஆனந்தகுமாரசாமி முகாமில் இருந்து கடந்த பத்தாம் மாதமே விடுதலையாகி வந்து விட்டோம். நகரத்தின் மையத்தில் வீழ்த்தப்பட்ட தண்ணீர் டாங்கி அமைந்திருக்கும் இடத்தில் எங்கள் வியாபாரத்தை தொடங்கியபோது இராணுவம் அதை அனுமதிக்கவில்லை. பிறகு சந்தையில் ஒரு வாய்க்கால் பகுதியில்தான் கடையை திறந்தோம். பிறகு எங்களுக்கு ஒரு கடை தேவை என்பதால் பிரதேச சபையில் பதிவினை மேற்கொண்டு இங்கு ஒரு கடையை அமைக்க அனுமதி பெற்றிருக்கிறோம். எங்கள் சொந்த இடம் புளியம்பொக்கனை. எங்கள் இடத்தில் இன்னும் மீளக் குடியமர அனுமதிக்கப்படவில்லை. அதனால் மிக அவசரமாகவே இந்தக் கடையை திறந்திருக்கிறோம். எங்களிடம் கடை கட்டும் வசதி என்று ஒன்றுமில்லை. இடம் எடுத்து கட்டாதவர்களுக்கு கடையில்லை என்பதால், (நகரத்தின் மையத்தில் வீழ்த்தப்பட்ட தண்ணீர் டாங்கியடியில் ) அங்கிருந்த பொருட்களை தூக்கிக் கொண்டு வநது இங்கு போட்டிருக்கிறோம்”

சரி கடையில் சில பொருட்கள்தானே இருக்கின்றன. இவற்றை எப்படி வாங்கினீர்கள் அல்லது இதற்கான முதல் எப்படி கிடைத்தது என்று அவரிடம் கேட்டேன். இதில் இருந்து வரும் வருமானம் போதுமானதாக இருக்கிறதா என்றும் கேட்டேன். தனக்குப் பக்கதில் உள்ள பொருட்களை கைகளால் தடவியபடி அதைக்குறித்தும் அவர் சொல்லத் தொடங்குகிறார்.

“இந்தக் கடையை தொடங்கும் பொழுது 566 ரூபாவிற்கு வெற்றிiலை பாக்கு சீவல் என்பன வாங்கி காட்போட்டு பெட்டியை கவிழ்த்து வைத்து விட்டு அதில் அடிக்கித்தான் வியாபாரத்தை தொடங்கினேன். எனக்கு கடன் கொடுத்தவரிற்கு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விட்டு இப்பொழுதும் அவரிடம்தான் கடன் வாங்கித்தான் விற்பனை செய்கிறேன். இதில் உள்ளவை எனது முதல் இல்லை. அவரிடம் கடன் வாங்கிய பொருட்கள்தான். அவருக்கு ஒவ்வொரு நாளும் ஆயிரம் ரூபாப்படி செலுத்தி வருகிறேன். இப்பொழுது வியாபாரம் குறைவாக உள்ளது. இன்று வியாபாரமே இல்லை. வருமானமாய் கிடைத்த ஐம்பது ரூபாவை வரியாக செலுத்தி விட்டு இருக்கிறேன்”

இவரது மகனும் இந்த கடையில் பாடசாலை விடுமுறை நேரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டாலும் அது சட்டத்திற்கு விரோதமானது என்பதால் மகனை கடையில் நிறுத்துவதில்லை என்று அவர் குறிப்பிட்டார். முன்பு அந்த மகன் பொருட்களை பேருந்துகளில் விற்பதுடன் நடந்து பாதைகளில் விற்பனை செய்வதாகவும் அது மிகுந்த இலாபத்தை தருவதாகவும் சொல்லும் அவர் தன் மகன் இன்று பாடசாலை சென்றிருப்பதாக புன்னகைத்தபடி குறிப்பிடுகின்றார்.

“மகன் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் படிக்கிறான். மாலை இரண்டு மணியின் பின்னர் வந்து வெற்றிலைக்கூறு, கச்சான் போன்றவற்றை கொண்டு சென்று வைத்தியசாலைகளிலும் சனங்கள் பேரூந்துகளால் இறங்கும் இடங்களிலும் விற்பனை செய்வான். அவன் வீடி, சிகரட் போன்ற பொருட்களை ஒரு நாள் கொண்டு சென்றதால் அதை இராணுவம் தடை செய்து விட்டது. அத்தோடு 18 வயதுக்கள் வியாபாரத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர்கள் சொல்லியுள்ளார்கள். எங்களுக்கு நாளாந்தம் வியாபாரம் எதாவது செய்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் இருக்கிறோம். இப்ப எடுக்கும் பொருட்களை இங்கு விற்றால்தான் எதாவது கிடைக்கும், மேலதிகமாக எதையும் எடுத்து விற்பனை செய்ய முடியவில்லை. அதனால் அவன் இப்பொழுது வியாபாரத்தில் ஈடுபடுவதில்லை.

