Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது சர்வதேச விசாரணை மிக அவசியம் - பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்து

Featured Replies

சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிகையில் 30,000 தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை; ஆகவே சர்வதேச விசாரணையொன்று அவசியம் என ஐக்கிய நாடுகளின் நீதிக்கு புறம்பான குற்றங்களிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சபையின் கோரிக்கையினை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை சபையின் பொது சபை நிராகரித்திருந்தது. ஆனால் போர்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை உண்மை என பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச விசாரணையொன்றிற்கு அனைத்து உறுப்புரிமை நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். என கூறியுள்ளார் பிலிப் அல்ஸ்டன்.

ஈழநாதம்

எல்லாரும் வலயுறுத்துறதோட நின்றா ஆர்தான் விசாரணை செய்யுறது.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் வலயுறுத்துறதோட நின்றா ஆர்தான் விசாரணை செய்யுறது.

போராட வேணும் என்று நாங்கள் சொல்லுவம் ஆனால் போராட மாட்டோம் அது போலத்தான் இதுவும் ,அவ வலியுறுத்துவா வேற யாரும் செய்வினம்..... :wub::wub:

உங்களைப்போல இதில் எழுதுவதோட நிப்பாட்ட மாட்டேன் என்னால் முடிந்ததை செய்வேன் ஆனால் இப்போர்குற்ற விசாரணையில் மட்டும் நகர்த்தவே முடியாமல் இருக்கின்றது.

சிறிலங்கா அரசினால் நடத்தப்பட்ட இராணுவ நடவடிகையில் 30,000 தமிழர்கள் கொல்லப்பட்டது உண்மை; ஆகவே சர்வதேச விசாரணையொன்று அவசியம் என ஐக்கிய நாடுகளின் நீதிக்கு புறம்பான குற்றங்களிற்கான சிறப்பு பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் வலியுறுத்தியுள்ளார்.

போர்குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவை உண்மை என பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆகையால் சர்வதேச விசாரணையொன்றிற்கு அனைத்து உறுப்புரிமை நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். என கூறியுள்ளார் பிலிப் அல்ஸ்டன்.

நாமும் இதையே ஐ.நா. விடம் கேட்கிறோம்.

தாமதியாது இந்திய, இலங்கை அப்பாவி மக்கள் இனப் படுகொலையாளர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துங்கள்.

ஆணைக்குழு பற்றிய விமர்சனங்களும் அரசாங்கத்தரப்பின் பதலிறுப்புகளும்

[ தினக்குரல் ] - [ Jun 04, 2010 04:00 GMT ]

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் மனக்காயங்களைக் குணப்படுத்துவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்ட தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பயனுடைத் தன்மை குறித்து சில சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் சந்தேகங்களைக் கிளப்பியிருக்கின்றன. முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான இந்த ஆணைக்குழு 2002 பெப்ரவரியில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட நாள் தொடக்கம் அது சீர்குலைந்து மீண்டும் போர் மூண்டு 2009 மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்த காலகட்ட வரையான நிகழ்வுகள் குறித்து ஆராயும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆணைக்குழுவின் பக்கச் சார்பற்ற தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து கிளப்பப்படுகின்ற சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதிலேயே புதிய வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் காமினி லக்ஷ்மன் பீரிஸ் கூடுதலான நேரத்தைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தகவல், ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரும் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக அமையும் என்று கூறிவருவதையும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் 14 ஆவது சட்டத் தொடரில் இவ்வார ஆரம்பத்தில் உரையாற்றிய ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கை விவகாரம் குறித்து ஆராய சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையை மீண்டும் முன்வைத்திருக்கிறார். ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவைப் பொருட்படுத்தாத வகையிலேயே நவநீதம்பிள்ளை அந்தக் கோரிக்கையை முன்வைத்தார் என்பதில் சந்தேகமில்லை.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செயல் இலங்கை அரசாங்கத்துக்குக் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக் குழுவின் பிரமாணங்கள் ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுசான் றைஸினால் விதந்துரைக்கப்பட்ட பிரமாணங்களுக்கு நிகரானவையாக இருப்பதால் அந்நிய தலையீடு எதுவுமே தேவையற்றது என்று குறிப்பிட்டிருக்கிறார். "ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமானவர்களாகவும் பக்கச்சார்பற்றவர்களாகவும் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருக்கின்ற அதேவேளை, பாரதூரமான உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக விசாரணை செய்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதைப் போன்று தங்களது விதப்புரைகளைப் பகிரங்கமாக அறிவிக்கக்கூடிய ஆணையையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள். ஆணைக் குழுவினால் செய்யப்படக்கூடிய விதப்புரைகளை அரசாங்கம் அக்கறையுடன் பரிசீலிக்கும். எனவே தற்போதைய சூழ்நிலையில் இலங்கை விவகாரம் குறித்த விசாரணைகளில் அந்நிய தலையீட்டுக்கு அவசியம் ஏதும்இல்லை. இலங்கை தொடர்பில் தனக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கப்போவதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருக்கிறார். ஒரே நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு நவநீதம்பிள்ளை செயலாளர் நாயகத்தினுடைய அணுகுமுறைக்கு முரணான விதத்தில் எவ்வாறு சிந்திக்க முடியும்%27 என்று பேராசிரியர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

