Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பரிசில் கே.பியின் திட்டத்துக்கு வேலும்மயிலும் மனோகரன் தலைமை தாங்குகின்றார்

Featured Replies

பரிசில் கே.பியின் திட்டத்துக்கு வேலும்மயிலும் மனோகரன் தலைமை தாங்குகின்றார்

தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும்இ அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும்இ தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த சனிக்கிழமைஇ கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந்தேகத்தைப் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது. கே.பி. தனது திட்டத்தை மேற்கொள்ளும் குழுவிற்கு 'பாரிசில் வாழும் விடுதலைப் புலிகளின் முன்னாள் அனைத்துலக செயலகப் பொறுப்பாளர் திரு. வேலும்மயிலும் மனோகரன் அவர்கள் தலைமை தாங்குவதாக அறிவித்துள்ளார். திரு. வே. மனோகரன் அவர்களே பிரான்சில் நாடு கடந்த தமிழீழ அரசின் அத்தனை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்தி வருகின்றார். தான் விரும்பியவர்கள் தெரிவு செய்யப்படவில்லை என்ற காரணத்தால்இ பிரான்சில் நடைபெற்ற இரு மாகாணங்களுக்கான தேர்தல் முடிவுகளை இரத்துச் செய்ததுடன்இ இன்றுவரை அது குறித்த எந்த முடிவுக்கும் வரவிடாமல் திரு. ருத்ரகுமாரனையும் கட்டுப்படுத்தி வைத்துள்ளார்.

திரு. கே.பி. நல்லவரா? கெட்டவரா? தியாகியா? துரோகியா? என்பதற்கும் அப்பால்இ கேபி. தற்போது சிங்கள அரசின் பிடியில் உள்ளார். அவர் விரும்பினாலும்இ விரும்பாவிட்டாலும் அவரால் ஈழத் தமிழர்களுக்கோஇ தமிழீழ மண்ணுக்கோ எந்த நல்லதும் நிகழப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனாலும்இ புலம்பெயர் தேசத்தில் உள்ள குழப்பவாதிகள் கே.பி.யை மையப்படுத்திப் புலம்பெயர் தமிழர் மத்தியில் குழப்பங்களை உருவாக்குவதில் குறியாக உள்ளனர். இதுஇ தங்கள் மீதான நம்பிக்கையை இழந்த காரணத்தால் அவர்களால் எடுக்கப்பட்ட முடிவா? அல்லது திட்டமிட்ட சி-ங்கள நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்ட செயற்பாடா? என்பது புரிந்து கொள்ள வேண்டிய விடயம்.

எது எவ்வாறு இருந்தாலும்இ கே.பி. மூலமான சிங்கள தேசத்துடனான சமரசம் என்ற இந்தக் குழப்பவாதிகளால் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைக்கான ஜனநாயக வழிப் போராட்ட வடிவம் சிதைக்கப்படும் அபாயத்தைக் கொண்டுள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. சிங்கள தேசத்தின் ஜனநாயக மறுப்பும்இ இன வன்முறைத் தொடர்ச்சியும் ஈழத் தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் பக்கம் மேற்குலகை நகர்த்தி வரும் இந்த வேளையில்இ அது சார்ந்த பேரெழுச்சியை மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டியவர்கள் கே.பி. சார் நிலையை எடுப்பது வேடிக்கையானதாகவே உள்ளது.

அடித்து நொருக்கித் துவைத்துப் போடப்பட்ட தமிழீழ மக்களது வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அவர்கள் சுய மரியாதையுடன் வாழ வகை செய்ய வேண்டும்இ சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களும் போராளிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கள நிலையைப் புரிந்து கொள்ள முடியும் என்றாலும்இ தமிழீழ மக்களது சுதந்திர வாழ்வுக்கும்இ உயிர் உடமைப் பாதுகாப்பிற்கும் உத்தரவாதமற்ற நிலையில் தமிழீழ மண்ணில் எந்த விதமான பாரிய அபிவிருத்தித் திட்டங்களையோஇ மீள் கட்டுமானங்களையோ மேற்கொள்ள முடியாது என்ற யதார்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தமது சொந்த ஊர்களில்இ தமது சொந்த வீடுகளில் நிம்மதியாக வாழ முடியாதஇ வாழ்வுரிமை ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன்றைய சூழ்நிலையில் அந்த மக்களுக்கான அபிவிருத்தி என்பது சிங்கள அரசை ஏதோ ஒரு வகையில் காப்பாற்ற முற்படும் செயலாகவே நோக்கப்பட வேண்டும்.

