Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாஸ் பலிக்கடாவா.. பகடைக்காயா..? - நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன..?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணாஸ் பலிக்கடாவா.. பகடைக்காயா..? - நடிகர் சங்கத்தில் நடந்தது என்ன..?

தமிழில் பாப்பிசைப்பாடகராகவும் இசைக்குழு இயக்குனராகவும் இருந்த கருணாஸ், ' நந்தா 'திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பாலாவினால் ஒரு நகைச்சுவை நடிகனாக தமிழ்சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர். அறிமுகமான காலந் தொட்டே மிக நிதானமான நடிப்புடனும், நேர்மையான நடவடிக்கைகளுடனும் காணப்பட்ட இவர், காமெடியன் என்ற நிலையில் இருந்து கதாநாயகனாகவும் திரைஉலகில் உயர்வு பெற்றார். இந்த வாரத்தில், தமிழக முதல்வர் கருணாநிதி, முன்னாள் விடுதலைப்புலிகள் தளபதியும், இன்னாள் அமைச்சருமான கருணா, ஆகியோரது பெயர்கள் போன்று, திரைஉலக கருணாஸின் பெயரும் அரசியற் தளத்தில் அடிபடும் பெயராக மாறியுள்ளது.

அமைதியான இந்தக் காமெடியன் அரசியல் கதாநாயகன் ஆனாது எப்படி என்று ஆச்சரியப்பட்ட போது, 4தமிழ் மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போதுதான் திரைமறைவில் ஒரு அரசியல் சதுரங்கமே ஆடப்படுவது போன்ற தகவல்கள் தெரியவந்தன. எமக்குத் தெரிய வந்தவற்றைத் தொகுத்திருக்கின்றோம். தொடருங்கள்...

இராமேஸ்வரம் மீனவர் இரக்கமற்ற முறையில் இலங்கை ராணுவத்தால் அடித்து கொல்லப்பட்ட துயர நிகழ்வில் வெகுண்ட நாம் தமிழர் இயக்கத்தினர், “ இலங்கையில் செய்யப்படுவது மட்டுமல்ல, தமிழக மீனவர்களைக் கொல்வதும் தமிழினப்படுகொலையே” என்று சீமான் தலைமையில் போராடினர். இலங்கை தமிழின அழிப்புக்கு எதிராக தமிழகத்தில் உருவான ஒரே கட்சியாக இருக்கும் நாம் தமிழர் இயக்கம், ஒரு சிறு போராட்டத்தை கையிலெடுத்தாலும் அதை, திட்டமிட்டு, சரியாக, முழுவீச்சுடன் சீமான் தலைமையில் காலம் தாழ்த்தாமல் நடத்தி வருகிறது.

ஈழ தமிழின அழிப்பை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாத தமிழக முதல்வர் கருணாநிதியை மிக துல்லியமாக எதிர்த்துவரும் இருவரில் ஒருவராக (மற்றொருவர் கொளத்தூர் மணி) சீமான் இருப்பதாலும், (சீமானைக் கலைஞரின் அடிப்பொடி என்பாரும் தமிழகத்தில் உண்டு) உணர்வு ரீதியாக தமிழர்களை குறிப்பாக 15 முதல் 45 வரையுள்ள இளைஞர்களை சீமான் ஈர்த்து வருவதாலும், சீமானின் செயல் திட்டங்கள் தூய்மையான இனப்பாதுக்காப்பை (ஏனைய திராவிட இனங்களை முற்றாக மறுத்தலித்து) முன்நகர்த்துவதாகவும் இருப்பதை தனது உளவுத்துறை மூலம் திமுக தலைமை அறிந்துகொண்ட பின்னர், சீமானை வேரறறுக்க முடிவு செய்ததாக பவர் சென்டர் வட்டாரத்தின் மூளைகளுக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமானை பல்வேறு விதங்களில் தனிமைப்படுத்த திட்டமிட்ட கலைஞர் கருணாநிதி, கைதுசெய்து சிறையிலடைத்தாலும், தேசிய பாதுக்காப்பு சட்டத்தின் கீழ் நீண்ட நாட்கள் சீமானை முடக்க முடியாது என்பதை உணர்ந்ததாலும், வரும் சட்டசபைத் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறாக 'நாம் தமிழர்' அமைந்துவிடலாம் என எண்ணுவதாலும், சாதி எனும் அஸ்திரத்தால் சீமானை பலமிழக்கச் செய்வது என்ற முடிவை திமுக தலைமை எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த முடிவைச் செயல்படுத்தக் கூடியவர்களாக, நடிகர்கள் சரத்குமார், சூர்யா, கருனாஸ், இயக்குனர் பாரதிராஜா ஆகிய நால்வரையும் தெரிவு செய்து, அவர்கள் மூலம் இதை செயல்படுத்துவது என்று முடிவு செய்திருப்பதாகவும், அறியப்படுகிறது.