நவநீதம்பிள்ளையின் கோரிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில் அதன் விளைவுகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் முன்முடிவு செய்ய முயற்சித்திருப்பது பெரும் கவலைதருகிறது என்று தெரிவித்திருக்கிறார். ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை ஆக்கபூர்வமான முறையில் அவதானித்து தேவையற்ற வார்த்தை ஜாலங்களைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்தது என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட்டிருக்கிறார். அதேவேளை, சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காகவே அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருக்கிறது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியிருக்கிறது.

நேற்று முன்தினம் கொழும்பில் செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. புதிய ஆணைக் குழுவுக்கு (பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஒருசில வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த) நீதியரசர் நிசங்க உடலகம தலைமையிலான குழுவின் கதி நேர்ந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னாபிரிக்காவில் நியமிக்கப்பட்ட உண்மை ஆணைக் குழுவுக்கு ஒப்பானதாக இந்த ஆணைக் குழுவை அரசாங்கத் தரப்பினர் வர்ணிப்பதை நிராகரித்த கிரியெல்ல "தென்னாபிரிக்க ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் அந்த நாட்டின் இறுதிவெள்ளையின ஜனாதிபதி எப்.டபிள்யூ.டி.கிளார்க்கும் கூட சாட்சியம் அளித்தனர். இலங்கை அரசாங்கத் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் தற்போது உயிருடன் இருக்கக் கூடிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களும் புதிய ஆணைக்குழு முன்னிலையில் வந்து சாட்சியமளித்து தங்களால் இழைக்கப்பட்டிருக்கக்கூடிய குற்றங்களை ஒப்புக்கொள்ளத் தயாராயிருக்கிறார்களா" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

ஆணைக்குழுவைப் பற்றி கிளப்பப்படக்கூடிய எந்தவொரு சந்தேகமும் இலங்கையில் கடந்தகாலத்தைய ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதியின் விளைவான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆணைக்குழுக்கள், விசாரணைக்குழுக்களைப் பொறுத்தவரை, இலங்கையில் அவற்றுக்கெனப் பிரத்தியேகமானதும் சுவாரஸ்யமானதுமான ஒரு வரலாறே இருக்கிறது. இவை தொடர்பில் குறிப்பாக, தமிழ் மக்களுக்கு போதுமான அனுபவங்கள் இருக்கின்றன. அந்த அனுபவங்கள் கசப்பானவை மாத்திரமல்ல, கனதியானவையும் கூட. முன்னைய ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதி தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் நேராதிருக்கவேண்டுமென்றால் இலங்கையில் அரசியல் அதிசயம் ஒன்று நிகழ்ந்தாகவேண்டும்.

