Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா - இந்தியாவின் முதலீட்டு போர்க்களமாக மாறியுள்ள இலங்கை - இதயச்சந்திரன்

Featured Replies

இது ஆயுதப் போராட்டமல்ல, அவ்வாறு ஒரு ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம். இப்போதைய சூழ்நிலையில் உருவாகும் வாய்ப்பு அரிதாகவே உள்ளது.

ஆனாலும் முள்ளிவாய்க்கால் வரை காத்திருந்த இரு பெரும் ஆசியப் பிராந்திய வல்லரசாளர்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் தமது மேலாதிக்கப் போட்டியை முதலீடு ஊடாக ஆரம்பித்துள்ளனர்.

இதுதான் இப்போதுள்ள கவனிக்கப்பட வேண்டிய கள யதார்த்தம். இம்மோதலால் இலங்கையில் பண மழை கொட்டுகிறது.

பிராந்தியம் இரண்டுபட்டால் இலங்கைக்கு கொண்டாட்டம்தான்.

ஆனால் இரண்டுபட்டு நிற்கும் மேலாதிக்கவாசிகள் இலங்கையை இரு கூறாக்கி விடுவார்கள் என்ற யதார்த்தம் உணரப்படும்போது களயதார்த்தம் முற்றாக மாறுபட்டு விடும். இலங்கையின் கள யதார்த்தம் தமக்கு மட்டுமே புரியும் என்பவர்கள், செனட் சபை, வட மாகாண சபையோடு சங்கமித்து புதிய யதார்த்தங்களை உருவாக்கி விடுவார்கள்.

இருப்பினும் இன்றைய நவீன அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறும் கள யதார்த்தம் குறித்து கற்பனைவாதத்திற்கு அப்பால் பார்க்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரை, அந்நாடு இரண்டு பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றது.

ஒன்று யுத்தத்தினால் சிதைவடைந்த பொருளாதார சீரழிவை சீர் செய்வது. அடுத்ததாக மேற்குலகம் மேற்கொள்ளும் போர்க் குற்ற விசாரணைகளிலிருந்து தப்பிச் செல்வது என்பதாகும். இதில் போருக்கு ஆதரவும் அனுசரணையும் வழங்கியவர்களே, பொருளாதார மீட்சிக்கும் உதவி புரிய முன் வருகின்றார்கள்.

உதவிபுரிய வருபவர்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் அதிகரிப்பதே, இலங்கை அரசு எதிர்நோக்கும் பாரிய சவாலாகும். இந்திய சீன முரண்பாடுகளுக்குள் அகப்படாமல் எவ்வாறு தங்கள் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டுமென்ற சூத்திரம் தந்திரரோபாயம் இலங்கை அரசிற்குத் தெளிவாகத் தெரியும்.

ஏனெனில் இந்தியாவின் தீவிரப் போக்கும், சீனாவின் மென்தீவிரப் போக்கும் இலங்கைக்குச் சாதகமாகவே இருக்கும். முழுமையான பொருளாதார இரு தரப்பு உடன்பாட்டினுள் மூழ்கி விடாமலும் அதே வேளை பொதுவான உடன்பாடுகளில் கைச்சாத்திட்டு இந்தியாவைச் சாந்தப்படுத்துவதிலும் அதிபரின் இந்தியப் பயணம் தனது நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது.

பயங்கரவாதத்தை ஒழிக்க இருதரப்பும் தொடர்ந்து செயற்படுதல், கைதிகள் பரிமாற்றம், தலைமன்னார் மடு தொடரூந்துப் பாதை மீள் கட்டமைப்பு, எரிபொருள் ஒப்பந்தங்கள் போன்ற சிறிய விடயங்களே இப் பயணத்தில் பேசப்பட்டது. தேர்தல் திருவிழாக்களை முன்னிட்டு கடந்த நவம்பரில் முன் வைக்கப்படவிருந்த வரவு செலவு திட்ட அறிக்கை, இந்த வருடம் ஜூன் மாதத்திற்கு பின் போடப்பட்டுள்ளது.

வரவு செலவுத்திட்டக் குறை நிரப்புத் தொகை, தேசிய மொத்த உற்பத்தியின் 67 சதவீதத்திற்கு உட்பட்டு இருக்க வேண்டுமென அனைத்துலக நாணயச்சபை விடுக்கும் கட்டளைகள் அடுத்த வருடமே நிறை வேற்றப்படுமென திறைசேரி செயலாளர் பி. ஜெயசுந்தர தெவித்திருந்தார்.

இந்த இடைவெளி 5 சதவீதமாக 2012 இல் மாறுமென்பதே செயலாளரின் கணிப்பு.

