Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்ணியல் விநோதங்கள்...

Featured Replies

  • தொடங்கியவர்

வேற்றுக் கிரகம் ஒன்றில் வாழும் வேற்றுக் கிரகவாசிகள் அனுப்பியதாக சந்தேகித்தக்க மின்னலைகளை தாங்கள் உணர்ந்திருப்பதாக இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் நியுசயன்ரிஸ்ட் விஞ்ஞான சஞ்சிக்கைக்கு விஞ்ஞானிகள் தெரித்துள்ளனர்...! இருப்பினும் இது அறுதியும் இறுதியுமாக வேற்றுக்கிரவாசிகள் அனுப்பிய மின்னலை அறிவிப்புக்கள் தான் என்று தீர்க்கமாக தீர்மானிக்க முடியவில்லை என்றும் செய்திகள் மேலும் சொல்கின்றன...!

________________

Could Space Signal Be Alien Contact?

Science - Reuters to My Yahoo!

An unexplained radio signal from deep space could -- just might be -- contact from an alien civilization, New Scientist magazine reported on Thursday.

The signal, coming from a point between the Pisces and Aries constellations, has been picked up three times by a telescope in Puerto Rico.

New Scientist

But the mystery beam has excited astronomers across the world....

"If they can see it four, five or six times it really begins to get exciting," Jocelyn Bell Burnell of the University of Bath in western England told the magazine.

It was broadcast on the main frequency at which the universe's most common element, hydrogen, absorbs and emits energy, and which astronomers say is the most likely means by which aliens would advertise their presence.

The potentially extraterrestrial signals were picked up through the SETI@home project, which uses programs running as screensavers on millions of personal computers worldwide to sift through the huge amount of data picked up by the telescope.

  • Replies 419
  • Views 70.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் மனிதனை மாதிரி தானா அவர்களும் இருப்பார்கள் தந்திர புத்தியுடன் என்ன..?? :lol:

தகவலுக்கு நன்றி குருவி.

பூமி போல இன்னொரு கிரகம் இருக்கலாம் யார் கண்டது அவர்களும் அங்கிருந்து ஏதாவது கிரகத்தில் உயிரினங்கள் வாழ்கிறதா என்று ஆராய்சி செய்கிறார்களோ? :roll:

இங்கு வந்தார்களோ தொலைந்தார்கள் அவர்கள். :P :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளிக் கிரகத்தால் சூரிய கிரகணம்

index.1.jpg

.

சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணமும் ஏற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வேறு கிரகங்கள் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. கடந்த 122 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வெள்ளிக் கிரகம் அதாவது வீனஸ் தனது சுழற்சிப் பாதையில் செல்லும்போது சூரியன், பூமி மற்றும் வெள்ளி கிரகங்கள் என்பன ஒரே நேர்காட்டில் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் எதிர்வரும் ஜுன் மாதம் எட்டாம் திகதி மட்டக்களப்பு நேரப்படி சரியாக காலை 11மணி 15நிமிடம் 01வினாடி தொடக்கம் நடைபெற இருக்கின்றது. இது ஏறக்குறைய 6 மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். வெள்ளிக் கிரகத்தினால் ஏற்படும் கிரகணம் ஜுன் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ மட்டும்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம். இக்கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தில் சூரியனின் மையத்திலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கு 4றேடியன் என்னும் வேகத்தில் கடக்கவுள்ளது. கிரகணம் ஆரம்பமாகும்போது மட்டக்களப்பில் சூரியன் மேற்குத்திசையில் 64பாகை உயரத்தில் தென்படும். மட்டக்களப்பில் அன்றைய தினம் சூரியன் பிற்பகல் 5மணி 57 நிமிடம் அளவில் மறையும். எனவே முழுக் கிரகணத்தையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இதேவேளை வட அமேரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியல் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே சூரியன் உதிக்கின்றது. ஆதனால் கிரகணத்தின் கடைசி ஓரிரு மணித்தியாலங்களையே அங்குள்ளவர்களால் பார்க்க முடியும். அவுஸ்திரேலியாவின் கிழக்குப்பகுதி, தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளில் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே சூரியன் மறைந்து விடுகின்றது. எனவே அங்குள்ளவர்களால் முதல் இரண்டு நிமிடங்களை மாத்திரமே காண முடியும். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் எம்மைப்போல் இக்கிரகணத்தை முழுமையாகக் காணலாம். எனினும் நிய10சிலாந்து, ஆஜன்டீனா மற்றும் ஹவாய் தீவுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கிரகணம் நடைபெறும் தருணம் இரவு நேரமாகையால் அவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு கிடைக்காது.

