Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபியின் பணிஷும், தேனீரும் ....

Featured Replies

அரசின் திறைசேரியை நிரப்பும் கே.பி: புதிய தகவல்

குமரன் பத்மநாதன் நடாத்தும் இணையத்தளமான நெரெடோவில், காசுக் கொடுக்கல் வாங்கல் பற்றிய கணக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நிதியுதவிகள் எவ்வாறு கிடைக்கப்பெறுகின்றன என்பது குறித்தோ, அல்லது எவ்வளவு நிதி சேகரிக்கப்பட்டது என்பது குறித்தோ வெளியிடாமல், வெறுமனவே செலவீனங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் வட்டக்கச்சி பாடசாலை ஒன்றிக்கு வினாத்தாள் அச்சடிக்க ரூபா 15,000 கொடுக்கப்பட்டதாகவும், முகாமில் உள்ள மாணவர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பணீசும், தேனீரும் கொடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது அரச கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலைக்கு அரசாங்கமே வினாத் தாள்கள் அச்சடிக்க நிதி வழங்கவேண்டும் அத்தோடு தடுப்பு முகாமில் உள்ளவர்களுக்காக, உலக உணவுத் திட்டம் பல பொருட்களை வழங்குவதோடு, சமீபத்தில் உலக வங்கியும், பல அரச சார்பற்ற நிறுவனங்களும் உதவி புரிந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு தேனீரும் பணீசும் வாங்கிக் கொடுப்பதற்குப் பதிலாக, புத்தகங்கள், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கிக்கொடுத்தால், அவை படிப்பிற்கு உபயோகமாக இருந்திருக்கும். சில புலம்பெயர் மக்கள் கே.பியை நம்பி, அவர் புனர்வாழ்விற்காக அர்ப்பணிப்போடு ஈடுபடுவார் என நினைத்து கொடுக்கப்பட்ட நிதி இவ்வாறு வீணடிக்கப்படுவதோடு, அரச செலவீனங்களைக் குறைக்கவே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்பது தற்போது வெட்டவெளிச்சமாகிறது.

அரசியல் எதுவும் வேண்டாம், நாம் புனர்வாழ்விலும், போராளிகளின் விடுதலையிலுமே கவனம் செலுத்தவுள்ளோம் எனக் கூறிவந்த கே.பி தற்போது அநாகரீகமான அரசியலிலும் இறங்கி, அனைவரையும் அரவணைத்துச் செல்லாது எதிர்ப்பையே சம்பாதித்துவருகிறார். செயல்திறனற்ற, தொலைநோக்கு பார்வையற்ற இவரது செயல்கள் இவர் பின்னால் செல்லும் மக்களையும் குருடர்கள் ஆக்கும் என்பதில் ஐயமில்லை..

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1282742839&archive=&start_from=&ucat=1&

நிதி வரவிற்கான எந்த வித தகவலும் காணப்படாமை இங்கு சந்தோத்தை நிச்சயம் தோற்றுவிற்கும். ஆனால் உதவிகள் போகவேண்டிய தேவையை நாம் உணரவேண்டும். சிறீ லங்கத அரசின் கஜானா காலியானதுடன் பொதுச்செலவை மட்டுப்படுத்த தற்போது உலக வங்கி அறிவுரை கூறியதும் முதல் வெட்டு தமிழ் பகுதியில் தான். இங்கே கேபி அரசியல் செய்கிறாரோ அல்லது அரைஅவயில் செய்யிறாரோ என்னவே அந்த மக்களின் தேவைகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. இன்று அந்த மக்களின் தேவைகள் எப்படியெல்லாம் தீரக்க முடிமோ அது நடை பெறட்டும். அதை விட வேறு வழியில்லை! வயலுக்கிறைத்த நீர் புல்லுக்கு அங்காங்கே வடிவது போல் நிலை தான் அவர்களிற்கும். அதையும் தடுத்து விட்டு அவர்களை பட்டினியாக்குவதா? ஒரு வேளை உணவும் கல்வியுமே இன்யறய தேவை. அதை ஒரு பேய் நிவர்த்தி செய்தாலும் அது அவர்களிற்கு நிம்மதியே!

வடக்கு கிழக்கு இதிலையாவது இணைஞ்சிருக்கே என்டது தான் ஒரே ஒரு சந்தோசம்! NERDO!!!

முழுவிபரமும் இணைப்பும்! இடம்பெயர்ந்த எம்மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட உதவிகள்.