இந்த நால்வரில் முதலில் எய்யப்பட்ட அம்புகள்தான் சரத்குமர், சூரியா, கருனாஸ் ஆகிய மூவர் என உள்ளகத் தகவல்கள் கிசுகிசுக்கின்றன. சீமானை பலமிழக்கச்செய்ய கருணாநிதி ஜாதியை கையாழ்வது எப்படி என்ற கேள்வியை நாம் முன் வைத்தபோது “ சீமான் ஓடுக்கப்பட்ட ஒரு தமிழ்சாதியில் பிறந்தாலும், அவர் சாதியைத் துறந்தவர். ஆனாலும் ஒடுக்கப்பட்ட பிறபடுத்தப்பட்ட சாதி இளைஞர்களை பார்க்கும்போதெல்லாம், “ தம்பிகளா… நாம சாதியக்கூட இழந்துடலாம். ஆனா இனத்தையும் மொழியையும் இழந்துட்டம்ன்னா யூதர்கள் நிலமை நமக்கும் வந்துடும். சாதியைச்சொல்லி நம்மை யார் பிரிக்கனும்ன்னு நினைச்சாலும் அதுக்கு இடம் கொடுக்காதீங்க. நம்ம எதிரிங்க கடைசியா அந்த அஸ்திரத்ததான் எடுப்பானுங்க. இதுல கருணாநிதி எக்ஸ்பெர்ட்! கவனம். நாம காசு சம்பாதிக்க அரசியலுக்கு வரல்ல. இனம்தான் முக்கியம்.” என்று சொல்லிக்கொண்டே இருப்பார் சீமான். சீமான் என்ன நினைத்தாரோ அதை கருணாநிதி இப்போது கையிலெடுத்திருகிறார்” என்கிறார்கள் சீமனோடு உண்டு, உறங்கி போராடும் அவரது சகாக்கள்.

ஒரு பிற்படுத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த சரத்குமார், தனது சாதி மக்களையாவது திரட்டி விட வேண்டும். அதை வைத்து தனது அரசியல் தொழிலை நடத்த வேண்டும் என்றுதான் திமுகவில் இருந்து வெளியேறி கட்சி ஆரம்பித்தார். ஆனால் அவரது ஜாதியைச் சேர்ந்த தமிழர்கள், தமிழக மக்கள் தொகையில் பெரும்பாண்மையாக இருந்தும் இரண்டு திராவிடக் கட்சிகள், காங்கிரஸ், பிஜேபி, ஜாதி மகாஜன சங்கம் என்று பிரிந்து கிடப்பதால் சரத்குமாரை தலமையாக ஏற்க மறுத்து விட்டார்கள். இதற்கு காரணம் தனிப்பட்ட வாழ்கையிலும் சரத்குமார் முன்மாதிரியாக இல்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆனால் சரத்குமார் சார்ந்த அதே தமிழ்சாதிதான் சீமானும். ஆனால் சரத்குமாருக்கு சேராத கூட்டம்,சீமானுக்கு உணர்வு ரீதியாகத் திரண்டது

“ உன்னோட கேஸ்ட் மாஸ் முழுக்க சீமான் இழுத்துருவான்யா. சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடு. மீதியை நான் பார்த்துகிறேன்” என்று ஸ்ட்ராங்கீயை திமுக தலைமை கொடுத்ததன் பின்னனியிலேயே, ஒட்டு மொத்த தமிழர்களின் உணர்வை பிரதிபலித்த நடிகர் சங்க செயலாளர் ராதாரவிக்கு ( மைத்துனரும் கூட) நேர் எதிரான நிலைபாட்டை சரத்குமார் எடுத்தார் என்கிறார்கள் திமுக மேலிட வட்டாரத்தில். பிறந்தநாள் வாழ்த்துப் பெற காலையில் முதல்வரைச் சந்தித்த சரத்குமாருக்கு, இப்படிச் சாவி கொடுக்கபட்டதினாலேயே மாலையில் அசினுக்காக சரத்குமார் உருகியதும், நேற்று நடந்த நடிகர் சங்க பொதுக்குழுவில் சத்தியராஜ் ராதாரவி, உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கொதித்துப் பேசியும் சரத்குமார் கருனாநிதியின் ஊதுகுழலாக இருந்ததும் நடந்தது என்கிறார்கள்.

