Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழத்தவரின் மண்! திரைப்படம்!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி உதயன். - விமர்சனம் - ஜெயபாலன்.

மண்: ஓரு பார்வை

மாற்று, கனவுகள் நிஜமானால் ஆகிய படிகளினு}டு வெளிவந்துள்ள புதியவனின் மூன்றாவது படைப்பான மண் நிச்சயமாக ஒரு வளர்ச்சிப் படியினைக் கொண்டுள்ளது. மண் புலம்பெயர் கலைஞர்களுடன் சிங்கள தொழில்நுட்பவியலாளர்கள், கலைஞர்கள், தமிழக தொழில்நு}ட்பவியலாளர்கள், கலைஞர்களின் கூட்டு உழைப்பில் வெளிவந்துள்ளது. இவ்வாறான கூட்டு முயற்சிகளே இலங்கைத் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்குரிய நெம்புகோலாக அமையும். ஆனால் இவை மட்டும் போதாது என்பதற்கு புலம்பெயர்ந்த கலைஞர்களும் தொழில்நுட்பவியலாளர்களும் தமிழக சினிமாத்துறையுடன் இணைந்து எடுத்த சில படங்கள் சான்றாக உள்ளன. அந்த வகையில் பதியவன் தனது படைப்பாளுமையை நிலைப்படுத்தியே உள்ளார்.

விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். இடதுசாரி சிந்தனையை ஒரு காலத்தில் கொண்டிருந்தவர். இந்தப் பின்னணியில் சமூகக் கொடுமைகளுக்கு எதிரான ஒரு போராட்ட உணர்வு அவரிடம் இருப்பது மறுக்க முடியாதது. இதனை தான் எடுத்துக்கொண்ட சினிமா மொழியினு}டாக அவர் சொல்ல முற்பட்டது தான் மண். ஆனால் வர்த்தக சினிமா (ஜனரஞ்சக சினிமா) உத்தியே மக்களை தன் படைப்பு நோக்கி கவரும் என்ற நம்பிக்கை மண்ணில் வெளிப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து ஆவணப்படம் எடுக்க தனது சொந்த மண்ணான வன்னிக்கு வரும் பொன்ராசின் நினைவலைகள் பின்னோக்கிச் செல்கிறது. மலையகத்தில் இனக்கலவரத்தினால் பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த லக்ஸ்மி குடும்பம் வன்னிக்கு இடம்பெயர்கின்றனர். இலங்கையில் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடத்தப்படும் தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த லக்ஸ்மியும் அவள் குடும்பத்தினரும் வன்னி மண்ணில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். அங்கு லக்ஸ்மிக்கும் உயர்சாதியைச் சேர்ந்த பொன்ராசுவுக்கும் காதல் மலர்கிறது. தன் காதல் சமூகக் கட்டமைப்பைத் தாண்டி நிலைக்கும் என்ற நம்பிக்கையில் பொன்ராசிடம் தன்னையே ஒப்படைக்கிறாள் லக்ஸ்மி. ஆனால் விடயம் வீட்டில் தெரியவந்து லக்ஸ்மி குடும்பம் நிலைகுலைந்த போதும் தான் அவளைத் திருமணம் செய்வதாக லக்ஸ்மியை நம்ப வைத்துவிட்டு லண்டன் செல்கிறான் பொன்ராசு. தனது தாய் லக்ஸ்மிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக மீண்டும் வன்னிக்கு வந்த பொன்ராசை சுட்டுக்கொன்று பழிதீர்க்கிறான் மகன். இதுவே மண்ணின் கதை.

முன்னைய படங்களைக் காட்டிலும் தொழில்நுட்பவிடயங்களில் மண் கணிசமான அளவு முன்னேற்றம் கண்டுள்ளது. தன் மீதான விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்வதும் அதனை சீர்படுத்த முயற்சிப்பதும் புதியவன் புலம்பெயர் சினிமாவில் முன்னிலையில் தன்னை தக்க வைத்துக்கொள்ள அனுகூலமாக உள்ளது. ஜேர்மன் விஜயின் இசையமைப்பு நன்றாக அமைந்துள்ளது. படத்தொகுப்பு இன்னமும் செழுமையாக இருந்திருக்க முடியும். காட்சிகள் இயல்பாக நகர்வதற்குப் பதிலாக சில இடங்களில் முறிவடைந்தது அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

புலம்பெயர் சினிமா அல்லது ஈழத்து சினிமாவின் ஆணிவேர் அதன் கதைக்கருவும் அது சொல்லப்பட்ட விதமும். புதியவனைப் பொறுத்தவரை அவர் எடுத்தக் கொண்ட கதைக்கருவை படம் முழுவதும் தக்க வைப்பதை அவரது மூன்று படைப்புகளிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கதைக்கரு பற்றி இறுதியில் பார்ப்போம். அது சொல்லப்பட்ட விதத்தை இப்போது பார்ப்போம்.

மண்ணின் கதையை சினிமா மொழியில் சொல்லும் பொழுது சிக்கலுக்கு உள்ளாகிறார் புதியவன். கதையினுடைய பிரதான மையம் லக்ஸ்மி. உரையாடல் மூலமாக அல்லாமல் காட்சிப் பதிவுகள் மூலமாக சினிமா மொழியில் லக்ஸ்மி குடும்பத்தின் புலம்பெயர்வு, ஒடுக்குமுறைகள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இது கதைக்கு உயிரோட்டமாக இருந்திருக்கும்.

பாடசாலை மாணவர்களின் குறும்புகள் வெறுமனெ சிலேடைகளாக, பாலியல் தொனி கொண்டதாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது. காண்பிக்கப்பட்ட ஆசிரியையின் உரையாடல்களும், சினேகிதிகளுடைய உரையாடல்களும் கூட அவ்வாறே காண்பிக்கப்பட்டது. கிராமப்புறப் பாடசாலையில் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பில் இவ்வாறு பாலியல் தொனியுடன் பேசுவது யதார்த்தமாகப்படவில்லை. மேலும் அக்கால கட்டத்தில் கட்டாயமாக மாணவர்கள் சப்பாத்துடன் வரவேண்டும் என்ற விதிமுறைகளும் யதார்த்தமாக இல்லை. லக்ஸ்மியும் மாணவர்களும் பயன்படுத்தும் ப்பிளீஸ், தங்கியுூ, போன்ற ஆங்கில சொற்பிரயோகங்களும் காலத்திற்கு ஒப்பவில்லை. ஆசிரியர் மாணவன் ஒருவனைத் தண்டிக்கும் முறையும் அவனது சகோதரி கலங்கி நிற்பதும் படத்துடன் தொடர்பறுந்த நிலையில் உள்ளது. அங்கு இயக்குநர் தான் நினைத்ததை சொல்லாமலே விட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன்.

தன்னை மணம் முடிக்க நிச்சயிக்கப்பட்ட தனக்காக வாழும் தனது மாமனில் மரியாதையுடைய லக்;ஸ்மி, சஞ்சலமில்லாமல் பொன்ராசுவின் மீது காதல் கொள்கிறாள். இதனை கவனத்தில் கொண்டிருக் வேண்டும் என்றே தோன்றுகிறது.

இலங்கைத் தமிழ் சினிமாவுக்குப் பொருத்தமற்றது என்ற வாதத்தை முறியடிப்பதில் மண் ஓரளவு வெற்றி கண்டுள்ளது. ஆயினும் லக்ஸ்மியின் உரையாடல்களில் மொழி இன்னமும் செழுமையாக கையாண்டிருக்க முடியும். லகஸ்மியின் உரையாடல்களில் இரு பிரதேச மொழிகளினது கலப்பும் கதாபாத்திரத்தின் தனித்துவத்தை சிதைத்துள்ளது. மேலும் பொன்ராசுவாக இருவர் நடிப்பது நடிப்பினதும் அலங்காரத்தினதம் வறுமையையே காட்டுகிறது.

