Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜி எஸ் பியை மேலும் நீடிக்க நிபந்தனை

Featured Replies

ஜி எஸ் பியை மேலும் நீடிக்க நிபந்தனை

இலங்கை அரசாங்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் பட்சத்தில் அந்த நாட்டுக்கான ஜி எஸ் பி ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் அண்மைக் காலங்களில் வெளியான தகவல்கள் குறித்து தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை குறித்து பிபிசியிடம் பேசிய ஐரோப்பிய ஒன்றிய வணிக ஆணையத்தின் சார்பிலான பேச்சாளர் ஜோண் கிளன்ஸி அவர்கள், ''ஜி எஸ் பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை ரத்துச் செய்யாமல் மேலும் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட காலத்துக்கு நீடிக்குமாறு பிரேரிக்க இலங்கை அரசாங்கம் தயாராக இருக்கிறதா என்பதை ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு ஒன்றியம் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது'' என்று கூறினார்.

இந்த ஜி எஸ் பி பிளஸ் மூலம் ஐரோப்பிய நாடுகளுடனான வணிகத்தின் போது இலங்கைக்கு குறைவான வரியே விதிக்கப்படும்.

ஆனால், இது ஒரு நிபந்தனையின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என்று கூறிய கிளன்ஸி அவர்கள், அதாவது, சில தெளிவாக குறிப்பிடப்பட்ட மனித உரிமை நடவடிக்கைகளை இந்த வருட ஜூலை மாதத்துடன் ஆரம்பிக்கும் 6 மாதங்களுக்குள் இலங்கை மேற்கொள்ளும் என்ற எழுத்து பூர்வமான உத்தரவாதத்தை இதற்காக இலங்கை அரசாங்கம் தரவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் இதன் மூலமான முன்னேற்றங்கள் நீடித்ததாக இருக்கும் என்ற மறு உத்தரவாதத்தையும் இலங்கை தர வேண்டும்என்றும் கிளன்ஸி வலியுறுத்தினார்.

இதற்கான பிரேரணை இந்த வருடம் ஜூலை முதலாம் திகதிமட்டில் வந்தால்தான் ஐரோப்பிய ஒன்றியம் அதனை ஐரோப்பிய ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கும் என்றும் ஒன்றிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/06/100622_eulanksgsp.shtml

According to the Bank of Ceylon (BoC), remittances from the Tamil Diaspora in the UK to their relatives in Sri Lanka through the BoC has risen sharply to a monthly average of three million sterling pounds now from 50,000 pounds earlier.

“We want to raise it to six million pound per month,” said Bank Chairman Gamini Wickremasinghe, adding that the increased remittances were earlier sent through the illegal banking channel widely known as ‘Hawala’.

http://sundaytimes.lk/100620/BusinessTimes/bt01.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் உண்டியல் மூலம் இலங்கைக்கு காசு அனுப்ப முயற்சிக்க வேண்டும். இதன்மூலம் அந்நியச் செலாவணி சிங்களத்தின் கைகளில் சேராமல் தடுக்கலாம்..! <_<

  • தொடங்கியவர்

தமிழர்கள் உண்டியல் மூலம் இலங்கைக்கு காசு அனுப்ப முயற்சிக்க வேண்டும். இதன்மூலம் அந்நியச் செலாவணி சிங்களத்தின் கைகளில் சேராமல் தடுக்கலாம்..! <_<

சும்மா விளையாடாதேங்கோ இசை... ! நாள்தோறும் இலங்கை போற விமானங்களில் ஆசனங்களே இல்லையாம்... வரும் விடுமுறைக்காலத்துக்கு ஆசனம் எடுக்க சனம் தவமாய் கிடக்குது... இலங்கை அரசால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிக விமானங்கள் இயக்க படலாம் எண்டும் பேச்சு சனத்துக்கை இருக்கு...

போறவை அங்கை இருக்கிற சனத்தின் காசை செலவளித்தால் பறவாய் இங்கை இருந்து கொண்டு போய் எல்லோ அள்ளி இறைக்கினம்...

