Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கமலும், காப்பியடித்த திரைப்படங்களும்

Featured Replies

கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா ? முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் கட்டுரை அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு நமக்கு உடன்பாடு இல்லை...அதே போல் இந்த கட்டுரையில் சாதி சாயத்தை தொடபோவதில்லை....

வேறு எந்த கலைவடிவத்தில் எது நடந்தாலும்... நாம் ஆராதிக்கின்றோம்.. ஆனால் சினிமாவில் புரட்டி எடுக்கின்றோம்... காரணம் சினிமாவை எல்லோரும் விரும்பி பார்க்கின்றோம்....

நம்மைப் பொறுத்தவரை எல்லோரும் காப்பி அடிக்கும் போது கமலை மட்டும் குற்றாவளி கூண்டில் நிறுத்தி யூவர் ஆனர் என்று ஆரம்பிப்பதில் உடன்பாடு இல்லை.... அப்படி ஆரம்பித்தால் இந்தியாவில் 90 சதம் பேர் குற்றாவரிளிக் கூண்டில் இருப்பார்கள்... உலகத்தில் கணக்கு எடுத்துக்கொண்டால்... அதன் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கும்...

ஒரு அழகிய கட்டிடம் சிங்கபூரில் ஒரு பில்டர் பார்த்து விட்டு வந்து இருப்பார்.. அதே போல் இங்கு கட்டிடம் கட்டினால் வாவ் சூப்பர் என்போம்...

ஒரு வீட்டின் இண்டீரியர் அல்லது எதாவது ஒட்டலின் இன்டீரியர் பார்த்து விட்டு அது போல நமது அலுவலகத்தில் செய்து வைத்தாள் வாவ் மார்வலஸ்.... என்போம்...

சரவணபவன் சாம்பார் போல வசந்தபவனில் இருந்தால் அற்புதம் என்போம்...

நமது கல்விமுறை என்பது காப்பி அடிக்கும் கல்விமுறைதான்... வரிக்கு வரி புத்தகத்தில் இருப்பது போல் எழுதி வைத்தால் மார்க்...

கர்னாடக சங்கீதத்தின் நெளிவு சுளவுகளை அப்படியே காப்பி அடித்து பாடினால்தான் அவர் நல்லபாடகன்பாடகி...

சரி இப்படி எல்லாம் இருக்கும் காப்பியை, சினிமாவில் அடிக்கும் போது அது பலருக்கும் பிடிக்கபடாமல் போகின்றது... காரணம் சினிமா மட்டும்தான் அனைவரையும் ஈர்க்கும் விஷயம்.. இதுவே ஒரு கட்டிடம் அமெரிக்கவில் இருக்கும் ஒரு அறையை பார்த்துவிட்டு அதை நம்ஊரில் கட்டினால்??? அதையும் ஒரு பதிவாக எழுதினால்.......

அமெரிக்காவின் எம்மபய்ர் கட்டிடத்தில் இருந்து அந்த 786 ஆவது அறை டிசைனிங் அப்படியே காப்பி அடிக்கபட்டு சென்னை பார்க் ஓட்டலில் இரண்டாவது மாடியில் இருக்கும் 208ஆவது அறையில் அப்படியே காப்பி அடித்து டிசைன் செய்து இருக்கின்றார்கள்... அதன் பாத்ருமில் இருக்கும் டாய்லட்டை மட்டும் இடப்பக்த்துக்கு பதில் வலபக்கம் வைத்து விட்டார்கள் என்று பதிவு எழுதினால் அதை யாரும் படிக்க போவதில்லை சீண்ட போவதில்லை...அதுக்கு மட்டும் காப்பி அடிக்க கூட ஒரு திறமை வேனும் இல்லையா என்று சொல்வார்கள்.....

உலகத்தில் எத்துறையில் இருக்கும் நண்பர்களும் விமர்சிக்கும் ஒரே துறை சினிமாதுறைதான்.. அதற்கு காரணம் அதன் மேல் உள்ள கவர்ச்சி மற்றும் புகழ்...உலகின் கொடிய நோய் எயிட்சுக்கு மருந்து கண்டுபிடித்த சயின்டிஸ்ட் ரோட்டில் நடந்தால்... அவரை தெரிந்தாலும் நாம் நன்றி தெரிவிக்க போவதில்லை.... ஆனால்சார் நீங்க அங்காடி தெரு படத்துல டாய்லட் கழுவற சீன்ல நடிச்சவர்தானே??? அப்பயலை இருந்து எங்கேயோ இவரை பார்த்து இருக்கோமேன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்...சார் சூப்பரா நடிச்சி இருந்திங்க.. பின்னிட்டிங்க போங்க... அடுத்து என்னபடம்சார் பண்ணிகிட்டு இருக்கிங்க?? என்று கேள்வி மேல் கேள்வி போகும்.....