அடுத்து கருணாஸைப் பிடித்தார் கருணாநிதி என்கிறார்கள். தான் சார்ந்த தமிழ்சாதி மக்களை ஒரு கட்சி ஆரம்பித்து திரட்ட முடிவு செய்து அதற்காக பூர்வாங்கமாக செயல்பட்டு வந்த கருணாஸை அழைத்து “உன்னோட மாவட்டத்தில உன் சாதிக்கார பயலுகதான் அதிகமா சீமான் கட்சியில சேர்ந்திருக்கானுங்க. உளவுத்துறை ரிப்போர்ட் பாரு! நீ இலங்கைக்கு போ ல . உன்னை அவன் எதிர்த்தா, அவன் நிலமை கமெடியாயிடும். உன்னோட படங்களை கலாநிதி, இல்லன்னா நான் வாங்கிக்கச் சொல்றேன்” என்று ஓதி( மிரட்டி?) அனுப்பியதாகவும் அதன் பிறகே கருனாஸ் வலுக்காட்டாயமாக இலங்கைக்கு செல்ல முடிவு செய்து இதை பிரச்சனையாக்கி மீடியாவின் கையில் கொடுத்தார் என்கிறார்கள் அதே திமுக வட்டாரத்தில்

அடுத்து விவேக் ஒபராய் விவகாரத்தில், சூர்யா பாரபட்சமாக நடந்து கொண்டதும், பெங்களூர் மிரர் நாளிதழுக்கு பேட்டி அளித்து மொத்த தமிழர்களின் உணர்வுகளை அவமானபடுத்தினார், ஆனால் சீமான் சூர்யாவைக் காப்பாத்துகிறார் என்று பிரச்சனை வந்தது. இதனால் சில பத்திரிகையாளர்கள் நேரடியாக சீமானை சந்தித்து கேட்டபோது , சூர்யாவுக்கு இந்த விஷயத்தில் விளக்கம் தருமாறு கடிதம் கொடுத்து அனுப்பியிருந்தாராம் சீமான். இந்த கடித்தை மேற்படி தலைமை பீடத்தின் பார்வைக்கு கொண்டுபோனாராம் சிவகுமார். அந்தக் கடிதத்தை வாங்கி கசக்கிய தலைமை, அதில் மூக்கு சிந்திக்கொடுத்துஇ “ நான் இவ்வாறு செய்தேன் என்று சொல்லி சீமானிடம் கொடுங்கள்” என்று கொடுத்தார் என்றும் ஆனால் அந்த கடிதத்தை சீமானுக்கு அனுப்பாமல் தவிர்த்த சூர்யா தரப்பு, தலைமை நடந்துகொண்ட விஷயத்தை சீமானுக்கு சாரியான ஆளைப்பிடித்து சொல்லி அனுப்பியது என்கிறார்கள். அதே நபரிடம் ரத்தசரித்திரத்தை இனி தமிழ்நாட்டில் ஒட விடமாட்டோம், இதையும்போய் சொல் என்று சொல்லி அனுப்பினாராம் சீமான். இந்நிலையில்தான் மதுரைக்கு போன் செய்து படத்தை நீ வாங்கிக்கொள் என்று வாரிசுக்கு உத்தரவிட்டதாக தகவல் கிடைக்கிறது.