GSP+ வர்த்தகச் சலுகையின் பின்னணி

மேற்குலக நாடுகள் தமக்கு குறைந்த விலையில் பொருட்களை இறக்குமதி செய்ய முதலில் ஜப்பானைப் பயன்படுத்தின. ஜப்பான் பாரிய பொருளாதார வளர்ச்சியடைந்த பின் அதன் நாணய மதிப்பு பெரிதளவில் வளர்ச்சி கண்டது. பின்னர் ஆசியச் சிறு வேங்கைகள் என் அழைக்கப் பட்ட ஹொங் ஹாங், தென் கொரியா, தைய்வான், சிங்கப்பூர் ஆகியவற்றில் இருந்து இறக்குமதிகளைச் செய்தன. அவையும் பொருளாதார வளர்ச்சிகாண பின்னர் சீனா அந்த இடத்தைப் பிடிக்க முயன்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை ஒரு பொது உடமை போர்வை போர்த்திய அரச முதலாளித்துவ நாடான சீனாவில் இருந்து இறக்குமதி செயவது பெரிதும் விரும்பத்தக்கதல்ல. சீனாவின் பொருளாதார வளர்ச்சி மேற்குலகிற்கு அச்சுறுத்தலாக அமையும். இதை தவிர்க்கும் முகமாக வறிய நாடுகளுக்கு ஜீஎஸ்பீ+ வரிச்சலுகையை அளித்து அவற்றிடம் இருந்து இறக்குமதிகளைச் செய்யவே இந்த ஜீஎஸ்பீ+ வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகம் செய்தது. அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் பல நிபந்தனைகளை விதிக்கிறது. 27 பன்னாட்டு உடன்படிக்கைகளை அந்த நாடுகள் அமூல் செய்ய வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் கூறும் 27 பன்னாட்டு உடன்படிக்கைகளில் மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறியதாக ஐரோப்பிய ஒன்றியம் அமைத்த விசாரணைக் குழு கூறியது:International Covenant on Civil and Political Rights, the Convention agaist Torture and Convention on Rights of Child.

இலங்கை அரசியல் அமைப்பின் 17வது திருத்தம் அமூல் படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்தது. பின்னர் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் இலங்கைக்கான ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நிறுத்தப் படுவதாக அறிவித்தது. இப்போது ஐரோப்பிய ஒன்றியம் 2011 பெப்ரவரி வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகை நீடிக்கப் படும் என்று அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியக் குத்துக் கரணத்துக்கு என்ன காரணங்கள்?

1. முதலீட்டாளர்களைப் பாதுகாத்தல். இலங்கையில் முதலீடு செய்த ஐரோப்பிய வர்த்தக நிறுவனங்களின் முதலீட்டைப் பாதுகாப்பது. ஒரு நிறுவனம் முதலீடு செய்யும் போது அந்த முதலீட்டிற்கான மிள் செலுத்தல் காலம்(Pay back period) ஒன்றை கணக்கிடும். அந்த முதலீட்டுக் காலம் முடியும் வரை ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை இழுத்தடிக்க வேண்டிய கட்டாயத்தால் இந்த வர்த்தகச் சலுகை நீடிக்கப்படுகிறது. Marks & Spencer, Tesco, Next போன்ற வர்த்தக நிறுவனங்களை பாதுகாக்க இந்த இழுத்தடிப்பு செய்யப்படுகிறது.

2. குறைந்த விலையில் இறக்குமதி. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயங்களான யூரோ ஸ்ரேலிங் பவுன் போன்றவை அண்மைக் காலங்களாக பெறுமதித் தேய்வு கண்டு வருகிறன. இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இறக்குமதிப் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. ஜிஎஸ்பி+ வரிச் சலுகையை நிறுத்தினால் பல இறக்குமதிப் பொருட்களின் விலை மேலும் உயரும். இதைத் தடுக்கவும் இந்த பெப்ரவரி 2011 வரையான இழுத்தடிப்பு.

President rejects EU conditions

=========================================================================================

== EU made it mandatory for the government to adhere to 15 demands within a stipulated period of six months. ==

=========================================================================================

Demand - implementation of the 17th Amendment

Demand - the release of those arrested under emergency regulations

Demand - Abrogation of the Prevention of Terrorism Act

-- rejected the 15 demands put forward by the European Union (EU) as a pre requisite for the extension of the GSP+ trade concessions to Sri Lanka for a further period of six months

-- would not compromise the country’s sovereignty for the sake of the US$ 150 million

-- Denmark and Spain took a rigid stand against Sri Lanka while Italy supported the country

-- German Ambassador and the British High Commissioner had informed Prof. Peiris that their countries were not in favour of the EU decision

http://www.dailymirror.lk/print/index.php/news/front-page-news/13851.html

Edited by akootha

Sri Lanka rejects 'insulting' EU trade conditions

"These conditions are unacceptable. They are an insult to every citizen of this country," Rambukwella told reporters in Colombo. "We must put the EU demand in the dustbin."

AFP

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.