Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகம் தற்போது துணைவேந்தர் எனும்நபரின் சண்டித்தனத் சத்திரமாக மாறிவருகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பல்கலைக்கழகம் தற்போது துணைவேந்தர் எனும்நபரின் சண்டித்தனத் சத்திரமாக மாறிவருகின்றது

போரில் ஊனமடைந்த மாணவர்களுக்கான உதவியை தடுத்து நிறுத்தினார் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர்

திகதி: 13.06.2010 // தமிழீழம்

வன்னியில் நடைபெற்ற போரில் காயமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்க்கு உதவிப் பொருட்களை வழங்க சென்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் காவல்துறையினரின் உதவியுடன் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வன்னியில் நடைபெற்ற போரில் ஊனமடைந்த 43 மாணவிகள் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த மாணவிகளுக்கு சக்கர வண்டிகள் உட்பட பல உதவிப் பொருட்களை வழங்கும் நோக்கத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பு பிரதிநிதிகள் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது அவர்களை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும், காவல்துறையினரும் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி திருப்பி அனுப்பியுள்ளதாக பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பின் தலைவர் உடுல் பிரேமரட்னா தெரிவித்துள்ளார்.

அவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும், யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஊனமடைந்த 43 மாணவிகளுக்கு தாம் உதவிப் பொருட்களை எடுத்து சென்றிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊனமடைந்துள்ள இந்த மாணவிகளை மாணவர் விடுதிகள் அல்லாது வேறு ஒரு தனியான இல்லத்தில் தங்கவைத்துள்ள நிர்வாகம் அவர்களின் கல்விக்கு தேவையான உதவிகளை வழங்கவில்லை என பிரேமரட்னா தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் அனுமதியுடனேயே தாம் 300,000 ரூபாய்கள் பெறுமதியான பொருட்கனை சேரித்து சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உயர் அரச அதிகாரி ஒருவரின் அழுத்தம் காரணமாகவே துணைவேந்தரும், காவல்துறையினரும் காயமடைந்த மாணவிகளுக்கான உதவிப்பொருட்களை விநியோகம் செய்ய வந்த மாணவர் அமைப்பு பிரதிநிதிகளை அச்சுறுத்தி விரட்டியடித்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கில் எங்கு தான் ஒழுங்கான நிர்வாகம் நடக்கின்றது.

எங்கும் உயரதிகாரிகள் மேலதிகாரிகள் அமைச்சர்கள் ராணுவ அதிகாரிகள் கிராம சேவையாளர்கள் என்று எல்லோரும் அரச கைக் கூலிகள். மக்கள் இதற்குள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவது தவிர்க்க முடியாதது.

மாணவர்கள் நிலமை மிகமோசம்.வெளியே சென்ற ஒரு மாணவன் வீடு திரும்பினால்த்தான் பெற்றோருக்கு நிம்மதி.

இதற்கிடையில் சுற்றுலா செல்வதற்கான விளம்பரம் வேறு.

வாத்தியார்

...........................

தமிழினத்தை அடிமையாக்கும், யாழ் பல்கலைக்கழக நடவடிக்கைகளை குழப்ப மேற்கொண்ட ஜே.வி.பி. யின் அரசியல் நகர்வை தடுத்து நிறுத்திய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டுக்குரியவர்.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தொழில் சங்கத்தின் செயலாளர் கலாநிதி அபிமானையும் பல்கலைக்கழக ஒன்றிய செயலாளர் (ஜே.வி.பி. தீவிரவாதி ஒருவர்) சந்தித்ததாக உறுதியான செய்திகள் கூறுகின்றன.

ஜே.வி.பி. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளையும் நிராகரித்து வரும் சிங்கள பேரினவாத கட்சியாகும். கடந்த 10 வருடங்களாக மலையாக தமிழரை இழிவு செய்த சிங்கள பேரினவாத கட்சி ஜே.வி.பி. யாகும்.

தூண்டில் மீன் போன்ற உதவிக்கு ஆதங்கப்படும், சலுகைகளுக்காக விலைபோகும் ஒருசிலரே யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரை இழிவுபடுத்த முற்பட்டுள்ளனர்.

ஜே.வி.பி. யின் அரசியல் நகர்வை தடுத்து நிறுத்திய யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாராட்டுக்குரியவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.