Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயவுடனான சந்திப்பு செய்தி – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு

Featured Replies

கோத்தபாயவுடனான சந்திப்பு செய்தி – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு

Pழளவநன டில: ழn ஜூன் 29இ 2010

சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாகஇ பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது.

கடந்த சனி, ஞாயிறு (26,27-06-2010) தினங்களில் ஒளிபரப்பான ஜி.ரி.வி செய்திகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் கோத்தபாயவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மருத்துவர் அருட்குமார் சிறீலங்காவிற்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்டது எனவும், அவரது பயணம் பற்றியோ, அன்றி கோத்தபாயவைச் சந்திப்பது தொடர்பாகவோ அவர் பிரித்தானிய தமிழர் பேரவையிடம் அனுமதி பெற்றிருக்கவில்லை என்பதையும், எமது பிரதிநிதியாக அவர் அந்த சந்தி;ப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதையும் இந்த இடத்தில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இதேவேளைஇ இந்த விடயம் தொடர்பாக ஆராய ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய தமிழர் பேரவையின் கூட்டம் இடம்பெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதிலும் எந்தவித உண்மையும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். நேற்று (27-06-2010) இடம்பெற்ற கூட்டம் பிரித்தானிய தமிழர் பேரவையின் எதிர்கால பரப்புரைச் செயற்பாடுகள் பற்றிய பட்டறை என்பதும், இது ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இடம்பெற்றதுடன், பிரித்தானியாவின் அனைத்துப் பாகங்களிலும் இருந்து பலர் கலந்துகொண்டனர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

மேலும் இவ்வாறான தகவல்கள் மக்களைச் சென்றடைந்து குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர், பிரித்தானிய தமிழர் பேரவை பற்றிய செய்திகளை எதிர்காலத்தில் ஒளிபரப்ப முன்னர் அதனது உண்மைத்தன்மையை எம்மைத் தொடர்புகொண்டு கேட்டறியுமாறு ஜி.ரி.வி நிறுவனத்தை தாழ்மையாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

http://www.tamilkathir.com

Edited by kalaivani

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது அங்கபோய் என்ன நடந்தது என அவர் பேட்டிகொடுத்த பின்பு பிரித்தானிய தமிழர் பேரவை அவரைக் களட்டிவிடப்போகினம். பேசாமல் அதுக்கு பிரித்தாளும் தமிழர் பேரவை எண்டு பெயரை மாத்துங்கோ. நான் நினைக்கிறன் கொத்தா உத்தரவ போட்டிருக்கிறார் போலக்கிடக்குது இவன் பாவியை நம்பிக்கையான ஆள் எண்டு அனுப்பினியள் அவன் வெளியில வந்து எல்லாத்தையம் சொல்லிப்போட்டான் பேசாமல் எங்களுக்கும் இவருக்கும் தொடர்பில்லையெண்டு காய்வெட்டவிடுங்கோவென அதுதான் இவையள் அறிக்கைவிடுகினம்.

அது சரி இவரை யார் போக் சொன்னது?

நாணயமில்லாத மாடுகள் எல்லாம் தெறிகெட்டு ஓடுது

எல்லாரையும் அம்போ எண்டு நடுத்தெருவில கொண்டு வந்து விட்டு விட்டு மவுனம் ஆகிட்டாங்களே

இன்று இந்த டாக்டர் போய் வந்தபடியினால் தான் ... சிலருக்கு உண்மைகள் புரிந்தது/பலரை யோசிக்க வைத்திருக்கிறது ....

இதில் நகைச்சுவை என்னவென்றால் .... இவர்கள் போய் வந்தவுடன் ... இந்த நமோ நமோ மாதா பாட்டிதான், இப்படி புலிகளின் புத்திஜீவிகள் போய் வந்திருக்கிறார்கள், ... ....... என்றதை வெலியில் சொன்னார்கள் என்ன சொல்லச்சொன்னதை சொன்னார்கள்!!!!!!!! .... இன்று அங்கத்தையான் கூத்தை அம்பலப்படுத்த ... கொய்யோ முறையோ என நமோ நமோக்கள் ஒப்பாரி வைத்து அழுகிறார்கள்!!!!! ... நான் சொல்வது சரிதானே பாண்டர்007???????

