Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மண்ணில் பெருகும் மலையாளிகளின் ஆதிக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணில் பெருகும் மலையாளிகளின் ஆதிக்கம் - கா. தமிழ்வேங்கை

இன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில் தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது.

மணல் கொள்ளை - முல்லைப் பெரியாறு :

முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலில் தொடர்ந்து நமக்கு தொல்லை கள் கொடுத்து வரும் மலையாளிகள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினையும் மதிக்கா மல் புதிய அணைகட்ட தீர்மானித் துள்ளனர். புதிய அணை கட்டப்படு மானால் முல்லைப் பெரியாறு அணை யில் தமிழகத்திற்குள்ள 999 ஆண்டு ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். இந்த உண்மை கேரள அரசுக்கும், தமிழக அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், மன்மோகன் சிங் - சோனியாவிற்கும் நன்றாகத் தெரியும். ஆனால் பாதிப்பைக் கண்டு பதை பதைக்க வேண்டிய முதல்வர் கருணா நிதி கடிதம் எழுதிக் காலம் கழித்துக் கொண்டிருக்கிறார். புதிய அணை கட்ட தமிழக ஆறுகளிலிருந்து நாற்பதாயிரத்தி லிருந்து அறுபதாயிரம் யூனிட் அளவு மணல் கொள்ளையடிக்கப்பட்டு கேரள வனப்பகுதியில் குவிக்கப்பட்டு வரு கின்றது. (ஒரு லாரியில் ஒன்றரை யூனிட் மணல் நிரப்பலாம்).

நிலம் கைப்பற்றுதல்

தமிழக - கேரள எல்லை மாவட் டங்களான நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி என ஏழு மாவட்டங்களின் எல்லைப் பகுதியிலிருந்து தமிழகத்தினுள் நூறு கி.மீ. அளவிற்கு உள்ளே நுழைந்து நிலங்களை வாங்கியுள்ளனர் மலையாளி கள். வளைகுடா நாடுகளில் பெரும்பணம் சம்பாதிக்கும் மலையாளிகள் முதலீடு என்ற பெயரில் தமிழ்நாட்டில் நிலங் களை வளைத்துப்போட்டு வருகிறார்கள். தமிழ்நாடடுத் தமிழர்களைவிட அதிக விலைகொடுத்து மலையாளிகள் நிலங்களை வாங்குவதால் தமிழர்கள் மலையாளிகளிடம் நிலத்தை விற்றுவிட்டு வெளியேறுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள மொத்த நிலப்பரப்பில் இன்று 8ல் 1 பகுதி மலையாளிகளின் கையில் உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எல்லையோர மாவட்டங்களில் மட்டுமல்லாது தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இடத்தை வளைத்துப் போடுவதில் குறியாக இருக்கின்றனர். நீலகிரி, நெல்லை மாவட்டங்களில் உள்ள தமிழக வனத்துறைக்குச் சொந்தமான மரங்களை வெட்டி கப்பல் மூலம் ஜப்பான், கொரியா போன்ற நாடு களுக்குக் கடத்தும் தொழிலையும் பகிரங்கமாகச் செய்து வருகிறார்கள்.

நகை வணிகம் :

ஐம்பது, அறுபது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மார்வாடிகள் நகை வணிகம், வட்டிக் கடை நடத்தி வந்தா லும் ஒரே பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடைகள் திறந்து கிளை பரப்பவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு நகை வணிகத் தில் நுழைந்த மலையாளிகள் இன்று ஜோஸ் ஆலுகாஸ், ஜெய் ஆலுகாஸ், மணப்புரம் கோல்டு ஹவுஸ் என நூற்றுக்கணக்கான கிளைகளைப் பரப்பி விட்டார்கள். இந்த நகைக்கடைகளில் கண்ணாடிக் கதவைத் திறந்து விடுப வன் தொடங்கி கல்லாப்பெட்டியில் இருப்பவன் வரை மலையாளிகளே.