இந்த இடத்திலேயே அசின் அக்காவிடம் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள் "சூர்யா அண்ணாஇ, விஜய் அண்ணா ஏன் எங்களைப் பார்க்க வரேல்ல..? " எனக் கேட்ட உணர்ச்சிக் கதையின், வசனமும் யார் எழுதியது எனத் தெரிந்து போகிறது என்கிறார்கள். இந்த வசனத்தில் தந்திரமாக இளைய தளபதி சொருகப்பட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஈழத்திமழர்கள் மத்தியில் விஜய்க்கு ஆதரவு அலையொன்று இருப்பதாகவும், இலங்கைத் தமிழ்ப்பெண்னை மணம் முடித்தவகையில் இது சற்று அதிகமாக ஒட்டும் என்பதையும் கணக்குப் போட்டு வைத்திருக்கிறதாம் தமிக தலைமை. அரசியல் ஆர்வம் மிகுந்திருக்கும் இளைய தளபதியையும் இதற்குள் இழுத்துக் கலங்கடிக்கும் திட்டம் ஒன்றும் உள்ளதாம்.

இறுதியாக சீமான் பாசத்தில் அப்பா எனச் செல்லமும், தொழிலிமுறையில் குருவாகவும் கொண்டாடும், பாரதிராஜாவை சரியான தருனத்தில் ஜாதி ரீதியாக திருப்பி விடுவது என்று திட்டம் தீட்டியிருப்பதாகவும், இதற்கு ராஜா சம்மதம் தெரிவித்து தலையாட்டியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைமைக்கு இதில் என்ன பெரிய ஆர்வம் என்றால், இந்தியதிரைப்பட விருதுவிழா திட்டமிட்டவாறு நடைபெறாமல் போனதில் இலங்கை அரசுக்கு நஷ்டமே. அதனை ஈடுசெய்ய இந்திய அரசிடம் கேட்கப்பட்ட உதவிக்கு, காட்டப்பட்ட நபர் கருணாநிதிதானாம். அவர் மனது வைத்தால் எதுவும் நடக்கும் என்பதால், அவர் மனதுக்குப் பிடித்த விடயத்தை நிரைறவேற்ற இலங்கைஅரச தரப்பும் இணங்கியுள்ளதாம். அதனாலதான் இந்த அக்கறையான செயற்பாடாம்.

நேற்று முன் தினம் நடந்த நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் 1850 உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இதில் 1000 பேருக்கும் மேல் “ இவருக்குப் போய் ஓட்டு போட்டோமே” என்று வெளிப்படையாக புலம்பிச் சென்றதைப் பார்க்கும் போது, சரத்குமார் தனது சுயநலத்துக்காக சோரம் போய் விட்டார் என்று தெளிவாக தெரிகிறது என்கிறார்க்ள் நடிகர் சங்க உறுப்பினர்கள் பலரும்.

'நாம் தமிழர்' இயக்கமோ, அல்லது ஈழவிடுதலை ஆதரவாளர்களோ, தமிழுணர்வாளர்களோ, நடிகர்களின் தனிப்பட்ட இலங்கை விஜயத்தைப் பெரிது படுத்தியதாகத் தெரியவில்லை. ஆனால், இந்தக் கலைஞர்களின் விஜயத்தை வைத்து, அரசியல் செய்ய விளையும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்குத் துணை போக வேண்டாம் என்பதே அவர்களது கோரிக்கையாக இருக்கிறது.

ஆனால் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ள நடிக நடிகையர்கள் எவ்வாறு நடந்து கொண்டுள்ளார்கள் எனக் கேட்கின்றார்கள். இந்தியத் திரைப்பட விழாவிற்குச் சென்ற இந்தி நடிகர் விவேக் ஒபராய் முன்னாள் போராளிகளுக்கு நடத்தப்பட்ட பிரச்சாரத் திருமணச் சடங்கில் கலந்து கொண்டு படமெடுக்கிறார். பத்திரிகைக்கு அறிக்கை விடுகின்றார். அதே விவேக் ஒபராயுடன் நடிகர் சூர்யா நடித்த படத்திற்கு தமிழகத்தில் இடையூறு செய்யப் போதில்லை என்றே நாம் தமிழர் இயக்கம் அறிவித்தது. ஆனால் பிறமாநிலப் பத்திரிகையில் நடிகர் சூர்யாவின் எக்காளத்தனமான பேட்டி வெளிவருகிறது.