இத்தகைய நிபந்தனைகளை நிறைவேற்றாத இலங்கை அரசிற்கு அடுத்தகட்ட நிதியை வழங்க முடியாதென நாணயச் சபை அறிவித்தது.

ஆகவே மேற்குலக ஆதிக்கத்தில் இயங்கும் அனைத்துலக நாணயச் சபைக்கும் இலங்கைக்குமிடையே நிகழும் முறுகலை, தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த சீனாவும் இந்தியாவும் முயல்வதே தற்போதைய கள யதார்த்தமாகும்.

வட கிழக்கின் கள யதார்த்தத்தை பொறுத்தவரை, இன்முனம் முகாம்களில் வாழும் மக்கள் குறித்தும் மீள் குடியேற்றத்திற்காக கொண்டு செல்லப்பட்டு அநாதரவாக நிற்கும் மக்கள் பற்றியும் அவர்களுக்கு சர்வதேச சமூகம் உதவி புரிய முன்வர வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் வெளியிட்ட செய்தியே தமிழர் அரசியலில் முதன்மையானது.

மேல் சபை (செனட்) உருவாகும்வரை, துன்பச் சிலுவை சுமந்து நிற்கும் மக்கள் நிர்க்கதியாக நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பது மிகக் கொடுமையானது. இவை தவிர, வட கிழக்கில் புதிய கள யதார்த் தத்தை உருவாக்கும் தீவிர முயற்சியில் இந்தியா ஈடுபடப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு பில்லியன் அமெக்க டொலர்களை 20 வருட குறைந்த வட்டியில் வழங்க இந்தியா முன்வந்திருப்பதாக திறைசேரிச் செயலாளர் பி.ஜெயசுந்தர அறிவித்துள்ளார்.

இதில் 800 மில்லியன்கள் தொடரூர்ந்து பாதைகள் புனரமைப்பிற்கும் 200 மில்லியன்கள் அனல்மின் நிலையத்திற்கும் 250 மில்லியன் டொலர்கள் வடகிழக்கு மாகாண வீடமைப்புத் திட்டத்திற்கும் ஒதுக்கப்படுமெனத் தெரியவருகிறது. குறிப்பாக போரினால் பாதிப்புற்ற மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுமாம். ஆனாலும் ஏறத்தாழ, ஒரு இலட்சத்து நாற்பதினாயிரம் வீடுகள் இப் போரில் அழிவுற்றதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியது நினைவிற் கொள்ளத்தக்கது. இந்தியா வழங்கும் கடனுதவி மற்றும் நன்கொடைகளை வட கிழக்கோடு மட்டுப்படுத்துவதையே இலங்கையும் விரும்புகிறது. தென்னிலங்கையில் இந்திய முதலீட்டு நகர்வுகளை இலங்கை விரும்பவில்லையென்கிற விவகாரம், இந்த வார இந்திய விஜயத்தினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது அனைத்துலக விமான நிலையம், வீரவிலவில் நிர்மாணிக்கப்பட விருப்பதாக செய்திகள் கூறின.

ஆனாலும் உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பினால் மாத்தறையில் தற்போது நிறுவப்படுகிறது. 2008 இல் இதனைப் பார்வையிட கொச்சின் சர்வதேச விமானநிலைய லிமிட்டட் கம்பனியினர் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இருப்பினும் இந்த விமான நிலையத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை. இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து எரி சக்தித் தேவையை மட்டுமே கூடுதலாகப் பெற்று வருகிறது. இலங்கைக்கான இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் எரிசக்தி வழங்கல் பிரதான பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, திருமலையிலுள்ள சீனன் குடா நிலத்தடி எண்ணெய் சேமிப்புக் குதங்களைப் பராமக்கும் இந்திய எரிசக்தி கூட்டுத்தாபனம், அதிலிருந்து இலங்கையின் உள்ளூர் வர்த்தகத்தின் மூன்றிலொரு பங்கினைப் பூர்த்தி செய்கிறது.

ஆனாலும் 65 மில்லியன் டொலர் செலவில் அம்பாந்தோட்டை பிரதேசத்தில் சீனாவால் நிர்மாணிக்கப்படும் எண்ணெய்க் குதங்கள் இயங்கும் நிலையை அடைந்தால், தற்போது இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் எரிசக்தி வழங்கல், சீனாவின் பிடிக்குள் வந்துவிடும்.