சரி கமல் படங்கள் காப்பி அடிக்கபட்டவைதான் மறுக்கவில்லை... ஆனால் கமல் மட்டுமே அல்லவே...தமிழ்நாட்டில் எத்தனை பிரபல எழுத்தாளர்கள் காப்பி அடித்து எழுதி இருக்கின்றார்கள்...எத்தனை இசையமைப்பாளர்கள் உலகின் பல இசைவடிவங்களை காப்பி அடித்து இருக்கின்றார்கள்..

இன்று சினிமாவில் இருக்கும் ஷாட்டுகள் மற்றும் கேமரா கோணங்க்ள் , லைட்டிங், எடிட்டிங் எல்லாம் ஏதோ ஒரு படத்தில் இருப்பதைதான் நாம் நம் மொழியில் செய்து பாக்கின்றோம்.....

சரி கமல் இப்படி காப்பி அடித்த படங்களுக்கு தேங்ஸ் கார்டு போடலாமே என்று கேட்கின்றீர்கள்...

இந்தியாவுல தினைக்கும் யூஸ் செய்யும்.. வின்டோஸ் எக்ஸ்பி சாப்ட்வேர் யாருகிட்டாயாவது ஒரிஜினல் வைத்து இருப்பார்களா....??, அல்லது எந்த சாப்ட்வேராவது காசு கொடுத்து வாங்கி இருப்போமா??? எல்லாம் காபிதான்... தினமும் எக்ஸ் பி சாப்ட்வேர் ஓப்பன் பண்ணும் போது தேங்ஸ் என்றா சொல்லி கொள்கின்றோம்....ஆனால் கமல் அப்படி எடுத்த கதைகளை வரிக்கு வரி காப்பி அடித்து இருக்கின்றார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...மிசஸ்டவுட்பயர் நாட் அவ்வை சண்முகி அவ்வளவுதான்.... ஆனால் கதை வேறு இதில் இருக்கும் கிளைகதைகள் வேறு வேறு....அப்படித்தான் நீங்கள் குறிப்பிடும் எல்லா படங்களும்....

முதலில் நெருப்பை கண்டுபிடித்தவன் யாரோ ஒருவன் ஆனால் அதில் இருந்து நாம் வித விதமாக சமைத்து உண்ண ஆரம்பித்து விட்டோம்..... அது போலதான் திரைமொழியும்....கதைகளனும்...

சரி அப்படியே கதையை வாங்கி படம் எடுக்கலாமா? முடியாது காரணம் நம்ம படத்தோட வியாபாரம் அப்படி.. சார் மணிரத்னம்.. உங்க படம் இன்டியானா ஜோன்ஸ் படத்தில் இருந்து பல சீன்கள் சுட்டு திருடா திருடான்னு காப்பி அடித்து விட்டார்னு ஸ்பீல்பெர்க்கிட்ட சொல்லி பாருங்க...

வாட் லாங் வேஜ்?

சார் தமிழ்....

வேர் தே ஸ்பீக்???

இந்தியா....

அங்க எல்லாரும் காப்பி அடிப்பாங்களாம்....லுஸ்ல விடு என்று போய் விடுவார்கள்....

இதுவே பிரான்சில் அப்படி காப்பி அடித்து ஸ்பீல் பெர்க் படத்தை எடுத்து இருந்தால் கேஸ் போடுவார்கள்....கேஸ் நடந்து முடிஞ்சாலும் நல்ல அமவுன்ட் கிடைக்கும்.. ஆனா இங்க---??? நம்ம பிசினஸ் ரொம்ப சின்னது...நாமலாம் போய் ஹாலவுட்ல எல்லாம் ரைட்டஸ் வாங்கி எடுக்க முடியாது.... இதுதான் உண்மை... இப்போது தமிர்நாட்டில் அப்படி போய் நேர்மையாக ரைட்ஸ் வாங்கி எடுக்க சன் பிக்சர்ஸ்க்கு மட்டும் சாத்தியம் இருக்கின்றது....அனால் அவ்வளவு பண்ம் போட்டாலும் தமிழில் பணம் பேறாது.. அதுதான் உண்மை நிலவரம்....