இந்திப் படப்பிடிப்புக்குப் போன அசின், இலங்கை அரசின் அரச விருந்தாளியாகின்றார். மனிதாபிமான நடவடிக்கைகள் அற்ற அரசியல் நடைமுறைக்காக, ஐரோப்பிய யூனியனும், மனித உரிமை அமைப்பும், உதவிகளை மட்டுப்படுத்தும் இலங்கை அரசின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கோருகின்றார். ஆனால் சுயாதீனமாக உதவும் அமைப்புக்களை இலங்கை அதிபரின் தம்பி மட்டுறுத்துகிறார். அசினுக்கும், சூர்யாவுக்கும், ஒபராய்க்கும், இலங்கையில் மனிதப்படுகொலைகள் நடந்ததும் தெரியவில்லை. நன்றாக இருந்த மக்களை நாதியற்றவர் ஆக்கியது யாரென்றும் தெரியவில்லை என்கிறார்கள்.

இப்போது தன் பிள்ளைக்குக் கதிர்காமத்தில் நேர்த்தி நிறைவேற்றவும், தன் உறவுகளைப் பார்க்கவும் மட்டுமே இலங்கை செல்கின்றேன் என்கின்றார் கருணாஸ். ஆனால் அங்கு அவர் அரச ஆதரவு வானொலி நடத்தவிருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் செல்கின்றார் என்ற தகவலே அவரது இலங்கை விஜயத்தைப் பிரச்சனை ஆக்கியுள்ளது.

இது தொடர்பாக இறுதியாக கருணாஸ் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைக் கடிதத்தில்;

வணக்கம் தமிழர்களே !

நான் கருனாஸ்

ஈழ துயரத்தை தன் சொந்த லாபத்திற்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ இல்லை. சாதாரண நடிகன். என்னால் ஈட்ட முடிந்த சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவிற்கு ஈழ மக்களுக்கு செய்தவன், செய்கிறவன் நான். நான் அப்படி செய்வதற்கு நான் தமிழன் என்பது மட்டுமல்ல என் மூதாதையர் ஈழத்தை சார்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம்.

நேற்றைய (25.07.2010) ........ செய்திதாளில் எனக்கு விடுக்கப்பட்ட நாம் தமிழர் என்ற அரசியல் கட்சியின் கண்டனத்தை படித்தேன். என்னை கைபேசியில் அழைத்தும், கொச்சையான குறுந்தகவல்கள் அனுப்பியும் என் மனதைக் காயப்படுத்திய நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியின் கண்டன அறிக்கையே அது. இக்கண்டன அறிக்கையில் சொன்ன கருத்துக்களை என்னிடம் நேரிடையாகவோ அல்லது தொலைபேசியில் முறையாகவோ சொல்லியிருந்தார்கள் எனில் அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என் பயணத்தை ரத்து செய்திருப்பேன். ஆனால் என்னை அவர்கள் காயபடுத்த மட்டுமே செய்தார்கள்.

நேற்றைய....... பத்திரிக்கையை படித்தபின் ஈழத்து நண்பர்களிடம் விசாரித்த போது அதில் உண்மை இல்லை என்றார்கள். நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு ஒரு தமிழனாக என் கோரிக்கை என்னவெனில் உங்களுடைய அரசியலுக்கு என்னை பலியாக்காதீர்கள். நான் எந்த காலத்திலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவனாகவே இருந்து வருகிறேன் இனியும் இருப்பேன் எனவே என் வேலையை செய்ய விடுங்கள். என் போன்ற சாதரண மெய்யான உணர்வின் அடிப்படையில் மட்டுமே இருக்கும் ஈழ ஆதரவாளர்களை ஈழமக்களிடமிருந்து பிரிப்பது எங்களுக்குள் முரனை உருவாக்குவது போன்ற செயல்களின் மூலம் இருக்கிற ஆதரவாளர்களையும் ஊனபடுத்தி குறைத்துவிடாதீர்கள். நாம் தமிழர் எனும் அரசியல் கட்சியில் இல்லாதவர்களும் தமிழர்களே, தமிழ் உணர்வாளர்களே என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.

என் ஈழ சகோதரனுக்காய் நான் செய்தவற்றை நானே வெளியே சொல்லவேண்டிய அவலநிலைக்கு என்னை தள்ளிவிட்டிருக்கிறீர்கள். கமிஸ்னர் அலுவலகத்தில் பத்திரிக்கை நண்பர்களிடம் நான் செய்தவற்றை சொன்னபோது என் மனம் எப்படி வலித்தது என்பது நான் மட்டும் உணர்ந்த உண்மை. ஒருவேளை உங்களுக்கு நான் சொன்னதில் சந்தேகம் இருப்பின் “புலம் பெயர்ந்த ஈழ அகதிகள் மறுவாழ்வு கழகத்தின் தலைவர் திரு.ஈழ நேரு அவர்களிடம் என் தொப்புள்கொடி உறவின் மீதான உங்கள் சந்தேகத்தை மெய்பித்துக்கொள்ளுங்கள் கருனாநிதியாக இருந்த என்னை கருனாஸாக வாழவைத்த என் தாய் தமிழ் இனத்திற்கு வாழும் வரைக்கும் கடமைபட்டவன் நான்.