இறுதியாக மண்ணின் கதைக் கருவுக்காக புதியவன் பாராட்டப்பட வேண்டும். ஆண்டாண்டு காலம் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் கதையை ஓரளவுக்காவது நேர்த்தியாக சொல்ல புதியவன் முற்பட்டுள்ளார். பொன்ராசு ஓடித் தப்பிப்பதும் லக்ஸ்மி அபலையாக கைவிடப்பட்டதும் சமூக யதார்த்தம். வர்த்தக சினிமாவின் ர்யிpல நுனெiபெகை விட்டுவிட்டு வர்க்க சமரசத்திற்கு செல்லாமல் சமூக யதார்த்தத்தை முன்னிறுத்தியுள்ளார் புதியவன்.

அூனால் தன்னை ஏமாற்றியவனை நினைத்தே வாழும், திருந்தும்வரை காத்திருக்கும், உயிரைமாய்க்கும் தமிழ் சினிமா பெண்களின் சூத்திரத்திலேயே புதியவனும் கட்டுண்டு போயிருப்பது ஆச்சரியம். சமூக ஒடுக்கு முறையை அநீதியைப் பற்றி அல்லாமல் அதனை தனிமனிதனுடைய தவறாக மட்டுமே பார்க்கும் லக்ஸ்மியின் மகன் வழங்கும் தண்டனை இந்த சமூக ஒடுக்குமுறைக்கு தீர்வாகுமா?

தவறிழைத்தார்கள் என்பதற்காக ஆசிரியர் மாணவனை அடிப்பது, பெற்றார்கள் பிள்ளைகளை அடிப்பது, எசமான் வேலைக்காரனை அடிப்பது என வன்முறை வாழ்வியலின் முக்கிய அம்சமாக காண்பிக்கப்பட்டுள்ளது. அது யதார்த்தமானதும் கூட. முடிவாக பொன்ராசு சுட்டுக் கொல்லப்படுகிறான். இந்த வன்முறையின் வௌ;வேறு வடிவங்களை காண்பிக்கும் இயக்குநர் அதனை அப்படியே பிரதிபலிப்பதன் மூலம் அந்த கட்டமைப்பை ஏற்றுக் கொள்கிறாரா? வன்முறையே எப்போதும் தீர்வாக அமையுமா? என்ற கேள்விகள் எழுகிறது.

புதியவனின் மண் இலங்கைத் தமிழ் சினிமாவில் நிச்சயம் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்துள்ளது. இந்த படைப்பக்கு ஊக்கமளிப்பதன் மூலம் இவ்வாறான தரமான படைப்புகள் உருவாவதற்கான சூழலை ஏற்படுத்த முடியும். ஆகவே முடிந்தவரை இந்த மண் வாசனையை அனுபவிப்பது ஆரோக்கியமானது.

  • Replies 82
  • Views 19.8k
  • Created
  • Last Reply
:lol::lol::lol::D:lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

விமர்சனம்?

படத்தினைத் தெளிவாகப்பார்த்து எழுதப்பட்டுள்ளது என்பதனை புரியக்கூடியதாக உள்ளது.

ஆனால் ஒரு சிலர் விமர்சனம் என்று கூறி பத்திரிகைகளில் தங்களின் சொந்தப்பிரச்சினைகளை வெளிக்காட்டுவதாக உள்ளமை படைப்புலகுக்கு கிடைத்த சாபக்கேடு என்று தான் சொல்லத்தோன்றுகிறது.

படித்து பட்டம் பெற்று விட்டால்போதாது அதனை சரியான முறையில் பயன்படுத்தி சமுதாய,தேசிய,நலன்களைப் பாதுகாக்க கூடிய வகையில் அமையவேண்டும். சிலர் அவற்றைத் தவறாகப் பிரயோகிப்பதால் வளரும் கலைவடிவங்கள் பாதிப்படைகிறது.

தனிப்பட்ட கோபங்களை குழுசார்ந்து வெளிப்படுத்துவது,அதுவம் எழுத்து வடிவில் பதிவாக்குவது வரலாற்றுக் குற்றம்

தண்டனைக்குரியது.

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜெயபாலனின் விமர்சனத்துக்கும் சேயோனின் விமர்சனத்துக்கும் இடையில் பெரியளவில் வித்தியாசம் தெரியவில்லை. படத்தின் கதைக்கருவை வர்க்க அரசியல், இடதுசாரிக் கண்ணோட்டங்களுடன், சண்ணின் குழுநிலை சார்பில் பாராட்டிவிட்டு எப்படி இந்தப்படம் முத்திரை பதிக்கிறது என்று குறிப்பிடவில்லை. மற்றப்படி சேயோன் குறிப்பிட்ட குறைபாடுகள் அனைத்தையும் இவரும் தவிர்க்கமுடியாத நிலையில் குறிப்பிட்டுள்ளார். சேயோன் படத்தின் முடிவை குறிப்பிட்டதாக கோபப்பட்ட சண், ஜெயபாலனும் முடிவை குறிப்பிட்டது பற்றி சட்டை செய்யவில்லை. ஒரு தடவை குறிப்பிட்டாய் விட்டது இனி என்ன என்று விட்டு விட்டாரோ தெரியவில்லை.

மண் திரைப்படத்தின் முதலாவது பிரத்தியேக காட்சி

சுவிஸ்

MaxX Filmpalast,

Emmenbrucke

திரையரங்கில் 17/02/06ல் திரையிடப்பட்டது.

மண் திரைப்படத்தை நானும் பார்த்தேன்.

இதை ஈழத்து திரைப்படம் என்று சொல்வதை விட

ஐரோப்பிய - ஈழ - சிறீலங்கா - இந்தியா ஆகிய கலைஞர்களது படைப்பு என்றே என்னால் சொல்ல முடியும்.

சுவிஸில்

மண் திரைப்படத்தின் முதலாவது பிரத்தியேக காட்சிக்கு

ஏகப்பட்ட காரணங்களால் குறைந்த பார்வையாளர்களே

வந்திருந்தனர்.

திரைப்படம் குறித்து பேச ஒருவர் வருவதாக சொல்லி விட்டு அவரும் வராமல் இருந்தார்.

நான் முதன் முதலில் புதியவனை அன்றுதான் சுவிஸில் வைத்து சந்தித்தேன்.

ஒரு படைப்பாளி

பல்லாயிரக் கணக்கான கனவுகளோடு

பணத்தையும் காலத்தையும் செலவழித்து விட்டு

மனம் குமுறி நிற்கும் போது அந்த வேதனையை

என் போன்ற கலைஞர்களால் உணர முடியும்.

எனவேதான் நான் இன்றும் மெளனமாக இருக்கிறேன்.

நான் இதன் நிறை-குறைகளை சகோதர படைப்பாளியான புதியவனிடம் படம் முடிந்து விமான நிலையம் செல்லும் வழியில்

கார் பயணத்தின் போது தனிப்பட்ட ரீதியில் கூறினேன்.

என்னோடு விமான நிலையம் செல்ல வேண்டியிருந்ததால்

பேச எமக்கு போதிய அளவு அவகாசம் கிடைத்தது.

எனது விமர்சனம் மேலே உள்ள விமர்சனங்களை விட மாறுபட்டே இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இருக்கிறது.