அண்மையில் கொழும்பு ஆங்கில வாரப்பத்திரிகையொன்றில் எழுதிய கட்டுரையொன்றில் அரசியல் ஆய்வாளர் திஸ்ஸரணி குணசேகர குறிப்பிட்டிருந்த ஒரு விடயத்தை எமது வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டுவருவது இச்சந்தர்ப்பத்தில் பொருத்தமானதாக இருக்கும். "தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் 2009 டி.ஏ.ராஜபக்ஷ நினைவுப் பேருரையை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி வழங்கிய தடுமாற்றமின்றிய தலைமைத்துவத்துக்காகவும் எமது படைத்தளபதிகளும் படையினரும் செய்த பெருந்தியாகங்களுக்காகவும் தேசிய சமூகமும் சர்வதேச சமூகமும் அவர்களை நன்றி கூறுகின்றன என்று தான் அவர் உரையை ஆரம்பித்தார். எவரையும் நோக்கி சுட்டு விரலை நீட்டி குற்றங்கண்டுபிடிப்பதற்கோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ இது தருணமல்ல என்பதால் இலங்கை அதன் பாரம் பரியத்தைப் பேணிப்பாதுகாக்க உதவுவது சர்வதேச சமூகத்தினதும் மனிதநேய அமைப்புகளினதும் கடமையாகும் என்றுதான் அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.

ஆணைக்குழு பற்றிய விமர்சனங்களும் அரசாங்கத்தரப்பின் பதலிறுப்புகளும்

முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான இந்த ஆணைக்குழு.

பேராசிரியர் பீரிஸ், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் ஆணைக் குழுவின் பிரமாணங்கள் ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சுசான் றைஸினால் விதந்துரைக்கப்பட்ட பிரமாணங்களுக்கு நிகரானவையாக இருப்பதால் அந்நிய தலையீடு எதுவுமே தேவையற்றது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் சுயாதீனமானவர்களாகவும் பக்கச்சார்பற்றவர்களாகவும் தகுதிவாய்ந்தவர்களாகவும் இருக்கின்ற அதேவேளை, பாரதூரமான உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முழுமையாக விசாரணை செய்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டதைப் போன்று தங்களது விதப்புரைகளைப் பகிரங்கமாக அறிவிக்கக்கூடிய ஆணையையும் அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.

ஆணைக் குழுவினால் செய்யப்படக்கூடிய விதப்புரைகளை அரசாங்கம் அக்கறையுடன் பரிசீலிக்கும்.

ஐ.தே.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. புதிய ஆணைக் குழுவுக்கு (பாரதூரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஒருசில வருடங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த) நீதியரசர் நிசங்க உடலகம தலைமையிலான குழுவின் கதி நேர்ந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தென்னாபிரிக்காவில் நியமிக்கப்பட்ட உண்மை ஆணைக் குழுவுக்கு ஒப்பானதாக இந்த ஆணைக் குழுவை அரசாங்கத் தரப்பினர் வர்ணிப்பதை நிராகரித்த கிரியெல்ல "தென்னாபிரிக்க ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவும் அந்த நாட்டின் இறுதிவெள்ளையின ஜனாதிபதி எப்.டபிள்யூ.டி.கிளார்க்கும் கூட சாட்சியம் அளித்தனர்.

"தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவர் 2009 டி.ஏ.ராஜபக்ஷ நினைவுப் பேருரையை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி வழங்கிய தடுமாற்றமின்றிய தலைமைத்துவத்துக்காகவும் எமது படைத்தளபதிகளும் படையினரும் செய்த பெருந்தியாகங்களுக்காகவும் தேசிய சமூகமும் சர்வதேச சமூகமும் அவர்களை நன்றி கூறுகின்றன என்று தான் அவர் உரையை ஆரம்பித்தார். எவரையும் நோக்கி சுட்டு விரலை நீட்டி குற்றங்கண்டுபிடிப்பதற்கோ அல்லது தண்டனை வழங்குவதற்கோ இது தருணமல்ல என்பதால் இலங்கை அதன் பாரம் பரியத்தைப் பேணிப்பாதுகாக்க உதவுவது சர்வதேச சமூகத்தினதும் மனிதநேய அமைப்புகளினதும் கடமையாகும் என்றுதான் அவர் தனது உரையை முடித்துக் கொண்டார்.