கே.பி என்ற உளவாளியின் பின்னணியில் … : அஜித்

“புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பணம் இன்னும் அவர்களின் கைகளிலேயே உள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள புலம்பெயர் நாடுகளில் வாழும் புலி ஆதரவுத் தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்ளவும், புலிகளை மறுபடி பலம் பெறச் செய்யவும் சாத்தியங்கள் உள்ளன. இராணுவம் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமைத்துவம் அழித்தொழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பயங்கரமான அந்த இயக்கத்தின் அச்சுறுத்தல் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. புலம் பெயர் நாடுகளில் இருக்கும் அவர்களின் வலைப்பின்னல் குறித்து நாம் விழிப்பாக இருக்கவேண்டும்.” என்று இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் இந்தியப் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்த்திருந்தார்.

2009 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற இந்த மாநாடு நடைபெற்ற சில வாரங்களில் எம்.கே.நாராயணன் இதே கருத்தை எக்கொனமிக்ஸ் ரைம்ஸ் இற்கு வழங்கிய செவ்வியிலும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். இவரது கூற்று இந்தியாவின் “சிந்தனைச் சிற்பிகளின்” மூளையில் திட்டம் வகுக்கப்பட்டுவிட்டதற்கான முன்னறிவிப்பு.

நாராயணன் கரிசனை எழுவதற்கு சரியாக ஒரு மாதங்களின் முன்னதாக மலேசியத் தலை நகரில் கே.பி என்ற குமரன்பத்மநாதன் “கைது செய்யப்பட்டு” இலங்கை கொண்டு செல்லப்படுகிறார். கே.பி “கைதுசெய்யப்படுவதற்கு” சில நாட்களின் முன்னர் அவுஸ்திரேலிய வானொலியொன்றிற்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சீனா, ரஷ்யா போன்ற நாடுகளே காரணம் என்று இந்தியாவின் பங்கை மறைத்துக் கருத்துத் தெரிவிக்கிறார். தவிர, இந்தியாவுடன் அரசியல் தொடர்புகளைப் பேணிவருவதாகக் செவ்வியில் கூறிய கே.பி இந்திய அரசுடன் இணைந்தே தமிழ் மக்களின் நலன்களை உறுதிபடுத்தப் போவதாகக் குறிப்பிடுகிறார்.

இப்போது புலி ஆதரவுப் புலம்பெயர் குழு ஒன்று கே.பி ஊடான “இனப்படுகொலை” இலங்கை அரசுடனான சமரச்த்திற்காக இலங்கை சென்று திரும்பியுள்ளது.

கே.பியை கோதாபாய ராஜபக்ச 2006ம் ஆண்டே சந்தித்திருப்பதாக கோதாபாய கே.பியின் முன்னிலையில் தம்மிடம் கூறியதாக மருத்துவக் கலாநிதி அருட்குமார் தமிழ்நெட்டிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுகிறார்.

அருட்குமாரின் “மனச்சாட்சியுள்ள” கருத்துக்களின் அடிப்படையில் அவர் சொல்லவருவதெல்லாம் இது தான்:

1. கே.பி என்பவர் இலங்கை அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகிறார்.

2. இலங்கை அரசின் முதலாவது நோக்கம் புலிகளின் பணத்தை இலங்கைக்குக் கொண்டுவருவது.

3. புலம் பெயர் நாடுகளிலிருந்து போர்க்குற்றங்கள் குறித்த அழுத்தங்களத் தவிர்த்துக் கொள்ளல்.

4. தமிழ் நாட்டிற்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் முரண்பாடுகளை உருவாக்குதல்.

ஏற்கனவே புலியெதிர்ப்பு முகாமிலிருந்த புலம் பெயர் அரசியல் பிரமுகர்கள் பலரை இலங்கை அரசு இலகுவாகவே உள்வாங்கிக் கொண்டது. அவர்களில் பலர் திறந்த வெளி முகாம்களில் மக்கள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அந்த முகாம்கள் “சர்வதேச தரத்தில்” அமைந்திருப்பதாகக் கருத்து வெளியிட்டவர்கள்.