புதியவன் என் திரைப்படம் பற்றி எழுதுங்கள் என்று

சொன்னால் நிச்சயம் எழுதுவேன்.

உண்மையான விமர்சனங்களைத் தாங்கும் சக்தியும் படைப்பாளிகளான நம்மிடம்

உருவாக வேண்டும்.

அப்போதுதான் அடுத்த படைப்பு சிறப்பு பெறும் என்பது

எனது தாழ்மையான கருத்து.............

சிறுகதை அல்லது நாவலுக்கு விமர்சனம் செய்வது போல

சினிமா பற்றி விமர்சிப்பது சினிமா விமர்சனம் ஆகாது.

அது ஒரு தனிப்பட்ட ஒருவரது பார்வையாக வேண்டுமானால் ஆகலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு. அஜீவன்,

அஜீவன் என்ற படைப்பாளியை எனக்கு சத்தியமாகாத் தெரியாது. சும்மா பீடிகை போடுவதை விட்டு உங்களது கருத்தையும் எழுதுங்கள். புதியவன் பெரும் கனவுகளுடன் காலத்தையும் பணத்தையும் செலவு செய்தது சரி. அனுதாபப்படுகிறேன். ஆனால் இன்னமும் புதியவன் தன்னை ஒரு சிறந்த கலைஞர் அல்லது இயக்குனர் என நிருபிக்கவில்லை என்பதும் உண்மை. வெறுமனே கனவுகளுடன் இருக்கிறார் என்பதற்காக அவரை பாராட்டமுடியாது. அவரது கனவுகளை செம்மையான படைப்புகள் மூலம் நிசப்படுத்த வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருவரும் முடிவை கூறிய விதத்தை மீண்டும் படித்து பாருங்கள். தண்டனை என்பது பல விதமான கற்பனைகளை தரும். ஆனால் தண்டனையை குறிப்பாக இந்த தண்டனை தான் என்பதற்கு வித்தியாசம் இருக்கிறதாகவே நான் கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதிர் வரும் 13ம் திகதி சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கிங்ஸரன் ஓடியன் சினிமா அரங்கில் மண் திரப்படம் காண்பிக்கப்பட உள்ளது.

Kingston Odeon

Kingston Town Center

Surrey.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலுள்ளவர்கள் இன்னும் இந்தப்படத்தை பாராதவரகள் தயவுசெய்து சென்று பார்வையிடுங்கள்.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடிய விடிய கதையாடிய ஒன்றுமில்லாத மண்

ஆர் புதியவன்

( இக்கட்டுரை லண்டனில் இருந்து வெளிவரும் தேசம் சஞ்சிகையின் யுூலை 06 இதழ் 27ல் வெளியாகி இருந்தது. ஒரு பேப்பர் என்ற லண்டனில் வெளியாகும் தமிழ் பத்திரிகையில் மண் பற்றிய இரவி அருணாச்சலத்தின் விமர்சனத்திற்கு மண்ணின் இயக்குநர் ஆர் புதியவன் வழங்கிய பதிலாக இக்கட்டுரை அமைகிறது. )

ஒன்றுமில்லாத மண் படத்திற்கு ஒரு இரவு முழுக்க கதையாடி விடிய எழுந்து ஒரு பேப்பரில் ஒருபக்கம் நிறைய ஒன்றுமில்லாமல் விசர்த்தனம் மன்னிக்கவும் விமர்சனம் எழுதியிருக்கிறார் அண்ணன் சேயோன். விமர்சனம் என்று சொல் வதைக் காட்டிலும் அட்வைஸ் என்று எடுத்துக் கொள்வது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஆக்கங்கள் எழுதுவதிலிருந்து சேயோன் அட்வைஸ் பண்ணும் நிலைக்கு உயர்ந்திருப்பது என்போன்றவர்களுக்கு நல்லது தான். இனி வரும் காலங்களில் சேயோன் எனது மதியுரைஞராக பணிபுரிவார் என்பதை தேசம் வாசகர்களுக்குத் தெரியப்படுத்து வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் கூட.

மண் படம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படம் அல்ல. மண் உலகத்தின் உச்ச தரத்தை எட்டிய படமும் அல்ல. உச்ச தரம் என்பதற்கு வரைவிலக்கணமும் கிடையாது தானே.

அந்த வகையில் சேயோனின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டியது எனது கடமை. இலவசம் என்றாலும் அட்வைஸ் அட்வைஸ்தானே. ஆனால் சேயோன் இதய சுத்தியோடு விமர்சனம் வைக்கவில்லை. அல்லது நோக்கம் என்னைப் புலிகளுக்கு எதிரானவன் என்று இனம்காட்டி நல்ல பிள்ளை என்று பேரெடுத்து ஜபிசி வானொலி யில் இழந்த பதவியைபெற்றுக் கொள்ளலாமோ என்பதுதான்.

படம் தொடர்பாக இவர் சொன்ன சில விடயங்களைப் பார்ப்போம்.

i பாடசாலைக்குத் தண்ணி அடித்துவிட்டு மாணவர்கள் போகிறார்கள்:

இலங்கையில் எத்தனையோ மாணவர்கள் ஏன் ஆசிரியர்கள் கூட மது அருந்திவிட்டு பாடசாலைக்குப் போயிருக்கிறார்கள். அதை விட்டுவிடுவோம். மண் படத்தில் அப்படி எந்தக் காட்சியும் இல்லை என்பது படத்தை இதுவரை பார்த்த அத்தனை பேருக்கும் தெரியும் - மூவரைத் தவிர- விடிய விடிய கதையாடிய ஒரு பேப்பர் ஆசிரியர் குழுதான் அந்த மூவர். இல்லாத காட்சி படத்தில் இருந்ததாக சொல்ல வேண்டிய தேவை என்ன? ஒன்றில் பார்த்த மூவரும் தண்ணிவெறியில் படத்தைப் பார்த்திருக்க வேண்டும். (சேயோனுக்கு உண்மை விளங்கும்.) அல்லது இரவு வேலைசெய்து விட்டு வந்து படம் பார்க்கும் போது நித்திரை கொண்டிருக்க வேண்டும். படத்தில் வரும் மாண வர்கள் பாடசாலைக்குச் செல்லும் போதோ அன்றி மாலை வேளைகளிலோ ஏன் எப்போதாவது மது அருந்துவதாக எந்தக் காட்சியும் அமைக்கப் படவில்லை. இடம் பெறவும் இல்லை.

i ஒன்றாகவே பாடசாலைக்குச் செல்கிறார்கள்- வருகிறார்கள்:

வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற எந்த பாடசாலைக்கு மாணவர்கள் ஒன்றாகச் செல்ல வில்லை. சுமார் 256 பாடசாலைகளைக் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நகரப் பகுதியில் இருக்கும் மகளிர் மகாவித்தியாலயத்தைத் தவிர அத்தனை பாடசாலைகளுமே கலவன் பாடசா லைகள். 250க்கும் மேற் பட்ட பாடசாலைகள் கிராமப்புறப் பாடசாலை கள். அப்படிப்பட்ட பாட சாலை ஒன்றுதான் கனகராயன்குளம் மகா வித்தியாலயம். சுமார் மூன்றிலிருந்து நான்கு மைல் தொலைவிலிருந்து இந்தப் பாடசாலைக்கு வரும் மாணவர்கள் காட்டுப் பாதைகளினு}டாக பயணிக்க வேண்டியது அந்தக் கிராமங்களின் கட்டாயம். காட்டுப் பாதையினு}டாக தனித்து பயணிக்காது கூட்டமாக போகவேண்டியது நிர்ப்பந்தம். மற்றது அதுவே வன்னிக் கிராமங்களில் காணக்கூடிய பண்பியலும் கூட. கனகராயன்குள மகாவித்தியாலய மாணவர் கள் ஒன்றாக பள்ளிக்கூடம் போயிருப்பார்களா என்பதை குறைந்த பட்சம் கூட அறிந்து கொள்ள விரும்பாத விருப்பமில்லாத சேயோன் (படம்) ஒரு பேப்பரில் எழுதியிருப்பதை எப்படி விமர்சனம் என்று ஏற்றுக் கொள்வது.?

