Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க் குற்றங்கள், இனப்படுகொலை தொடர்பில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதி!

Featured Replies

போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாகவும் அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதாக ஐ.நா.வுக்கான அந்நாட்டுத் தூதுவர் சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நியூயோர்க்கில் ஐ.நா. வைத் தளமாகக் கொண்ட இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் தெரிவித்திருப்பதாவது;

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமானது இனப்படுகொலைக்காக சூடானின் ஓமர் அல் பாசிரை உத்தியோகபூர்வமாகக் குற்றஞ்சாட்டிய சில நாட்களின் பின்னர் பாசிர் மீதான குற்றச சாட்டானது தனது பணியை கடினமானதாக மாற்றியுள்ளதாக சூடானுக்கான ஐ.நா. தூதுவர் ஸ்கொட் கிரேசியன் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுப்போருக்கு இந்தக் கருத்து விசனத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக ஆச்சரியம் இல்லை. ஒபாமா நிர்வாகத்தின் கருத்தையா கிரேசியன் கொண்டிருக்கிறார் என்று நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன்ரைஸிடம் இன்னர்சிற்றி பிரஸ் கேட்டது.

இல்லை, சூடான் தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைக்கு அமெரிக்கா மிகத் தெளிவான முறையில் ஒன்றுபட்டு ஆதரவளித்துள்ளது என்று சூசன்ரைஸ் கூறியுள்ளார்.

மறுபுறத்தில் சூடான் தொடர்பாக ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக பூசல் எழுந்துள்ளதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். விடுமுறையின்றி சமூகமளிக்காத போராட்டம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

இது தொடர்பாக ஐ.நா. விலுள்ள அமெரிக்க தூதரகத்தின் குறிப்பேடு வருமாறு:

இன்னர்சிற்றி பிரஸ்:

நீங்கள் ஒரு செய்தியைக் கூறுவதாகவும் ஸ்கொட் கிரேசியன் மற்றொரு செய்தியைத் தெரிவிப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஓமர்அல் பாசில் மீதான குற்றச்சாட்டானது அதாவது இனப்படுகொலைக்காக ஜனாதிபதி பாசிர் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது தனது பணியை மேலும் கடினமானதாக மாற்றியுள்ளதாக ஸ்கொட் கிரேசியன் அண்மையில் தெரிவித்திருந்தமை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. விடுமுறையின்றி சமூகமளிக்காமை நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக நான் ஊகிக்கிறேன். சூடான் தொடர்பான கொள்கையை நிர்வாகம் இழந்து வருவதை விடுமுறையின்றி சமூகமளிக்காமை விடயம் வெளிப்படுத்துவதாக ஊகிக்கிறேன். இந்த விமர்சனம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்? டார்பர் மற்றும் தென் சூடான் தொடர்பாக ஜனாதிபதி பாசிர் மீது அழுத்தம் கொடுக்கும் விடயத்தில் ஒரேநிலைப்பாட்டில் நிர்வாகம் முன்னகர்வை மேற்கொண்டுள்ளது என்று நீங்கள் கருதுகிறீர்களா? அல்லது சிலர் கூறுவதுபோன்று இரு வேறுபட்ட செய்திகளா?

தூதுவர் ரைஸ்:

இல்லை, சூடான் தொடர்பாக அமெரிக்காவானது ஜனாதிபதி ஒபாமாவின் கொள்கைக்கு உறுதியான ஆதரவாகவுள்ளது. இந்தக் கொள்கையானது வெளிவிவகார அமைச்சர் கிளின்டன்,மரான் மற்றும் கிரேஸியன் உட்பட ஏனையோரால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு உள்ளடக்கங்களை கொண்டதாகும். விரிவான சமாதான உடன்படிக்கை அமுல்படுத்தப்பட வேண்டும் என்று நாம் அழுத்தியுரைத்திருக்கிறோம். அதேவேளை, டார்பூரின் பாதுகாப்பு நிலைவரம் மோசமடைவது தொடர்பாக ஆழ்ந்த கவலையடைந்திருக்கிறோம்.

இன்னர்சிற்றி பிரஸ்:

இனப்படுகொலைக் குற்றச்சாட்டு உங்கள் பணியை கடினமானதாக்குகிறதா? உங்கள் கொள்கையைப் பின்பற்றுபவர் ஒருவர் அவ்வாறு கூறியுள்ளார். உண்மையாக அவர் அவ்வாறு கூறினாரா?

சூசன்ரைஸ்:

ஏனையோர் என்ன கூறியுள்ளனர் என்பது பற்றிக் கூறுவதற்கான நிலைமையில் நான் இல்லை. சுருக்கமாகக் கூறினால் டார்பரிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெறும் போர்க் குற்றங்கள்,இனப்படுகொலை, மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மற்றும் பதிலளிக்கும் கடப்பாடு என்பன தொடர்பாக அமெரிக்கா உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.

http://www.puthinamnews.com/?p=13207

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி கடந்த ஜோர்ச் புஸ் ஆட்சிக்காலத்தில் ஆபகானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கூட்டுப்படைகள் மனிதஉரிமை அத்துமீறல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஒரு இணையத்தளம் வெளியட்டுள்ளதே? அதை மூடிமறைக்க எம்போன்றோரது இன்னல்கட்கு காரணமாகவிருந்தவர்களை கவனிக்காது விடப்படலாம் எனும் ஐயமும் எனக்கு ஏற்படுகின்றது.

அதுசரி கடந்த ஜோர்ச் புஸ் ஆட்சிக்காலத்தில் ஆபகானிஸ்தானில் நிலைகொண்டுள்ள அமெரிக்கக் கூட்டுப்படைகள் மனிதஉரிமை அத்துமீறல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை ஒரு இணையத்தளம் வெளியட்டுள்ளதே? அதை மூடிமறைக்க எம்போன்றோரது இன்னல்கட்கு காரணமாகவிருந்தவர்களை கவனிக்காது விடப்படலாம் எனும் ஐயமும் எனக்கு ஏற்படுகின்றது.

அங்கு ஆயிரக் கணக்கான மக்கள் திட்டமிட்ட முறையில் படுகொலை செய்யப்பட்டதாக தெரியவில்லை.

இரண்டையும் ஒப்பிடுமளவிற்கு எம்மவர் சிலர் சிங்களப் பயங்கரவாதிகளை விட முன்னணியில் இருப்பது கவலையானது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.