ஆகவே அதுவரை இந்தியாவுடன் முரண்படாததொரு உறவு நிலையைப் பேண வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு ஏற்படுகிறது. கடந்த நான்கு வருடங்களில் சீனாவின் முதலீடு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டிவிட்டது. அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்திற்கு 306 மில்லியன் டொலர்களும் அனல்மின் நிலைய இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கு 981 மில்லியன்களும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தென் பகுதியை நோக்கிய விரைவு நெடுஞ்சாலை அமைப்பதற்கு 242 மில்லியன்களும் புதிய அனைத்துலக விமான நிலையத்திற்கு 200 மில்லியன் டொலர்களையும் சீனா வழங்குகின்றது.

ஆகவே நுரைச்சோலை சம்பூர், அம்பாந்தோட்டை, காங்கேசன்துறை என்று சீனாவும் இந்தியாவும் பெரும் முதலீட்டுப் போரொன்றினை இலங்கையில் ஆரம்பித்திருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். “'சீபா' உடன்படிக்கை ஊடாக சீனாவின் நகர்வுகளை அம்பாந்தோட்டைக்குள் முடக்க முயலும் இந்தியா, அது சாத்தியப்படாதென்பதை உணர்வதால் வடகிழக்கில் தனது முதலீட்டு ஆக்கிரமிப்பினை நிகழ்த்த முற்படுகிறது. அதேவேளை பாதைகள் அமைக்கும் பணிக்கூடாக வடக்கிலும் திருமலைத்துறைக அபிவிருத்திக் கூடாக கிழக்கிலும் கால்பதிக்க, சீனா முற்படுவதாக தென்னிலங்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அம்பாந்தோட்டையில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைத்து சீனாவின் நகர்வுகளை கண்காணிக்க இந்தியா விரும்புவது போன்று யாழ். நகரிலும் சீனா தன் துணைத் தூதரகத்தை நிறுவ முற்படலாம். ஆகவே இலங்கையில் நடைபெறும், தர்மசங்கடமான கேந்திர மைய ஆதிக்கப் போட்டி ஆசியாவை இரு துருவப்படுத்தினால் முன்னெப்பொழுதும் கண்டிராத புதிய கள யதார்த்தம் இங்கு வெளிப்படும்.

இந்த விளைவுகளாலும் நெரிபட்டப்போவது தமிழர்கள் தான்... !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டு பெரிய நாடுகள் கொல்லுபட்டு சிறீலங்கா நாடு இரண்டுபட்டால் நாடோகளாக திரியும் எங்களுக்கு கொண்டாட்டம்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சீனா மதம் என்ற போர்வையிலும் இந்தியா இனம் என்ற போர்வையிலும் தமிழர்களின் வளங்களைச் சுரண்டுவதில் முன்னிக்கின்றன.

வீதி அமைத்தல் விமான நிலையம் அமைத்தல் என்ற அபிவிருத்திப் போர்வையில் இரு நாடுகளும் தங்கள் தங்கள் நலன்களையே இலங்கையில் பேணுகின்றன.

வெளியே இரு நாடுகளும் அடித்துக் கொண்டாலும் தமிழரின் வளங்களைச் சுரண்டுவதிலும் தமது தேசிய நலன்களைப் பேணுவதிலும் எழுதாத ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்த இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு நடைமுறைகளில் அழிவது ஈழத்தமிழரும் அவர்களின் வளங்களுமே.

வாத்தியார்

.........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனா மதம் என்ற போர்வையிலும் இந்தியா இனம் என்ற போர்வையிலும் தமிழர்களின் வளங்களைச் சுரண்டுவதில் முன்னிக்கின்றன.

வீதி அமைத்தல் விமான நிலையம் அமைத்தல் என்ற அபிவிருத்திப் போர்வையில் இரு நாடுகளும் தங்கள் தங்கள் நலன்களையே இலங்கையில் பேணுகின்றன.

வெளியே இரு நாடுகளும் அடித்துக் கொண்டாலும் தமிழரின் வளங்களைச் சுரண்டுவதிலும் தமது தேசிய நலன்களைப் பேணுவதிலும் எழுதாத ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன.

இந்த இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு நடைமுறைகளில் அழிவது ஈழத்தமிழரும் அவர்களின் வளங்களுமே.

வாத்தியார்

.........................

இவை இரண்டு நாடுகளும் சுரண்டாவிட்டாலும் சிங்களம் தமிழரை சுரண்டத்தானே போகுது, சிங்களம் சுரண்டினால் முடிவே இராது, இந்த எதிரிநாடுகள் சுரண்டினால் எதாவது முடிவாவது இருக்கும், வராது வந்த மாமனியை தொலைத்து விட்டோம், முடிந்ததை செய்து கொண்டிருப்போம். :lol:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.