Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியாவில் விடுதலையான அகதிகளில் 60 பேரின் இன்றைய நிலையென்ன? டாத்தோ சிவசுப்ரமணியம்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 24, 2010

ஈழத்தமிழர்களை முன் நிறுத்தி காசு பறிக்க ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்பது அப்பட்டமான உண்மையென்று மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் இயக்குனரும் தமிழ்ப்பேரவையின் தலைவருமான டத்தோ சிவசுப்பிரமணியம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது:

ஈழத்தில் அடிபட்டு இங்கு அகதிகளாக வந்து சேர்ந்தவர்கள் 3900க்கு மேற்பட்டவர்களாவர். இவர்களின் ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு காண்பது என்பதைப்பற்றித் தான் தமது இயக்கம் சிந்திக்கிறதேயொழிய சிலரின் கையில் சிக்கியுள்ள அல்லது சிலரிடம் அடிமைப்பட்டுள்ள அல்லது சிலரிடம் மாட்டிக்கொண்டவர்களின் முதுகில் ஏறி சவாரி செய்பவர்களுக்கு அல்லது பினாமிகளாக அவர்களை வைத்துக்கொண்டு தலைக்கு இவ்வளவு என்று பேரம் பேசிக்கொண்டிருப்பவர்களுக்கும் நாம் நேரடியாக உதவி செய்யமுடியாது.

அதேவேளை அவர்களின் நடவடிக்கைக்கும் தமக்கும் அறவே சம்பந்தம் கிடையாது என்றும் அவர் நேற்று குறிப்பிட்டார்.

மேலும் கடலில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை கரைக்கு கொண்டுவருவதிலும், கரை சேர்ந்தவர்களின் விடுதலைக்கும் எவ்வளவு சிரமப்பட்டு சம்பந்தப்பட்ட இலாகாக்களின் அமைச்சர்களிடம் எத்தனை முறை பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டது என்பது எனக்கு தெரியும். பின்னர்அப்படியெல்லாம் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் மீட்கப்பட்ட அந்த அகதிகளின் இன்றைய நிலைப்பாடு என்ன? அதில் 60 பேர் பினாங்கில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அவர்களை மூன்றாம் தரப்பு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்போவதாகச் சொல்லி 70 ஆயிரம் 80 ஆயிரம் என்று வசூல் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்த தொகையை கூட வெளிநாட்டில் இருக்கிற அவர்களின் குடும்ப உறவுக்காரர்களிடம் வசூலித்துக்கொள்ளவும் இக்கும்பல் முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது என்றார் டாத்தோ சிவசுப்பிரமணியம்.

இதற்கிடையில் கடலில் தத்தளித்த 20 பேர் மலாக்கா முகாமில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். எஞ்சிய 19 பேரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது அதற்கு ஏற்கெனவே 60 பேர் விடுதலையானதையொட்டி அதை ஓர்அரசியல் பிரச்சனையாகவும் ஈழத்தமிழரின் போர்ப்பிரகடனமாகவும் சிலபத்திரிகைகள் சித்தரிக்கவும் அவர்கள் விடுதலைக்காக சிலதரப்பு மட்டுமே கடும் போராட்டம் நடத்தி விடுதலை செய்ததாகவும் செய்திகள் பின்னப்பட்டு மிகைப்படுத்தப் பட்டதாலும் மேலும் 90 நாட்கள் அவர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட வேண்டிய அவலமான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது என்று டத்தோ சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார். இருப்பினும் இது ஒரு தற்காலிக கால நீட்டிப்பு என்பதால் அவர்களின் விடுதலைக்கு தமிழ்ப்பேரவை நிச்சயம் போராடும் என்றார்அவர்.

இதற்கிடையில் அகதிகளை காட்டி பலரும் பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இந்த தொகைகள் சுருட்டப்படுமா? அல்லது மலேசியாவில் உள்ள அகதிகளுக்கு பயன்படுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே வெளிநாட்டு உறவுகள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டியமையும் முக்கியமாகின்றது.

(ஆதாரம் 22.08.2010 இன்றைய மலேசியன் பத்திரிகையான “தமிழ்நேசன்” )

ஈழநாதம் மலேசிய நிருபர் குறிப்பு

மக்களை மீட்பதாக கூறி ஊடகங்களில் அறிக்கை விட்டுக்கொண்டு இங்குள்ள பிடிபட்ட அகதிகளிடம் தலைக்கு 500 , 1000 வெள்ளிகள் வரை மிரட்டி வாங்கப்படுகின்றது. இல்லையேல் விடுதலை இல்லை என்றும் கூறப்படுகின்றது.