1608ஆம் ஆண்டு தொலைநோக்கி கருவி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆகிய ஆண்டுகளில் மாத்திரமே ஆராய்ச்சியாளர்களால் இக்கிரகணம் பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வெள்ளிக்கிரகத்தினால் ஏற்படும் சூரிய கிரகணம் நிகழும் காலம் ஓர் முறையான சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. முதலாவது கிரகணம் நடைபெற்று 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றும், அடுத்த 105.5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னொன்றும், அதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றும் அடுத்து 121.5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுமாக இச்சுழற்சி தொடர்கின்றது. இவ்வருடம் ஜுன் மாதம் நடைபெறும் கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது. புதன் கிரகமும், வெள்ளிக் கிரகமும் பூமியை விட சூரியனை வேகமாகச் சுற்றுகின்றன. அத்துடன் அவை பலமுறை பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து போகின்றன. வெள்ளிக் கிரகம் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் 227.4 நாட்கள்தான். எனினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இவை சூரியன் இருக்கும் நேர்கோட்டிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கின்றன. இதற்குக் காரணம் வெள்ளிக் கிரகம் பூமியின் சுழற்சிப் பாதையிலிருந்து 3.4பாகை விலகிச் செல்வதுதான். எனவேதான் ஒவ்வொரு முறையும் இவற்றால் கிரகணம் ஏற்படுவதில்லை. 2004ஆம் ஆண்டில் நடைபெறும் கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தினு}டே செல்லும் அதேவேளை 2012ஆம் ஆண்டு நடைபெறும் கிரகணத்தின் போது இக்கிரகத்தின் நிழல் சூரியனின் தென்துருவப் பகுதியூடாகச் செல்லும்.

இக்கிரகணத்தைச் தமக்குச் சாதகமாக்கி பல விடயங்களை அறிய முற்பட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். சூரியனுக்கும் பூமிக்குமிடையில் உள்ள து}ரத்தையும், மற்றும் வெள்ளிக் கிரகத்தின் விட்டத்தையும் ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடவும், எமது சூரிய குடும்பத்தில் மேலும் கண்டறியப்படாத கிரகங்கள் இருக்கின்றனவா என ஆராயவும் இக்கிரகணம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கணிசமான அளவு உதவி புரியவுள்ளது. Edmund Halley என்பவர்தான் வெள்ளிக் கிரத்தினால் ஏற்படும் கிரகணத்தின்போது கெப்லரின் மூன்றாவது விதியைப் பயன்படுத்தி சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான தூரத்தைக் கணிக்கலாம் என கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவு காரணமாக இம்முறையைக் கொண்டு து}ரத்தைக் கணிப்பது சிரமமாகவே இருந்து வருகின்றது.

இக்கிரகணத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியினூடாக மாத்திரமே பார்த்தல் வேண்டும். சூரியனை வெற்றுக் கண்ணால் பார்ப்பதோ, அல்லது சாதாரண தொலைநோக்கியூடாகப் பார்ப்பதோ கண்களுக்குத் தீங்கை விளைவிக்கலாம். சாதாரண தொலைநோக்கியிலுள்ள குவிவு வில்லைகள் ஒளிக்கிரணங்களின் செறிவை அதிகப்படுத்துவதால், அதன் தாக்கத்தால் கண்கள் பர்வையை இழக்கவேண்டியும் ஏற்படலாம்.