23.08.2010. கடந்த மாதம் NERDO வினால் இடம்பெயர்ந்த எம்மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட உதவிகள். உதவித் தேவைகளோ ஆயிரங்கள். ஆனால் NERDO வினால் தற்பொழுது இயன்றது இவையே.

First Month Report

We paid 15,000 LKR for mid-term exam to print question paper to this school.

Donate Date: 02/8/2010

Total cost: 15,075.30 LKR (Fifteen thousand seventy five & thirty cents)

Also this school we paid 15,000 LKR for mid-term exam to print question paper.

We paid 450,000.00 LKR for 450 surrenders, which are going to attend the A Level exam. These expenses for the past month were spent on serving tea & bun.

NERDO donated 5,000 LKR to Mr.K.Puwaneshwaran ,the war victim for his AL exam expenses. (I.E food and travelling.)

Reference :-

Virakesari Newspaper

பரீட்சை எழுதும் 367 சரணடைந்த போராளிகள்

இன்று ஆரம்பமாகின்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய வன்னிப்பிரதேச மாவட்டங்களில் இருந்து 2500 மாணவர்கள் இம்முறை தோற்றவுள்ளதாக மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்.

இதேவேளை மருதமடு ஓமந்தை பூந்தோட்டம் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய இடங்களில் உள்ள புனர்வாழ்வு மையங்களில் உள்ள சரணடைந்தவர்களில் இருந்து 367 பேர் இந்தப் பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் கூறினார். போர்ப்பயமற்ற அமைதியான சூழலில் முதற் தடவையாக இந்த முறை வன்னிப்பிரதேச மாணவர்களுக்குப் பரீட்சை எழுதுவத்றகுச் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பரீட்சைக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். புனர்வாழ்வு மையங்களில் உள்ள சில பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை அனுமதி அட்டைகள் வந்து சேர்வதில் ஏற்பட்டிருந்த சிக்கல்களுக்கும் தீர்வு காணப்பட்டு அவர்களும் எந்தவிதமான கஷ்டமுமின்றி இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் புனர்வாழ்வு மையங்களைச் சேர்ந்த பரீட்சார்த்திகள் 367 பேருக்கும் ஆசி வழங்கும் வகையில் அவர்களைப் பரீட்சைக்கு ஆயத்தம் செய்வதற்கான கல்வியூட்டலில் பங்கெடுத்த ஆசிரியர்கள் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிமனை மேலதிக மாகாணக் கல்விப் பணிமனை வடமாகாண கல்வித் திணைக்களம் வடமாகாணக் கல்வி அமைச்சு சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ஆகியோரின் சார்பில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய வித்தியா விநாயகர் ஆலயத்தில் பொங்கலுடன் கூடிய விசேட பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் நூல் கட்டப்பட்டது.

இந்தப் பரீட்சார்த்திகளுக்கான கல்வியூட்டலுக்கு நேர்டோ மற்றும் வொவ்கொட் ஆகிய தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளையும் அனுசரணையையும் வழங்கியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த 367 பரீட்சார்த்திகளுக்கும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மேலதிகக் கல்விப் பணிப்பாளர் ப.அரியரத்தினம் தெரிவித்தார்.

Edited by Bond007

போலிச் செய்திகளை இணைக்கும் போக்கிரிகள், நேற்று வந்தவர்கள் அடாவடித்தனமாக உதவிகள் செய்வதாக சிங்கள பயங்கரவாதிகளின் பிடியில் இயங்கும் வீரகேசரியை ஆதாரமாக காட்டுவது வேடிக்கை.

போலிச் செய்திகளை இணைக்கும் போக்கிரிகள், நேற்று வந்தவர்கள் அடாவடித்தனமாக உதவிகள் செய்வதாக சிங்கள பயங்கரவாதிகளின் பிடியில் இயங்கும் வீரகேசரியை ஆதாரமாக காட்டுவது வேடிக்கை.

ஹா ஹா ஹா... ஐயோ ஐயோ.... புத்தி நல்லாதான் பேதலிச்சுப்போச்சு இனியும் உங்க்ள தரவளியோடை கதைச்சால் எனக்கும் தட்டிப்போடும்... நன்றி வணக்கம்

ஹா ஹா ஹா... ஐயோ ஐயோ.... புத்தி நல்லாதான் பேதலிச்சுப்போச்சு இனியும் உங்க்ள தரவளியோடை கதைச்சால் எனக்கும் தட்டிப்போடும்... நன்றி வணக்கம்

தட்டிப்போன கூட்டத்திற்கு இனியும் தட்டிப் போவதற்கு என்ன இருக்குதோ தெரியவில்லை?