நகைக்கடை என்றால் 10 ஷ் 15 அளவில் கடைகள் என்று நினைத்து விட வேண்டாம். ஐந்தடுக்கு மாடிகள், நூற்றுக்கணக்கான மலையாள ஊழியர் கள், குளிரூட்டப்பட்ட அறைகள் என விரிந்து கிடக்கின்றன. மார்வாடிகளால் தமிழர்களின் நகைத்தொழில் நசிந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சோக வரலாற்று நிகழ்வின் வலி ஆறும் முன்பே மலையாளிகளின் ஆதிக்கத்தால் தமிழக நகை வணிகர் களும் தொழிலாளர்களும் நடுத்தெரு விற்கு வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் வேதனை யும் வேடிக்கையும் என்னவென்றால் அண்மையில் ஜோஸ் ஆலுக்காசின் கிளைத் திறப்புவிழா கடலூரில் நடந்தது. கடையைத் திறந்து வைத்தவர் யார் தெரியுமா? தமிழக மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சரான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம். மலை யாளிகள் நம்மீது ஆதிக்கம் செலுத்தும் இரகசியம் தெரிகிறதா?

முத்தூட் பைனான்ஸ்:

மலையாளிகளால் சில ஆண்டு களுக்கு முன் சென்னை, மதுரை போன்ற மாநகரங்களில் மட்டும் முத்தூட் பைனான்ஸ் தொடங்கப் பட்டது. பிறகு குறைவான வட்டி, நகைக் கிராமிற்கு அதிக பணம் நாள் கணக்கில் மட்டுமே கணக்கிடப்படும் வட்டித்தொகையென தமிழக மக்களி டம் கவர்ச்சி காட்டி நகராட்சி தகுதியுள்ள தமிழக நகரங்களில் தமது வட்டிக்கடையை விரிவாக்கம் செய்த முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இன்று ஐந்தாயிரம், பத்தாயிரம் மக்கள் தொகை கொண்ட சிற்றூர்ப் பகுதிகளில் கூட தனது கிளையைத் தொடங்கி வட் டிக்கடை என்ற பெயரில் தமிழர்களின் சொத்துக்களை ஏமாற்றி பறித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட முத்தூட் பைனான்ஸ் கிளைகள் தமிழகத்தில் வேர்ப்பிடித்து வளர்ந்து வரும் பேரா பத்து புரியாமல் மலையாளிகளிடம் நகைகளை அடகு வைத்து மனை வாங்கும் தமிழர்கள் பின் வீட்டை விற்று வட்டி கட்டி நடுத்தெருவிற்கு வருகிறார்கள்.

கட்டுமானத் தொழிலிலும் கைவரிசை:

அரை கிரவுண்ட், ஒரு கிர வுண்ட் அளவில் வீடு கட்டிக் கொடுப் பதை நாம் பெருமையாக பீற்றிக் கொள்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் மதிப்பிடக்கூடிய கட்டிடங்களைக் கட்டும் தொழில் மலையாளிகளின் கையில். தமிழகக் கிழக்குக் கடற்கரைச் சாலையிலுள்ள ஏக்கர் கணக்கிலான பெரிய பெரிய பங்களாக்கள், மாளிகைகளை தமிழ்நாட்டில் எழுப்பிக் கொண்டிருக்கும் பென்னிகுரியகோஸ் என்ற மலையாளியின் கையில்தான் இன்று கட்டுமானத்துறை உள்ளது. தமிழகத்திலுள்ள பாரம்பரியமான செட்டி நாட்டு வீடுகளை எல்லாம் வாஸ்து சரியல்ல என்று இடித்து, அதில் உள்ள பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தமிழகக் கட்டிடக் கலைகளைச் சிதைத்து மலையாள கட்டிடக் கலைகளைப் புகுத்திக் கொண்டிருக்கிறார் பென்னி குரியகோஸ். இவரது ஆண்டு வருமானம் 500 கோடியைத் தாண்டும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இதே போல ஆண்டுக்கு பலநூறு கோடிகளை இலாபமாக ஈட்டும் எம்.ஆர்.எப். டயர் நிறுவனமும் மலையாளிகளுடையதுதான்.