நன்றி

கருனாஸ்

வாழ்க தமிழ்இ வெல்க தமிழினம். - எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இப்பிரச்சனை தொடர்பாக இந்த அறிக்கை விடுத்திருக்கும் கருணாஸ், அவரது விஜயம் குறித்துத் தெரிவிக்கபட்டிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பான தெளிவை உறுதியாகத் தெரிவிக்கத் தயங்குவதாவே தெரிவிக்கப்படுகிறது.

அப்படியானால் அவரது விஜயம் குறித்து அவர் சொல்லும் காரணங்களுக்கு அப்பால் தெரிவிக்கபடுவது உண்மைதானா..?

கருணாஸ் பலிக்கடாவா.. பகடைக்காயா..?

உடல் நலம் குன்றிய, சரியாகப் பேசக் கூட முடியாத நிலையில் இருந்த, வயோதிபத் தாய் பார்வதி அம்மாளை வைத்து, அரசியல் செய்து விடுவார்கள் என்பதற்காக, அவருக்கு மருத்துவ உதவி வழங்குவதாக இருந்தால் அரசியலாளர்களைச் சந்திக்கக் கூடாது என தமிழக அரசும், மத்திய அரசும், நிபந்தனை வைத்துக் கொள்ளலாம். ஆனால்.. இந்தியக் கலைஞர்களை வைத்து இலங்கை அரசு செய்யும் அரசியலுக்குத் துணைபோதீர்கள் எனத் தமிழகத் தமிழர் எதிர்ப்புக் காட்டக் கூடாதாம்.. இது என்ன நியாயம் என்கிறார்கள்..உணர்வாளர்கள்..?

இலங்கைக்குப் போகத் துடிக்கும் இந்திய நடிகர்களே! தமிழுணர்வாளர்களின் எதிர்ப்பு உங்கள் தொழிலுக்கானது அல்ல. உங்கள் தொழிலை அரசியலாக்கும் இலங்கை அரசின் செயலுக்கானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்கிறார்கள். கூடவே இன்னுமொரு தகவலையும் சொல்கின்றார்கள். 'நாம் தமிழர்' இயக்கத் தலைவர் சீமானின் தம்பி படத்தின் நாயகியான பூஜா சிறிலங்காவின் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர். சிங்களப் படங்களில் நடித்தும் வருபவர். அந்த நடிகை இத்தகைய பிரச்சார முயற்சிகளுக்குப் பயன்படவில்லையே..ஏன்...? இலங்கை அரசும், இந்திய மத்திய, மாநில அரசுகளும் எவ்வளவு நிதானமாக யோசிக்கின்றார்கள் என்பது புரியும். சிறிலங்காவிற்கு அதிகம் சென்றுவரக் கூடிய அந்த நடிகையும்இ இந்த அரசியலுக்குள் இருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்வதும் புரியும் என்கிறார்கள்.

- 4தமிழ்மீடியாவிற்காக சிறப்புச் செய்தியாளர்கள்

http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/7469-nadikar-sankam-karunas-seeman-karunanithi-cm-sarathkumar

  • கருத்துக்கள உறவுகள்

வில்லனாக மாறியிருக்கும் நகைச்சுவை நடிகர்! நாம் தமிழர் கட்சிக்கு கருணாஸ் பதிலடி

வில்லனாக மாறியிருக்கும் நகைச்சுவை நடிகர்! நாம் தமிழர் கட்சிக்கு கருணாஸ் பதிலடி

திங்கட்கிழமை, 26 ஜூலை 2010 19:24 . .

'நாம் தமிழர் ' அரசியல் கட்சியில் இல்லாதவர்களும் தமிழர்களே, தமிழ் உணர்வாளர்களே என்கிற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள் என்று தெரிவித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார் தமிழ்த் திரையுலகின் நகைச்சுவை நடிகர் கருணாஸ்.

