Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேலதிகமாக 50 பல்கலைக்கழக மாணவர்களுக்கான அவசர நிதி உதவி கோரல்

Featured Replies

இந்த வருடம் ஏப்பிரல், மே மாதங்களில் 116 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது தாய் தந்தையினருடன் சென்று தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இவர்களில் சுமார் 50 மாணவர்களுக்கு குடும்பத்தினர் இல்லாத நிலையிலோ அல்லது குடும்பத்தினரால் அன்றாட வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்ய இயலாதநிலையிலோ உள்ளனர். இவர்கள் யாழ் பல்ககலைக்கழக துணைவேந்தர் ஊடாக எம்மிடம் நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பட்டப்படிப்பு தொடரவும், அவர்களது எதிர்காலம் சிறக்கவும், நாம் எமது “பல்கலைக்கழக நிதியுதவித் திட்டமூடாக” அவர்களையும் அரவணைத்து நிதியுதவி செய்யத் தீர்மானித்துள்ளோம்.

இவர்களுடன் மொத்தமாக 130க்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ‘பல்கலைக்கழக நிதியுதவித் திட்டம் (Unifund project)’ நிதியுதவியுடன் (sponsorship) தமது பட்டப்படிப்பை தொடர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘பல்கலைக்கழக நிதியுதவித் திட்டம் (Unifund Project) மட்டும் தான் பல்கலைக்கழக நெறிமுறைகளை அனுரித்து, தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ‘துணைவேந்தரின் நலன்புரி நிதியத்தினூடாக’நிதியுதவி வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உதவி வழங்கிய தமிழ் அன்பர்களுக்கு எமது மனங்கனிந்த நன்றியைத் தெரிவிக்கும் அதே தருணம், கல்வியே எமது ஈழத் தமிழ் சமுதாயத்தின் பெரும் சொத்து. தொடர்ந்தும் எமது இளைய ஈழத் தமிழ் சமுதாயம் தமது கல்வியறிவைப் பெற எம்மூடாக உதவி செய்ய அழைக்கின்றோம். இந்த பல்கலைக்கழக நிதியுதவித் திட்டத்தின் விபரங்களை உங்கள் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் அனுப்பி வையுங்கள். மேலதிக விபரங்கள் பெற எம்முடன் தொடர்பு கொள்ளவும். அத்துடன் எமது இணையத்தளத்தைப் பார்க்கவும். (www.theunifundproject.org OR www.kalappai.org)

UJ%20letter_June%202010.jpg

இணைப்புகள்:

UP Tamil Newsletter June2010.pdf

My link

**மேலதிக விபரங்களிற்கு இணைக்கப்பட்ட ஆங்கில, தமிழ் இணைப்புக்களைப் பார்க்கவும்.***

அன்புடன்

டாக்டர். பொ. கேதீஸ்வரன்

நிர்வாகம், பல்கலைக்கழக நிதியுதவித் திட்டம்

Contact: PO Box 4040 Homebush NSW 2140. Tel: 61 (0)433 088 725 or 612-9758 7970.

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய UNIFUND திட்டத்தினூடாக கடந்த 9 மாதங்களாக , பல்கலைக்கழ்க துணைவேந்தர் நல நிதியத்தினூடாக பல்கலைக்கழக நெறிமுறைகளை அனுசரித்து நடாத்தபடும் இத் திட்டம் பல்கலைக்கழ அதிகாரிகளினாலேயே மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பணமும் அவர்கள் ஊடாகவே வழங்கப்ப்டுகிரது ( அனைத்து ஆவணங்களும் இணைக்கபட்டுள்ளன), பல்கலைக்கழக துணை வேந்தரின் அண்மைய வேண்டுகோளிற்கிணங்க புதிதாக முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட மேலும் மாணவர்களிற்கு உதவி கோரப்பட்டுள்ளது.

1.பல்கலைக்கழக நிர்வாகமே மாணவர்களை தேர்வு செய்து தருகிரார்கள்

2.பல்கலைக் கழகமே பணத்தை வழ்ங்குகிரWது.

3. உதவி பெறும் மாணவர்களை அவர்களுக்கான பணத்தை வழங்கும் அனுசார்ணையாளர்கள் தொடர்பு கொள்ளத்தக்கதாக வசதி ஏற்படுத்தி கொக்டுக்கப்பட்டுள்ளது.

4.துணை வேந்தர் தலமையில் நலத்துறை உதவிப்பதிவாளர்,மூத்த மாணவ ஆலோசகர் , பீட மாணவ ஆலொசகர்கள் இணைந்த குளுவே மேற்பார்வை செய்கிறது

5. இந்த மாணாவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொழில் தொடங்க தேவையான உதவிகள் மற்றும் பணம் வளங்கப்பட இருக்கிரது

உதவி பெறும் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் ஆகியோருடன் உதவித்திட்டத்தின் உறுப்பினர் கலந்து கொண்ட கூட்டம் பற்றிய வீடியோவைப் பார்க்க www.theunifundproject.org

post-6050-025180800 1277285013_thumb.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்த வரைக்கும் கஷ்டப்படும் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்ற்க்கு நேரடியாக பணம் அனுப்புங்கள் . VC FUND எண்டு அனுப்பின நிறையக் காசு கஷ்டப்படுற மாணவர்களுக்கு குடுபடல . இது என்னோட நேரடி அனுபவம் . நல்ல வேலை செய்யிறியள் ஆனா அத சரியா செய்யுங்கோ

Edited by நியூட்டன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துக்கு நன்றி ...பணம் அனுப்பப்பட்டு அது வழங்கப்ப்டுவது எமது உருப்பினராலேயே மேற்பார்வை செய்யப்ப்டுகிறது அத்துடன் உதவி பெரும் மணவரின் தொலைபேசி இலக்கம் உதவி வழங்குபவருக்கு வழங்கப்படுகிரது பணம் கிடப்பதனை இவர்கள் உற்தி செய்து கொள்ளலாம் , இந்தத் திட்டம் ஏர்கனவே 9 மாதங்களாக தொடர்ச்சியாக எந்தவொரு இடையூறுமின்றி நடைபெறுகிரது , இதுவரையில் ஒவ்வொரு மாதப்பணமும் கிரமமாக வழ்ங்கப்பட்டுள்ளது. இதனை நான் நேரடியாக அங்கு சென்று மாணவர்களுடனும் பல்கலைகழக அதிகாரிகளுடனும் கலந்து கொண்ட கூட்டத்தின் வீடியோவினை எமது இனையத்தழத்தில் பார்க்கவும் ...உதவி பெறும்.மணவர்கள் நேரடியாக என்ன சொல்கிரார்கள் என்பதையும் , பல்கலைக்கழக அதிகாரிகள் இத்திட்டம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதினையும் தயவு செய்து ஒரு முறை பார்க்கவும்

ஒவ்வொரு மாதத்துக்குமான பண அளவு மட்டும் அனுப்பப் பட்டு வழங்கியமை உறுதி செய்யப்ப்டுகிரது..இதுவரை நாம் வழங்கிய பணம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கபட்டுள்ளது , இதனை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எம்மிடம் உள்ளன , அல்லது மாணவ்ர்கள் என்ன சொகிறார்கள் என்பதினை வீடியோவில் பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

முழுமையான வீடியோ இந்த இணைப்பில் உள்ளது

http://www.egait.com/clients_demo/uni/News.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.