இதனை மேற்கொள்பவர் மாற்று செயலணியின் தலைவர்களில் ஒருவர் மரியாதை நிமிர்த்தம் வெளியிடவில்லை ஆனால் பணம் கொடுத்தவர்களின் , பணம் கேட்டு துன்புறுத்தப்படுபவர்களின் ஆதரங்கள் தம்மிடம் உள்ளதாக மலேசிய நிருபர் கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப்போரை சாட்டாக கொண்டு தனக்காக நிறைய நிதிகளை திரட்டியவர்களே இந்த தலைவர். உண்மையாக மலேசியாவில் தம்மை அர்ப்பணித்து ஈழமக்களிற்காக வேலை செய்யும் பலர்களில் இவ்வாறானவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆகவே புலம்பெயர் மக்கள் இப்படியான பணக்கறப்பிற்கு யாரும் மலேசியாவில் இருந்து நிதி உதவி கேட்டால் விழிப்பாக இருக்கவும். இங்கு அகதிகள் பிரச்சினைகளை கையாழ்வதற்கு நிதி எதுவும் தேவை இல்லை என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Eelanatham.net

தாய் மண்ணை விட்டு இவ்வளவு கஷ்டப் பட்டு ஓடுபவர்கள் சற்று சிந்திக்க வேண்டும்.

உயிரைப் பணயம் வைக்கும் இந்த முயற்சியை தாய்மண்ணில் இருந்து கொண்டு செய்தால் நாம் எங்கோ போயிருக்கலாம்.

புலம் பெயர்ந்தவர்கள் புலத்தில் உள்ளவர்களின் இத்தகைய முயற்சிக்கு கண்ணை மூடிக்கொண்டு பணத்தை அள்ளி வழங்குவதால் இந்த நிலை தொடருகிறது.

தாய் மண்ணைவிட்டு ஓடும் கலாச்சாரம் நின்று, தாய் மண்ணில் நிலைகொண்டு, சிங்கள இந்திய பயங்கரவாதிகளின் சவால்களை எதிர்கொண்டு பாரிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் கலாச்சாரம் வரவேண்டும்.

இதற்க்கு புலம் பெயர்ந்தவர்கள் உதவுவார்களா?

இதனை புலம்பெயர்ந்தவர்கள் கூறக்கூடாது.

இதனை புலம்பெயர்ந்தவர்கள் கூறக்கூடாது.

நீங்களும் நாட்டைவிட்டு ஓடும் முயற்சியிலோ?

நீங்களும் நாட்டைவிட்டு ஓடும் முயற்சியிலோ?

இல்ல முதலே ஓடி வந்துட்டன். :(:lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெருமளவிலான இடம்பெயர்வுகள் சர்வதேசத்துக்கு தொடர்ந்து பெரும் நெருக்கடியை கொடுக்கும், இதனால் இலங்கை அரசை ஒரு நிரந்தரமான் தீர்வுதிட்டத்தை நோக்கி நகர்த்த பெரும் உந்து சக்தியாக இருக்கும், தமிழருக்கு நிரந்தரமான தீர்வு கிடையாது போனால் இப்படியான இடப்பெயர்வுகள் தொடரும் என சர்வதேசத்துக்கு அறிவுறுத்த வேண்டும், அதற்கான இப்படியான இடம்பெயர்வுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும், 50000 டொடர்களை கொடுத்து உயிரை பணயம் வைத்து வருபவர்கள் பொருளாதார அகதிகள் அல்ல, அவர்களுக்கு உண்மையில் பிரச்சினை இருக்கிறது என சர்வதேசத்தை உணர்த்த, இப்படியான பெருமளவிலான இடம்பெயவுகளை நாம் ஆதரிக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான உதவிகளைபுலபெயர் சமூகம் செய்யவேண்டும்.

மாதன முத்தாவின் கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது.

மீதியாக இருக்கும் 4,000,000 மில்லியன் தமிழர்கள் பலதிசையிலும் இடம்பெயர்வது சர்வதேசத்துக்கு உண்மையில் பிரச்சினையாக இருக்குமா என்று யோசிக்கவேண்டும். பிரச்சனைகளை நேரடியாக ஆதாரங்களை காட்டி தீர்வு தேடுவதை விட்டுவிட்டு, குறுக்கு வழிகளில் தேட நினைப்பதால் எதுவும் சாதிக்கப்படாது என்பது எமது வரலாறு.