இவ்வருடம் நடைபெறும் இக்கிரகணத்தை முழுமையாக மட்டக்களப்பு நகரில் பார்க்க முடிந்தாலும் 2012 ஆண்டு நடைபெறும் கிரகணத்தை நாம் முழுமையாக மட்டக்களப்பில் பார்க்க இயலாது. கிரகணம் ஆரம்பமாகி ஓரிரு மணித்தியாலங்கள் சென்றிருக்கும் வேளையிலேயே அன்று மட்டக்களப்பில் சூரியன் உதிக்கின்றது. அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ம் திகதி மட்டக்களப்பு நேரப்படி அதிகாலை 04 மணி 12 நிமிடங்கள் 03 விநாடிகள் அளவில் ஆரம்பிக்கும். இதனைக் காண நாம் இன்னும் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பழைய தகவல் ஆனாலும் அறிய வேண்டியவை என்பதால் இங்கு தருகிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் கவிதன்.........!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

20_gslv_edusat-rocket.jpg

தொலைத்தொடர்பு, தொலை உணர்தல், வானியல் ஆய்வு ஆகியவற்றிற்கு தனித்தனியாக செயற்கைக்கோள்களை செலுத்தி சாதனை படைத்த இந்தியா, இன்று கல்வி மேம்பாட்டிற்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது!

சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண் மையத்தில் இருந்து இன்று மாலை 4.01 மணிக்கு புறப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம், 17 நிமிட பயணத்திற்குப் பின் 180 கி.மீ. உயரம் சென்று 1,950 கி.கி. எடையுள்ள எடூசாட் (Education Satellite) செயற்கைக்கோளை புவி சுழற்சிப் பாதையில் துல்லியமாக செலுத்தியது.

49 மீ. நீளமும், 414 டன் எடையும் கொண்ட ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் திட்டமிட்டபடி சரியாக 16.01 மணிக்கு நெருப்பை கக்கிக்கொண்டு விண்ணை நோக்கிப் பறந்தது. முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணம் மேற்கொண்ட ஜி.எஸ்.எல்.வி., புவியிலிருந்து 180 கி.மீ. தூரத்தை எட்டியதும் அதன் முன்பகுதி திறந்துகொள்ள அங்கிருந்த செயற்கைக்கோள் புவிசுழற்சிப் பாதையில் செலுத்தப்பட்டது.

எடூசாட் செயற்கைக்கோள் செலுத்தப்பட்டதும் சத்தீஷ்தவான் விண் மையத்தில் திரண்டிருந்த செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவர் மாதவன் நாயர், செயற்கைக்கோள் துல்லியமாக செலுத்தப்பட்டதாக அறிவித்தார்.

இப்பணியில் ஈடுபட்ட பல்வேறு குழுக்களின் தலைமை விஞ்ஞானிகள், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்துள்ளது என்று பெருமிதத்துடன் கூறினர்.

எடூசாட் செயற்கைக்கோளில் உள்ள சூரிய சக்தியை வாங்கி செயற்கைக்கோளிற்கு தேவையான சக்தியை அளிக்கும் பேனல்கள் எதிர்பாத்தபடி விரிந்துள்ளதாகவும், செயற்கைக்கோள் நன்றாக இயங்கத் துவங்கியுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இந்த ஏவுதலின் வாயிலாக 2 டன் எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்பும் திறனில் இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதென விஞ்ஞானிகள் கூறினர்.

தற்பொழுது பூமியின் குறைந்தபட்ச சுழற்சிப் பாதையில் (பெரீஜி), அதாவது 180 கி.மீ. தூரத்தில் செலுத்தப்பட்டுள்ள எடூசாட், அடுத்த 3 நாட்களில் அதிலுள்ள பூஸ்டர் இயந்திரம் இயக்கப்பட்டு அதிகபட்ச சுழற்சிப் பாதையான (அப்போஜி) 36,000 கி.மீ. தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிலை நிறுத்தப்படும். அதன்பிறகு அதிலுள்ள டிரான்ஸ்பாண்டர்கள் இயங்கத் துவங்கி கல்வி பணிக்காக பயன்படுத்தப்படும்.

