Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்கள் அறவழி போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்! அதனையே வீரவன்ஸவின் போராட்டம் வலியுறுத்துகின்றது.

Featured Replies

தமிழ் மக்கள் அறவழி போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்! அதனையே வீரவன்ஸவின் போராட்டம் வலியுறுத்துகின்றது.

தேசிய அரசியல் உரிமைகளையும், உயிர்வாழும் உரிமையையும் வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியதை, ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் செய்வது விந்தையானது.

உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்கள் அறவழி சாத்வீகப் போராட்டங்களை மீண்டும் ஆரம்பித்திட வேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்ஸவின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலியுறுத்துகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஐ.நா.வளாகத்திற்கு முன்னால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது:-

தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. யுத்தத்திற்கு முந்தைய காலகட்டத்திலும், யுத்தத்தின் போதும் தமிழ் மக்களின் உயிர்வாழும் உரிமைகள் பறிக்கப்பட்டன.

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னர் இடைக்கிடையே நடைபெற்ற சாத்வீகப் போராட்டங்களை தற்போது தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்ஸவின் உண்ணாவிரத போராட்டம் எடுத்துக் கூறுவதாக கருதுகின்றேன்.

தற்போது யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது. ஆனால் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணங்கள் முடிவிற்கு கொண்டு வரப்படவில்லை. அரசாங்கம் தொடர்ச்சியாக அரசியல் தீர்வை ஒத்திவைத்து கொண்டே வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் உண்மையில் தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் தான் உண்ணாவிரதம் உட்பட அனைத்து சாத்வீக போராட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும். இதன் மூலம் உலகிற்கும், அரசாங்கத்திற்கும் தமிழர்களின் போராட்ட நியாயங்களை எடுத்துக்கூற வேண்டும்.

இது நடைபெற்றிருக்குமானால் அதில் நியாயம் இருந்திருக்கும். ஆனால் அதற்கு பதிலாக ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சரும், ஆளுங் கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவருமான விமல் வீரவன்ஸ அனைத்து உலக நாடுகளின் அமைப்பான ஐ.நா.சபையின் கொழும்பு வளாகத்திற்கு முன்னால் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

வீரவன்ஸவின் உண்ணாவிரதத்தின் நோக்கத்தை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் தனது நோக்கத்திற்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் என்பது அப்பட்டமாக தெரிகின்றது.

இது தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்திட வேண்டும். எங்களது உரிமைகளை ஐ.நா.சபையும், சர்வதேச சமூகமும் கொண்டு வந்து தரும் என காத்திருக்காமல் முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டத்தின் முன் நிலவிய அறவழி போராட்ட காலகட்டத்திற்கு தமிழ் மக்கள் திரும்பிச் செல்ல வேண்டும்.

http://www.pathivu.com

Edited by aathirai

யாருக்கோ ஞாபகமறதி....

மோட்டு புள்ளையள்.... :rolleyes:

புலத்தில் மே18 இனுடன் கிட்டத்தட்ட எல்லா போராட்டங்களையும் மூட்டை கட்டி வைத்து விட்டோம்(...விட்டார்கள் என்று எழுதினால் ... பின்பு இங்கு இருக்க முடியாது)!! ஏன், ஆயுதமுனையிலா அல்லது ஏதாவது வழியில் இப்போராட்டங்களை புலம்பெயர் நாட்டரசாங்கங்கள் நிறுத்தியதா? ... இல்லை!

ஆனால் அங்கோ ... துப்பாக்கி சூழ, வாய்கள் கட்டப்பட்டு, இரும்புத்திரை போடப்பட்டிருக்கும் இருக்கும் மக்களை, எவ்வாறு அறவழி போராட்டங்களை தொடங்குங்கள் என்று ... யாரும் கேட்கலாமா? கேட்கக்கூடிய நிலையிலா அம்மக்கள் இருக்கிறார்கள்?

ஏறக்குறைய ஒருவருடம் தாண்டி விட்டது! இன்றுவரை எம்/அம்மக்களுக்கு எப்படி சிங்களத்தை தாண்டி உதவலாம் என்று எம்மை வழி நடத்திய யாராவது சிந்தித்தார்களா??? ... எம்மவர்களின் அரசியலற்ற.சிந்தனையற்ற செயற்பாடுகள் ... அம்மக்களை எம்மிடமிருந்து நிரந்தரமாக பிரிக்க, சிங்களத்தின் நடவடிக்கைகளுக்கு துணை புரிகின்றது! ... தமிழ்த்தேசியத்தின் பெயரின் சிங்களத்தின் சிந்தனைக்கு பாதை ஏற்படுத்திக் கொடுக்கும் .... எம் சாபக்கேடு!!! :rolleyes:

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதினிதிகளான த.தே.கூ. மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

உதாரணத்துக்கு சம்பந்தன் ஐயாயும் ஐ நா அலுவலகத்திற்கு முன்பாக தமிழர் உரிமை கேட்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கலாம்?

  • கருத்துக்கள உறவுகள்

50களில் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் அடிவாங்கிய வரலாறு தெரியாதா?. சிங்களவன் என்றால் உண்ணாவிரதம் இருக்கலாம்.

50களில் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்து தமிழர்கள் அடிவாங்கிய வரலாறு தெரியாதா?. சிங்களவன் என்றால் உண்ணாவிரதம் இருக்கலாம்.

உண்ணாவிரம் இருந்தால் தமிழர் மீது அடி விழுந்தால் ....

ஐம்மதுகளுடன் இன்றைய நிலைமையை ஒப்பிட முடியாது என்பது என் தாழ்மையான வாதம்.

இன்று உலகம் எம்மை எமது நிலைமையை நன்றாகவே அறிந்துள்ளது. மேலாக புலம் பெயர் தமிழர் உள்ளனர்.

When Sri Lankan Singalese are protesting for their “RIGHT TO KILL TAMILS”, Why cannot Tamils just protest for ”RIGHT TO GET JUSTICE”?

Please join with me to bring our effort on British government to officially back the UN war crimes inquiry. I need every one of you to join this by a simple letter to your MPs. If many hands join only we can bring this up and please do not repeat the historical mistakes we did in the past. Timely action is needed and united effort is appreciated.

Please call for a debate on this and I am sure we can ask Prime Minister David Cameron to release a official condemn against Sri Lankan minister’s threat to UN officers and back the UN war crime inquiry. Also I urge Kingston living Tamils to push Ed Davey MP and Simon Hughesto bring the effort from Lib Dems on this as well.

http://www.uktamilnews.com/index.php/2010/07/08/when-sri-lankan-singalese-are-protesting-for-their-right-to-kill-tamils-why-cannot-tamils-just-protest-for-right-to-get-justice/#more-20861

சிங்களவர் உண்ணாவிரதமிருந்தால் அது அகிம்சைப் போராட்டம். அதுவே தமிழர்களால் நடத்தப்பட்டால் அமைதிக்குப் பங்கம் வந்து ஆயுதப் போராட்டமாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தினைத் தொடங்கினாலும் அது புலிகளின் செயற்பாடாக மாறிவிடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.