Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆனந்தசங்கரி கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இனி வரும் காலங்களில் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மீள் குடியேற்றம் மற்றும் அபிவிருத்திப் பணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு வீ.ஆனந்தசங்கரி, கடிதம் ஊடாக ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

மீள் குடியேற்ற நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் நடைபெறவில்லை எனவும், எல்லோரிடமும் இந்தப் பணியை ஒப்படைப்பதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மக்களுக்கு பாதுகாப்பும், பராமரிப்பும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாண மக்களுக்கு பாரியளவில் தாம் சேவையாற்றியுள்ளதாகவும், இடம்பெயர் மக்களுக்கு சேவையாற்ற அரசாங்கம் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

குறுகிய விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்வதாக தெரிவித்து தடுத்து வைக்கப்பட்ட பல சந்தேக நபர்கள் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு சிறுவர் போராளிகளை இணைத்துக் கொண்டவர்கள் இன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து சிறுவர் போராளிகளை கைது செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய அல்லது சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் வேறும் நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெருந் தொகையான பணத்தைக் கொடுத்து முகாம்களிலிருந்து இவர்கள் வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களாக செயற்பட்ட சிலர் தற்போது அரசாங்கத்தின் ஆலோசகர்களாக செயற்பட்டு வருகின்றமை பெரும் வேதனை அளிக்கின்றதென அவர் தெரிவித்துள்ளார்.

www.globaltamilnews.net

ஓ ஆனந்தசங்கரியோ கேட்டவர். நான் நினைச்ச்சன் வன்னி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு நாடு கடந்த அரசாங்கம் கேட்டு இருக்கிதாக்கும் எண்டு. :lol:

உடும்பு வளர்க்கப் போறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களாக செயற்பட்ட சிலர் தற்போது அரசாங்கத்தின் ஆலோசகர்களாக செயற்பட்டு வருகின்றமை பெரும் வேதனை அளிக்கின்றதென அவர் தெரிவித்துள்ளார்.

இவரையும் ஆலோசகாராய் சேர்த்தால் வேதனை (வயித்தெரிச்சல்) படமாட்டார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஆனந்தசங்கரியோ கேட்டவர். நான் நினைச்ச்சன் வன்னி மீள் குடியேற்ற நடவடிக்கைகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு நாடு கடந்த அரசாங்கம் கேட்டு இருக்கிதாக்கும் எண்டு. :(

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.