Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதியம்மாள் இலங்கை சென்றது அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடி – சீமான்

அன்னை பார்வதி இலங்கைக்கு திரும்பி சென்றது அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும் என்று இயக்குநர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆறு மாத விசா பெற்று சென்னை வந்த தமிழ்த் தேசிய தலைவர் அண்ணன் பிரபாகரன் அவர்களின் தாயார் பெருமாட்டி பார்வதியம்மாள் அவர்களை மாநில போலீசின் துணையோடு மத்திய அதிகாரிகள் கடந்த மாதம் திருப்பி அனுப்பி தீராக் களங்கத்தை உருவாக்கினர்.

ஈவிரக்கமில்லாத இந்தப் போக்கு உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்த இப்போது பார்வதியம்மாளுக்கு அரசு செலவில் அரசு சொல்கிற மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டும். ,சிகிச்சைக்காலம் முடிந்ததும் வந்த இடத்திற்கே திரும்பிச் சென்று விட வேண்டும். தடை செய்யப்பட்ட அமைப்பின் ஆதரவாளர்களோ, அரசியல் வாதிகளையோ சந்திக்கக் கூடாது. என்கிற நிபந்தனைகளின் பேரில் விசா வழங்க இந்தியா முன் வந்திருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் கருணாநிதியும், துணை முதல்வர் ஸ்டாலினும் அறிவித்துள்ளனர்..

சிகிச்சைக்கு உரிய அனுமதியுடன் வந்தவரை அவமரியாதை செய்து திருப்பி அனுப்பியவர்கள் இப்போது மனிதாபிமான நிபந்தனைகள் என்னும் பெயரில் கடுமையான நிபந்தனைகளை விதித்து தமிழ்த் தாயை அவமதித்து விட்டார்கள்

மனிதாபிமானம் என்பது விதிகளுக்கோ, விதிமுறைகளுக்கோ அப்பாற்பட்டது. சட்ட விதிகளுக்குட்பட்டும் அதைச் செய்யலாம். என்கிற நிலையில் எண்பது வயதில் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு நிலையான நினைவுகள் இன்றி இருக்கும் தாயை ஒரு பயங்கரவாதி போல சித்தரித்து ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையுமே ஏனைய இனங்கள் எள்ளி நகையாடும் விதமாக நடந்து கொண்டன மத்திய மாநில அரசுகள்.சிகிச்சைக்கு வந்த எம் தாயாரை வயதான முதியவர் என்றும் பார்க்காமல் திருப்பி அனுப்பி அலைக்கழித்த மத்திய மாநில அரசுகள் இன்று ஒரு மாதம் கழித்து அவரைக் கொலைக் குற்றவாளியைப் போல் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி என்ற பெயரில் அனுமதித்து சிறைக் கைதியாக நடத்த முயற்சிக்கின்றது.

ஆனால் எம் தாயோ, இவர்களைப் போன்று அதிகாரத்திற்கும்,காசுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும், இனத்தைக்காட்டிக்கொடுப்பவர்களை நன்குஅறிந்தவர்.அவர் கணைக்கால் இரும்பொறை வந்த இனத்தின் பெருமை பேசுகிற மாவீரனைப் பெற்ற தாய் ஆவார். அவர் இவர்களை நன்கு அறிந்ததால் தான், துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது…என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப சிகிச்சைக்கு இந்தியா வரமறுத்துள்ளார்.அவரது தாய் மண் இன்று எதிரியான சிங்களனின் ஆதிக்கத்தில் இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சென்றுள்ளார்.

அன்னையின் இந்த முடிவு அவருக்கு சிகிச்சை அளிப்பதன் மூலம் தமக்கு வரலாற்றில் ஏற்பட்டுள்ள அழிக்க முடியாத தீராக்கறையை மாற்றிவிடலாம் என எண்ணிய அரசியல் பிழைப்புவாதிகளுக்கு சரியான சவுக்கடியாகும். துரோகியின் கருணையால் வாழ்வதைவிட எதிரியால் வீழ்த்தப்பட்டு சாவது மேலானது…என்ற தமிழ் வீரத்திற்கு ஏற்ப இந்தியா வரமறுத்த அன்னையே உன் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

– சீமான், நாம் தமிழர் இயக்கம்

http://meenakam.com/?p=16014

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணா நீ தமிழன்..... உந்த வயதில பார்வதியம்மாவ வச்சு செய்யிற அரசியல் இருக்கே றேசில உடைஞ்ச சைக்கிலுகள் மாதிரி.... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tamil Nadu political parties must unite to help Eelam Tamils. At least they can threaten the Central government as I said below:

If in Tamil Nadu state election a political party won more than 50% seats on a manifesto for independence or on a manifesto which had independence as the larger agenda among other goodies) then that party, having won control the state government, can call for a referendum on separation. If more than 50% voted for separation in the referendum then Tamil Nadu will be recognised as an independent country.

So the rest of India must negotiate if the people of Tamil Nadu people vote fair and square to leave India!

Indian unity cannot be guaranteed by undermining the emergence of independent Tamil Eelam. India needs to reform its own constitution to make it fully federal for long term stability. The good news is that the Indian government has appointed a commission to review its constitution.

தயவுசெய்து இனி பார்வதி அம்மாவை வைத்து அரசியல் செய்வதை எல்லோரும் நிறுத்த வேண்டும்! அவருக்கு அவரது பிள்ளைகள் இருக்கிறார்கள்/உறவினர்கள் இருக்கிறார்கள் ... அவர்கள் பார்ப்பார்கள் விடுங்கள்!!

.... பார்வதி அம்மாவை அல்ல எம்மை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதை சிங்கள/தமிழக அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன! .... அதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

  • கருத்துக்கள உறவுகள்

நோய்வாய்ப்பட்ட நிலையிலும் உயிரைவிடத் தன்மானமொன்றே பெரிதென்ற தமிழ்தாயே ஆத்மபலமொன்றே நீடூழி வாழவைக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்வதியம்மாவ முடிக்காம் விடாயினம்போல கிடக்கு. :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னையும் கொடுத்து, தன் குடும்பத்தையும் போராட்டத்துக்கு என கொடுத்த, ஈடு இணையில்லை வீரனை பெற்ற தாய், நீதி கெட்ட இந்திநாய்களது கட்டளைக்கு அடிபணியாத செயல், காணும் உள்ளம் பெருமை கொள்கிறது, இனமான உணர்வுள்ள ஒட்டுமொத்த தமிழரது ஆத்ம வேண்டுதல்கள் அந்த தாயை வாழவைக்கட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.