அவருக்கு எதிராக 'நாம் தமிழர்' கட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மிரட்டல்கள், பிரசாரங்கள் ஆகியவற்றைக் கண்டித்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கியமான விடயங்கள் வருமாறு:-

"ஈழத் தமிழரின் துயரத்தை சொந்த இலாபத்துக்கு பயன்படுத்தும் சந்தர்ப்பவாதியோ, வியாபாரியோ, அரசியல்வாதியோ நான் இல்லை. சாதாரண நடிகன். என்னால் ஈட்ட முடிந்த-முடிகின்ற சொற்ப பணத்தில் என்னால் இயன்ற அளவுக்கு ஈழ மக்களுக்கு உதவி செய்தவன்- செய்கிறவன் நான்.

நான் அப்படி செய்கின்றமைக்கு நான் தமிழன் என்பது மட்டும் காரணம் அல்ல. என் மூதாதையர் ஈழத்தை சேர்ந்தவர்கள் என்பதும் முக்கிய காரணம். 25.07.2010 அன்று வெளியான செய்தித் தாள் ஒன்றில், எனக்கு விடுக்கப்பட்டிருந்த கண்டனத்தை படித்தேன்.

என்னை கையடக்கத் தொலைபேசியில் அழைத்தும், கையடக்கத் தொலைபேசியில் கொச்சையான குறுந்தகவல்களை அனுப்பியும் என் மனதைக் காயப்படுத்தியிருந்த நாம் தமிழர் அரசியல் கட்சியின் கண்டன அறிக்கையே அது.

இக்கண்டன அறிக்கையில் வெளியிட்டிருந்த கருத்துக்களை என்னிடம் நேரிடையாகவோ, அல்லது தொலைபேசியில் முறையாகவோ சொல்லியிருக்கலாம். ஆனால் என்னை அவர்கள் காயப்படுத்த மட்டுமே செய்தார்கள்.

'நாம் தமிழர் ' அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஒரு தமிழனாக என் கோரிக்கை என்னவெனில், உங்களுடைய அரசியலுக்கு என்னை பலியாக்காதீர்கள். நான் எந்த காலத்திலும் அரசியலுக்கு அப்பாற்பட்டவனாகவே இருந்து வருகிறேன்.

இனியும் இருப்பேன். எனவே என் வேலையை செய்ய விடுங்கள். என் போன்ற உண்மையான ஈழ ஆதரவாளர்களை ஈழ மக்களிடமிருந்து பிரிக்கின்றமை மூலம், இருக்கிற ஈழ ஆதரவாளர்களையும் குறைத்து விடாதீர்கள்.

'நாம் தமிழர் ' அரசியல் கட்சியில் இல்லாதவர்களும் தமிழர்களே, தமிழ் உணர்வாளர்களே என்கிற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்."

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=7096:2010-07-26-19-28-00&catid=126:2010-05-07-12-27-22&Itemid=676

  • கருத்துக்கள உறவுகள்

கருணாஸின் புகாருக்கு நாம் தமிழர் இயக்கம் பதில்!

நாம் தமிழர் இயக்கத்தினர் தன்னை மிரட்டுவதாக நடிகர் கருணாஸ் கொடுத்த புகார் உலகம் முழுக்க வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் கருணாசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு-

தமிழக சிரிப்பு நடிகர் கருணாஸ் என்பவர் தன்னை நாம் தமிழர் இயகக்த்தினர் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர்களைக் கைது செய்யக்கோரியும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. ஆகவே இது தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாம் தமிழர் இயக்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் உள்ள சூரியன் எப்.எம்.ஆனது அங்குள்ள திமிந்தா டி.சில்வா என்னும் பாராளுமன்ற உறுப்பினரின் தம்பியான ரய்னர் சில்வா என்பவரும் பஞ்சாபி ஒருவரும் இணைந்து நடத்தும் நிறுவனம் ஆகும். சமீபத்திய சிங்களனின் போர் வெற்றியைக் கொண்டாடும் வகையிலும் இதன் 16 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டும் 3 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சியை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்தது.

