Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் மீது பார்வையைத் திருப்பும் பேரினவாதக் கட்சி

Featured Replies

பேரினவாத ஆதரவுத் தளத்தையே தமது அரசியலுக்கு நம்பியிருந்த ஜே.வி.பி., இப்போது சிறுபான்மையினரை நோக்கி தமது பார்வையைத் திருப்பியிருக்கின்றது. இடம்பெயர்ந்து மீளக்குடியேறியவர்களின் நிலைமைகளை வடபகுதிக்குச் சென்று நேரில் பார்வையிட்ட ஜே.வி.பி.யின் தலைவர்கள், கடந்தவாரம் தமிழ் ஊடகவியலாளர்களை கொழும்பில் பிரத்தியேகமாகச் சந்தித்துக் கலந்துரையாடியிருக்கின்றார்கள். சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்கள் இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். தமிழ் ஊடகவியலாளர்களுடன் ஜே.வி.பி. 'நெருக்கமான முறையில்" சந்திப்பது இதுதான் முதன் முறையாகும்.

போர் முடிவடைந்த பின்னர் ஜே.வி.பி.யின் தொனி சற்று மாற்றமடைந்திருப்பதைத் தெளிவாகவே பார்க்கக்கூடியதாக இருக்கின்றது. போர் முடிவடையும் வரையில் அதற்கு முழுமையான ஆதரவை வழங்கி, அதனை ஊக்குவித்த ஜே.வி.பி., போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தத் தொடங்கியது. போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதையிட்டு அலட்டிக்கொள்ளாத ஜே.வி.பி., போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழர்கள்பால் அனுதாபத்தை வெளிப்படுத்தத் தொடங்கியது. இதன் மூலமாக ஜே.வி.பி.யின் அணுகுமுறையில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகியது. இதற்கு ஒருபடி மேலே சென்ற ஜே.வி.பி.யின் தலைவர்கள் வன்னி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் சென்று இடம்பெயர்ந்த மக்களுடைய துயர்களில் பங்குகொண்டனர்.

தமிழ் மக்கள் தொடர்பிலான தமது அணுகுமுறையை ஜே.வி.பி. மாற்றிக்கொண்டாலும், தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஊடகங்கள் ஜே.வி.பி. மீதான விமர்சனங்களைத் தொடர்ந்துகொண்டிருந்தமைதான் அவர்களுக்குப் பிரச்சினையைக் கொடுப்பதாக இருந்திருக்கலாம். ஜாதிக ஹெல உறுமயவை எவ்வாறு ஒரு இனவாதக் கட்சியாக தமிழ் ஊடகங்கள் பார்க்கின்றனவோ அதேபோலத்தான் ஜே.வி.பி.யையும் ஒரு இனவாதக் கட்சியாகவே ஊடகங்கள் விமர்சித்தன. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். குறிப்பாக போர் வெற்றிக்கு ஜே.வி.பி. கொடுத்த முக்கியத்துவமும், சமாதான முயற்சிகளுக்கு எதிராகவும், அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களுக்கு எதிராகவும் ஜே.வி.பி. மேற்கொண்ட போராட்டங்கள் இதற்கு பிரதான காரணமாக இருந்துள்ளன.