இவர்கள் இலங்கை அரசின் தொங்குதசைகளாக மாறி நாளாகிவிட்டது. இப்போது புலி ஆதரவாளர்களின் சுற்று.

அருட்குமாருடன் இந்தக் குழுவுவில் சென்ற என்ற முன்னை நாள் ரெலோ உறுப்பினரும் பின்னதாக புலி ஆதரவாளருமான சார்ள்ஸ் அன்டனிதாஸ் பி.பி.சி தமிழ்ச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் அருட்குமாருக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசுடன் இணைந்து கே.பி ஊடாக தமிழ் மக்களுக்குச் சேவை செய்வதென்பது இன்றைய கடமை என்ற கருத்துப்பட கூறுகிறார் சார்ள்ஸ் அன்டனிதாஸ்.

இந்தக் குழுவில் சென்ற ஏனையோர் புலிகளிடம் கற்றுக்கொண்ட இரகசியம் பேணும் முறைமையக் கையாள்கின்றனர்.

எது எவ்வாறாயினும் இலங்கை இந்திய அரசுகளால் திட்டமிடப்பட்ட சதிவலைக்குள் கே.பியும் அவரின் ஊடாக சாள்ஸ் போன்ற புலம் பெயர் புலிகளின் இன்னொரு பகுதியும் சிக்குண்டுள்ளனர். நாராயணனின் திட்டம் இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறது.

புலிகள் போராட்டம் என்ற பெயரில் வளர்த்தெடுத்த சிந்தனை முறை அபாயகரமானது. அதிகாரத்தோடு கைகோர்த்துக் கொண்டு காய் நகர்த்தும் தந்திரோபாயம் தான் அவர்களின் அடிப்படை.

இந்த வகையில் நெடுமாறன், வை.கோ என்று ஆரம்பித்து ஐரோப்பிய அரசியல் கட்சிகள் வரை இவர்களின் நண்பர்களாயினர். இறுதியில் இந்தச் சந்தர்ப்பவாதிகள் கைகழுவி விட்டதும், புலிகள் பலமிழந்து அழிந்து போயினர். அதே சிந்தனை முறையின் மறுபக்கம் தான் இன்று ஐம்பதாயிம் அப்பாவிகளை ஓலமிட ஒலமிடக் கொன்று குவித்த கோதாபயவுடன் கைகோர்த்துக்கொள்ள வைத்திருக்கிறது.

இன்று புலம் பெயர் புலிகளின் வலைப் பின்னல் இரண்டு பிரதான பிரிவுகளாப் பிளவுபடுகின்றது.. ஒன்று இந்திய இலங்கை அரச உளவு வலையத்துக்கு உட்பட்டது. மற்றையது ஐரோப்பிய உளவு நிறுவனங்களோடு தொடர்பானது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை ஒட்டி கனடாவிலிருந்து தேடகம் குழு விடுத்திருந்த அறிக்கை இங்கு குறித்துக்காட்டத்தக்கது. “இந்தியாவும், மேற்குலகும் தங்கள் மேலாதிக்கப் போக்கை நிலை நிறுத்துவதற்கு பிரயத்தனங்களை எடுத்த வண்ணமே உள்ளன.

மேற்கில் புலம்பெயர்ந்த தமிழர்களை தமதுநலன்களுக்காக பயன்படுத்துவதில் மேற்குலகம் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது. இந்தத் தேர்தலில் புலம்பெயர்ந்த சமூகத்தின் ஊடாக ஒரு பொது அரசியல் போக்கை இலங்கைத்தமிழர்கள் மத்தியில் உருவாக்குவதில் மேற்குலகு அக்கறை கொண்டுள்ளது.” என்று தேடகம் தனது அவதானிப்பை வெளியிட்டது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை மறுக்கப்ப்பட்டதற்கான காரணம் என இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் ஹகலிய ரம்புவக்கல தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகார வர்க்கமும், புலனாய்வு நிறுவனங்களையும் நம்பியிருக்கும் அரசியல் இறுதியாக இரத்தம் தோய்ந்த கோதபாயவின் காலடியில் புலிகளின் ஒரு பகுதியை மண்டியிட வைத்துள்ளது. இஸ்ரேல் பலஸ்தீனத்தில் குண்டுமழை பொழியும் வேளைகளிலெல்லாம் மேற்கில் போராடும் சக்திகளால் அந்த நாட்டு அரசுகளுக்குப் பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள் தான் அவற்றைத் தணித்துள்ளது.

