Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும் காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள் உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள் நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம் நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன் தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை ஏற்படுத்திதரலாம்.

தொடர்புகளிற்கு www.nesakkaram@gmail.com

1)ஜெகநாதன் சுதாநாதன்

2)பெயர் – தனராஜா தனரஞ்சன்

கற்கும் ஆண்டு – 3ம் வருடம் (இன்னும் இரண்டு வருடங்கள் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.வணிகத்துறை.

3)பெயர் - நீலகண்டன் சசிகுமார்

கற்கும் வருடம் – 4ம் வருடம் (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைப்பிரிவு.

4)பெயர் - துரைராஜா ராதீபன்

கற்கும் ஆண்டு – 3ம் வருடம். (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைப்பிரிவு.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைத்துறை.

6)பெயர் - குமாரசாமி குகன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

வணிகத்துறை.

7)பெயர் - பாலசிங்கம் பாலகுமாரன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

முகாமைத்துவம்.

8)பெயர் - மாயன் சுகந்தன்

கற்கும் வருடம் – இரண்டாம் வருடம்

யாழ் பல்கலைக்கழகம்.

விளையாட்டு விஞ்ஞானம்.

9)பெயர் - கனகரத்தினம் மயூரன்

கற்கும் வருடம் – 2ம் வருடம்.

யாழ் பல்கலைக்கழகம்.

விளையாட்டு விஞ்ஞானம்.

10)பெயர் - கணபதிப்பிள்ளை கஜேந்திரவேல்

கற்கும் வருடம் – 3ம் வருடம்.

யாழ் பல்கலைக்கழகம்.

முகாமைத்துவ பீடம்.

11)பெயர் – சுந்தரலிங்கம் பிரநந்தன்

கற்கும் வருடம் – 3ம்வருடம்

யாழ் பல்கலைக்கழகம்.

நாடகமும் அரங்கியலும் சிறப்புக்கலை.

12) சிறில் ரவிநேசன்.

(இம்மாணவன் புதிதாக கிடைத்த விபரத்திலிருந்து)

வன்னி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கடைசிநேர கட்டாய ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்ட மாணவர்கள் பலர் கடைசி நேரச்சமரின் போது இராணுவத்திடம் சரணடைந்து தடைமுகாம்களிலும் புனர்வாழ்வு முகாம்களிலும் அடைபட்டு தற்போது வெளியில் வந்து மீளவும் கற்கச் சென்றிருக்கிறார்கள். இம்மாணவர்கள் தமது அடிப்படை கல்விக்கான வசதிகளையோ அல்லது தமக்கான அன்றாட தேவைகளை நிறவு செய்யும் வகையிலோ எதுவித வருமானமும் இன்றியுள்ளார்கள். இவர்களில் பலர் குடும்பங்கள் முழுவதையும் இழந்துள்ளார்கள். பலர் குடும்பங்கள் முகாம்களிலும் மீள்குடியேற்றத்திலும் போயிருக்கிறார்கள். தமது வாழ்வுக்கான எந்தவிதமான வசதிகளும் இல்லாது தறப்பாள்களின் கீழும் இடிந்த கட்டடங்களிலும் வாழ்வை ஆரம்பித்துள்ளனர்.

இத்தகைய குடும்பங்களிலிருந்து வந்திருக்கின்ற இந்த மாணவர்களது மனமும் உடலும் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேதான் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கற்று முடித்திருக்க வேண்டிய வயதில் கட்டாயப்பிடியில் பிடிபட்டு தங்கள் கற்கை வயதைத் தாண்டியே கற்கவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொருவருடனும் பேசுகின்ற போது அவர்களது இழப்பும் ஈடுசெய்ய முடியாத காயங்களையும் தான் உணர முடிகிறது. இத்தைகைய மாணவர்களுக்கான உதவியை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கேட்டு நிற்கின்ற தருணத்தில் சிலருடைய சந்தேகங்கள் இந்த மாணவர்களுக்கான உதவிகள் பெறுதலில் சரியான தெளிவின்மைலைக் காட்டுகிறது. இது தொடர்பான ஒரு தெளிவினை நேசக்கரம் யாழ்மாவட்ட தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வனிடமிருந்து ஒலிப்பதிவு செய்து உங்களிடம் எடுத்துவருகிறோம்.