இங்கு இன்னும் சில கசப்பான உண்மைகளைப் பேச வேண்டிய தேவை இருக்கிறது. சேயோனுக்கு வன்னியிலிருக்கும் கிராமங்களின் பெயர்கள் புலிகளின் வன்னி இடப் பெயர்வுக்கும் ஜெயசிக்குறு நடவடிக்கையின் பின்புதான் தெரியவந்தது என்பது தான் உண்மை. அப்படிப் பட்டவருக்கு வன்னி மாணவர்கள் ஒன்றாகப் பாடசலைக்குப் போனது ஆச்சயரியப்பட வைத்ததில் வியப்பில்லை.

அவர் பார்வையில் வன்னி மாணவர்கள் அதுவும் எண்பதுகளில் எப்படி நாகரிகமாக பழகி இருக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டது அவர் வன்னி தொடர்பாக கொண்டிருந்த சிந்தனையை காட்டுகிறது. கனகராயன் குளத்ததைச் சேர்ந்த 50 பேரை ஒழுங்கு செய்து கொடுக்க நான் தயார். இவர் யதார்த்தம் இல்லை என்று சென்ன எந்த ஒரு காட்சியுடனாவது இவர்களில் 5 பேர் சொன்னால் கூட இதே தேசம் சஞ்சிகையில் நான் இவரிடம் மன்னிப்புக் கோரத் தயார். சரியென்று இவரால் நிரூபிக்க முடியுமா?

i கதை பலவீனமாக இருக்கிறது என்பது இவரது அடுத்த கண்டுபிடிப்பு:

இருக்கலாம். இது எனது சொந்தக் கதையென்பதால் வீக்காய் இருந்திருக்கலாம். எனக்கு யாருடைய கதையையும் திருடி என் பெயரில் படம் எடுக்கத் தெரியாது. உண்மையில் ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் தான் படம் செய்யத் தொடங்கினேன்.

இந்தக் கதையை செய்தால் எழுதியவர் இரவி அருணாச்சலம் என்று குறிப்பிட வேண்டும். அப்படியென்றால் ஒறிஜினல் கதையெழுதிய பவானி கவலைப்படுவார். சரி பவானி எழுதிய இனம் காணல் என்ற தலைப்பில் படம் எடுத்தால் இரவி அருணாச்சலம் கவலைப்படுவார். எதற்கு வம்பு. வீக்கெண்டாலும் பரவாயில்லை சொந்தக் கதையை எடுப்பது என்று முடிவு செய்தமையால் தான் மண் படம் எடுக்க வேண்டி வந்தது. சேயோனுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால் தான் வீக் என்று கண்டுபிடித்த உடனே ஒரு பேப்பரிலை ஒண்டுமில்லை எண்டு ஒரு பக்கம் முழுக்க எழுதிட்டார்.

வன்னியில் (2005ல்) எப்படித் தண்ணியடிக்க முடியும் என்பது இவரது இன்னொரு வக்காலத்து.

வன்னியில் மதுபானம் அருந்துவது தடை என்று அறிவிக்கவில்லையே. களியாட்டங்களில் மது அருந்துவது இன்று நேற்று வந்த பழக்கம் இல்லையே? சிலவேளை வன்னியிலை இருக்கி றவர்கள் எப்படி அராக் அடிக்கலாம் என்று எண்ணுகிறாரோ சேயோன். சேயோன் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் தண்ணியடிப்பது சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட பிரத்தியேக உரிமை கிடை யாது. உண்மையில் அண்மையில் கிடைத்த தகவல்களின்படி வன்னியில் விசேட சாராயம் விற்பனையாவதும் அதற்கு வரி அறவிடப்படுவதும் தங்களுக்குத் தெரியாதா? வரிந்து கட்டிக் கொண்டு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கும் தெரியும் வன்னியிலும் புரியும்.

ஒரு படைப்புத் தொடர்பான விமர்சனம் என்பது அந்தப் படைப்பாளியை மேம்படுத்தவும் மேலும் படைப்புக்களை உருவாக்கவும் செய்யப் படவேண்டுமே தவிர சேயோனைப் போல காழ்ப்புணர்வுகளைக் கொட்டித் தீர்க்கும் களமாக அமையக் கூடாது. வன்னியில் ஒரு கிராமம் எப்படி இருந்தது அதன் வாழ்வியல் பின்னணி என்ன? படத்திலே வருகின்ற காட்சிகள் பிரதிபலிப்பது போன்று அங்கு வாழ்வியல் நடைமுறை இருந்திருக்குமா என்பதை ஒரு எழுத்தாளன் நன்கு சிந்தித்திருக்கவேண்டும். அது பற்றி குறைந்த பட்சம் அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்திருக்க வேண்டும். எதுவுமே இல்லாமல் எழுந்தமானமாக எழுதப்பட்ட ஒருவிமர்சனத்திற்கு ஏன் விடிய விடிய கதையாடினீர்கள் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை.

சேயோனுக்கு அருகில் அமர்ந்து படம் பார்த்த அவர் நண்பர் சொல்கிறார் கனகராயன்குளத்தில் ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று. அதில் நக்கல் வேறு. 45 பட்டதாரிகள். 65 வீதத்திற்கு மேல் உயர்தரம் வரை கல்வி கற்றவர்கள். கதை நடக்கும் காலப்பகுதியில் 900 மாணவர்கள். 45 ஆசிரியர்கள். உயர்தர வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்ட பாடசாலையில் தாங்ஸ், சொறி என்ற வார்த்தைப் பிரயோகங்கள் இவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதென்றால் படம் பார்க்கிறபோது சேயோனின் வன்னி பற்றிய சிந்தனை எந்த மட்டத்திலே இருந்திருக்கிறது என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவை இல்லை.

படம் தொடங்கிய நேரத்தில் இருந்து முடியும் வரை மற்றைய பார்வையாளர்களின் நலனில் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் பெரிய சத்தத்தில் பேசிக் கொண்டிருந்த இவர்கள் வைத்திருக்கும் விமர்சனத்தில் எப்படி ஆய்வை எதிர்பார்ப்பது. உண்மையில் கிங்ஸ்ரன் கல்லு}ரியில் என்னிடம் பயிலும் மாணவிகள் இருவர் இடைவேளையுடன் வீடு செல்ல முனைந்ததும் அவர்கள் குளப்பம் விளைவிப்பவர்கள் அல்ல பத்திரிகைக் காரர்கள் பயப்படாமல் படம் பாருங்கள் என்று கூறுமளவிற்கு இடையுூறு இருந்ததையும் அவர்க ளால் மறுக்க முடியுமா?