  • தொடங்கியவர்

வயலுக்கிறைத்த நீர் புல்லுக்கு அங்காங்கே வடிவது போல் நிலை தான் ...

ம்ம்ம்ம்ம்... உந்த வயலுக்கு இறைக்கிறதெல்லாம் புல்லுக்கெல்லோ முழுக்க போகுது! நெல்லுக்கு இடைக்கிடை பொசியுது கண்டீயளோ!!! ... உந்த கேபி கள்ளக்கடத்தல்கார கூட்டத்தையும் விட்டுட்டு, நெடியவன் வயித்து நிரப்பு கூட்டத்தையும் விட்டுட்டு .... சிங்களவனின் கஜானாக்களை நிரப்புவதை விடுத்து அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாமோ, அவ்வாறு உதவுவோம்!

உந்த வயித்து நிரப்பு கூட்டத்தின் செயற்பாடுகளால், கள்ளக்கடத்தல்கார கூட்டத்தின் காட்டில் அடைமழை தற்போது .... அது பணிசுகொடுக்குதாம்!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கூட்டங்களையும் நாம் கைவிட்ட விட்டு

உங்களிடம் காசு தருகிறோம் அங்கு சென்று மக்களுக்கு நீங்கள் பணிசு வேண்டி தீத்தி விடுறீங்களோ?

ம்ம்ம்ம்ம்... உந்த வயலுக்கு இறைக்கிறதெல்லாம் புல்லுக்கெல்லோ முழுக்க போகுது! நெல்லுக்கு இடைக்கிடை பொசியுது கண்டீயளோ!!! ... உந்த கேபி கள்ளக்கடத்தல்கார கூட்டத்தையும் விட்டுட்டு, நெடியவன் வயித்து நிரப்பு கூட்டத்தையும் விட்டுட்டு .... சிங்களவனின் கஜானாக்களை நிரப்புவதை விடுத்து அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாமோ, அவ்வாறு உதவுவோம்!

உந்த வயித்து நிரப்பு கூட்டத்தின் செயற்பாடுகளால், கள்ளக்கடத்தல்கார கூட்டத்தின் காட்டில் அடைமழை தற்போது .... அது பணிசுகொடுக்குதாம்!!!!!!!!!!

கே.பி கள்ளக்கடத்தல் காராணக மாறியதே விடுதலைப் புலிகளிற்காக! இல்லாது போனால் பட்டப்படிப்பை முடித்து உஙகளைப்போல் வெளி நாடு வந்திருக்கலாம்....

ஒரு விடயம் மனிசன் கேக்கிற கேள்விக்கு மறுமொழியாவது கொடுக்குது ஆனால் இங்கை காசை சுருட்டியவை....

உங்கள் கேள்விக்கு கே.பியின் பதில்...

Q: But some media organs run by Diaspora Tamils are criticizing NERDO for this and saying that there was no need for you to do these and that the govt should have done it?

That is what these people will say but the reality is different on ground. Unlike these sections of the Diaspora we are not attacking the govt or pinpointing alleged faults. Unlike the Diaspora those of us working at ground level are in a partnership with the govt.

It is not an “ us and them” thing with the govt. It is a case of “We” where the govt and we must do the best we can unitedly to help our people. The govt is also short of funds in some matters. Are we we to then blame the govt, sit back and do nothing about helping our people?

The people in the Diaspora who say things like this must understand that the govt could very well have forbidden the rehabilitees from sitting for the AL exam citing security concerns. They did not do so and despite the difficulties arranged for them to sit for exams and supplied food and provided transport and personnel.

An Australia based Tamil NGO helped with study materials and supplementary teacher expenses and stationery etc. We helped to make arrangements on ground for this. Then we at NERDO helped to provide buns and tea.

So it was a joint effort by three parties the govt, the Aussie NGO and NERDO to help our students sitting for the exam. The govt bore the major share of expenses and effort in this. The Diaspora must stop these stupid attacks.