இப்படி இடம் பெயர்வர்கள் எத்தனை பேர் சிங்கள பயங்கரவாதிகளின் அயோக்கியத் தனங்களை கூறுகின்றனர்?

இயக்கம் காசு பறிக்கிறது, பிள்ளை பிடிக்கிறது என்று முன்னர் கூறியவர்கள், இப்போது தமிழ் குழுக்கள் காசு பறிக்குது, கொலை செய்யுது என்று தான் கூறுவார்கள்.

தலைவலிக்கு தீர்வு தலையை வெட்டுவதல்ல.

பெருமளவிலான இடம்பெயர்வுகள் சர்வதேசத்துக்கு தொடர்ந்து பெரும் நெருக்கடியை கொடுக்கும், இதனால் இலங்கை அரசை ஒரு நிரந்தரமான் தீர்வுதிட்டத்தை நோக்கி நகர்த்த பெரும் உந்து சக்தியாக இருக்கும், தமிழருக்கு நிரந்தரமான தீர்வு கிடையாது போனால் இப்படியான இடப்பெயர்வுகள் தொடரும் என சர்வதேசத்துக்கு அறிவுறுத்த வேண்டும், அதற்கான இப்படியான இடம்பெயர்வுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும், 50000 டொடர்களை கொடுத்து உயிரை பணயம் வைத்து வருபவர்கள் பொருளாதார அகதிகள் அல்ல, அவர்களுக்கு உண்மையில் பிரச்சினை இருக்கிறது என சர்வதேசத்தை உணர்த்த, இப்படியான பெருமளவிலான இடம்பெயவுகளை நாம் ஆதரிக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான உதவிகளைபுலபெயர் சமூகம் செய்யவேண்டும்.

அரசியல் அகதிகள் இடம்பெயர வேண்டியது கட்டாயமானது. ஆனால் எமது மக்களில் முள்ளிவாய்க்காலிற்கு முன்னர் இடம்பெயர்ந்தவர்களில் பலர் பொருளாதார அகதிகள். இவர்கள் தங்களை அரசியல் அகதிகளாக பதிந்து விட்டு தற்போது சொறிலங்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து அங்கு இனப்பிரச்சனையில்லையென நிறுவிவருகின்றார்கள். இதனால் உண்மையாகவே பாதிக்கப்பட்ட பாதிக்கப்படப்போகின்றவர்களை சர்வதேசம் ஏற்காத நிலைமை வரக்கூடும்.

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்காலிற்கு பின்னர் 36,000 தமிழர்கள் சுமார் 60 நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளதாக ஐக்கிய நாடுகள் கூறுகின்றது. இதில் 10 நாடுகள் முக்கியமானது. இவ்வாறு 36,000 பேர் வந்தும் ஐக்கிய நாடுகள் சபை என்ன கூரியுள்ளது. இலங்கையில் பிரச்சினை தீர்ந்துள்ளது அதன்படி அகதி விண்ணப்பங்கள் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றுதானே கூறியுள்ளது.

எப்படியாவது ஒரு குடும்பத்தில் ஒருவர் வெளி நாட்டில் இருக்க வேண்டியது தேவையானது காரணம் பொருளாதாரத்தில் சிங்களவர்களுடன் போட்டி போட அது உதவும்

அது சரி. குடும்பத்துக்கு ஒருவர் வெளிநாட்டுக்கு செல்லுதல் என்பது மிக நல்ல கருத்து. நான் வரவேற்கிறேன்.

ஆனால், அவர் பின்னர் குடும்பத்தினர் எல்லாரையும் வெளிநாடுகளுக்கு இழுத்துச், கடத்திச் செல்பவராக இருக்கக் கூடாது.

"தாய் மண்ணில் மட்டுமே அவரது ஏனைய குடும்பத்தினர் உறுதியாக காலூன்ற உதவுவேன்" என்ற உறுதிமொழி எடுத்தவர்களைத் தவிர மற்றவர்களெல்லாம் தாய்மண் பற்றற்று, தமிழின உணர்வற்ற ஓடிப்போகும் கீழ்தர மனோவியாதி உடையவர்களாகவே கருதப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.