Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம்-80 மீனவர்கள் படுகாயம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் இலங்கை கடற்படை வெறித்தனம்-80 மீனவர்கள் படுகாயம்!

வெள்ளிக்கிழமை, ஜூலை 16, 2010, 11:14[iST]

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களுக்கு விடிவுகாலமே இல்லைஎன்றாகி விட்டது. மீண்டும் மீண்டும் அவர்களை தாக்கி சீரழித்துக் கொண்டிருக்கிறது இலங்கை கடற்படை. நேற்றும் 80 மீனவர்களை தாக்கி காயப்படுத்தி விரட்டியிருக்கிறது இலங்கை கடற்படை.

இலங்கைக் கடற்படையினர் கையில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம். குறிப்பாக ராமேஸ்வரம், நாகை மாவட்ட மீனவர்களின் நிலையும், வாழ்க்கையும் பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. கடலுக்குள்ளேயே போக முடியாத நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய அரசு கவலையேப் படாமல் உள்ளது. போராட்டங்கள் எத்தனை நடத்தினாலும் தாக்குதல்கள் சற்றும் குறைந்தபாடில்லை. தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர் இந்த அப்பாவி மீனவர்கள்.

நாகை மாவட்ட மீனவர் செல்லப்பன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து திமுக மீனவர் அணி இலங்கை துணைத் தூதரகம் முன்பு போராட்டமெல்லாம் நடத்தியது. முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ப.சிதம்பரத்தை விட்டு பதில் கொடுத்தது மத்திய அரசு.

ஆனால் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. இதுவரை தாக்குதல்கள் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 5 படகுகளில் சுமார் 30 சிங்கள கடற் படை வெறியர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபடி வந்தனர்.

இதனை பார்த்ததும் தமிழக மீனவர்கள் அவசர அவசரமாக கரைக்கு திரும்பும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் சிங்கள கடற்படையினர் 20 படகுகளை சுற்றி வளைத்தனர். பின்னர் ஒவ்வொரு படகிலும் அவர்கள் ஏறி மீனவர்களை அடித்து உதைத்து தாக்கினார்கள். மொத்தம் 80 மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சில படகுகளில் மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர். பின்னர் இந்த பகுதியில் மீன்பிடிக் வரக்கூடாது என்று எச்சரித்துவிட்டு சென்று விட்டனர்.

மீனவர்கள் படும் இந்த பாட்டுக்கு எப்போது விமோச்சனம் என்று தெரியவில்லை.

thatstamil

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி மீண்டும் கடிதம் எழுதப் போகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது சோனியா - ராஜபக்ச - கருணாநிதி மூன்று தரப்பும் பேசி செய்யுற காரியமாகவே தெரியுது.

இவர்கள் 3 பேருக்கும் தமிழக மீனவர்களை துன்புறுத்துவதால் ஆதாயம் இருக்கிறது. அதனால் தான் இந்தப் பிரச்சனையை கண்டும் காணாமலும் வளர விட்டு வருகின்றனர்.

சோனியாவிற்கு இதனால் ராகபக்சவுடனான நெருக்கத்தை அதிகரிக்க சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இதனை சாட்டு வைத்தே சிறீலங்கா - இந்திய கடற்படை ஒத்துழைப்பை அதிகரிக்கக் கோருவார்.

ராஜபக்சவிற்கு தனக்கும் சக்தி இருக்கென்று காட்ட உதவுகிறது. இந்தியா கடல் கண்காணிப்பை அதிகரிக்க தூண்டுவார்.

கருணாநிதிக்கு குடும்ப அரசியலில் பேரம் பேசவும் சீமான் போன்ற தமிழுணர்வாளர்களை அடக்கவும் வழி ஏற்படுகிறது.