For more details...

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3672608.stm

Thanks webulagam.com & http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள் குருவிகளே.. அது சரி நம்ம சிறீலங்கா எப்ப அனுப்பப்போது.. முயற்சியாவது எப்ப தொடங்கும்...??? :D:):D :P

  • தொடங்கியவர்

உங்களைத்தான் எதிர்பார்த்திருக்காம் சிறிலங்கா... கெதியா படிச்சிட்டு போய் அனுப்புங்கோ சிறிலங்காவுக்காக சற்றலைட்...! :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ அங்க ஆக்காள் இல்லாத மாதிரி கதைக்கிறீங்க.... ஆனால் இதுக்கெல்லாம் அவைக்கு எங்க நேரம்....! :D:) P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி அண்ணா.. நல்ல ஒரு தகவல்....

  • தொடங்கியவர்

_39871498_universe2_inf416.jpg

கபிள் விண்ணியல் தொலைக்காட்டி தந்த அகிலம் நோக்கிய ஆழ்ந்த (தொலைதூர) பார்வையின் கீழான ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் அகிலத்தின் (universe) பிரிவுகளும் அவற்றின் வயதும்....!

For more details click here and http://kuruvikal.blogspot.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கும் படத்துக்கும் நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றிகள்.. குருவிகாள்..!

  • தொடங்கியவர்

h_abell754_sima_02.jpg

உடுத்தொகுதிகளின் பகுதிகள் மொத்துகையின் முன் .. கணணி வழி உருவகிக்கப்பட்ட காட்சிகள்...!

h_abell754_simb_02.jpg

உடுத்தொகுதிகளின் பகுதிகள் மொத்துகையின் பின்.. கணணி வழி உருவகிக்கப்பட்ட காட்சிகள்...!

( image from Space.Com )

பூமியில் இருந்து சுமார் 800 மில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் இரண்டு உடுத்தொகுதிகளின் பகுதிகள் (galactic clusters)ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதான அபூர்வ நிகழ்வொன்றை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது...இதேபோல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி குருவி அண்ணா

  • தொடங்கியவர்

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :D

என்ன குருவிகளுக்கு களத்தில் இருந்து ஓய்வா..? நாங்கள் கொடுப்பதாக இல்லையே... :wink: ! சரி உங்கள் ஓய்வுகாலம் இனிதாக கழிய வாழ்த்துக்கள் :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...! :P :D

குருவிகள் இனிதே ஓய்வு எடுக்க எமது வாழ்த்துக்கள்...! :):D :P

என்ன ஓய்வு? அதற்கும் வாழ்த்தா? ஒன்றும் புரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய்வுக்கு நடுவே இடையு}று வரலாம் இல்லையா..?? அவைகள் இல்லாமல் போக தான் வாழ்த்துக்கள்.. :D :P

ஓ என்னே உங்கள் பரந்த மனம். புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

மீண்டும் குருவிகளின் விஞ்ஞானச் செய்திகளும் இதர ஆக்கங்களும் சில வாரங்களின் பின் மீண்டும் களம் வரும்...! குருவிகள் சிறிது காலம் ஓய்வெடுக்கப் போகின்றன களத்தில் இருந்து...!

µö׸¡Äõ þÉ¢§¾ «¨Á šúòÐì¸û...

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

எத்தினை காலம் தான் மாந்தோப்பே தஞ்சம் என்று இருக்கிறது என்று போட்டு குருவிகள் கொஞ்சம் மற்றத் தோப்புகளிலும் தன் உறவுகளோடு கூடிக்களிக்கச் சென்றதுகள்.... சென்ற வழி நல்வழியாக அமைய வாழ்த்திய அன்பு உள்ளங்கள் கவிதன் தம்பி, தமிழினி, சண்முகி அக்காவுக்கு குருவிகளின் நன்றிகள்....! :P

விஞ்ஞானச் செய்திகள் விரைவில் வரும்....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப போனதுகளும் தோப்புகள் தான்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.