  • தொடங்கியவர்

... சிங்களத்தின் காலியான கஜாணாவை நிரப்ப ... உந்த கேபியின் இன்றைய இலக்கு பணம் ... பணம் ... பணந்தான்!!!! வேறொண்றுமில்லை!! அந்த பணத்தை புலம்பெயர் எம்மவர்களிடமிருந்து பெற, அவருக்கு கிடைத்த ஆயுதம் ... சரணடைந்த போராளிகளும், முகாமில் அடைபட்டுக் கிடக்கும் பொதுமக்களுமே!

உந்த ஓநாயின் அழுகைக்கு, மே18இலிருந்து இன்று வரை புலத்திலுள்ள காஸ்ரோக்களின் செயற்பாடுகள், ஓநாயின் அழுகையை பல மக்களை நம்பச்செய்கிறது!!! இன்று வரை வன்னியில் அவலப்படும் மக்களுக்காக, புலம்பெயர் காஸ்ரோக்கள் எதையாவது செய்ய முற்படவில்லை!!

இறுதிக்காலங்களில் திரட்டப்பட்ட நிதிகளில், பல கோடிகள், இந்த காஸ்ரோக்களினால் கலைஞர் கருணாவின் குடும்பத்துக்கு தானமாக வழங்கப்பட்டிருக்கிறது(விபரமாக எழுத விரும்பவில்லை). மிகுதிகள் இன்று பலராலும் சுற்றப்படும் நிலையில்!!! ... அம்மக்களுக்கு இவற்றை மே18 இனூடு திருப்பியிருந்தால் ... இன்று இந்த கேபி எனும் ஓநாயின் அழுகைக்கு சந்தர்ப்பம் இருந்திருக்காது!!!!

நேற்றும் இன்னொரு முன்னால் ... GTVயில் ஓநாய் அழுகை விட்டுக் கொண்டிருந்தார்!! ஆச்சரியமாக இருந்தது!!!! உந்த முன்னாளின் காலத்திலேயே சுவிஸில் இருந்த மன்மதன் பல கோடிகளுடன் கனடாவிற்கு எஸ்கேப்பானவர்!!!! அதை விட உந்த ஓநாயின் உத்தரவின் படியே நாதன், கஜன் பாரீஸில் படுகொலையும் செய்யப்பட்டனர்!! ... இன்றோ போராளிகளை காப்பாற்ற தான் வெளிக்கிட்டுட்டாராம்!!!!!!!!!!!??????????

சரி, உந்த கேபி எண்டவரை, 2001இல் கழட்டி விட்டுட்டாங்கள் என்றால், நீ உண்மையில் உந்த இயக்கத்தையோ/விடுதலையையோ/மக்களின் விடிவையோ நேசித்திருந்தால் ... உன் வசமிருந்த நிதி/சொத்துக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்திருப்பாய்!!!!!!!!!... உதை கவனியாது விட்ட தவறு தலைமையினுடையது, உண்மைதான் ... நீ, ஏன் அதை செய்யவில்லை?????? இன்று அந்நிதிகள்/சொத்துக்கள் எல்லாவற்றையும் சிங்களத்தின் கைகளில் அல்லவா ஒப்படைத்திருக்கிறாய்!!!!

உந்த இயமனுக்கே ஆப்படிக்கும் கேபியை விட, குத்தி டக்லஸோ, தண்ணிக்குட்டி சித்தார்தனோ ஆயிரம் மடங்கு மேலானவர்கள்/நம்பக்கூடியவர்கள்!!

Edited by Nellaiyan

  • தொடங்கியவர்

.... உந்த ஓநாய் அழுகைகளின் பின்னணியில் ... சிங்களத்துக்கு ஒரு கல்லில் இரு மாங்காய்கள்!!! ... பணமும் கஜாணாவை நிரப்புகிறது, அவன் செய்து விட்ட மனித உரிமை மீறல்களுக்கான நீதி கேட்ட போராட்டமெல்லாம் மெல்ல மெல்ல அடங்குகிறது!!!

ஆனால் நாமோ ... உலகத்தில் இரண்டாவது மூளைசாலியான இனமோ?????????????

காஸ்ட்ரோவிற்கு ஆதரவாக, எதிராக,

KP க்கு ஆதரவாக, எதிராக,

யாழ் களத்தில் எழுதி பிரச்சினைகளை உருவாக்கும் தமிழின விரோதிகளை அடையாளம் காண முடிகிறது.