எனது முன்னைய படங்களுக்கு கிடைத்த காரசாரமாக காத்திரமான விமர்சனங்கள் எனக்கு நிறையவே உதவியிருக்கின்றன. அதுவே என் தேவையும் கூட. அந்தவகையில் உதயன் பத்திரிகையில் வந்த விமர்சனம் உட்பட நிறைய விமர்சனங்கள் மண் தொடர்பாக வந்திருக்கின்றன. சில எனக்குப் புதிய பாடத்தைக் கொடுத்திருக்கிறது. சேயோன் போன்றவர்களின் ஆக்கங்கள் அவர்க ளின் எழுத்து திறனின் தரத்தைக் குறைக்கப் பயன்படுமே தவிர படைப்பாளியை உருவாக்கப் போவதில்லை. ஒருபேப்பர் போன்ற பொறுப்புள்ள பத்திரிகையின் ஆசிரியர் குழு விடிய விடிய கதையாடி படத்தில் இல்லாத காட்சிகளை இருந்ததாக வரிந்து கட்டி விமர்சிக்க வேண்டியதன் காரணம் எனக்குப் புரியவில்லை.

நான் சொன்ன கருத்துக்களோடு வாசகர்களுக்கு உடன் பாடில்லை என்றால் ஒருமுறை படத்தைப் பாருங்கள். சேயோனின் சாயம் வெளுக்க வேறு சாட்சியம் தேவையில்லை. என்னைப் பொறுத்த வரையில் நான் படம் படைக்கும் பிரம்மன். நான் சிருஸ்டித்த மண் எந்தக் குறைபாடும் இல்லாத குழந்தையல்ல. சிலர் திட்டுவார்கள் சிலர் மெச்சுவார்கள். சிலர் அஞ்சுவார்கள். காத்திரமான விமர்சனங்களை உள்வாங்கிக் கொண்டு என் அடுத்த படைப்புக்கு நான் தயாராகிக்கொண்டிருக்கிறேன். (தங்கர் பச்சான் போன்று கதை திருடி (பார்க்க: தேசம், இதழ் 24, பக். 08) படம் செய்யும் இயக்குனர்களிடம் சேயோன் அவர்களே எனக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை. முடிந்தால் பிரித்தானியாவில் யாரும் இருந்தால் கொஞ்ச அட்வைஸ் பண்ணுங்கோ உதவியாயிருக்கும்.

தாயை நிர்கதியாக விட்டுவிட்டு போவது யதார்த்தமாகப் படவில்லை என்றும் முடிவு தனி மனித தண்டனையல்ல என்றும் கூட சில விமர்சங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன, என் கதை கதாநாயகன் தப்பித்துச் செல்கிறான். வடக்கிலே இருந்து மலையகம் சென்று கதியற்ற எத்தனையோ இளம் பெண்களை நடித்து கெடுத்து விட்டு தப்பி மீண்டும் வடக்கிற்கு வந்த கதைகளைத் தெரியாமல் இருக்கிறீர்களா? அல்லது தங்கள் வண்டவாளங்கள் தெரிய வருகின்றதே என்று பயப்படுகிறீர்களா?

வவுனியாவில் இப்படி நடந்த சம்பவங்கள் ஏராளம். அப்படி என்னுடன் நல்ல தோழி யாக பழகிய ஒரு மலையக யுவதிக்கு நடந்த கொடூரம்தான் இந்த மண். எந்த மாணவனும் இப்படிச் செய்யமாட்டான் என்று நீங்கள் வைக்கிற விமர்சனங்களை ஒரு புறம் வைத்து விட்டு 77ல் 83ல் அகதிகளாக வன்னிக்கு இடம்பெயர்ந்த மக்களிடம் சற்று உரையாடிப் பருங்கள் வவுனி யாவில், முல்லைத்தீவில், மன்னாரில் அவர்களுக்கு நடந்த கொடுமைகள் யாழ்ப்பாணத்தில் வேலை க்காரிகளாக இவர்கள் பட்ட துன்பங்களோடு ஒப்பிடும் போது மண்ணில் சொன்னது ஒரு துளி என்பது புரியும். ஏன் அவ்வளவு து}ரம் செல்வான் சில மாதங்களுக்கு முன் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்ட சிறுமியை பல தடவைகள் பாலி யல் வல்லுறவுக்கு உட்படுத்திய யாழ் பேராசிரியர் செய்த கொடூரத்தை சேயோன் அறியவில்லையோ. அப்பேராசிரியரும் அவருக்கு வக்காளத்து வாங்கி ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்

தாயை ஏமாற்றி விட்டு சென்ற தகப்பனை காத்திருந்து பழிவாங்கும் மகனின் தீர்ப்பு வெறும் தனி மனிதக் கொலையல்ல. கஜன் என்ற பாத்திரம் தம்மை ஒடுக்கும் வர்க்கத்திற்கு வைத்த வேட்டுத் தான் அது. துரையப்பாவுக்கு வைத்த வேட்டு எப்படி தனி மனித வேட்டுக் கிடையா தோ அது போலத்தான் கஜன் வைத்த வேட்டும். இனியும் மலையக மக்கள் பொறுமையாய் இருக்கத் தயாரில்லை என்பதே சொல்லப்பட்ட சேதி. உ

செயோன் சொன்ன விமர்சனம் ஏற்றுக்கொள்ள கூடியதுதான், படத்தில் இந்தியபாணி முறை அதிகமே தவிர ஈழத்திற்கான பாணி அல்ல. வியாபார நோக்கம்,இந்தியாவில் திரையிட வேண்டும், சிலவேளைகளில் மலையக மக்களையும் எங்களோடு உரச வைக்கிற உள்சிந்தனை,இவையே மண் படத்தில் அதிகம் தலை தூக்கி நிற்கிறது.

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் திரைப்படம் அக்டோபர் 21ம் திகதிகளில் இந்தியாவிலும் இலங்கையிலும் வெளியாக உள்ளது. இந்த படம் எங்கு வெளியாக உள்ளது என்ற தகவலை மீண்டும் இங்கு தருகிறேன்.

எதிர்வரும் 15ம் திகதி இந்த படம் முதல் தடவையாக பாரிசிலும் காண்பிக்கப்படவுள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த காலகட்டத்தில் மண் இலங்கையில் திரையிடப்படவிருக்கிறதா? ஜெயபாலன் மகிந்தவையும் டக்கிளசையும் சந்தித்ததன் பலன் தெரிகிறது போலிருக்கிறது.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு எம் 17 ஜெயபாலனுக்கும் மண்ணுக்கும் என்ன தொடர்பபு என்று எனக்குத் தெரியாது ஆனா இப்ப ஜெயபாலன் இந்திய பிரதமரை சந்தித்த பின்னர் தான் இந்தியவில் இந்த படத்தை எதிர்வரும் 17ம் திகதி திரையிட மன்மோகன் சிங் இணங்கியுள்ளார். அது மட்டுமல்ல சிங்கபுூர் மற்றும் மலேசிய பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் சந்தித்தின் வெற்றியாக அங்கும் திரையட உள்ளாரகளாம்.

ஒன்று மட்டும் எனக்கு புரிகிறது. நாய் வைக்கல் போருக்கையிருந்து தானும் தின்னாதாம் மாட்டையும் தின்ன விடாதாம்.

அது சரி ஷன் இலங்கையில் எப்போது எங்கே வெளியிடப்பட்டது? ஒக்ரோபர் 21 என குறிப்பட்டுள்ளீர்கள்?

சாதரணமாக சிங்களப்படத்திலேயே புலிகளை மனிதர் போலக் காட்டினதுக்காக தடைசெய்த இடத்தில மண் திரையிடப்படுகிறது பெரிய விஷயம்...!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னிக்கவும் நவம்பர் 21 என்பதை அக்டோபர் 21 என்று குறிப்பிட்டு விட்டேன்.