இதில் கலந்து கொள்ள தமிழ்நாட்டில் இருந்து பலரை அழைத்த பொழுதும் அனைவரும் கலந்து கொள்ள மறுத்து விட்டனர். ஆனால் 10 லட்சம் பணத்துக்கு ஆசைப்பட்டு கலந்து கொள்ள சம்மதித்தவர் காமெடி நடிகர் கருணாஸ் ஆவார். இது தொடர்பாக அவருக்கு முன் பனம் 5 லட்சம் கொடுக்கப்பட்டு மீத தொகை நிகழ்ச்சி முடிந்த பின் வழங்கப்படுவதாக இருந்தது. இந் நிகழ்ச்சி தொடர்பாக அங்குள்ள வானொலியிலும் செய்தித்தாள்களிலும் கருணாஸ், அவரது மனைவியும் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் புகழ் பாடகி கிரெஸ் கருணாஸ், அங்காடித்தெரு சிரிப்பு நடிகர் பாண்டி ஆகியோர் கலந்து கொள்வது குறித்து விளம்பரமும் வந்தது.

கருப்பு ஜூலை நினைவு தினம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இது அங்குள்ள தமிழர்கள் மத்தியில் தீராத வேதனையை அளித்தது. இதன் தொடர்ச்சியாக தம்மைத் தமிழராய் உணர்ந்த அனைவரும் இதனை எதிர்த்தனர். இது தொடர்பாக நடிகர் கருணாஸ் அவர்களை தொலைபேசியில் அணுகி சில உணர்வாளர்கள் கேட்டதற்கு, தான் கோவிலுக்கு செல்ல இருப்பதாக சிலரிடமும், தான் நடிகன் எனக்கு ஜாதி, மதம், இல்லை எனக்கு அரசியல் தேவை இல்லை என்று சிலரிடமும், பணம் வாங்கி விட்டேன் இனி மறுக்க முடியாது என்று சிலரிடமும், தான் ஈழத்தமிழர்களுக்கு படிக்க உதவி செய்கின்றேன் என்று சிலரிடமும் முன்னுக்குப்பின் முரணான முறையில் பேசி இருக்கின்றார்.

ஆனால் தான் கொழும்பு செல்வது உறுதி என்றும் கூறி இருக்கின்றார். சிங்களனின் வெற்றியைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் அவர் பங்கு பெற இருப்பது குறித்து அனைவரிடமும் தீராத வேதனையைத்தந்தது. அவருடன் செல்வதாக இருந்த அங்காடித்தெரு நடிகர் பாண்டி மட்டும் தமிழ் உணர்வாளார்களின் வேண்டுகோளை ஏற்று கொழும்பு செல்லும் நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

இந்நிலையில் 24 சனி அன்று காலை 8.30 மணிக்கு சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானத்தில் அவருக்கும் அவரது மனைவி உட்பட 9 நபர்களுக்கும் விமானச்சீட்டு சிங்கள எப்.எம்.நிறுவனத்தால் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. சில முன்னணி இயக்குனர்களின் வேண்டுகோளை மீறியும் அவரது பயணம் உறுதியான நிலையில் உலகம் முழுவதிலும் இருந்து அவரிடம் தமிழர்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய அவரிடமே முறையிட்டிருக்கலாம் என்று தெரிகின்றது.

தனக்கு திரைப்பட வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் கனடா, அமெரிக்கா என்று ஈழத் தமிழர்களின் பணத்தில் பிழைப்பு நடத்திய கருணாஸ் இன்று சிங்களனின் வெற்றியைக் குறிக்கும் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க முனைந்துள்ளது மிகவும் வேதனையைத் தரும் ஒன்றாகும். அவரது இந்த இனத் துரோகச் செயலை தமிழர்கள் ஒரு பொழுதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.

இந்நிலையில் நேற்று காலை திடீரென்று சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் இயக்கத்தைச்சேர்ந்த சிலர் தன்னை தொலைபேசியில் மிரட்டுவதாக புகார் அளித்துள்ளார். உண்மை வெளியான உடன் முன்னுக்குபின் முரணாக பேசுகின்றார். தமிழர்களுக்கு உதவி செய்வதாக அசினின் வழியில் தம்பட்டம் அடிக்கின்றார். நாம் தமிழர் இயக்கத்தின் மீது அவதூறுகளை அள்ளி வீசுகின்றார். தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் நாம் தமிழர் இயக்கம் இது குறித்து அச்சம் கொள்ளாது. இதனை சட்டப்படி சந்திக்கும். தமிழர்களின் இனமானப் பணியில் தன்னை தொடர்ந்து அர்ப்பணிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=4210

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.