கே.பி. அவர்களை வைத்து சிங்கள தேசம் நடாத்தும் நாடகத்தில் பங்கேற்கும் நடிகர்களாக புலம்பெயர் தேசங்களிலும் பலர் முக்கிய பாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றார்கள். கே.பி. கைது செய்யப்பட்டார்... சிங்கள அரசால் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்... அவர்மீது மிக மோசமான வன்முறைக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றது... எனப் பல்வேறு செய்திகள் மூலம் புலம்பெயர் தமிழர்களது நாடித் துடிப்பை அறிந்து கொள்ள முற்பட்டுத் தோற்றுப்போன இவர்கள்இ தற்போது கே.பி. மூலமான மீட்புஇ கே.பி. மூலமான அபிவிருத்திஇ கே.பி. மூலமான விடுதலை என்ற புதிய வார்த்தைப் பிரயோகங்களுடன் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மீண்டும் ஒரு பிளவு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

2009 மே 18 இற்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் ஆயுத போர்க் களம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர்இ புலம்பெயர் தமிழர்கள் பெரும்பாலும் குழப்ப நிலைக்குள் தொடர்ந்தும் வைக்கப்பட்டுள்ளார்கள். அதுவே சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் வசதியானதாக உள்ளது. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம்பெயர் தேசங்களில் உருவான மக்கள் பேரவைகளும்இ நாடு கடந்த தமிழீழ அரசும் ஜனநாயக ரீதியாகப் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருந்தாலும் இன்று வரை அந்த அமைப்புக்களின் சாதனைகள் என்று குறிப்பிடும்படியாக எவையும் இருப்பதாகத் தெரியவில்லை. குறைந்த பட்சம்இ இந்த இரு அமைப்புக்களுக்கும் இடையே நட்புறவோஇ இணக்கப்பாடோ இருப்தாகக் கூட உணர முடியவில்லை.

'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தை முன்மொழிந்த கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது சிறிலங்கா அரசின் விருந்தாளியாக உள்ளார். கே.பி. கைதியாகவே உள்ளார் என்று வைத்துக்கொண்டாலும்இ அவரால் தற்போது அவரது எஜமானர்களை மீறி எந்தவொரு அதிசயத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால்இ தற்போது சிங்கள தேசத்தால் உருவாக்கிவிடப்படும் கே.பி. குறித்த பரபரப்பு செய்திகள் குறித்து புலம்பெயர் தமிழர்கள் குழப்பமடைவதற்கு எதுவுமே இல்லை. அந்தச் செய்திகளைப் புறம் தள்ளிவிட்டுஇ மேற்குலகின் மனமாற்றங்களை வலுப்படுத்திஇ அதனைத் தமிழீழ விடுதலைக்கான போர்க்களமாகத் தொடர்ந்து பயணிப்பதே எமது மக்களையும்இ மண்ணையும் விடுவிப்பதற்கான ஒருவழிப் பாதையாக உள்ளது.

இந்தக் குழப்பமான சூழ்நிலைகளை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டிய பாரிய கடமை நாடு கடந்த தமிழீழ அரசுக்கும்இ மக்கள் பேரவைகளுக்கும் உண்டு. குறிப்பாகஇ நாடு கடந்த தமிழீழ அரசின் இடைக்கால நிர்வாகப் பணிப்பாளர் திரு. ருத்ரகுமாரனுக்கு உள்ளது. 'நாடு கடந்த தமிழீழ அரசு' என்ற புதிய கருத்தியலை முன்மொழிந்தவர் திரு. கே.பி. அவர்கள் என்பதாலும்இ அதனை உருவாக்கும் பணியை மேற்கொள்பவர் திரு. ருத்ரகுமாரன் என்பதாலும்இ நாடு கடந்த தமிழீழம் சார்ந்து திரு. கே.பி. அவர்கள் குறித்த தமது நிலையை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும்.