மண் படத்தில் இயக்கங்கள் பற்றியோ அது சார் அரசியலோ கிடையாது. எனவே சென்சர் விடயத்தில் பிரச்சனை இல்லை. இந்திய கலைஞர்கள் நடித்தமையாலும் இந்தியாவில் எந்த வித பிரச்சனையும் சென்சரில் கிடைக்கவில்லை. அதனால் இலங்கையிலும் சென்ச் பிரச்சனை இல்லை. இந்த படத்தை பாரத்த மருதானை சினி சிட்டி நிறுவனமே படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. அதே போல் இந்தியாவிலும் தமிழக வினியோகஸ்தர்களே படத்தை வாங்கியுள்ளனர். இதிலை ஜனாதிபதி டக்கிளஸ் எல்லாம் வந்ததாக எழுதுவது எனக்கு புரியாத விடயம். முழங்கலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப்போட்டது போல!!!!

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் திரைப்படம் தற்போது கொழும்பு சினி சிட்டயிலும் இலங்கையின் ஏனைய பகுதியிலும் காண்பிக்கப்படுகிது.

மண் பாராட்டுக்குரிய முயற்சி.

இருந்தாலும்..கதைத் தெரிவும்..காட்சியமைப்பும்..சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண் தற்போது இந்தியாவிலும் இலங்கையிலும் காண்பிக்கப்படுகிறது.

http://www.indiaglitz.com/channels/tamil/trailer/8908.html

http://epaper.thehindu.com/svww_showarticl...1201E_003101001

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தயாராகும் தமிழ் படம் - "மண்"

இலங்கை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 25 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம் "மண்". இப்படத்தை "சினி ரேஞ்ச் பிலிம்°" பட நிறுவனம் சார்பில் ராஜ்கஜேந்திரா மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இலங்கையில் போர் ஏற்பட்ட பிறகு அங்குதமிழ்ப் படங்கள் தயாரிக்கப்படவில்லை. "சார்மிளாவின் இதயராகம்" என்ற படமே கடைசியாக இலங்கையில் தயாரான தமிழ்ப்படம். இதுவரை அங்கு உருவான தமிழ்ப்படங்கள் இலங்கை மற்றும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெளியாகியிருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு உருவாகும் படம் என்பதால் உலகத்தரமான தொழில் நுட்பத்துடன் உருவாகுவதோடு, உலகெங்கும் முதன் முறையாக வெளியிடப்படுகிறது இந்த "மண்" திரைப்படம்.

mann02sy0.jpg

இந்தப் படத்தில் லண்டன் வாழ் இலங்கைத் தமிழர் விஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த ப்ள°டூ மாணவி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

300 படங்களுக்கு மேல் நடித்து தேசிய விருது பெற்றிருக்கும் வாகை சந்திரசேகர் முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். "காதல்" சுகுமார் வித்தியாசமான குணச்சித்திர வேடத்தில் நடிக்கிறார். மற்றும் இவர்களுடன் இலங்கை நடிகர் நடிகைகளும் நடிக்கின்றனர்.

சி.ஜே. ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பல விருதுகளை வென்ற "ஆயிஷா" "கனவு மெய்ப்பட வேண்டும்" படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். சுரேஷ்அர்° படத்தொகுப்பை கவனிக்கிறார். எ°.எல். பாலாஜி. நடனம் அமைக்கிறார். பல உலக இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ள ஜெர்மன் விஜய் இசையமைக்கிறார்.

இலங்கையில் "வன்னி" பகுதியில் உள்ள கனகராயன்குளம் என்ற தமிழ் கிராமத்தில் நடக்கும் காதல் கதை இது. மண்ணின் மனத்தோடும், யதார்த்த பின்னணியோடும் உருவாகும் இப்படத்தில் "காதலும் அரசியலே! வாழ்வும் அரசியலே!" என்ற கருத்து அபத்தமாக சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க இலங்கையிலுள்ள தமிழ் கிராமங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

"எப்படி மண்ணானது நாம் பிறக்கிறபோது... தவழ்ந்து நடக்கிறபோது.. உழுது விதைக்கிற போது... அழுது அணைக்கிறபோது... காதலித்துக் கட்டிப் புறளுகிறபோது... மரணித்து ஆத்மா அடங்குகிற போது நம்மைச் சுமக்கின்றதோ அதேபோல இந்த "மண்" திரைக்காவியம் கூட உங்களை ஒரு அழகான தமிழ் கிராமத்துக்கு அழைத்துச் சென்று அங்கே வாழவிட்டு... அழவிட்டு.. சிரிக்கவிட்டு.. சிந்திக்கவிட்டு... உணர்ச்சி ததும்ப விட்டு... படமாக இல்லாமல் உங்கள் வாழ்வின் பகுதியாக எண்ணவிட்டு திரையரங்கிலிருந்து வீட்டுக்கு செல்ல வைக்கும்" என நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் புதியவன். ஆர்.

இவர் "மாற்று", "கனவுகள் நிஜமானால்" என இரண்டு படைப்புகளை உருவாக்கி லண்டனில் வெளியிட்டிருக்கிறார். "மண்" படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார். திரைக்கதை எழுதியிருப்பதோடு படத்தையும் தயாரிக்கிறார் ராஜ் கஜேந்திரா.

"காதல் பேசும் வார்த்தை தானா காத்திருக்க என்னோடு... கண்கள் மட்டும் பேசிக் கொண்டால் காதல் முடிவு தீராது..." என்ற பாடல் காட்சி 150க்கும் மேற்பட்ட "ஷாட்"களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் வரும் வெ°டர்ன் பியூஸியத்திற்கு பரதநாட்டியம் மூவ் மெண்ட்° அமைத்துள்ளார் டான்° மா°டர் எ°.எல்.பாலாஜி. இப்பாடல் காட்சியில் இலங்கை பாரம்பரிய கண்டி நடனக்கலைஞர்களும் பங்கு பெற்றனர்.

img106111401821mi3.gif

"கீழ்வானம் சூரியனால் வெளுக்குது நம்ம குடிசைகளோ இருளிலே கிடக்குது..." என்ற பாடல் காட்சியில் தமிழர்கள் எப்படி இலங்கையில் இடம் பெயர்ந்தார்கள்... ஆங்கிலேயர்களுக்கு அடிமையானார்கள். தற்போதைய தமிழர்களின் நிலை என்ன என்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. இந்த நைட் எபெக்ட் ஸாங் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

"லண்டனுக்கு போகவில்லை பாரீஸுக்கு ஒடவில்லை

சொந்த மண்ணில்தான் இருந்தோம் சந்தோஷமாக..."

என்ற இலங்கை பைலா ஸாங் ஒன்றும் இடம்பெறுகிறது.

இந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது தான் அதன் அருகேயுள்ள இடத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் லஷ்மண் கதிர்காமன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதனால் அன்றைய ஷுட்டிங் முடிந்து திரும்பி வரமுடியாமல் ஷுட்டிங் °பாட்டிலேயே மிகவும் சிரமத்துடன் இரவு பொழுதை கழித்து மறுநாளும் அங்கே படப்பிடிப்பை நடத்திவிட்டு பின் பத்திரமாக திரும்பியிருக்கிறது படப்பிடிப்புக் குழு.

தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை, நெல்லை போன்ற பல வட்டார மொழி பேசி நடித்த - அந்த பகுதியில் நடக்கும் காதல் கதை கொண்ட பல படங்கள் வந்திருக்கிறது. அதுபோல இந்த "மண்" படம் இலங்கை தமிழ் பேசி நடிக்கும் - அங்கு நடக்கும் காதல் கதை கொண்ட படமாக உருவாகிறது. இம்மாதம் இறுதியில் உலகெங்கும் வெளியாகவிருக்கும் "மண்" திரைப்படம் வித்தியாசமான மண்வாசனையை நுகரச் செய்யும் என நம்பலாம்!

http://www.webulagam.com/

இந்தப் படம் இலங்கையிவ் வெற்றிகரமாக 3 வாரங்களைத் தாண்டி ஓடுகின்றது.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மண் என்று ஒரு படம் - ஈழ கிராமத்தின் கதை

நம்மை அறியாது தான் சில விஷயங்களில் நாம் சில செயல்களைச் செய்து விடுகிறோம். பழகிய பாதையில், மற்றவர் வெற்றி கண்ட பாதையில் செல்வது ஆபத்தற்றது. அப்படித்தான் நினைத்துச் செயல்படுவதாக எண்ணிக்கொண்டிருக்கும் போது திடீரென்று ஏதாவது நிகழ்ந்து விடுகிறது. வரப்பில் நடந்து வரும்போது சற்றுக் கால் தடுமாறி வயýல் கால் வைத்து விடுவது போல. அல்லது அடர்ந்து மேலெழ முயலும் நீராவி மூடியைத் தூக்கி எறிந்தால், எப்படி ஏன் என்று சிந்திக்கத் தொடங்கினால் ஒரு புதிய பாதையின் தொடக்கம் நிகழ்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ நிகழும் இப்பாதை விலகல் விளைவிக்கும் தாக்கத்தைப் பொறுத்து, பெறும் வரவேற்பைப் பொறுத்து, புதிய பாதைகள் உருவாகின்றன.

இப்படித்தான் சில நல்லதுகள் மின் வெட்டுப் போல் தெறிக்கின்றன. தற்செயலாகத் தான். அதை விருபிப் பின் சென்றால், நல்லது. ஆனால் அப்படி நிகழுமா என்பது தெரியவில்லை. பொறி பறப்பது தெரிந்தால் தானே, அது நம்மை ஆச்சரியப்படுத்தி மகிழ்வித்தால் தானே, அதைப் பின் தொடரலாம். சரி, சரி, இப்படியும் தான் இருக்கும் என்று துடைத்து எறிந்து விட்டு, பழைய நிலையிலேயே நாம் இருந்து விட்டால்...?

ஜெயா தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி, கோýவுட் கோர்ட் என்று. புதிதாக வெளிவந்திருக்கும் படத்தின் நடிகர்கள், இயக்குநர்களைப் பேட்டி காணும் நிகழ்ச்சி. தொகுப்பாளர் கேள்வி கேட்பார். பார்வையாளர் இருபது பேர் இருப்பார்கள். அப்படி எதுவும் சிக்கலான, சங்கடமான கேள்விகள் கேட்டுவிட மாட்டார்கள். இதுவும் ஒரு பழகிய தடத்தின் சமாச்சாரம்தான். பேட்டிக்கு அழைக்கப்படுபவருக்கு விளம்பரம். மாதிரிக்கு என ஒரு சில நான் பார்த்திருக்கிறேன். நாம் போற்றிக் காத்து வரும் சினிமா பார்வை, மதிப்பீடுகளுக்குள்ளேயே தான் சுழன்று வரும். அனேகமாக எல்லாமே பாராட்டப்படும். வியந்து இதை எப்படிச் செய்தீர்கள் என்ற வகையில்தான் கேள்விகள் இருக்கும். தனுஷை யாரும், "நீ ஒரு ஒல்ýப் பிச்சான், ஒண்டியா எப்படிப்பா பத்துப் பேரைச் சமாளிச்சே, கராத்தேயும் குங்ஃபூவும் எப்போ கத்துக்கிட்டே?" என்று கேட்டதில்லை. எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரையும் இப்படிக் கேள்விகள் கேட்டு விட முடியாது. நாம் கேட்பதில்லை. "ஐயா உங்க மூச்சிலே தமிழ் இருக்கா?" என்று ரஜனி சாரைக் கேட்பார்களா யாரும்? ஆனால் இப்படி ஒரு அதிசயம் ஒரு வாரம் நிகழ்ந்தது, தற்செயலாக.

இரண்டு புதியவர்கள் இருந்தார்கள், அந்த வார கோýவுட் கோர்ட்டில். பின்னர்தான் எனக்குத் தெரிந்தது அம்மூவரில் ஒருவரை நான் முன்னரே தெரிந்திருக்கிறேன் என்பதை. ராஜ்குமார். காமிராமேன். சென்னை வந்த புதிதில், ஆறு வருஷங்களுக்கு முன் ஆயிஷா என்ற ஒரு சின்ன படம். அதில் அவர் காமிராமேனாக இருந்திருக்கிறார். சரி. இவர்கள் மண் என்ற பெயரில் ஒரு படம் தயாரித்து வெளியிட்டிருக்கிறார்கள். இதற்குப் பின் இருந்த இயக்குநர், உந்து சக்தியாக இருந்தவர், ராஜேந்திரன் என்பவர். யாழ்ப்பாணத்துக்காரர். ஆனால் அவர் மலேசியாக்காரர் இப்போது. லண்டனிலும் இருந்தவர். அங்கும் தொழில் செய்தவர். கடந்த 20 வருடங்களாக அல்லாடப்படுபவர்கள் ஈழ மக்கள். அவர்கள் கடைசியாக ஒரு இடத்தில் தங்கும் முன் எங்கெங்கெல்லாம் அல்லாடி கடைசியாக ஒரு இடத்தில் வேர் ஊன்றுவார்கள் என்று தெரியாது. இத்தகைய அல்லாடல்களுக்கு இடையே தான், கலையும் நாடகமும் கவிதையும் இணைய இதழ்களும் தமிழும். இவையெல்லாம் உடன் செல்லும். நாம் சுகமாக ஒரே இடத்தில் வசதியாக இருந்துவிட்டதால், தமிழ்நாட்டிலேயே இருப்பதால், தமிழேகூட நமக்கு அவசியமாக இருப்பதில்லை. 'ஏங்ப்ப்ர் ஸ்ண்ங்ஜ்ங்ழ்ள், இப்போ நாம ம்ங்ங்ற் பண்ணப்போற" என்றுதான் நமக்குப் பேச்சே தொடங்கும்.

ஒரு கிராமத்தின் கதையை நான் சொல்ல முயன்றேன் என்றார் இயக்குநர், யாழ்ப்பாணம் ராஜேந்திரன். கடந்த 25 ஆண்டுகளாக உள்நாட்டுச் சண்டை என்னும் அளவுக்கு நடந்து வரும் கலவரங்களால், ஈழத்தின் நகரங்களும் கிராமங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கலவரங்களுக்கு முன் இருந்த கிராமம், இப்போது எந்த நிலையில் காணப்படுகிறது, ஈழம் என்னவாகியிருக்கிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கிராமத்தை 25 வருடங்களுக்கு முன் விட்டுச் சென்றவன். காதல் வசப்பட்டவன். பின் திரும்பி வருகிறான். இடையில் எங்கெங்கோவெல்லாம் அலைந்து அல்லாடப்பட்டவன். இது தான் கதை. கிராமத்து மக்களை வைத்தே கிராமத்தின் பின்னணியிலேயே 'மண்' படமாக்கப்பட்டுள்ளது. என்றார்.