புலிகளின் அதிகார வர்க்க அரசியல் போராடும் சக்திகளைக் கண்டுகொண்டதில்லை. இந்தியாவிலும் சரி, ஐரோப்பாவிலும் சரி அவர்களின் அரசியல் அவர்களின் அதிகாரவர்க்கக் கூட்டு என்பதுதே. அதுதான் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்துச் சிதைத்துச் சீரழித்துள்ளது.

மக்கள் பற்றுள்ள ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் தோற்றுப் போன, அதிகாரப் போட்டிக்குள் சிக்குண்ட அரசியல் வழிமுறைகளை நிராகரித்து, இங்குள்ள போராடும் முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் போராடங்களை முன்னெடுப்பதன் ஊடாகவே இலங்கையில் ஒரு சிறிய ஜனநாயக இடைவெளியையாவது ஏற்படுத்த முடியும். அந்த இடைவெளி இலங்கையில் எதிர்காலத்தில் உருவாகவல்ல மக்கள் போராட்டத்தை உறுதிபெறச் செய்யும்.

எங்கே யார் போராடுகிறார்கள்???? ... யாரிந்த முற்போக்கு இயக்கங்கள்????

... வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகரா, விமல் வீரவன்ச, ... இல்லை வெளிநாடுகளில் தட்டச்சுக்கு முன்னம் இருந்து மாக்ஸிசம், லெனினிஸம் தட்டுபவர்களா??

உருட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்! இது தான் அன்று நடந்ததது இன்றும் நடக்கிறது! ஒளிப்பு மறைப்பு! பிறகு விலாசமடிப்பு! பிறகு பட்டமளிப்பு (துரோகி ).

மற்றது மார்க்சிசம் லெனினிசம் கதைப்பவர்கள் மட்டுமா முற்போக்கானவர்கள்?

இங்குள்ள போராடும் முற்போக்கு இயக்கங்கள் நீங்கள் குறிப்பிடுபவர்கள் அல்ல! ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள். இவர்கள் எங்களது முன்னைய போராட்டத்தில் காணவில்லை என்று நீங்கள் அங்கலாய்க்கலாம் ஆனால் இவர்களை வரவிடாது தடுத்ததும் நாமே! நம்மை நாமே சுத்தமாக விமர்சனம் செய்யாது அடுத்தவனை குறை கூறுவதே தொழிலாக வைத்திருக்கிறோம்/.

எமது தொழில் முத்திரை குத்துவது! நுணிப்புல் மேய்ந்து விட்டு காட்டுக்கத்தல் கத்துவது! ஆற்றில் இறங்காமால் ஆழம் பார்க்க முடியாது. இறங்கினால் அதிலல் நீந்தவும் தெரியவேணும்! இந்த ஆற்றில் கேபீ ராம் டக்களஸ் என்று பல முதளைகள் விழுங்கவும் காத்திருக்கும்! ஆனால் ஆற்றில் இறங்கினால் தான் முடியும் என்பதை இந்த டாக்டரும் உணர்ந்திருக்கிறார்!

ஆற்றில் இறங்காமால் ஆழம் பார்க்க முடியாது. இறங்கினால் அதிலல் நீந்தவும் தெரியவேணும்! இந்த ஆற்றில் கேபீ ராம் டக்களஸ் என்று பல முதளைகள் விழுங்கவும் காத்திருக்கும்! ஆனால் ஆற்றில் இறங்கினால் தான் முடியும் என்பதை இந்த டாக்டரும் உணர்ந்திருக்கிறார்!

உங்களுக்கு சொல்லிப்போட்டு டாக்டர் இறங்கின மாதிரி தெரியுது?

  • கருத்துக்கள உறவுகள்

முழு பூசணிகாயை சோத்திலை புதைகுது பிரித்தானிய தமிழர் பேரவை. கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு கூட ....