முள்ளிவாய்க்காலில் அத்தனை கொடூரங்களையும் அரங்கேற்றி முடித்த சிங்கள அரசுக்கு இப்போது தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரே போர்க் களமாக புலம்பெயர் தமிழர் பலமே எஞ்சியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைப்பதற்கும்இ அவர்களது போர்க் களத்தை முறியடிப்பதற்கும் சிங்கள அரசு தனது அனைத்து வளங்களையும்இ பலங்களையும் திசை திருப்பி விட்டுள்ளது. மேற்குலகின் பல துதரகங்களுக்குத் தனது படைத் தளபதிகளையே துதுவர்களாக நியமித்து வருகின்றது. அத்துடன்இ தமிழ் மக்கள் மத்தியில் ஏராளமான புலனாய்வாளர்களையும்இ கொடூரமான ஒட்டுக் குழுவினரையும் ஊடுருவ விட்டுள்ளது. அவர்களுக்கு வேண்டிய அத்தனை வசதிகளும் சிறிலங்கா துதராலயங்களால் வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழீழ விடுதலைத் தளத்தில் முன்நின்று போராடும் அமைப்புக்களுக்கிடையே பிளவுகளை உருவாக்கிஇ அவர்களிடையே மோதல்களைத் தோற்றுவித்துஇ இடை நுழைந்து சிலரை இல்லாமல் ஆக்கும் திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளதாகச் சில செய்திகள் சிங்கள ஊடகவியலாளர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில்இ சிங்கள அரச வன்முறை புலம்பெயர் தேசங்களிலும் குழு மோதல் என்ற போர்வையில் அரங்கேற்றப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு வசதியாகவேஇ புலம்பெயர் தேசங்களில் கள நிலமை மாற்றம் பெற்று வருகின்றது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசும்இ மக்கள் பேரவைகளும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்படும் குழப்பங்களுக்கும்இ பிளவுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசும்இ மக்கள் பேரவைகளும் திறந்த பேச்சுக்களை நடாத்திப் பொது இணக்கத்திற்கு வரவேண்டும். அந்த இணக்கப்பாட்டுடன் மக்கள் மத்தியில் தமது விடுதலைப் பயணம் குறித்த நிலையைத் தெளிவு படுத்த வேண்டும். எல்லாக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழீழம் நோக்கிய பாதையில் கே.பி. ஒரு தடைக்கல் மட்டுமே. அதைப் படிக்கல்லாக மாற்றும் வித்தை தற்போது யாருக்கும் இல்லை என்பதைஇ சிங்கள தேசத்தைப் புரிந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்.

-ஈழநாடு

உதை எத்தனை தடவையடாப்பா, இங்கு யாழிலேயே இணைத்துள்ளீர்கள்????? ...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73990

... இன்னும் எத்தனை பேரை இழுத்துச் சென்று சிங்களத்தின் கைகளில் ஒப்படைக்கப் போகிறீர்கள்???? ..... சாக்கடைகள்!!!

... உந்த சாக்கடை ஈழநாட்டு பாலசந்திரனுகளையும், அகத்தியனுகளையும், அதியமானுகளையும் யாராவது இழுத்து வந்து நடு ரோட்டில் போட்டு துவைத்தெடுத்தால் ....

இந்த காஸ்ரோக்கள், எம்மினம் அழியும் வரை சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடப்போகிறார்கள்!!!! :lol:

Edited by Nellaiyan

உதை எத்தனை தடவையடாப்பா, இங்கு யாழிலேயே இணைத்துள்ளீர்கள்????? ...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73990

... இன்னும் எத்தனை பேரை இழுத்துச் சென்று சிங்களத்தின் கைகளில் ஒப்படைக்கப் போகிறீர்கள்???? ..... சாக்கடைகள்!!!