"ஆணைக்குழுவைப் பற்றி கிளப்பப்படக்கூடிய எந்தவொரு சந்தேகமும் இலங்கையில் கடந்தகாலத்தைய ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதியின் விளைவான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதில் சந்தேகமில்லை. ஆணைக்குழுக்கள், விசாரணைக்குழுக்களைப் பொறுத்தவரை, இலங்கையில் அவற்றுக்கெனப் பிரத்தியேகமானதும் சுவாரஸ்யமானதுமான ஒரு வரலாறே இருக்கிறது. இவை தொடர்பில் குறிப்பாக, தமிழ் மக்களுக்கு போதுமான அனுபவங்கள் இருக்கின்றன. அந்த அனுபவங்கள் கசப்பானவை மாத்திரமல்ல, கனதியானவையும் கூட. முன்னைய ஆணைக்குழுக்களுக்கு நேர்ந்த கதி தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் நேராதிருக்கவேண்டுமென்றால் இலங்கையில் அரசியல் அதிசயம் ஒன்று நிகழ்ந்தாகவேண்டும்."

இது தான் உண்மை.

முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா, பீரிஸ், அனைவரும் சிங்கள பேரினவாத வெறியர்கள்.

இன்று ஈழத் தமிழர் அனைவரும் சிங்கள பேரினவாத வெறியர்களைக் கொண்ட உந்த கண்துடைப்பு ஆணைக்குழு பற்றி துளியும் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர்.

சிங்களவர் எவரையும் நம்ப ஈழத் தமிழர் தயாரில்லை.

சிங்கள போலீஸ், சிங்கள இராணுவம், சிங்கள அரசு, சிங்கள நீதித்துறை, சிங்கள ஊடகம் என எவரையும் சிறு துளியேனும் நம்ப ஈழத் தமிழர் தயாரில்லை. இது ஒன்று, இரண்டல்ல, 70 வருட அனுபவம். இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் ஆயிரக்கணக்கான வருட அனுபவம்.

மடையர்கள், சுயநலவாதிகள், விசமிகள் மட்டுமே சிங்கள ஆணைக்குழுவை நம்புவர்.

இது தான் உண்மை.

முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா, பீரிஸ், அனைவரும் சிங்கள பேரினவாத வெறியர்கள்.

இன்று ஈழத் தமிழர் அனைவரும் சிங்கள பேரினவாத வெறியர்களைக் கொண்ட உந்த கண்துடைப்பு ஆணைக்குழு பற்றி துளியும் நம்பிக்கை அற்றவர்களாக இருக்கின்றனர்.

சிங்களவர் எவரையும் நம்ப ஈழத் தமிழர் தயாரில்லை.

சிங்கள போலீஸ், சிங்கள இராணுவம், சிங்கள அரசு, சிங்கள நீதித்துறை, சிங்கள ஊடகம் என எவரையும் சிறு துளியேனும் நம்ப ஈழத் தமிழர் தயாரில்லை. இது ஒன்று, இரண்டல்ல, 70 வருட அனுபவம். இன்னும் துல்லியமாக சொல்லப் போனால் ஆயிரக்கணக்கான வருட அனுபவம்.

மடையர்கள், சுயநலவாதிகள், விசமிகள் மட்டுமே சிங்கள ஆணைக்குழுவை நம்புவர்.

உண்மை.

பாண் கீ மூன் இருக்கும் வரை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பமுடியாது.

பௌத்த நாட்டிலிருந்து வந்த பாண் கீ மூன் ஐக்கிய நாடுகளால் சபையையும் அரசியல் கூடமாக மாற்றி அரசியல் செய்து தமிழின படுகொளிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.