இந்தப் பின்னணியில் தம்மீதான இந்த இமேஜை மாற்றியமைப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் தமிழ் ஊடகவியலாளர்களுடன் ஒரு பிரத்தியேகச் சந்திப்பை நடத்துவதற்கு ஜே.வி.பி. திட்டமிட்டது எனக் குறிப்பிலாம். ஜே.வி.பி. தொடர்பில் தமிழ் மக்களுக்குள்ள சந்தேகங்கள் மற்றும் அச்சங்களைப் போக்குவதற்கான முயற்சிக்கு இந்தச் சந்திப்பை அவர்கள் பயன்படுத்த முயன்றார்கள். கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் மோகன் ஆகியோர் இச்சந்திப்பில் பங்குகொண்டனர். கொழும்பிலுள்ள அச்சு மற்று இலத்திரனியல் ஊடகங்களில் பணிபுரியும் தமிழ் ஊடகவியலாளர்கள் இச்சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தமிழ்ப் பகுதிகளில் இதுவரைகாலமும் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ளாத நீங்கள் இப்போது தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாக வடபகுதியில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான காரணம் என்ன என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சோமவன்ச, 1980 களில் தமது கட்சி வடபகுதியில் அரசியல் செயற்பாடுகளை மேற்கொண்டது என்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் ஸ்தாபக தலைவர் றோஹண விஜயவீர, யாழ்ப்பாணப் பகுதிகளிலும் கூட தன்னுடைய தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்டிருந்தார். ஆனால் 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர், வடபகுதியில் ஆயுதக்குழுக்களின் செல்வாக்கு அதிகரித்திருந்த தருணத்தில் தாம் வடபகுதியில் அரசியல் செயற்பாடுகளைத் தவிர்த்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஜே.வி.பி. சிறுபான்மையினருக்கு எதிரான, பேரினவாதக் கருத்துக்களை முன்னெடுக்கும் ஒரு கட்சி என முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை எனவும் தெரிவித்த சோமவன்ச அமரசிங்க, இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் சம உரிமைகளைக் கொண்டவர்கள் என்பதே தமது நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இனநெருக்கடிக்கான தீர்வைப் பொறுத்தவரையில் இந்த நாட்டு மக்கள் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலென்ன அவர்கள் இந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் சென்று வசிப்பதற்கான உரிமையைக் கொண்டவர்கள் என்பதை ஜே.வி.பி. ஏற்றுக்கொள்கின்றது. அத்துடன் இந்நாட்டிலுள்ள சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தேசிய மொழிகளாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்பதை முதல் முறையாக ஜே.வி.பி.தான் ஏற்றுக்கொண்டு பகிரங்கமாகக் கோரிக்கை முன்வைத்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. ஒருபோதுமே தமிழருக்கு எதிரான முறையில் செயற்பட்டதில்லை. எனினும் சில தமிழ்க் கட்சியினரே ஜே.வி.பி. தமிழருக்கு எதிரான ஒரு கட்சி என ஜே.வி.பி.யைப் பற்றி தவறான அபிப்பிராயத்தைப் பரப்பி வருகின்றார்கள் எனவும் தெரிவித்த சோமவன்ச, தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளும் தேசிய மொழிகளாகப் பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்பதை கட்சிக் கொள்கையாக முதல் முறையாக ஏற்றுக்கொண்ட கட்சி ஜே.வி.பி.தான். இன்றும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களுடைய போராட்டங்களைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மிதவாதப் போராட்டங்களும் தோல்வியடைந்துவிட்டது, அதேபோல விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டமும் தோல்வியடைந்துவிட்டது. இதற்குக் காரணம் அவர்களுடைய போராட்டத்துக்கு மக்களுடைய முழுமையான ஆதரவு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்த ஜே.வி.பி. தலைவர், ஜே.வி.பி. இரண்டு தடவைகள் ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்த போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைப் பலிகொடுத்தது. ஆனால் இன்றும் எமது போராட்டம் தோல்வியடையவில்லை எனத் தெரிவித்தார். தமது கட்சி மக்களுடைய ஆதரவைப் பெற்றுள்ள ஒரு கட்சியாக இருக்கும் அதேவேளையில், மக்கள் மத்தியில் தீவிரமாகச் செயற்பட்டுவருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கையும், உங்களுடைய கொள்கையும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கின்றது என்ற ஒரு கருத்து தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது என ஊடகவியலாளர் ஒருவர் சுட்டிக்காட்டியபோது, - ~~ஜாதிக ஹெல உறுமயவுடன் எமது கட்சியின் கொள்கைகளைப் பலரும் ஒப்பிடுகின்றார்கள். இருந்த போதிலும் அந்தக் கட்சியின் கோட்பாடுகள் வெறுமனே இனவாத அடிப்படையைக் கொண்டதாகவே இருக்கின்றது. ஆனால் எமது கட்சியின் கொள்கைகள் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இல்லை|| எனவும் தெரிவித்த சோமவன்ச, அண்மையில் தானும் தனது கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்த்தர்களும் வடபகுதிக்கு நேரில் சென்று மக்களுடைய அவலங்களைப் பார்வையிட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