... உந்த சாக்கடை ஈழநாட்டு பாலசந்திரனுகளையும், அகத்தியனுகளையும், அதியமானுகளையும் யாராவது இழுத்து வந்து நடு ரோட்டில் போட்டு துவைத்தெடுத்தால் ....

இந்த காஸ்ரோக்கள், எம்மினம் அழியும் வரை சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆடப்போகிறார்கள்!!!! :lol:

மேற்கூறப்பட்ட ஊடகக்ங்களை நடாத்துபவர்கள் ஒருவரை தவிர மற்றவர்கள் நாட்டில் இருந்து வந்தவர்களும் அல்ல போராளிகளும் அல்ல அத்துடன் திட்டமிட்டு இறுதிவரை வன்னியில் இருந்து தம்மை தாமே அழித்துக்கொண்ட மாவீரர்களுக்கு அபகீர்த்தியியை ஏற்படுத்துவதற்கும் காரணமாக உள்ளனர்.

அதற்காக மேற்கூறபப்ட்டவர்கள் போன்று எல்லோரும் கஸ்ரோக்கள் என்று கூறுவதனை தவிர்த்துக்கொள்ளவேண்டும். காலத்திற்கு காலம் பல துறைகளில் பல பொறுப்பாலர்கள், போராளிகள் இரு்்்ு தவறு விட்டுள்ளனர். ஆகவே அவர்களின் பேரை சொல்லி என்றுமே அழைத்ததும் இல்லை கூறியதும் இல்லை.

ஆகவே மேற்கூறப்பட்டவர்களுக்கு வேறு பெயர்களை வைப்பதே நல்லது.

Edited by உமை

இது தாய்நிலம் பத்திரிகைக்கு வந்த ஆசிரியர் கடிதங்களில் ஒன்று.அந்த வாசகரின் அனுமதியோடு இதை யாழில் இணைக்கிறேன்.

தேசியம் பேசி பேசி தேசியத்தை அழிக்கும் ஈழநாடே! நீ யாருடைய குரல்?

வீரமாகத் தேசியம் பேசுவோர் எல்லோரும் உண்மையான தேசியவாதிகளாக இருந்து விடுவதில்லை. தேசியம் என்பது ஒரு பண்பு. அப் பண்பு ஜனநாயகப்பண்பில் இருந்துதான் பிறக்கிறது. ஏனெனில் தேசத்தை சேர்ந்தவர்கள் எல்லோரையும் சமத்துவமாகக் கருதும் மனப்பாங்கு ஒரு தேச உருவாக்கத்துக்கு அவசியமாகும். தமதும் தாம் சார்ந்திருக்கும் கட்டடைப்பின் மேலாதிக்கத்தை நிறுவுதற்காக, தமது வாழ்வின் பெரும் பகுதியை தேசத்துக்காக அர்ப்பணித்தவர்கள் மீது தேசியத்தின் பேரில் அபாண்டம் சுமத்துபவர்களால் தமிழ்த் தேசியம் அழிவுக்குள்ளாகுமே தவிர ஒரு போதும் வளரப்போதில்லை.

பாரீஸ் ஈழநாடு பத்திரிகை மனோ அண்ணா மீது சுமத்திய அபாண்டத்தைப் பார்த்போது இவ் எண்ணம் தான் மனதில் எழுந்தது.

The island பத்திரிகையில் கேபி அவர்களின் செவ்வி தொடர்ச்சியாக மூன்று தினங்கள் வெளியாகியிருந்தது. ஒவ்வொரு முயையும் கேபி அவர்களின செவ்வி பிரசுரமாகும் போதும் பத்திரிகையாளர் தனது குறிப்பு ஒன்றினை எழுதித்தான் செவ்வியைப் பிரசுரிப்பார்.

இப்படி பிரசுரிக்கும் போது 31.07.2010 அன்று இடம் பெற்ற மூன்றாவது நாள் செவ்வியில் பத்திரிகையாளர் தனது குறிப்பாக குறிப்பிடப்பட்டவற்றில் பின்வரும் வாக்கியங்களும் வருகின்றன.