இப்படி ஒவ்வொருத்தராய் போய் சந்திப்பினமாம், ஆனால் அதெல்லாம் அவையின்டை தனிபட்ட பயணமாம், :lol:

உருட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்! இது தான் அன்று நடந்ததது இன்றும் நடக்கிறது! ஒளிப்பு மறைப்பு! பிறகு விலாசமடிப்பு! பிறகு பட்டமளிப்பு (துரோகி ).

மற்றது மார்க்சிசம் லெனினிசம் கதைப்பவர்கள் மட்டுமா முற்போக்கானவர்கள்?

இங்குள்ள போராடும் முற்போக்கு இயக்கங்கள் நீங்கள் குறிப்பிடுபவர்கள் அல்ல! ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள். இவர்கள் எங்களது முன்னைய போராட்டத்தில் காணவில்லை என்று நீங்கள் அங்கலாய்க்கலாம் ஆனால் இவர்களை வரவிடாது தடுத்ததும் நாமே! நம்மை நாமே சுத்தமாக விமர்சனம் செய்யாது அடுத்தவனை குறை கூறுவதே தொழிலாக வைத்திருக்கிறோம்/.

எமது தொழில் முத்திரை குத்துவது! நுணிப்புல் மேய்ந்து விட்டு காட்டுக்கத்தல் கத்துவது! ஆற்றில் இறங்காமால் ஆழம் பார்க்க முடியாது. இறங்கினால் அதிலல் நீந்தவும் தெரியவேணும்! இந்த ஆற்றில் கேபீ ராம் டக்களஸ் என்று பல முதளைகள் விழுங்கவும் காத்திருக்கும்! ஆனால் ஆற்றில் இறங்கினால் தான் முடியும் என்பதை இந்த டாக்டரும் உணர்ந்திருக்கிறார்!

அண்ணோய் பாண்டு! ... நாலு தத்துவாத்த வசனங்களை போட்டவுடன் ஆடிப்போடுவம் என்று நினையாதையுங்கோ(நானும் அப்போ படிக்கிற காலத்தில், எனக்கு நாலு பேரவைக்காரர் கூட்டு, நாலு மாக்ஸ்/லெனினை கலந்த புத்தகங்கள் தருவார்கள். நானும் ஏதோ இன்னொரு ஸ்ராலினாக வேண்டுமென்ற கற்பனையில் அவற்றை பாடமாக்கிறது. ஒருநாள் அப்பர் அப்புத்தகங்களில் சிலவற்றை கண்டுட்டார், சொன்னார் ... வாசி இப்ப வாசி, உதுகளை 30க்கு கீழை வாசியாதவனும் பேயன், 30க்கு மேலை வாசிக்கிறவனும் பேயன்! ... இன்று அதை உணருகிறேன், ஆனால் நீங்கள் ...?)

உந்த வசனங்களை விட்டுட்டு ... யார் போராடும் முற்போக்கு சக்திகள்??? சொல்லுங்கோ, கேட்பம்! ... நீங்கள் பம்பல், கிம்பல் அடிக்கேலைத்தானே????? :lol:

அப்பு நீங்கள் படித்த புத்தககங்களை நீங்கள் குப்பை என்று கூறினாலும் இன்று இங்கு வந்து எழுதவைப்பதும் அதுதான்! சரி அது நிற்க!

நான் முன்பு செய்த தவறை மீள செய்ய விரும்பவில்லை! இயக்கதிற்கு ஆள் சேர்க்கும் வேலை செய்யவில்லை! அடக்கப்படும் மக்கள் மீது அக்கறையிருப்பின் அவர்களுக்காக உண்மையாக போராடும் சக்திகளை இனம் காண முடியும். முடியாவிட்டால் தேட வேண்டும்! இந்த தேடலுக்கு நாள் குறிக்க முடியாது. அனால் தேடல் நிச்சயம் விணாகாது!

மீள இந்த புத்தகங்களுக்கு வருகிறேன். நான் படித்த ஒரு வாசகம் இன்னமும் உறுத்துகிறது! தேசிய வெறி கட்டுப்படுத்தப்படாவிட்டால் அது பாசிசமாக மாறும் என்பது! அது எவ்வளவு உண்மை என்பதை சிங்கள தேசியமும் தமிழ் தேசியமும் நன்கே உணர்த்தியுள்ளது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.