உங்கள் பழைய வாழ்க்கை நீங்கள் நினைவு கொள்ளுறீர்களா? இப்பொழுது எதை இழந்த மாதிரி உள்ளது. அன்றைய வாழ்வும் இன்றைய வாழ்வும் எப்படி வேறுபடுகின்றது என்று அவரை கேடடேன். அது ஒரு காலம் என்று தன் மூச்செறிந்தபடி தொடர்ந்து அவர் பேசுகிறார்.

“இடம்பெயர முதல் நாங்கள் வயல் விதைப்புதான் செய்து கொண்டிருந்தோம். அத்தோடு பெரிய கடை ஒன்றும் வைத்திருந்தோம். யுத்தத்தில் அவை எல்லாவற்றையும் இழந்து விட்டோம். நானும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறேன். எனது கணவரை பலி கொடுத்திருக்கிறேன். நாளைய தினம் எங்கள் சொந்த இடத்திற்கு எங்களை மீள் குடியமர விடுகிறார்கள். ஆனால் இப்பொழுது இந்த நிலையில் இந்தக் கடையை விட்டுச் சென்று நான் அங்கு சென்று என்ன செய்வது? கடையை மூடிவிட்டு சென்றால் எனக்கு பெரிய பாதிப்பு வரும். மீள்குடியேற்றத்திற்குரிய தகரங்கள், சீமெந்துகளைத்தான் வைத்துதான் இங்கு பலர் கடைகளை கட்டியிருக்கிறார்கள்”

நீங்கள் எங்கு இப்பொழுது எங்கு தங்கியிருக்கிறீர்;கள். உங்கள் சொந்த இடத்திற்கு செல்ல விருப்பம் இல்லையா? உங்களுக்கு என்று ஒரு வீடு வேண்டுமல்லவா என்று கேட்டபொழுது அவர் தந்த பதில்கள் அதிர்ச்சியளித்தன.

“நாங்கள் இந்த இடத்தில்தான் இப்பொழுது தங்கியிருக்கிறோம். இரவில் நாங்கள் இந்த கடையில் காவலாளிகளாக கிடக்கிறோம். நானும் எனது இரண்டு பிள்ளைகளும் இதிலேதான் கிடக்கிறோம். இந்தக் கடைக்காக இதில்தான் கிடக்கிறோம். இதில்தான் சமைத்து சாப்பிடுகிறோம். வரும் 15 நாட்களின் பின்னர் இதில் இரவில் தங்க முடியாது. அப்படி என்றால் ஒவ்வொரு நாளும் புளியம்பொக்கனையில் இருந்துதான் வரவேண்டும்”

யாழ்ப்பாணத்தில் உள்ள சகோதரர்கள் கொடுத்த பணத்தை வைத்து மரக்கறிப்பொருட்களை வாங்கிவிட்டு, கடனாக உருவாக்கித் தரப்பட்ட கட்டிடத்தில் வியாபாரத்தை தொடங்கியிருக்கும் இன்னொரு வியாபாரியுடன் பேசினேன்.

“இழந்தவைகள் நிறைய உள்ளன. அவற்றை கணக்கிட முடியவில்லை. இந்த வியாபாரத்தை செய்ய முடியாத இழப்பை சந்தித்துள்ளேன். எங்களுக்கு பிரதேச சபைதான் கடைகளை அமைத்து தந்திருக்க வேண்டும் அவர்கள் அப்படி செய்யவில்லை. ஆனால் வியாபாரம் தொடங்க முதல் வரிப் பணத்திற்கு வருகிறார்கள். சகோதரர்கள் தந்த பத்தாயிரத்தில்தான் இந்த மரக்கறிகளை வாங்கி வைத்திருக்கிறேன். இவற்றை இங்கிருந்து (கிளிநொச்சியிலிருந்து) இறக்குமதி செய்வதில்லை. யாழ்ப்பணம், தம்புல்ல போன்ற இடங்களில் இருந்தே வாங்குகிறோம். சிலவேளை இவற்றை விற்ற பின்னர்தான் பணம் கொடுக்கிறோம்”

இப்பொழுது மாலை நேரம் ஆகிவிட்டது. ஒரு பெட்டியில் கொஞ்ச பாலைப்பழங்களுடன் நிற்கும் ஒரு வியாபாரியிடம் யாரோ ஒருவர் பாலைப்பழம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பெட்டியினுள் இப்பொழுது கொஞ்சப் பாலைப்பழங்களே இருக்கின்றன. தனது வாழ்வாதாரத் தொழிலாக இன்றைய நாட்களில் இதைத்தான் நம்பியிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