கமல் ரஜினி இருவருமே ஜிலு ஜிலு உடைகளில் ஆடியவர்கள்தான்... ஆனால் ஒரு கட்டத்தில் கமல் மாறி விட்டார்.....பால்காரன் ரீபோக் ஷு போட்டு இருக்கமாட்டான் என்று அடிப்படை லாஜிக்கை மீறி கமல் படம் எடுக்காமல் மாறிவிட்டார்......

கமல்மட்டும் பாரின் படங்களை பார்த்து இன்ஸ்பயர் ஆகவில்லை என்றால் உலகின் மிக சிறந்த படங்களை நம் நேட்டிவிட்டியில் பார்த்து ரசித்து இருக்கவே முடியாது....குணா, மகாநதி,அன்பேசிவம்...அப்படி புதிய முதல் முயற்சியை யாரும் தமிழில் பண்ண வாய்ப்பே இல்லை...நாம் எல்லாம் தலைவர் ரஜினி கயிற்றினால் ஒற்றை காலில் ஜிப்சி ஜீப்பை கட்டி, நகர விடாமல் பண்ணிய போது கைதட்டி ஆர்பரித்தவர்கள்...அப்படி கமலும் உலக படங்கள் பார்த்து மாறவில்லை என்றால் கமல் இப்போது நடிக்கும் படத்தில் ரோடு ரோலரை எட்டி உதைத்து அது பறக்கும் காட்சியை பார்த்து கண்ணில் நீர் வர கைதட்டி ரசித்து இருப்போம்.. நல்ல சினிமா எது என காப்பி அடித்தாவது நம்மை மாற்றிய இல்லை எங்களை மாற்றிய கமலுக்கு என் நன்றிகள்...

கமல் கர்வியா... எஸ் கமல் கர்விதான்.. காரணம் சினிமாவில் இருக்கும்24 கலைகள் தெரிந்த ஒரே கலைஞன் கமல்தான்....என் தொழில் நடிக்கறது மட்டும் இல்லை என்று நின்று விடுபவர் கமல் இல்லை...அதனால்தான் கமல் சகலகலாவல்லன்....மார்லன் பிராண்டோ கிட்ட இருந்துதான் சிவாஜி நிறைய கத்துகிட்டார்.... அல்பாசினோ ஸ்டைல் இல்லாம கமலால் நடிக்க முடியாது...ரஜினி சிகரேட்டை தூக்கி புடிச்சி வாயில கவ்வி ,சிகரேட் புடிச்ச ஸ்டைல பார்த்து சிகரேட் பிடிச்சவங்க லிஸ்ட் தமிழ்நாட்டுல கோடி கணக்குல இருக்கும்... அது இன்ஸ்பரேஷன்...அது போலதான் இதுவும்... அதே போல் கமலும் அதை ஒத்துகிட்டுதான் இருக்கார்...

மிக முக்கியமா கமல் தனது விசில் அடிச்சான் குஞ்சிகள் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமா மாத்தி ஒரு மரியாதையை சமுகத்தில் உருவாக்கி தந்தவர்...எயிட்ஸ் விளம்பரங்களில் தைரியமாக நடித்த கலைஞன்...

அவருடைய பர்சனல் வாழ்க்கை பல பேருக்கு புடிக்காது காரணம்... நம்மலுக்கு பல் இருந்தும் பக்கோடாவும், பட்டாணியும் சாப்பிட முடியலையேன்னு ஒரு வருத்தம் தான்.....அதை பத்தி கவலைபட அவர் வாழ்க்கையில் வந்து போன பெண்கள் கவலைபட வேண்டும்...நாம் கவலபைட்டு என்ன ஆக போகின்றது???அதெல்லாம் விடுங்க.....அவர் என்ன ஜட்டி போட்டு இருந்தா நமக்கு என்ன????

சாரு நிகழமறுக்கும் அற்புதம்னு ஒரு கட்டுரை எழுதி இருந்தார்...

அது ஏன் நிகழ மறுக்குதுன்னு நான் நினைச்சி... கமல்ன்னு சொல்லி குகுளில் அடித்தால் அது பாட்டுக்கு கீழ இருக்கற விசயங்களா கொட்டுது.....

4நான்கு தேசிய விருதுகள்..