பண்பாட்டுப் படையெடுப்பு :

தமிழகத்தில் மார்வாடிகளின் ஹோலிப் பண்டிகையைவிட இன்று பிரபலமாகிக் கொண்டிருக்கின்றது மலையாளிகளின் பண்டிகையான ஓணம். தெலுங்கு வருடப் பிறப்பிற்கு விடுமுறை விட்டு அண்டை மாநிலத்துடன் நட்பை வளர்ப்பதுபோல் கேரளத்துடனும் நட்போடு இருக்க வேண்டாமா? இதற்காக தமிழக முதல்வர் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் திருவிழாவிற்காக மதுரை, நெல்லை, சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, நாகர்கோவில், குமரி என பதினைந்திற்கும் மேற்பட்ட நகரங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவித்தார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மலையாளிகள் தமிழக பள்ளி - கல்லூரிகளில் மலை யாளப் பண்பாட்டின் பெருமைகளையும், உள்ளூர் தொலைக்காட்சிகளை ஒரு நாள் குத்தகைக்கு எடுத்து ஓணம் பண்டிகை யின் சிறப்பையும் பரப்புகிறார்கள். இதேபோல கதகளிக்கும் தமிழகத்தில் அண்மைக் காலமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. விளம்பரப் படங்களில்கூட கதகளி இடம் பெறும் அளவிற்கு இன்று நம்மிடையே மலை யாளப் பண்பாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்து வருகின்றது.

செண்டா மேளம் :

மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து மாண்ட நாளில் மதுரையில் மு.க. அழகிரி தனது பிறந்த நாளை கிடாவும், கேக்கும் வெட்டிக் கொண்டாடினார் என்பது தெரிந்த கதைதான். மேலும் அன்றைய சிறப்பாக கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வரவழைக்கப்பட்டு ஆட்டம் பாட்டம் போட்டு ஆனந்தத்தில் மூழ்கித் திளைத்தார்கள். கேரளத்தில் மட்டுமே பிரபலமடைந்திருந்த செண்டா மேளத்தை தமிழகத்திற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தியது மு.க. அழகிரி தான். இன்று மேல்தட்டு வர்க்கத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்களின் இல்ல விழாக்களில் செண்டா மேளக் குழுவினர் தவறாமல் இடம் பெறுகிறார்கள் என்றால் அதற்கு மு.க. அழகிரியே முழுமுதல் காரணமாவார். அய்யப்பன் கோவிலுக்குச் செல்பவர்கள் கன்னிபூசை நடத்தும் போதுகூட இன்று செண்டா மேளம் இடம் பிடித்துக் கொள்ளும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் அரசு விழாக்களில் கூட செண்டா மேள இசை நிகழ்ச்சி நடைபெறுவதுதான் பெறும் வேதனை.

இதன் உச்சக் சட்டமாக அண்மை யில் கோவையில் கூடிக்கலைந்த செம்மொழி மாநாட்டிலும் செண்டா மேளக் கச்சேரி இடம் பெற்றது செம் மொழி மாநாட்டுப் பாடலை இயக்கிய வரும் பாடியவர்களில் பெரும்பாலா னோரும் மலையாளிகளே. வந்தேறி களைத் தூக்கி வைத்துக் கொண்டாடு வதில் தமிழர்களுக்கு நிகர் எவருமில்லை என்பதைத் தெரிந்து கொண்ட கேரள அரசு செண்டா மேளத்திற்கென பள்ளி - கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கி இசைப்பயிற்சி முடித்தவர் களுக்கு சான்றளித்து, அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.. முன்பெல்லாம் கேரளத்திலிருந்து செண்டா மேளக் குழுவினர் வந்து போனார்கள். தற்போது தமிழ்நாட்டி லேயே தங்கிவிட்டார்கள். இதனால் நமது பாரம்பரிய இசைக் கலைஞர்களின் வாழ்வில் இருள் சூழும்நிலை தோன்றியுள்ளது.

சூழல் கேடுகள் :

தமிழ்நாட்டிலிருந்து மலையாளி களுக்கு அரிசி, பருப்பு, பால், காய்கறி முதலான அத்தியாவசிய பொருட்களும், ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளும் செல்கின்றன. இதில் கோழியின் கழிவுப் பொருட்களையும், பிளாஸ்டிக் போன்ற திடக் கழிவுகளையும் மருந்துக் கழிவுகளையும் தமிழக எல்லையில் மலையாளிகள் கொட்டிச் செல்வது வழக்கமாகிவிட்டது. அவ்வப் போது உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரி விப்பது பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தாலும் தடுக்க வேண்டிய தமிழக அரசு கைகட்டி வேடிக்கை பார்க் கிறது. கோவை மாவட்டத்தில் கடலூர், பொள்ளாச்சி, நடுப்புணி, கிணத்துக்கடவு, வளந்தாயமரம், கோபாலபுரம், செமணாம் பதி, மூணாறு போன்ற இடங்களில் கடந்த பல ஆண்டுகளாக கேரளக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.

