Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் இடம்பெறும் பயங்கரம் குரல் கொடுக்கத் தயாராகவேண்டும் வலம்புரி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்து முடிந்த பெரும் போருக்குப் பின்னர் இப்போது மீள்குடிய மர்வு இடம்பெறுகின்றது. எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில், தங்கள் சொந்த மண்ணில் குடியேறுவதை தவிர தங்கள் வாழ்க்கைக்கு வேறு ஆதாரம் இல்லை என்ற கட்டாயத்தில் மீள்குடியமர்வில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இருந்தும் வன்னியில் மீள் குடியமரும் மக்களுக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்படவில்லை.பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவதான நிலைமை அங்குள்ளதெனில், மக்களின் அவலநிலை எத்தகையதென்பதை ஊகித்தறிவதில் எந்தக் கஷ்டமும் இருக்க முடியாது. எனவே வன் னியில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களின் பாது காப்புத் தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அரசின் கட்டாய கடமையாகும்.

யுத்தத்தில் பெற்ற வெற்றி என்பது ஓர் இனத்தை நசுக்குவதற்கானதாக இருக்குமாயின், அந்த வெற்றியின் அனுபவிப்பால் ஈற்றில் கிடைப் பது துன்பமேயன்றி வேறு எதுவும் இல்லை என்பது உணர்தற்குரியது.

முப்பது வருட கால யுத்தத்தில் அடையப்படும் வெற்றி எதுவாக இருக்குமெனில், எல்லா இன மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகும்.இருந்தும் துரதிர்ஷ்ட வசமாக தமிழ் மக்களை அரசு மாற்றுக் கண்கொண்டே பார்க்கின்றது. தமிழர்கள் இரண்டாம் தரப் பிரஜைகள், இந்த நாட்டில் மிகப்பெரியதொரு போட்டி இருக்குமாயின் அது, சிங்களவர்-தமிழர் என்ற இனத்துவப் போட்டி என அரசு கருதுகின்றது.

இதன் காரணமாகவே தமிழர் பகுதிகளில் உள்ள அரச மரங்களிலெல்லாம் புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்கின்றது.சாதாரணமான நிலையில் நின்று இது பற் றிச் சிந்தித்தால் அரசின் செயல் எந்தளவு தூரம் சிறுமைத்தனமுடையது என்பதை உணர முடியும்.

ஜனநாயக அரசு, ஜனநாயக நாடு என்ப தெல்லாம் வெறும் பேச்சளவிலாக அமையுமாயின் எதிர் காலத்தில் ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். ஆக, வன்னிப் பெரு நிலப்பரப்பில் மீளக் குடிய மரும் மக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு உறவுகளை பறிகொடுத்து விட்டு குடிசைக்குள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் அபலைப் பெண்கள் மீது விடும் சேஷ்டை இந்த நாட்டை கண்ணீரில் மிதக்க வைக்கும். இதற்குப் பாத்திரமானவர்கள் நிச்சயம் வருந்த நேரிடும் என்பதால் அனைவரும் விழிப்பாக இருந்து வன்னி மக்களின் நலனில் கரிசனை கொள்ள வேண்டும்.

} http://meenakam.com/?p=84

சிங்கள பயங்கரவாதிகளை வன்னி மண்ணிலிருந்து அப்புறப்படுத்தும் வரை அங்குள்ள தமிழ் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான். அதுவரை சிங்கள பயங்கரவாதிகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் ஆயுதம் வழங்கப்படவேண்டும்.

சிங்கள பயங்கரவாதிகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் ஆயுதம் வழங்கப்படவேண்டும்.

இது வேறையா ? :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது வேறையா ? :lol::lol::):)

அதுதானே! எங்கள் வெடிவெள்ளியல் வச்சு இருகிறது கானாதோ? கடத்தி கப்பம் கேட்க? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகள் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தன் இனத்திற்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

தமிழரின் அடையாளங்களை அழிக்கப் பயன்படுத்துகின்றார்கள்

வாத்தியார்

...........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள இனவாதிகள் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தன் இனத்திற்காகப் பயன்படுத்துகின்றார்கள்.

தமிழரின் அடையாளங்களை அழிக்கப் பயன்படுத்துகின்றார்கள்

வாத்தியார்

...........................

அதைதானே இங்கேயும் அங்கேயும் பல தமிழர்களும் செய்கிரார்கள்

அதுதானே! எங்கள் வெடிவெள்ளியல் வச்சு இருகிறது கானாதோ? கடத்தி கப்பம் கேட்க? :rolleyes::o:blink:

வெளிநாடுகளில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு போனபோது பாஸ்போட்டை வாங்கி வைத்துவிட்டு 5 லட்சம் தந்தால் தான் திருப்பி தருவோம், 10 லட்சம் தந்தால் தான் திருப்பி தருவோம் என்று கூறிய வெடிவேளிகளும் அந்த தமிழ் மக்களுடன் தான் இருந்தனர். :blink::huh:

.. அதுவரை சிங்கள பயங்கரவாதிகளிடம் இருந்து தம்மை பாதுகாக்க ஒவ்வொரு தமிழ் மக்களுக்கும் ஆயுதம் வழங்கப்படவேண்டும்.

ஏதும் எழுத வேண்டும் என்பதற்காக வடிகட்டிய ****** எழுதாதீர்கள்!!! ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.