* 1960 — Best Child Artist for Kalathur Kannamma

* 1982 — Best Actor Award for Moondram Pirai

* 1987 — Best Actor Award for Nayagan

* 1996 — Best Actor Award for Indian

* 1960 — Best Child Artist for Kalathur Kannamma

* 1982 — Best Actor Award for Moondram Pirai

* 1987 — Best Actor Award for Nayagan

* 1996 — Best Actor Award for Indi Filmfare Awards

* 1986 — Best Actor Award for Saagar

* 1998 — Best Story Award for Virasat

Filmfare Awards South Kannada

* 1988 — Best Actor Award for Pushpak

Malayalam

* 1974 — Best Actor Award for Kanyakumari

* 1978 — Best Actor Award for Yaetta

Tamil

* 1975 — Best Actor Award for Apoorva Raagangal

* 1976 — Best Actor Award for Oru Oodhappu Kan Simittugiradhu

* 1977 — Best Actor Award for 16 Vayadhinile

* 1978 — Best Actor Award for Sigappu Rojakal

* 1981 — Best Actor Award for Raja Paarvai

* 1982 — Best Actor Award for Moondram Pirai

* 1987 — Best Actor Award for Nayagan

* 1991 — Best Actor Award for Guna

* 1992 — Best Actor Award for Thevar Magan

* 1994 — Best Actor Award for Mahanadhi

* 1995 — Best Actor Award for Kuruthipunal

* 1996 — Best Actor Award for Indian

* 2000 — Best Actor Award for Hey Ram

Telugu

* 1981 — Best Actor Award for Aakali Rajyam

* 1983 — Best Actor Award for Sagara Sangamam

* 1986 — Best Actor Award for Swathi Muthyam

Tamil Nadu State Film Awards

* 1991 — Special Award for Guna

* 1992 — Best Actor Award for Devar Magan

* 1996 — Best Actor Award for Indian

* 2006 — Best Actor Award for Vettaiyaadu Vilaiyaadu

* 2008 — Best Actor Award for Dasavathaaram

Nandi Awards

* 1983 — Best Actor Award for Saagara Sangamam

* 1986 — Best Actor Award for Swathi Muthyam

* 1989 — Best Actor Award for Indrudu Chandrudu

Asianet Film Awards

* 2009 — Special Honour Jury Award 50 years Contribution to Indian Cinema

Puchon International Fantastic Film Festival

* 2004 — Best Film Award for Virumaandi [1]

Vijay Awards

* 2007 - Chevalier Sivaji Ganesan Award for Excellence in Indian Cinema

* 2008 - Best Villain Award for Dasavatharam

* 2008 - Best Comedian Award for Dasavatharam

* 2008 - Best Story-Screenplay Writer Award for Dasavatharam

* 2008 - Most Popular Hero Of The Year Award for DasavatharamSpecial honours

* 1990 — Padma Shri[2]

* 2004 All the awards presented to him were for his artistic talent. He got the first Abraham Kovoor National Award for his Humanist Activities and Secular Life in 2004.

* 2005 — Honorary Doctorate

* 2009 — FICCI Living Legend[3]

* 2009 - CNN IBN Indian of the Year 2009 - Special Achievement Award

* Kalaimamani

இனிமே அது நிகழ்ந்தா என்ன??? நிகழாட்டா என்ன???

கமலின் 50ஜ பாராட்டி விழா எடுத்தது விஜய் டிவி...

மத்திய அரசு தற்போது விழா எடுத்தது...

கேரளமாநிலம் விழா எடுத்தது...

எல்லோருக்கும் தெரியும்.. கமல் எந்த வெளிநாட்டு படத்தில் இருந்து உருவியிருப்பார்.. எந்த ஆங்கில நடிகனின் நடிப்பில் இன்ஸ்பயர் ஆகி நடித்து இருப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்...ஆனால் புன்னகை மன்னன் படத்தில் சாக போவதற்கு முன் ரேகா கமலை சிரிக்க சொல்லுவார்....அழுகையோடு கலந்து சிரிக்கவும் செய்ய வேண்டும்... எனக்கு தெரிந்து அது எந்த படத்திலும் காப்பி அடித்து இருக்க முடியாது என்ற எண்ணுகின்றேன்...

அப்படியே காப்பி அடித்தாலும் ஒரு முறை நீங்கள் அனைவரும் கண்ணாடி முன் நின்று கமல் செய்தது போல் காப்பி அடித்து ஒரு முறை ஒரே முறை செய்து பாருங்கள்... ஒன்று சிரிப்பு வரும்... அல்லது கமல் மேல் அவர் நடிப்பின் மீது மதிப்பு வரும்.....