தமிழக எல்லைகளில் சோதனைச் சாவடிகள் இருந்தும், அதிகாரிகளின் மெத்தனத்தால் மலையாளிகள் தமிழகப் பகுதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்கிறார்கள். கடந்த 09-07-2010 அன்று பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவைக் கொட்டவந்த கேரள லாரியைத் தடுத்து நிறுத்திய பெரியார் திராவிடர் கழக பொள்ளாச்சி வட்டச் செயலாளர் சா.சு. நாகராசன் கைது செய்யப்பட்டார். கைது செய்தது கேரள காவல்துறையோ என்று அவசரப்பட்டு விடாதீர்கள். நம் தமிழக காவல்துறைதான். பின்னே அண்டை மாநில உறவை வலுப்படுத்த வேண் டாமா? (இல்லாவிட்டால் சூரியா தொலைக்காட்சி கேரளத்தில் ஓடாது).

அரசியல் ஆதிக்கம் :

மத்திய அமைச்சரவையில் மகனுக்கும் பேரனுக்கும் வருமானம் வரும் துறையாக கேட்டுப் பெற்ற கலைஞரைவிடக் கேரளத்தவர்கள் வித்தியாச மானவர்கள். நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் ஏ.கே. அந்தோணி, வெளிநாடுவாழ் இந்தியர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி, குடியேற்றத்துறை அமைச்சராக இருப்பவர் ஈ. அகமது எனத் தம் மாநில மக்களின் நலம் காக்கும் துறைகளைக் கேரளத்தவர்கள் பெற்றுள்ளார்கள். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் தமிழர்கள்தான் அதிக நாடுகளில் பரவி வாழ்கிறார்கள். முதல்வர் கலைஞர் அவர்கள், வயலார் ரவி, அகமது போன்றோர் வகிக்கும் துறைகளை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெறாததற்குக் காரணம் அந்தத் துறைகளில் அதிகம் சுருட்ட முடியாது என்பதுதான். ஆனால் மலையாளிகளின் கணக்கு வேறு. இந்தத் துறைகளின் மூலம் தமது இனத்திற்கு எந்தவகை யான பாதுகாப்பை வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் உத்திரவாதப்படுத்தலாம் பொருளாதாரத்தைப் பெருக்கலாம் என்று எண்ணிச் செயல்படுகிறார்கள்.

முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. பிரதமர் அலுவலகத்தில் குரூப்-1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்று தற்போது பணிபுரிபவர்கள் 57 பேர். இதில் மலையாளிகள் மட்டும் 37 பேர். இதுமட்டுமல்ல வெளியுறவுத்துறை செயலாளராக இருக்கும் நிரூபமா ராவ், பாதுகாப்பு ஆலோசகரான சிவங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணன், பிரதமரின் ஆலோசகர் ஜோஷி, சோனியாவின் உச்சபட்ச ஆலோசகரான ஜார்ஜ், உள்துறைச் செயலாளர் கே.ஜி.பிள்ளை ஆகிய அனைவருமே மலையாளிகள் ஆவர். இந்தியாவில் மட்டுமல்லாது இந்தியாவிற்கான ஐ.நா. சிறப்புத் தூதுவராக கோபிநாத் அச்சங்குளங்கரே என்ற மலையாளியும், ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனின் தனிச்செயலாளராக விஜய் நம்பியார் என்ற மலையாளியும் உள்ள னர். விஜய்நம்பியாரின் தம்பி மேஜர் ஜெனரல் சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவத்தினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கும் பொறுப்பில் இருக்கிறார்.

