Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ‐ இன்னர் சிற்றி பிரஸ்

Featured Replies

இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ‐ இன்னர் சிற்றி பிரஸ்

16 July 10 12:26 pm (BST)

இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் வியாழனன்று தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றுமு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ஜசிக்கா நியூவேர்த் நியமிக்கப்பட்டுள்ளதையும் அவர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். ஜசிக்கா நியூவேர்த் ஐநாவின் மனித உரிமைப் பணியகத்தின் நீண்டநாள் உறுப்பினர் என்றும் ஈகுவாலிற்றி நவ்வின் ஸ்தாபக உறுப்பினர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். அத்தோடு அவர் நவசீதம் பிள்ளையின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்தின் சில வட்டாரத்தினர் இந்நியமனம் பக்கச்சார்பானதெனக்கூறி இதனை எதிர்த்துள்ளனர்.

இதேவேளை ஐநா நியமித்த நிபுணர் குழுவை கலைப்பதற்கு ஆதரவு கோரி அணிசேரா நாடுகளின் இயக்கத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுப்பி வைத்த கடிதம் குறித்து இன்னர் சிற்றி பிரஸுக்கு கருத்துத் தெரிவித்த அதன் பிரதிநிதிகள் நாங்கள் போதியளவு நேரம் எடுத்து அதனைப் பரிசீலிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.

அணிசேரா நாடுகள்ன் தற்போதைய எகிப்திய தலைமைக்குப் பின்னர் அடுத்த ஈரானே தலைமை தாங்க உள்ளதாகத் தெரிய வருவதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. முன்னர் பிரேரிக்கப்பட்டிருந்த கட்டார் தற்போது ஈரானைப் பிரேரித்துள்ளது எனவும் அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை என்றும் அணிசேரா நாடுகள் இயக்கத்தின் உள்ளே உள்ள ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கு பிரதம அதிகாரி நியமனம்

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவிற்கு பிரதம அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் இந்த நிபுணர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

டாரூஸ்மான் தலைமையிலான மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் பணிகளை இலகுபடுத்தும் நோக்கில் பிரதம அதிகாரியாக முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான ஜெகிக்கா நியூவிர்த் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிபுணர் உழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதம அதிகாரி ஒருவரும், ஏழு உதவி உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெசிக்கா நீண்ட காலமாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நிபுணர்கள் குழு நியமனத்தை எதிர்க்குமாறு இலங்கை விடுத்த வேண்டுகோள் தொடர்பில் அணிசேரா நாடுகள் இதுவரையில் உரிய பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்களை குழுவினை கலைப்பதற்கு அழுத்தம் கொடுக்குமாறு இலங்கை அரசாங்கம், அணி சேரா நாடுகளிடம் கடிதம் ஊடாகக் கோரியுள்ளது.

இலங்கையின் கடிதம் தொடர்பில் நிதானமாக ஆராயப்படும் என அணிசேரா நாடுகளின் தற்போதைய தலைமைத்துவத்தை வகிக்கும் எகிப்து அறிவித்துள்ளது.

குறித்த கடிதம் தொடர்பில் அணி சேரா நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=27296&cat=1

இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது ‐ இன்னர் சிற்றி பிரஸ்

16 July 10 12:26 pm (BST)

இலங்கை மிகத் தொலைவிற்குப் போய்விட்டது. அது எல்லாவித கட்டுப்பாடுகளுக்கும் அப்பால் சென்று விட்டது என்று ஐநா பாதுகாப்பு கவுன்ஸிலின் நிரந்தர உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகள் வியாழனன்று தெரிவித்துள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

....

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=27296&cat=1

இப்பதான் விளங்கிக் கொண்டுள்ளார்கள் போல உள்ளது... அது சரி, இப்பவாச்சும் விளங்க்கிக் கொண்டார்களே ....

இதில எதைச் சொல்ல?

இப்படிக் கருத்துச் சொல்வதற்கு இவர்கள் வெட்கப்பட வேண்டும். விரைவில் சிறிலங்காவின் கட்டுப்பாட்டில் ஐ நா வாந்துவிடும் போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
:lol: ஐ. நாவை தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் ரஷ்ஷியா, சீனா , இந்தியா போன்ற நாடுகளை இலங்கை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறதே??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.