அதுவும் ஒருசிலர் குறித்த ஒருவரின் செய்திகளை உலாவவிடுவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதையும் அடையாளம் காண முடிகிறது.

யாழ் களத்தில் தொடர்ந்து எழுதிவரும் இந்த தமிழின விரோதிகள்,

- தமிழினப்படுகொலை செய்துவரும் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும்

- தமிழினப்படுகொலை செய்ய தொடர்ந்து உதவிவரும் இந்திய அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும்

- தமிழினப்படுகொலை செய்ய தொடர்ந்து உதவிவரும் தமிழ் ஒட்டுக் குழுக்களின் கைக்கூலிகளாக இருக்கவேண்டும்

தமிழ் மக்கள் யாழ் களத்தில் தொடர்ந்து நடமாடிவரும் இந்த தமிழின விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளட்டும்.

தமிழின அழிப்பில் ஈடுபட்டு வரும் சிங்களப் பயங்கரவாதிகளின், தமிழின அழிப்பிற்கு தொடர்ந்து உதவிவரும் வட இந்திய பயங்கரவாதிகளின், ......., பிடியில் இருக்கும் எவரையும் நம்பமுடியாது. நம்ப வேண்டியதில்லை.

திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தமிழ்ப் பழமொழி.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இது செல்லுபடியாகும்.

தமிழினப்படுகொலை செய்துவரும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவான இந்த விரோதிகளுக்கு எதிராக கருத்துக்களை ஒருசிலர் தொடர்ந்து எழுதி அவர்களின் நோக்கத்துக்கு துணை போகாமல் இருந்தால் நல்லது. சிந்தித்து பொருத்தமான சில கருத்துக்களை எழுதியபின் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது, என்பது எனது தாழ்மையான கருத்து.

ஒரு சிலர் தொடர்ந்து இத்தகைய விவாதங்களில் அறிந்தோ - அறியாமலோ தொடர்ந்து ஈடுபடுவது தமிழின விரோதச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் சதிகாரர்களுக்கு துணை போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

Facial_expressions.gif

  • தொடங்கியவர்

திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது தமிழ்ப் பழமொழி.

உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இது செல்லுபடியாகும். .

அண்ணோய், கொண்ணுட்டீங்க!!!!!!!! அறிவு!!! ம்ம்ம்ம்.... இன்று வினையும் இல்லை, தினையும் இல்லாமல் போயுட்டுது!!!!!!candle_in_skull_2.gif

கே.பீயை கண்ணால் கூடா காணதவர்கள் கூறும் கதைகளை நம்பும் நீங்கள் அவருடன் நெருங்கி பழகிய நண்பர்களிட்ம் கேட்டால் அவரைப்பற்றி தெரியும். 2001இல் கே.பி வெளியேற்றியதும் அவரிடம் இருந்த அனைத்து இயக்க சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்தை இன்று பலர் மறைப்பதன் மர்மம் என்ன? கே.பியை பற்றி பல வித மான வதந்திகளை பரப்புவதன் மூலம் தாம் தப்பவும் பல கோடி சொத்துகளை முடக்கவே இன்று பலர் முனைவதுடன் கே.பி எதிர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கே.பியிடம் மீள ஒப்படைக்கப்பட்ட சில சொத்துகள் கே.பியின் கைதின் பின் இலங்கை வசம் சென்றது உண்மைதான். ஆனால் இவை விரும்பி ஓப்படைத்தவை அல்ல! கே.பியின் கைதுக்கு உதவிய பலர் இன்று புலம் பெயர் மண்ணில் கோடீஸ்வரன்கள்! கே.பி ஒரு நோயாளி! மருந்துகளுடன் வேகமாக மரணத்தை நோக்கி செல்லும் ஒருவர். இவர் இலங்கை புலனாய்வுடன் இலங்கை சென்றதாக கதை கட்டுபவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா?

ஒரு நோயாளியான கே.பி தனக்கு பாதுகாப்பான வசதியான இடமான தாய்லாந்தை விட்டு மலேசியா வந்ததது ஏன்?

இலங்கை புலனாய்வுடன் வேலைசெய்யும் ஒருவரை வெளிநாட்டில் சுதந்நதிரமாக இயங்க வைக்காது இலங்கையில் வைத்து இயங்கவைப்பதால் என்ன பலன்?