தாம் சென்ற பகுதிகளில் தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு சிறப்பான வரவேற்புக் கிடைத்ததாகவும் தெரிவித்த அவர், தமிழ் மக்கள் தம்மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை இதன் மூலமாக தான் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது எனவும் குறிப்பிட்டார். தம்மை ஒரு இனவாதக் கட்சியாக தமிழ் மக்கள் பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்ட அவர், இந்த நாட்டில் பிரிவினைவாதக் கோரிக்கையைத் தோற்கடிக்க வேண்டும், நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை தாம் ஆதரித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால் அரசாங்கம் இப்போது தவறான பாதையில் செல்கின்றது எனவும் அரசின் செயற்பாடுகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

குறிப்பாக குடும்ப நலன்களை நோக்கமாகக் கொண்டு, சர்வாதிகாரப் போக்கில் அரசாங்கம் செல்கின்றது எனவும் விமர்சித்த சோமவன்ச, அரசாங்கத்தின் இந்தப் போக்குக்கு எதிராக தாம் மக்களுடைய ஆதரவைத் திரட்டிவருவதாகவும் தெரிவித்தார். மக்கள் மத்தியில் இது தொடர்பான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்துவதற்காக கிராமம் கிராமமாக பிரச்சார இயக்கங்கள் ஜே.வி.பி.யினால் நடத்தப்பட்டுவருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தக் கூட்டங்களில் தமக்கு மக்களின் ஆதரவு பெருகிவருவதாகவும் கூறினார். அரசாங்கம் மக்கள் மத்தியில் தற்போது செல்வாக்கிழந்துவருவதை இந்தக் கூட்டங்களில் தன்னால் காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வுpலைவாசி உயர்வு போன்ற மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதில் அரசாங்கம் தவறிவிட்டமையால், மக்கள் அரசின் மீது அதிகளவுக்கு விரக்தியடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர், இந்தப் பிரச்சினைகளையே தாம் இப்போது மக்கள் மத்தியில் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதில் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர், இல்லையெனில் மக்களைத் திரட்டிய தமது போராட்டங்கள் தொடரும் எனக் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி.யினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்ட போதிலும், தமிழர்களைக் கவர்வதற்கான நோக்கத்துடனேயே இந்தக் கூட்டம் முக்கியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பாக ஜே.வி.பி. அக்கறை செலுத்தவில்லை. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையிட்டு மக்களைக் கவரும் வகையிலான போராட்டங்கள் எதனையும் நடத்தத் துணியவில்லை. குறிப்பாகச் சொல்லப்போனால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதற்கு எதிராக அறிக்கைகளை வெளியிடுவதற்கக் கூட ஜே.வி.பி. துணியவில்லை.

இந்த நிலையில் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் போன்ற பிரச்சினைகளுக்காக ஜே.வி.பி. இப்போது குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. சரத் பொன்சேகாவை விடுவிக்குமாறு கோரி காலி நகரையே ஸ்தம்பிதமடையச் செய்யும் வகையில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்திய ஜே.வி.பி. அதே வேகத்துடன் முகாம்களிலுள்ள தமிழர்களின் விடுதலைக்காகவும் போராட்டங்களை நடத்துவார்களா? அவ்வாறு நடத்தினால் இனவாதத்தை ஒதுக்கிவைத்துவிட்டு ஜே.வி.பி.யினர் செயற்படுகின்றார்கள் என நிச்சயமாக நம்பலாம்!

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து சத்தியன்.

http://www.pooraayam.com/news-analysis/734-2010-08-27-01-11-29

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.