audio.gifமகாபொல உதவித்திட்டம் என்றால் என்ன எவர்களுக்கு மகாபொல உதவி கிடைக்கிறது ? சொல்கிறார் தீபச்செல்வன்

audio.gifஇனிமையும் சந்தோசங்களும் நிறைந்திருந்த குடும்பத்தின் சந்தோசங்களைக் காலம் பிய்த்தெறிந்தது போட இந்த 28வயது இளைஞனின் வாழ்வும் சந்தோசங்களும் கருக்கப்பட்டு கனவுகளும் சிதைந்து போனது. கல்வியில் சிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் மீது நம்பிக்கை வைத்திருந்த பெற்றோரின் நம்பிக்கையில் விழுந்த பேரிடியாய்ப்போனது. அக்காவைக்காக்க தம்பியும் தம்பியை தங்கையை காக்க அண்ணன்களுமென வீட்டுக்கொருவரை களங்கள் உள்ளிழுத்துக் கொண்டது. யாழ் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த இந்த இளைஞனும் தனது தங்கையையும் முட்டு நோயாளனான தனது தம்பியையும் காப்பாற்றப் போராளியானான். காலத்தின் கட்டளையை ஏற்றுத் தானாகவே களங்ளில் காவலிருந்தான். மரணம் காலடிவரை வந்து வந்து செல்ல சாவின் பயமும் இனி வாழ்வில்லையென்ற நினைப்பும் எல்லா நம்பிக்கைகளையும் தகர்த்தெறிந்தது. உயிர் வாழ்தலில் இருந்த விருப்பால் சாத்திரத்தை நம்பி சாத்திரம் கேட்டவனுக்கு மரணம் முடிவென சாத்திரமும் சொல்லியானபின் வாழ்வும் மரணமும் அவனோடு சண்டையிட்ட நாட்களவை. 2009 மேமாத முடிவுகளின் பின்னர் இவன் சாவிலிருந்து தப்பி சரணடைந்தான்….தனது நிலமைகளை எங்களோடு பகிரும் இந்த 28வயது இளைஞனின் குரலைக் கேளுங்கள்.

audio.gifஇந்தக் குரலுக்குரிய 31வயது நிரம்பிய மாணவன் தனது கற்கைக்காலம் தாண்டிய நிலையில் பல்கலைக்கழகம் வந்திருக்கிறான். கடந்த வருடம் 10ம் மாதம் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ள இவனுக்கு உறவுகள் என்று சொல்ல எவருமேயில்லை. 2006இல் தந்தையார் நோய்வாய்ப்பட்டு இறந்து போக 2009 தாயாரையும் இரு சகோதரர்களையும் இழந்து போனான். இறுதியில் உறவினர்கள் சிலருடன் சேர்ந்து முகாமுக்குப் போனான். முகாமிலிருந்து விடுபட்டு கற்றலுக்கென்று வந்த பின்னர்தான் வறுமையும் யாருமற்றுத் தவிக்கின்ற வெறுமையும் இவனை ஆட்கொண்டுள்ளது. யாருமேயில்லை இனிப் படித்தென்ன விட்டென்ன என்கிற நிலைமையில் இருந்தவனை நமது நேசக்கரம் யாழ்மாவட்டத் தொடர்பாளர் தீபச்செல்வனால் நேசக்கரத்திடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளான். இனி வாழ்வதில் என்ன இருக்கிறது என்கிற மனைநிலையில் இருந்தவனுடன் உரையாடிய போது அவனுக்கான ஆறுதலை ஆற்றுப்படுத்தலை செய்ய வேண்டிய நிலையில் இவனது மனநிலை இருப்பதை உணர முடிகிறது. இவனுடனான உரையாடலை ஒரு செவ்வியாக இல்லாமல் தோழமையுடன் அணுகிய போது அவன் சொன்னவற்றிலிருந்து சில துளிகளை உங்களுடன் பகிர்கிறோம்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேசக்கரம் உதவி கோரிய 11மாணவர்களில் உதவி கிடைத்த அல்லது உதவிகள் கிடைப்பதற்கான உத்தரவாதங்கள் கிடைத்த மாணவர்கள்.

1)ஜெகநாதன் சுதாநாதன்.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைத்துறை.

12) சிறில் ரவிநேசன். (இம்மாணவன் புதிதாக கிடைத்த விபரத்திலிருந்து)

2)பெயர் – தனராஜா தனரஞ்சன்

கற்கும் ஆண்டு – 3ம் வருடம் (இன்னும் இரண்டு வருடங்கள் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.வணிகத்துறை.

4)பெயர் - துரைராஜா ராதீபன்

கற்கும் ஆண்டு – 3ம் வருடம். (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைப்பிரிவு.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

கலைத்துறை.

7)பெயர் - பாலசிங்கம் பாலகுமாரன்

கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)

யாழ் பல்கலைக்கழகம்.

முகாமைத்துவம்.

10)பெயர் - கணபதிப்பிள்ளை கஜேந்திரவேல்

கற்கும் வருடம் – 3ம் வருடம்.

யாழ் பல்கலைக்கழகம்.