வெளிநாடுகளில் உள்ள நிதியை மடக்க கே.பி இலங்கையுடன் இணைந்து வேலை செய்தவராயிருந்தால் அவரை ஏன் இலங்கைக்கு கெண்டு சென்று அடைத்து வைத்திருக்கவேண்டும்?

நடேசனின் சரணடைவுக்கு மத்தியஸ்தம் வகித்த ரைம்ஸ் நிருபர் மேரியுடன் தொடர்பு கொண்டு மே17இற்கு பின் நடந்தவற்றை ஏன் தமிழ்நெற் போடவில்லை?

இலங்கை சென்று கே.பியை சந்தித்து திரும்பிய முக்கியஸ்தர் ஒருவரிடம் கரும்புலிகளாக மாறி தற்போது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளின் பேட்டிகள் இருந்தும் அதை தமிழ் நெற்றிலோ அல்லது மற்ற இணையங்களிற்கு கொடுக்க தயங்குவது ஏன்?

ஐயா இப்படி பல கேள்விகளுக்கு பதில் கூறாது புனைபெயர்களில் சைக்கிள் ஓட்டும் பலரின் முகத்திரைகள் கிழியும் நாள் வெகு தொலைவில் இல்லை!

து}ற்றுவார் து}ற்றட்டும் நான் செய்ய வேணடடிய கடமையை செய்த பின்னர் தான் என்னை மரணம் தழுவும் என்று உறுதியுடன் செயற்படும் கே.பியை நீங்கள் து}ற்றுங்கள்இ ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து சேர்க்கப்பட்ட அந்த ஆயிரக்கணக்கான இளைஞரடகளும் யுவதிகளும் இன்று போற்றுகிறார்கள். அது போதும் அந்த மனிசனுக்கு!

அன்புடையீர்

எமது நிறுவனத்தினால் ஆரம்பிக்க இருக்கும் அநாதைகள் இல்லத்திற்கு (அன்பு இல்லம்) தானாக விரும்பி தொண்டு செய்ய விரும்புவோர் தேவை.

குறிப்பாக போரினால் தாய், தந்தையரை இழந்த அநாதைகளாக எதிர்காலமே கேள்விக்குறியாக ஏங்கி தவிக்கும் குழந்தைகளை பராமரிப்பது, அன்பு செலுத்துவது, கல்வி ஊட்டுவது, எதிர்காலத்தை வளமாக்குவது இந்த நோக்கங்களுக்காக ஆரம்பிக்க இருக்கும் எமது “அன்பு இல்லத்திற்கு” தன்னார்வத் தொண்டர்கள் அவசரமாக தேவைப்படுகின்றனர் இச் சேவையினை செய்ய விரும்புவோர் தயவு செய்து உடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி;

நிர்டோ

இல.10, முதலாவது ஒழுங்கை,

கதிரேசுவீதி,

வைரவபுளியங்குளம்,

வவுனியா.

Email: info@nerdo.lk

Mobile: 0094 (0)712141128

இலங்கை புலனாய்வுடன் வேலைசெய்யும் ஒருவரை வெளிநாட்டில் சுதந்நதிரமாக இயங்க வைக்காது இலங்கையில் வைத்து இயங்கவைப்பதால் என்ன பலன்?

வெளிநாடுகளில் உள்ள நிதியை மடக்க கே.பி இலங்கையுடன் இணைந்து வேலை செய்தவராயிருந்தால் அவரை ஏன் இலங்கைக்கு கெண்டு சென்று அடைத்து வைத்திருக்கவேண்டும்?

மலேயாவின் பெற்றோனஸ் கோபுர கட்டிடத்தில் 100 றிங்கிற்கள் கட்டணமாக அறவிட்டு KP யால் கைது செய்ய பட்ட பின்னர் வர்த்தகர்களுடன் ஒரு கூட்டம் நடந்ததே கடந்த ஆனி மாதத்தில்....!

KP வெளி நாட்டில் இருந்தால் இது எப்படி சாத்தியம்....?? இப்ப தான் KP அண்ணர் தேடப்படும் குற்றவாளி இல்லையே...