””While KP remained in Colombo, his team continued to work abroad under the guidance of Paris-based Velummailum Manoharan, formerly of the LTTE International Secretariat.” ”கேபி கொழும்பிலேயே இருக்கும் போது அவரது அணியினர் வெளிநாடுகளில் பாரிஸைத் தளமாகக் கொண்ட, முன்னை நாள் விடுதலைப்புலிகள் அனைத்துலகச் செயலகத்தைச் சேர்ந்த வேலும் மயிலும் மனோகரனின் வழிகாட்டுதலில் செயற்படுவார்கள்” என்பதே பத்திரிகையாளர் எழுதிய இக் குறிப்பின் எனது வரையறுக்கப்பட்ட ஆங்கில அறிவின்பாற்பட்ட தமிழாக்கம்.

இது கேபி அவர்களின் பேட்டியில் குறிப்படப்பட்ட விடயம் அல்ல. அவரது கருத்தும் அல்ல. பத்திரிகையாளர் எனன நோக்கத்துக்காக அதனைக் குறிப்பிட்டாரோ என்பதும் கேள்விக்குரியதே. புலத்தில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகக்கூட இருக்கலாம்.

ஆனால் வாய் கிழிய தேசியம் பேசும் ஈழநாடு கேபி அவர்களே இத் தகவலை கூறியதுபோல திரித்து, இப் பொய்யின் அடித்தளத்தில் இருந்து தனது காழ்ப்பு வாந்தியை எழுத்தாய் வார்த்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மீதும் தனது சந்தேகத்தை விதைத்துள்ளது.

இத் திரிபு ஒன்றில் குறைந்தபட்ச ஆங்கில அறிவுக் குறைபாடாக இருக்க வேண்டும். அல்லது மிகவும் திட்டமிடப்பட்ட அயோக்கியத்தனத்தின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். நன்கு உன்னிப்பாக அவதானிக்கும்போது இது இரண்டாம் வகைப்பட்டதாகவே தெரிகிறது.

மனோh அண்ணா தான் செய்ய விரும்புவதை வெளிப்படையாக, துணிச்சலாகச் செய்யக் கூடியவர். கேபி அவர்களுக்குத் துணையாக இயங்க முnடிவடுத்தாலும் அதற்கான காரணத்தை வெளிப்படையாக கூறிவிட்டு இயங்கக் கூடிய நேர்மை மிக்கவர். அவரும் அவரது குடும்பத்தினரும் வெளிநாடுகளில் இயக்கத்தை வளர்ப்பதற்கு உழைத்த உழைப்பை அருகில் இருந்து பார்த்தவன் நான். மனோ அண்ணா என்ற பொறுப்பாளரின் அருமை அவர் பொறுப்பில் இருந்து விலகிய பின்னரே எமக்குப் புரிந்தது.

இவர்களின் பிரச்சினை மனோ அண்ணா மீண்டும் செயற்பாட்டில் இறங்கியமையினை எப்படியாவது தடுக்க வேண்டும். ஏனெ;றால் மனோ அண்ணா செயற்பாட்டில் இருப்பது அவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. தமது இடம் பறி போய் விடுமா என இவர்கள் அஞ்சுகிறார்கள். தமது ஏகபேகாகத்துக்கு அச்சறுத்தலாக அவரை நோக்குகிறார்கள்.

தேசியம், தேசியம் எனக் கூச்சலிடுவதால் மட்டும் தேசியம் பாதுகாக்கபடப்போவதில்லை. வளரப்போவுமில்லை. தேசத்துக்காக உழைக்க்கூடியவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தக்கூடிய ஜனநாயகப்பண்பு கலந்த அணுகுமுறை வேண்டும். பத்திரிகையளர்களுக்கு குறைந்தபட்ச அறம் வேண்டும்.