முகாமைத்துவ பீடம்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கிடைத்த விபரங்கள்

13)

14) சுகுமாரன் கயிலாயபிள்ளை

2ம் வருடம் முகாமைத்துவம்.

15) நிசாந்தினி கனகரத்தினம்

2ம் வருடம் வணிகத்துறை

இத்தோடு மேலும் 10 மாணவர்களுக்கான உதவி கோரல் விண்ணப்பங்களும் கிடைத்துள்ளன.(இவர்களது பெயர் விபரங்கள் இங்கு இணைக்க முடியாமைக்கு வருந்துகிறோம். இம்மாணவர்கள் தமது பெயர்கள் வெளியில் வருவதால் பாதகாப்பு காரணங்களுக்காக அஞ்சுவதால் இங்கு தவிர்க்கிறோம்)

மொத்தம் 25மாணவர்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது. உதவவிரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். விபரங்கள் தந்துதவுவோம். நேரடியாக நீங்கள் மாணவர்களுடன் கதைத்து நேரடியாகவே உங்கள் உதவிகளை வழங்கலாம்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சிறு துளி பெரு வெள்ளம்:

இந்த மாணவர்கள் கேட்டு நிற்கும் உதவியை யாழ் கழ உறவுகள் அனைவரும் தினம்,தினம் பார்த்துக் கொண்டு தான் இருப்பீர்கள் எண்டு நினைக்கிறன்.எங்களுக்கு இவர்களுக்காக சிறு தொகை பணத்தை ஒதுக்கி உதவுவது என்பது முடியாத விடயம் எண்டு இல்லை.சாதரமாக ஒரு உணவுச் சாலையில் போய் உட்கார்ந்தால் எவ்வளவு பணத்தை ஒரு சொற்ப நேரத்துக்குள் செலவளித்து விட்டு வருகிறம்.பியூச்சர் சொப்புக்குள் போய் எவ்வளவு பணத்தை கொட்டுகிறம்.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் நாம் பணத்தை செலவளிக்கும் விதங்களை..உடல்,உள ரீதியில் வலிகளை சுமந்து கொண்டும் என்னத்தை கேட்டு நிக்கிறார்கள்.தங்களின் கல்வியை தொடர்வதற்கு உதவுங்கள் எண்டு தானே.இவர்களுக்காக நாம் செய்யும் செலவில் இருந்து ஒரு சிறு துளியாவது மிச்சம் பிடித்து உதவ முடியாதவர்களாகவா இருக்கிறம்?ஒவ்வொரு தமிழ் மகளதும்,மகனதும் கடமை எண்டு யோசிச்சு பாருங்கள்.இவற்றை நான் சொல்கிறன் எண்டு என் மீது யாரும் கோவிக்க கூடாது.இந்த மாணவர்கள் மேலும்.மேலும் பாதிக்க படக்கூடாது.எங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களின் வாழ்வில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த வேண்டும்.நன்றி.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி யாயினி உங்கள் கருத்துக்கள் மிகவும் பயன் உள்ளவை.உங்கள் நன்பர்களுக்கும் ஊக்கம் கொடுங்கள் உதவும் தொகை அல்ல முக்கியம் உதவி தான் முக்கியம் .நன்றி.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

26) நிசாந்தினி கனகரத்தினம்

கலைப்பிரிவு

44)கந்தையா பரமேஸ்வரன்

முகாமைத்துவம் 1ம் வருடம்

29) தனபாலசிங்கம் பிரதீப்

பெளதீக விஞ்ஞானம்

30)ஆறுமுகம் அமலன்

மீன்பிடியியல் விஞ்ஞானம்

தொலைபேசி –

32) கணேசலிங்கம் வினோ

சமூகவியல் 1ம் வருடம்

33) சீவரத்தினம் தாரகன்

கலைப்பீடம் 1ம் வருடம்

34) நடராசா கிரிநாத்

மருத்துவம் 1ம் வருடம்

35) செல்வராசா கயோதீபன்

கலைப்பிரிவு 1ம் வருடம்

36) அன்ரன் பெனடிக்ற் யூட்குமார்

முகாமைத்துவம் 2ம் வருடம்

37) கந்தசாமி சாரங்கன்

விவசாயம் 1ம் வருடம்

38)கனகலிங்கம் விக்னா

கலைப்பிரிவு 1ம் வருடம்

42)செல்லன் கீரன் (ஜனாதிபதியிடம் பரிசு பெற்றவர் 4ஏ கிடைத்தது)

முகாமைத்துவம் 2ம் வருடம்

43) நவரத்தினம் தருசன்

கலைப்பீடம் 2ம் வருடம்

44)கந்தையா பரமேஸ்வரன்

முகாமைத்துவம் 1ம் வருடம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.