எனக்கு தெரிய பல உறவுகள் போராளிகளான பலர் முகாம் களில் அடைபட்டு இருக்கிறார்களே...! அவர்களுக்கு KP உதவியதாக எதுவும் தெரியாதே...?? ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் இராணுவத்துக்காலை செய்கிறாரோ...? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில ஒரு பதினெட்டுப்பேரும் அதுதவிர சேரமான் அதியமான் தாய்நிலம் பதிவு சங்கதி என்றொரு ஐந்தாறு ஊடகவியலாளர்களும்.. - அதில பலர் முகமூடிகள் - மட்டும்தான் கேபி.. பீப்பி.. நெடியவன்.. வெடியவன்.. துரோகி தியாகி என்று சண்டை பிடிச்சுக்கொண்டிருக்க மிகுதி லட்சத்துச் சொச்ச மக்களும் இதைப்பற்றி எதையும் அலட்டிக் கொள்ளாமல் - கொலிடேயில - கசூர்ணா பீச்சிலும் சாளை கடலிலும் நல்லுர்திருவிழாவிலும் நிற்கினம்.

ஒரு பெரும் பிரளயம் முடிந்து வெறும் ஓராண்டு முடியும் தருணத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் நாட்டுக்குப் படையெடுக்கினம் என்றால் என்ன அர்த்தம்..சனம் குண்டியில தட்டிட்டு போக ரெடியாகிட்டினம் என்றுதான். சனங்கள் தங்களுக்குத் தேவையில்லையென்று முடிவெடுத்துவிட்ட ஓர் அரசியலை புலத்தில யார் செய்தும் பிரியோசனம் இல்லை.

அது நேரம் இங்கை நடக்கிற பிக்கல்கள் பிடுங்கல்கள் ஒரு இனத்தின் பாற்பட்டவையும் அல்ல.. அது சில சண்டியர்களின் தனிப்பட்ட சண்டை. அதானல நமக்கு 5 சதத்துக்கும் பிரியோசனம் இல்லையென்று சனங்கள் விளங்கிக் கொண்டு விட்டார்கள் என்பதுதான் உண்மை.

மலேயாவின் பெற்றோனஸ் கோபுர கட்டிடத்தில் 100 றிங்கிற்கள் கட்டணமாக அறவிட்டு KP யால் கைது செய்ய பட்ட பின்னர் வர்த்தகர்களுடன் ஒரு கூட்டம் நடந்ததே கடந்த ஆனி மாதத்தில்....!

KP வெளி நாட்டில் இருந்தால் இது எப்படி சாத்தியம்....?? இப்ப தான் KP அண்ணர் தேடப்படும் குற்றவாளி இல்லையே...

எனக்கு தெரிய பல உறவுகள் போராளிகளான பலர் முகாம் களில் அடைபட்டு இருக்கிறார்களே...! அவர்களுக்கு KP உதவியதாக எதுவும் தெரியாதே...?? ஒருவேளை சொல்லாமல் கொள்ளாமல் இராணுவத்துக்காலை செய்கிறாரோ...? :rolleyes:

தயா நீங்கள் சும்மா ஒவரு முறையும் இப்படி கற்பனையாக விடுவீர்கள் மற்றவர்களுக்கு நம்புவதுக்கு கேபி மீண்டும் இலங்கையை விட்டு வெளியேறினாரா?

நெடியவன் யாழ்ப்பணம் போய் வந்தது தெரியுமா? மட்டகளப்பில் யாரை யாரை சந்தித்தார் என்று தெரியுமா? அப்போ அது எல்லாம் பொய்யா? :D:lol::lol:

தயா நீங்கள் சும்மா ஒவரு முறையும் இப்படி கற்பனையாக விடுவீர்கள் மற்றவர்களுக்கு நம்புவதுக்கு கேபி மீண்டும் இலங்கையை விட்டு வெளியேறினாரா?

நெடியவன் யாழ்ப்பணம் போய் வந்தது தெரியுமா? மட்டகளப்பில் யாரை யாரை சந்தித்தார் என்று தெரியுமா? அப்போ அது எல்லாம் பொய்யா? :lol::rolleyes::lol:

நான் சொன்னது பொய்யா இல்லையா எண்று மலேயாவில் வாழும் தமிழர்களிடம் முக்கியமாக அழைப்பு விடப்பட்ட தொழில் அதிபர்களிடம் விசாரித்து பாக்கலாமே...?? கூட்டத்தை ஒழுங்கு செய்த அதே கூட்டத்தால் கரும்புலிகள் நாளும் கொண்டாடப்பட்டது என்பதுதான் வேடிக்கை...!

மிக முக்கியமாக நெடியவன் எண்டது யார் எண்டே எனக்கு தெரியாது.... முடிந்தால் அறிமுகப்படுத்திவயுங்கள்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.