தேசியம் பேசி பேசி தேசியத்தை அழித்து வரும் ஈழநாடு உண்மையில் தேசியத்துக்கான குரல்தானா? மிகுந்த சந்தேகமாக உள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு ஒரு கரும்புள்ளியாக திகழாமல் ஈழநாட்டின் ஆசிரியர் அதன் உறுப்பினர் நிலையில் இருந்து விலகிக் கொள்வது நல்லது. இவருக்கு வாக்களித்து இவரை உறுப்பினராகத் தெரிவு செய்த 157 தமிழ் மக்களும் இதனால் வருத்தப்படமாட்டார்கள்.

கேதிஸ் முன்னாள் தொண்டன்

00000000

நான் அறிந்தவரை இந்த அவதூறு பிரச்சனை பிரெஞ்சு நீதி மன்றத்துக்கு செல்ல இருக்கிறது. அங்கே ஈழநாடு ஆசிரியரும் அகத்தியரும் தங்களது அதாரங்களை சமர்ப்பிக்கட்டும்.பரமேஸ்வரன் வழக்கில் பிரித்தானிய நீதி மன்றம் அளித்த தீர்ப்பு போல பிரெஞ்சு நீதி மன்றம் அளிக்கக் கூடிய தீர்ப்புத்தான் இவர்களை திருத்தும்

நான் அறிந்தவரை இந்த அவதூறு பிரச்சனை பிரெஞ்சு நீதி மன்றத்துக்கு செல்ல இருக்கிறது. அங்கே ஈழநாடு ஆசிரியரும் அகத்தியரும் தங்களது அதாரங்களை சமர்ப்பிக்கட்டும்.பரமேஸ்வரன் வழக்கில் பிரித்தானிய நீதி மன்றம் அளித்த தீர்ப்பு போல பிரெஞ்சு நீதி மன்றம் அளிக்கக் கூடிய தீர்ப்புத்தான் இவர்களை திருத்தும்

நல்ல முயற்சி! இது ஈழநாட்டு பாலசந்திரனுக்கு மட்டுமல்லாது இங்குள்ள அதியமான்களுக்கும் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும்! ஆனால் இவங்களை கோட்டில் ஏற்றக்கூடாது! ****!

... இங்கு முன்னால் புலித்தளபதி, மாத்தையாவின் நாடகம் அரகேறிய பின் நடைபெற்ற சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தினார், அது இங்கும் ...

மாத்தையாவும் சிலரும் கைது செய்யப்பட்டு விசாரனையோ/சித்திரவதிகளில் ஒவ்வொரு நாளும் தங்களிடம் தொடர்புடைய புலிகளில் உள்ள சிலரது பெயர்களை விசாரனை செய்த பொட்டர்/சொர்னம் போன்றவர்களுக்கு சொல்வார்களாம், இவர்களும் அதை தலைக்கு ரிப்போட்டாக கொடுப்பார்களாம் ... அதில் அகப்பட்டு தீபன், ஜெயம், ... போன்றவர்கள் சித்திரவதைகளுக்கு உட்பட்டது ஒருபுறம் இருக்க .... இந்த பட்டியல் நாளுக்கு நாள் கூடத்தொடங்கி விட்டதாம். ஒருநாள் சொர்னம் லேட்டஸ் பெயர்/விபரங்களுடன் தலைக்கு போய் காட்டும்போது, சொர்னம் தயாரித்து வந்ததை தலை வாங்கி கீழுக்கு சொர்னம், பொட்டர், இறுதியாக பிரபாகரன் என எழுதிக் கொடுத்தாராம். சொர்னத்துக்கோ திகைப்பு. தலை சொல்லிச்சுதாம் ... அவங்கள் எங்களை குழப்ப தொடர்ந்து சொல்லப்போகிறார்கள், அதை நீங்களும் கேட்டு ஆழ அறியாமல் உடைச்செறியப் போறியளோ???? என்று!!!

சிங்களவன் நல்லாக செய்கிறான், அதை தலை மேல் தூக்கி வைத்து இந்த புலத்து காஸ்ரோக்களின் ஊதுகுழல்களான இந்த காகிதப்புலிகள் எல்லோரையும் குழப்பி அடிக்க கங்கனம் கட்டி நிற்கிறார்கள்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.