இவர்கள் மூவரின் குள்ள நரித்தனத்துக்கும் பலியாவது.. ஈழத்திலும் சரி.. தமிழகத்திலும் சரி தமிழர்களே. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்துக்குப் பாதுகாப்பு ஒரே ஒரு வழியில்தான் கிடைத்திருக்கும். ஆனால் அதை அங்குள்ளவர்களும் பாதுகாக்கத் தவறியதனால் இன்று தமிழக மீனவர்களுக்கு அவதி. திருப்பூரில் ஆடைத்தொழிலிலும் சிங்கள அதிகாரிகளால் அவதி. இது தமிழகம் முழுவதும் பரவ அதிக நாட்கள் எடுக்கப்போவதில்லை.

நான் முன்பு தமிழகத்தில் உள்ள தெரிந்தவர்களிடம் பேசக்கூடிய சந்தர்ப்பங்களில் எல்லாம் ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி என்று என் வாயை அடைத்தார்கள். இப்போது ராஜீவும் இல்லை. புலிகளும் இல்லை. தமிழக மீனவர்கள் அடிவாங்குவதுமட்டும் இன்னும் நிற்கவில்லை.

என்னிடம் ஒரு கேள்வி இருக்கு. ஈழத்தில் தமிழர்கள் அடிவாங்கும்போதெல்லாம் கோவையில் காணி தருகிறோம், மதுரையில் காணி தருகிறோம் வாருங்கள் என்றார்கள். நாகை மீனவர்களுக்கு மட்டும் காணி வழங்க மாட்டார்களா? அப்படி வழங்கினால் பிரச்சினை தீர்ந்துவிடுமே?? :lol:

பிரச்சினைகளின் அடிப்படைத்தன்மைகளை தமிழகம் விளங்கிக்கொள்ள மறுப்பதாலேயே இத்தனை அவதிகள். ஈழத்தமிழரை தமிழகத்தவர்கள் வாருங்கள் என்று அழைப்பது பாசமாக இருந்தாலும் அது ஈழத்தில் தமிழர்களுக்கு வாழ அடிப்படை உரிமை இல்லை என்று கூறுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். நாகை மீனவர்களுக்கு கோவையில் நிலம் வழங்க ஆலோசிப்பது எவ்வளவு அபத்தமோ அதுபோன்றதே ஈழத்தமிழரை அழைப்பதும்.

நாகை மீனவர்களுக்கு இன்று மொத்தத் தமிழகமும் திரண்டு ஒரு வழிவகை காணாமல் விட்டால் தமிழகத்தவர்கள் எல்லோரும் ஒருகாலத்தில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் குடித்தனம் நடத்தும் நிலை வந்தாலும் வரலாம்..! :lol::blink:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மக்கள் தம்மை இந்திய மத்திய அரசு பாரபட்சமாக நடாத்துகிறது என்பதற்கு இதைவிட வேறொரு சான்றும் தேவை இல்லை.

கருணாநிதி மத்திய அரசின் கைப்பொம்மையாக இருக்கிறார் என்பதும் சொல்லி தெரிய தேவையில்லை.

2020ல் உலக வல்லரசாக(??)ஆக வரபோகும் நாட்டு மக்களை சில்லறை நாட்டிடம் அடிவாங்குவதும், கொல்லப்படுவதும் உலகில் எப்பாகத்தில் நடைபெறாது. அப்படி நடைபெற்றாலும் பதில் உடனடியாக கிடைத்து விடும்.500க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும் எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசோ மாநில அரசோ எடுக்கவில்லை.

73% எழுத படிக்க தெரிந்த தமிழ் நாட்டு மக்கள் சிந்திக்க தெரியாதவர்கள் என்று சொல்ல முடியாது.அடுத்து என்ன செய்ய போகிறார்கள்?? மக்கள் மாறாத வரை மத்திய, மாநில அரசுகள் தமது கொள்கையில் இருந்து மாறவே மாட்டார்கள்.

போகிற போக்கில் 2020 இல் இந்தியர் சொறி நாய்களை விட கேவலமானவர்களாக மாறுவதுடன், இந்திய மோசமான பயங்கரவாதிகளாக அனைவராலும் அடையாளம் காணப்பட்டுவிடுவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.