Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்தப் போராடியமைக்காக மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு சிறப்பு விருது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்தப் போராடியமைக்காக மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு சிறப்பு விருது!

திகதி: 24.07.2010 // தமிழீழம்

கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்தப் போராடியமைக்காக பத்திரிகையாளருக்கான சிறப்பு விருதை "உதயன்', "சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரிய ரும், மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர்களுள் ஒருவருமான என். வித்தியாதரன் பெறுகின்றார். இலங்கைப் பத்திரிகை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கைப் பத் திரிகை சம்மேளனம் ஆகியவை இணைந்து நடத்தும் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையியல் விருது வழங்கும் நிகழ்விலேயே இந்த விருது வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டில் இலங்கையில் பத்திரிகைச் சுதந்திரத்தை நிலை நிறுத்துவதற்காக பணியாற்றிய பத்திரிகையாளருக்கான சிறப்பு விருதை "உதயன்', "சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் முன்னாள் ஆசிரியரும், மூத்த தமிழ்ப் பத்திரிகையாளர்களுள் ஒருவருமான என். வித்தியாதரன் பெறுகின்றார் என விருதுக்கான தெரிவுக்குழு நேற்று உத்தியோக பூர்வமாக அறிவித்திருக்கின்றது.

அதேவேளை, கடந்த ஆண்டு முற்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட "த சண்டே லீடர்' பத்திரிகையின் ஆசிரியர் லஸந்த விக்கிரமதுங்க பத்திரிகைச் சுதந்திரத்தை பேணியமைக்கான விருது பெறத் தெரிவாகியுள்ளார். அத்துடன், கடந்த ஆண்டு கடத்தப்பட்டு பின்னர் அவசரகாலச் சட்ட விதிகள், பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சுமார் இரண்டு மாத காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழப் பத்திரிகையாளர் வித்தியாதரன், தனது மனைவியுடன் பயணிக்கையில் தாக்குதலுக்கு இலக்கான பத்திரிகையாளர் உபாலி தென்னக்கோன், கடுமையாகத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர் போத்தல ஐயந்த, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருபது வருடங்கள் சிறை விதிக்கப்பட்டு, மேன்முறையீட்டின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் ஆகியோர் பத்திரிகை சுதந்திரத்தைப் பேணுவதற்கு போராடியமைக்காக விசேட விருதுக்குத் தெரிவாகியுள்ளனர். இவர்களுள் தொடர்ந்தும் நாட்டைவிட்டு வெளியேறாமல் களத்தில் பணியாற்றுபவர் என்.வித்தியாதரன் என்பது குறிப்பிடதக்கது.

அங்கு நின்றுகொண்டிருந்த ஒருவர் இவரை மறித்துத் தாக்கியபோது வெள்ளை வானில் வந்த ஒருவரும் சேர்ந்து கொண்டு தாக்குதல் நடத்தினார் என்று கூறப்படுகிறது. பின்னர் பொதுமக்கள் அவ்விடத்தில் கூடியபோது அவர்கள் ஊடகவியலாளரது கைப்பையை பறித்துக்கொண்டு வெள்ளை வானில் தப்பிச் சென்றனர் என்று தெரிவிக் கப்படுகிறது. இதையடுத்து ஊடகவியலாளர் மன் னார் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறையிட்டு பின்னர் மன்னார் பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இராணு வத்தின் உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றும் உள்ளது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்“.வினோநோகராதலிங்கம் இந்த சம்பவத்தைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார்.

பத்திரிகைச் சுதந்திரத்தைப் பேணிய துணிச்சலான பத்திரிகைக்கான விருது கடந்த ஆண்டு "உதயன்' நாளிதழுக்கு வழங்கப்பட்டபோது, அதன் ஆசிரியர் என்ற முறையில் வித்தியாதரனே அந்த விருதைப் பெற்றுகொண்டார். "உதயன்',"சுடர்ஒளி' ஆகிய பத்திரிகைகளின் ஸ்தாபக கால ஆசிரியர் பீட நிர்வாகியான வித்தியாதரன், அப்பத்திரிகைகள் மிகுந்த நெருக்கடிகளை எதிர் கொண்ட வேளையில், சுமார் இருபத்தைந்து ஆண்டுகள் அவற்றை எதிர்கொண்டு, அப்பத்திரிகைகள் நின்று நிலைத்து நீடித்து வெற்றியுடன் வெளிவருவதற்கு பின்னணியில் செயற்பட்டவர். கடந்த ஏப்ரல் மாதம் மேற்படி நிறுவனங்களின் பணியில் இருந்து தமது சுயவிருப்பின் பேரில் விலகிக் கொண்ட வித்தியாதரன் தற்போது சுயாதீனமாக இயங்கி வருகிறார்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்திலும், பின்னரும் இலங்கை அரசுத் தரப்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்த அனைத்து அமைதிப் பேச்சுக்களின் போதும் பிரசன்னமாகி செய்தியாளராக கடமையாற்றியவர் இவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், இலங்கையின் ஐனாதிபதிகளான ஆர்.பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஐபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைத் தனித்தனியாகப் பல தடவைகள் சந்தித்து பேட்டி கண்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விருது வழங்கும் விழா எதிர்வரும் செவ்வாய்கிழமை 27ஆம் திகதி கல்கிசை மவுண்லவேனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

சங்கதி

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரன் அவர்கள் பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்தப் போராடியமைக்காக சிறப்பு விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி! அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்!

மக்களைக் கனவுலகில் வைத்திருக்கும் பத்திரிகையாளர்கள் நடுவிலே களத்திலேயே இருந்துகொண்டு தற்போதைய களத்தின் உண்மையான நிலையை புலம்பெயர் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக வித்தியாதரன் அவர்கள் இருக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

.

Congratulations_navy_gold_glitter.gif

பல உயிராபத்துக்கு மத்தியிலும் துணிந்து பல செய்திகளை நடுவுநிலை தவறால் வெளிக்கொண்டு வந்த வித்தியாதரனுக்கு இந்த விருது கிடைப்பது பொருத்தமானதே. மூத்த பத்திரிகையாளர் வித்தியாதரனுக்கு நல் வாழ்த்துக்கள்.

.

... யுத்த நிறுத்தத்துக்கு முற்பட்ட காலங்களில் சிங்கள்:அ இராணுவ அட்டூளியங்கள், ஒட்டு/ஒட்டில்லாத குழுக்களின் கொலைக்கலாச்சாரங்களை துணிவுடன் பத்திரிகைகளில் கொண்டு வந்த வித்தியாதரன் பாராட்டுக்குரியவர்.

ஆதேவேளையில் அண்மையில், ஒரு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் ... போதை ஏற்றபட்டு கனவுலகில் சச்சாரித்துக் கொண்டிருந்த ... எமக்கும் ஒரு சாட்டை அடி கொடுத்திருந்தார். எம் போதை தெளியும் வரை இது போன்ற இவ்வூடகவியலாளரின் செய்ற்பாடுகள் தொடர வேண்டும்.

அதேவேளை ஏன் இவ்வளவு காலம் சென்றது இக்கருத்தை சொல்ல? இக்கருத்துக்கள் யுத்தநிறுத்தம் ஏற்பட்ட போதே, சொல்லப்பட்டிருக்க வேண்டும்! ஏன் அப்போது சொல்லவில்லை? அல்லது சொல்ல முடியவில்லையா? ... அல்லது சரியோ/பிழையோ .. தமிழ்த்தேசியத்தின் பெயரில் ... கைகள், வாய்களை கட்டியபடி பலர் இருந்ததுபோல் இருந்து விட்டாரா???????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.