“நான் பரந்தன் காஞ்சிபுரத்தில் இருந்து இந்த பாலைப்பழங்களை கொண்டு வருகிறேன். இருப்பத்தைந்து ரூபாவிற்கு அங்கு வாங்கி வந்து முப்பது ரூபாவிற்கு விற்கிறேன். ஒரு நாளைக்;கு ஒருமுறைதான் இப்படி வருகிறேன். மாலைவரை நின்று விற்க வேண்டும். இதனால் ஒரு நாளுக்கு 500 ரூபா வருமானம் வருகிறது. ஒரு கூலித் தொழிலாளிக்குரிய சம்பளம் கிடைக்கின்றது. இதை விற்றுவிட்டு மரக்கறி, தேங்காய் போன்ற தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு போகிறேன். நான் முன்பு கடற்தொழிலில் ஈடுபட்டு வந்தேன். இப்பொழுது அந்த தொழிலில் ஈடுபடும் வசதிகள் இல்லாததினால்தான் இப்படி எனது நாட்களை நகர்த்த வேண்டியுள்ளது”

இப்படித்தான் கிளிநொச்சியின் நவீன சந்தை இயங்கத்தொடங்கியுள்ளது. முன்பு விளையாட்டு மைதானமாயிருந்த வெளியில் இப்படி பலர் தங்கள் வியபாரத்தை நடத்தி இரவுகளை கழிக்கிறார்கள். பல முகங்களுடன் பேச முடியாத வலியும் வெளித் தெரிகின்றது. அவர்களைக்குறித்து அருகிலிருக்கும் வியாபாரிகள் துக்கப்படுகிறார்கள். ஒருவருக் கொருவர் அவர்கள் துக்கப்படுகிறார்கள். நாங்கள் பழைய நிலையை எட்ட கடுமையாக உழைப்போம். எந்த இடத்தில் சந்தையை அமைத்தாலும் எந்த புழுதி வெளியில் அமைத்தாலும் அழகான ஒரு சந்தையாக அதை மாற்றுவோம் என்று ஒரு இளம் வியாபாரி என்னிடம் பகிர்ந்ததைதான் முடிவாக உங்களுக்கு சொல்ல நினைக்கிறேன்.

இதனை மீள் பிரசுரம் செய்பவர்கள் குளோபல் செய்திகளுக்காக சிறப்பு விவரணம் : நவராஜா பார்த்தீபன் என பெயரிடுமாறு வேண்டப்படுகின்றனர்.

globaltamilnews

  • கருத்துக்கள உறவுகள்

இணைத்த பிழம்பு அவர்களுக்கும் எழுதிய பார்த்திபனுக்கும் நன்றிகள்.

அது கிளிநொச்சி நகரத்து வலி மட்டுமா? ஒட்டுமொத்த தாயகத்தின் வலியும் இதுவாகவே இருக்கும். ஆனால் சொல்ல முடியாத துயரங்களோடு நடை பிணங்களாக எனினும் தமது வாழ்வை தாமே மீளமைத்து நிமிர வேண்டும் என்ற எண்ணத்தோடு நிற்குமிவர்கள் போற்றுதற்குரியவர்கள். அண்மையில் தாயகம்(யாழ்பாணம்) சென்று வந்தவர், அந்த மக்கள் எவளவு வேதனையோடு இருக்கிறார்கள் என்பதை சொன்னார்.

ஓ.... அந்த அழகிய நகரமே

இனி எப்போது அந்த

முன்னைய அழகோடும்

முன்னைய மிடுக்கோடும்....

இணைத்த பிழம்பு அவர்களுக்கும் எழுதிய பார்த்திபனுக்கும் நன்றிகள்.

அது கிளிநொச்சி நகரத்து வலி மட்டுமா? ஒட்டுமொத்த தாயகத்தின் வலியும் இதுவாகவே இருக்கும். ஆனால் சொல்ல முடியாத துயரங்களோடு நடை பிணங்களாக எனினும் தமது வாழ்வை தாமே மீளமைத்து நிமிர வேண்டும் என்ற எண்ணத்தோடு நிற்குமிவர்கள் போற்றுதற்குரியவர்கள். அண்மையில் தாயகம்(யாழ்பாணம்) சென்று வந்தவர், அந்த மக்கள் எவளவு வேதனையோடு இருக்கிறார்கள் என்பதை சொன்னார்.

ஓ.... அந்த அழகிய நகரமே

இனி எப்போது அந்த

முன்னைய அழகோடும்

முன்னைய மிடுக்கோடும்....

ஒரு வேளை இந்த வலிக்கு நாம் காரணமாக இருந்ததால் தான் நம் இனம் இன்னும் வலியை அனுபவிக்கிறதோ என்னவோ!

அந்த வலிக்கு காரணமான இந்தியர்கள் நலமாக தானே இருக்கிறார்கள்... கருவிகள் மட்டும் எப்படி துன்புறலாம்...??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.