ஈழம் இப்போதுள்ள கலவரங்களுக்கு இடையில் உங்களால் படம் எடுக்க முடிந்ததா? இலங்கை அரசிடமிருந்து உங்களுக்கு ஏதும் தடைகள் ஏற்படவில்லையா? என்று கேட்கப்பட்டது. "தமிழ்நாட்டில் உள்ளது போன்ற சுதந்திரம் அங்கு இல்லை. முதýல் ஸ்க்ரிப்ட் அரசுக்குத் தரப்படவேண்டும். அதற்கு அவர்கள் ஒப்புதல் வேண்டும். அங்கு இந்த ஒப்புதல் ஒரு அமைச்சகம் சம்பந்தப்பட்டதல்ல. ராணுவ அமைச்சகத்தின் ஒப்புதலும் வேண்டும். இங்கு அப்படியான விதிமுறைகள் கிடையாது. வெளிப்புறம் படம் எடுக்கும் போது அந்த இடத்து நிர்வாகத்திடம் படம் எடுக்க அனுமதி பெற்றால் போதும். ஸ்க்ரிப்ட் உங்கள் சுதந்திரம் இங்கு. ஆனால் எங்களுக்கு அந்த மாதிரியான தடைகள் எதுவும் எழவில்லை. கிராமம் அடைந்துள்ள மாற்றத்தைத்தான் இது சொல்வதால் அரசியல் தடை எதுவும் இல்லை. இது போரைப் பற்றிய படமோ கதையோ அல்ல. வாழ்க்கையைப் பற்றியது. அது பெற்றுள்ள மாற்றங்களின் முறை பற்றியது என்றும் சொன்னார்.

மக்களிடம்தான் சில தயக்கங்கள் இருந்தன. அங்கும் தமிழ்ப் படங்கள், பிரபலம் பெற்றவை. தமிழ்ப் பட நடிகர் þ நடிகைகள் வெகுவாகப் புகழ் பெற்றவர்கள். விஜய் அங்கு மிகப் பிரபலம் பெற்றவர். ஆக, இங்கு கிராமத்தில் எடுக்கும் படம், யாரும் தெரிந்த நடிகர்கள் இல்லாத படம் எப்படி இருக்குமோ என்ற கேள்விகள் அவர்கள் மனத்தில் இருந்தன. ஆனால் நாங்கள் புதியவர்களையும் கிராமத்து மக்களையுமே வைத்துப் படம் எடுத்தோம். இதில் எட்டு புதியவர்கள் நடிக்கிறார்கள். அவர்களில் சிங்களர்களும் உண்டு.

"புதியவர்களை நடிக்க வைப்பதில் சிரமமில்லையா?" என்று கேள்வி. படம் ஆரம்பிக்குமுன் அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். நான் லண்டனில் பல செய்திப் படங்கள், குறும்படங்கள் தயாரிப்பில் பங்கு கொண்ட அனுபவம் கொண்டவன். அதற்கான பயிற்சியும் பெற்றிருக்கிறேன். இது போன்ற ஒரு படம் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் வெகு நாட்களாக மனத்தில் இருந்தது. 15þ20 நாட்கள் பயிற்சி கொடுத்த பின் வெகு திருப்திகரமாக அவர்கள் நடித்தார்கள். சந்தோஷமாக நடித்தார்கள். கிராமத்து மக்களும் மகிழ்ச்சியுடன் ஒத்துழைத்தார்கள். காமிராமேன் ராஜ்குமார், அவர்களுடன் தங்கியிருந்து அவர்கள் பயிற்சி பெறும்போது உடனிருந்ததால், தனக்குப் படம் எடுப்பதில் ஏதும் சிரமமிருக்கவில்லை என்றார். 'ஆயிஷா' படத்தில் சம்பந்தப்பட்டவரைத் தேடி இப்படியான அர்த்தமும் வாழ்க்கைப் பிரதிபýப்பும் கொண்ட படங்களில் வாய்ப்புக் கிடைக்கிறதே என்று நான் சந்தோஷப்பட்டேன்.

ஏன் நீங்கள் இதற்கு விளம்பரமே கொடுக்கவில்லை? என்று பார்வையாளரிடமிருந்து கேள்வி பிறந்தது. "மிகவும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம் இது. முப்பத்தைந்தே நாட்களில் எடுக்கப்பட்ட படம். எங்களால் விளம்பரத்திற்கு மற்றவர்கள் செலவழிப்பது போல கோடிக்கணக்கில் செலவழிக்க முடியாது. படம் பார்த்தவர்கள் வாய் வழியாக செய்தி பரவும். இப்போது ஒரு சில இடங்களில் வெளியாகியிருக்கிறது. இப்படியே செய்தி பரவி, எங்களுக்குப் போட்ட பணம் கிடைத்து விடும் என்று நம்புகிறோம். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், அதற்கான விளம்பரம், பின் அதற்கான வருமானம் போதும். இப்படித்தான் நாம் எடுக்க விரும்பும் படங்கள் எடுப்பதும், அது நிலைப்பதும் சாத்தியம் என்றார் ராஜேந்திரன்.

'பாடல்கள் உண்டா உங்கள் படத்தில்?' என்று கேட்டார் ஒரு பார்வையாளர். உண்டு. 'இதில் நான்கு பாடல்கள் உண்டு' என்றார். பாலாஜி என்னும் டான்ஸ் மாஸ்டர் உதவியதாகச் சொன்னார். எனக்குச் சரியாக நினைவில்லை. பாலாஜி உதவினார் என்றால் டான்சுக்கா, பாட்டுக்கா? தெரியவில்லை. குழப்பமாக இருந்தது. படம் பார்த்தால்தான் தெரியும், பாலாஜியும் பாடல்களும் இப்படத்தில் பெறும் இடம் என்ன என்று.

மண் ஒரு சிறிய அளவில் வெற்றி பெற்று விடும். அதில் செலவழிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்கும். அது பின்னும் வேறு ஒரு முயற்சிக்கு வித்தாகும், இப்படியான தொடர்ந்த முயற்சிகள் ஒரு புதிய மரபை உருவாக்கலாம் என்று நம்பலாம். ஒரு சினிமா நடிகருக்கு 25 கோடி ரூபாயும் கொடுத்து, துருக்கியில் போய் டான்ஸ் ஆடச் செய்து படம் எடுத்தால், அதற்கேற்றபடி தான் மற்றவைகளும் செய்தாக வேண்டும். மண் அப்படியில்லை. இது தொடரக்கூடிய சாத்திய எல்லை வட்டத்துக்குள் செயல்படுகிறது. அது சரி, சாத்தியம் என்றால், ராஜேந்திரன் என்னும் ஒரு ஈழ மண்ணுக்காரருக்கு மாத்திரம் இப்படி எண்ணங்கள் உதிக்க வேண்டும்? லண்டனிýருந்தும் மலேசியாவிýருந்தும் இங்கு ஓடி வந்து தன் மண்ணின் வாழ்வைப் பதிவு செய்யத் துடிக்க வேண்டும்?

இதுதான் மண்ணின் குணம். வேறென்ன சொல்ல. இது ஏதும் ராக்கெட்டில் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் செல்லும் பயணம் இல்லை. இருப்பினும். நமக்கு டான்ஸ் பார்ட்டியோடு ஸ்விட்ஸர்லாந்துக்குத்தான் பயணம் செல்லத் தோன்றுகிறது. மண்ணின் குணம்!

-வெங்கட் சாமிநாதன் ,சிஃபி இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

சினி- சவுத் இணையத்தளத்தில் வாசகர் கேட்ட கேள்விக்கு தெனாலி என்ற ஆசிரியர் பதில்.

2006-ம் ஆண்டின் சிறந்த தமிழ் படம் எது தெனாலி?

--- சுராஜ், டென்மார்க்

தெனாலி: ஜனநாதனின் 'ஈ', மற்றும் புதியவனின் 'மண்.'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.