ஆனால் ஒன்று முன்பே அந்த படத்தை நாம் பார்த்து விட்டு அது அப்படியே ஆங்கில படத்தின் காப்பி எனும் போது நமக்கு கோபம் வருவது இயல்பே.... ஆனால் பார்க்காதவனுக்கு அது அமிர்தம் அல்லவா.. அது போலதான்.... நமது படங்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தால் காபி அடிக்காமல் நிச்சயம் காசு கொடுத்து கதை வாங்கி பண்ணுவார்கள்...

கமல் தன்னை எங்கேயும் அறிவு ஜீவியாக நினைத்து பேட்டி கொடுத்தது இல்லை... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டால் அதுக்கு கமல் பொறுப்பு அல்ல.....

for more pictures...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4706

சொல்லுவார்....அழுகையோடு கலந்து சிரிக்கவும் செய்ய வேண்டும்... எனக்கு தெரிந்து அது எந்த படத்திலும் காப்பி அடித்து இருக்க முடியாது என்ற எண்ணுகின்றேன்.

ராஜா படம் சிவாஜி கணேசன் நடித்திருந்தார்

சிவாஜி கணேசன் சி ஐ டி ஆக வருகிறார்

கொள்ளை கூட்டத்தை பிடிப்பதற்காக கொள்ளைகூட்டத்துடன்

சேர்ந்து கொள்ளைக்காரனாக நடித்துக் கொண்டிருக்கிறார்

தாயாராக பண்டரிபாய் அண்ணனாக பாலாஜி

பாலாஜி சிறுவயதில் பிரிந்துவிடுகிறார் வளர்ந்தது கொள்ளை கூட்டத்தில்

ஒருகட்டத்தில் சிவாஜியும் பாலாஜியும் தாங்கள் சகோதரர்கள் என்பதை தெரிந்துகொள்கிறார்கள்

இதனை கொள்ளையர்களில் ஒருவராக வரும் மனோகர் தெரிந்து கொள்கிறார்

அத்துடன் சிவாஜி சி ஐ டி என்பதையும் தெரிந்துகொள்கிறார்

சிவாஜி கணேசனும் பாலாஜியும் சகோதரர்கள் என்பதையும்

சிவாஜி கணேசன் சி ஐ டி என்பதை கொள்ளை கூட்டத்தலைவனுக்கு

காட்டுவதற்காகவும் பண்டரிபாயை தங்கள் கூடாரத்துக்கு இழுத்து வந்து

மனேகர் பண்டரிபாயை சவுக்கினால் அடிப்பார்

தன்னுடைய வேடம் கலையக் கூடாது என்பதற்காக சிவாஜி

அழுதுகொண்டே சிரிப்பாரே நடிப்பெண்டால் அதுதான் நடிப்பு

எவனாலுமே அப்படி நடிக்கமுடியாது

அப்படி நடிக்க இனி ஒரு நடிகன் பிறக்கவும் முடியாது

பல நடிகர்கள் சிவாஜி யின் நடிப்பை பின்பற்றுகிறார்கள் என்பதே உண்மை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையை இணைத்த easyjobs அவர்களுக்கு நன்றிகள்.

"தங்கத்தின் தரம் என்றும் குறைவதில்லை"

நீங்கள்

இங்க வாசித்ததை இணைத்தீர்கள் இதன் உண்மையான மூலம் ஜாக்கி சேகரின் வலைபூ அவர் yaarl .com

copy past பண்ணி இருக்கிறதாய் எழுதி இருக்கிறார்.. பார்த்து இணையுங்கள்

அவர் எழுதினது இதோ

கமல் பற்றி எதிர்வினை பதிவுக்கு ஈ அடிச்சான் காப்பி நிறைய உதாரனம் சொல்லிவிட்டேன்...இரண்டு தளங்கள் நான் எழுதிய கமல் பற்றிய பதிவை.. அப்படியே கண்ட்ரோல் சி மற்றும் கண்ரோல் வி அடித்து போட்டு இருக்கின்றார்கள்... அவர்கள் செய்தது பெரிய வேலை இல்லை காப்பி பேஸ்ட் மட்டும்தான் செய்து இருக்கின்றார்கள்...மிசஸ்டவுட்பயரும் அவ்வை சண்முகியும் அப்படி அல்ல என்று மீன்டும் சொல்லிக்கொள்கின்றேன்...

http://www.thedipaar.com/cinema/cinema.php?id=4706

http://www.yarl.com/forum3/index.php?showtopic=75286

http://jackiesekar.blogspot.com/2010/09/blog-post_6711.html

Edited by வீணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.