நிர்வாகத்தின் கீழிருந்து மேல டுக்கு வரை எல்லாப் பொறுப்புகளிலும் மலையாளிகளின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுகிறது. உண்மையில் மத்தியில் நடப்பது மன்மோகன் - சோனியா ஆட்சி என்பதைவிட மலையாளிகளின் ஆட்சி என்பதுதான் பொருத்தமான தாகும். இவர்களின் சூழ்ச்சியால்தான் ஈழத்தில் நம் உறவுகள் 1 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். குறிப்பாக இந்திய அரசை ஆட்டிப்படைக்கும் அரசியல் சக்தியாக மலையாளிகள் திகழ்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளத்தில் தமிழர்களின் நிலை :

தமிழ்நாட்டில் வசதி வாய்ப்பு களோடும், அரசியல் செல்வாக்கோடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத் தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா? கடந்த ஆண்டு தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரள அரசிடம் திருவனந்த புரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள். ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரள அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளி களாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது. கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூ னிஸ்ட் ஆட்சியானாலும் ஏலக்காய் எஸ் டேட்டிற்குச் சென்று ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள். மலையாளி களுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள். பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக் குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டி னார்கள். இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக் கிறார்கள் நம் தமிழர்கள். மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக் காட்டுகள்தான். இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காக வாவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப் பட்டது. அதன்படி காஷ்மீரில் பிறமா நிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது. அவரவர் தாய்மொழி யில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது. இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரி களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட வந் தேறிகள் விற்பனை வருமான வரித்துறை யினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுகின்றனர்.

இப்படி பிறமொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண் ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல் லாது என்று சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இந்த துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள முதலமைச்சரால் மட்டுமே முடியும்.

1948-ல் செல்லாராம் என்ற மார்வாடி சென்னையில் துணிக்கடை திறந்ததை எதிர்த்து தந்தை பெரியார் ஆறுமாத காலம் தொடர்போராட்டம் நடத்தினார். ஒரு மார்வாடி உள்ளே வந் தால் பிறகு படிப்படியாக மார்வாடிகளின் ஆதிக்கம் பெருகிவிடும் என்று பெரி யார் அஞ்சினார். ஆனால் பெரியார் பெயரை மேடையில் முழங்கும் நமது முதலமைச்சர் தங்கச் சாலை என்ற தமிழ்ப்பெயரை மாற்றி மார்வாடியின் பெயரைச் சூட்டி செம்மொழியான நம் தமிழுக்கு இழுக்குத் தேடித்தந்தவர் களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துவிட்டார்.

களப்பிரர் காலத்தை இருண்ட காலம் என்று வரலாற்றில் படிக்கிறோம். ஆனால் கலைஞரின் காலம் இருண்ட காலமென நிகழ்காலத்தில் பார்க்கிறோம். நம் இனத்தைக் காட்டிக் கொடுப்பவர் கள் நம்மைக் காப்பாற்றப் போகிறார்களா என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

ஆசியாவில் சீனர்கள் வலிமை பெற்றுத் திகழ்வதைப் போல இந்தியா வில் இன்று வலுவுள்ள இனக்குழுவாக மலையாள இனம் திகழ்கிறது. மலையாளிகளின் ஆதிக்கப் போக்கு தொடருமேயானால் விரைவில் தமிழகம் கேரளமாகிவிடும். தமிழர்கள் பொருளாதார அடிமைகளாய் இடம் பெயரக்கூடிய அபாயம் ஏற்படும். அல்லது யூதர்களிடம் நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு போராடிக் கொண்டிருக்கும் அராபிய இனத்தைப் போல தமிழினம் தள்ளப்பட்டுவிடும். இந்த ஆபத்தை உணர்ந்து தமிழக அளவில் மலையாள ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் தொடங்கி தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் உடனடிக் கடமையாகும்.

http://pazhanedumaran.blogspot.com/2010/08/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+http%2Fpazhanedumaranblogspotcom+%28%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. தமிழ் நாட்டு மக்களை சொல்லி குற்றமில்லை.

Edited by nunavilan

மலையாளி கடைகளை, தமிழ் நாட்டு தமிழர், புலத்துத் தமிழர், புலம்பெயர் தமிழர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மலையாளி கடைகளை, தமிழ் நாட்டு தமிழர், புலத்துத் தமிழர், புலம்பெயர் தமிழர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

ஆரம்பிச்சிட்டாங்கய்யா......

இப்பிடியே புறக்கணிச்சு புறக்கணிச்சு....ஒரு நாளைக்கு உலகத்தையே புறக்கணிச்சு சந்திர மண்டல பக்கம் போக வேண்டியதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.